பாகம் பத்தொன்பது
எனக்காக காத்திருந்த சக்கை நிரம்பிய CBZ ஈருளியில் இல் ஏறி கொண்டேன்.
எனக்காக கொடுக்கபடிருந்த வெடிகுண்டு அங்கியை (ஜாக்கெட்) அணிந்து கொண்டேன்.
அதை அணியும் போது, சிறுவயதில் பள்ளிக்கூடம் போகாது அடம்பிடிக்கும்போது அம்மா கட்டாயபடுத்தி அணிவிக்கும் பாடசாலை சீருடை தான் ஞாபகத்துக்கு வந்தது.
புத்தக பையை தூக்கி கொண்டு ஓடும்போது வாசல் வரை கலைத்து கலைத்து சோறு ஊட்டும் அன்னை தான் என் கண்ணுக்குளே.
எழிவண்ணன் ரி-56 ரக தானியங்கி துப்பாக்கியுடனும், அதற்கான மேலதிக ரவைகூடுகளுடனும், என் பின்னிருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டான்.
கனிவாளன் ஒரு ஏகே எல்எம்ஜி யுடன் புறபட்டு சென்றுவிட்டான்.
வாசல்வரை வந்திருந்த அந்த மூத்த தலைவனையும், என்னை இயக்க போகும் தளபதி அன்பு மாஸ்டரையும், இறுகிய முகங்களோடு விடைகொடுக்க வந்திருந்த என் தோழர்களையும் இறுதியாக ஒரு முறை பார்த்து தலையசைத்து விடைபெற்று கொண்டேன்.
இறுதியாக பேச வேண்டும் என்று எவ்வளவோ வார்த்தைகள், இருந்தும் எதுவுமே பேச முடியவில்லை. கண்களால் மட்டுமே பேசி கொண்டு விடைபெற்றேன்.
என் வாழ்நாளில் ஒரு நாளாவது ஓடி பார்த்துவிட வேண்டும் என்று நினைத்த CBZ , இப்போ என் இறுதி வாகனமாக.ஒரு உதையிலேயே இயக்கத்தை தொடங்கியது.
"அல்பா கிலோ அல்பா கிலோ ...அல்பா ரோமியோ.."
"அல்பா கிலோ அல்பா கிலோ ...அல்பா ரோமியோ.."
"சொல்லுங்க அல்பா ரோமியோ "
"கிபிர் வெளிகிட்டுது.."
"விளங்கிட்டுது .."
அகிலன், அன்பு மாஸ்டரின் கட்டளைக்கிணங்க, வெடிப்பினால் ஏற்படபோகும் பாதிப்பில் இருந்து தன் அணியினை காப்பாற்ற தன் அணியினை கொஞ்சம் பின்னுக்கு நகர்த்தினான்.
கனிவாளன் ஒரு வீட்டின் கூரை மேலே நிலையெடுத்து, இறுதி தாக்குதலுக்கு தயார் நிலையில் இருந்தான்.
எழில் என் பின்னாலே எழுந்து நின்று தாக்குதலுக்கு தயார் நிலையில் இருந்தான்.
அலைபேசி அழைத்தது..
"ரோமியோ அல்பா ..ரோமியோ அல்பா ...அல்பா ரோமியோ "
"சொல்லுங்க அல்பா ரோமியோ.."
"எல்லாம் நல்லபடியா போகுதா ..""
"அந்த மாதிரி போகுது அண்ணே .."
"சரி தொடர்பிலே இருந்து கொள் "
"நன்றி அண்ணே .."
அலைபேசியை அணைத்துவிட்டு, எரிந்து கொண்டிருந்த வாகனங்களுக்கு நடுவிலே வளைத்து வளைத்து என் ஆசை CBZ ஐ ஓடி கொண்டிருந்தேன்.
ஒழுங்கையாலே வந்து இப்போ முல்லை பரந்தன் நெடுஞ்சாலையில் ஏற்றிவிட்டேன்.
இனி எதிரியின் நேரடி எதிர் தாக்குதலுக்கு முகம் கொடுக்க வேண்டும்.
என்னுள் ஆயிரம் எண்ணங்கள்..என் வாழ் நாளிலே நான் செய்த பிழைகள் எல்லாம் என் கண் முன்னே தோன்றி மறைந்தன. அவர்களிடம் எல்லாம் மானசீகமாக மன்னிப்பு கேட்டு கொண்டேன்.
எத்தனையோ பேருடைய முகங்கள் மாறி மாறி வந்தன. அம்மா அப்பா தங்கைகள், சேகர் அண்ணா , என் மடியில் உயிர் துறந்த அம்மா , தங்கை , கலையரசி ..இப்படி சொல்லி கொண்டே போகலாம்.
எனக்குள் இருந்த ஆசைகளை எல்லாம் கொன்று புதைத்தேன். எங்கள் நாடு விடுதலை அடைய வேண்டும் என்று மட்டும் மனசுக்குள் உறுதியாக நினைத்தேன்.
எப்படியாவது சொன்ன இலக்கை அழித்திட வேண்டும் என்று திரும்ப திரும்ப வாயிலே முணுமுணுத்தேன். இறுதி நேரத்தில் கூட என் மனம் மாற கூடாது என்று கடவுளை வேண்டினேன்.
அன்பான உறவுகளே ...
இது தான் நான் உங்க கூட பேசும் கடைசி சந்தர்ப்பம்..
உண்மையில் எனக்கே என்ன பேசுறது என்று தெரியவில்லை.. நிறைய பேசணும் போல இருக்கு..ஆனால் பேச முடியவில்லை..
என் பாசங்களே ..நீங்கள் என் உணர்வுகளை நிச்சயமாக புரிந்து கொள்ளுவீங்கள்..நாங்கள் சாகோணும் என்று பிறக்கவில்லை..ஆசைகள் இல்லாமலும் சாகவில்லை..இது ஒரு உணர்வு ..உங்கள் மீது நாங்கள் கொண்ட பாசத்தின் வெளிப்பாடு ..உங்களை நாங்கள் எங்களை விட ஆழமாக நேசிக்கிறோம்.
அன்புள்ளங்களே ...
எங்கள் மண்ணை நேசியுங்கள்.. எங்கள் விடுதலை மீது நம்பிக்கை வையுங்கள் ..எங்கள் தலைவன் மீதும் தளபதிகள் மீதும் பற்று வையுங்கள்..அவர்கள் நிச்சயமாக தங்கள் உயிரை கொடுத்தாவது உங்களுக்கு விடுதலை பெற்று தருவார்கள்.
நிச்சயம் எங்களுக்கு நாடு கிடைக்கும்.. நீங்கள் தொடர்ந்து அதற்காக தோள் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில் தான் நான் சாகிறேன்.
உறவுகளே .... எனக்கு என் அம்மாவை பார்க்கணும் போல இருக்கு.. எனக்கும் உணர்ச்சி இருக்கு.. எனக்கும் பாசம் இருக்கு ..அழுகை தான் வருகுது ..
பயம் இல்லை ..பாசம் ..
உறவுகளே ..எங்க அம்மா...எங்க அம்மா மட்டும் இல்ல ..என்னமாதிரி இங்கே எத்தனையோ போராளிகள் .... அவங்க அம்மா குடும்பங்கள் எல்லாவற்றையும் உங்கள் கைகளில் ஒப்படைக்கிறேன்.
தயவு செய்து கும்பிட்டு கேட்கிறேன் அவங்களை கொஞ்சம் பார்பீங்களா ..??
கொஞ்சம் பொறுங்கள் உறவுகளே அலைபேசி அழைக்குது ..
"ரோமியோ அல்பா ..அங்காலே கிலோ அல்பா ..தடைகளை உடைச்சிட்டான் ..நீங்கள் போகலாம் "
"நன்றி அல்பா ரோமியோ "
சரி உறவுகளே நேரமாகிவிட்டது..
அடுத்த பிறப்பு ஒன்று இருந்தால் அதுவும் இந்த இனத்திலேயே எங்க அம்மா வயிற்றேலேயே பிறந்து உங்களுக்காகவே போராடி சாகனும் ..
நான் போயிற்று வாறன் ..மன்னிக்கவும் போறேன் ...
நாங்கள் சாவதும் இல்லை வாழ்வதும் இல்லை.
என் பின்னல் இருந்து சுட்டு கொண்டிருந்த எழில்வண்ணன், என்னை தழுவி கொஞ்சிவிட்டு பாய்ந்து கொண்டான்.
எதிரி என்னை நோக்கி சரமாரியாக சுட தொடங்கினான்.. சிலர் என்னை கண்டு ஓட தொடங்கினார்கள். நான் எண்ணெய் தாங்கியுடன் என் உடலை அணைத்தவாறே வேகமாக ஓடினேன்.
கட்டளை மையம் என் கண்ணில் தெரிந்தது.
என் சட்டை பையினுள் இருந்த அம்மாவுக்கான நாளேட்டை ஒரு முறை தடவி பார்த்து கொண்டேன்.
என் வாய் என்னை அறியாமலே அம்மா.. என்று முணுமுணுத்தது..
தொடர்பினை அமுக்கி ..
"அல்பா ரோமியோ ..நான் கிட்டே வந்திட்டேன்..""
"ரோமியோ அல்பா.. வேற ஏதும் சொல்ல இருக்கா ..சாமியும் இருக்கிறார் "
"இல்லை அண்ணே ..நான் இண்டைக்கு தான் என் வாழ்க்கையிலே எழுச்சியா இருக்கிறேன்.. இனி எல்லாமே எழுச்சி தான் அண்ணே ..காதை கொடுத்து வடிவா கேளுங்கோ ..எழுச்சி தெரியும் அண்ணே.. எங்களுக்கு தான் வெற்றி அண்ணே ..புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் "
பட்டோம்ம்மம்ம்ம்ம்ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம் .....
அந்த முள்ளிவாய்க்கால் மண்ணே அதிர்ந்தது..
கனிவாளன் தொடர்பெடுத்தான்..
"அல்பா ரோமியோ ...கிபிர் வெடிச்சிட்டுது..அவன்ட மையத்துக்குள்ளே போய் நடுவிலே தான் வெடிச்சான் அண்ணே .."
"அந்த இடமே சக்கையா போச்சு அண்ணே .."
"ரோமியோ அல்பா வீரச்சாவு அண்ணே .."
அலைபேசியை அணைத்து விட்டு கண்ணீருடன் திரும்பிய அன்பு மாஸ்டரிடம், அந்த மூத்த தலைவர் சொன்னார் ..
"ராணி.... அவன் ஒரு மாவீரன் தான்..."
(தொடரும்)
பாகம் இருபது இங்கே அழுத்துங்கள்