சிவா அண்ணை ..!
எனக்கு நீங்கள் சொல்வதில் பூரணமாக உடன் பாடு இருக்கிறது... ஆனால் உள்ளுக்குள் பலரை போல் கேள்வியும் இன்னும் பதில் இல்லாமல் இருக்கிறது...
அதை அவர் திரும்பி வரும் போது அவரிடமே காரசாரமாக கேட்கலாம் எண்று இருந்தேன்... அதை பொதுவாக கேட்கிறேன் திரும்பி வந்து அவர் பதில் அளிக்கட்டும் ... அவரின் மீதான மரியாதையை நிலைத்து வைத்திருக்க எனக்கு இதற்கு பதில் வேண்டும்... !!!
கேள்வி 1
ஊர் அறிந்த அரசியல் செயற்பாட்டாளர், உலகறிந்த கவிஞர் எந்த பாதுகாப்பு முனேற்பாடும் இல்லாது ஏன் இலங்கை போனார்...??? இலங்கையில் இராணுவத்தால் நடந்த நடக்கும் கொடுமைகளை இந்த தமிழ் சர்வதேச ஊடகங்கள் சொன்னவைகளையும் அவர் நம்பவில்லையா...??
இதில் விடுதலை புலிகளின் முன் யோசனையும் தந்திரமும் போதாது எண்ற கவிஞருக்கு இப்படி என்பதை நம்பமுடியாமல் இருக்கிறமையை தவிர்க்க முடியவில்லை...
கேள்வி 2
கைது செய்த பின் கவிஞரின் பேட்டியை கேட்டேன்... தனது கைதை அவர் எதிர்பார்த்து இருந்து இருக்கவில்லை என்பது புலப்பட்டது... இப்போ கேள்வி என்ன எண்றால் புலிகளை விமர்ச்சித்து புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் போய் வந்த போது புலிகள் கொடுத்த அதே மரியாதையையும் முக்கியத்துவத்தையும் அரசாங்கம் தனக்கு தரும் எண்று எதிர்பார்த்தாரா...??