Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    12
    Points
    46808
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    33600
    Posts
  3. புரட்சிகர தமிழ்தேசியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    16477
    Posts
  4. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    8910
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/18/21 in Posts

  1. சமையல் திலகங்களுக்கு உபயோகமான சில கருவிகள் மற்றும் தகவல்கள்....! 😂
  2. யாழ்ப்பாணத்தின் ஒரேயொரு ஆறு வழுக்கையாறு. இது ஒரு சிறு ஆவணம். வேஸ்ட் அல்ல பெஸ்ட்.....! 🤔
  3. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 4, ஆடி, 2007 இரு துணைப்படைக் கூலிக் குழுக்களிடையே மோதல் - கொம்மாதுறை ராணுவ முகாமில் சம்பவம் கடந்த புதனன்று, மட்டக்களப்பு செங்கலடிப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் கொம்மாதுறை ராணுவ முகாமில் இருந்து இயங்கிவரும் துணைப்படைக் கூலிக் குழுக்களான கருணா குழுவினருக்கும் ஈ பீ டி பி யினருக்கும் இடையே நடந்த சண்டையில் ஒரு கருணா துணைப்படை உறுப்பினர் கொல்லப்பட்டதோடு இரு ஈ பி டி பி துணைப்படையுறுப்பினர்கள் காயமடைந்திருக்கின்றனர். இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் இயங்கும் ஒரே துணைப்படைக் கூலிக் குழுவான ஈ பி டி பியினருக்கு எதிரான ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளில் கருணா துணைப்படைக் கூலிகள் கொம்மாதுறை முகாமினுள் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த இரு மாதங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா துணைப்படைக் கூலிகள் ஈ பி டி பியினரின் செயற்பாடுகளுக்கு தடங்கலாக இருந்து வருகின்றனர். சம்பவ தினம் கொம்மாதுறை முகாமில் ஈ பி டி பியினர் தங்கியிருக்கும் பகுதிக்குள் நுழைந்த 5 கருணா துணைப்படைக் கூலிகள் கிர்னேட்டுக்கள் கொண்டும், தானியங்கித் துப்பாக்கிகள் கொண்டும் உள்ளிருந்தவர்கள் மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். தாக்குதலில் சிவஞானம் சுதாகரன் மற்றும் கோவிந்தன் விஷ்ணு ஆகிய ஈ பீ டி பி துணைப்படையினர் காயமடைந்தனர். இவ்விரு துணைப்படையினருக்கும் பாதுகாப்பு வழங்கிவரும் இலங்கை ராணுவம், சண்டையினை முடிவிற்குக் கொண்டுவர தாக்குதலாளிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யவே கருணா துணைப்படைக் கூலியொருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அத்துடன் சண்டை முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதுடன், காயப்பட்டவர்களை இராணுவம் வைத்தியசாலைக்குக் கொண்டுசென்றது. மட்டக்களப்பு வாழைச்சேனை நகர்களுக்கிடையே அமைந்திருக்கும் ராணுவ முகாம்களில் கொம்மாதுறை ராணுவமுகாமே மிகவும் பெரியது என்பதுடன், இம்முகாமின் இருவேறு பகுதிகளில் இவ்விரு துணைப்படைக் கூலிக்குழுக்களும் இலங்கை ராணுவத்தால் பராமரிக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது. மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து புலிகள் தமது தளங்களை வன்னிக்கு நகர்த்தியிருக்கும் வேளையில், அரசு மட்டக்களப்பில் தேர்தல்களை நடத்த திட்டமிட்டு வரும் பின்னணியிலேயே தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் தொடர்பாக இக்குழுக்களுக்கிடையேயான மோதல் வெடித்துள்ளது. கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ்களை கருணா துணைப்படைக் கூலிகள் கிழக்கில் தடைசெய்துள்ள நிலையில், கருணா குழுவும் ஈ பி டி பி யினரும் தமது சொந்தப் பிரச்சாரப் பத்திரிக்கைகளை இப்பகுதிகளில் ஏட்டிக்குப் போட்டியாக விநியோகித்து வருவது நடக்கிறது.
  4. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 1, ஆனி, 2007 இரு துணைப்படைக் கூலி குழுக்களிடையே மோதல் - அறுவர் பலி அம்பாறை மாவட்டத்தில் முச்சக்கர வண்டிகளில் பயணம் செய்துகொண்டிருந்த துணைப்படைக் கூலிகள் மீது போட்டித் துணைப்படைக் கூலிகள் மறைந்திருந்து நடத்திய தாக்குதலில் அறுவர் கொல்லப்பட்டிருப்பதாகச் செய்தி வந்திருக்கிறது. அம்பாறையிலிருந்து பொத்துவில் நோக்கி இரு முச்சக்கரவண்டிகளில் பயணம் செய்துகொண்டிருந்த கருணா துணைப்படைக் கூலிகள் மீது இன்ஸ்பெக்டர் ஏற்றம் பகுதியில் வைத்து போட்டித் துணைப்படைக் குழுவான பிள்ளையான் குழு மறைந்திருந்து தாக்கியதில் ஆறு கருணா துணைப்படைக் கூலிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அண்மைய நாட்களில் கருணா பிள்ளையான் ஆகிய துணைப்படைக் கூலிகளின் தலைவர்களுக்கிடையே நடந்துவரும் மோதலினையடுத்து, பொலொன்னறுவை மாவட்டத்தில் பிள்ளையான் எனும் ராணுவப் புலநாய்வுத்துறையால் வழிநடத்தப்படும் கூலியின் குழுவினரில் 8 பேரை கருணா துணைப்படைக் கூலிகள் கடத்திச் சென்று கொன்றிருந்தனர். இதற்குப் பழிவாங்கும் முகமாகவே கருணா துணைப்படைக் கூலிகள் மீது பிள்ளையானின் அடியாட்கள் இத்தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரியவருகிறது. கொல்லப்பட்ட தமது சகாக்களில் மூவரின் உடல்களைத் தூக்கிக் கொண்டு தப்பியோடிய கருணா துணைப்படைக் கூலிகள் ஏனைய மூவரையும் விட்டுவிட்டுச் சென்றதாகவும், பின்னர் பொலிஸார் அந்த மூவரின் உடல்களை கோமாரி வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த 3 கருணா துணைப்படைக் கூலிகள் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
  5. நாய்க்கும் தாய்ப்பாசம் உண்டு.......! 😍
  6. நான் பேச வந்தேன் சொல்லத்தான் வார்த்தை இல்லை. ஸ்ரீ பிரியா சொக்க வைக்கும் பேரழகு......! 💞
  7. வயசு '40' தாண்டிடுச்சு... எப்போ தான் 'retire' ஆகப் போறீங்க??..." 'யூனிவர்சல் பாஸ்' சொன்ன அசத்தல் 'பதில்'!! வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெயில், கடந்த 1999 ஆம் ஆண்டு, இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அறிமுகமாகி 22 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். 41 வயதாகும் கிறிஸ் கெயில், மைதானத்தில் பறக்க விடும் சிக்ஸர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இத்தனை வயதிலும் உலகளவில் நடக்கும் ஐபிஎல் உட்பட பல டி 20 தொடர்களில் சிக்ஸர் வாணவேடிக்கை நடத்தி வருகிறார். இவருக்கு 'யூனிவர்சல் பாஸ்' என்ற பட்டப்பெயரும் உள்ளது. வயது நாற்பதைத் தாண்டியும் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் கிறிஸ் கெயில், தனது ஓய்வு குறித்து மனம்திறந்து பேசியுள்ளார். 'என்னால் இன்னும் ஐந்து ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட முடியும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனால், நான் 45 வயது வரை கிரிக்கெட்டில் இருந்து விலக வாய்ப்பில்லை. அதே போல, இன்னும் இரண்டு உலக கோப்பை போட்டியில் விளையாடிய பின்னரே ஓய்வு குறித்து ஆலோசிப்பேன்' என கெயில் தெரிவித்துள்ளார். இந்தாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி 20 உலக கோப்பை மற்றும் அடுத்தாண்டு ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெறவுள்ள டி 20 உலக கோப்பையை மனதில் வைத்து தான் கெயில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார் என தெரிகிறது. https://m.behindwoods.com/ta/news-shots-tamil-news/sports/chris-gayle-opens-up-about-his-retirement-from-intl-cricket.html டிஸ்கி அவர் மட்டும் 45வயது வரை விளையாடி விட்டால் அனைத்து போர்டு / வீரர்களுக்கும் சிறந்த முன்னுதாரணமாக இருப்பார் தோழர்..👍
  8. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 18, சித்திரை 2007 கருணாவைப் பற்றி எழுதுவதை நிறுத்துங்கள் - மிரர் பத்திரிக்கைக்கு கோத்தாபய எச்சரிக்கை கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கிலமூல பத்திரிக்கையான மிரருக்கு விடுத்த எச்சரிக்கையில், பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச கருணாவின் நடவடிக்கைகள்பற்றி அப்பத்திரிக்கை தொடர்ந்து எழுதிவருவதால் கருணா குழுவினர் மிகுந்த கோபத்துடன் இருப்பதாகக் கூறியுள்ளதுடன், கருணாவுக்கெதிரான செய்திகளைத் தொடர்ந்து பிரசுரித்தால் கருணா உங்கள்மீது தனிப்பட்ட ரீதியில் தாக்குதல் நடத்தலாம், அப்போது அரசின் பாதுகாப்பு உங்களுக்குக் கிடைக்காது என்று பத்திரிக்கையின் ஆசிரியர் சம்பிக்கா லியனாராச்சியிடம் தொலைபேசியில் பேசும்போது மிரட்டியுள்ளதாகத் தெரியவருகிறது. "கருணா துணைப்படை பொத்துவில் பகுதியில் அராஜகம் புரிந்துவருகின்றனர்" என்று அப்பத்திரிக்கை வெளியிட்ட கட்டுரையில் முஸ்லீம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட இப்பகுதியில் கருணா துணைப்படையினர் முஸ்லீம்கள்மீது தாக்குதல் நடத்துவதாகவும், அவர்களுக்கு இடைஞ்சலாக அப்பகுதியில் ஆயுதங்களுடன் ரோந்துபுரிவதாகவும், ராணுவமும் பொலிஸாரும் இதற்கு உடந்தையாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இக்கட்டுரை பற்றி அப்பத்திரிக்கை ஆசிரியருடன் பேசியபோதே கோத்தாபய, கருணா இப்பத்திரிக்கைமேல் ஆத்திரத்துடன் இருப்பதாகத் தெரிவித்ததோடு, அரசாங்கம்பற்றிய விமர்சனங்களை அப்பத்திரிக்கை தவிர்க்கவேண்டும் என்று எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் கோத்தாபய பேசுகையில், கருணா குழுவினரால லியனராச்சி மீது தாக்குதல் நடத்தப்படும் பட்சத்தில் அரசாங்கத்தால் செய்யக்கூடியது எதுவுமில்லை என்று கூறியதாகவும் தெரிகிறது. இதே பத்திரிக்கையில் வந்த "மூதூரில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் : ஒரு தனி மனிதால் ஏற்படுத்தப்பட்ட செயற்கை யுத்தச் சுனாமி" எனும் கட்டுரையினை எழுதிய உடித்த ஜயசிங்க பற்றிப் பேசிய கோத்தாபய, அந்த நிருபரைக் கடுமையாகச் சாடியதோடு, இக்கட்டுரை மூலம் அகதிகளாக்கப்பட்ட மக்களை ராணுவம் கொடுமைப்படுத்துகிறதெனும் விம்பத்தை ஏற்படுத்திவிட்டீர்கள்" என்று கடிந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் பாதுகாப்புச் செயலாளரின் இந்த பகிரங்க எச்சரிக்கை மூலம் நாட்டின் பத்திரிகைச் சுதந்திரத்திற்குக் கடுமையான அச்சுருத்தல் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக சுயாதீன பத்திரிக்கையாளர் அமைப்புத் தெரிவித்திருக்கிறது. யுத்தம் தொடர்பான செய்திகளுக்காக மிரர் பத்திரிக்கை தொடர்ச்சியாக அரச உயர் பீடத்தாலும், ராணுவத்தாலும் கடுமையான அழுத்தங்களுக்கு உட்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
  9. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 9, சித்திரை 2007 மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது தொகுதிகளுக்குச் சென்று மக்களுடன் பேசுவதைத் தடுத்த கருணா கருணாவிடமிருந்து விடுக்கப்பட்ட கொலை அச்சுருத்தலினையடுத்து கடந்த 6 மாத காலமாக தமது தொகுதிகளுக்குச் சென்று மக்களுடன் பேசமுடியாத நிலையில் தாம் இருப்பதாக இப்பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், மாவட்டத்தில் எடுக்கப்படவேண்டிய உடனடி அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த தீர்மானங்களை எடுப்பதும் இதனால் தடுக்கப்பட்டிருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். "அரசாங்கத்திடமிருந்து கருணாவுக்குக் கொடுக்கப்பட்டுவரும் ஆதரவினாலேயே பாராளுமன்ற உறுப்பினர்களின் உயிருக்கு அவரால் பகிரங்கமாக அச்சுருத்தல் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கின்றது" என்று ஜெயனந்தமூர்த்தி தெரிவித்தார். கருணா துணைப்படை மட்டக்களப்பில் அரச ராணுவத்தின் உதவியோடு பல முகாம்களை இயக்கிவருகிறது. ராணுவ முகாம்களுக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் இம்முகாம்களிலிருந்தே கடத்தல்கள், காணாமற்போதல்கள், பணப்பறிப்புக்கள், படுகொலைகள், சித்திரவதைகள் என்பவற்றினை கருணா குழு நடத்திவருவதாக அவர் மேலும் தெரிவித்தார். கருணாவினால் துன்புறுத்தப்படும் அப்பாவிகள் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கண்டு தமது முறைப்பாடுகளைத் தெரிவிப்பதை கருணா தடுத்துவருவதாகவும் அவர் கூறினார். "ராணுவ நடவடிக்கையினால் இடம்பெயர்ந்து முகாம்களில் அல்லற்படும் மக்களின் குறைகளைக் கேட்டறிந்து உதவும் நிலையில் நாம் இல்லை. அம்மக்களைச் சென்று பார்ப்பதையே கருணா தடுத்துவருகிறார்" என்றும் அவர் கூறினார். புலம்பெயர் நாடுகளில் சேர்க்கப்பட்ட பணத்தினை அல்லற்படும் மக்களுக்குச் செலவழிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்த முயற்சிகளைக் குழப்பிவரும் கருணா துணைப்படைக் கூலிகள், தனியார் நிறுவனங்கள் இப்பகுதியில் இயங்குவதையும், சேவைகளில் ஈடுபடுவதையும் கப்பம் கோரல்கள், கடத்தல்கள், கொலைப் பயமுருத்தல்கள் மூலம் இல்லாமல்ச் செய்துவருவதாக அப்பாராளுமன்ற உறுப்பினர் மேலும் கூறினார். தினசரி நாளேடுகளான வீரகேசரி , தினக்குரல் ஆகிய பத்திரிக்கைகளை யாழ்ப்பாணத்து மக்களின் பத்திரிக்கைகள் என்று மட்டக்கள்ப்பில் தடைசெய்திருக்கும் கருணா குழு, உண்மைச்செய்திகளை இருட்டடிப்புச் செய்துவருவதாகவும் கூறப்படுகிறது.
  10. ஆச்சரியம்....! 😁
  11. ஏ...குமுர்த கும்மா கொய்யாப்பழம் போலெ .....! 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.