Jump to content

nunavilan

கருத்துக்கள நிர்வாகம்
  • Posts

    52128
  • Joined

  • Days Won

    38

nunavilan last won the day on January 6

nunavilan had the most liked content!

About nunavilan

  • Birthday 02/16/1980

Profile Information

  • Gender
    Male
  • Location
    USA

Recent Profile Visitors

380209 profile views

nunavilan's Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • One Year In
  • One Month Later

Recent Badges

6k

Reputation

1

Community Answers

  1. கட்சிக்குள் தான் வீரம் என்றில்லாமல் கட்சிக்கு வெளியிலும் வீரத்தை காட்ட வேண்டும். புத்தர் சிலை வைப்பு குறைந்து விட்டது என நினைத்தேன். ஆங்காங்கே இப்படி குழப்பவாதிகளும் தமது செயலை தொடர்கின்றனர்.
  2. அரச செலவில் இவ்வளவு எண்ணிக்கையில் சமையல்காரர்களெனில் அவர்களும் நீக்கப்பட வேண்டும்.
  3. சபாநாயகர் பதவிக்கு மூன்று பெயர்கள் பரிந்துரை சபாநாயகர் பதவிக்கு மூவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இதற்கமைய, பிரதி சபாநாயகர் கலாநிதி றிஸ்வி சாலி மற்றும் தேசிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பட்டி மற்றும் லக்ஷ்மன் நிபுணராச்சி ஆகியோரின் பெயர்களே முன்மொழியப்பட்டுள்ளதாக, அரசாங்க வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், அரசாங்கம் இது தொடர்பான இறுதி முடிவை இன்னும் சில நாட்களில் எட்டும். முன்னதாக சபாநாயகர் பதவிக்கு நிஹால் கலப்பட்டியின் பெயர் முன்மொழியப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/செய்திகள்/சபாநாயகர்-பதவிக்கு-மூன்று-பெயர்கள்-பரிந்துரை/175-348719
  4. தமிழ் கட்சிகளோடு ஆட்சியமைப்பதே நோக்கம்! தமிழரசுக்கட்சி சார்பாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் இடம்பெற்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் இன்று (14) நடைபெற்றது. தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவுள்ளதாகவும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு தேசியத்துடன் பயணிக்கும் தமிழ் கட்சிகளோடு ஆட்சியமைப்பதே நோக்கம் எனினும் நாளை (15) நடைபெறும் மத்திய குழுவில் கலந்துரையாடப்படும் என தெரிவித்தார். -கிளிநொச்சி நிருபர் சப்தன்- https://tamil.adaderana.lk/news.php?nid=197279
  5. நல்ல முன்னுதாரணமான முடிவு. ரனிலின் கடந்த கால கணக்கு வழக்குகளையும் ஒருக்கால் சரி பார்க்க அநுர அரசு முயல வேண்டும்.
  6. PadaKu TV சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல, முனைவர் பட்டம் பெற தமது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என பல்கலைக்கழகம் அறிவித்தது. சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல முனைவர் பட்டம் பெற ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. சபாநாயகர் ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்தவரா என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு அந்தப் பல்கலைக்கழகத்திடம் தகவல்களைக் கோரியுள்ளதுடன், அவ்வாறானவொருவர் அந்தப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என பல்கலைக்கழகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது. கொழும்பு 07 இல் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பத்தாவது பாராளுமன்றத்தின் 22வது சபாநாயகர் நாட்டின் உயரிய பதவியான சபாநாயகர் பதவியை கீழறுத்துள்ளார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்தார். அவர் உடனடியாக சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து்ள்ளார். “கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது தேசிய மக்கள் விடுதலை முன்னணியும், ஜனதா விமுக்தி பெரமுனாவும் பாராளுமன்றத்தை தூய்மைப்படுத்துவதற்கு மக்களிடம் ஆணையைக் கேட்டன. பாராளுமன்றத் தேர்தலின் போது கம்பஹா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு தலைமை தாங்கிய அமைச்சர் விஜித ஹேரத் வழங்கிய கையேட்டில், கம்பஹா வேட்பாளர் அசோக சபுமல் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த பின்னர் சின்ஜுகு வசேதா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதனை பல்கலைக்கழகம் மறுத்துள்ளது. பாராளுமன்றம் இந்த நாட்டின் மிக உயர்ந்த ஸ்தாபனம். இந்த நாட்டின் நிலைப்பாடுகளின் படி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அடுத்தபடியாக சபாநாயகர் பதவி வகிக்கின்றார். பாராளுமன்றத்தில் உயர் அதிகாரிகள் குழு உள்ளது. இந்தக் குழுவில் இருந்துதான் அமைச்சுக்களின் செயலாளர்கள், தூதர்கள் நியமிக்கப்பட்டு மற்ற நாடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். சபாநாயகரே இந்த குழுவின் தலைவராகவும் உள்ளார். இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் அடுத்த வாரத்திற்குள் அறிக்கை வெளியிடுவார் என ஊடகப் பேச்சாளர் கூறியதை நாம் பார்த்தோம். ஆனால், பாராளுமன்றத் தேர்தலின்போது, எங்கள் கட்சியில் இருந்துதான் அறிஞர்கள் முன்வைக்கப்பட்டுள்ளனர் என ஊடகப் பேச்சாளர் கூறினார்,” சபாநாயகர் தெரிவின் பின்னர், பாராளுமன்ற இணையத்தளத்தில் கௌரவ கலாநிதி அசோக சபுமல் ரன்வல என அவரது பெயர் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், நேற்று (09) குறித்த மருத்துவர் பகுதி நீக்கப்பட்டு கௌரவ அசோக சபுமல் ரன்வல என குறிப்பிடப்பட்டிருந்தது. இதேவேளை, இன்று (10) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில், சபாநாயகர் இதுவரை எந்த அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அவரது முனைவர் பட்டம், மற்றும் அவருக்கு முனைவர் பட்டம் இருக்கிறதா இல்லையா என்பதை அறிவிக்க வேண்டும். இது தொடர்பில் இன்னும் சில தினங்களில் சபாநாயகர் தெளிவான அறிவிப்பை வெளியிடுவார் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் இங்கு தெரிவித்தார். “அவ்வப்போது, ஒவ்வொரு குழுவும் அந்தப் பிரச்சினையை எழுப்பி வருகின்றன. அந்த விடயங்களைச் சொல்ல அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம். சபாநாயகர் தரப்பில் பொறுப்பான அறிக்கை வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார். சபாநாயகர் தொடர்பில் முன்வைக்கப்பட்ட தகவல்கள் உண்மையாக இருந்தால் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் கேட்டதற்கு, சபாநாயகர் தனது தகுதிகளை முன்வைத்த பின்னர் பார்ப்போம் என அமைச்சர் தெரிவித்தார்.
  7. ‘அந்தஸ்து அல்லாது ஒருவருடைய செயற்பாடுகளே விழுமியத்தைத் தீர்மானிக்கிறது’ – சுரேன் சுரேந்திரன் அமரபுர மஹாநாயக்கர் நியமன வைபவத்தில் பேச்சு அமரபுர மஹா நிக்காயா பீடத்தின் அதிபதியாக வணக்கத்திற்குரிய கலாநிதி மதம்பகம அஸாஜி திஸ்ஸ தேரர் நியமனம் பெற்ற வைபவம் டிசம்பர் 07, 2024 அன்று பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. மத மற்றும் மதிப்பிற்குரிய சமூகத் தலைவர்கள் கலந்துகொண்ட இவ்வைபவத்தில் லண்டன் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் திரு சுரேன் சுரேந்திரன் அவர்கள் விசேட விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இவ்வைபவத்தில் உரையாற்றிய திரு சுரேந்திரன் “ஒரு பெளத்த அதியுயர் பீடத்தின் மஹாநாயக்கராக எமக்கு மிக நெருங்கிய தேரர் நியமிக்கப்படும் வைபவத்தில் கலந்துகொள்வதற்காக நான் லண்டனிலிருந்து வந்து கலந்துகொள்வது எனக்கு மிக மகிழ்ச்சியைத் தருகிறது” எனத் தெரிவித்தார். தொடர்ந்து இவ்வைபவத்தில் அவர் உரையாற்றும்போது: “எனது சிங்களம் திருப்தியளிக்கக்கூடியதாக இல்லாவிட்டாலும் நான் இம்மொழியில் பேச எத்தனிக்கிறேன். புத்த பகவானால் போதிக்கப்பட்ட சமத்துவத்தையும் அரவணைப்பையும் எடுத்துக்காட்டும் வகையில், வேறெந்த தமிழருக்கும் கிடைக்காத, இம்மேடையில் பேசுவதற்கான இப்பாக்கியத்தை எனக்களித்தமைக்காக நான் பெருமைப்படுகிறேன். புத்த பகவானின் போதனைகளில் ஒன்றான வாசல சூத்திரத்தில் குறிப்பிட்டபடி “ஒருவருடைய உண்மையான விழுமியம் அவரது சமூக அல்லது குல அந்தஸ்துகளை வைத்து அல்லாது அவரது செயற்பாடுகளை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது” . “தேரருடனான எனது ஈடுபாடு பெப்ரவரி 2010 இல், பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடைபெற்ற உலகத்தமிழர் பேரவை அங்குரார்ப்பண நிகழ்விலேயே ஆரம்பமானது. இலங்கையில் நடைபெற்று முடிந்த போரின் இரத்த ஆறுகள் இன்னும் வற்றிப்போகாத ஒரு காலத்தில், வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு அப்பாவி மக்கள் காணாமலாக்கப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் இந்நிகழ்வு நடந்தது என்பதை நான் இவ்விடத்தில் நினைவூட்ட விரும்புகிறேன். இப்படியான காலகட்டத்தில் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவென நாம் தேரரை அழைக்கும்போது அதை நாம் எடுத்த ஒரு துணிச்சலான நடவடிக்கையாகவே நினைத்தோம். ஆனாலும் இலங்கையிலிருந்து இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்து பிரித்தானிய பாராளுமன்றத்தில் எமது சமூகத்தின் முன்னர் எங்களோடு தோளோடு தோளாக நின்று தேரர் சமத்துவம் பற்றிப் பேசியது தான் உண்மையான துணிச்சல் என நான் கருதுகிறேன். “தர்மசக்தி என்னும் பல்மத அமைப்பின் மூலம் சகவாழ்வையும், சமத்துவத்தையும் முன்னெடுப்பதில் அவர் ஆற்றிய பணியும் ‘இமாலயப் பிரகடனத்தின்’ உருவாக்கத்தில் அவர் ஆற்றிய பங்கும் சமத்துவத்தை முன்னெடுக்க அவர் பேச்சளவில் அல்லாது செயலிலும் காட்டியமைக்கான உதாரணங்கள் என்பேன். “சமத்துவத்தில் முழுமனதாக நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு மதத் தலைவரின் வெற்றியைக் கொண்டாடும் ஒரு நிகழ்வில் பங்குபற்றவும் பேசவும் கிடைத்த வரலாற்றுச் சந்தர்ப்பத்திற்காக நானும் எனது சமூகமும் நன்றியுடையவர்களாக இருப்போம் எனக்கூறி இவ்வுரையை முடித்துக்கொள்கிறேன், நன்றி” எனத் தெரிவித்தார். https://marumoli.com/அந்தஸ்து-அல்லாது-ஒருவரு/
  8. பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தொடர்பாக வைத்தியர் சத்தியமூர்த்தி வெளியிட்ட தகவல்
  9. துருக்கி இருக்கும் வரைக்கும் மத்திய கிழக்கில் அமைதி சாத்தியமில்லை.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.