Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    88054
    Posts
  2. போல்

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    5
    Points
    6134
    Posts
  3. Athavan CH

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    5
    Points
    11326
    Posts
  4. தமிழரசு

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    33749
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/06/17 in all areas

  1. இஸ்லாமிய முறைப்படி... கடவுள் தாற பிள்ளையை, வேண்டாம் என்று கருவை கலைப்பது, பெரிய குற்றம். அப்படி செய்பவர்களை... உறவினர்களே, வெறுத்து ஒதுக்கி வைத்து விடுவார்கள். இங்கு என்னுடன் வேலை செய்த துருக்கியர் ஒருவருக்கு... 32 வயது இருக்கும் போது.... அவருக்கு ஒரு, தம்பி பாப்பா பிறந்து விட்டது என்று சொல்லி கோப்பி வாங்கித் தந்தார். இன்னொருவரின் மனைவிக்கு கரு உருவாகிய சமயம், வைத்தியரிடம் சென்று காட்டிய போது.... ஐந்து குழந்தைகள் உருவாகி இருப்பதாகவும்... அதில் மூன்று மட்டுமே... ஆரோக்கியமாக உள்ளதால், இரண்டை கலைத்து விட வேண்டும் என்று கூறிய போது... சம்பந்தப் பட் ட குடும்பத்தினர் அதனை ஓரளவு ஏற்றுக் கொண்டாலும்... மதத் தலைவரும், உறவினர்களும் மறுத்து விட்டார்கள். பின் பல ஜேர்மன் சமூக ஆர்வலர்கள்.. பல சுற்று பேச்சு வார்த்தையின் பின் தான் அவர்களை சம்மதிக்க வைக்க முடிந்தது. மதம் இப்படியான கட்டுப்பாடுகளை விதிக்கும் போது... அப்பாவியான இவர்கள் அதை மீறி வருவது சிரமம் தானே...
  2. கீழடி... சூழ்ச்சிக்கு இரையாகும் வரலாறு! கீழடி அகழாய்வின் மூன்றாம் கட்டம் செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவதாகக் கூறி, இந்த ஆண்டு ஆய்வைப் பற்றிய அறிக்கையை அகழாய்வுப் பொறுப்பாளர் ஸ்ரீராமன் வெளியிட்டார். மூன்றாம் கட்ட அகழாய்வு என்பது தமிழ்ச் சமூகம் போராடிப் பெற்றது. கீழடி அகழாய்வைத் தொடர அவர்களுக்கு விருப்பமில்லை. எனவே, மூன்றாம் ஆண்டுக்கான அனுமதியைத் திட்டவட்டமாக மறுத்தார்கள். நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தொடர்ச்சியாகக் கேள்விகள் எழுப்பப்பட்டபோது, இரண்டு ஆண்டுகள் நடந்த அகழாய்வைப்பற்றி அதன் பொறுப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கை தரவில்லை என்று ஒரு காரணத்தைச் சொன்னார்கள். கீழடியோடு அகழாய்வுத் தொடங்கப்பட்ட இடம் குஜராத் - வாட்நகர் (மோடியின் சொந்த ஊர்). அதே போல, ராஜஸ்தானில் உள்ள பிஞ்ஜூர். இந்த இரண்டு இடங்களிலும் 2017-ம் ஆண்டு அகழாய்வு செய்வதற்கான உத்தரவை மத்திய தொல்லியல் துறை, 2016 டிசம்பர் மாதமே வழங்கிவிட்டது. ‘கீழடிக்கு அனுமதி வழங்காமல் இந்த இரு இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது எவ்வாறு? அனுமதியை மறுப்பதற்கு விதவிதமான காரணங்களைக் கண்டுபிடித்தனர். அதையும்மீறி கடின உழைப்பைச் செலுத்தி அமர்நாத் ராமகிருஷ்ணன் குழுவினர் இடைக்கால அறிக்கையை வழங்கினார்கள். அதன்பிறகும் அனுமதி தர மனம் வரவில்லை. தொடர்ந்து எழுப்பப்பட்ட எதிர்ப்புக் குரல்களால் வேறுவழியின்றி பிப்ரவரி 20-ம் தேதி இந்த ஆண்டுக்கான அனுமதியை வழங்கினர். ஆனால், நிதி எதுவும் வழங்கவில்லை. மார்ச் 17-ம் தேதி நிதியை வழங்கிவிட்டு மார்ச் 24-ம் தேதி அமர்நாத் ராமகிருஷ்ணனை அசாம் மாநிலத்துக்கு இடமாற்றம் செய்தனர். ஆய்வுக்கான புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஸ்ரீராமன் , ஏப்ரல் 24-ம் தேதி பொறுப்பேற்று, ஆய்வைத் தொடங்கி, இப்போது முடித்துவிட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் பலரும் சந்தேகப்பட்டது போலவே, கீழடி அகழாய்வை முடக்குவதற்கான அடித்தளமிடும் வேலையை அந்த அறிக்கை செய்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, 2,500 சதுர மீட்டர் பரப்பளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு வெறும் 400 சதுர மீட்டர் பரப்பளவே ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளும், 102 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டன. இந்த ஆண்டு தோண்டப்பட்டதோ, வெறும் எட்டுக் குழிகள் மட்டும்தான். அந்த எட்டுக்குழிகளில் ஒன்றுகூட இயற்கை மண்படிவம் (Virgin soil) வரை தோண்டப்படவில்லை. அதாவது, ஒரு குழியைக்கூட முழுமையாகத் தோண்டவில்லை. கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட தொழிற்கூடம் போன்ற பகுதியின் கட்டட அமைப்புகளின் தொடர்ச்சி தென் திசையில் நிலத்துக்குள் அமைந்திருந்தது. அதன் தொடர் கட்டட அமைப்பைக் கண்டறிய வேண்டுமென்றால், தென் திசையில் அகழாய்வுக் குழியை அமைத்திருக்க வேண்டும். ஆனால், தென் திசையில் ஒரு குழிகூட அமைக்காமல், நேர் எதிராக வட திசையில் மட்டுமே எட்டுக் குழிகளையும் தோண்டியுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளும் கீழடி தொல்லியல் மேட்டின் வெவ்வேறு இடங்களாகத் தேர்வுசெய்து மொத்தம் ஒன்பது இடங்களில் அகழாய்வுக் குழிகளை அமைத்தனர். காரணம், ஓர் இடத்தில் தடயங்கள் கிடைக்காவிட்டாலும், இன்னோர் இடத்தில் கிடைக்கும் என்பதால். இந்த ஆண்டு, ஒரே ஓர் இடத்தில் மட்டுமே எட்டுக் குழிகளையும் தோண்டியுள்ளனர். இவற்றைப் படிக்கிற ஒருவரால், இதில் நடந்துவரும் சூழ்ச்சியை எளிதில் புரிந்துகொள்ளமுடியும். ‘இவ்வளவுக் குறைவான பகுதியில் மட்டுமே அகழாய்வுப் பணியைச் செய்துள்ளீர்களே, ஏன்?’ எனக் கேட்டதற்கு, மழையைக் காரணம் சொல்கிறார் ஸ்ரீராமன். அமர்நாத் ராமகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்ட இரண்டு ஆண்டுகளும் கீழடியில் மழையே பெய்யவில்லையா? அல்லது, இந்த ஆண்டு இடைவிடாமல் கீழடியில் தொடர் மழை பெய்ததா? ‘முதல் ஆண்டு (2015), அகழாய்வுப் பணியை மூன்று மாத கால தாமதத்துடன்தான் அமர்நாத் ராமகிருஷ்ணனால் தொடங்க முடிந்தது. அப்படியிருந்தும், அவரால் 43 அகழாய்வுக் குழிகளை அமைக்க முடிந்தது. ஆனால், இந்த ஆண்டு வெறும் எட்டுக் குழிகளை மட்டுமே தோண்டியதற்கு என்ன காரணம்?’ என்ற ஊடகங்களின் கேள்விக்கு, “இங்கு நடப்பது PWD வேலையல்ல” என்று பதிலளிக்கிறார் ஸ்ரீராமன். உண்மை என்னவென்றால், கடந்த இரண்டு ஆண்டுகளும் அகழாய்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளிகளின் எண்ணிக்கை நாளொன்றுக்குச் சராசரியாக 80-க்கும் மேல் இருந்தது. இந்த ஆண்டு சராசரியின் அளவு 20 கூட இல்லை. இந்த ஆண்டு கண்டறியப்பட்டதில், 1800-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கிடைத்துள்ளன. அவற்றில், 90 விழுக்காடு கண்ணாடியால் செய்யப்பட்டவை என்று கூறும் அறிக்கை, இந்த இடத்தில் கட்டடங்கள் தொடர்ச்சியாகவோ, பரவலாகவோ கட்டப்பெறவில்லை” என்று கூறுகிறது. கீழடியின் சிறப்புமிக்க பங்களிப்பே அங்கு கிடைத்துள்ள கட்டுமானங்கள்தான். சங்ககாலத்தில் இருந்த ஒரு நகர அமைப்பு, முழுமையான கட்டட வடிவத்தில் இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை. மிகவிரிந்த அளவு கட்டட அமைப்புகள் முதல்முறையாக கீழடியில்தான் நமக்குக் கிடைத்துள்ளது. முதலாண்டு ஆய்வில் கிடைத்தவைகளெல்லாம், குடியிருப்புப் பகுதிகளாக இருந்தன. இரண்டாமாண்டு ஆய்வில், பெரும் தொழிற்கூடம் கண்டறியப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு அதன் தொடர்ச்சியாக எந்தக் கட்டடப் பகுதியும் கிடைக்கவில்லை என்ற முடிவை நோக்கியே இந்த ஆய்வின் போக்கு, திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளது என்பதை மேற்கூறிய விஷயங்கள் மூலம் உணரமுடிகிறது. “இந்த ஆண்டு சேகரிக்கப்பட்ட கரித்துகள் மாதிரிகள், கரிமப் பகுப்பாய்வுக்கு உள்படுத்தப்பட்டு காலநிர்ணயம் செய்யப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதான், அவர்கள் நினைத்ததை நடத்தப்போகும் இடம். கடந்த ஆண்டு அமர்நாத் ராமகிருஷ்ணன் குழு இருபது கரித்துகள் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப அனுமதி கேட்டது. ஆனால் மத்திய அரசோ, ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே ஒதுக்கி இரு மாதிரிகளை மட்டுமே ஆய்வுக்கு அனுப்பியது. ஆய்வு செய்யப்பட்ட இரு கரித்துகள் மாதிரிகளின் காலம் கி.மு 200 மற்றும் கி.மு 195 என்ற முடிவு வெளியானது. கடந்த ஆண்டு, நாலரை மீட்டர் தோண்டப்பட்ட அகழாய்வுக் குழியின் நடுப்பகுதியில், அதாவது இரண்டாவது மீட்டரில் சேகரிக்கப்பட்ட கரித்துகள் மாதிரிகள்தான் அவை இரண்டும். அதற்குக் கீழே இரண்டரை மீட்டர் ஆழத்தில் சேகரிக்கப்பட்ட கரித்துகள் எல்லாம் இன்னும் ஆய்வுக்கு அனுப்பப்படாமலே வைக்கப்பட்டுள்ளன. அவைகள் அனுப்பப்பட்டால் கீழடியின் காலநிர்ணயம் இன்னும் பின்னோக்கிப்போகும் என்பது யாவரும் அறிந்ததே. அவற்றை அனுப்பாமல் வைத்துள்ளனர். இந்த நிலையில் ஸ்ரீராமன் , “இந்த ஆண்டு சேகரிக்கப்பட்ட கரித்துகளைக் கரிமப் பகுப்பாய்வுக்கு அனுப்பி காலநிர்ணயம் செய்யப்படும்” என்று அறிவித்துள்ளார். ஒரு குழிகூட இயற்கை மண்படிவம் (Virgin soil) வரை தோண்டப்படவில்லை. அப்படியிருக்க, இவர் எடுத்துள்ள கரித்துகள் மாதிரிகள் மேல்நிலை யிலிருந்து எடுக்கப் பட்டவைகளாகத்தான் இருக்கும். அவை, காலநிர்ணய ஆய்வுக்கு அனுப்பப்பட்டால் மிகவும் முன்தள்ளப்பட்ட காலத்தையே குறிக்கும். அதாவது, கீழடியின் காலத்தை முன்தள்ளிக் கொண்டுவருவதற்கான ஏற்பாடாகவே இது இருக்கும். எனவே, அமர்நாத் ராமகிருஷ்ணன் குழு சேகரித்த பதினெட்டு கரிமத் துகள்களைக் கரிமப் பகுப்பாய்வுக்கு அனுப்பிய பிறகுதான், இந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கரிமத்துகள்களை ஆய்வுக்கு அனுப்ப வேண்டும். இல்லையென்றால், ஸ்ரீராமனால் ஆயிரம் ஆண்டுகளை எளிதில் விழுங்க முடியும். இங்கு நடப்பது PWD வேலையாக இருக்குமேயானால், இதில் நிகழும் ஊழலையும் மோசடியையும் வெளிப்படையாக அறியலாம். ஆனால், அகழாய்வுப் பணியல்லவா...மோசடிகளும் சூழ்ச்சிகளும் மிகமிக நுட்பமானவை. அதே நேரத்தில், வரலாற்றின் திசைவழியையே மாற்றக்கூடிய அளவுக்கு ஆபத்தானவை. சிந்துவெளியில் கண்டறியப்பட்ட திமிலுடைய காளையைக் குதிரையென்றும், அங்கு யாககுண்டங்கள் கிடைத்துள்ளது என்றும் சிலர் கூறிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். சுமார் நூறு ஆண்டுகள் சர்வதேச சமூகம் உற்றுநோக்கும் சிந்துவெளி ஆய்வையே தலைகீழாக மாற்றும் முயற்சிகள் நடக்கும்போது, வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே நிகழ்த்தப்பட்டுள்ள கீழடி ஆய்வை விழுங்கி ஏப்பம்விட இவர்களால் முடியும், தமிழ்ச்சமூகம் விழிப்பு உணர்வற்று இருந்தால். படங்கள்: ஈ.ஜெ. நந்தகுமார், வீ.சதீஷ்குமார் http://www.vikatan.com/juniorvikatan/2017-oct-08/investigation/135117-su-venkatesan-discuss-about-keeladi-excavation.html
  3. ஆங்கிலத்தில் பெண் எனவும் தமிழில் ஆண் எனவும் பொது மலசல கூடத்தில் எழுதியுள்ளார்கள் சிங்களத்தில் என்ன எழுதியிருக்கின்றது என்பதை சிங்களம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.