Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  1. இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி, அணித்தலைவர் ஷாய் ஹோப்பின் அபாரமான 75 (46 பந்துகள்) ஓட்டங்களுடன் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இத்தாலி அணி, தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இறுதியில் 18 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது. ஷாமர் ஜோசப் 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். முடிவு: மேற்கிந்தியத் தீவுகள் அணி 42 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இத்தாலி அணி வெல்லும் எனக் கணித்த @goshan_che க்குப் புள்ளிகள் கிடையாது. இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி, பதும் நிஸங்கவின் அதிரடியான 62 (41 பந்துகள்) ஓட்டங்களுடனும், பவன் ரத்னாயக்கவின் வேகமான 44 (25 பந்துகள்) ஓட்டங்களுடனும் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி, பிரயன் பென்னிட்டின் ஆட்டமிழக்காத புயல்வேக 63 (48 பந்துகள்) ஓட்டங்களுடனும், சிகண்டர் ராசாவின் அபாரமான 45 (26 பந்துகள்) ஓட்டங்களுடனும் 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: ஸிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. ஸிம்பாப்வே அணி வெல்லும் எனக் கணித்த @vasee க்கு மாத்திரம் இரு புள்ளிகள் கிடைக்கும்!. சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த மற்றைய 22 பேருக்கும் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி, இப்ராஹிம் ஸட்ரானின் ஆட்டமிழக்காத புயல்வேக 95 (56 பந்துகள்) ஓட்டங்களுடனும், செதிகுல்லா அடலின் வேகமான 44 (32 பந்துகள்) ஓட்டங்களோடும் 4 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கனடா அணியின் வீரர்கள் நிலைத்து ஆடமுடியவில்லை. தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 118 ஓட்டங்களை எடுத்து தோல்வியைத் தழுவியது. முடிவு: ஆப்கானிஸ்தான் அணி 82 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அனைவரும் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: @vasee நான்குபடிகள் மேலே ஏறியுள்ளார்!
  2. ஆடு அறுக்க முன்னர் டுபுக்கு வேணும் என்று ஆசைப்பட்டால் இப்படித்தான்😂🤣 👇🏿
  3. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு வியாழன், 19 பெப்ரவரி 2026 06:52 AM யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் இன்றைய தினம் வியாழக்கிழமை மரபார்ந்த பண்பாட்டுடன் ஆரம்பமாகியுள்ளது. பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளுடன், பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பேராசிரியர்கள், பீடாதிபதிகள், நிதியாளர், நூலகர், மற்றும் பதிவாளர் அணிவகுத்து வர, கொடி குடை ஆலவட்டங்கள் சகிதம் விழா அரங்குக்கு வருகை தந்த துணைவேந்தரும், வேந்தரும் பட்டங்களையும், பரிசில்கள் மற்றும் தகைமைச் சான்றிதழ்களையும் வழங்கினர். இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு நாள்கள் பன்னிரண்டு அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இந்தப் பட்டமளிப்பு வைபவத்தில் மூவாயிரத்து 252 பேர் பட்டங்களையும், தகமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 50 ஆண்டுகளை நிறைவு செய்து பயணிக்கும் வேளையில், 40ஆவது பட்டமளிப்பு விழா இடம்பெற இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். https://jaffnazone.com/news/55070
  4. விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய வைக்க ராஜபக்ச முயற்சி – பொன்சேகா குற்றச்சாட்டு February 19, 2026 9:45 am ராஜபக்சக்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய அனுமதித்ததாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார் எவ்வாறாயினும், இராணுவம் அவர்களை அழிக்க விரும்பியதாகவும், அவர்கள் சரணடைந்திருந்தால், பிரபாகரன் இப்போது வடக்கின் முதலமைச்சராக இருந்திருப்பார் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர்கள் மத்தியில் நேற்று உரையாற்றிய அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைய வாய்ப்பளிக்கும் வகையில், மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதியுடன் மே 17, 2009 அன்று காலை கலந்துரையாடியதாக பொன்சேகா கூறினார். விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைய அனுமதிப்பது குறித்து, மே 17, 2009 அன்று மாலையில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளருக்கும் சவேந்திர சில்வாவிற்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் ஒரு தொலைபேசி உரையாடலின் காணொளியையும் அவர் இதன் போது வெளியிட்டிருந்தார். தொலைபேசி உரையாடலை விளக்கிய பொன்சேகா, ராஜபக்சக்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஊடாக விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய அனுமதிக்க கலந்துரையாடினர். எனினும், விடுதலைப் புலிகளின் தலைவர்கள் இராணுவத்திடம் சரணடைய மறுத்ததாகவும், ஆனால் மூன்றாம் தரப்பினரிடம் சரணடைய விரும்பியதாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார். எனினும், ராஜபக்சக்கள் விடுதலைப் புலிகள் மூன்றாம் தரப்பினரிடம் சரணடைவதை எதிர்த்ததாகவும், அவர்கள் ராணுவத்திடம் சரணடைய வேண்டும் என்றும் விரும்பியதாகவும் பொன்சேகா குறிப்பிட்டார். இருப்பினும், விடுதலைப் புலிகள் இராணுவத்திடம் சரணடைய மறுத்ததால் அந்த திட்டம் தோல்வியடைந்தன. விடுதலைப் புலிகள் தலைவர்கள் இராணுவத்திடம் சரணடைய ஒப்புக்கொண்டிருந்தால், பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்கள் இன்னும் உயிருடன் இருந்திருப்பார்கள். பிரபாகரன் வடக்கின் முதலமைச்சராக இருந்திருப்பார். குறிப்பிட்ட நாளில் தான் சீனாவில் இருந்ததாகவும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் அசர்வதேச மன்னிப்புச் சபை உடனாக மேற்படி பேச்சுவார்த்தைகள் குறித்து தனக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும், பொக்சேகா குறிப்பிட்டார். மே 17, 2009 அன்று கலந்துரையாடல் நடந்தபோது, விடுதலைப் புலிகளின் தலைவர்கள் 400 மீட்டர் பரப்பளவில் சுற்றிவளைக்கப்பட்டனர். அடுத்த சில மணி நேரங்களுக்குள் தாம் உயிரிழந்துவிடுவோம் என்பது விடுதலைப் புலிகளுக்குத் தெரியும் என்றும் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார். இராணுவம் விடுதலைப் புலிகளின் தலைவர்களைக் காப்பாற்ற விரும்பவில்லை, மாறாக அவர்களை அழிக்கத் திட்டமிட்டிருந்தது என்று பொன்சேகா கூறினார். ராஜபக்‌சவின் கோரிக்கையை ஏற்க மறுத்ததால், மே 19, 2009 அன்று இராணுவத்தால் விடுதலைப் புலிகளை முற்றிலுமாக ஒழிக்க முடிந்தது என்று சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார். https://oruvan.com/rajapaksa-trying-to-force-ltte-leaders-to-surrender-fonseka-alleges/
  5. நைஜீரியாவில் சுரங்கத்தில் நச்சு வாயு கசிந்து 37 தொழிலாளர்கள் பலி! Published By: Digital Desk 1 19 Feb, 2026 | 12:26 PM நைஜீரியாவின் மத்திய பகுதியின், பிளாட்டோ மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு சுரங்கத்தில், கார்பன் மோனாக்சைடு நச்சு வாயுவை சுவாசித்த சுமார் 37 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கைவிடப்பட்ட நிலையில் இருந்த ஒரு ஈய சுரங்கத்திற்குள் அங்குள்ள சுரங்கத் தொழிலாளர்கள்; கனிமங்களை எடுக்கச் சென்றபோது இந்த சம்பவம் நேர்ந்துள்ளது. அங்கு தேங்கியிருந்த கனிமங்களிலிருந்து வெளியேறிய கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்ததால் அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த 37 பேர் தவிர, சுமார் 25ற்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 20 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் எனத் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, நைஜீரியாவின் சுரங்கத்துறை அமைச்சர் டெலே அலகே, இந்தச் சம்பவம் நடந்த சுரங்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அனைத்து சுரங்க நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளார். சம்பவம் நடந்த இடத்தை அந்தநாட்டு பாதுகாப்புப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். நைஜீரியாவில் முறையற்ற மற்றும் சட்டவிரோத சுரங்கத் தொழில்கள் மிகப்பெரிய சவாலாக உள்ள நிலையில், முறையான பாதுகாப்பு வசதிகள் மற்றும் அரசின் கண்காணிப்பு இல்லாததால் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நிகழ்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், கடந்த வருடம் நைஜீரியாவின் ஜம்ஃபாரா மாநிலத்தில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் 18 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/239034
  6. வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக சிவச்செல்வன் சிவரஞ்சினி நியமனம் 19 Feb, 2026 | 11:20 AM வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக (பதில்) சிவச்செல்வன் சிவரஞ்சினி வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை (19) நடைபெற்ற நிகழ்வில், ஆளுநர் இதற்கான நியமனக் கடிதத்தை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார். இந்நியமனமானது இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. வவுனியா மாநகர சபையின் ஆணையாளராகப் பொறுப்பேற்கவுள்ள சிவச்செல்வன் சிவரஞ்சினி, இதற்கு முன்னர் வவுனியா மாவட்ட தொழில் திணைக்களத்தின் உதவி ஆணையாளராகக் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நியமனம் வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மற்றும் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/239032
  7. கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா பெப். 27, 28இல்! - பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல் 19 Feb, 2026 | 12:12 PM கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா இம்மாதம் 27, 28ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், திருவிழாவில் கலந்துகொள்வதற்காக தேவாலயத்துக்கு வருகைதரவிருக்கும் பொதுமக்களுக்காக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள போக்குவரத்து வசதி, உணவு விநியோகம் முதலான ஏற்பாடுகள் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவானது யாழ். மாவட்டச் செயலாளரது ஒருங்கிணைப்பின் கீழ் யாழ். ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, இந்திய துணைத் தூதரகம் யாழ்ப்பாணம், பிரதேச செயலகம் - நெடுந்தீவு, பிரதேச சபை - நெடுந்தீவு மற்றும் சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினதும் முழுமையான ஒத்துழைப்புடன் நடைபெறவுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையின் ஊடாக பொதுமக்களுக்கு அறியத் தருவதாவது : 2026.02.27ஆம் திகதி காலை 4 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணி வரை அரச பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து குறிகட்டுவான் இறங்குதுறை வரை சேவையில் ஈடுபடும். கச்சதீவுக்கான படகுச்சேவையானது குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து 27.02.2026ஆம் திகதி காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும். குறிகட்டுவானில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான படகிற்குரிய ஒரு வழிப் பயணக் கட்டணம் ரூ.1200 ஆகும். கச்சதீவுக்கு குழுவாக / தனியாக படகில் வருகை தரும் பக்தர்கள் அவர்களது முழுப் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம், வயது, பால்நிலை மற்றும் அவர்கள் பயணிக்கும் படகு இலக்கம், படகின் வகை, படகோட்டியின் பெயர், தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களை இரு பிரதிகளில் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். வெளி மாவட்டங்களிலிருந்து தமது சொந்தப்படகுகளில் திருவிழாவிற்கு செல்வோர் தமது வசிப்பிடங்களிற்கு அருகிலுள்ள கடற்படை முகாம்களில் தொடர்புகொண்டு உரிய கடற்பயணப் பாதுகாப்பு அனுமதியினை பெற்றுக்கொள்வதுடன் 2026.02.27ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு முன்னதாக கச்சதீவை வந்தடைவதற்கேற்றவாறு தங்களது பயணங்களை ஆரம்பிக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். கச்சதீவு உற்சவத்தில் கலந்துகொள்ளும் யாத்திரிகர்களுக்கு 28.02.2026ஆம் திகதி காலை உணவு மட்டும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாத்திரிகர்கள் தங்களது தேவைக்கான உணவினை கொண்டுவரமுடியும் என்பதுடன் அப்பிரதேசத்தில் உணவினை சமைப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயமானது யாத்திரிகர்களின் புனித தலமாக உள்ளதால் மதுபானம் கொண்டு செல்லுதல், பாவித்தல் மற்றும் புகைப்பிடித்தல் என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என்று பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/239035
  8. எந்தவொரு பயங்கரவாதத் தடைச்சட்டமும் எங்களுக்குத் தேவையில்லை - யாழ். பல்கலைச் சமூகம் போராட்டம் 19 Feb, 2026 | 12:34 PM (எம்.நியூட்டன்) எந்தவொரு பயங்கரவாதத் தடைச்சட்டமும் எங்களுக்குத் தேவையில்லை, அதை அரசு உடனடியாக இரத்துச்செய்ய வேண்டும் என வலுயுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்தின் கையெழுத்துப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை (19) ஆரம்மிக்கப்பட்ட குறித்த போராட்டம் தொடர்ந்து நான்கு நாள்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைபினை மீளப் பெறு என்றும் வலுவிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு என்றும் வலியுறுத்தி பல்கலைக்கழக ஊழியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் ஆகியன இணைந்தே குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் https://www.virakesari.lk/article/239038
  9. லண்டனில் சிறுமிகளைக் குறிவைக்கும் கொடூர கும்பல்கள் : அரங்கேறும் மனிதநேயமற்ற சம்பவங்கள் 19 February 2026 லண்டனில் 13 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகளையும், பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இளம்பெண்களையும் குறிவைத்து, அவர்களைப் பாலியல் ரீதியாகவும் குற்றச் செயல்களுக்காகவும் ஒரு கும்பல் சுரண்டி வருவதை பிபிசி (BBC) புலனாய்வு வெளிப்படுத்தியுள்ளது. தனிமையில் இருக்கும் அல்லது வறுமையில் வாடும் சிறுமிகளை இனங்கண்டு, அவர்கள் மீது அன்பு காட்டுவது போலவும், விலையுயர்ந்த பொருட்களை வாங்கிக்கொடுத்தும் இந்தக் கும்பல்கள் வலைவிரிக்கும். பின்னர் அவர்களைத் தங்கள் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சித்திரவதை செய்கின்றன. போதைப்பொருள் கடத்தல், ஆயுத வியாபாரம் மற்றும் அலைபேசித் திருட்டு போன்றவற்றில் இச்சிறுமிகள் ஈடுபடுத்தப்படுகின்றனர். கும்பல்களின் அதிகாரப் படி நிலையில் இவர்கள் மிகக் கீழ் மட்டத்தில் (Lowest Rung) வைக்கப்படுகின்றனர். கும்பல்கள் வாங்கிய போதைப்பொருள் கடனுக்காக அல்லது கும்பல் தலைவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக இச்சிறுமிகள் பல ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். லண்டனில் வெள்ளை இனத்தவர் உட்பட பல்வேறு இனப் பின்னணியைக் கொண்ட குழுக்கள் இத்தகைய கொடூரங்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சில பெண்கள் தங்களைச் சுரண்டியமை வெள்ளை இன ஆண்கள் எனக் குறிப்பிட்டுள்ள நிலையில், மற்ற சில தப்பிப்பிழைத்தவர்கள் தாங்கள் தெற்காசிய ஆண்களால் பாலியல் தொழிலுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். லண்டன் காவல்துறையின் (Met Police) தகவலின்படி, தற்போது குறைந்தது 60 சிறுமிகள் இத்தகைய கும்பல்களால் சுரண்டப்படுவது அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சுமார் 2,000 சிறுவர் சுரண்டல் தொடர்பான வழக்குகள் பதிவாகின்றன. இந்த விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள லண்டன் நகர முதல்வர் சாதிக் கான், இத்தகைய அருவருக்கத்தக்க கும்பல்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நீதி பெற்றுத் தரப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். https://hirunews.lk/tm/447444/violent-gangs-targeting-girls-in-london-inhumane-incidents-unfolding
  10. இலங்கையில் அங்கீகரிக்கப்படாத 1,000 தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்க விசேட திட்டம் 19 February 2026 இலங்கையில் இதுவரை அங்கீகரிக்கப்படாத தொல்பொருள் பெறுமதிமிக்க சுமார் 1,000 இடங்களைப் பாதுகாப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க Xinhua ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக, நாடு முழுவதும் சிதறிக்கிடக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக வரைபடமாக்குவதற்கான விரிவான ஆய்வுகள் முன்னெடுக்கப்படும். இந்தத் திட்டம் வெறும் அரசாங்கக் கண்காணிப்புடன் மட்டும் நின்றுவிடாமல், அந்தந்தப் பகுதிகளில் வாழும் உள்ளூர் சமூகங்களின் நேரடிப் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். அடையாளம் காணப்படும் வரலாற்றுச் சின்னங்களைப் பராமரிக்கவும், அவற்றைச் சிதைவுகளிலிருந்து பாதுகாக்கவும் உள்ளூர் மட்டத்தில் 'சமூகப் பாதுகாப்புக் குழுக்கள்' அமைக்கப்படவுள்ளன. நாட்டின் கலாசார மரபுகளை, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் நோக்கில், இனம் காணப்படாத இந்தத் தொல்பொருள் தளங்களுக்குச் சட்டப்பூர்வ பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதாகப் பிரதி அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார். https://hirunews.lk/tm/447403/special-project-to-protect-1000-unrecognized-archaeological-sites-in-sri-lanka
  11. பாராளுமன்றத்தில் அம்பலமான எம்.பி.க்களின் கொடுப்பனவுகள்! பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு தற்போது வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் இன்று (19) பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்தத் தகவல்களை வெளியிட்டார். அதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு மாதாந்தம் 54,285 ரூபா கொடுப்பனவாக வழங்கப்படுகிறது. மாதாந்த உபசரிப்புக் கொடுப்பனவாக 1,000 ரூபா செலுத்தப்படுகிறது. மாதாந்த சாரதிக் கொடுப்பனவாக 3,500 ரூபா வழங்கப்படுவதுடன், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் ஊடாக சாரதி ஒருவரைப் பெற்றுக்கொண்டால், குறித்த உறுப்பினருக்கு சாரதிக் கொடுப்பனவு வழங்கப்பட மாட்டாது எனவும் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். தொலைபேசிக் கொடுப்பனவாக 50,000 ரூபாவும், போக்குவரத்துக் கொடுப்பனவாக 15,000 ரூபாவும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படுகின்றது. அலுவலகக் கொடுப்பனவு ஒரு இலட்சம் ரூபாவாகும், அத்துடன் கூட்டங்களுக்கான கொடுப்பனவாக நாளொன்றுக்கு 2,500 ரூபா செலுத்தப்படுகின்றது. நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக நாளொன்றுக்கு 2,500 ரூபாவும், குழுக்கூட்டக் கொடுப்பனவாக நாளொன்றுக்கு 2,500 ரூபாவும் செலுத்தப்படுவதாகப் பிரதமர் குறிப்பிட்டார். பாராளுமன்ற அமர்வுகள் இல்லாத நாட்களில் நடைபெறும் குழுக்கூட்டங்களுக்காக நாளொன்றுக்கு 2,500 ரூபா வழங்கப்படும். மேலும், ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு உள்ள தூரத்தை அடிப்படையாகக் கொண்டும், தேசியப் பட்டியல் உறுப்பினர்களுக்கு 419.76 லீற்றர் டீசலை அடிப்படையாகக் கொண்டும், ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதியன்று சந்தையில் உள்ள ஒரு லீற்றர் டீசலின் அங்கீகரிக்கப்பட்ட விலைக்கு அமைய எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படுவதாகப் பிரதமர் மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmlt1xr7z000r356n5kj7ulbh
  12. நாளை வியாழன் 19 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 37) முதல் சுற்று குழு C:வியாழன் 19 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், இத்தாலி எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ITA எதிர் WI ஒரே ஒருவர் மாத்திரம் இத்தாலி அணி வெல்லும் எனவும் மற்றைய 22 பேரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். இத்தாலி கோஷான் சே இப்போட்டியில் @goshan_che க்கு புள்ளிகள் கிடைக்க வாய்ப்புள்ளதா? 38) முதல் சுற்று குழு B:வியாழன் 19 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் ஸிம்பாப்வே SL எதிர் ZIM 22 பேர் சிறிலங்கா அணி வெல்லும் எனவும் ஒரே ஒருவர் மாத்திரம் ஸிம்பாப்வே அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ஸிம்பாப்வே வசீ இப்போட்டியில் ஸிம்பாப்வேயின் தயவில் @vasee க்கு புள்ளிகள் கிடைக்குமா? 39) முதல் சுற்று குழு D:வியாழன் 19 பெப்: 1:30 PM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் கனடா AFG எதிர் CAN அனைவரும் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இப்போட்டியில் கனடா அணி ஆப்கானிஸ்தான் அணிக்கும் யாழ் களப் போட்டியாளர்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்குமா?
  13. இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஐக்கிய அமீரகம் அணி, தென்னாபிரிக்கா அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அலிஷான் ஷரஃபு நிதானமான ஆடி 45 (38 பந்துகள்) ஓட்டங்கள் எடுத்திருந்தார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, டெவால்ட் பிறெவிஸின் வேகமான 36 (25 பந்துகள்) ஓட்டங்களுடனும், றயான் றிக்கெல்டனின் அதிரடியான 30 (16 பந்துகள்) ஓட்டங்களுடனும் 13.2 ஓவர்களிலலேயே 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 123 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அனைவரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, சஹிப்ஸடா ஃபர்ஹானின் ஆட்டமிழக்காத புயல்வேக செஞ்சுரியான 100 (58 பந்துகள்) ஓட்டங்களுடனும், அணித்தலைவர் சல்மான் அக்ஹாவின் அதிரடியான 38 (23 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷடாப் கானின் ஆட்டமிழக்காத வேகமான 36 (22) ஓட்டங்களோடும் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 199 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி, தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இறுதியில் 17.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 97 ஓட்டங்களையே பெற்று தோல்வியடைந்தது. இந்த ஓட்ட எண்ணிக்கை தற்போதைய அதிகுறைந்த ஓட்ட எண்ணிக்கையாக உள்ளது. பாகிஸ்தான் வீரர் உஸ்மான் தாரிக் 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். முடிவு: பாகிஸ்தான் அணி 102 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அனைவரும் பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி, ஷிவம் டுபேயின் மின்னல்வேக 66 (31 பந்துகள்) ஓட்டங்களுடனும், அணித்தலைவர் சூரியகுமார் யாதவ்வின் நிதானமான 34 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், திலக் வர்மாவின் நிதானமான 31 (27 பந்துகள்) ஓட்ட்டங்களுடனும், ஹர்திக் பாண்டியாவின் வேகமான 30 (21 பந்துகள்) ஓட்டங்களோடும் விக்கெட்டுகளை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. அபிஷேக் சர்மா விளையாடிய மூன்று போட்டிகளிலும் முட்டை வாங்கி சாதனை படைத்துள்ளார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணியின் வீரர்கள் நிலைத்து ஆடமுடியவில்லை எனினும் பலரின் பங்களிப்புடன் வேகமாக அடித்தாடி 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 176 ஓட்டங்களை எடுத்து தோல்வியைத் தழுவியது. முடிவு: இந்திய அணி 17 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அனைவரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: நிலைகளில் மாற்றங்கள் எதுவுமில்லை!
  14. ட்ரம்பின் அமைதி திட்ட அமைப்பில் இணைந்து கொள்ள போவதில்லை - வத்திக்கான் அறிவிப்பு Published By: Digital Desk 3 18 Feb, 2026 | 11:57 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுத்துள்ள 'அமைதி திட்டம்' என்ற அமைப்பில் இணைந்துக்கொள்ள போவதில்லை என வத்திக்கான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. சர்வதேச நெருக்கடிகளை ஐக்கிய நாடுகள் சபையே கையாள வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த தீர்மானத்தை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. காசா போர் நிறுத்தத்தைக் கண்காணிக்கவும், அதன் மறுசீரமைப்புப் பணிகளை மேற்பார்வையிடவும் ஜனாதிபதி ட்ரம்ப் இந்த 'அமைதி திட்ட அமைப்பை' உருவாக்கியுள்ளார். இந்த அமைப்பில் இணைந்துகொள்ளுமாறு அமெரிக்காவைச் சேர்ந்த முதலாவது பாப்பரசரான 14 ஆம் லியோவுக்கு கடந்த ஜனவரி மாதம் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அமைப்பின் முதலாவது கூட்டம் வரும் வியாழக்கிழமை வொஷிங்டனில் நடைபெறவுள்ளது. இதில் காசா மறுசீரமைப்பிற்காக 05 பில்லியன் டொலர் நிதி திரட்டுவது தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளது. வத்திக்கான் வெளிவிவகார செயலாளர் கர்தினால் பியட்ரோ பரோலின் இது குறித்துத் தெரிவிக்கையில், "வத்திக்கான் என்பது பிற நாடுகளைப் போன்ற ஒரு சாதாரண அரசு அல்ல, அதன் தன்மை வேறுபட்டது. சர்வதேச அளவில் நெருக்கடி நிலைகளை ஐக்கிய நாடுகள் சபையே முன்னின்று கையாள வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எனவே, இந்த அமைப்பில் நாங்கள் பங்கேற்க மாட்டோம்." ட்ரம்ப்பின் இந்த அமைப்பானது ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் அமைந்துள்ளதாகப் பல நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. இத்தாலி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இணையாமல், வெறும் 'பார்வையாளர்களாக' மட்டுமே கலந்துகொள்ள தீர்மானித்துள்ளன. காசா விவகாரம் குறித்துப் பேசும் இந்த அமைப்பில் பாலஸ்தீனப் பிரதிநிதிகள் எவரும் சேர்க்கப்படவில்லை என்பது மனித உரிமை செயற்பாட்டாளர்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. காசாவில் கடந்த அக்டோபர் முதல் நிலவி வரும் போர் நிறுத்தம் மிகவும் பலவீனமாக உள்ளது. இதுவரை நடந்த தாக்குதல்களில் 72,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அங்கு நிலவும் கடும் பஞ்சம் மற்றும் மனிதாபிமான நெருக்கடி தொடர்பில் பாப்பரசர் லியோ தொடர்ந்து தனது கவலையை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/238937

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.