Sorry, there is a problem
Please wait 11 seconds before attempting another search
Error code: 1C205/3
ஒரு திரியை படித்துவிட்டு அடுத்த திரியை தேடினால் இப்படி செய்தி வருகிறது..இம்மாதிரி ஒவ்வொரு தேடலுக்கும் 13 sec, 9 sec, 1 sec என்ற பிழை செய்தி அடிக்கடி வருகிறது.
இதனால் களத்தில் மேற்கொண்டு படிக்கும் உற்சாகம் குறைகிறது!
முன்னிருந்த களத்தில் ஒவ்வொரு பகுதியையும் நமக்கு விரும்பியவாறு பார்வையிட, வடிகட்டும் முறை (Content Filters) இருந்தது.
உதாரணமாக, நான் களத்தில் பார்வையிட வரும்பொழுது விளையாட்டு செய்திகள், சமையல் குறிப்புகள், கவிதைகள் இன்னும் சில விருப்பமற்ற பகுதிகளை பார்வையிலிருந்து தவிர்க்க, விரும்பியவற்றை தெரிவு செய்து வடிகட்டியை(Filters) நிரந்தரமாக வைத்திருந்தேன்.. தற்பொழுது அதே வசதியை எப்படி இப்புதிய மாற்றத்திற்கு பின் மீளமைப்பது என்று விளக்கினால் நன்று !
களத்தின் தலைப்புகளை முழுவதும் நீட்ட,குறைக்க + sign (தற்பொழுது வலதுபுறம் தெரியும் Topics Column பகுதியை முற்றாக நீக்க) வசதியிருந்தது.. அவற்றையும் மீளமைத்தால் நன்று. (அவ்வாறு வசதி ஏற்படுத்துவதன் மூலம் களத்தின் மொத்த பக்கத்தின் உயரம்(Forum page height) வெகுவாக குறைவதால் மிக விரைவாக சுட்டி மூலம் மேலும் கீழும் ஓட்டி பார்க்க இயலும்.)
பல பக்கங்கள் கொண்ட திரியை திறக்கவிழைகையில், கடைசிப் பக்கத்திற்கு பதிலாக, அத்திரியின் முதல் பக்கத்திற்கே எம்மை கொண்டுசெல்கிறது..
மறைந்திருந்து பார்க்கும்(Anonymous log-in) உறுப்பினர்களின் பெயரை சிவப்பு கலரில் காண்பித்தால் நன்றாக இருக்குமே!முந்தைய களத்தில் அப்பெயருக்கு முன் ஒரு நட்சத்திரம்(*) இருக்கும். (தற்பொழுது மட்டுறுத்தினர்களின் பெயர் 'நீல வண்ணத்தில்' தெரிவது போல்)
களத்தின் நண்பகள் வட்டம் (Friends List) என்ற வசதியைக் காணவில்லை. (குறிப்பிட்ட நண்பருக்கு தனிமடல் அனுப்ப அந்த லிஸ்டில் சுட்டி மூலம் தெரிவுசெய்து செய்தி அனுப்ப முந்தைய களத்தில் வசதியாக இருந்தது.)
மொத்தத்தில் யாழ் வாசகர்களாகிய எங்களுக்கு, பழைய களத்தின் வசதிகள் அப்படியே இருக்கவேண்டும், அவற்றில் எதையும் இழக்காமல், இந்த மாற்றத்தால் மேலும் புதிய வசதிகள் இருந்தால் அனைவரும் மனமுவந்து வரவேற்போமென்பது திண்ணம்..!
அதுவரை நிச்சயம் பொறுமையாக காத்திருக்கிறோம் ஐயா.
தற்பொழுது பழைய அட்டவணை முறையில்(List View) யாழை மீண்டும் மாற்றியமைக்கு மிக்க நன்றி.
களத்தை புதிய சவாலுக்கிடையே பொறுமை காத்து, திறம்பட நடத்துவது பெரிய விடயம்.. யாழும், அதன் நிர்வாகமும் இவ்விடயத்தில் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள்..
பொறுமையாக எங்கள் ஆதங்கத்தை கேட்டதற்கு மிக்க நன்றி!