'IMAX' என்றால் என்ன?
சினிமாஸ் கோப்பில் திரைப் படங்களை பார்ப்பவர்கள் 70 எம்.எம் தியேட்டரில் படம் பார்க்கும்போது மிரண்டு போவார்கள்.
ஆனால், 70 எம்.எம்மில் படம் பார்த்தவர்களே ஐமேக்ஸ் திரையரங்கில் படம் பார்க்கும்போது பிரமாண்டத்தின் உச்சிக்கே சென்றுவிடுவார்கள்.
அப்படிப்பட்டதொரு பிரமிப்பை தரும் ஐமேக்ஸ் திரையரங்கம் (IMAX Theatre) இப்போது சென்னைக்கு வந்திருக்கிறது. இந்த ஐமேக்ஸ் தியேட்டரில் அப்படி என்ன விசேஷம்?
Image Maximum என்பதன் சுருக்கமே ஐமேக்ஸ். இது கனடாவைச் சேர்ந்த நிறுவனம். இது வரை உலகில் 66 நாடுகளில் மொத்தம் 1008 ஐமேக்ஸ் தியேட்டர்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன.
இந்த 'ஐமேக்ஸ்' தொழில்நுட்பம் ஏற்கனவே இந்தியாவின் பல பெரிய நகரங்களில் அறிமுகமாகி விட்டன. ஹைதராபாத்துக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது இந்த ஐமேக்ஸ்.
சென்னையில் 'ஐமேக்ஸ்'!
சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் இந்த ஐமேக்ஸ் தியேட்டர் திறக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு டிக்கெட் விலை 360 ரூபாய். ஆன்லைனில் முன்பதிவு கட்டணம் 30 ரூபாய்.
சென்னை வடபழனியிலுள்ள ஃபோரம் மாலிலும் தற்பொழுது ஐமேக்ஸ் திரையரங்கம் செயல்பட துவங்கியுள்ளது
டிக்கெட் கட்டணம் அதிகம் என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை. மும்பையில் உள்ள ஐமேக்ஸ் தியேட்டரில் 480 மற்றும் 680 ரூபாயும், பெங்களூரில் 680 ரூபாயும் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இதுவே வெளிநாட்டில் உள்ள ஐமேக்ஸ் தியேட்டரில் ஆயிரம் ரூபாய்க்கு மேல்தான் கட்டணமாக உள்ளது.
என்ன தான் இருக்கு?
ஐமேக்ஸ் தியேட்டர்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப வசதிகள் மற்ற சாதாரண திரையரங்குகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கும்.
ஐமேக்ஸ் தியேட்டரில் மிக துல்லியமான படத்தை வழங்கும் வகையில் சிறந்த லென்ஸ்கள் பயன்படுத்தப்படும். இது சாதரண கருவியை விட துல்லியமான மற்றும் பெரிதான படத்தினை வழங்கும்.
ரசிகர்கள் அமரும் சீட்டுக்களில் எந்தப்பக்கம் உட்கார்ந்து பார்த்தாலும் படம் ஒரே மாதிரியாகத் தோன்றும் வண்ணத் திரைகள் அமைக்கப்பட்டிருக்கும். சவுண்டு சிஸ்டமும் துல்லியமாக ரசிகர்களுக்குக் கேட்கும்.
ஐமேக்ஸில் 3D படம்!
வழக்கமான திரையைவிட பல மடங்கு பெரிய திரையில் துல்லியமான ஒலி, ஒளியில் திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை அதுவும் பிரமாண்டமாக இருக்கும்.
அதுவும் குறிப்பாக அகன்ற திரை கொண்ட இந்த ஐமேக்ஸ் தியேட்டர்களில் 3D படம் வித்தியாசமான அனுபவத்தை பெறுவார்கள்.
ஐமேக்ஸ் தியேட்டர் அனுபவத்தை நேரடியாக அனுபவிக்க வேண்டுமெனில், ஒரு முறையாவது அந்த திரையரங்குக்கு போய்வருவதை தவிர வேறு வழியில்லை.
இதந்தி