Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    88848
    Posts
  2. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    8975
    Posts
  3. Ahasthiyan

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    2130
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    6
    Points
    46979
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/02/22 in Posts

  1. பிரபாகரன் தமிழ்த் தேசிய அரசியலினைப் பின் தொடர்ந்து பல தாசாப்த்தங்களாக ஆய்வுகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுவந்த மூத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான த. சபாரட்ணம் அவர்கள் எமது தேசியத் தலைவர் மேதகு வேலுபிள்ளை பிரபாகரன் அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தினை 2002 ஆம் ஆண்டிலிருந்து 2005 வரையான காலப்பகுதியில் சங்கம் இணையத்தளத்தில் எழுதிவந்தார். செய்திச் சேகரிப்பில் பல்லாண்டுகள் பயணித்த சபாரட்ணம் அவர்கள், இனச் சிக்கல் தோன்றியதற்கான மூலக் காரணங்கள் தொட்டு, போரினூடான காலம், இனச்சிக்கலின் பின்னால் இருந்தவர்கள், அவர்களின் செயற்பாடுகள் ஆகியவற்றினை ஒரு செய்தியாளன் எனும் நிலையில் இருந்துகொண்டு எழுதுகிறார். முதலாவதாக, இவரால் தொகுக்கப்படும் செய்திகளின் விபரங்கள் வேறு எந்த இணையத்திலோ அல்லது அச்சாகவோ இதுவரை வெளிவரவில்லை என்பதாலும், இவரால் சங்கம் இணையத்தில் தரவேற்றப்பட்ட இத்தொடரின் சில அத்தியாயங்கள் அழிந்துவிட்டதனாலும், இவரால் பதியப்பட்ட பல பிரச்சினைகள் இன்றுவரை அவ்வாறே உயிர்ப்புடன் இருப்பதாலும் இத்தொடரினை முழுமையாக மீள்பிரசுரம் செய்கிறோம் என்று சங்கம் இணையம் கூறுகிறது. திரு சபாரட்ணம் அவர்கள் நீண்டகால செய்தியாளராக கடமையாற்றியதால் தமிழர் சரித்திரத்தின் மிக முக்கியமானவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினை அவர் பெற்றிருந்தார் என்றும், ஒரு வரலாற்றாசிரியராக அவரால் எமது போராட்டம்பற்றியும், தேசியத் தலைவர் பற்றியும் இதுவரை எவரும் எழுதாதாத கோணத்திலிருந்து எழுத முடிந்ததாகவும் சங்கம் கூறுகிறது. மூன்று பாகங்களாக இத்தொடரினை எழுதிய சபாரட்ணம் அவர்கள் , பாகம் ஒன்றினை 1954 இலிருந்து 1983 வரையான காலப்பகுதியென்றும், பாகம் இரண்டினை 1983 இலிருந்து 1986 வரையான பகுதியென்றும், பாகம் மூன்றினை 1985 இற்குப் பிற்பட்ட காலத்திலிருந்தும் எழுதி வந்திருந்தார். ஆனால், 2010 இல் அவரது மறைவுடன் பாகம் 3 பதிவேற்றப்பட முடியாது போய்விட்டது. பாகம் மூன்று பதிவேற்றப்படாதுவிட்டாலும் கூட, பாகம் ஒன்று மற்றும் பாகம் இரண்டு ஆகியவற்றின் தொகுப்பினை யாழில் பதிவிடலாம் என்று நான் நினைக்கிறேன். எமது போராட்டச் சரித்திரம், தலைவர் மற்றும் போராளிகள் பற்றிய பதிவொன்று எம்மிடம் இருப்பது நண்மையானதே. இத்தொடர் தமிழில் மொழிபெயர்த்து எழுதப்படுவது தேவையானது என்று யாழ்க்கள நண்பர்கள் நினைக்குமிடத்து, இதனைத் தொடர்ந்து தமிழில் மொழிபெயர்த்து எழுத யோசிக்கிறேன். உங்களின் கருத்துக்களைச் செவிமடுக்க விரும்புகிறேன், ரஞ்சித் https://sangam.org/pirapaharan-volume-1-and-2-by-t-sabaratnam-reposted/
  2. உள்நாட்டிலும், இந்தியாவிலும் தனது இனவாத நடவடிக்கைகளுக்காக எழுந்துவந்த எதிர்ப்பினைச் சமாளிப்பதற்காக இருவேறு கைங்கரியங்களை டி எஸ் சேனநாயக்கா கைக்கொண்டிருந்தார். ஒருங்கிணைந்த தமிழ் எதிர்ப்பினைச் சிதைப்பதற்கு, தமிழர்களில் ஒரு பிரதான பிரிவினரை இன்னொரு சட்டத்தினை அறிமுகப்படுத்தியதன் மூலம் தன்பக்கம் இழுத்துக்கொண்டார். அதுதான் இந்திய - பாக்கிஸ்த்தான் பிரஜைகளுக்கான பிரஜாவுரிமைச் சட்டம். இலங்கைப் பிரஜாவுரிமையினைப் பெற்றுக்கொள்வதற்கான தகமைகள் குறித்து இச்சட்டம் விவரித்திருந்தது. ஜி ஜி பொன்னம்பலம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவராக இருந்த ஜி ஜி பொன்னம்பலம் அவர்களுக்கு தொழிற்துரை மற்றும் மீன்வள அமைச்சர் பதவி வழங்கப்பட்டதுடன் அவரும் அரசாங்கத்துடன் இணைந்துகொண்டார். அவருடன் சேர்ந்து இன்னும் 5 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசுடன் இணைந்துகொண்டனர். அரசுடன் இணைந்து புதிதாகக் கொண்டுவரப்பட்ட இந்திய - பாக்கிஸ்த்தானிய பிரஜைகளும், இலங்கையில் வதிபவர்களுக்குமான இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டத்திற்கு ஆதரவாக இவர்கள் வக்களித்ததோடு, இந்தியத் தமிழர்கள் இச்சட்டத்தின்மூலம் தாம் இழந்த பிரஜாவுரிமையினை மீளவும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் இவர்கள் வாதாடினர். ஆனால், புதிய சட்டம் மிகக் கடுமையான நிபந்தனைகளைத் தன்னகத்தே கொண்டிருந்தது. திருமணம் முடித்த ஒரு விண்ணப்பதாரி 1939 தை 1 ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியாக இலங்கையில் வசித்திருக்க வேண்டும் என்றும், திருமணம் ஆகாத விண்ணப்பதாரியொருவர் 1936, தை 1 ஆம் திகதியிலிருந்து 10 வருடங்கள் தொடர்ச்சியாக இலங்கையில் வசித்திருக்க வேண்டும் என்றும் இச்சட்டம் கூறியது. அதுமட்டுமல்லாமல், இலங்கையில் வசிப்பதற்கு இவர்கள் தேவையானளவு பணத்தையோ வளங்களையோ கொண்டிருத்தல் அவசியம் என்றும் இது கூறியது. தொடர்ச்சியாக இலங்கையில் வதிதல் எனும் சொற்பதத்தின் மூலம், தமிழ்நாட்டிற்கு மிகக் குறைந்த நாட்களுக்கு பயணம் செய்த இந்தியத் தமிழர்கள் இச்சட்டத்தின் மூலம் பிரஜாவுரிமையினை பெறமுடியாதவர்களாக ஆக்கப்பட்டனர். இச்சட்டத்தினையடுத்து மொத்த இந்தியத் தமிழச் சமூகமுமே, கிட்டத்தட்ட 975,000 தமிழர்கள் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்திருந்தனர். ஆனால், இவர்கள் அனைவரையும் இந்தியா மீள அழைத்துக்கொள்ள வேண்டும் என்று இலங்கை பிடிவாதம் பிடித்தது. ஆனால், இந்தியா இந்த வேண்டுகோளினை தொடர்ந்தும் உதாசீனம் செய்துகொண்டு வந்தது. பின்னர் இலங்கையின் பிரதமராக வந்த சிறிமா இந்தியாவின் பிரதமர்களான சாஸ்த்திரியுடன் 1964 இலும், இந்திரா காந்தியுடன் 1974 இலும் இரு வேறு ஒப்பந்தங்களைக் கைச்சாத்திட்டதன் மூலம் 525,000 இந்தியத் தமிழர்களை இந்தியா மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தார். மீதமாக இருந்தவர்களில் சுமார் 300,000 இந்தியத் தமிழர்களுக்கு வேண்டாவெறுப்பாக இலங்கை பிரஜாவுரிமையினை வழங்கியது. இரண்டாவது ஒப்பந்தத்தின்படி மீதமாகவிருந்த 150,000 தமிழர்களை சரிசமமாக இலங்கையும் இந்தியாவும் பொறுப்பெடுத்துக்கொள்ளும் முடிவிற்கு நாடுகளும் இணங்கிக்கொண்டன. இந்தியா சுமார் 600,000 இந்தியத் தமிழர்கள் மீளவும் இந்தியாவுக்குத் திரும்ப விண்ணப்பிக்க முடியும் என்று அழைத்தபோதும்கூட, 504,000 இந்தியத் தமிழர்கள் மட்டுமே இந்த அழைப்பினை ஏற்று மீள இந்தியா திரும்ப விண்ணப்பித்தனர். ஆனால், 1983 ஆண்டு யூலைக் கலவரத்தினால் இந்தியா திரும்பும் நோக்கத்துடன் இருந்த 84,000 தமிழர்கள் தொடர்ந்தும் இலங்கையிலேயே வாழவேண்டிய நிலை ஏற்பட்டது. இலங்கையில் பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்ள முடியாமலும், இந்தியாவுக்கு மீளத் திரும்ப முடியாமலும் இலங்கையில் வசித்துவந்த இந்தியத் தமிழர்களுக்கான பிரஜாவுரிமையினைப் பெற்றுக்கொடுப்பதில் தொண்டைமான் வெற்றிகண்டார். இது ஒரு மிக முக்கியமான நடவடிக்கை என்றால் அது மிகையில்லை. இதன்மூலம் பிரஜாவுரிமைப் பிரச்சினை முடிவிற்கு கொண்டுவரப்பட்டதோடு, இந்தியத் தமிழர்களில் கிட்டத்தட்ட பாதியளவுக்கும் சற்று அதிமானவர்கள் இலங்கையின் பிரஜைகளாகும் வாய்ப்பும் கிடைத்தது. அவர்கள் இன்று முக்கிய சக்தியாக மலையகத்தில் உருவெடுத்திருப்பதோடு தமது அடையாளத்தினைத் தக்கவைத்துக்கொள்ளத் தேவையான அரசியல்க் கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கும் நிலைக்கும் உயரும் வாய்ப்பிருக்கின்றது.
  3. மூன்டு நாலு பிள்ளைகள் பெற்ற குடும்பத்தை கீழ்த்தனமாக பார்ப்பதை முதலில் எங்கடையாக்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். மட்டுமன்றி, அதை ஊக்கப்படுத்த வேண்டும். அப்பதான் எமது சனத் தொகை உயரும்.
  4. தமிழ் ஈழம் கிடைக்காமைக்கு இதுவும் ஒரு காரணம்....முக்கியமாக சனத்தொகையை வளர்ப்பதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் போராடமாலேயே. தமிழ் ஈழம் கிடைக்கலாம் 😂
  5. அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் எனது இரண்டாவது சரிதை சமஷ்ட்டிக் கட்சியின் ஸ்த்தாபகரும், தலைவருமான சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகத்தினுடையது. அவரது நூறாவது பிறந்த தினத்தினை முன்னிட்டு தினகரன் வாரமஞ்சரியில் தொடராக இதனை எழுதிவந்தேன். இலங்கைத் தமிழரின் மிக முக்கியமான அரசியல்த் தலைவராகவிருந்த செல்வாவின் நூறாவது பிறந்தநாள் நினைவினை அவருக்குக் கொடுக்கவேண்டிய மரியாதையுடன் அனுட்டிக்க அவரது கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி முயலவில்லை என்பது வேதனை. நான் எழுதிவந்த இத்தொடரில் தமிழர்களின் அவலங்களான அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள், அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ளமை, தமிழ் மொழியினை திட்டமிட்டு புறக்கணித்தமை ஆகியவை தொடர்பாகவும் எழுதி வந்தேன். அத்துடன், தந்தை செல்வாவினால் முன்னெடுக்கப்பட்ட வன்முறையற்ற ஜனநாயக வழிப் போராட்டங்கள் பற்றியும், அவை சிங்களத் தலைவர்களாலும், சிங்களக் குண்டர்களாலும் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டு நசுக்கப்பட்டன என்பது குறித்தும் விலாவாரியாகத் தேடி எழுதிவந்தேன். மேலும் தந்தை செல்வாவின் விட்டுக்கொடுக்கா மனோநிலைபற்றியும், இரு சிங்களப் பிரதமர்களோடு அவர் செய்துகொண்ட உடன்படிக்கைகள் பற்றியும், அவ்வுடன்படிக்கைககளின் தோல்விபற்றியும், சிங்கள அரசுகளுடனான அவரது ஒத்துப்போதல்கள் பற்றியும் எழுதினேன். 1957 இலிருந்து 1968 வரையான 11 வருட காலப்பகுதியில் இலங்கை அரசுகளுடன் ஒத்துப்போதல் எனும் தந்தை செல்வாவின் பரீட்சாத்த நடவடிக்கையின் தோல்வி அவரை மிகக் கடுமையான அதிருப்திக்கும், விரக்திக்கும் உள்ளாகியதுடன், தமிழர்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கு தமிழ் ஈழம் எனும் தனியான நாட்டினை இலங்கையிலிருந்து பிரித்தெடுப்பதற்கான நடவடிக்கையின் முதற்படியான 1976 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை செய்யுமளவிற்கு தள்ளிச் சென்றது.
  6. பிரஜாவுரிமைப் பிரச்சினை தொண்டைமானின் வாழ்வினூடாகவும், அவரது சேவையினூடாகவும் தமிழர்கள் முகங்கொடுத்த முக்கியமான பிரச்சினையான பிரஜாவுரிமைப் பிரச்சினையினை நான் கண்களூடு பார்க்கமுடிந்தது. தமிழர்களின் எண்ணிக்கையினைக் குறைக்கும் நோக்கில் சிங்களத் தலைவர்களால் செய்யப்பட்ட இரண்டாவது மிக முக்கியமான வஞ்சனை இதுவென்றால் அது மிகையில்லை. தமிழர்களை அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்தும் ஒரே வஞ்சனையுடனேயே இந்தச் சட்டத்தினைச் சிங்களத் தலைவர்கள் கொண்டுவந்திருந்தனர். சிங்களத் தலைவர்களான டி எஸ் சேனநாயக்காவும், ஒலிவர் குணத்திலக்கவும் சோல்பரி கமிஷனை சூட்சுமத்துடன் வழிநடத்தியதன் மூலம், பிரஜாவுரிமை பற்றிய விவாதங்களை நடத்தவும், அதுதொடர்பான முடிவினை எடுக்கவும் சுதந்திர இலங்கையின் பாராளுமன்றமே சிறந்தது எனும் வாதத்தினை முன்வைத்து அதில் வெற்றியும் கண்டனர். சுதந்திரம் கிடைத்து சரியாக 6 மாதங்களின் பின்னர் பாராளுமன்றத்தின் உதவியுடன் புதிய சட்டமான இலங்கை பிரஜாவுரிமைச் சட்டத்தினைக் கொண்டுவந்து சுமார் பத்து லட்சம் தமிழர்களின் பிரஜாவுரிமையினை இரத்துச் செய்தனர். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள், மற்றும் இலங்கையின் பிரஜைகளாகப் பதிவுசெய்யப்பட்டவர்கள் என்கிற அடிப்படைகளில் தமிழர்களைப் பிளவுபடுத்தி தமது கைங்கரியத்தினை அவர்கள் அரங்கேற்றினார்கள். இலங்கை பிரஜாவுரிமைச் சட்டத்தின் பிரிவு 4 மற்றும் பிரிவு 5 ஆகியவற்றில் பூர்வீகமாக பிரஜாவுரிமைக்குத் தகுதியானவர்கள் யாரென்று விபரிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட நாளான 1948, கார்த்திகை 15 இற்கு முன்னர் இலங்கையில் பிறந்த ஒருவரின் தந்தையோ, அல்லது பாட்டனாரோ அல்லது பாட்டனாரின் தந்தையோ இலங்கையில் பிறந்திருப்பின் அந்த நபர் இலங்கையின் பிரஜை ஆவார் என்று கூறுகிறது. அதேவேளை பிரிவு 5 இன்படி, ஒருவர் 1948, கார்த்திகை 15 இற்குப் பின்னர் இலங்கையில் பிறந்திருப்பின், அவரது தந்தையார் இலங்கைன் பிரஜையாக இருந்தால் மாத்திரமே அந்த நபர் இலங்கையின் பிரஜையாகக் கருதப்படுவார் என்று கூறியது. இதன்படி, பூர்வீகத்தை அடிப்படையாகக் கொண்ட பிரஜாவுரிமையின்படி சிங்களவர்களும், இலங்கைத் தமிழர்களும், இலங்கை முஸ்லீம்களும் இலங்கையின் பிரஜைகளாக வரையறுக்கப்பட இந்தியத் தமிழர்களும், இந்திய முஸ்லீம்களும் இலங்கைப் பிரஜைகள் அல்ல எனும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதன்மூலம் சுமார் 90 வீதமான மலையகத் தமிழர்களின் பிரஜாவுரிமை இரத்துச் செய்யப்பட்டதுடன், நாடற்றவர்கள் எனும் நிலைக்கும் தள்ளப்பட்டனர். இச்சட்டத்தின் பிரிவு 11 இலிருந்து 17 வரையானவற்றில், பிரஜைகளாகப் பதியப்பட்டவர்களின் பிரஜாவுரிமை என்பது ஒருவர் பூரண வயதினை அடைந்தவராகவும், புத்தி சாதுரியமானவராகவும், இலங்கையில் வதிபவராகவும், தொடர்ந்தும் இலங்கையிலேயே வதியும் விருப்பினைக் கொண்டவராகவும், அவரது தாயார் இலங்கையினைப் பூர்வீகமாகக் கொண்டவராகவும் இருக்கும் பட்சத்தில் பிரஜாவுரிமைக்காக பதிவுசெய்யும் தகுதியினைப் பெற்றுக்கொள்கிறார் என்று கூறுகின்றது. இதுகூட, ஒருவரின் தாயார் தனது பிள்ளை பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கும் திகதியிலிருந்து குறைந்தது 7 வருடங்களுக்கு முன்னான காலத்தில் இலங்கையில் வசித்திருப்பது அவசியம் என்றும் கூறுகின்றது. இந்தியத் தமிழர்கள் தம்மை இலங்கையின் பிரஜைகளாக பதிவுசெய்வதை முற்றாகத் தடுக்கும் நோக்கிலேயே இந்த சட்டங்களை சிங்களத் தலைவர்கள் கொண்டுவந்திருந்தனர். சிங்களத் தலைவர்களால் கொண்டுவரப்பட்ட இந்த இனவாதச் சட்டத்தினை எதிர்த்துச் செயற்பட்ட இணைந்த தமிழர்களின் அமைப்பான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் உப தலைவர் எஸ் ஜே வி செல்வநாயகம் அவர்கள் இச்சட்டம் நிச்சயமாக இந்தியத் தமிழர்களை நாடற்றவர்களாக்கவே பாவிக்கப்படுகிறது என்று கூறினார். "இந்தவகையான தமிழர் புறக்கணிப்பு நடவடிக்கைகள் இலங்கையில் இருந்து தமிழர்களை முற்றாக அழிப்பதிலோ அல்லது பாக்கிஸ்த்தான் போன்றதொரு தமிழர்க்கான தனியான நாட்டினை இலங்கையில் ஏற்படுத்துவிதிலோதான் சென்று முடியும்" என்றும் அவர் எச்சரித்திருந்தார். இதற்குப் பதிலளித்த அன்றைய பிரத மந்திரி டி எஸ் சேனநாயக்க, இந்தியத் தமிழர்கள் இலங்கையின் தற்காலிக வதிவாளர்கள் என்றும், பெருந்தோட்டங்களில் கூலி வேலை செய்வதற்காகவே பிரிட்டிஷாரினால் கொண்டுவரப்பட்டதாகவும் கூறியதோடு, அடிக்கடி தமிழ்நாட்டிலிருக்கும் தமது கிராமங்களுக்கு அவர்கள் சென்றுவருவது அவர்கள் கூட இலங்கையினைத் தமது சொந்த நாடாகக் கருதவில்லை என்பதனையே காட்டுகிறது என்றும் பதிலளித்திருந்தார். மேலும் இந்தியத் தமிழர்கள் இந்தியாவையே தமது காவலனாகப் பார்ப்பதாகவும், அவர்கள்மேல் இந்தியா எப்போதும் ஒரு கரிசணையான பார்வையினைக் கொண்டிருப்பதாகவும் கூறியதோடு, அவர்கள் உண்மையாகவே இந்தியாவுக்குச் சொந்தமானவர்கள், ஆகவே அவர்களை இந்தியா மீள அழைத்துக்கொள்வதுதான் சரியானது என்றும் வாதாடினார். ஆனால், இந்தியாகூட அவர்களை அன்று மீள அழைத்துக்கொள்ள முற்றாக மறுத்துவிட்டது.
  7. அறிமுகம் 1950 களின் பாராளுமன்றத்தில் தமிழருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய ஆசனங்களின் எண்ணிக்கைக்கான கோரிக்கையிலிருந்து ஆரம்பித்து இன்று நிகழ்ந்துவரும் உள்நாட்டு யுத்தம் வரையான தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தின் அடிப்படையே நான் இதுவரை எழுதிய மூன்று வாழ்க்கை வரலாறுகளினதும் கருப்பொருளாக இருந்தது. அதுவே நான் இன்று எழுதும் பிரபாகரன் எனும் ஆளுமையின் வாழ்க்கைச் சரித்திரனதும் மூலமாக இருக்கிறது. அத்துடன் தமிழர்கள் தமது தாயகத்தைக் காக்கத் தவறுவதும், தமது சனத்தொகையினை வளர்ப்பதில் தவறுவதும், தமது மொழியின் இருப்பினைத் தக்கவைத்துக்கொள்ளத் தவறுவதும், இன்னும் குறிப்பாகச் சொன்னால் தமது அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்ளத் தவறுவதும் அவர்களின் இருப்பையே முற்றான ஆபத்தில் தள்ளிவிடும் என்பதையே இவ் வாழ்க்கைச் சரித்திரங்களின் மூலம் பதிவிட்டு வருகிறேன். மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்டு, நேர்த்தியாகச் செயற்படுத்தப்பட்டுவரும் முற்றான இனவழிப்பிற்குள் தமிழினம் இன்று உட்பட்டு வருகிறது. அரச ஆதரவுடன் நடந்துவரும் திட்டமிட்ட நிலக்கொள்ளைகள் மூலம் தமிழினம் தனக்குரிய தாயகத்தினை சிறிது சிறிதாக இழந்துவருகிறது. மலையகத் தமிழரின் வாக்குரிமைகளை மறுத்துவிட்டதன் மூலம் அவர்களின் சனத்தொகை வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன் தனிச் சிங்களச் சட்டம் மூலம் அவர்களை கற்பதிலிருந்தும் தடுத்துவிட்டிருக்கிறது. இதற்கு மேலதிகமாக ஒற்றையாட்சி எனும் கோட்பாட்டினை தாரக மந்திரமாக வரைந்துகொண்டதன் மூலம் சிங்கள அரசுகள் அவர்களை அடிமைகளாகவே நடத்தி வருகின்றன. இறுதியாக, திட்டமிட்ட ரீதியில் அரசின் பின்புலத்துடன் அவர்கள் மேல் தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்துவிடப்பட்டு வரும் வன்முறைகளின் மூலம் அவர்கள் உயிர்வாழ்தலுக்கான அடிப்படை உரிமையினைக் கூட இழந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. சிங்கள இனவாதத்தின் கோட்டையென்று கருதப்படும் லேக்ஹவுஸ் பத்திரிக்கையில் நான் செய்தியாளராகக் கடைமையாற்றிய காலத்தில் இக்கதைபற்றி எழுத விரும்பியிருந்தேன். 1957 இல் நான் சாதாரண பத்திரிகையாளராக லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தமிழ்ப் பதிப்பான தினகரனில் இணைந்துகொண்டதிலிருந்து 1997 இல் அந்நிறுவனத்தில் ஆங்கிலப் பதிப்பிற்கான மூத்த உப ஆசிரியராக பதவியிலிருந்து ஓய்வுபெறும்வரை எமது இனப்பிரச்சினை குறித்த பல முக்கிய நிகழ்வுகளை நான் பதிவுசெய்து வந்ததோடு, தமிழருக்கெதிரான இனவாத நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த பல முக்கிய சிங்களத் தலைவர்களுடனும் எனக்கு நெருங்கிப் பழகும் வாய்ப்பும் கிடைத்திருந்தது. செளமியமூர்த்தி தொண்டைமான் முதலாவது வாழ்க்கைச் சரித்திரம், நட்பிற்காக தொண்டைமானுக்காக எழுதப்பட்டது. மலையகத் தமிழர்களின் தலைவரான அவருக்கும் எனக்கும் சுமார் 41 வருடங்களாக நெருங்கிய நட்பு இருந்துவந்தது. 1988 கார்த்திகை மாதத்தில் தனது சரிதை பற்றி எழுதுமாறு அவர் என்னை அழைத்திருந்தார். அவர் விரும்பியவாறே அவரின் சரிதையும் என்னால் எழுதப்பட்டு அடுத்தவருடமே பிரசுரிக்கவும் பட்டது. சுமார் 10 வருடங்களுக்குப் பின்னர் என்னை மீளவும் அழைத்த அவர், தனது சரிதைபற்றிய தகவல்களை மேலும் விரிவாக்கும்படி என்னிடம் கேட்டுக்கொள்ளவே, அவருக்காக அதனையும் நான் செய்தேன். அவர் இறப்பதற்கு இரு நாட்களுக்கு முன்னரே மேம்படுத்தலின் பிரதி வெளிவந்தது. பின்னர் இணையப் பத்திரிக்கையான ஏசியன் ட்ரிபியூனில் இச்சரித்திரம் ஒரு தொடராகப் பிரசுரிக்கப்பட்டது. தொண்டைமான் அவர்களின் சரிதையினை நான் எழுதியபோது, வேண்டுமென்றே இரு முக்கிய விடயங்களை எழுதுவதை நான் தவிர்த்திருந்தேன். தமிழர்களின் நல்வாழ்வில் அவர் கொண்டிருந்த அக்கறை தொடர்பாகவும், சிங்களவர்களால் தனது அரசியல் எதிர்காலமும் பாதிக்கப்பட்டுவிடும் என்று அவர் அஞ்சி எடுத்திருந்த சில நடவடிக்கைகள் தொடர்பாகவும் நான் எழுதுவதைத் தவிர்த்துவிட்டேன். முதலாவது சம்பவம் 1986 ஆம் ஆண்டு மார்கழி முதலாம் திகதி நடந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் வட கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த டொலர் மற்றுன் கென்ட் பாம் எனப்படும் சிங்களக் குடியேற்றங்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் ஒன்றினை நடத்தியிருந்தார்கள். தாக்குதல் நடந்த அன்று கொள்ளுப்பிட்டியில் அமைந்திருந்த அவரது கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் அலுவலக உத்தியோகபூர்வ அலுவலகத்திற்குள் நான் நுழைந்தேன். "நீங்கள் செய்தி கேள்விப்பட்டீர்களா?" என்று என்னைப்பார்து கேட்டார் தொண்டைமான். அவரது கேள்வியை நான் அவ்வளவாகச் சட்டை செய்யாதது போலக் காட்டிக்கொண்டிருக்க, அவரோ, "சிங்கள அரசு எல்லாவற்றிற்கு மேலானது என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், அவர்களை விடப் பலமானவர்களும் இருக்கிறார்கள். பிரபாகரன் அவர்களுக்கொரு பாடத்தினைப் புகட்டியிருக்கிறார்" என்று அவர் முடித்தார். இரு சிங்களக் குடியேற்றங்கள் மீது புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டு, பல சிங்களவர்கள் கொல்லப்பட்டிருந்தபோதும்கூட, இத்தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்கான காரணங்கள் தொண்டைமானுக்கு இருந்தன. 1979 ஆம் ஆண்டு, தொண்டைமான் அவர்களின் தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களாக இருந்த பல்லாயிரக்கணக்கான மலையகத் தொழிலாளர்கள் மீது அரசும் குண்டர்களும் சேர்ந்து நடத்திய தாக்குதல்களில் அடித்து விரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான மலையகத் தமிழர்களைக் குடியேற்றி மீள்வாழ்வளிப்பதற்காகவே கென்ட் மற்றும் டொலர் பாம் எனப்படும் விவசாயப் பண்ணைகளை தமிழ்த் தன்னார்வ அமைப்புக்கள் ஆரம்பித்து நடத்தி வந்தன. ஆனால், 1986 ஆம் ஆண்டு ராணுவத்தினதும், பொலீஸாரினதும் நடவடிக்கைகள் மூலம் அப்பகுதியில் வாழ்ந்துவந்த மலையகத் தமிழர்களை அடித்து விரட்டிவிட்டு அப்பகுதிகளை தெற்கில் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்குமான திறந்த வெளிச் சிறைச்சாலைகளாக அந்நாட்களில் காணி மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சராகவிருந்த காமிணி திசாநாயக்கா மாற்றியிருந்தார். தனது மக்கள் தமது வாழிடங்களிலுருந்து விரட்டப்பட்டதற்கும், அவ்விடங்கள் ராணுவத்தினரின் உதவியுடன் சிங்களக் குடியேற்றங்களாக மாற்றப்பட்டதற்கும் தனது கடுமையான கண்டனத்தினை தொண்டைமான் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தபோதும்கூட, அவை எதுவுமே சிங்கள் அரசினால் கண்டுகொள்ளப்படவில்லை. ஆகவே, தன்னால் செய்ய முடியாது போனதை பிரபாகரன் செய்தது அவருக்கு மிகுந்த திருப்தியைக் கொடுத்திருந்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.