இப்படியான ஒரு நிலை ஏற்பட்டால் எதிர்ப்புறமாக வாகனம் ஏதும் வரவில்லை என்பதை உறுதி செய்தபின், அத்துடன் பாதுகாப்பாக முந்தி மீண்டும் பாதுகாப்பாக உங்கள் ஒழுங்கையினுள் வர முடியும் என்று நீங்கள் உறுதியாக கருதும் போது அப்படி செய்யலாம்.
முறிவு இல்லாத திடமான கோடு உள்ள நிலையிலும் HTA அங்கு ஒழுங்கை மாற்றம் செய்வது பாதுகாப்பு இல்லை என்றுதான் கூறுகின்றது. முறிவு இல்லாத கோடு உள்ள ஒற்றை தெருவில் ஒழுங்கை மாற்றம் செய்யும் போது நீங்கள் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்குகின்றீர்கள்.
பொதுவாக கூறுவதானால் இப்படியான சூழ்நிலையில் இது சட்டவிரோதமான செயற்பாடு என்றோ அல்லது இவ்வாறு செய்தால் காவல்துறை உங்கள் மீது குற்றம் சுமத்தலாம் என்றோ இல்லை. ஆனால், உங்கள் பாதுகாப்பே இங்கு கவனிக்கப்பட வேண்டும் என்பது முக்கியம்.
அவதானத்துடன் மாற்றம் செய்து பழைய நிலைக்கு திரும்புங்கள்.