30வது ஆண்டில், சுதுமலை பிரகடனம். (04.08.1987 - 04.08.2017)
“எனது பேரன்பிற்குரிய மக்களே! இந்தியா எடுத்துக்கொண்ட முயற்சிக்கு ஒத்துழைப்பினை வழங்குவதை தவிர வேறு வழியில்லை. இந்த வாய்ப்பினை அவர்களுக்கு வழங்குகிறோம். எனினும் இந்த ஒப்பந்தத்தின்மூலம் தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு கிட்டுமென்று நான் நம்பவில்லை. சிங்களப் பேரினவாத வேதாளம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கி ஏப்பமிடும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு தனித் தமிழீழம் அமைவதிலேயே தங்கியுள்ளது என்பது எனது மாறுபடாத நம்பிக்கையாகும். இடைக்கால அரசை ஏற்றுக்கொள்ள தேர்தல் ஒன்றில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமக்கு ஏற்படலாம். அதேவேளை, எந்த சந்தர்ப்பத்திலும் நான் தேர்தல் ஒன்றில் போட்டியிடவோ, அல்லது முதல் மந்திரி பதவியை ஏற்றுக்கொள்ளவோ மாட்டேன் என்பதை உறுதியாக உங்களிடம் கூறிகொள்ள விரும்புகிறேன்.”
- தேசியத் தலைவர் வே. பிரபாகரன்.-