Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோபல் சமாதானப் பரிசுக்கு சனல் 4 தொலைக்காட்சி பரிந்துரைப்பு!

Featured Replies

நோபல் சமாதானப் பரிசுக்கு சனல் 4 தொலைக்காட்சி பரிந்துரைப்பு!

பொங்குதமிழ் முன்னெடுத்த முயற்சி

2009 ம் ஆண்டுக் காலப்பகுதியில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான 'இலங்கையின் கொலைக்களம்' ஆவணப்படத்தினை வெளியிட்டு சிறிலங்காவின் போர்க்குற்ற மீறல்களை உலகுக்கு அம்பலப்படுத்துவதில் பெரும்பங்காற்றிய சனல் 4 தொலைக்காட்சி குழுமம் 2012ம் ஆண்டுக்கான நோபல் சமாதானப் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இப்பரிந்துரையை மேற்கொள்ளுவதற்கான முன்னெடுப்புகளையும் முயற்சிகளையும் பொங்குதமிழ் இணையத்தளம் மேற்கொண்டிருந்தது.

கடந்த பெப்பிரவரி 1ம் திகதி, பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் Siobhain Ann McDonagh மற்றும் அவுஸ்திரேலிய செனட்சபை உறுப்பினர் Lee Rhiannon ஆகியோர் கையொப்பமிட்டு இந்தப் பரிந்துரையை அனுப்பி வைத்துள்ளனர். இவ்விரு பாராளுமன்ற உறுப்பினர்களாலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இப் பரிந்துரையின் முழுமையான வடிவத்தினை இங்கே தருகிறோம்.

'இலங்கையின் கொலைக்களம்' எனும் ஆவணத் திரைப்படத்தினை கடந்த ஆண்டு (2011) உருவாக்கி ஒளிபரப்பியதன் மூலம் உலகளாவிய சமாதானத்திற்கும் நீதிக்கும் மிகச்சிறந்த பங்களிப்பினை வழங்கியிருக்கும் பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சிக் குழுமத்தினை 2012ஆம் ஆண்டுக்குரிய சமாதானத்திற்கான நோபல் விருதுக்குரியவர்களெனப் பரிந்துரைப்பதில் நாம் பெருமை அடைகின்றோம்.

'இலங்கையின் கொலைக்களம்' ஆவணப்படத்தின் உருவாக்கக்குழுவில், அதன் நெறியாளர் Callum Macrae, ஆவணப்பட தொகுப்புரைஞர் Jon Snow மற்றும் மிகக்கடினமானதும் பாரிய சவால்களும் நிறைந்த மேற்படி ஆவண உருவாக்கத்திற்கு பின்னணியில் உழைத்த பிரித்தானியாவின் ITN ஊடக நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர்களும் இக்குழுவில் உள்ளடங்குகின்றனர்.

ஒரு மணிநேர நீளம் கொண்ட 'இலங்கையின் கொலைக்களம்' ஆவணத் திரைப்படம் 2011 ஜுன் 14ஆம் நாள் பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் முதலில் ஒளிபரப்பப்பட்டது. அக்காலப்பகுதியிலிருந்து தொடர்ச்சியாக பல்வேறு உலக நாடுகளின் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது. அத்தோடு பல்வேறு அனைத்துலக நிறுவனங்களின் நிகழ்வுகளில், பல்கலைக்கழக கருத்தரங்குகளில் திரையிடப்பட்டது. ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைப் பேரவையில் 2011 மே மாதம் திரையிடப்பட்டதோடு, நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் அவையின் தலைமையகத்திலும் திரையிடப்பட்டது.

நடந்தேறியவற்றைப் பதிவு செய்த ஆவணப்படமாகவுள்ள இதன் தனிச்சிறப்பும், உண்மைகளை வெளிக்கொணர்ந்ததன் மூலம் அது ஏற்படுத்தியுள்ள தாக்கமும் என இலங்கைத்தீவில் சமாதானத்திற்கும் மீள் நல்லிணக்கத்திற்கும் இவ் ஆவணப்படம் வழங்கியுள்ள வாய்ப்புக்கள் பாரிய அளவிலானவை.

Alfred Nobel அவர்களுடைய விருப்பாவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல, நாம் இங்கு பரிந்துரைக்கும் பணியானது, 'சமாதானத்தின் உருவாக்கத்துக்கும் அதன் பரம்பலுக்கும்..' காத்திரமான பங்களிப்பினை வழங்கியுள்ள அதேவேளை காலப்போக்கில் 'தேசங்களுக்கிடையிலான தோழமைத்துவத்தை வலுப்படுத்துவதோடு, பெரும்படைகளையும் இல்லாதொழிக்கும்' என நாம் நம்பலாம்.

இலங்கைத் தீவின் இனமுரண்பாடும், அதனைத் தொடர்ந்து நாட்டினை அழிவுக்குள்ளாக்கி மூன்று தசாப்தங்கள் நீடித்த உள்நாட்டுப் போர், 2009 இன் முதல் மாதங்களில் மிகக் கொடூரமான கட்டத்திற்குள் இட்டுச்செல்லப்பட்டது. சிறிலங்கா அரசபடைகளின் தாக்குதல்களால் 100 000 வரையான தமிழ்ப் பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைத் தீவின் முரண்பாட்டில் தொடர்புபட்டிருந்த தரப்புகளால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மீதான அனைத்துலகின் கவனத்தை அதிகரிப்பதற்குரிய காத்திரமானதும் தனித்துவம் மிக்கதுமான ஆதாரமாக 'இலங்கையின் கொலைக்களம்' ஆவணத் திரைப்படம் அமைந்தது. அனைத்துலக முரண்களுக்கான ஆய்வுக்குழு, மனித உரிமைகள் கண்காணிப்பகம், அனைத்துலக மன்னிப்புச் சபை ஆகிய அனைத்துலக நிறுவனங்களாலும், ஐக்கியநாடுகள் அவையின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவினால் கையளிக்கப்பட்ட அறிக்கையிலும் கோரப்பட்டது போன்று போரக்குற்றங்கள் மீதான அனைத்துலக விசாரணைப் பொறிமுறையையும் இவ் ஆவணப்படம் கோரியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

அதேவேளை மனித உயிர்களைப் பாதுகாப்பதிலும் கொடிய போர்களைத் தடுப்பதிலும் ஐக்கிய நாடுகளின் நிறுவனங்கள் தோல்வியுற்று வருகின்றமை அதிகம் அவதானிக்கப்படுகின்ற இன்றைய புறநிலையில், 'இலங்கையின் கொலைக்களம்' ஆவணத் திரைப்படம் இலங்கைத் தீவில் கொடியபோரைத் தடுக்க உலக நாடுகள் தவறியதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றமை மட்டுமின்றி, இதுபோன்ற போர்கள் சார்ந்து ஐக்கிய நாடுகள் அவையின் செயல்வலுவினை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டியதையும், அதன் செயல்வலு வேகம்பெற வேண்டிய அவசியத்தையும் ஒருங்கே வலியுறுத்தியும் நிற்கின்றது.

சிறிலங்கா அரசாங்கத்தின் மீதான அனைத்துலக நியம மீறல் குற்றச்சாட்டுகளைத் துணிகரமான முறையிலும், பல்வேறு வடிவங்களிலமைந்த ஆதாரங்களை முழுமை பொதிந்த வகையிலும் தொகுத்து, சுதந்திரமானதும் பெறுமதி மிக்கதுமான ஊடகப்பணி மூலம் சமாதானம் நிறைந்த உலக ஒழுங்கினை எதிர்காலத்தில் கட்டியெழுப்ப வேண்டியதன் இன்றியமையாமையை ITN நிறுவனத்தின் உருவாக்கக்குழு தெட்டத்தெளிவாகச் செயற்படுத்திக் காட்டியுள்ளது.

'பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்குரிய தனது தீர்வை' உலகின் ஏனைய நாடுகள் முன்மாதிரியாகக் கொள்ள முடியும் என்பதில் சிறிலங்கா பெரும் முனைப்புக்காட்டி வருகின்றது. ITN ஊடக நிறுவனத்தின் ஊடகவியலாளர்கள் போன்ற பொறுப்புமிக்க அவதானிகள் வாயிலாகப் போர்க்குற்றங்கள் தொடர்பான உண்மைகள் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படுவதன் மூலமே இத்தகைய ஆபத்து நிறைந்த போக்கினைக் கட்டுப்படுத்தி சிறிய தேசிய இனங்களின் அபிலாசைகளுக்கு நீதிகிடைப்பதையும் உலகளாவிய அமைதிக்கு எதிரான அச்சுறுத்தல்கள் நீக்கப்படுவதையும் உறுதி செய்ய முடியும். சமாதானத்தினை நிலைநாட்டும் பாதையில் ITN ஊடக நிறுவன ஊடகவியலாளர்களின் உயரிய பங்களிப்பு தகுந்த வழிமுறைகளில் அடையாளப்படுத்தப்படுவதே அவர்களின் பணிகளுக்குப் பொருத்தமான தகுந்த அங்கீகாரமாக அமையும்.

இவ்வாறு சொல்வதன் மூலம் ஊடகவியல் என்ற பெயரில், மனிதப் பேரழிவுகளினதும், கொடூரமான போர்களினதும் காட்சிகள் மக்களின் வீட்டு வரவேற்புக் கூடங்களுக்குள் எடுத்துச்செல்லப்படுவதை நாங்கள் காண விரும்பவில்லை. ஆனால் இந்தப் பூமிப்பந்திலிருந்து போர் என்ற கொடுமையைக் களைந்து, மனிதநேயமற்ற நிலையினை முற்றாக ஒழிப்பதற்கு புதிய தொழில்நுட்ப வடிவங்களை உள்ளடக்கியதும் தனிமனித கௌரவம் மற்றும் ஊடகதர்மம் ஒருங்கிணைந்த ஊடகப்பணியின் பங்களிப்பு அதீத முக்கியத்துவம் நிறைந்ததாகும்.

ITN நிறுவனக் குழுமமானது, நீண்ட காலமாக இந்தச் செயற்களத்தில் பொறுப்புணர்வு மிக்க வகையில் செய்திகளை வெளிக்கொணர்ந்திருக்கின்றது. அத்தோடு அனைத்துலக சமூகத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பும் வகையில் அமைந்த அவர்களின் உயரிய இந்தப் பங்களிப்பும், சமாதான உலகத்தை நோக்கிய அவர்களின் பணிகளும் இத்தகைய அதிஉயர் அங்கீகாரத்திற்கான தகுதியும் பெறுமதியும் வாய்ந்தவை.

இப்பரிந்துரையை முன்னெடுப்பதில் நாம் உண்மையாகவே பெருமை கொள்கிறோம்.

http://www.pongutham...44-d233389e14e3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.