ஒரு உதாரணத்திற்காகவே அவுஸ்ரேலிய உள்நாட்டு பொருளாதாரத்தினை மேலே குறிப்பிடப்பட்டது, ஆனால் அனைத்து நாடுகளும் தற்போது இதே பொருளாதார பிரச்சினைக்கு முகம் கொடுக்கின்றன அதற்கு காரணம்
Spillover effect என பொருளாதாரத்தில் வரையறுத்துள்ளார்கள், உலக மயமாதலின் பக்க விளைவு எனவும் கூறுவர்.
ஒரு குறிப்பிட்ட நாடு உலகத்தில் உள்ள விடுதலை அமைப்புகள் உள்ளடங்கலாக உள்ள அமைப்புகளை தனது சுய இலாபத்தினடிப்படையில் பயங்கரவாத நாடு, பயங்கரவாத அமைப்பு என வரையறுக்கின்றது.
அந்த குறிப்பிட்ட நாட்டினை பொருளியலாளர் பொருளாதார பயங்கரவாதி என செல்லமாக அழைக்கிறார்கள், குறிப்பாக உலகில் பொருளாதார ரீதியில் ஏற்படும் அழிவுகளுக்கு காரணமாக பெரும்பாலும் இருந்து வந்ததனாலேயே அவ்வாறு அழைக்கிறார்கள்.
தற்போது ஏற்பட்டுள்ள போரினால் எதிர்பாராவிதமாக எதிர்பார்க்கப்பட்ட பணவீக்கத்தினை விட அதிக அளவில் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது, அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் தற்போது மேற்கொள்ளப்படும் முயற்சியினால் பண திர்வத்தன்மையில் நெருக்கடி உருவாகிறது என பொருளியலாளர்கள் பலர் அபாய குரலெழுப்புகிறார்கள், ஆனால் எவ்வாறு கோவிட் காலத்தில் எடுத்த கடும் முடிவு போலவே (பொருளாதார தூண்டல்) தற்போது அதனை கட்டுப்படுத்துவதில்(பணவீக்கம்) ஆர்வம் காட்டுகிறார்கள் ஆனால் அதனால் ஏற்பட போகும் பக்க விளைவை பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை.
அல்லது அதனை வேண்டும் என அலட்சியபடுத்துகிறார்களா என தெரியவில்லை, 1930 இல் உலகில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியுடன் தோற்றம் பெற்ற உலகமயமாதல் அதே போன்றதோர் நெருக்கடியுடன் முடிவுக்கு வருமோ எனும் ஒரு அச்ச நிலை உருவாகியுள்ளது.
தற்போது பல நாடுகளின் பொருளாதாரம் சரிவடைந்து செல்கிறது, அவுஸ்ரேலியாவில் இந்த காலாண்டிற்கான எதிர்பார்க்கப்பட்ட பொருளாதார வளர்ச்சியான 0.50% பதிலாக 0.20% எனும் நிலையினை அடைந்துள்ளது.
தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகள் எதிர்மறை வளர்ச்சி வீதம் ஏற்பட்டால் அதனை பொருளாதார சரிவு என அழைக்கிறார்கள், வருமான வளர்ச்சியினை விட பணவீக்க அதிகரிப்பு அதிகமாக உள்ளது, இதனைதான் களுதை தேந்து கட்டெறும்பாவது என கூறுகிறார்கள்.
ஒரு கட்டத்திற்கு மேல் வங்கியில் பெற்றுள்ள வீட்டுக்கடனின் பெறுமதியினை விட வீட்டின் விலை குறைவடையும் போது நிலமை மோசமாகிவிடும் வீட்டிற்கான கட்டணம் செலுத்துவதில் சிரமம் காணப்படும் நிலையில் வீட்டினை விற்கவும் முடியாது எனும் நிலை ஏற்படலாம்.
வீட்டினை விற்றாலும் வங்கிக்கு கடனாக பணம் செலுத்தும் நிலையில் இருப்பார்கள் இதனால் பலர் வங்குரோத்தாகும் நிலை ஏற்படலாம்.
ஆனால் தற்போது அதற்கான அறிகுறிகள் ஏற்படவில்லை
https://www.corelogic.com.au/news-research/news/2023/corelogic-home-value-index-further-evidence-australias-housing-downturn-is-over
தொடர்ச்சியாக கடந்த ஆண்டில் வீட்டின் விலை சரிந்திருந்தது ஆனால் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் விலைகள் சிறிதளவு ஏற்றம் காணப்படுகிறதாக கூறுகிறது இந்த ஆய்வு.
ஆனால் பல மாறா வட்டி வீட்டுக்கடன் இந்த ஆண்டு நடுப்பகுதியில் மாற்றம் ஏற்படும் வட்டிக்கு வரவுள்ளது (இந்த மாதத்தில்) அதனால் எதிர்வரும் மாதங்களில்தான் உண்மை நிலவரம் தெரியவரும்.
போர் தொடரும் நிலையில் நிலமை மேலும் மோசமாகவே வாய்ப்புள்ளது,இது அச்சுறுத்துவதற்கான பதிவல்ல ஆனால் இது தொடர்பான முன் தெளிவு அவசியமாவதாக கருதுகிறேன், உலகின் பல்வேறு பாகக்களில் வாழும் யாழ்கள உறவுகளே உங்கள் கருத்துகளை முடிந்தால் கூறவும்.
இது ஒரு பொருளாதார அறிவுரை அல்ல.