Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறப்போர் ஆவணப்படம் - கருத்துக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் தமிழ் மக்கள் கட்டாயமாக பார்க்கவேண்டிய ஆவணப்படம்: அறப்போர்


29.06.2013 சுவிஸ், ரிசினோ (Ticino) மாநிலத்தில் நடைபெற்ற மாணவர் எழுச்சி நாள் அன்று, அறப்போர் ஆவணப்படம் வெளியிடப்பட்டது.

இந்த ஆவணப்படம் அங்கு கூடியிருந்த எல்லா மக்களின் கவனத்தையும் எட்டிப்பிடித்தது.

அறப்போர் ஆவணப்படம் மூலம், தமிழ் இனத்திற்கு எங்கள் பிரச்சனைகளை மிகவும் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். அன்றில் இருந்து இன்று வரை தமிழ் மக்கள் எதற்காக போராடுகிறார்கள், மாணவர்கள் எதற்காகக் குரல் எழுப்புகிறார்கள் என்று, இந்த ஆவணப்படத்தில் சரியான வசனத்தோடு, சரியான காட்சிகளோடு கூறி இருக்கிறார்கள். தமிழ் இனத்திற்கு நடக்கின்ற பல பிரச்சனைகளில் ஒன்றை எடுத்து நன்றாக காட்டி இருக்கிறார்கள். 

நான் பலரிடமிருந்து தெரிந்து கொண்டது என்னவென்றால்!
அறப்போர் ஆவணப்படம் பார்த்து முடிந்த பின்னர் அவர்களோடு கலந்துரையாடிய போது: 
இப்படத்தைப் பார்க்கும் போது, எமக்கு கவலையாகவும், நாம் ஏதாவது செய்யாமல் இருக்கின்றோமே என வெட்கப்படுவதாகவும் கூறினார்கள். “நாம் வெளிநாட்டில் இருந்து கொண்டு ஒன்றும் செய்யாமல் இருக்கிறோம்!” ஆனால், “தமிழ் நாட்டில் வாழ்கின்ற எங்கள் சகோதரர்கள், சகோதரிகள் எங்கள் இனத்திற்காகவும், நாட்டுக்காகவும் குரல் கொடுக்கிறார்கள். நாம் இங்கு இருந்து கொண்டு என்ன செய்கிறோம்?” என்று கூறினார்கள்.

அறப்போர் மூலமாக, மக்களிடம் என்ன செய்தி போய் சேரவேண்டுமோ, அது சரியாகப் போய் சேர்ந்து விடும் என்று எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.

ஆனால், இந்த ஆவணப்படம் தமிழ் மக்களுக்கு மட்டும் செய்தி போய் சேரவேண்டும் என்பதற்காக தயாரிக்கப்படவில்லை, மாறாக, வெளிநாட்டு அரசாங்கங்கள், அரசியல்வாதிகள், வேறு உதவி நிறுவனங்களுக்கும் கட்டயாமாகப் போய் சேரவேண்டும் என்பதற்காகவும் தயாரிக்கப்பட்டது. காரணம், எல்லோருக்கும் நாங்கள் படுகின்ற கஸ்ரங்கள், துயரங்கள் தெளிவாக தெரியவேண்டும் என்பதற்காக!

மாணவர் போராட்டம், ஒரு நீதியான போராட்டம்! மாணவர்கள் சக்திக்கு அரசியல்வாதிகள் பயந்து கொள்வார்கள் காரணம், இவர்கள் தான் அடுத்த வருங்கால சந்ததியினர்கள்!

உங்கள் அனைவருக்கும் தெரியும், சரியான பாதையில் செல்கின்ற தனி மனிதனையும், மாணவர்களையும், பிழையான அரசியல்வாதிகள் கண்டால், அவர்களை எப்படி அழிக்க முடியும், ஒடுக்க முடியும் என்று தான் யோசிப்பார்கள். மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை புரிந்து கொண்டு, அவர்களோடு சேர்ந்து போராடுவோம் என்று கடைசி வரைக்கும் அரசியல்வாதிகள் யோசிக்கமாட்டார்கள்!

அறப்போர் குழுவினருக்கு தமிழ் இனம் சார்பாக, நன்றிகளையும், பாராட்டுக்களையும், நாம் கூறக் கடமைப் பட்டுள்ளோம்!

நீங்கள் அனைவரும், எங்கள் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் எதிர்பார்த்த இளைஞர்கள் தான்! நீங்கள் முதலாவது படி ஏறி விட்டீர்கள், அடுத்ததாக நாமும் இந்த புனிதமான போராட்டத்தில் முழுமையாக இறங்கவேண்டும்! இணையவேண்டும்!

என்னுடய ஆதரவு எப்பொழுதும் அறப்போர் குழவினருக்கு உண்டு என்பதை சொல்வதில் மகிழ்சியடைகின்றேன்! 

உங்கள் அறப்போர் ஆவணப்படத்தயாரிப்பு, மிகச்சிறப்பாக அமைந்துள்ளது என்பதைச் சொல்வதில் பெருமையடைகின்றேன். ஆவணப்படத்தின் ஓலிப்பதிவு தரம், காட்சி அமைப்புகள், குரல் வளம் மற்றும் பாடல் வரிகள் எல்லாமே பிரமாதமாக (SUPER!) இருக்கின்றது, பாராட்டுக்கள்! 

உங்களை மனமாற வாழ்த்துகின்றேன்!

நிதிலா

பி.கு. :

வெளிநாடுகளில் வாழும் இளம் சமுதாயம் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான வேலை என்னவென்றால்: அறப்போர் ஆவணப்பட இறுவெட்டை (DVD) பெற்றுக்கொண்டு பாடசலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் (University), போட்டு காட்டவேண்டும். எங்கள் மக்கள் நிலமைகளைப் பற்றி பலருக்கு எடுத்துரைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். அறப்போர் அறிவால் வெற்றி கொள்வது என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.

 

நன்றி
https://www.facebook.com/aishwarya.arulanandam

 

Edited by செங்கொடி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு நாட்களுக்கு முன் அறப்போர் (மாணவர் போராட்டம்) ஆவணப்படத்தை என் சக நண்பர்களுடன் சேர்ந்து பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆவணப்படங்களில் சாதாராணமாக உரையாடுபவர்களின் கேமாரா கோணம் அவர்களின் முகத்தை மையமாக வைத்து எடுக்கப்படும். இதில் வெற்றி, சில ஆவணப்பட இலக்கணங்களை மீற முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். 

குறைந்த நேர ஆவணப்படமாக இருந்தாலும், இதில் முற்போக்கு நாடக, ஆவணப்பட, குறும்பட, திரைப்பட வடிவங்களை ஆங்காங்கே தெளித்துள்ளார். சாதாரண கேமராவை வைத்துக்கொண்டு எடுத்த இதன் ஒளிப்பதிவு திரைப்பட ஒளிப்பதிவுக்கு சளைத்ததல்ல. 

படத்தொகுப்பை செய்த ரிச்சர்ட் மற்றும் ஒளிப்பதிவாளர் நியாஸ் மற்றும் ஏனைய தொழில்நுட்ப கலைஞர்கள் இதை ஆவணப்பட தொகுப்பு என்று கருதாமல், ஒரு திரைப்படத்திற்கான நேர்த்தியுடன் செதுக்கி இருக்கிறார்கள்.

நடிகர்ளில் குங்குமராஜ் நம் மனதில் நிலைக்கிறார்.

இயக்குநர் வெற்றிவேல் அவர்கள் இதில் வரலாற்றை பேசவரும் மாணவர்கள் அல்லாத சில பிரபலங்களை மீண்டும் மீண்டும் தோன்ற வைக்கிறார். அதற்கு பதிலாக எதிர்கருத்துக் கொண்டோர், சாமானிய மக்கள், ஆசிரியர்களையும் இதில் கருத்துக்கூறும் பங்கேற்பாளர்களாய் ஆக்கி இருக்கலாம்.

மொத்தமாக ஆவணப்படம் பார்க்கும்போது ஏற்படும் சோர்வை அறப்போர் தகர்க்க முயற்சி செய்கிறது.

தோழர் வெற்றிவேலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

நன்றி,
சண்முகராஜ்.

https://www.facebook.com/mshanmugaraj

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'Arappor' a film docmenting the wave of student protests that swept across Tamil Nadu was released in Chennai on Sunday, as a packed out crowd gathered to watch its first public screening.....

 

http://www.tamilguardian.com/article.asp?articleid=8412

பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் பார்த்துவிட்டு என் கருத்துக்களை சொல்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

dbl7i5y8.jpg

 

vr7s4f55.jpg

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அறப்போர் ஆவணப்படம்-தெளிவான ஒளிப்பதிவு, கச்சிதமான படத்தொகுப்பு, இசை என்று அனைத்தும் படத்துக்கு வலுவூட்டுபவை- இந்தியா டுடே பத்திரிகை பாராட்டு...

 

1174715_202382823262572_1087901741_n.jpg

 

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.