-
சுவிட்சர்லாந்தில் பேருந்து தீ விபத்து : யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!
இந்த செயலை யார் செய்தார் என்ற கேள்விக் குறி ஒரு புறமிருக்க..இவர் தீ பற்ற வைக்கும் மட்டும் ஏன் மற்றப் பயணிகள் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் என்பதும் ஒரு வித கேள்விக் குறியாகவே இருக்கிறது..குறிபிட்ட நபரின் நடவடிக்கை சரியில்லை என்று நடத்துணரிடம் சொல்லி இருக்கலாம்..அப்படி யாராவது செய்திருப்பின் இத்தனை இழப்புக்கள் ஏற்பட்டு இருக்காது.
-
சுவிட்சர்லாந்தில் பேருந்து தீ விபத்து : யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!
இவரது மரண அறிவித்தல் லங்காசிறியிலும் குடும்பத்தினரால் பகிரப்பட்டுள்து. சாதரணமாக நடந்த ஏதோ விபத்தாக இருக்கலாம் என்று நினைத்தேன்.ஆழ்ந்த இரங்கல்கள்.🙏
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
என்னப்பு அடிப்படை சுகாதார வசதி திட்டம் என்று போய் இப்போ வீட்டோடு வாறியள்.திட்டம் ஒரு நிலைப்பாட்டில் இல்லைப் போலும்.தொடரட்டும்.🤭
-
கறையான் புற்று
எனக்கும் ஒரு சின்ன சந்தேகம்.🤭இந்த தடவை யாழில் எழுதுபவர்களின் ஆக்கங்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறது..அடிக்கடி ஞாபகபடுத்தல்கள் தேவை போலும்..✍
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
அவருக்கு பணம் அனுப்பும் அறிவுஜீவிகள் தான் சங்கீதாவை பற்றியும் பேச சொல்லி இருக்கிறார்கள். அதனால் தான் கதைக்க முன் வந்ததாக சொல்லி விட்டு தான் லிங் ஒன்று போட்டு இருக்கிறார்.பொதுவாக ஏதாவது பார்ப்போம் என்று தொடங்கினால் இவரது குப்பைகளும் கண்ணில படுகிறது.வைத்தியர் என்றோ அல்லது அவரும் ஒரு குடும்பஸ்தன் என்று சொல்வற்கோ அருகதை அற்ற மனிதர்.அர்ச்சனா.அவர் பின்னாடி நிற்கும் அம்மாமார், அன்ரிமார் இன்னும் திருந்த இல்லை.
-
தமிழர்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி நீதியமைச்சர் பதவி அழைப்பை நிராகரித்தேன்; ஒருபோதும் சுயதேவைகளின் அடிப்படையில் செயற்படவில்லை - சுமந்திரன்
உண்மையாவா.?🤭
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து இங்கு அந்த நாட்டவர்கள் போரட்டத்தில் இறங்கி உள்ளதாக காலையில் அறிந்தேன்.நான் அடிக்கடி டவுண்ரவுன் பக்கம் போவதால் யாராவது ஏதாச்சும் எடுத்து சொல்வார்கள். பொருட்களின் விலைகளும் கூடலாம்.✍
-
ரோஜா முள்.
பாகம் 2 எப்போ வரும்..🤭
-
கடும் பனிப்புயல்: நியூயோர்க் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது
கனடாவில் இந்த தடவை பனி கொட்டி இன்னும் சிலர் இயல்பாக வெளியில் போக இயலாத நிலை.சில இடங்களில் பனியை அள்ளி எடுக்கும் போது மண்ணையும் சேர்த்து எடுக்கபட்டுள்ளதால் பஸ் தரிப்பு இடங்களுக்கு அருகில் இலகுவாக வயோதிபர்கள், இயலாதவர்கள் தெரிலிலிருந்து கரைக்கு மாறிக் கொள்ள இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது.பஸ் தரிப்பு இடங்களுக்கு அருகில் மிகவும் அவதானமாக பார்த்து போவது நன்று.
-
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 12 விமானச் சேவைகள் ரத்து
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 12 விமானச் சேவைகள் ரத்து written by admin March 1, 2026 வளைகுடா பிராந்தியத்தில் வான்பரப்பு மூடப்பட்டுள்ளதால், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் துபாய், ரியாத், தம்மாம் மற்றும் குவைத் உள்ளிட்ட நகரங்களுக்கான 12 விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது. பயணிகள் விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன் விமான நிறுவனத்தைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. ரத்து செய்யப்பட்டுள்ள விமானங்களின் விபரங்கள்: விமான இலக்கம் புறப்படும் இடம் – சேருமிடம் UL 231 கொழும்பு – துபாய் UL 232 துபாய் – கொழும்பு UL 225 கொழும்பு – துபாய் UL 226 துபாய் – கொழும்பு UL 217 கொழும்பு – தோஹா UL 218 தோஹா – கொழும்பு UL 253 கொழும்பு – தம்மாம் UL 254 தம்மாம் – கொழும்பு UL 265 கொழும்பு – ரியாத் UL 266 ரியாத் – கொழும்பு UL 229 கொழும்பு – குவைத் UL 230 குவைத் – கொழும்பு பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், மேலதிக விபரங்களுக்குத் தமது உத்தியோகபூர்வ இணையத்தளம் அல்லது அழைப்பு மையத்தைத் (Call Center) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. வான்பரப்பில் ஏவுகணைத் தாக்குதல் அபாயம் உள்ளதாலேயே, பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்ற நோக்கில் இந்த ரத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான மாற்றுப் பயணத் திகதிகள் அல்லது பணம் மீளப் பெறுவது (Refund) குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #FlightAlert #SriLanka #SriLankanAirlines #MiddleEastWar #TravelUpdate #ColomboAirport https://globaltamilnews.net/2026/229935/
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்!
இந்த தாக்குதல் ஆரம்பித்ததின் பின்னர் யாழ்ப்பாண மக்கள் பெற்ரோலுக்கு வரிசைக்கு நிக்கிறார்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த வாழ்த்துக்கள் சிறியண்ணா.அடிக்காடி மருத்துவமனை பக்கம் போகாமல் நலமோடு வாழ வேண்டுகிறேன்.🖐அடுத்த தேர்தலில் செலவிடுவற்காக காசு சேர்க்க லண்டன் வரவிருக்கிறாராம் அர்ச்சுணா.கூப்பிடுங்கோ ...😀
-
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் தொடரும் காட்டு யானைகள் அட்டகாசம்
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் தொடரும் காட்டு யானைகள் அட்டகாசம் 22 Feb, 2026 | 04:28 PM மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட மாந்தீவு பகுதிக்குள் ஏற்கனவே புகுந்திருந்த கட்டு யானைகள் ஞாயிற்றுக்கிழமை (22) திருப்பந்துறை பிரதேசத்திற்குள் நுழைந்து அட்டகாசம் ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஐந்து தினங்களாக தொடர்ந்து அப்பகுதியில் காட்டு யானைகள் உட்பகுந்து நெற்பயிர்கள் மற்றும் ஏனைய பயிர் வகைகளையும் துவம்சம் செய்வதாக அப்பகுதி பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். யானைகள் மனித மோதலுக்கு நிரந்தர தீர்வு இதுவரையில் எட்டப்படவில்லை என மக்கள் அங்கலாய்க்கின்றனர். இதேவேளை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகஸ்த்தர்களும், அப்பகுதி பொதுமக்களும் இணைந்து குறித்த காட்டு யானைகளை அப்பகுதிகளிலிருந்து வெளியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு காட்டு யானைகளில் அட்டகாசத்தாலும் நடமாட்டத்தாலும், வழமை போன்று தமது அன்றாட செயற்பாடுகளில் ஈடுபட முடியதுள்ளதாகவும், மிகுந்த அச்சத்தின் மத்தியிலேயே தாம் நடமாடுவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர். மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் தொடரும் காட்டு யானைகள் அட்டகாசம் | Virakesari.lk
-
நூற்றாண்டை எட்டும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் நாவல்!
நூற்றாண்டை எட்டும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் நாவல்! written by admin February 22, 2026 யாழ்ப்பாணத்துப் பிள்ளையார் கோயில் திருப்பணிக்கு உதவினார் மலாயாவின் முஸ்லிம் மன்னர்! 1927 இல், மலாயாவில் வெளியான புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் நாவல் ஒன்று, இம்மாதம் யாழ்ப்பாணத்தில் மீளவும் அச்சிடப்பட்டு வெளியாகின்றது. சாம்பசிவம் – ஞானாமிர்தம் என்ற இந்த நாவலுக்குக் கதைக்களம் அன்றைய மலாயா-சிங்கப்பூரும் இலங்கையும். நாவலை எழுதியவர், யாழ்ப்பாணம், காரைநகர், சம்பந்தர்கண்டியைச் சேர்ந்த அருணாசலம் நாகலிங்கம் (1901-1979). அவர், அப்பொழுது, கோலப்பிலா திறைசேரியில் முதன்மை எழுதுவினைஞராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். நாவல், கோலாலம்பூரின் லாஸர் அண்ட் சன்ஸ் அச்சகத்தில் 1000 பிரதிகள் அச்சிடப்பட்டது. இந்த நாவலின் விற்பனையால் வரும் பணத்தில், காரைநகர், மருதடிப் பிள்ளையார் கோயிலின் பாழடைந்த திருக்குளத்தைச் சீரமைத்துக் கட்ட நாவலாசிரியர் எண்ணியிருந்தார்; செய்துமுடித்தார். கோயில் என்பதற்கு அப்பால், இக்குளத்தின் ஊர்ப்பயன்பாடு, நீர்ப்பயன்பாடு, கால்நடைகளின் பயன்பாடு என்பன அவர் சிந்தனையில் முன்னின்றதை நூன்முகத்தால் அறிந்துகொள்ளலாம். புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் எழுத்தை ஊக்குவித்து, அக்காலத்தில் 100 வெள்ளி பணம் கொடுத்து, பிள்ளையார் கோயில் திருப்பணிக்கு உதவியவர், அன்றைய மலே கூட்டாட்சி அரசுகளின் (Federated Malay States) நகரி செம்பிலான் (Negeri Sembilan) மன்னராக இருந்த, சேர். முகமது ஷா. பின்னாளில் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியரான, R. P. சேதுப்பிள்ளை; அக்காலத்தில் ஈழத்து முன்னணி நாவலாசிரியரும் இந்துசாதனப் பத்திராசிரியருமான (உலகம் பலவிதம்) ம. வே. திருஞானசம்பந்தப்பிள்ளை; யாழ்ப்பாண வரலாற்றாய்வாளர், செ. இராசநாயக முதலியார்; புனித பத்திராசிரியர் கல்லூரித் தமிழ்ப் பண்டிதர், வ. சு. இராச ஐயனார், ஆகியோர் நாவலுக்கு முன்னுரை வழங்கியிருந்தனர். சாதி, சமயம், சமூகம், சீதனம், மதுவையும் புலாலையும் தவிர்த்தல், பண்பாட்டு அடிமைத்தனம், பயிர்த்தொழில், உள்ளூர் உற்பத்தி போன்ற விடயங்களில், காந்தியக் கருத்துக்களை, தமிழ்ச் சிந்தனை மரபுப் பின்னணியுடனும், இலக்கிய மேற்கோள்களுடனும் நாவலாசிரியர் முன்வைக்கிறார். இரண்டாம் உலகப்போரின் யப்பானிய ஆட்சிக்காலத்தில், கோலப்பிலா மருத்துவ மனைக்கு முதன்மை எழுதுவினைஞராகப் பணிமாறிய அவர், சிங்கப்பூரில் நிறுவப்பட்ட சுபாஸ் சந்திர போஸின் இந்திய அரசுக்கும் ஆதரவளித்துள்ளார். 1947 இல் காரைநகர் திரும்பிவிட்டார். கோலப்பிலாவில் தமிழ்ப்பள்ளி நிறுவி அதன் முகாமையாளராகவும், முருகன் கோயில் முகாமையாளராகவும் இயங்கிய இந்த நூலாசிரியர், ஊரிலும் காரைநகர்ச் சிவன் கோயில் குடமுழுக்கு (1970), அனைவருக்கும் ஆலய வழிபாட்டுரிமை, நூற்பதிப்புகள் என, பல்வேறு சமய, சமூகப் பணிகளில் பங்குகொண்டு, 1979 இல் இயற்கை எய்தினார். 25-02-1901 இல் பிறந்த நாகலிங்கம் அவர்களுக்கு இது 125 ஆவது ஆண்டு. அவரை, 1975 இல் மல்லிகை பத்திரிகை பேட்டிகண்டு, அட்டைப்படத்துடன் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. படங்களுடன் வெளியான முதலாவது ஈழத்தமிழ் நாவல் அவருடையது என சில்லையூர்ச் செல்வராசன் குறிப்பிட்டுள்ளார். இந்த நாவல் ஏற்கனவே வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இப்பொழுது மீளச்சில் வெளியிடுபவர், நா. பாலக்கிருஷ்ணன், சம்பந்தர்கண்டி,காரைநகர். அம்பலம். நூற்றாண்டை எட்டும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் நாவல்! - Global Tamil News
-
36 ஆண்டு கால ஏக்கம் – மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்திற்கு அனுமதி கிடைக்குமா?
36 ஆண்டு கால ஏக்கம் – மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்திற்கு அனுமதி கிடைக்குமா? written by admin February 22, 2026 மயிலிட்டி மக்களின் ஆன்மீக அடையாளமான புனித காணிக்கை மாதா ஆலயத்தில் வழிபாடு செய்வதற்கு, கடந்த 36 வருடங்களாக அனுமதி மறுக்கப்பட்டு வரும் அவலநிலை தொடர்கிறது. இம்முறையாவது திருவிழாவை நடத்த அனுமதி கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் மக்கள் காத்திருக்கின்றனர். 📍" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> இந்த ஆலயம் 1850 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட மிகப்பழைமையான கத்தோலிக்க ஆலயமாகும். சுமார் 52 பரப்பு நிலப்பரப்பில் ஆலயம், மயிலிட்டி றோ.க பாடசாலை, கன்னியர் மடம், பங்கு பணிமனை மற்றும் தோட்டக்காணிகள் அமைந்துள்ளன. 1990-ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் காரணமாக மக்கள் வெளியேறிய பின், இப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டு இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இந்த நிலையில் திருவிழாவை ஆலயத்திலேயே கொண்டாடுவதற்கு அனுமதி கோரி ஜனாதிபதி, கடற்தொழில் அமைச்சர், வடமாகாண ஆளுநர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இராணுவத் தளபதி எனப் பல தரப்பினரிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இதுவரை இராணுவத் தரப்பிலிருந்து முறையான சாதகமான பதில்கள் கிடைக்காததால், இம்முறையும் திருவிழா தடைபட்டு விடுமோ என்ற அச்சத்தில் மயிலிட்டி மக்கள் உள்ளனர். “எம் பாட்டன் பூட்டன் தொழுத ஆலயம், எம் மண்ணின் அடையாளம் மீண்டும் எமக்குக் கிடைக்க வேண்டும்” – இதுவே மயிலிட்டி மக்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது. 36 ஆண்டு கால ஏக்கம் - மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்திற்கு அனுமதி கிடைக்குமா? - Global Tamil News