Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எந்தவகையில் நியாயமாகின்றது?

Featured Replies

அன்பார்ந்த தமிழீழ மக்களே!

அன்புக்குரியவர்களே இதனை ஒரு வேண்டுகோளாக உங்களிடம் விண்ணப்பிக்கின்றோம்.

மானிடப்பிறப்பும் மானிடஉயிரும் என்றும் விலைமதிக்க முடியாதவை.

60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ மக்கள் படும் துன்பங்கள் இழப்புக்கள் சொல்லிமாளாதவைகள். இந்த இழப்புக்கள் துயரங்களும் தமிழீழத்தில் ஒவ்வொரு குடும்பத்தில் இன்று ஏற்பட்டுள்ளது. தமிழீழ மக்களுக்கு நிரந்தரமானதோர் சமாதானம் வேண்டும் என்ற ஏக்கங்களும் எதிர்பார்ப்பும் எமது தாயக மக்களிடம் அதிகமாக இருந்தது.

ஆனால் எதிர்பார்த்ததற்கு மேலாக கடந்த 8 ஆண்டுகளாக போர் நிறுத்தம் தமிழ் மக்களின் நம்பிக்கைகளைத் தகர்த்து வன்னியில் சுமார் 40 ஆயிரம் தமிழ் மக்களைப் படுகொலைக்கு உள்ளாக்கியுள்ளது. சிங்கள் தேசத்தின் கொலை இராணுவம் செய்த அட்டூழியங்களும் வீசிய கொடிய குண்டுகளும் வன்னிமக்களை தாக்கிய போதும் ஓரளவு நம்பியிருந்த உலக நாடுகளும் ஐ.நா சபையும் அதை தடுக்க முயற்ச்சி எடுக்கவில்லை. அந்த வேளை இருந்த உலக அரசியலை தனக்கு சாதகமாக பயன்படுத்திய சிறீலங்கா அரசானது இறையாண்மை தேசிய ஒருமைப்பாடு உள்நாட்டு பிரச்சனை நாட்டின் பாதுகாப்பு தனிக்குழுவின் பயங்கரவாத நடவடிக்கை என்ற போர்வைக்குள் ஒளித்துக்கொண்டு இனப்படுகொலையை திட்டமிட்டு செய்து குற்றங்களை மறைக்கின்றது.

தேசிய இனங்களின் போராட்டங்களின் எதிர்காலத்திற்குள் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அனுபவங்கள் படிப்பினையாக இருக்கும். உலக பிராந்திய ஆதிக்கங்களின் துணையுடன் தங்கள் மீது சிறீலங்கா அரசு நடாத்திய பயங்கரவாத படுகொலைகளுக்கு நீதியையும் அரசியல் உரிமைகளையும் பெற போராட்டத்தை மீண்டும் சீர்படுத்த வேண்டும். இதற்கு உறுதுணையாகவும் கொடூரமிழைத்த

குற்றவாளிகள் சர்வதேச சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுக்கொடுக்க தங்களை அர்பணிப்புடன் செயலாற்ற வேண்டும். பல காலங்களுக்கு முன் தனது இனத்திற்கும் யூக்கோசிலாவாக்கியா செச்சினியா போன்ற நாட்டு தலைவர்களும் இன்று காலம் சென்று தண்டனைக்கு உள்ளாகி வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் சிறீலங்கா தேசத்தின் நீண்டநாள் இராணுவ தளபதிக்கு அந்த நாட்டு அரசு தண்டனை வழங்கும் போது இத்தனை படுகொலைகளுக்கும் காலாகலமாக உடந்தையாக இருந்தவர்களை சும்மா விடுவது எந்தவகையில் நியாயமாகின்றது?

அன்பான தமிழீழ மக்களே!

உங்கள் கைகளில்தான் எல்லாமே தங்கியிருக்கின்றது. பாதிக்கப்பட்ட நீங்கள் தான் முன்வரவேண்டும். உங்களுக்கு உதவிட சர்வதேச நீதிமன்றங்களும் சட்டவாளர்களும் ஊடகங்களும் சாட்சிகளோடு காத்திருக்கும் வேளை உங்கள் பெற்றோர்களை மறந்து உடன்பிறந்தவர்களையும் உற்றார் உறவினரையும் நண்பர்கள் ஊரவர்களை மறந்து அவர்களின் உயிர்களை அநியாயமாக்கிவிட்டு வாழாதிருக்கப்போகின்றோமா? உண்மையை உரையுங்கள் உங்கள் பாதுகாப்பும் உங்கள் பெயரும் நீதியின் முன்னால் பாதுகாக்கபடும் உங்கள் சனநாயகம் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையை மட்டும் உறுதியாக கொண்டு உடன் செயற்படுங்கள்.

1. பெற்றோர்களை உடன் பிறந்தவர்களை உறவினர்களை இழந்தவர்கள்

2. அங்கவீனம் ஆக்கப்பட்டவர்கள் உளவியல் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்.

3. சொந்த வாழ்விடங்களை இழந்தவர்கள் சொத்துக்கள் சூறையாடப்பட்டவர்கள்

4. மொத்தமாக சிங்கள ஆட்சியாளர்களால் பாதிக்கப்பட்டவர்கள்

உடன் இந்த அமைப்புடன் இணையத்தள மூலம் தொலைபேசிமூலம் தொடர்பை கொள்ளலாம் அனைத்தும் இரகசியமாகவே பேணப்படும் என்பது உறுதிபட கூறப்படுகின்றது.

உங்களுக்கு தேவையான சகல ஆலோசனைகளையும் உதவிகளையும் நாம் வழங்குவோம்.

ஐரோப்பிய, கனடா, மலேசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் வசிப்போர் உங்கள் நாடுகளில் உள்ள மக்கள் அமைப்புக்கள் ஊடாக உதவிகளை பெற்றுக்கொள்ளலாம்.

தொடர்புகளுக்கு

தமிழிழ மக்கள் பேரவை பிரான்சு

mte.france@gmail.com

00 33 6 15 88 42 21

Edited by akootha

  • தொடங்கியவர்

"First they came for the Jews and I did not speak out - because I was not a Jew. Then they came for the communist and I did not speak out - because I was not a communist. Then they came for the trade unionists and I did not speak out - because I was not a trade unionists. Then they came for me - and there was no one left to speak out for me." -Pastor Niemoeler (victim of the Nazis)

Time for us to speak out. 29 days to go.

Send your mail and ask others to join as well.

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.