-
Posts
15241 -
Joined
-
Last visited
-
Days Won
22
பெருமாள் last won the day on December 19 2023
பெருமாள் had the most liked content!
Contact Methods
-
MSN
perumaal1212@gmail.com
-
ICQ
0
Profile Information
-
Gender
Male
Recent Profile Visitors
25375 profile views
பெருமாள்'s Achievements
-
உலகம் முழுவதும் வட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட மெட்டா சேவைகள் முடங்கின
பெருமாள் replied to கிருபன்'s topic in தகவல் வலை உலகம்
கன பேருக்கு நேற்று இரவு கை கால்கள் நடுக்கம் வந்து இருக்கும் . -
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பெருமாள் replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
அறிவாளிகள் என்று சொல்லி திரியும் முட்டாள்களுக்கு சமர்ப்பணம் நம்ம ஆளு லண்டனில் படித்து கொண்டிருந்த சமயம் அது. அவருக்கு பீட்டர் என்று ஒரு பேராசிரியர் இருந்தார். அவருக்கு நம்ம ஆளை கண்டால் பிடிக்கவே பிடிக்காது. ஒரு சமயம் மதியம் அவர் உணவு அருந்தி கொண்டிருந்த மேசையில் நம்ம ஆள் அமர்ந்தார். நம்ம ஆளை வெருப்பேற்ற " பறவையும் ! பன்றியும் ஒன்றாக உட்கார்ந்து உணவு அருந்த முடியாது ! " என்று எல்லோரும் கேட்கும் மாறு சத்தமாக சொல்ல! அதற்கு அவர் ! நம்ம ஆளை பார்த்து! " சரி அப்படி என்றால் நான் பறந்து போகிறேன்! " என்று சொல்லி விட்டு வேறு மேசைக்கு சென்று விட்டார். பேராசிரியருக்கு அவமானம் ஆகி விட்டது. எப்படியாவது நம்ம ஆளை பழி வாங்க நினைத்த அவர் அப்பொழுது வந்த தேர்வில் கடினமான கேள்விகளை கேட்டு இருந்தார். ஆனால் நம்ம ஆள் நன்றாக படித்து இருந்ததால் சரியாக விடை அளித்து இருந்தார். திருத்திய விடை தாளை கொடுக்கும் முன் நம்ம ஆளை நான் ஒரு கேள்வி கேட்கிறேன் அதற்கு உன்னால் பதில் சொல்ல முடியுமா என்று கேட்க! நம்ம ஆள் சரி என்று சொல்ல! பேராசிரியர் " நீ நடந்து போகும் போது வழியில் உனக்கு பை கிடைக்கிறது அதில் நிறைய பணமும், அறிவும் இருக்கு! அதில் நீ எதை எடுப்பாய் என்று கேட்க! நம்ம ஆள் யோசிக்காமல் நான் பணத்தை தான் எடுப்பேன் என்று சொல்ல! பேராசிரியர் சிரித்து கொண்டே என்ன ! நானாக இருந்தால் அறிவை தான் தேர்ந்து எடுப்பேன் என்று சிரித்து கொண்டே சொல்ல ! அதற்கு நம்ம ஆள் அது சரி சார் பொதுவாக ஒருவர் தன்னிடம் இல்லாத ஒன்றை தானே தேர்ந்து எடுப்பார் என்று சொல்ல! வகுப்பில் எல்லோரும் சிரிக்க பேராசிரியருக்கு அவமானமாக போய் விட்டது. கோபத்தில் விடை தாளில் Idiot ( முட்டாள் ) என்று எழுதி விடை தாளை நம்ம ஆள் கிட்ட நீட்ட. நம்ம ஆள் வாங்கி பார்த்து விட்டு ஐயா உங்க கையொப்பம் போட்டு இருக்கீங்க ஆனா என் கிரேட் ( Grade) எவ்வளவு என்று போட மறந்து விட்டீர்கள்! என்று சொல்ல பேராசிரியர் திகைத்து போய் நின்றார்! -
ஏண்டி இவன் தான் உன் கள்ளக் காதலனா! ஏண்டி என்ன தைரியம் இருந்தா உன் கள்ளக் காதலனை வீட்டுக்கே கூட்டி வந்து இருப்ப! பாக்க பிச்சைக்காரன் மாதிரி இருக்கான். என்னடி உன் டேஸ்ட் இவ்வளவு மட்டமா இருக்கு! மூ...வி மூ.வி! குடிச்சா உனக்கு கண்ணு மண்ணு தெரியாது ! கண்ணாடி முன்னாடி நின்று உளராமல் பேசாம தூங்கு சரியா?
-
கருவுற்ற மான் தன் மகவை ஈயும் ஒரு நிலை.. அது ஒரு அடர்ந்த புல் வெளியை கண்டது, அதன் அருகே ஒரு பொங்கும் ஆறு. இதுவே சரியான இடம் என்று அது சென்றது அங்கு. அப்போது கருமேகங்ள் சூழ்ந்தன. மின்னலும் இடியும் இசையாட்சி செய்ய ஆரம்பித்தன. மான் தன் இடப்பக்கம் பார்த்தது.. அங்கே ஒரு வேடன் தன் அம்பை மானை நோக்கி குறி பார்த்து நின்று கொண்டிருந்தான். மானின் வலப்பக்கமோ பசியுடனான ஒரு புலி மானை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஒரு கருவுற்ற மான் பாவம் என்ன செய்யும்? அதற்கு வலியும் வந்து விட்டது.மேலும் காட்டு தீயும் எரிய ஆரம்பித்து விட்டது. என்ன நடக்கும்.? மான் பிழைக்குமா? மகவை ஈயுமா? மகவும் பிழைக்குமா? இல்லை காட்டு தீ எல்லாவற்றையும் அழித்து விடுமா? வேடனின் அம்புக்கு இரையாகுமா? புலியின் பசிக்கு புசியாகுமா? மான், தீ ஒரு புறமும், பொங்கும் காட்டாறு மறு புறமும், மற்ற இருவரும் எதிர் புறமும்.. மான் என்ன செய்யும்? மான் தன் கவனம் முழுதும், தன் மகவை ஈவதிலேயே செலுத்தியது.. ஒரு உயிரை விதைப்பதிலேயே தன் கவனம் இருக்க, மற்ற சூழல் அதன் கண்களில் இல்லை. அப்போது நடந்த நிகழ்வுகள்....... மின்னல் தாக்கியதால் வேடன் கண் இழந்தான். எய்தப்பட்ட அம்பு புலியை தாக்கி அது இறக்கிறது. தீவிர மழை காட்டு தீயை அழித்து விடுகிறது.. அந்த மான் அழகான குட்டி மானை பெற்றெடுக்கிறது. நம் வாழ்விலும் இப்படிபட்ட சந்தர்ப்பங்கள் நிறைய வந்திருக்கிறது.. வரும்..அச்சூழ்லில் பல எதிர்மறை சிந்தனைகள் நம்மை சுற்றி நின்று அச்சுறுத்தும்.. சில எண்ணங்களின் பலம் நம்மை வீழ்த்தி அவை வெற்றி பெற்று நம்மை வெற்றிடமாக்கும்.. நாம் இம்மானிடம் இருந்து மானிடம் கற்றுக்கொள்வோம்.. அந்த மானின் முக்கியத்துவம் முழுதும், மகவை பெற்றிடுவதிலேயே இருந்தது..மற்ற எதுவும் அதன் கை வசம் இல்லை..மற்றவற்றிற்கு அது கவனம் கொடுத்து இருந்தால் மகவும் மானும் மடிந்து இருக்கும். இப்போது உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.. எதில் என் கவனம்? எதில் என் நம்பிக்கையும் முயற்ச்சியும் இருக்க வேண்டும்? வாழ்வின் ஒரு பெரும் புயலில், எதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் செலுத்தி மற்றதை இறைவனிடம் விட்டு விடுங்கள்.. அவர் எப்போதும் எதிலும் நம்மை வருத்த செய்ய மாட்டார். இறைவன் தூங்குவதும் இல்லை.. துயரப்படுத்துபவரும் இல்லை.. உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பெருமாள் replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
என்ன சார் யோசனை சொல்றேன் என்று ஆளை காலி பண்ண ஐடியா கொடுக்குறீங்க! ஒரு பஸ்ஸில் ஜன்னலோர சீட்டில் இரண்டு பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். பஸ் போய்க் கொண்டிருந்தது. அதில் ஒரு பெண் "யோவ் கண்டக்டர் இங்கே வாய்யா... இந்த ஜன்னலக் கொஞ்சம் திறந்து வைத்து விட்டுப் போ" என்றாள். கண்டக்டர் வந்து ஜன்னலை திறந்து வைத்து விட்டுப் போனார். அந்தப் பெண்ணுக்கு அடுத்து உட்கார்ந்திருந்த பெண் "யோவ் கண்டக்டர் இங்கே வாய்யா... வந்து இந்த ஜன்னலை சாத்தி விட்டுப் போய்யா" என்றாள். கண்டக்டர் வந்து "என்னம்மா அந்தம்மா ஜன்னலை திறந்து வைக்கச் சொல்லுது நீங்க ஜன்னலை சாத்தி வைக்கச் சொல்றீங்க கொஞ்ச நேரம் அட்ஜஸ்ட் பண்ணி பிரயாணம் பண்ணக் கூடாதா?" என்று கேட்டார். அதற்கு முதல் பெண் சொன்னாள் "இங்கே பாரு நீ ஜன்னல அடைச்சன்னா நான் மூச்சு முட்டி செத்துப் போவேன்" என்றாள். இரண்டாவது பெண் "இங்கே பாரு நீ ஜன்னல திறந்து வச்சின்னா நான் குளிர்ல விறைச்சி செத்துப் போவேன்"னாள். கண்டக்டர் என்ன செய்றதுன்னு திகைச்சி நின்னுகிட்டிருந்தப்ப, கடைசி சீட்டில் பீடி குடிச்சிகிட்டிருந்த ஒரு மனுசன் கண்டக்டரை கூப்பிட்டு "அங்கே என்ன பிரச்னை" என்று கேட்டான். கண்டக்டர் சொன்னார் "அதை ஏன் கேட்கிற ஒரு அம்மா ஜன்னல அடைச்சா மூச்சு முட்டி செத்துப் போவேன்ங்குது. இன்னொரு அம்மா ஜன்னல திறந்து வச்சா குளிர்ல விறைச்சி செத்து போவேங்குது. ஒருத்தருக்கு ஒருத்தர் அட்ஜஸ்ட் பண்ணிப் போகக் கூடாதா கொஞ்ச நேரத்தில் இறங்கப் போறாங்க அதுக்குள்ள இப்படி சண்டை போட்டுகிட்டா என்ன செய்றது". அந்த மனுசன் "நான் ஒரு யோசனை சொல்லவா?" என்று கேட்டான். கண்டக்டர் "சரி சொல்லுய்யா நீ என்ன சொல்லப் போறேன்னு பார்ப்போம்" என்றார். அவன் சொன்னான் "கொஞ்ச நேரம் ஜன்னலை அடைச்சி வை, அந்த அம்மா செத்துப் போகும், அப்புறம் கொஞ்ச நேரம் ஜன்னலை திறந்து வை இந்தம்மா செத்துப் போகும் நாம நிம்மதியா போகலாம்" என்றான். கண்டக்டர் சொன்னார் "நல்ல ஆளுய்யா நீ அப்படி அவங்க ரெண்டு பேரும் செத்துப் போனா அந்தப் பொம்பளைகளோட புருசங்க வந்து கேட்டா நான் என்னய்யா பதில் சொல்றது"ன்னு கேட்டார். அதற்கு அவன் சொன்னான் "அதைப் பத்தி நீ கவலைப் படாதே அந்த ரெண்டு பொம்பளைகளோட புருசன் நான் தான்.. அதனால தான் அந்த யோசனையை சொன்னேன்" என்றான். கண்டக்டர்: 😳😳😳 -
கஜேந்திரகுமார் பயணித்த வாகனத்தில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு!
பெருமாள் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் வண்டி என்று எழுத முதுகெலும்பு இல்லை தினக்குரலுக்கு . -
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பெருமாள் replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
இலவசம் எனும் திருட்டு ! திருடன் ஒருவன் இரவில் சுவர் ஏறி குதித்தான்! பெரிய நாய் ஒன்று நின்று கொண்டிருந்தது. நாய் அவனை பார்த்தது அவன் நாயை பார்த்தான்! நாய் குலைக்க வில்லை! தைரியமாக இரண்டு அடி எடுத்து வைத்தான்! குலைக்க வில்லை! வீட்டில் கதவருகே வந்தான் ! கள்ள சாவி கொண்டு கதவை திறக்க முற்பட்டான்! நாய் அப்பொழுதும் குலைக்க வில்லை! திடீர் என்று அவனுக்கு ஒரு சந்தேகம்! கதவை திறக்கும் போது நாய் குலைத்தால் என்ன செய்ய ! தயாராக வைத்திருந்த பிஸ்கெட் பாக்கெட்டில் இருந்து இரண்டு பிஸ்கட்டை எடுத்து நாய்க்கு போட்டான்! நாய் உடனே குலைக்க ஆரம்பித்து விட்டது! திருடன் நாயை பார்த்து கேட்டான்! ஏன் நாயே! நான் சுவர் ஏறி குதித்த போது குலைக்க வில்லை! கதவு வரை நடந்த போது குலைக்க வில்லை! வீட்டின் கதவை திறக்கும் போது குலைக்க வில்லை மாறாக உனக்கு பிஸ்கெட் போடும்போது குலைக்க ஆரம்பித்து விட்டயே என்று கேட்க அதற்கு நாய் இவ்வளவு நேரம் நீ உன் வேலையை செய்கிறாய் என்று நினைத்து கொண்டு இருந்தேன்! ஆனால் தேவை இல்லாமல் எனக்கு பிஸ்கெட் இலவசமாக நீ போடும்போது தான் நீ தவுறு செய்கிறாய் என்று அறிந்து கொண்டேன். இன்று எப்பொழுதெல்லாம் நமக்கு இலவசம் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் அரசு இயந்திரம் தவறு செய்கிறது என்று பொருள்! புரிந்து கொள்ளுங்கள்! -
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு (LTTE) மீதான ஐந்தாண்டுத் தடை நீட்டிப்பை டெல்லி உயர் நீதிமன்ற நடுவர் மன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த மே 14ஆம் திகதி ஐந்தாண்டுத் தடை நீட்டிக்கப்பட்ட பின்னர், சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ – UAPA) கீழ் அந்த நடுவர் மன்றத்தை மத்திய உள்துறை அமைச்சு அமைத்தது. இலங்கையில் தமிழா்களுக்குத் தனி ஈழம் வழங்கப் போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவில் ஏற்கனவே தடை செய்யப்பட்டு இருந்தது. வெளியிடப்பட்ட அறிக்கை அந்தத் தடை முடிவுக்கு வரவிருந்த வேளையில் மேலும் ஐந்தாண்டுக்குத் தடையை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து அந்த இயக்கத்தை சட்டவிரோத அமைப்பு என்று அறிவிக்க போதிய காரணம் உள்ளதா என்பதை முடிவு செய்ய, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மன்மீத் ப்ரீதம் சிங் அரோரா தலைமையில் நடுவர் மன்றம் ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை உள்துறை அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. “கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வீழ்த்தப்பட்டது. தனி ஈழம் “இருப்பினும் தனி ஈழம் கோருவதையோ அதற்கான பிரசாரம் மற்றும் நிதி திரட்டும் நடவடிக்கைகள் மூலம் ஈழம் அமைவதற்கான பணிகளில் இரகசியமாக ஈடுபடுவதையோ அந்த அமைப்பு கைவிடவில்லை என நடுவர் மன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்து விட்டது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அரசு அளித்த தகவலின் அடிப்படையில், யுஏபிஏ சட்டத்தின் கீழ், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சட்டவிரோத அமைப்பு என்று அறிவிக்க போதிய ஆதாரம் இருப்பதாக நடுவர் மன்றம் கூறியுள்ளது. எனவே, அந்த அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்வதாகவும் அது அறிவித்து உள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடா்ந்து அச்சுறுத்தலாக உள்ளது என்றும் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்குத் தீங்கிழைக்கும் நடவடிக்கைகளில் அந்த அமைப்பு தொடா்ந்து ஈடுபடுகிறது என்றும் நடுவர் மன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளது. https://tamilwin.com/article/delhi-high-court-confirmed-the-ban-on-ltte-1733757937?itm_source=parsely-detail
-
கனடாவில் ஆயுதங்களுடன் தமிழ் தம்பதி ஒன்று கைது செய்யப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரொறன்ரோவை சேர்ந்த 37 வயதான தனராஜ் தங்கராஜா, மற்றும் 37 வயதான கிஷானி பாலச்சந்திரன் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர். தனராஜ் தங்கராஜா மீது 8 குற்றச்சாட்டுகளும், கிஷானி பாலச்சந்திரன் மீது 3 குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. சோதனை நடவடிக்கை கடந்த 3ஆம் திகதி மார்க்கம் வீதி மற்றும் ஷெப்பர்ட் அவென்யூ பகுதியில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றை சோதனை செய்த போது இவர்கள் சிக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://tamilwin.com/article/tamil-couple-arrested-in-canada-1733758309
-
நாம் தமிழர் கட்சியின் பிரபல பெண் தலைவர் கட்சி மாறுகிறாரா?
பெருமாள் replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
ஒகே ஸ்டார்ட் மியுசிக் ........................................😄 -
முதலில் வடக்கு பக்கம் இருக்கும் கடற்படையை தெற்குக்கு மாற்றி விடனும் என்கிறார்கள் அங்கிருப்பவர்கள் கேரள கஞ்சா கொண்டு வரும் ரோலருக்கு பாதுகாப்பு கொடுப்பதே இந்த சிங்கள நேவிதானமே ? முதலில் தமிழர் பகுதியை கரையான் அரிப்பது போல் அரிக்க சிங்கள அரசியல்வாதிகள் கொடுப்புக்குள் சிரித்து கொண்டு கண்டும் காணாமல் இருந்தார்கள் கடைசியில் சிங்கள பகுதி பள்ளிக்கூட வாசல் மட்டும் விற்பனை நடக்க தொடங்க புதிதாய் வந்த வேட தாரிகள் குய்யோ முய்யோ என்று அலறிக்கொண்டு இருக்கினம் .
-
மெதுவா படிச்சுட்டு சிரிச்சுட்டு படுங்க நிம்மதியா தூக்கம் வரும் !! 1. உலகத்திலேயே சிறந்த ஜோடி செருப்புதான்... ஒன்றை பிரிந்தால் மற்றொன்று வாழவே வாழாது..! 2. எல்லா பெண்களையும் விசிலடித்து திரும்பி பார்க்க வைத்தாலும் செருப்படி வாங்காத ஒரே ஜீவன் குக்கர் தான்..! 3. மாமா பொண்ணும், உப்புமாவும் ஒன்னு! வேற எதுவுமே கிடைக்காத பட்சத்துல நம்மளோட தலையில கட்டப்படும்! 4. நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும், மனைவி வந்தப்பின் நிம்மதியைத் தேடுவதுமே.. ஆண்களின் வாழ்க்கை தேடல்..! 5. இந்த உலகத்தில் என்னையும் ஒரு மனிதனாக மதித்து பொன்னாடை போர்த்தும் ஒரே நபர்.. சலூன் கடைக்காரர் மட்டுமே..! "நீங்க வெட்டுங்க பாஸ்.."..!! . 6. ஒரு புடவை வாங்க முன்னூறு புடவைகளைப் புரட்டிப் பார்த்த மனைவியிடம் எரிச்சலுடன் கணவன் சொன்னான்: "ஆதிகாலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி இருந்தாள். இது போன்ற தொல்லைகள் நல்ல வேளை ஆதாமுக்கு இல்லை." இதற்கு மனைவி சொன்ன பதில்: "அதுக்கு அவன் எத்தனை மரம் ஏறி இறங்கினானோ?" 7. தொலைபேசியில் ஒரு பதற்றமான குரல்.. "டேய் மச்சான்... எங்கடா இருக்க?" "வீட்லதான்டா இருக்கேன்..." "அப்பாடா... இப்பதான்டா நிம்மதியா இருக்கு...!!" "ஏன்டா? என்ன விஷயம்??" "அதில்லடா..... காலையில பேப்பரை பார்த்தேன். அதுல, உங்க தெருவுல வெட்டியா சுத்திகிட்டிருந்த நாய்களை எல்லாம் கார்பரேசன்காரங்க புடிச்சுட்டு போனதா செய்தி போட்டிருந்துச்சு. அதான்... எங்க நீ மாட்டிகிட்டீயோன்னு பயந்தே போயிட்டேன்....." 8. அம்மா: என்னடி உன் புருஷன் தினமும் இப்படி குடிச்சுட்டு வராரே நல்லாவா இருக்கு.? மகள் : தெரியலை அம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை! 9. நீ என் தங்கக் குட்டியாம்… தாத்தா சொல்றதைக் கேப்பியாம்… நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்…. பாப்பா நடந்து வருவியாம். வேண்டாம் தாத்தா… என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம். நானே என் பையைத் தூக்கிக்கிறேன். நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்… 10. “ஏன் ஸ்கூட்டரை திருடினே…?” “டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு, வண்டிய எடுன்னு அவசரப்படுத்தினாரு எசமான்..!” 11. பகல்ல உங்களுக்குக் கண் தெரியாதா டாக்டர்….?” “தெரியுமே…ஏன் கேட்கறீங்க….. ?” “இல்ல…பார்வை நேரம் மாலை ஆறிலிருந்து எட்டுவரைன்னு போர்டு வெச்சிருக்கீங்களே… அதான் கேட்டேன்.!” 12. முதலாளி: டேய் முனியா, நான் கொஞ்சம் வீட்டுக்குப்போய் ஓய்வு எடுத்துக்கிட்டு வர்றேன்… நீ கடையைப் பார்த்துக்க… முனியன்: உங்களுக்கு எதுக்கு சிரமம் முதலாளி? நானே போய் ஓய்வை எடுத்துக்கிட்டு வந்துடறேனே! 13. டீச்சர் கேட்டார்... பார்வதி ஏன் சிவபெருமானை மணந்தார் ? குறும்புக்கார மாணவனின் பதில்... எப்பவும் தலையில் சந்திரன் இருப்பதால் வெளிச்சமாக இருக்கும்... EB பில் வராது..!! ஜடாமுடியிலிருந்து கங்கை நதி கொட்டுவதால் மோட்டார் போட்டு டேங்க்கில் தண்ணீர் ஏற்ற வேண்டாம்..! சிவன் பச்சை காய்கறி சாப்பிடுவதால் சமைத்து கொட்ட வேண்டாம்..! சிவனுக்கு அம்மா அப்பா இல்லாததால் மாமியார் தொல்லை இல்லை... மாணவனின் பதிலை கேட்டு மயங்கி விழுந்த டீச்சர் எழுந்திருக்கவேயில்லை. 14. ஜட்ஜ் : நீங்க ரொம்ப வேகமா வண்டி ஓட்டியதா போலீஸ் சொல்லுறாங்க? நீங்க இல்லேன்னு சொல்லுறேங்க! இதுக்கு ஆதாரம் ஏதாவது உண்டா? ஐயா நான் என் பொண்டாட்டிய கூட்டிட்டு வர மாமனாரு வீட்டுக்கு போய்கிட்டு இருந்தேன்யா! நீங்களே சொல்லுங்கய்யா எவனாவது பொண்டாட்டிய வீட்டுக்கு கூட்டிட்டு வர வேகமா போவானா... ? ஜட்ஜ் : கேஸ் டிஸ்மிஸ்ட்...! முதல்ல அவரை விடுதலை செய்ங்க...! படித்ததில் ரசித்தது...