Jump to content

விடியலில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை


Recommended Posts

இன சுத்திகரிப்பை இலங்கை இன்று விடியலில் துவங்கி இதுவரை 1000க்கும் அதிகமான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். டொரோண்டோ 360 யூனிவர்சிட்டி அவன்யூ தற்சமயம் அங்கு போராட்டத்தை நடத்தும் மக்களால் தடை செய்யப்பட்டுள்ளது. இச்செய்தியை பார்க்கும் இந்நகர தமிழ் மக்கள் அனைவரும் தயவு செய்து அங்கு குழுமவேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

google map

TTC Map with Google

Please use Osgoode and St.Patric subways

நிதர்சன் கூறும் விடயங்கள் முக்கியமானவை:

இப் போராட்டம் நேற்று மாலை 7 மணி முதல் மாற்றம் பெற்று சாலை மறியல் போராட்டமாக உருவெடுத்துள்ளது. பெருந்திரலான மக்கள் இங்கு அணிதிரண்ட வண்ணமிருக்கின்றனர். உணர்வின் விளிம்பில் இளைஞர்களின் கோபக்கணல்கள் வீசிக்கொண்டிருக்கின்றது. ரொரன் காவல்த்துறையினரும் கலகமடக்கும் சிறப்பு காவல்துறையினரும் பெருந்தொகையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இரவு பகல் பாராது நடைபெறும் இப்போராட்டத்தில் தற்போதும் ஆயிரக்கணக்கானவர்கள் வீதியின் நடுவே அமர்ந்திருந்து தமது போராட்டத்தை நடாத்துகின்றனர். இந்த போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் நிலக்கீழ் தொடரூந்தில் பயணிக்கும் பட்சத்தில் போராட்டத்தின் மையப் பகுதியில் உள்ள சென்.பற்றிக்ஸ் தொடரூந்து நிலையத்தில் இறங்கலாம். அதே நேரம் வாகனங்களில் செல்வோர் தரிப்பிடங்களுக்கு குறிப்பிட்டளவு பணம் செலுத்த வேண்டி வரும்.

அதே நேரம், போராட்டத்தில் பங்கு பற்றுவொருக்கான உணவுகள், தேனீர், என்பன தன்னார்வ தொண்டர்களாலும், ஒழுங்கமைப்பாளர்களாலும் வழங்கப்படுகின்றன. இருப்பினும் பல நூற்றுக்கணக்கானோர், ரிம்கோட்டனின் வரிசையாய் நிற்பதைக்காணக்கூடியதாக இருந்தது.

கழிப்பற வசதிகள் பற்றி விபரங்கள தெரிந்தவர்கள் பதிவு செய்யுங்கள், பலர் நகரில் பல மையில் தொலைவுக்கு நடந்து சென்றதை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக இரவில் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதால் இந்த சிக்கல் இருக்கின்றது. தற்காலிக வசதிகளை ஏற்ப்டத்த முடிந்தால் ஏற்பாட்டாளர்கள் ஏற்ப்படுத்துவார்கள் என நம்புகின்றேன்.

அதே நேரம், வானகங்களின் சொந்த காரர்கள் தங்கள் வாகனங்களின் மூலம் போராட்டத்தை நடாத்த முடியும், ஆனால் எது வரினும் தளராத துணிவோடு நின்று போராட வேண்டும். அந்த உறுதி எம்மவர்களுக்கு கண்டிப்பாக தேவை!

பணிகளுக்கு பரீட்சைகளுக்கு செல்பவர்கள், சூழற்சி முறையிலாவது வந்து கலந்து கொள்ளுங்கள், உங்கள் வருகை வரலாற்றை திருப்பி எழுதும்!

நேசமுடன் நிதர்சன்

வன்னித்தென்றல் இணையம்

நன்றி: நிதர்சன்

Link to comment
Share on other sites

அங்கு போய்டுதான் வாரன் திரும்ப உடனே போரன்,முதலில் ஒரு பக்கம் ரோட்டினை தடுத்தார்கள் பின் சனம்5000- 10000 தாண்டியதும் மற்றபக்கமும் மறித்தாச்சு.,இப்ப 15000- 25000 சனம் இருக்கும் இன்னும் வருகின்ரார்கள்.

Link to comment
Share on other sites

நல்லது உறவுகளே! நீங்கள் செல்லும் போது ஆங்கில தொலைக் காட்சி மற்றும் வானொலி நிறுவனங்கள் உங்களிடம் செவ்வி எடுக்கவரலாம் எனவே அதற்கும் தயாராகி நில்லுங்கள். எம்மக்கள் மீது ஏவப்பட்டுள்ள அவலத்தை தெளிவாக எடுத்துக்கூறுங்கள். 3 மாத காலமாக தெருக்களில் இறங்கி போராடியும் பாரளுமன்றம் முன்பு உண்ணாநோன்பு இருந்தும் 33000 மக்கள் கூடி நின்று வேண்டிய வேண்டுகோளுக்கு செவி சாய்க்காததாலும் இவ்விடத்தை விட்டு அகலா போராட்டம் செய்கின்றோம் என்பதை தெளிவாக கூறுங்கள். எம் மக்களின் உணவையும் மருந்தையும் இலங்கை அரசு ஆயுதமாக பயன் படுத்துகிறது இதை உலக நாடுகளோ அய்நாவோ, கனடாவோ, அமெரிக்காவோ தடுத்து நிறுத்தாது எம் வேதனையை மென் மேலும் கூட்டியதால் இங்கு தீர்வு கிட்டும் வரைஇவ்விடத்தை விட்டு அகலா போராட்டம் செய்கின்றோம் என்பதை தெளிவாக கூறுங்கள்

Link to comment
Share on other sites

முக்கியமான விவரங்களை கூறியுள்ளோம் அங்கு செல்லும் உறவுகளுக்கு நிச்சயம் பயன் தரும்.

Link to comment
Share on other sites

தற்சமயம் இங்கு ஆட்கள் குறைவடைந்துள்ளதால் காவல் துறை ஒரு வழி பாதையை திறக்க செய்ய முயல்வதாக தெரிகிறது. உறவுகளே விரைவாக செல்லுங்கள், வாகனங்கள் எடுத்து சென்று அவதியுறாதீர்கள்.

Link to comment
Share on other sites

நானும் இப்போ தான் வந்தேன் இந்த ஒருவழிபாதையை கட்டாயம் திறக்கவேண்டும் என்பது தான் என் விருப்பம்,இதைதான் முன்பும் ஒட்டாவாவில் செய்தோம்.காரணம் முற்றாக அடைத்தால் யாரும் அவ்விடத்துக்கு வரமாட்டார்கள்.திறந்துவிட்டா

Link to comment
Share on other sites

நானும் இப்போ தான் வந்தேன் இந்த ஒருவழிபாதையை கட்டாயம் திறக்கவேண்டும் என்பது தான் என் விருப்பம்,இதைதான் முன்பும் ஒட்டாவாவில் செய்தோம்.காரணம் முற்றாக அடைத்தால் யாரும் அவ்விடத்துக்கு வரமாட்டார்கள்.திறந்துவிட்டா
Link to comment
Share on other sites

அந்த வீதியில் சிக் கிட்ஸ் உட்பட 4 வைத்தியசாலைகள் உள்ளன அதனால்தான் ஒருபக்க வீதியை அவர்கள் திறக்க முயற்சிக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த நிலையை ஒரு நிமிடத்தில் வேண்டுமானாலும் கனேடிய அரசு முடிவுக்கு கொண்டுவரலாம். எங்களிடம் மல்லுக்கட்ட நினைக்கும் காவல்த்துறை அரசாங்கத்துடனும் அரசியல் வாதிகளுடனும் பேச வேண்டும். ஒரு பாதையை விட்டுக்கொடுத்தால் போராட்டம் நடாத்துவதன், பலன் என்ன?

மக்களுக்கு காட்சிப்படுத்த இங்கு போராட்டம் அல்ல. அரசியல் வாதிகள் கீழிறங்கி வரவேண்டும். அவர்கள் வாசலில் ஒட்டாவாவில் நின்ற போது வராதவர்கள் ரொரன்ரோ வந்து பேசட்டும். அவர்கள் பேசினால் பின் நாங்கள் ஏன் வீதியை மறித்து நிற்க்க போகின்றோம்.?

அதே நேரம் வைத்திய சாலைக்குசெல்ல மாற்று வழிகள் உண்டு. அவை சற்று தூரமானை சுற்றுப்பாதைகளை கொண்டவை. ஆனால் பெரியளவில் நேரமாகாது.

இன்று பலரும் ஒரு பாதை திறப்பதை பற்றி பேசினார்கள். ஆனால் அப்படி திறப்பதற்க்கு ஏற்ப்பாட்டாளர்கள் என்ற பெயரில் "பெரிசு"கள் சம்பதித்தால் அது இளைஞர்களின் உணர்வுகளுக்கு விழுந்த சவுக்கடியாக இருக்கும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

கனேடிய அரசு எமக்கு நன்றி சொல்ல வேண்டும் ஏன் எனில் நாம் இன்றும் இப்போதும் மிகவும் பொறுமையாகவும், சட்டத்தை மதித்துமே செயற்ப்படுகின்றோம்.!

Link to comment
Share on other sites

இது எவராலும் ஏற்பாடு செய்யப்படவில்லை. மக்களின் வழியிலேயே போராட்டம் செல்லும். பல இளைஞர்கள் காவல்துறையிடம் அடிவாங்கினாலும் சரி அந்த இடத்தை விட்டு அசைவதில்லை என்ற உறுதியுடன் இருக்கின்றார்கள். மக்களின் ஆதரவு தொடர்ந்து இருக்கும் பட்சத்தில் ஒரு அழுத்தத்தை நிச்சயமாக கனேடிய அரசாங்கத்திற்கு கொடுக்கும்.

Link to comment
Share on other sites

இது எவராலும் ஏற்பாடு செய்யப்படவில்லை. மக்களின் வழியிலேயே போராட்டம் செல்லும். பல இளைஞர்கள் காவல்துறையிடம் அடிவாங்கினாலும் சரி அந்த இடத்தை விட்டு அசைவதில்லை என்ற உறுதியுடன் இருக்கின்றார்கள். மக்களின் ஆதரவு தொடர்ந்து இருக்கும் பட்சத்தில் ஒரு அழுத்தத்தை நிச்சயமாக கனேடிய அரசாங்கத்திற்கு கொடுக்கும்.

உண்மைதான் மேலும் காவல்துறை இதுவரை போராட்ட முடிவு குறித்து அறியாததால் கவலைபடவும் இல்லை....ஆனால் யாராவது விஷமிகள் நுழைந்தால் தூக்குவதற்கு தயாராக உள்ளனர்.

நம் மீது எந்த பாதிப்பும் ஏற்படாவண்ணம் காக்கின்றனர்.

போராட்ட மையத்திற்குள் கண்காணிப்பு பணியும் செய்கின்றனர், மக்களிடம் நட்புடன் இருக்கின்றனர்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரோரன்ரோவில் மக்கள் கொஞ்சம் அதிகம் தூங்கி விட்டார்கள் போல இருக்கின்றது. அல்லது போராடி களைத்து விட்டாhக்ளே தெரியவில்லை.மக்களின் தொகை அதிகரிக்க வேண்டும். போராட்டம் இன்னும் பல செய்திகளை கனேடிய அரசுக்கும், அமெரிக்க அரசுக்கும் சொல்ல வேண்டும். ஆனாலும் இன்று வருகை தந்த மக்கள் தொகை காணாது. இப்படியே போனால் நாம் இந்த போராட்டத்தில் தோல்வியடைவோம். நாம் இங்கே தோல்வியடைவது தாயகத்தில் உயிரை கையில் பிடித்து வண்ணம் நெடு நாட்களாக உயிர்வாழும் கனவோடு வாழும் எம் உறவுகளும் தோற்றவர்களாகி செத்தவர்களாகி விடுவார்கள்.

எனவே உறவுகளே,

எனக்கவோ, யாருக்காகவோ நீங்கள் வரவேண்டாம், உங்களின் உறவுகளுக்காக வாருங்கள். சுழற்ச்சி முறையில் வந்து இருந்து விட்டுப்போங்கள். இது சட்டத்துக்கு முரணான போராட்டம் அல்ல. எங்களது கனேடிய சட்டத்துக்கு அமைவாக, நடக்கும் ஒரு போராட்டம். எங்களின் சிறப்புரிமைகளில் ஒன்றான ஒன்று கூடும் சுததந்திரத்தை பயன்படுத்துகின்றோம்.

எனவே அச்சம் களைந்து வீறு கொண்டு வாருங்கள்!

Link to comment
Share on other sites

ஏனய்யா ஒரு செத்தவீடென்றாலே 25 ஆட்கள் நிக்கிறீங்க கோயமுத்தூர் என் ஊர் நான் ஏன் இதற்கு போகனும்னு நினைப்பது தமிழுக்கு தமிழ் மக்களுக்கு மனிதநேயத்திற்கு செய்யும் பெரும் துரோகம் என நான் எண்ணும் போது தமிழீழத்தில்இருந்து வந்த நீங்கள் வன்னியில் படும் அவலங்களுக்கு தெருவில் இறங்கி சொல் அம்புகளால் சிங்களவனை துளைக்கவேண்டாமா? அப்படி செய்யலைன்னா உங்களுக்கும் கருணாக்கும் என்ன வேற்றுமை? இல்ல அந்த சண்டாளர்கள் மகிந்தவினருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?

Link to comment
Share on other sites

எது என்னவோ இன்றிரவு முதல் அனைவரும் தயவு செய்து கூடிட துவங்குங்கள் காவல்துறை நம்மை கலைக்காமல் காத்து நில்லுங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.