-
ஆடல் - கிரிசாந்
ஆடல் - கிரிசாந் “காமம் என்ற எளிய திரையைத் தாண்டி ஒரு ஆணால் பெண்ணை பார்க்க முடிவதில்லை. இல்லையா?” என்றாள். இரண்டு பிளேட்கள் போன்ற அவளது சிறிய உதடுகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நிமிர்ந்துஅவளின் விழிகளின் கருமணிகளைப் பார்த்தேன். மண்ணிறமான தொட்டாச் சிணுங்கியின் மலர்களைப்போல விரிந்திருந்திருந்தன. சில கணங்கள் அவளது கண்களையே பார்த்து விட்டு விலத்தி தூரத்தில்தெரிந்த ஆமை போன்ற சிறிய தீவைப் பார்த்துக் கொண்டே பதில் சொன்னேன். “முடியும் என்று தான் தோன்றுகிறது. குருதி உறவுகள், அணுக்கமானவர்கள் என நெருங்க நெருங்ககாமத்தின் எளிய திரைகள் உதிர்கின்றன” என்றேன். “அதற்கு வெளியே அத்தனை பெண்களும் ஒன்று தான் இல்லையா?” “ரசனை, மானுட நிலமைகள், உடல் நோய்கள், உளச் சிக்கல்கள், தன்னறங்கள் என பல அடுக்குகள்இருக்கின்றன இல்லையா?” “அவை அளவைக் குறைத்தாலும் ஒருவனுக்கு ஒருத்தி போதாது இல்லையா?” “ம்ம்.. போதும். ஆனால் அது ஒரு சாத்தியம் மட்டும் தான். பெரும்பாலானவர்களுக்கு அது சாத்தியமில்லை. மனிதன் கற்பனையால் வாழும் விலங்கு. கற்பனை போல நுணுக்கமான ஒன்று இருப்பதிலேயே ஆழமானசிக்கல். கற்பனையே நம் வேட்கையின் தீவிரத்தை தீர்மானிக்கிறது. பெரும்பாலான ஆண்களின் கற்பனைக்காமங்கள் பகற்கனவுகள். அதற்கு மிஞ்சி அவர்களால் நிகர்வாழ்வில் ஒன்றையும் புரிய முடியாது. காமம்மிகவும் ஒடுக்கப்பட்ட சமூகம் என நம்மைச் சொல்லும் பொழுதே துலக்கமாகத் தெரிவது என்ன? ஒடுக்கப்படும் ஒவ்வொன்றும் கனவாய் மாறும் தன்மை கொண்டது. கனவுகள்! நாம் எல்லோரும் கனவுகளின்தீராத அலைக்கழிப்புகள்“ “காமமும் காதலும் ஒன்றின் இரண்டு தோற்றங்கள் தானே?” “இல்லை. காதலும் காமமும் இரண்டு வேறு வேறு திசைகளில் இருப்பவை. சூரியன் உதிப்பதும்அஸ்த்தமனமாவதும் போல“ இருவரும் ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருந்தோம். அவள் ஒரு சிங்கள – ஜெர்மானிய கலவை. அவளது அப்பா சிங்களவர், அம்மா ஜெர்மானிய தூதரகத்தில் பணியாற்றியிருந்தார். அப்பா இறந்ததும்ஜெர்மனிக்கே திரும்பிச் சென்று விட்டார். இவள் இங்கே ஒரு துணிக்கடையும் நாயும் வைத்திருக்கிறாள். அவளது கணவன் என் தோள்களில் கைவைத்தபடி மதுவில் நெளிந்து கொண்டிருந்தான். அவன் ஒருசிங்களவன். அவளுடன் உரையாடத் தொடங்கும் போதே என்னை எச்சரிக்கை செய்திருந்தான். “அவள்பேசும் பேச்சுகளை ஊக்கப்படுத்தாதே நண்பா, பிறகு வருந்துவாய்“. இந்த வினோத எச்சரிக்கை யாரைத்தான் விலகி ஓட வைக்கும். “உன் கண்களிலும் காமம் கொப்பளிக்கிறதே, உன்னை எப்படி நம்புவது?” என்றாள். பச்சை வண்ணஆடையில் மயில் போலிருந்தாள். நான் சிகரெட்டை எடுத்து மூட்டினேன். “நீ சிகரெட்டை எப்போதும் இவ்வளவு வசீகரமானதாகத் தான் பற்ற வைப்பாயா?” “இல்லை. அழகான பெண்கள் முன்னால் இருக்கும் போது மட்டும்” என்றேன். வலக்காலால் நான் அமர்ந்திருந்த வெண்ணிற பெயிண்ட் அடித்த இரும்புக் கதிரையை எட்டி உதைத்தாள். நான் பாதாளத்திற்குள் விழுந்து மீண்டு வந்து திடுக்கிட்டு நேராகினேன். சிரித்தாள். குழந்தையினுடையவைபோல வெண்ணிறப் பற்கள். நாங்கள் அமர்ந்திருந்த விருந்து முற்றத்தில் பழைய தேவாலயமொன்றில்பிடுங்கப்பட்டவை போன்ற கற்சிலைகளை வைத்திருந்தார்கள். நடன அரங்கில் ஆங்கிலப் பாடல்கள்ஒலித்துக் கொண்டிருந்தன. கொக்டெயில்கள் விரும்பிய அளவு பெருக்கெடுத்தன. குஷ்ஷின் வாசனைபழங்கால அரண்மனை போலிருக்கும் அந்த கட்டடத்தினை இன்னும் வெகுகாலம் பின்னே கொண்டுசென்றிருந்தது. பெரும்பாலானவர்களின் விழிகள் சிவந்த படலம் போல மினுங்கி மேலும் ஆழத்திற்கெனஅலைந்தன. இரண்டு கற்சிறகுகளை விரித்தபடி ஏரியை நோக்கி வலக்கை விரலை நீட்டியபடியிருந்த ஆண்தேவதையொன்றின் சிலையின் விரல் நுனியில் ஒரு நட்சத்திரம் ஒளிரத் தொடங்கியது. அவளுக்கு அதைக்காட்டினேன். முழு போதையும் அகன்று துள்ளிக் குதித்து போனை எடுத்து அதைப் படம் பிடித்தாள். “ஒரு குட்டி மீனைக் காட்டி குழந்தையை ஈர்ப்பதைப் போல என்னை நீ மயக்கப் பார்க்கிறாய்” என்றாள். “தன்னைக் குழந்தையாக உணரச் செய்யும் ஆண்களைத் தானே பெண்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்” “இல்லை” என்றாள். சிறிது நேரம் யோசித்து விட்டு தலையை மெல்லச் சரித்து ஆட்டி விட்டு என் தோளில்அடித்து சிரித்தாள். மேலும் அழகு கூடி வந்தது. காது வரை குறுகத் தரித்த அவளது சிகை விம்மித்தழைந்தது. “உண்மையைச் சொல். என்னை உனக்குப் பிடிக்கவில்லையா? கோபமும் ஆக்ரோஷமுமான பெண்ணைஆண்கள் விரும்புவதில்லை” “சிலர் விரும்புவார்கள். மூளையுள்ள பெண்களை விரும்பும் ஆண்களும் இருக்கிறார்கள். அவர்கள் ரசனைஅப்படி” “தன்னறம் என்றாயே, அதுக்கும் காமத்துக்கும் என்ன இணைப்பு. விளங்கவில்லை?” “ஒருவனுக்கு ஒருத்தியென்பது ஒரு அறம். அது இலக்கியங்களால் உருவாக்கி அளிக்கப்பட்டது. மதங்களால் நெறிப்படுத்தப்பட்டது. மானுட குலம் வரலாறு நெடுக காமத்தை என்ன செய்வதென்றுவிளங்காமல் திகைத்தபடியே இருக்கிறது. ஒவ்வொரு மதத்தையும் அது ஏளனம் செய்கிறது. தன் வளைந்தவாலை நேராக்க முடியாத நாயைப் போல அது காமத்துடன் அலைகிறது. விரும்பினாலும் இல்லையென்றாலும் மண்ணுக்கு அடியில் வேரைப் போல காமம் அனைத்தையும் தொட்டுவிட மென்மையான நுண் விரல்களால் துழாவிக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் கோடிக்கணக்கானவர்கள். அவர்களை ஒரு போதும் ஒன்றென ஆக்கவே இயலாது. நாம் ஆணின் பெண்ணின் காமங்களிற்கு அப்பால்குயர்களையும் அல்லவா வரலாறு நெடுகிலும் பார்க்கிறோம். அது அத்தனை நுட்பமான அடுக்குகள்கொண்ட இழைப்பு. நீ ஒன்றென ஆக்கும் தோறும் அது இன்னொன்றை விரித்துக் கொள்ளும் மலர். அறத்திற்கும் தன்னறத்திற்கும் உள்ள வேறுபாடு அதனால் முக்கியமானது என நினைக்கிறேன். அறம்பொதுவாக நிறுவப்பட்டது. மலைகளைப் போல நெடுங்காலம் வளர்ந்து நிற்பது. ஆனால் அதுஅனைவருக்கும் பொதுவென ஆக முடியாது. எல்லாக் காலங்களிற்குமான பொது அறம் என ஒன்றில்லை. அதை நீயே அறிவாய். காமத்தை ஒழுங்குபடுத்துவதின் சிக்கல் நாளுக்கு நாள் பெருகுவது. கற்பனையைப்போல. ஆகவே தான் தன்னறம் என அதை வகுக்க வேண்டியிருக்கிறது. ஒருவர் பொது அறத்தை மீறமுடியும். அது ஏற்புள்ளது. தன்னறமும் மாறக் கூடியது தான். ஆனால் அது அடிப்படையானது. ஒருவரின்சொந்த அழிவும் மீட்பும் தன்னறத்தில் தான் நிலை கொண்டுள்ளது. ஆகவே தான் காமத்தில் ஒருவரின்தன்னறம் முக்கியமானது. அதை அவர் பிறரிடம் வெளிப்படுத்தத் தேவையில்லை. அது மனசாட்சி. அதன்முன் நிற்பது அந்த ஒருவர் மட்டுமே“ பனி மெல்ல மெல்ல அடர்ந்து வந்தது. நடன அரங்கில் பாயும் பலவர்ண விளக்கு வெளிச்சங்கள்இருட்டைச் சுழன்று விரட்டின. “வா, ஏரிக்கரையின் விளிம்பில் நின்று புகைக்கலாம்” என்றாள். அவனது கணவன் ‘என்னை விட்டுவிடுங்கள்‘ என மன்றாடினான். அவனுக்கு ஒரு உதட்டு முத்தம் கொடுத்து விட்டு பேப்பரையும் சிறு துண்டுகுஷ்ஷையும் அவனது ஜீன்ஸ் பொக்கற்றுக்குள் இருந்து எடுத்துக் கொண்டாள். செவ்வியல் நாடகத்திற்கானஅரங்கைப் போல ஏரிக்கரையின் தனிமை மெளன வெளியில் திரை விலகியிருந்தது. கரிய தீவின்மரங்களில் இருள் அசைந்தது. “நீ தமிழன் தானே, உங்கள் பெண்களில் இல்லாத எது என்னிடமிருக்கிறது?” என்றாள். “தெரியவில்லை. பெண்ணென்றால் பெண் தான். எங்கு பிறந்தாலும் என்ன செய்தாலும். நான் அப்படித்தான் பார்க்கிறேன். மேற்பரப்பினால் ஏரி அழகாவதில்லை. ஆழத்தினால் உண்டாகும் மாயமே அதைவசீகரிக்கிறது” “நீ கவிஞன் தான். ஒத்துக் கொள்கிறேன். அதற்காக சொற்களால் விளையாடாதே” “அப்படியென்றால் நீயே சொல், நீ அறிந்த சிங்களப் பெண்களுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்? உடைஉடுத்தும் முறையா? ஆபரணங்களா? நீளமான அருவிக் கூந்தல்களா? சொல்?” “அது எல்லாம் வித்தியாசம் தானே?” “வெறும் விவாதத்திற்காக முரண்டு பிடிக்காதே, நீ அறிவாய். இங்கிருக்கும் எல்லோருக்கும் ஒருவரைஇன்னொருவருக்குத் தெரியும். அனைவருக்கு அடியிலும் இருப்பது எதுவோ அதுவே அனைத்திற்கும்அடியிலும் இருக்கிறது. மேற்பரப்பை அறியாதவர்கள் இருக்கலாம், ஆனால் ஆழம் அனைவரும் அறிந்ததுதான்“ அவள் சற்றுச் சீற்றமானாள். பூவரசம் இலையை நொடியில் மடித்து குழல் செய்யும் சிறுமியின்கைநயத்துடன் குஷ்ஷை மடித்து பேப்பரில் உருட்டினாள், பற்ற வைத்து இழுத்துக் கொண்டு தன் சிறியகறுப்பு ஸ்வெட்டரை எடுத்து தோளில் போட்டுக் கொண்டாள். பின்னால் அலறிக் கொண்டிருந்த பாடலின்இரைச்சல் மெல்ல மெல்ல நீருக்கடியிலென அமிழ்ந்து கொண்டிருந்தது. “ஆக இங்கு நடப்பதெல்லாம் நாடகம் என்று சொல்கிறாய், எல்லாம் நடிப்பு இல்லையா?” என்றாள். புகையைக் கையில் தந்தாள், ஒரு கைமாற்றைப் போல. “இல்லை. மேற்கு இலக்கியங்களில் தான் இதுவொரு நாடகம், கீழைப் பண்பாட்டில் இதுவொரு ஆடல்” என்றேன். “ஆடலென்றால், ஆடுவதா?” “ஆங்கிலத்தில் இதை விளக்கிச் சொல்ல முடியாது. ஆனால் ஆடினால் உனக்கு விளங்க வைக்க முடியும்” என்றேன். “இத்தனை நேர்மையான தந்திரத்துடன் எவனும் என்னை ஆட அழைத்ததில்லை. நீயொரு கள்வன்” என்றாள். புன்னகையுடன் “நீ தமிழ் ஆணிடம், குறிப்பாக கவிஞனை இதற்கு முன் சந்தித்தது இல்லை அல்லவா? அவர்கள் அப்படித் தான். குலத் தொழிலே பாடி மகிழ்வித்தல், பெண் நாடல்” என்றேன். அடிவயிற்றைப் பிடித்தபடி சிரித்தாள். “அயோக்கியர்கள்!” என்றாள். “எல்லா மொழிகளிலும் ஒரு கவிஞனின் முதன்மைத் தொழில் அது தான். சொற்களைச் சாணை பிடிக்கும்கல்லைப் போன்றது காமம். கவிதை என்பது மயங்கச் செய்து நம்ப வைப்பது. அது உண்மை இல்லை எனசொல்பவரும் கேட்பவரும் அறிவார்கள். ஆனால் அது அப்போதைக்கான பெரிய உண்மை என இருவரும்நம்புவார்கள். கவிதை என்பதை இருவர் நம்பும் ஒரு பொய் எனச் சொல்லலாம்” என்றேன். என் கண்களை நேராகப் பார்த்து “உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது” என்றாள். “சந்தேகமேயில்லாமல், நானும் நீயும் நேற்று மாலை சந்தித்துக் கொண்ட போதே உனக்கு இது தெரியும்தானே. எனக்கும் அது தெரியும். அது தான் நான் சொன்ன ஆழம்” என்றேன். நிச்சலனமாக ஏரியைப் பார்த்தாள், தலையைச் சரித்துத் தூக்கி ஆகாயத்தைப் பார்த்தாள். “நீ உண்மையாக யாரையாவது காதலித்திருக்கிறாயா? அப்படி ஒரு உணர்வு உனக்கு வந்திருக்கிறதா?” என்றாள். அவளது கண்களில் இரண்டு விண்மீன்கள் நீந்தி என்னை நெருங்கின. அத்தனை தீவிரமான பார்வை. தொடமுடியாமல் கண்களைத் தாழ்த்திக் கொண்டே சொன்னேன். “யெஸ். நான் ஒரு முறை வாழ்வில் காதலை உணர்ந்திருக்கிறேன். ஒரே ஒரு முறை“ அவள் கைகளைத் தட்டி ஆகாயத்திற்கும் ஏரிக்குமிடையில் தேவதை போலக் காற்றில் துள்ளிக் குதித்தாள். “யெஸ். நான் நினைத்தேன், நான் நினைத்தேன். உன் கண்களில் காதலை அறிந்தவனின் நிதானம்இருக்கிறது. என்னிடம் நீ வெறுமனே விளையாடுகிறாய். உன் திறமைகளைப் பரிசோதித்துப் பார்க்கிறாய். பொம்மைக் கடையில் சிறுவனைப் போன்ற உன் கண்களில் அனைத்தும் உள்ளது” என்றாள். “யெஸ்.. இது ஒரு ஆடல்” “Ahhh.. சொல், ஆடலென்று என்னைக் கொல்லாதே, எங்கிருக்கிறது அதன் முடிச்சு?” “நம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது“ “வாலைப் பிடித்துக்கு கொண்டு தலையை விட்டு விடுகிறாய். சரி, உனக்கு காதல் வந்ததை எப்படி நீநம்பினாய்?” “அவளை நான் பார்த்து பல காலங்களுக்குப் பின்னர், என்றுமே நான் அவளைக் காதலிக்கும் எண்ணம்இருக்கவில்லை. குறிப்பாகச் சொன்னால் காதலையே நான் மறுப்பவனாக அப்போது இருந்தேன். அவளுக்கும் எனக்கும் இடையில் இருந்த ஆடலே அது தான். அவள் காதலை மட்டுமே உண்மையானஒன்றென நம்புபவள், நான் அதன் மறு அந்தத்தில் நின்றேன். இருவரது எந்த விவாதமும் உச்சகோபத்திலோ உச்ச சிரிப்பிலோ தான் முடியும். கோபம் தான் அதிகம். இரண்டு நம்பிக்கைகள் மோதிக் கொள்வது கோபத்தின் ஆற்றலிலே மட்டும் தான் சாத்தியம். அவள் எங்கள்இலக்கியங்களின் ஆதார கதாபாத்திரங்களின் கனவின் திரண்ட உரு. நான் ஓஷோவின் மாணவன். அவரதுகாதல், காமம் பற்றிய பார்வைகளே எனக்கிருந்தன. இரண்டு வலிமையான தரப்புகள் மோதிக் கொள்வதேமெய்யான விவாதம். தர்க்கங்கள் ஐஸ் கட்டிகளை எறிந்து முட்டிக் கொண்டு வெடித்தன. பளிச்சென்றமுனைகள். உடைகையில் துண்டு துண்டாகத் துமித் துமியாகச் சிதைபவை. என்றுமே இருவரும் ஒருவரைஇன்னொருவர் தர்க்கத்தால் வெல்ல முடியாது திகைத்தோம். ஒரு பின்மாலைப் பொழுதில் என்னதென்று இன்று விளக்க முடியாத உவகையில் மனம் திளைத்திருந்தது. கனியப் போகும் கனிக்குள் உள்ள இனிப்பைப் போல, கனிந்து ஊறப் போகும் அதன் உள்ளுணர்வேகனியாவதைப் போல. ஒரு குளக்கரையில் நான் அமர்ந்திருந்தேன். அவள் அவளது வீட்டில். இருவரும் உரையாடிக்கொண்டிருந்தோம். தர்க்கங்கள் கரைந்த பின்னர் எஞ்சும் நீரில் இரண்டு மீன்களைப் போல என இப்போதுசொல்லத் தோன்றுகிறது. தீவிரமாகப் போரிட்ட இணையான வீரர்கள் களைத்து சாய்ந்து அமர்ந்திருக்கும்பொழுது இருவர் மட்டுமே உணரும் அந்தரங்க நெருக்கம் அது. அதைச் சொற்களால் என்னால் விவரிக்கமுடியவில்லை. ஆகவே தான் உவமைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்” எனச் சொல்லி அதற்கு மேல்சொற்கள் எழாமல் திக்கித்தவன் போல நின்றேன். திடீரென்று விழித்துக் கொண்ட தபஸ்வியைப் போன்றுகுலைந்து சுற்றையும் பார்த்தேன். மகத்தானதை மட்டுமே அப்படிப் பார்க்க முடியும் எனும் நோக்கால் அவள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள். விழுங்கி விடும் பார்வை. அரிதானதை நோக்கும் நுண்மை கூடியது. புன்னகையுடன்எனக்கு புகையை நீட்டினாள். வாங்கி இழுத்து அந்த மனநிலையிலிருந்து இறங்க விரும்பினேன். பாதத்தின் உறுதியான இருப்பைப் போல அந்த உணர்ச்சிகரம் என்னை விட்டு நீங்காமல் அப்படியேஇருந்தது. அப் பாதத்திலிருந்து ஏறும் குளிர் போல காதல் என்னுள் ஓங்கி வளர்ந்தது. சிரித்தபடி “காதலை நான் உணர்ந்தேன்” என்றேன். “எப்படி?” “அவளுடன் உரையாடி முடித்து எழுந்தேன். கால்களால் நடக்கவே முடியவில்லை. நரம்புகள் பின்னிக்கொண்ட பாம்புகளைப் போலக் குழைந்தன. என் மூச்சு எனக்கே அந்நியமானது போல இருந்தது. காதலைப் போல தாங்கிக் கொள்ள முடியாத உணர்வு உடலுக்கு மிகவும் புதிதானது. உண்மையாகவேதாங்க முடியாதது. உலகை மறந்து அதைப் பிளந்து காற்றைப் போல நடந்தேன். எல்லாம் எனக்கென வழிபிரிந்து விலகின. என் மேல் விழுந்தனவும் எனக்குப் பொருட்டே இல்லாமல் இருந்தன. கொஞ்சத்தூரத்திற்கு மேல் நடக்க முடியாமல் நகரத்தின் வீதிக்கரையில் விழுந்து படுத்து விட்டேன். புன்னகைமட்டுமே உடலாக ஆக முடியும் என்பதை அன்று அறிந்தேன். தித்திப்பது எத்தனை தாங்க முடியாதுஎன்பதை அறிந்த முதற்கணம் அது. காதல் உண்மையாகவே நிகழ்வது உள்ளத்தில் அல்ல. உடலில். உடலும் உள்ளமும் இரண்டில்லை” என்றேன். நடன அரங்கின் ஓசை நீருக்குள்ளிருந்து எழுந்து வரும் செவியைப் போல கேட்கத் தொடங்கியது. நான்முன்னர் கேட்டேயிராத பாடல்கள் தான் அங்கே ஒலித்துக் கொண்டிருப்பதால் எனக்கு ஒரு குறையும்இல்லை. “எப்படி இது சாத்தியம்! ஹோலி ஷிட்! எப்படி இது நிகழ முடியும்?” எனக் கூவினாள். “என்ன ஆயிற்று?” “வா, இங்கே வா, ஒரு சொல்லும் சொல்லாதே, உலகிலேயே எனக்கு மிக மிகப் பிடித்த பாடல் இது தான். மிகச் சரியாக இந்த நொடியில் இது எப்படி ஒலிக்கிறது” என்று சொல்லிய பின்னர் ஏரியில் ததும்பும்மென்னலை ஆட்டத்துடன் ஒத்திசைந்து தன் உடலை அசைய விட்டாள். நான் என் பாட்டுக்குக் கோணலாக அசைந்தேன். காற்று விட்ட திசைக்கு பாய்மரம் போல என் பெரியசேர்ட் ஆடியது. அது நான் ஆடுவது போலிருக்கவே நான் அதில் பொதிந்து கொண்டேன். குளிரானபனிக்காற்றும் குஷ்ஷின் கதகதப்பும் சேர அசைந்தேன். அவள் உடல் நடுங்கத் தொடங்கியது. வரிவரியாகஅவளது பிளேட் உதடுகள் அப்பாடலின் சொற்களை மிகத் துல்லியாமாக அசைத்தன. சொல் ஓசையின்றிஉதடுகளில் துடித்துக் கொண்டிருந்தது. திரும்பி நடன அரங்கைப் பார்த்தேன். நிழல்களும் உடல்களும் வேறு வேறு காலங்களில் ஆடிக்கொண்டிருந்தன. ஒரு நிழல் இன்னொரு நிழலைத் தழுவி விலகியது. இன்னொரு நிழலின் அபிநயம்இன்னொன்றிற்கு மிகச் சரியாக ஈடு கொடுத்தது. சிலர் அதன் ஓரங்களில் சாய்ந்து படுத்திருந்தனர். ஒருபக்கத்தில் குவிந்திருந்த சாறமும் சேர்ட்டும் அணிந்த சிப்பந்திகள் இந்த மேட்டுக் குடிக்கொண்டாட்டத்தை அசையாத உறைந்த முகங்களுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். “நீ ஏதோ விளங்க வைக்கப் போகிறாய் என்றாயே? அது என்ன?” “நீ ஆடுவது உனக்குப் பிடித்திருக்கிறதா?” ஓம் எனத் தலையசைத்தாள். சூரியகாந்தி சுழல்வதைப் போல தலையை ஆட்டினாள். கைவிரல்களில்நளினம் அசைந்தது. ஒரு துள்ளல் துள்ளி ஈரம் படிந்த புற்களில் கால்களை வைத்து சிறகைப் போலகைகளை விரித்தாள். “ஆட விரும்பும் எண்ணத்தை உனக்குள் தோன்றச் செய்வது எது? இந்தப் பாடலா? அதன் இசையா? வரிகளா? அதில் உள்ள காதல் பற்றிய மிகையான கற்பனைகளா? சொல்?” “நானும் உன்னைப் போலத் தான் நண்பா, என் உடலில் காதலை உணர்கிறேன். ஆனால் பெரிய தனித்தகாதல். ஒரு போதும் அது நிறையவே இல்லை” என்றாள். “பெருகிக் கொண்டிருக்கும் மலையருவியின் ஊற்றைப் போல, தொடங்கும் இடத்தில் குளிர்ந்து தளிர்போன்ற தீ நீர். பெருகுகையில் ஆங்காரமான பேரிரைச்சலுடன் கொந்தளிப்பான அக்கினிப் பெருக்கு” என்றேன். “யெஸ்.. நீ சரியாகத் தான் சொல்கிறாய். ஆனால் ஏன் என்னால் முழுமையை நோக்கி செல்லமுடியவில்லை?” “உன்னிடம் ஆன்மீகமில்லை. ஆன்மீகமில்லாத காதல் நிறைவடையாது. தகித்துக் கொண்டிருக்கும்எரிமலையின் உடல் அது” “ஆன்மீகமா, ஓ ஷிட். நீ ஓஷோவின் ஆள் இல்லையா, அந்த தாடி வைத்த செக்ஸ் சாமியாரின் சீடன்“ “ம்ம். செக்ஸும் ஆன்மீகமென்று அவர் சொல்லியிருக்காவிட்டால் அது வெறும் விலங்குணர்ச்சி எனநம்பியிருப்பேன். எந்த ஒரு மானுட உணர்ச்சியும் ஆன்மீகத்தைத் தொடாமல் நிறைவை அளிக்காது“ “இப்பொழுது நான் தியானம் செய்ய வேண்டுமா!” எனச் சொல்லி சின் முத்திரை பிடித்துக் கொண்டுநடித்துக் காட்டினாள். உதறலான ஒரு பர்ர்ர் ஒலியை குறட்டையைப் போலச் செய்து காட்டி விட்டு“கண்ணை மூடி அமர்ந்தால் நான் உறங்கி விடுவேன். தியானம் எல்லாம் ஏமாற்றிக் கொண்டே உறங்கும்வேலை” “நீ ஒரு குறையைச் சொன்னாய் நான் அது நிறையும் வழியைச் சொன்னேன். மிகுதி உன் விருப்பம். ஆனால்நான் உண்மையாகவே உணர்ந்த ஒன்றைச் சொன்னேன். புத்தகங்களில் வாசித்ததை அல்ல“ அமைதியாக ஆனாள். ராட்சத பலூன் போல ஊதிய இருக்கை ஒன்றில் அமர்ந்தாள். எண்ணையில் நீரெனஅதில் ஆடினாள். ஒரு வைன் கிண்ணத்தில் சோடாவைக் கொணர்ந்து கொடுத்தேன். ஒரு மடக்கு குடித்து விட்டு உதடுகளைஉரசி மினுக்கினாள். பளபளவென்ற இளஞ்சிவப்பு நிறமென்பது அது மட்டும் தான் எனத் தோன்றியது. ஆகாயத்தை நிமிர்ந்து பார்த்துக் கொண்டே கைகளை என் நெஞ்சை நோக்கி நீட்டி “அப்படியென்றால்எனக்குக் காதல் நிறையவே நிறையாதா?” என்றாள். “அதற்கு நீ தியானமெல்லாம் செய்யத் தேவையில்லை. தியானமென்பது என்ன? உன்னை நீயென அறிதல், நீயாகவே மட்டும் இருக்கும் நிலையை எய்தல். மனமோ உடலோ இதயமோ இல்லை, தியானம் உன்னைக்கூட்டிச் செல்வது துரியத்திற்கு என்று ஓஷோ சொல்வார். அனைத்து உயிரின் ஆழமும் தழுவியோடும்மாபெரும் நதி அது” “எனது தத்துவங்கள் வாழ்க்கையை இப்படியும் அப்படியும் கத்தரிக்கோலால் அறுப்பவை. துயரத்தைஅடிப்படையான உண்மை என நிறுவுபவை. மேற்கின் எல்லாக் குப்பையும் என் தலைக்குள் தான்இருக்கின்றன” “உண்மை தான், அவை ஆன்மீகத்தை ஒரு மீட்பெனக் கருதுபவை, ஓஷோ அந்தப் புள்ளியைத் தான் தன்கூர்மையான வாதங்களால் தகர்த்தார். கீழை உலகம் மகிழ்ச்சியை அடிப்படையான ஆன்மீகமாக என்றோகொண்டு விட்டது. காலனித்துவம் யானைக் கூட்டம் நுழைவது போல இந்தப் பண்பாட்டின் ஆழங்களைக்குலைத்து விட்டது. சேற்றுக் கலங்கலெனவே இங்கு இப்போது ஆன்மீகமும்” “ஹ்ம்ம்..” என்றாள். சொற்கள் விடாய் போலப் பெருகுபவை, சொற்களின் ஆழத்தை உணர உணர தாகம்அடங்கி விடுகிறது. “நீ ஞானியா?” “இல்லை. கவிஞன்” “ஆன்மீகமான கவிஞர்களும் இருக்கிறார்கள் தானே, கபீரைப் போல ரூமியைப் போல” “ஒரு நாள் அப்படி நான் ஆகலாம். ஆனால் காதலை என் வாழ்க்கையில் உணர்ந்து உலகியலில் நிறைந்துவிட்டேன். இதுவும் ஒரு பேறே. இங்கிருந்தும் நான் அடையக் கூடியவை நிறையவே உண்டு” சிரித்தாள். “யெஸ். நீ ஞானியில்லை. உன் கண்களில் இருப்பது காதலின் குறுகுறுப்பு. நுண்ணியதாக, ஒருகனவின் வால் நுனி போல” “நீயும் கவிஞை தான்” உரக்கச் சிரித்தாள். “உனக்கு நெஞ்சம் பதறத் தொடங்கி விட்டதா, பயப்படாதே நான் உன்னை விழுங்கி விட மாட்டேன். நீயொன்றும் அத்தனை மகத்தான காதலனில்லை” “நானும் அறிவேன். இங்கு யாரும் அத்தனை மகத்தான காதலனில்லை“ “பிறகு எதற்கு என்னை மயக்க இத்தனை பிரயத்தனப்படுகிறாய்?” “ஆடலின் நிமித்தம்” என்றேன். “என்ன?” “சரி, நேற்று மாலை உன்னை நான் பார்த்த முதற் கணம் உனக்கு நினைவிருக்கிறதா?” நான் பார்த்துக் கொண்டிருந்த நேரத்திலேயே ஏதோவொரு இமை வெட்டுக் கணத்தில் அநாயசமாகச்சுற்றிய புகையை நீட்டினாள். “இது உனக்காக” என்றாள். அவளது நாவிளிம்பின் எச்சில் பேப்பரின் முடிச்சை பிணைத்து மின்னியது. “ம்ம்.. சொல். நினைவிருக்கிறதா?” தலையை இடமும் வலமும் ஆட்டி விரல்களாலும் No என காட்டி ‘அதற்கு என்ன?’ என்பது போல புருவத்தைதூக்கி வினவினாள். “இது தான் ஆடல், நானறிவேன், வானுக்கு இடக்கை சுட்டுவிரல் உயர்த்திய பெண் தேவதையின்சிலையின் முன்னிருந்த தடாகத்தின் பிம்பத்தில் பார்த்துக் கொண்டோம். தேவதையின் பின்னேஉரோமாபுரி அரண்மனைகளின் உயர்ந்த தூண் போன்ற மரமொன்று நின்றது. அந்தச் சிலையின் பின்னால்சூரியன் காட்டுக்குள் இறங்கியபடி இருந்தது. போர்வையைப் போல மாலைப்பனி அணைத்தது. வெய்யிலின் இளஞ்சூடும் இருந்தது. நான் நீரில் விழுந்த என் பிம்பத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அசைவில்லாத நீர்மேற்பரப்பில் சில ஊதா நிற மலர்கள் விழுந்திருந்தன. சில ஊதா நிற அல்லிகள்அவிழ்ந்திருந்தன. பெரிய ஆழமில்லாத அந்தத் தடாகத்தின் மறுமுனையில் அந்த தேவதை தலைகுனிந்திருந்தாள். நீ என்னருகில் வந்து நின்றாய், நீர்ப்பரப்பை பார்த்து விட்டு தேவதையை உற்றுப்பார்த்தாய். நான் உன்னை நீரில் விழுந்த உன் பிம்பத்தில் பார்த்தேன். அத்தனை அழகான பெண்ணைகவனிக்காது விடும் அளவிற்கு எனக்கு முட்டாள்த்தனமில்லை. நானும் தேவதையை நிமிர்ந்து பார்த்தேன். நீஎன்னருகில் ஐந்து நிமிடத்திற்கு மேல் தொடுகையே இல்லாமல் பறந்து கொண்டிருக்கும் வண்ணத்துப்பூச்சியைப் போல மிதந்து கொண்டிருந்தாய். நீ எனக்கு அருளினாய், எல்லா பெண் தெய்வங்களும் எளியபக்தனுக்கு காட்டும் சிறிய அருளலை. அதுவே நம் ஆடலின் துவக்கம்” என்றேன். “நீயொரு கள்வன், மோசமானவன், அயோக்கியன். எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்கிறாய்” என்றாள். “முதல் மூன்றும் நான் தான், ஆனால் நீ என்னை விடக் கள்ளி, மோசமானவள், அயோக்கியை. உனக்குஎன்னை விட அந்தக் கணம் அதிகம் நினைவிருக்கும்“ சீண்டப்பட்ட பூனையைப் போல விலகி நகர்ந்தாள். சோடாவைக் குடித்து முடித்து “கொண்டு வா, போ” என அதட்டினாள். அவளது கணவனைப் பார்த்தேன். மேசையின் மீது கவிழ்ந்து நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தான். திருமணத் தம்பதிகள் இருவரும் நடன அரங்கில் காதல் பாடலொன்றுக்கு ஆடிக்கொண்டிருந்தனர். அவர்களை நோக்கி வைன் கிண்ணத்தை உயர்த்தி சியேர்ஸ் சொன்னேன். அவளிடம்திரும்பி நடந்த போது கற்சுவரில் அமர்ந்திருந்தாள். அவளது கால்கள் இரண்டும் மெழுகுத் துண்டுகள்போல ஒளிவீசின. கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தாள். துமித்துத் தூறும் மழையைப் போலஅழுதழுது ஏரியைப் பார்த்தாள். பல்லாயிரம் கால்களில் காற்று ஏரியின் மீது நடக்கும் தடங்கள் தோன்றிவந்து எங்களையும் உழக்கியபடி நகர்ந்து சென்றது. உடல் மயிர்கள் புல்லரித்தன. சிகரட்டைப் பற்றவைத்து அவளிடம் நீட்டினேன். உதடுகள் நடுங்க வாயில் வைத்து இழுத்து ஊதினாள். அந்தப் புகையைக்குடிக்க வேண்டும் போலிருந்தது. கேட்டிருந்தால், மறுத்திருக்க மாட்டாள். இமைகளைத் திறக்காமல், “உண்மையைச் சொல், உன்னால் உண்மையாகவே என்னைக் காதலிக்கமுடியாது இல்லையா, என்னை மட்டுமே காதலி என மூர்க்கமாகச் சொல்லும் பெண் என மாறிவிடுவேன் எனநினைக்கிறாய் இல்லையா? குடித்து விட்டு புலம்பும் ஒரு பொறுக்கிப் பெண் என நினைக்கிறாய்? யெஸ். நான் அறிவேன். நான் சுதந்திரமானவள், ஆனால் கோபக்காரி. எனக்குக் கோபம் அடிவயிற்றில் பிறந்தது. இங்கிருக்கும் அனைத்திலும் அது எதிரொலிக்கிறது“ “கோபம் பெண்ணுக்கு ஒரு வரம். அதுவே அவளை வெல்லுதற்கு அரியவள் ஆக்குகிறது. அனைத்திலும்அனல் உண்டென்கிறது ஒரு இந்து நம்பிக்கை. ஆடும் சிவனென்பது தீயின் நெளிவு, பெருக்கு. பிரபஞ்சமேஒரு ஆடல் என்கிறது இன்னொரு நம்பிக்கை” அவள் அமைதியானாள். அடிவயிற்றை மெல்லிதாக தடவிக் கொண்டாள். “தண்ணீர்?” என்றாள். எடுத்துவந்து கொடுத்தேன். கற்பரப்பில் படுத்திருந்து கைகளை தலைக்கு அடியில் கோர்த்திருந்தாள். அவளதுமுகத்துக்கு நேரில் வந்து நின்று நீரைக் கொடுத்தேன். நீரில் இத்தனை நிறைவுடன் தான் விழுந்துகிடந்தாய் எனச் சொல்ல விரும்பினேன். அவள் என்னைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள் என எண்ணம்தோன்றவும் சிரித்தேன். அவள் சந்தேகமான இனிய புன்னகையை அருளினாள். நீரைக் குடித்து விட்டுஏரியை நோக்கி ஒரு கை தலைக்குக் கொடுத்து சயன அமர்வில் திரும்பினாள். அருகில் அமர்ந்துகொண்டேன். மீண்டும் சிகரெட். மீண்டும் புகை. “எனக்குத் தெரியவில்லை. எது என்னை இந்தக் காதலை நம்பச் செய்கிறது, மடத்தனமான இந்தக் காதல்எங்கிருக்கிறதென்று தெரியவே இல்லை. புத்தகங்களில் வாசித்தேனா, வாழ்க்கையில் பார்த்தேனா, கனவாதெரியவில்லை. உனக்குத் தெரியுமா?” “தெரியும்” என்று சொல்லி நிறுத்தினேன். “ஆடலா?” எனச் சொல்லிச் சிரித்தாள். அவளது தேகம் சயன அமர்வில் வெல்வெட் பூச்சியைப் போல மிருதுகாட்டியது. “இல்லை, உண்மையாகவே தெரியும். நான் கவிஞன்” “உன்னிடம் நான் கெஞ்ச வேண்டுமா? சொல், இல்லையென்றால் நரகத்திற்குப் போ” “உலகின் அழகான ஒவ்வொன்றும் காலமின்மையில் இருக்கிறது. காலத்திற்கு உள்ளே வாழ்ந்து மடியும்ஒவ்வொரு அழகும் காலமின்மையில் சென்று சேர்கிறது. மழைத்துளி கடலிலென. காதல் மிக மிக அழகானது, ஆனால் அதுவும் காலமின்மையில் நின்று கொண்டிருப்பது. காலமின்மையின்சிக்கல் என்னவென்றால் அது காலத்திற்குள் பல்வேறு வடிவங்களில் தன்னை வெளிப்படுத்த மட்டுமேமுடியும். மேகம் மண்ணில் மிதக்க முடியாதது போல, துளித்துளியாக மண்ணைத் தொட்டு விடுவதைப்போல, தொட்டுத் தொட்டு நிறைவதைப் போல, நானும் நீயும் எல்லோரும் ஒவ்வொரு சின்னஞ்சிறு துளிகள், நாம் பூமியெங்கும் காதலைப் பெய்கிறோம். ஆகவே நாம் பூரணத்தை அடைய முடியாது. அந்தத்துளிக்கணத்தில் விரியும் வேகமும் அடையும் நிறைவும் நம்மில் எஞ்ச முடியும். பெண்ணால் அதை ஒருபோதும் ஏற்க முடியாது. அவள் ஆழத்தில் கடல் எனத் தன்னை எண்ணிக் கொள்பவள். ஆணுக்கு காதல்ஒரு நிமித்தம் தான், ஆடலே பொருட்டு. பெண்ணுக்கு காதலே பொருட்டு. இதை ஒரு வகையில் இந்தஆடலின் நியதி எனச் சொல்லலாம்” “என்ன உளறுகிறாய், எங்கிருந்து இந்தக் குப்பைச் சிந்தனைகளை அள்ளி வருகிறாய்” சிரித்தேன். “ஆடலின் மிக முக்கியமான சிக்கல் எதுவெனத் தெரியுமா?” என்றேன். “தெரியும்” என்றாள். அவளைப் பார்த்தேன். பிடரி முடிகள் உலைந்து கொண்டிருக்க தியானத்தில் இருப்பவள் போல அமர்ந்துகொண்டாள். “சொல்” நடன அரங்கு வெறிச்சென்று இருந்தது. காதில் பாடலோ சிறிய பேச்சுக் குரல்களோ கூடக்கேட்கவில்லை. அவளது மூக்கு நுனியின் வாளிப்பைப் பார்த்தேன். அகன்ற பொன்னிற நெற்றியில் சிகைதவழ ஏரியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது மூக்கைத் தொட்டால் எவ்வளவு குளிருமோ அவ்வளவுகுளிர் என் நெஞ்சில் இருந்ததை உணர்ந்து கொண்டிருந்தேன். சிகரெட்டை எடுத்து மூட்டினேன். மார்புமயிர்கள் சூடாகி வந்தன. அவளால் அந்தக் குளிரைத் தாங்க முடியாது என மூளை ஒரு கணம் அதிர்ந்தது. “போகலாம் வா, ஒரு போர்வை வேண்டும் உனக்கு” என்றேன். ஏரி நீரின் நிச்சலனத்துடன் அவளது குரல் கேட்டது, “அது ஆடலென்பதை நாம் அறியவே கூடாது. புறவயமாக நாம் அதைச் சொல்லாக மாற்றக் கூடாது. இப்போது இக்கணம் என் இதயம் உணரும் ஒன்றைப்போல” நான் கற்சுவரிலிருந்து இறங்கினேன். இடுப்பில் கையை ஊன்றி ஒரு கையால் சிகரட்டை இழுத்தபடிஅவளைப் பார்த்தேன். அவள் ஏரியை நோக்கியிருந்தாள். நான் அவளது முதுகைப் பார்த்தேன். மெல்லியகூன் விழுந்தது போல வளைந்திருந்தாள். தலை கவிழ்ந்திருந்தது. “சரி தான், என்னுடன் ஆட வருகிறாயா?” எனக் கேட்டேன். உண்மையில் வாயால் அந்தச் சொற்களை நான்உச்சரித்தேனா? அவள் மறுப்பாள் என என்னுள் உறுதியாகச் சொல்லியது எது? அவளது உடல் சுருங்கி வருவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். விதைக்குத் திரும்ப பூ விரும்புவதைப்போல. அவளில் நிறைந்து ததும்பும் தனிமையை நெருக்கமாக உணர்ந்தேன். அருகருகே உரசும் மேனிமயிர்களின் தொடுகையென. அவளது பிளேட் உதடுகள் கூர்மையாக அச்சொல்லை உச்சரித்துப் பார்த்தன. “ஆடல்“. தனக்குள் அது இல்லையெனச் சொல்வது போல தலையை ஆட்டி மறுத்தாள். விம்மினாள். கண்ணீர்பெய்யும் விழிகளை மூடிக் கொண்டு நெஞ்சைப் பிடித்தபடி குறண்டினாள். தொட்டு வருடி விட்டிருக்கவேண்டும் நான். அதைச் செய்யக் கூடாது. விரல்களின் நுனியில் எழாத தொடுகை வெறும் காமம். நான்புகையை எடுத்து மூட்டினேன். இழுத்து நுரையீரலை நிறைத்து ஊதினேன். அவளைக் கடந்து அப்பால்இருந்த தீவின் மரங்கள் காற்றை ஊதின. ஏரியின் மார்பில் பட்டு எழுந்த குளிர்காற்று எங்களைத் தழுவிச்சென்று கொண்டிருந்தது. https://mayir.in/short-stories/kirishanth300gmail-com/4494/
-
உயர்தரத்தில் '3 A' சித்திகளை பெற்ற மாணவன் உயிரிழப்பு !
உயர்தரத்தில் '3 A' சித்திகளை பெற்ற மாணவன் உயிரிழப்பு ! 04 Apr, 2026 | 01:18 PM கடந்த வருடம் நடைபெற்ற உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் 3A சித்திகளை பெற்ற மாணவன் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், இணுவில் பகுதியை சேர்ந்த , யாழ். இந்துக்கல்லூரி மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அண்மையில் வெளியான உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் 3A பெறுபேறுகளை பெற்று , யாழ்.மாவட்ட மட்டத்தில் 24ஆவது இடத்தை பெற்ற மாணவன் திடீர் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/242707
-
முடிவுக்கு வருகிறதா எரிபொருள் நெருக்கடி? இலங்கைக்கு கிடைக்கப்போகும் பாரிய சலுகை
முடிவுக்கு வருகிறதா எரிபொருள் நெருக்கடி? இலங்கைக்கு கிடைக்கப்போகும் பாரிய சலுகை 03 April 2026 இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு மத்தியில், நாட்டுக்குத் தேவையான எரிபொருளை உடனடியாக வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரஷ்ய தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. ரஷ்ய முதலீட்டாளர்கள் இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகளைக் கண்டறிவதை ஊக்குவிக்கவும், ரஷ்யாவிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முயற்சிப்பதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார். அத்துடன் இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையே நிலவும் சுமார் 70 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இதுவே பொருத்தமான தருணம் என அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார். எதிர்காலத்தில் ரஷ்யாவுடன் நீண்டகால வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், குறிப்பாக எரிசக்தித் துறையில் ரஷ்யா வழங்க முன்வந்துள்ள ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என்றும் அமைச்சர் விஜித ஹேரத் இதன்போது தெரிவித்தார். https://hirunews.lk/tm/457590/is-the-fuel-crisis-coming-to-an-end-sri-lanka-is-about-to-get-a-huge-concession
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. அண்ணாமலைக்கு வாய்ப்பு மறுப்பு 3 Apr 2026, 1:59 PM தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் 27 தொகுதிகள் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று (ஏப்ரல் 3) வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இதில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. https://minnambalam.com/bjp-candidate-list-released/
-
பெரும்பான்மை சிங்கள மக்கள் விரும்பினாலேயே இலங்கையில் சமஸ்டி முறை சாத்தியமாகும் — அ. வரதராஜா பெருமாள் —
பெரும்பான்மை சிங்கள மக்கள் விரும்பினாலேயே இலங்கையில் சமஸ்டி முறை சாத்தியமாகும் April 2, 2026 — அ. வரதராஜா பெருமாள் — இலங்கையின் அரசியல் கட்டமைப்பு சமஸ்டி முறையைக் கொண்டதாக அமைய வேண்டுமானால், அதனை பெரும்பான்மையான சிங்கள மக்கள் விரும்பி ஏற்றுக் கொள்கிறபோதே – அதற்கு பெரும்பான்மையான மக்கள் சட்டபூர்வமாக ஒப்புதல் அளிப்பதனை சாத்தியமாக்கின்ற போதே, அது இலங்கையின் அரசியலில் நடைமுறையாகும். சமஸ்டிதான் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வாக அமைய வேண்டும் என தமிழர்கள் தங்களுக்குள்ளேயே மட்டும் பேசிக் கொள்வதாலோ அல்லது தமிழ் ஊடகங்களில் மட்டும் விவாதங்களை நடத்துவதாலோ சமஸ்டி தொடர்பாக இலங்கையின் அரசியலை இஞ்சியளவு கூட நகர்த்த முடியாது. சிங்களவர்கள் ஏற்காமல் சமஸ்டி சாத்தியமில்லை சமஸ்டிக் கோரிக்கையை பிரிவினைக் கோரிக்கையாக பார்க்கிற சிங்கள இனம் சமஸ்டியை ஏற்காதே? சிங்கள பௌத்த பேரினவாதிகளின் செல்வாக்குக்கு உட்பட்டவர்களாக இருக்கின்ற சிங்கள மக்கள் தமிழர்களின் கோரிக்கையை எப்படி ஏற்பார்கள்? பெரும்பான்மையான சிங்களவர்கள் அதனை ஏற்கும் வரை தமிழர்கள் காத்திருக்க வேண்டுமா? சமஸ்டி அமைப்பு முறையை சிங்களவர்கள் ஏற்பதென்பது இன்னும் பல தலைமுறைகளுக்குக் கூட நடக்கக் கூடிய காரியமில்லையே? இப்படி பல கேள்விகளை தொடராக கேட்டு அடுக்கிக் கொண்டே போகலாம். இப்படியாக கேள்விகளை எத்தனை விதமாகத்தான் கேட்டுப் பார்ததாலும், யதார்த்தத்தில் சிங்கள மக்களிற் பெரும்பான்மையானவர்கள் விரும்பி அதனை ஏற்றுக் கொள்ளாதவரை சமஸ்டி முறையை இலங்கையில் சட்டபூர்வமாக ஏற்படுத்த முடியாது. சிங்கள மக்கள் மத்தியில் உள்ள அரசியல் சமூக சக்திகளை மிரட்டி, சிங்கள மக்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாது இலங்கையில் சமஸ்டி ஆட்சிமுறையை எந்தவொரு வெளிநாட்டு சக்தியாலும் திணித்து விட முடியாது. 1983ம் ஆண்டுக்கும் 1989ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்திய அரசு மேற்கொண்ட செயற்பாடுகளை மனதில் வைத்துக் கொண்டு இனியும் இந்தியாவோ அல்லது வேறு எந்தவொரு வெளிநாட்டு சக்தியுமோ செயற்படும் என எதிர்பாரத்து தமிழர் எவரும் தமது அரசியலை மேற்கொண்டால் அது படு முட்டாள்த்தனமாகும். இலங்கையில் சமஸ்டி ஆட்சி முறையை ஏற்படுத்த வேண்டுமானால், இலங்கையின் பாராளுமன்றம் ஓர் அரசியல் யாப்பு திருத்தத்தின் மூலமாகவோ அல்லது ஒரு புதியதொரு அரசியல் யாப்பு பிரேரணையில் அதனை உள்ளடக்கிய விதமாகமோ கொண்டு வருவதன் மூலமாகவேதான் ஆக்க முடியம் – பாராளுமன்றத்தில் அந்த பிரேரணையை (நகல் வரைவை அல்லது மசோதாவை) பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஏற்க வேண்டும், மேலும், அதனை நாட்டு மக்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதனால், நாடு முழுவதற்குமாக நடத்தப்படும் சர்வசன வாக்கெடுப்பில் வாக்களிபபவர்களில் பெரும்பான்மையானோர் அதற்கு சாதகமாக வாக்களிக்க வேண்டும். இதுவே இலங்கையின் சட்டம். இதனை இலங்கையின் அனைத்து சட்டத்தரணிகளும் மற்றும் அரசியல் யாப்பு அறிவுடைய அனைவரும் அறிந்திருக்கக் கூடிய – மனதில் கொள்ள வேண்டிய முதலாம் பாடம். 2000மாம் ஆண்டே சந்திரிகாவின் பிரேரணை எரிந்து சாம்பலாகி காற்றில் கலந்து விட்டது இன்று ஆட்சியில் இருக்கும் மக்கள் விடுதலை முன்னணியினர் உட்பட தென்னிலங்கையின் கட்சியினர் எவரும் சமஸ்டிக்கான அரசியல் யாப்பு திருத்தக் கோரிக்கையை பாராளுமன்றத்தில் முன் வைக்க மாட்டார்கள் என்பது தெரிந்த விடயமே. சமஸ்டியே இல்லாமல் வெறுமனே ‘பிராந்தியங்களின் ஒன்றியம் என பெயரை மட்டுமே வைத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்த புதிய அரசியல் யாப்பு பிரேரணை பாராளுமன்றத்துக்கு உள்ளும் புறமும் எரிக்கப்பட்டதை இங்கு நினைவுபடுத்துவது அவசியமாகும். அதே சந்திரிகா பண்டாரநாயக்கா கூட அதே வகைப்பட்ட ஒரு பிரேரணைக்கு இன்றைய சூழ்நிலையில் சிங்கள மக்கள் மத்தியில் ஆதரவு கேட்கத் தயாராக இல்லை என்பதை அவரே அண்மையில் கூறியிருக்கிறார். ரணில் விக்கிரமசிங்கா எந்தவொரு அரசியற் தீர்வும் ஒற்றையாட்சிக்கு உள்ளேதான் என்று கூறி விட்டார். யுத்தம் நடந்து கொண்டிருந்த போது 13 பிளஸ் என்று கூறிய ராஜபக்சாக்கள் பின்னர் 13ஐயும் இல்லாமற் செய்யவே முயற்சித்தார்கள். மக்கள் விடுதலை முன்னணியினரின் வரலாறு சொல்லவே வேண்டியதில்லை. இவ்வாறான நிலைமைதான் சிங்கள அரசியல் சமூக சக்திகள் மத்தியில் இருக்கிறதென்றால், இப்படிப்பட்ட சிங்களவர்களோடு எப்படி தமிழர்கள் ஒற்றையாட்சி அமைப்பில் ஒன்றிணைந்து வாழ முடியும் என்று எந்தத் தமிழரும் முக்கி முறுகுவதில் எந்தவித பிரயோசனமுமில்லை. முதலில் உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். இலங்கையின் இன்றைய அரசியல் சூழ்நிலையையும், இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகள் உலக அளவில் கொண்டிருக்கும் அரசியல் பொருளாதார உறவுகளையும்; புரிந்து கொண்டே தமிழர்கள் தங்களுடைய அரசியல் கோரிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இலங்கையின் அரசியல் யாப்பைப் பொறுத்த வரையில், ஒற்றையாட்சி என்ற சொல் இடம் பெற்றிருக்கின்ற பந்தியில் ஒரு எழுத்தை மாற்றுவதாக இருந்தாலென்ன அல்லது அரசியல் யாப்பில் வேறொரு உறுப்புரையில் ஒற்றையாட்சிக்கு வேறோரு விளக்க வரைவிலக்கணத்தை கமுக்கமாக அமுக்கி புகுத்தி விடலாம் என முயன்றாலென்ன, அதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு தொகையினரின் ஆதரவையும் சர்வசன வாக்கெடுப்பில் பெரும்பான்மையான வாக்குகளையும் பெற்றேயாக வேண்டும். அதை விடுத்து ‘ஒற்றையாட்சியை ஏற்க மாட்டோம்’, ஒற்றையாட்சிக்குள் இனப் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட முடியாது’ என தமிழர்கள் மத்தியில் எத்தனை விதமாக உரத்த குரலில் பேசினாலென்ன அல்லது தமிழ் ஊடகங்களில் எத்தனை விதமாக அறிக்கைகள் விட்டாலென்ன அவை சபைக்குதவமாட்டா என்பதனை சாதாரணமாக அரசியல் அறிவுடைய எவராலும் தெரிந்து கொள்ள முடியும். இதில் உணர்ச்சி வசப்படுவதற்கு எதுவுமேயில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணி சமஸ்டியை கோரவில்லை இந்தியா சமஸ்டியை பேச தயாராக இல்லை 1983ம் ஆண்டு ஜூலையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஆட்சி தமிழர்களுக்கெதிராக நடத்திய படுகொலைகளயும் பேரழிவுகளையும் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் நிலைமைகளின் காரணமாக திருமதி இந்திரா காந்தி அவர்களின் தலைமையில் இருந்த இந்திய அரசாங்கம் இலங்கையின் இன முரண்பாடு தொடர்பில் ஓர் அரசியற் தீர்வுக்கான பேச்சுவார்த்தை முன் முயற்சியை ஆரம்பித்தது. அதன்படி இந்தியப் பிரதமர் தமது விசேட பிரதிநிதியாக திரு. ஜி பார்த்தசாரதி அவர்களை இலங்கை ஜனாதிபதியுடன் பேசுவதற்கென அனுப்பி வைத்தார். அவர் முதலாவது தடவையாக 1984 ம் ஆண்டு ஆகஸ்டில் இலங்கை வந்த போது, இலங்கையில் இந்தியாவில் அமைந்திருப்தைப் போல ஓர் அரை சமஸ்டி – அதாவது ஒற்றையாட்சியும் இல்லாமல் சமஸ்டியும் இல்லாமல் இந்தியாவில் இருப்பது போன்ற மாநில ஆட்சி அமைப்பையும் அதிகாரப் பகிர்வையும் ஏற்படுத்துவதற்கான குறிப்புகளோடுதான் வந்திறங்கினார். ஆனால் அது தொடர்பாக கொழும்பில் சந்திப்புகளை நடத்திக் கொண்டிருந்த ஒரு சில நாட்களுக்குள்ளேயே இலங்கையில் ஒற்றையாட்சி முறைக்குள்ளேதான் அரசியல் தீரவு சாத்தியம் என்பதை கண்டு கொண்டார். ஆனபடியாற்தான், 1983ம் ஆண்டு டிசம்பரில் டெல்லியில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு ஜே. ஆர். சென்ற போது ஒற்றையாட்சிக்குள் ஓர் அரசியற் தீர்வைக் காண்பது பற்றியே இந்திய அரசாங்கம் ஜே.ஆருடன் பேசியது. ஒற்றையாட்சிக்குள் மாகாண ஆட்சி பற்றி ஜே.ஆர். அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தது. சுமார் ஓராண்டு நடைபெற்ற அந்த பேச்சுவார்த்தைகளின் போது வடக்கு கிழக்கு இணைப்பை கோரிய போதிலும் ஒற்றையாட்சிக்கு உட்பட்ட வகையிலான அதிகாரப் பகிர்வுகள் பற்றியே தமிழர் விடுதலைக் கூட்டணி பேசியது. சமஸ்டி பற்றி எந்த விவாதமும் இடம் பெறவில்லை. பின்னர் 1986 ஜனவரி தொடக்கம் 1986 டிசம்பர் வரையான காலகட்டத்தில் இலங்கை அரசுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் தமிழர் விடுதலைக் கூட்டணி பங்குபற்றியிருக்கிறது. ஆனால் அது சமஸ்டிக் கோரிக்கையை எந்த சந்தர்ப்பத்திலும் முன் வைக்கவில்லை. திம்புப் பேச்சுவார்த்தையிலும் சமஷ்டி கோரப்படவில்லை 1985ல் பூட்டான் நாட்டின் தலைநகரமான திம்புவில் இலங்கை அரச பிரதிநிதிகளுடன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களும் ஆயுதம் தாங்கிப் போராடிய தமிழர் இயக்கங்களின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்திய போதும் கூட, இலங்கை அரசின் தீரவுப் பிரேரணைகளை விமர்சித்ததுவும், போர்க் குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை முன் வைத்ததுவும் நடந்தனவே தவிர தமிழர் தரப்பில் இருந்து எவரும் சமஸ்டி முறையின் அடிப்படையில் அரசியற் தீர்வு முன் வைக்கப்பட வேண்டுமென்று திட்டவட்டமாக கோரவில்லை. மேலும், இன்றைக்கு தமிழர்கள் மத்தியில் அவ்வப்போது பேசப்படுகிற திம்புப் பிரகடனம் என்று சொல்லப்படுகிற நான்கு பந்திகளில், தமிழர்கள் தேசிய இனம், தமிழர் தாயகம், தமிழர்களின் சுயநிர்ணய உரிமை என்ற சொற் தொடர்கள் உள்ளனவே தவிர திட்டவட்டமாக அந்த பிரகடனத்திற் கூட சமஸ்டி அரசாட்சி முறையில்தான் அரசியற் தீர்வு அமைய வேண்டும் என வெளிப்படையாக கூறப்படவில்லை. அந்த மூன்று சொற் தொடர்களும் சமஸ்டியையே பூடகமாக குறிக்கிறது என்று யாராவது சொல்ல முற்பட்டால் அது சரியல்ல. ஏனெனில், திம்புவில் நடந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட எந்த தமிழ் அமைப்பிடமும் சமஸ்டி அமைப்பு முறை பற்றிய எண்ணம் கிஞ்சித்தும் இருக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. 1926 – 27ல் சிங்களவர் சமஸ்டி கோரியபோது அதனை கிண்டலடித்ததே தமிழர்களின் அரசியல் இலங்கையில் சமஸ்டி ஆட்சி முறை ஏற்படுவதற்கான அரசியலை மிக வலுவாக நகர்த்துவதற்கான சந்தர்ப்பம் தமிழர்களுக்கு 1920 களில் கிடைத்தது. அப்போது அதனை தீரமானகரமாக கோரியது கண்டிய தேசியப் பேரவையே. திரு. S.W.R.D. பண்டாரநாயக்கா அதனைத் தாங்கிய படி தமிழர்களின் ஆதரவைக் கேட்டு யாழ்ப்பாண அரசியல் சமூக பிரமுகர்களை தேடித்தேடி சந்தித்தார் – சமஸ்டிக்கு ஆதரவு கேட்டார். அப்போது அதனை தமிழர்களின் அனைத்து பிரிவினரும் தத்தமக்குரிய வெவ்வேறு நியாயங்களைக் கூறி நிராகரித்தார்கள். 1930களின் இறுதிப் பகுதியில் இருந்து 1945 வரை இலங்கையில் நிலவிய அரசியற் சூழ்நிலையில் தமிழர்கள் சமஸ்டி ஆட்சி முறையைப் பெறுவதற்கு வேண்டிய அரசியலை நகர்த்துவதற்கான வாய்ப்பு நன்றாகவே நிலவியது, அப்போது தமிழர் சமூகத்தின் அனைத்து பிரமுகர் கூட்டமும் திரு ஜி.ஜி. பொன்னம்பலத்தை தலைவராக நிறுத்தி ‘பாராளுமன்றத்தில் ஐம்பதுக்கு ஐம்பது ஆசனங்கள்’ எனும் கோரிக்கையை முன் வைத்தார்களே தவிர சமஸ்டி ஆட்சி முறையை கேட்கவே இல்லை. ‘ஐரோப்பியர் இலங்கையை கைப்பற்றுவற்கு முதலில் இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்கள் தமிழ் ராஜ்ஜியமாக இருந்தது’ என்றோ, எனவே ‘அந்த தமிழ் ராஜ்ஜியத்தை தனி ராஜ்ஜியமாக ஆக்கி சுதந்திரம் தர வேண்டும்’ என்றோ அல்லது அதனடிப்படையில் சமஸ்டி ஆட்சி முறையை ஏற்படுத்தும்படியோ எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்தத் தமிழ்த் தலைவரும், இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னர் பிரிட்டிஸாரிடம் பேசியதே இல்லை. அப்போது பாட்டன்மார் கசக்கி நாசமாக்கியதை இப்போது ஆக்கித்தா என பேரன்மார் கேட்கினம் 1930களின் இறுதி ஆண்டுகள் மற்றும் 1940களின் ஆரம்ப ஆண்டுகளின் போது உள்ளுராட்சி அமைச்சராக இருந்த பண்டாரநாயக்காவும் ஏனைய சில சிங்களத் தலைவர்களும் இலங்கையில் மூன்று மாகாணங்கள் கொண்ட தமது பழைய சமஸ்டிக் கோரிக்கை பற்றி தமிழ்த் தலைவர்களுடன் பேசினார்கள். ஆனால் அப்போது யாழப்பாண தலைப்பா கட்டி மேட்டுக்குடியினரின் பென்னம் பெரிய தலைவராக இருந்த ஜி.ஜி. பொன்னம்பலத்தார், அது தனது ஐம்பதுக்கு ஐம்பது (50 க்கு 50) கோரிக்கைக்கு எதிரான சதித் திட்டம் என்றார், அத்துடன் சமஸ்டி என்பது ‘இலங்கைக்கு கூடாத ஒன்று என்பதோடு, தமிழர்களுக்கு மிக மோசமான ஒன்று’ என முழக்கங்கள் இட்டு, யாராவது சமஸ்டி பற்றி பேசினால் அது தமிழினத் துரோகம் என்று பட்டம் தெளிக்கும் கட்டத்தில் தமிழர்களை நிறுத்தினார். அவர் அப்போது மட்டுமல்ல, சந்தனப் பொட்டு பொன்னம்பலத்தார் 1970ம் ஆண்டு தேர்தலில் தோற்று மலேசியா போகும் வரை சமஸ்டி கேட்ட செல்வநாயகத்தை திட்டித் தீர்ப்பதையே தமது அரசியலாகக் கொண்டிருந்தார். தமிழரசார் வீட்டு சமஸ்டி பூனை எலி பிடிக்க எழும்பியதே இல்லை 1949ம் ஆண்டு தொடங்கிய தமிழரசுக் கட்சி தனது கட்சியின் அறிக்கையில் இலட்சியமாக சமஸ்டி ஆட்சி முறையைக் குறிப்பிட்ட போதிலும், எந்தக் கட்டத்திலும் சிங்களத் தலைவர்களிடம் சமஸ்டியை வலியுறுத்தும் அரசியற் கோரிக்கையை முன் வைத்ததில்லை. ● வடக்குக்கும் கிழக்குக்கும் தனித்தனியான பிரதேச சுயாட்சி ஏற்பாட்டுக்கே 1957ல் பிரதமர் S.W.R.D. பண்டாரநாயக்காவுடன் தமிழரசார் உடன்பாடு கண்டனர். ● 1960ம் ஆண்டு சிறி லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு கேட்ட போது தமிழரசுக் கட்சியினர் திரு. பண்டார நாயக்காவோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டுமென்றே கேட்டார்கள். ● 1965ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியோடு கூட்டுச் சேரும்படி டட்லி சேனநாயக்கா கேட்டபோது, அவரோடு வெறுமனே மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்ட சபைகளை அமைப்பதையே, தமிழரசுக் கட்சியினர் கனவான் ஒப்பந்தம் என செய்து கொண்டார்கள். சமஸ்டி என்பதனை கட்சியின் கொள்கை அறிக்கையில் இலட்சியமாக வைத்துக் கொள்ளலாம், ஆனால் அதனை சட்டபூர்வமான முறைகள் மூலம் அடைய இலங்கையில் வாய்ப்புகள் இல்லை என்பதுதான் தமிழரசுக் கட்சித் தலைவர்களின் அரசியற் புரிதலாக இருந்ததென்று உறுதியாகவே கூறலாம். கைக்கு எட்டியதை வாய்க்கு எட்ட விடாமல் தட்டி விட்ட தமிழீழ தேசியப் புலி இலங்கை அரச படைகளுக்கு எதிரான யுத்த வல்லமையை புலிகள் கொண்டிருந்த 2001 – 2003ம் ஆண்டு கால கட்டத்தில் அமெரிக்கா, யப்பான் மற்றும் பிரதானமான ஐரோப்பிய நாடுகள் கூட்டாக நோர்வேயை முன்னுக்கு விட்டு நேரடியாக இலங்கையின் அரசியலில் தலையிட்டு, இலங்கையில் சமஸ்டி ஆட்சி முறையைக் கொண்டு வர முற்பட்டன. அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கா அதற்கு விரும்பியோ விரும்பாமலோ தலையாட்டினார். அப்போது சிங்கள மக்களிற் பெரும்பான்மையினர் தங்களது அரச படையினர் யுத்தத்தில் வெல்லுவார்கள் என்று நம்பவில்லை. அதனால் நாட்டைப் பிரிக்காமல் வேறு எதைக் கொடுத்தாயினும் சமாதானத்தை அடைய விரும்பியிருந்தனர். இந்தியாவும் அந்த முயற்சிக்கு மறைமுகமாக ஒப்புதல் அளித்தது. ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா அப்போது அவரிருந்த நிலையில் அதனை மௌனமாக ஏற்றவராகவே இருந்தார். அப்போது பிரபாகரன் சமஸ்டியை ஏற்கத் தயாராக இருந்திருந்தால் கிளிநொச்சியில் இருந்தபடியே ஒருங்கிணைந்த வடக்கு கிழக்குக்கு சமஸ்டி அமைப்பைப் பெற்றிருக்கலாம். ஆனால் தமிழீழக் கனவில் மிதந்து கொண்டிருந்த பிரபாகரன் அதனை நிராகரித்ததால் அந்த வாய்ப்பு தமிழர்களால் தமிழர்களுக்கு இனிமேல் இல்லை என்றாகியது. 2009ம் ஆண்டுக்குப் பின்னர் சமஸ்டிக்கான எந்தச் சூழலும் இல்லை. ● அவ்வப்போது, இலங்கை அரசாங்கம் 13வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமென இந்தியா சொல்லும். ● ஆண்டுக்கொருமுறை, மேலைத் தேச நாடுகள் ஜெனீவாத் தீர்மானத்தில் ‘இலங்கை அரசாங்கம் 13வது திருத்தத்தின் படி மாகாண ஆட்சி முறையை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்’ என ஒரு பந்தியை சேர்த்துக் கொள்வார்கள். ● இலங்கையின் அரசியல் யாப்பின் ஒற்றையாட்சிக்கு உட்பட்ட வகையில் சட்டபூர்வமாக ஆக்கப்படக்கூடிய உச்சபட்ச அரசியற் தீர்வொன்றை அடைவதற்கு இலங்கை வாழ் தமிழ்ப் பேசும் மக்களின் அரசியற் கட்சிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் முழு மூச்சாக செயற்பட்டு, தமிழக அரசியலை சாதகமாக செயற்பட வைத்தால் இந்திய அரசை காத்திரமாக செயற்பட வைக்கலாம். அப்போதும் கூட இலங்கை அரசாங்கத்துடன் இந்திய அரசு மென்மையாகவேதான் – ராஜதந்திர வரையறைகளுக்கு உட்பட்டேதான் பேசும் என்பது தெளிவான ஒரு விடயம். ● இந்தியாவை மீறி வேறெந்தவொரு நாடும் இலங்கையில் சமஸ்டி என்ற ஒன்று பற்றி பேச மாட்டார்கள் என்பதும் மிகத் தெளிவானது. ● இலங்கையில் சமஸ்டி அமைப்பு என்றாலே சிங்கள மக்கள் அஞ்சுகிறார்கள் என்பது மிகவும் வெளிப்டையான ஒன்று. ● முஸ்லிம் மக்களது பிரதிநிதிகளோ அல்லது மலையக தமிழ் மக்களது பிரதிநிதிகளோ சமஸ்டியைப் பற்றி இப்போது பேசுவதே முட்டாள்த்தனமானது என்ற அபிப்பிராயத்தை உறுதியாகவே கொண்டிருக்கிறார்கள். ● தமிழர்களிடையே கூட, அரசியல் யாப்பில் இருக்கின்ற 13வது திருத்தப்படியான அதிகாரங்களையே முழுமையாக பெற முடியாமல் இருக்கின்ற நிலைமையில் சமஸ்டியைப் பற்றி பேசுவது மடமைத்தனமானது என்பதே அறிவார்ந்த தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் மத்தயில் நிலவுகின்ற அபிப்பிராயம். பல்லாயிரம் தியாகங்களால் கிடைத்த தோண்டியை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்து விடாதீர்கள்! இப்படியாக நிலவும் யதார்த்தங்கள் மத்தியிலும், சமஸ்டிதான் சரியானது – அதுதான் நிரந்தரமானதொரு அரசியற் தீரவைத் தரும் – அந்த சுலோகத்தை தாங்கிய அரசியலை மட்டும்தான் தங்களால் மேற்கொள்ள முடியும் என்று இன்னமும் பிடிவாதமாகக் கருதுவோர் செய்ய வேண்டியது என்னவென்றால், பெரும்பான்மையான சிங்கள மக்களை, சமஸ்டி அமைப்பு முறையை விரும்பி ஏற்றுக் கொள்ள வைப்பதற்கான – சமஸ்டி ஏற்பாட்டிற்கு சிங்களவர்களின் ஆதரவையும் புரிந்துணர்வையும் பெருக்குவதற்கான வேலைத் திட்டங்களை சிங்கள மக்கள் மத்தியில் மேற்கொள்வதுதான். அதற்கு மாறாக குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல தமிழர்கள் மத்தியிலிருந்து சமஸ்டிக்கான ஆதரவைத் திரட்ட முயற்சிப்பது – சமஸ்டிக்கான பட்டி மன்றங்களை நடத்துவது ஆக்கபூர்வமான நல்ல பயனெதனையும் தராது. மாறாக தமிழர்கள் மத்தியில் குழப்பங்களையும் பிளவுகளையுமே அதிகரிக்கும். இது இலங்கையின் அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முறையாகவும் முழுமையாகவும் அமுல்படுத்தி மாகாண ஆட்சி முறையை காத்திரமாக செயற்பட வைப்பதற்கான தமிழ்ப் பேசும் மக்களின் இயக்கத்தை – அபிலாசையை – ஒற்றுமையை பலயீனப்படுத்துவதாகவே அமையும். இதனையே சிங்கள பௌத்த பேரின மேலாதிக்கவாதிகள் விரும்புகிறார்கள். இது இலங்கைவாழ் தமிழ்ப் பேசும் மக்கள், எந்தவொரு வடிவிலும்; எந்தவொரு அளவிலும் பல தேசிய இனங்கள் வாழுகின்ற ஒரு நாட்டிற்கு அவசியமான குறைந்தபட்ச அரசியற் கட்டமைப்பொன்றினையாவது கொண்டிருப்பதற்கான அனைத்து சாத்தியங்களையும் இல்லாதொழித்து விடும். முதலில் இலங்கையின் அரசியல் யாப்பில் உள்ளபடி முறையாகவும் முழுமையாகவும் மாகாண ஆட்சி முறை மக்களாட்சி கொண்டவையாக, காத்திரமான ஆற்றல்களுடன் செயற்படட்டும். தொடரந்து காலம் கனியும் போது இலங்கையில் சமஸ்டி ஆட்சி முறை மலரட்டும். https://arangamnews.com/?p=12798
-
இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பலில் வந்திறங்கிய துவிச்சக்கர வண்டி அணி
இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பலில் வந்திறங்கிய துவிச்சக்கர வண்டி அணி வெள்ளி, 03 ஏப்ரல் 2026 05:06 AM இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை விரிவுபடுத்தும் நோக்கிலும், இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து வருகை தரும் ''Team Bison'' அணியினரின் விசேட துவிச்சக்கரவண்டிப் பயணம் (Sail & Ride - Tour of Jaffna) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. 'போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்' மற்றும் 'ஆரோக்கியத்துக்காகத் துவிச்சக்கரவண்டி' ஆகிய தொனிப்பொருள்களை முன்னிறுத்தி இந்தப் பயணம் அமையவுள்ளது. துவிச்சக்கரவண்டிப் பயன்பாட்டை அதிகரிப்பதன் ஊடாக மக்களின் தேக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் பயணத்தில், உள்ளூர் துவிச்சக்கரவண்டிப் பயண அணியினரும் இணைந்து கொள்ளவுள்ளனர். அதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டிலிருந்து துவிச்சக்கர வண்டி அணி ஒன்று நேற்றைய தினம் வியாழக்கிழமை காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. அவ்வணியினரை , நாடாளுமன்ற உறுப்பினர்களான ச ஸ்ரீபவானந்தராசா , க.இளங்குமரன் உள்ளிட்ட குழுவினர் பலத்த வரவேற்பளித்தனர் குறித்த குழுவினர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மண்டபத்திலிருந்து குறிகட்டுவான் நோக்கிய தமது துவிச்சக்கரவண்டிப் பயணத்தை ஆரம்பித்து, மதியம் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இடம்பெறவுள்ள சிறப்புப் பூசை வழிபாடுகளிலும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்திய அணியினரைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு நாளை சனிக்கிழமை இரவு 7 மணிக்கு யாழ்ப்பாணம் வலம்புரி விடுதியில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது https://jaffnazone.com/news/56017
-
ஈரான் மின்சாரக் கட்டமைப்பு, பாலங்களைத் தகர்க்கப்போவதாக ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை
ஈரான் மின்சாரக் கட்டமைப்பு, பாலங்களைத் தகர்க்கப்போவதாக ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை Published By: Digital Desk 3 03 Apr, 2026 | 12:28 PM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் ஈரான் மீதான போர் தொடர்பில் வெளியிட்டுள்ள புதிய எச்சரிக்கைச் செய்தி சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மீதான தாக்குதல்கள் இன்னும் தீவிரமடையும் என்பதை உணர்த்தும் வகையில் ட்ரம்ப், "அழிவு இன்னும் ஆரம்பிக்கவில்லை": ஈரானில் எஞ்சியுள்ள பகுதிகளை அழிக்கும் வேலையை அமெரிக்க இராணுவம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை என அவர் பதிவிட்டுள்ளார். வியாழக்கிழமை தெஹ்ரானையும் காரஜையும் இணைக்கும் முக்கிய B1 பாலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, மேலும் பல பாலங்களை அழிக்கப் போவதாக அவர் அச்சுறுத்தியுள்ளார். ஈரானின் மின்சார விநியோகக் கட்டமைப்புகளையும் இலக்கு வைக்கப் போவதாக அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார். தனது பதிவின் இறுதியில், "புதிய ஆட்சியின் தலைமை என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும், அதனை அவர்கள் மிக விரைவாக செய்ய வேண்டும்!" என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் அல்லது அமெரிக்காவின் கோரிக்கைகளை உடனடியாக ஏற்க வேண்டும் என அவர் அழுத்தம் கொடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/242634
-
குவைத் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்
குவைத் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் குவைத் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் (Kuwait Petroleum Corporation) இயக்கப்படும் அல்-அஹ்மதி (Al Ahmadi) பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது, வெள்ளிக்கிழமை அதிகாலை ட்ரோன் (Drone) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக குவைத் நாட்டின் உத்தியோகபூர்வ செய்தி முகமை அதன் 'X' (முன்னர் ட்விட்டர்) தளத்தில் தெரிவித்துள்ளது. இந்த ட்ரோன் தாக்குதலால் சுத்திகரிப்பு நிலையத்தின் "பல செயல்பாட்டுப் பிரிவுகளில்" (Operational Units) தீ விபத்து ஏற்பட்டதாக அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இந்த விபத்தில் ஊழியர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள்: சம்பவ இடத்திற்கு அவசர கால மீட்புப் படையினரும், தீயணைப்புப் பிரிவினரும் உடனடியாக விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, குவைத் மீது "பகைமை நாடுகளின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள்" நடத்தப்பட வாய்ப்புள்ளதாக 'X' தளத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/குவைத்-எண்ணெய்-சுத்திகரிப்பு-நிலையம்-மீது-ட்ரோன்-தாக்குதல்/50-375033
-
நாவற்குழியில் சிறுமியிடம் அத்துமீறிய பிக்கு விளக்கமறியலில்
சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றம் - நாவற்குழி பிக்குவின் விளக்கமறியல் நீடிப்பு adminApril 3, 2026 சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாவற்குழி விகாரையின் இளநிலை பிக்குவின் விளக்கமறியலை நீதிமன்று நீடித்துள்ளது. நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் சிறுமி விகாரை வளாகத்தில் வடிகட்டிய (பில்டர்) நீரினை பெறுவதற்காக கடந்த 28ஆம் திகதி சென்ற வேளை விகாரைக்கு புதிதாக வந்த இளநிலை பிக்கு சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்த நிலையில் , தாயாரால் சாவகச்சேரி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினா் குறித்த இளநிலை பிக்குவை கைது செய்து 29ஆம் திகதி சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீத்தவனின் முன் முற்படுத்தியவேளை பிக்குவை நேற்றைய தினம் வியாழக்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை குறித்த வழக்கு மன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வேளை, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிக்கு மன்றில் முற்படுத்தப்பட்டார். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து, பிக்குவின் விளக்கமறியலை எதிர்வரும் 09ஆம் திகதி வரையில் நீதிமன்று நீடித்துள்ளது. https://globaltamilnews.net/2026/231394/
-
காவல்துறை உத்தியோகஸ்தரை வாகனத்தால் மோதி கொலை செய்த குற்றம் - பிரதான சந்தேகநபர் 05 நாட்களின் பின் சரண்
காவல்துறை உத்தியோகஸ்தரை வாகனத்தால் மோதி கொலை செய்த குற்றம் - பிரதான சந்தேகநபர் 05 நாட்களின் பின் சரண் adminApril 3, 2026 யாழ்ப்பாணத்தில் காவல்துறை அதிகாரியை உழவு இயந்திரத்தால் மோதி கொலை செய்ததுடன் , மற்றுமொரு காவல்துறை உத்தியோகஸ்தருக்கு படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் 5நாட்களின் பின்னர் சட்டத்தரணி ஊடாக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் சரணடைந்த நிலையில் , குறித்த சந்தேக நபரை 09 ஆம் திகதி வரையில் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட மன்று , அன்றைய தினத்தில் அடையாள அணிவகுப்பினை நடத்தவும் திகதியிட்டுள்ளது. கொடிகாமம், கெற்பேலி பகுதியில் , சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக கொடிகாமம் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ,கடந்த 28ஆம் திகதி சம்பவ இடத்திற்கு இரண்டு காவல்துறை உத்தியோகஸ்தர்கள் விரைந்துள்ளனர். காவல்துறையினரை கண்டதும், உழவு இயந்திரத்தை செலுத்தி வந்தவர், தான் தப்பிப்பதற்காக அதன் வேகத்தை அதிகரித்து காவல்துறையினர் இருவர் மீதும் மோதி விட்டு தப்பி சென்றுள்ளார். உழவு இயந்திரம் மோதியதில் கொடிகாமம் காவல்நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை சார்ஜெண்ட் தர அதிகாரியான ஹெட்டியாராட்சி அல்பேட் (வயது 50) என்பவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். அவருடன் சென்ற மற்றைய காவல்துறை உத்தியோகஸ்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் சம்பவம் தொடர்பில் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், உழவு இயந்திரத்தின் உரிமையாளர் மற்றும் சாரதிக்கு உதவியாளராக சென்ற இளைஞன் ஆகியோரை கைது செய்து , நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் , அவர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் உழவு இயந்திரத்தை செலுத்திய பிரதான சந்தேக நபர் 5 நாட்கள் தலைமறைவாக இருந்த நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் சரணடைந்த நிலையில் , சந்தேகநபரை 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது https://globaltamilnews.net/2026/231397/
-
யாழில். விரிவுரையாளர் படுகொலை - விரிவுரையாளர் கைப்பட எழுதிய ஆவணங்கள் உள்ளிட்ட தடய பொருட்களை காவல்துறையினரிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை
யாழில். விரிவுரையாளர் படுகொலை - விரிவுரையாளர் கைப்பட எழுதிய ஆவணங்கள் உள்ளிட்ட தடய பொருட்களை காவல்துறையினரிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை adminApril 3, 2026 படுகொலை செய்யப்பட்ட விரிவுரையாளர் தன் கைப்பட எழுதிய சில ஆவணங்கள் உள்ளிட்ட தடய பொருட்களை நீதிமன்றம் ஊடாக காவலதுறையினரிடம் ஒப்படைக்க தயாராக உள்ளோம் என பாதிக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தனது சமர்ப்பணத்தில் தெரிவித்திருந்தார். யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவபீட விரிவுரையாளர் கொலை வழக்கு நேற்றைய தினம் யாழ் . நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, படுகொலை செய்யப்பட்ட விரிவுரையாளரின் குடும்பத்தினரின் நலன்சார்ந்து மன்றில் தோன்றி தனது சமர்ப்பனங்களை முன் வைக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் குறிப்பிடுகையில், சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் நான் முன்னிலையாகவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் தரப்பினர் சார்பில் தான் முன்னிலையானேன். அது தொடர்பில் நீதிமன்ற வழக்கேடுகளில் கூட தெளிவாக உள்ளது. ஆனால் நான் சந்தேகநபர் சார்பில் முன்னிலையானதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது தொடர்பில் ஊடகங்களுக்கு நீதிமன்று பொதுவான எச்சரிக்கையை விடுக்க வேண்டும். அத்துடன் உயிரிழந்த விரிவுரையாளரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட விரிவுரையாளர் கைப்பட எழுதிய ஆவணங்கள் , சிலவற்றையும் அவர் இறுதி வரையில் பயன்படுத்திய கையடக்க தொலைபேசி உள்ளிட்ட சில தடய பொருட்களை நீதிமன்றத்தின் ஊடாக காவலதுறையினரிடம் ஒப்படைக்க தயாராகவுள்ளோம். அத்துடன் முதலாம் சந்தேக நபருக்கு எதிராக விரிவுரையாளர் மேற்கொண்ட காவலதுறை முறைப்பாடுகள் தொடர்பிலும் , நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பிலும் ,நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் என தனது சமர்ப்பனத்தில் குறிப்பிட்டார். விரிவுரையாளரின் படுகொலை வழக்கில் அவரது மகள் இரண்டாவது சந்தேகநபராகவும் , மகளின் கணவன் முதலாவது சந்தேக நபராகவும் உள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து , படுகொலையான விரிவுரையாளர் சார்பில் முன்னிலையான எம்.ஏ சுமந்திரனை 2ஆம் சந்தேக நபரான கொலையான விரிவுரையாளரின் மகள் சார்பில் முன்னிலையானர் என சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2026/231401/
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026
-
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன - கல்வித் திணைக்களம்
யாழில் சாதனை புரிந்த கூலித் தொழிலாளியின் மகள்! யாழ். ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மாணவியான தேவதாஸ் கிலானி என்ற மாணவி உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்டத்தில் முதலிடமும், அகில இலங்கை ரீதியில் 27 ஆவது இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார். குறித்த மாணவியின் தந்தை, மாணவி 10 மாத குழந்தையாக இருக்கும்போது உயிரிழந்துள்ளார். அதன்பின்னர் குறித்த மாணவியின் தாயாரே கூலி தொழில் செய்து அந்த மாணவியை கற்பித்து வந்த நிலையில் இவ்வாறு சாதனை புரிந்துள்ளார். நிம்மதியாக இருந்து கல்வி கற்பதற்கே ஒரு சீரான வீடு இல்லாத நிலையிலும் குறித்த மாணவி சாதித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmnfvqn920000356pwrdjudu4
-
777 மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து கின்னஸில் இடம் பிடித்த ஈழத்துப் பெண்!
777 மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து கின்னஸில் இடம் பிடித்த பெண்! 777 மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து காட்சிப்படுத்தி ஈழத்து பெண் உலக சாதனை மேற்கொண்டார். குறித்த காட்சிப்படுத்தும் நிகழ்வு நேற்று (02) இரவு 7 மணியளவில் நடைபெற்றது. கனடாவில் வாழும் ஈழத்து பெண்ணான ஆயுள்வேத வைத்தியர் குமுதினி கோபாலகிருஸ்ணன் குறித்த கின்னஸ் சாதனைக்காக குறித்த நிகழ்வை நடத்தினார். இதற்கு முன்னர் அமெரிக்கர் ஒருவர் 527 மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து காட்சி படுத்தி கின்னஸில் இடம் பிடித்திருந்தார். குறித்த சாதனையை தாண்டி 777 மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து குறித்த சாதனையை இன்று பதிவு செய்தார். கனடாவில் வசித்து வரும் குமுதினி கோபாலகிருஸ்ணன் ஆயுள்வேத வைத்தியராக சேவை செய்து வருகின்றார். தனது வாழ்நாளில் கின்னஸ் சாதனை ஒன்றை நிகழ்த்த வேண்டும் என்ற கனவுடன் கடந்த 30 வருடமாக மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து வந்தார். குறித்த கின்னஸ் சாதனைக்காக விண்ணப்பித்திருந்த அவர், தனது சாதனையை ஈழத்தில் நிகழ்த்தும் நோக்குடன் நேற்று தனது சாதனை பதிவினை மேற்கொண்டார். முறிகண்டி பகுதியில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இல்லத்தில் குறித்த காட்சிப்படுத்தலும், உறுதிப்படுத்தும் நிகழ்வும் நேற்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmnh0azbl0001356p7v76gqav
-
இரானை "கற்காலத்திற்கே" தள்ளுவோம் என எச்சரித்த டிரம்ப் - போர் குறித்த நிலைப்பாடு குழப்பம் தருகிறதா?
டிரம்பின் உரையைத் தொடர்ந்து அதிகரித்த கச்சா எண்ணெய் விலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் தொடர்பாக வெளியிட்ட கருத்தைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. முக்கிய கடல் வழிப்பாதையான ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் தடைகள் விரைவில் நீங்கும் என்ற எதிர்பார்ப்பு ட்ரம்ப்பின் உரையின் மூலம் தகர்க்கப்பட்டதே இதற்கு காரணமாகும். ஜனாதிபதி உரை தொடங்குவதற்கு முன்னர் ஒரு பீப்பாய் பிரெண்ட் (Brent) கச்சாய் எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது. உரையின் போது விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்ட போதிலும், இறுதியில் அது சுமார் 4% இனால் அதிகரித்து, தற்போது ஒரு பீப்பாய் 105.38 டொலர்களாக உயர்ந்துள்ளது. உலகின் மொத்த எரிசக்தி தேவையில் சுமார் 20% இந்த குறுகிய கடல் வழிப்பாதை ஊடாகவே கொண்டு செல்லப்படுவதால், இது உலகப் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது. கடந்தபெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, இந்தக் கடல் வழிப்பாதையைப் பயன்படுத்தும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் எச்சரித்ததையடுத்து, நிலைமை இன்னும் முழுமையாக வழமைக்குத் திரும்பவில்லை. ஆட்சி மாற்றம் அல்லது ஈரானின் உட்கட்டமைப்புகளை அழிப்பது குறித்து ட்ரம்ப் விடுத்த கடுமையான எச்சரிக்கைகள், விநியோகச் சங்கிலிக்கு மேலும் அச்சுறுத்தலாக அமையும் என முதலீட்டாளர்கள் அஞ்சுவதே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். https://adaderanatamil.lk/news/cmngxywp00000356pohbpbtd6