Jump to content

நேசக்கரம் கணணி பயிற்சி நிலையம் நாவற்குடாவில் திறந்துவைப்பு.

Recommended Posts

பதியப்பட்டது

நேசக்கரம் கணணி பயிற்சி நிலையம் நாவற்குடாவில் திறந்துவைப்பு.

தமிழ் மாணவர்களின் கணணி அறிவை மேம்படுத்தவும் தொழில் வாய்ப்புத் தேடும் இளையோருக்கான மற்றும் கணணிக்கல்வியைப் பெற்றுக் கொள்ள விரும்பும் பெரியவர்களுக்குமான கணணிக்கற்கையை வழங்கவும் நடராஜா ஆனந்தா வீதி , நாவற்குடா கிழக்கு , மட்டக்களப்பில் 15.12.2012அன்று கணணி பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

நேசக்கரம் தகவல் தொழிற்நுட்ப ஒருங்கிணைப்பாளர் செல்வி.கம்சனா தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் இணைப்பாளர் ஜனனன் மற்றும் உதயகாந், திவாகரன் ஆகியோரோடு சிறப்பு விருந்தினர்களாக நாவற்குடா முத்துமாரியம்மன் ஜெயகிருஸ்ணா குருக்கள் , நாவற்குடா கிழக்கு இந்து ஆலயங்களின் பரிபாலன தலைவர் திரு.சிவகுமார் , கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் சுரேந்திரன் , மாதர் சங்கத் தலைவி திருமதி.ஜெயக்குமார் , நாவற்குடா இளைஞர் கழகத்தின் தலைவர் யுவராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

நேசக்கரம் கணணிப்பயிற்சிநெறியினை நடாத்துவதற்கான கணணிகளுக்கான உதவியை அமெரிக்காவிலிருந்து தவேந்திரராஜா ஐயா அவர்கள் முன்வந்து வழங்கியுள்ளார்.

புலம்பெயர்ந்து வாழும் கணணித்துறை வல்லுனர்களை வரவேற்கின்றோம். ஓன்லைன் மூலமாக கணணிக்கற்பித்தலை வழங்க விருப்பமுள்ளவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள். எங்கள் பிள்ளைகளின் வளர்ச்சியில் உங்கள் ஆற்றலை வழங்கி முன்னேற்றி வையுங்கள்.

செலவுக் கணக்கறிக்கை :-

DSCF3841_zps3026f76a.jpg

DSCF3834_zpse42dabe0.jpg

DSCF3840_zps8d1bd108.jpg

DSCF3788_zps9c11dd8c.jpg

DSCF3789_zpsffc1eaee.jpg

DSCF3792_zpse4c41968.jpg

DSCF3798_zps4f87a971.jpg

DSCF3806_zps2d10026c.jpg

DSCF3833_zps97d51e42.jpg

DSCF3832_zpsb0c4cf06.jpg

தொடர்புகளுக்கு

முகவரி:
Nesakkaram e.V
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany

Shanthy Germany – 0049 6781 70723
Skype ID – Shanthyramesh

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

Vereinsregister:
AZ- VR 20302
Amtsgericht 55543 Bad Kreuznach
Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

Posted

கடலில் அலைகள் ஓய்ந்தபின் தான், குளிக்கணும் என்றால், முடியாது. ஆக, பிரச்சனைகள் எல்லாம் ஓய்ந்தபின் வாழத் தொடங்கலாம் என்றால், அது சரிப்படாது. இது நல்லதோர் ஆரம்பம்.

கம்ப்யூட்டர் பயிற்சியை தொடங்குங்கள். இப்படித் தொடங்கி இருக்கிறீர்கள் என்று, இந்திய நிறுவனங்களுக்கு தெரிவியுங்கள். அவர்கள், குவாலிட்டி டெஸ்டிங் போன்ற வேலைகளை உங்களுக்கு ஆரம்பத்தில் அளிப்பார்கள். பிறகு, டெவலப்மெண்ட் வேலைகளை அளிப்பார்கள்.

ஜாவா. ஆரம்ப நிலை. ஆப்ஜெக்ட் ஓரியண்டட் புரோகிராமிங். டேட்டா பேஸ். ஸர்வ்லெட். வெப் பேஜ். ஸ்பிரிங்

பிறகு, மொபைல் பிளாட்பார்ம். ஆண்ட்ராய்ட்.

இப்படி பாடத்திட்டங்களை வகுத்து, செயல் ஆற்றுங்கள். ஒளிமயமான எதிர்காலம், இன்றே தெரிகின்றது

Posted

நேசக்கரத்தின் சேவை கண்டு, மிகவும் மகிழ்ச்சி சாந்தி!

நன்றிகள்!

கருத்துக்கு நன்றிகள் புங்கையூரான். சிறு சிறு முயற்சிகள் பெருவிருட்சங்களை உருவாக்கும்.

கடலில் அலைகள் ஓய்ந்தபின் தான், குளிக்கணும் என்றால், முடியாது. ஆக, பிரச்சனைகள் எல்லாம் ஓய்ந்தபின் வாழத் தொடங்கலாம் என்றால், அது சரிப்படாது. இது நல்லதோர் ஆரம்பம்.

கம்ப்யூட்டர் பயிற்சியை தொடங்குங்கள். இப்படித் தொடங்கி இருக்கிறீர்கள் என்று, இந்திய நிறுவனங்களுக்கு தெரிவியுங்கள். அவர்கள், குவாலிட்டி டெஸ்டிங் போன்ற வேலைகளை உங்களுக்கு ஆரம்பத்தில் அளிப்பார்கள். பிறகு, டெவலப்மெண்ட் வேலைகளை அளிப்பார்கள்.

ஜாவா. ஆரம்ப நிலை. ஆப்ஜெக்ட் ஓரியண்டட் புரோகிராமிங். டேட்டா பேஸ். ஸர்வ்லெட். வெப் பேஜ். ஸ்பிரிங்

பிறகு, மொபைல் பிளாட்பார்ம். ஆண்ட்ராய்ட்.

இப்படி பாடத்திட்டங்களை வகுத்து, செயல் ஆற்றுங்கள். ஒளிமயமான எதிர்காலம், இன்றே தெரிகின்றது

மிக்க நன்றிகள் ஐயா. உங்களது ஆதரவினையும் தாருங்கள். உங்கள் ஆற்றலை எங்கள் பிள்ளைகளுக்காகவும் தாருங்கள்.

திட்டமிட்ட கல்விமுறை நீங்கள் குறிப்பிடுவது போல வெற்றியைத் தரும். இது முதல் முதல் முயற்சிதானே அடுத்த கட்டங்களை பலமாக்குவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.