'ஈழத்து' என்பது 'சகாறா' என்பதுடன் ஒட்டவில்லை. இரண்டு சொற்களும் ஒன்றை ஒன்று முழுசிப்பார்ப்பதுபோல் எனக்குத்தெரிகின்றது.
டங்குவார் கூறியதுபோல் (அல்லது சற்று மரியாதையுடன்... இசைக்கலைஞன் கூறியதுபோல்) அடைமொழிகளை நீக்கிவிட்டு தனியாக சகாறா என்று மாற்றினால் இளமை பொங்கி வழியும், சும்மா அந்தமாதிரி யாழில் யெளவனத்துடன் வலம் வரலாம். கிழவியிலிருந்து குமரியாகிய பேறும் கிடைக்கும்.
மேலும்,
'ஈழத்து சகாறா' என்று கூறும்போது உயிர்காத்து வாழ்வு தரும் கனடா நாட்டை புறக்கணிப்பதாகவும் பார்க்கலாம். தவிர, ஈழம் என்பது தமிழ்ச்சொல் அல்ல, அது சிங்களமொழிச்சொல் என்றும் இங்கு யாழிலேயே எங்கோ வாசித்ததாக ஞாபகம். ஒரு சிங்களத்தியாக உங்களை மாற்றவேண்டும் என்று யாரோ திட்டம் தீட்டியுள்ளார்கள் போல் உள்ளது. இது சிறீ லங்கா புலனாய்வுத்துறையினதும் சிங்கள அரசினதும் சதியாகவும் இருக்கலாம். எனவே, பெயர் மாற்றம் செய்யமுன்னர் எச்சரிக்கை தேவை.
மற்றையது,
பெயர் பிரதேசவாதத்தை போதிக்கின்றது என்றால்.. யாழில் உள்ள ஏனைவர்கள் உதாரணமாக...
புங்கையூரான்
துன்னையூரான்
மல்லையூரான்
நுணாவிலான்
வல்வை லிங்கம்
இவர்கள் எல்லாம் தலையைக்கொண்டுபோய் எங்கே முட்டுவது?
எல்லாவற்றுக்கும் மேலாக 'யாழ்' எனும் சொல்லே பிரதேசவாதத்தை பறை சாற்றுகின்றது. இதற்கு என்ன செய்வது?