சசூரி பொறியியல் மாணவர்களின் போராட்ட துளிகள்
காலை மணி 7.30 மாணவர்கள் 5 பேர் கல்லூரி வாசலில் கூடினோம்
8.00 மணி எங்களோடு இணைந்தனர் இன்னும் 2 மாணவர்கள்
8.30 மணி 18 மாணவர்கள் ஆனோம்
8.35 மணி முதல் கல்லூரி பேருந்து வழி மறைக்கப்பட்டு மற்ற மாணவர் மாணவர்கள் ஆதரவு கோரப்பட்டது
9.00 மணி 9 கல்லூரி பேருந்துகள் மறிக்கப்பட்டு மாணவ மாணவிகள் அனைவரும் இறக்கப்பட்டனர்
9.30மணி கல்லூரியில் வகுப்புகளை புறக்கணித்து (கோவை-சக்தி)தேசிய நெடுஞ்சாலை நோக்கி புறப்பட்டோம்
9.50 மணி தேசிய நெடுஞ்சாலையின் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது. அப்போது மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 2000.
10.30 மணி போராட்டத்தை முன்னெடுத்தால் என் மீது வழக்கு பதிவு செய்வதாக போலீசாரால் மிரட்டப்படுகிறேன்.
11.00 மணி வரை தொடர்ந்தது சாலை மறியல்.
11.15 அன்னூரை நோக்கி பேரணி புறப்பட்டோம் (சுமார் 10 கீலோமீட்டர் மத்திய மற்றும் காங்கிரஸ் எதிரான முழக்கங்கள் மற்றும் தனிஈழ முழக்கத்துடன். மேலும் முழக்கங்கள் மலையாளம், இந்தி மற்றும் தெலுங்கு பேசும் மாணவர்களால் அவர்களின் மொழியில் ஒலித்தது.)
1.00 மணி அன்னூரில் மத்திய அரசின் அலுவலகமான தபால் நிலையம் முற்றுகையிடப்பட்டது, மேலும் ராஜபக்சே உருவப்படம் கொழுத்தப்பட்டது, மாணவர்கள் தபால் அலுவலகம் நுழைய முயன்ற போது போலீசாரால் தடுக்கப்பட்டனர்
1.20 மணி அளவில் B.S.N.L அலுவலகம் முற்றுகையிடப்பட்டு பூட்டு போடப்பட்டது.
எழுச்சியோடு காணப்பட்ட இப்போராட்டத்தில் மாணவர்களோடு பொதுமக்களும் கலந்து கொண்டனர். இறுதியில் 2000 த்திற்கும் மேற்பட்டோர் காணப்பட்டனர்.
போராட்டத்தின் அடுத்தகட்டத்தில் இருக்கிறோம்.
நாளை கோவையில் நடக்கும் அனைத்து கல்லூரி பேரணிக்கு மற்ற கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைப்பதால் முகநூலில் முழுதாய் இயங்க முடியவில்லை. எனவே நாளை புகைப்படங்களை பதிவிடுகிறேன்.
வெல்க மாணவர் போராட்டம்.
விரைவில் பெறுவோம் தனி தமிழ் ஈழம்.
Shoban Kalish
(முகநூல்)