இந்தப் பெட்டியில் தமிழில் நேரடியாக எழுதும் வசதி எப்போதோ கடாசப்பட்டுவிட்டது. இப்போதெல்லாம் மேசைக் கணணி, மடிக்கணணியில் தமிழில் எழுதவேண்டுமென்றால் eKalapppai ஐ பாவிப்பது நல்லது. ஆனால் Windows 8.1 இல் shift key stick ஆவதால் ண், ள் எழுத்துக்கள் எழுதுவதில் பிரச்சினை உள்ளன. மற்றைய OSகளில் இந்தப் பிரச்சினை இல்லை.
https://code.google.com/p/ekalappai/downloads/list இல் போய் தரவிறக்கலாம் (Version 3.0.1).
ஐபாட் வைத்திருந்தால் நேரடியாகவே தமிழில் எழுத வழிகள் உள்ளன. Settings இல் போய் tamil keyboard ஐத் தெரிவு செய்தால் (Tamil99 அல்லது Anjal - தமிங்கிலம்) இலகுவாக எழுதலாம்.
Android Tablets இலும் நேரடியாக எழுதமுடியும் என்று நினைக்கின்றேன். ஆனால் எப்படி என்று பாவிப்பவர்கள்தான் சொல்லவேண்டும்.
இவை சரிவராவிட்டால், கூகிள் தமிழ் எழுதிகளில் வேறு இடத்தில் எழுதி வந்து ஒட்டலாம்.
உதாரணமாக சுரதா அண்ணாவின் தளம் இப்போதும் தமிழில் மாற்ற உதவுகின்றது.
http://www.suratha.com/unicode.htm