Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீபம் தொலைக்காட்சியில் புறக்கணி சிறிலங்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தீபம் தொலைக்காட்சியில் நடந்த அந்த உரையாடலில் சிறீலங்கா சிங்கள அரசு ஆதரவுக் கும்பலைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக லண்டனில் வசிக்கும் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள்.. குறிப்பிடும் கருத்து.. சிறீலங்கா பொருட்களை சேவைகளை விளையாட்டை புறக்கணிப்பதால் சிறீலங்காவிற்கு எதுவும் பாதிப்பில்லை. சிறீலங்காவிற்கு இந்திய சீன சந்தைகள் திறந்து கிடக்கின்றனவாம்..??!

இந்திய சீன சந்தைகள் சிறீலங்காவிற்கு திறந்திருப்பதாகத் தெரியவில்லை. சிறீலங்காவின் இந்தியாவுக்கான ஏற்றுமதியை விட சீனாவுக்கான ஏற்றுமதியை விட இறக்குமதியே அதிகம். இதனை கருத்தில் கொண்டு தான் சிறீலங்காவிற்கு இந்திய.. சீன உல்லாசப் பயணங்களை ஊக்குவிக்க.. விசா தளர்வுகளை இந்த அரசுகள் மேற்கொண்டு சிறீலங்காவுடனான இருதரப்பு வர்த்தகச் சமநிலையை நோக்கி கொண்டு வர முயன்றனர். முயல்கின்றனர்.

உண்மை அப்படி இருக்க.. வரலாறு முழுவதும் பொய் பேசிக் கொண்டிருக்கும் இந்த சிறீலங்கா சிங்கள பேரினவாத ஆட்சிக்கு ஆதரவளிக்கும் கும்பல்கள்... ஜனநாயகம் என்ற போர்வையில் பொய்களை மக்கள் மத்தியில் விதைக்க தீபம் தெரிந்தோ தெரியாமலோ உதவி செய்வது வருத்தமளிக்கிறது.

சிறீலங்கா பொருட்களை சேவைகளை விளையாட்டை புறக்கணிப்பதால் உள்ள நன்மைகள்..

1. சிறீலங்காவின் ஏற்றுமதி வருமானத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி இருக்கும். அந்நியச் செலவாணி வீழ்ச்சி இருக்கும்.

2. சிறீலங்காவின் உற்பத்தி வீழ்ச்சி தொழில் இழப்பு அதிகரிக்கும். இது உள்நாட்டில் சிங்கள அரசுக்கு நெருக்கடிகளை கொண்டு வரும்.

3. சிறீலங்காவின் வருமான வீழ்ச்சி இராணுவச் செலவீனங்களை கட்டுப்படுத்தி இராணுவ ஆக்கிரமிப்பில் ஆட்குறைப்பு போன்ற பல மாற்று நடவடிக்கைகளை எடுக்க அது தூண்டும்.

4. உலக அரங்கில் தமிழ் மக்கள் சிங்கள அரசின் பொருட்களை எதிர்க்கிறார்கள் சிங்கள அரசின் ஆட்சியை விரும்பவில்லை என்பதை வெளி உலகிற்கு எடுத்துக்காட்டும்.

5. சிறீலங்கா எயார் லைன்ஸ்மற்றும் சிறீலங்காவிற்கு உல்லாசப் பயணம் போவதை புறக்கணிப்பதன் மூலம் உல்லாசப் பயணத்துறையை நம்பி வாழும் சிறீலங்காவை நோக்கி இதர மக்களையும் அதைச் செய்யத் தூண்டி.. அதன் உல்லாசப் பயணத்துறையில் வீழ்ச்சியை உண்டு பண்ணலாம்.

6. உலக அரங்கில் சிறீலங்கா அரசுக்கு எதிராக தமிழ் மக்கள் திட்டமிட்ட நீண்ட கால நோக்கிலான ஒரு நடவடிக்கையை எடுக்கும் பலத்தை தேவையைக் கொண்டிருப்பதை உலகம் உணரச் செய்யும். அது எமது போராட்ட இலட்சியத்திற்கு அரசியல் உரிமைக் கோரலுக்கு உறுதி அளிக்கும்.

7. சிறீலங்கா மீதான தமிழர்களின் நீடித்த பொருண்மிய தடை என்பது சிங்கள அரசு தமிழர்கள் மீது 1986 இல் இருந்து அமுல் படுத்தி வந்த பல்வேறு பொருண்மியத் தடைகளூடு அது தமிழர்களை அடிமைப்படுத்த உதவியது போன்று எமக்கும் உதவி சிறீலங்காவை அதன் பொருளாதாரத்தை சிறிதளவேனும் சேதப்படுத்தவும் அதன் வழி எமது பிரச்சனைகளை சிங்கள சமூகம் செவி சாய்க்கவும் செய்யும். இன்றேல் சிங்களம் எமது அடிப்படை பிரச்சனைகளையே மறந்து சிங்கள பெளத்த பேரின வெறியில் திழைத்து வாழும்.

இந்த புறக்கணிப்பால் எழக் கூடிய தீமைகள் என்று பார்த்தால்..

1. உள்ளூரில் தமிழர் தாயகத்தில் இருந்து வரும் மூலப் பொருட்கள் சார்ந்த உற்பத்திகள் ஏற்றுமதியாவது தடைப்படலாம். இதனால் தமிழர்களின் பொருளாதாரம் பாதிப்படலாம். ஆனால் இன்று தமிழ் மக்களின் மூலப் பொருட்களை உற்பத்திகளை கொள்ளை விலையில் தமிழ் துரோகக் கும்பல்களைச் சேர்ந்த வர்த்தகர்களும்.. சிறீலங்கா இராணுவத்தினரும்.. அரசாங்க மற்றும் எதிர்கட்சி ஆதரவு வர்த்தகர்களும் கொள்வனவு செய்து அவர்களே அவற்றை வெளிநாடுகளுக்கு அனுப்பும் நிறுவனங்களுக்கு விற்று பெரும் இலாபம் சம்பாதிக்கின்றனர். இதனால் தமிழ் மக்களுக்கு கிடைக்கக் கூடிய வருமானம் கிடைப்பதில்லை. அவர்கள் எப்போதும் போல உள்ளூர் விலைக்கே உற்பத்திகளை விற்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்.

நிலைமை இப்படி இருக்க.. தீபம் இரண்டு துரோகிகளை கூப்பிட்டு வைத்து தமிழீழத்தை விட்டெறி.. புலிகளின் மிச்ச சொச்ச எச்சங்களை தூக்கி எறி என்று தமிழ் மக்களின் 67 ஆண்டு கால அரசியல் கோரிக்கையை ஏளனப்படுத்தும் மிக மோசமான செயலை செய்ய அனுமதிக்கின்றனர். சிங்களப் பேரினவாதிகளைப் போல இவர்கள் பேச தமிழ் மக்களின் விளம்பரத்தில் தமிழ் மக்களின் சந்தாவில் காலம் கழிக்கும்.. தீபம் செயற்படுவது வருத்தமளிக்கிறது. இதையிட்டு தீபம் சிந்திக்க வேண்டும்.

உருப்படியான பொருளியல் அரசியல் வல்லுனர்களை கூட்டி வந்து ஒரு ஆய்வரங்கத்தை நடத்தினால் அது செயற்திட்டங்களை கூர்மைப்படுத்த உதவும். மாறாக உருப்படாத தேசம்.. கீசம்.. போன்ற குப்பைகளில் காலம் கடத்தும் இழி பிறப்புக்களை கருத்துச் சொல்ல அழைப்பது ஏன். சிறீலங்கா அரசின் புலம்பெயர் மக்கள் மீதான பிரச்சார ரீதியான இன அடக்குமுறை கருத்துக்களை இங்கும் பரப்பவா..???!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இது ராஜபக்ச சொல்வது போல் இருக்குது.. புலம்பெயர்ந்த தமிழர்களை சமாளிப்பதுவே எனக்கு சவால் என்று. ஆனால் இன்னும் சில காலத்தில் அந்தச் சவாலையும் இல்லாமல் செய்யிற அளவிற்கு உங்கள் போன்றோரின் ஊடக ஆதிக்கம் இருக்கிறது. இது தமிழ் தேசியத்திற்கும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கும்.. அரசியல் விடிவுக்கும்.. அடிமை வாழ்வு விலகலுக்கும் ஆபத்தானது.

arjun, on 23 April 2011 - 06:24 AM, said:

இனியும் வேசங்கள் வேண்டாம்.களைத்துவிட்டுவாருங்கள் ஒன்றாக வேலை செய்யலாம்.

திருநீறு பூசிய பல பூசாரிகள் யாழில் உள்ளார்கள் அவர்கள் ஒருகாலமும் வரப்போவதுமில்லை எமக்கு தேவையுமில்லை.கிணற்று தவளைகளாக அவர்கள் இருப்பததே நல்லது.

எதை நோக்கி ஒன்றாக வேலை செய்யலாம்..

1. தமிழீழம் சாத்தியமற்றது.. சிங்கள அரசோடு உறவைப் பலப்படுத்தி உரிமை வெல்வது என்ற இராமநாதன் காலச் செயற்பாட்டை செய்யவா..??!

2. புலிகளின் கொள்கைகள்.. அதன் எச்சங்களை தூக்கி போட்டுவிட்டு.. ஓடி வாருங்கோ.. சிறீலங்கா ஒரு சிங்கள பெளத்த தேசம்.. என்று கோத்தா வடிச்சு தாற கொள்கையின் படி செயற்படுவோம் என்றா..??!

3. புலம்பெயர் தேசங்களில் சிங்கள சிறீலங்காவுக்கு எதிரான செயற்பாடுகளால் எள்ளளவும் பயனில்லை.. அவற்றை எல்லாம் விட்டுவிட்டு.. புலிகளுக்கு என்று திரட்டிய நிதியோடு ஓடி வாருங்கோ.. சரணடைந்த போராளிகளை.. சிறைகளுக்குள்ளேயே வைத்து வாழ்வளிக்கவா..??!

4. சிங்களவன் உலகம் எல்லாம் கடன் வாங்கி குண்டு போட்டவன்.. அவனுக்கு கடன் சுமை அதிகம்.. வாருங்கோ.. உடைஞ்சதுகளை கட்டி வைச்சு சிங்களவர்களை அயலில் குடி வைச்சு.. இன ஐக்கியம் காட்டுவோம்.. நிலம்.. உரிமை.. இனம். இதெல்லாம் எமக்கு சாப்பாடா போடப் போகுது.. என்று சொல்ல ஒன்றா சேர்ந்து வேலை செய்யவா அலைக்கிறீர்கள்...??!

5. போராட்டம் கீராட்டம் எதுவுமே எமக்கு ஆகாது. 85% சிங்கள மக்கள் வாழும் சிறீலங்காவில் அவர்களின் உழைப்பில் வாழும் நாம் அவர்களின் அடிமைகள்.. அவர்களிடமே சாப்பாடும் வாங்கி மருந்தும் வாங்கி சாப்பிட்டுக் கொண்டு அவர்களுக்கு எதிராக போராடியவர்களே புலிகள்... அந்தத் துரோகம் எனியும் வேண்டாம்.. வாருங்கோ எல்லோரும் ஒரே அடியா ராஜபக்சவின் காலில் விழ ஒன்றாக முயற்சி செய்வோம்.. அப்படிச் செய்திருந்தால் முள்ளிவாய்க்கால் அவலமே நடந்திருக்காது என்று சொல்லவா கூட்டாக வேலை செய்ய அழைக்கிறீர்கள்.

6. எங்கள் தளபதி தானைத் தலைவர்கள்.. டக்கிளசு.. சித்தார்த்தன்.. ஆனந்த சங்கரி .. வரதராஜப் பெருமாள் போன்றவர்களோடு கூட்டுச் சேர்ந்து கூட்டாக அரசியல் வியாபாரமும் கடத்தல் வியாபாரமும்.. கூலி வியாபாரமும் செய்வோம் ஓடிவாருங்கள் இணைந்து பணியாற்றுவோம் என்றா..??!

7. தேர்தலுக்கு தேர்தல் சிங்களக் கட்சிகளுக்கு சுவரொட்டி ஒட்டி கு*டி கழுவி விட்டு.. ஆனந்த அரசியல் செய்வோம்.. ஓடிவாருங்கோ இணைந்து வேலை செய்வோம் என்றா அழைப்பு விடுகிறீர்கள்..??!

எதை எங்க எப்படி இணைந்து வேலை செய்து சாதிக்கப் போறீர்கள்.. அதை எழுதித் தொலையுங்கோப்பா. சும்மா.. ஊடகங்களிலும் யாழிலும் உங்களுக்கு கதிரை போட்டு தருகினம்.. நீங்களும் வந்து அது சாத்தியமில்லை.. புலி என்ற சொல்லே எமக்கு ஒவ்வாமை.. ஜனநாயகம் செத்துப் போச்சு.. நாங்கள் உயிர் கொடுக்கிறம் என்று அளக்கிறீங்க.

நீங்க ஒருத்தரும்.. தமிழ் மக்கள் கேட்டு ஆயுதம் தூக்கல்ல. அதேபோல உங்களை... தமிழ் மக்கள் ஜனநாயகத்தை வேண்டி தா.. புலியை எதிர் என்று கேட்டுக் கொண்டிருக்கேல்ல. தமிழ் மக்களைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் அவர்களின் சொந்தப் பிள்ளைகள். அவர்களையும் அவர்களின் கொள்கைகளையும் தூங்கி எறியச் சொல்ல எந்த எச்சிலிலை எலும்பு பொறுக்கி நாய்க்கும் உரிமை கிடையாது. இதைச் சொல்ல நமக்கு ஜனநாயக உரிமை இருக்குது.

விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரை.. தமிழீழம் என்பதை தமிழ் மக்கள் 1977 இல் அங்கீகரித்துவிட்டனர். அதை இல்லை என்று சொல்லவும் சாத்தியம் இல்லை என்று சொல்லவும்.. எலும்பு பொறுக்கி நாய்களுக்கு எந்த உரிமையும் இல்லை. மக்கள் வாக்களிப்பு மூலம் தீர்மானித்ததை நிராகரிக்க எந்த சன நாய் அகம் பேசும் நாய்க்கும் உரிமை கிடையாது. நாய்கள் பொறுக்கித் தின்பதை பற்றி பேசலாம்.. குரைக்கலாம்.. எஜமான விசுவாசத்தை சிங்களம் மீது காட்டலாம். அதேபோல்.. வெறி பிடித்த நாய்களை.. கட்டாக்காலி நாய்களை.. கட்டுக்கடங்காத நாய்களை பிடிச்சு சுடலாம்.. கூண்டோடு பிடிச்சு.. கைலாயமும் அனுப்பலாம்..! அங்கு நாய் உரிமைகளை யாரும் மதிப்பதில்லை. ஆனால் பட்டி போட்ட நாய்க்கு மட்டும் ஜனநாயக உரிமை..! போங்கையா நீங்களும் உங்கட சன நாய் அகமும்.

Edited by nedukkalapoovan

... முதலில் ... தம்மை நடுநிலையான ஊடகம், நடுநிலையாக செயற்படுகிறோம் ... ஏன்???? .... கொழும்பில் இருந்து செயற்பட (அங்கு சில வர்த்தக முதலீடுகள் இவர்களுக்கு உள்ளதாகவும் கூறுகிறார்கள்) ... என்று எம்மை ஏமாற்றும் இந்த ஊடகத்தை நாம் புறக்கணிக்க வேண்டும்!!! ... எங்களை(புலம்பெயர் மக்களை) ஏமாற்ற இடையிடையே இப்படி சில கலந்துரையாடல்கள் .... மற்றும்படி முன்னால் ஆறுசனலான் நடாத்தும் டானுக்கு நிகரானதுதான் இந்த தீபம்!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.