Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Cruso

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    1887
    Posts
  2. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    8975
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    88827
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    2
    Points
    20355
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/23/23 in all areas

  1. ஜெயார் தமிழருக்குக் கொடுத்த இறுதித் தீர்வு - ‍ தொடரும் இனக்கொலை ஜூலை 83 தமக்கு வேண்டப்பட்டவர்களை மாத்திரம் காப்பற்ற நினைத்த சிங்கள இனவாதிகள் ஜனாதிபதி ஜெயவர்த்தன மற்றும் முக்கிய அமைச்சர்கள், பாதுகாப்புப் படைகளின் பிரதானிகள் ஆகியோர் தமக்கு வேண்டப்பட்டவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை வன்முறைகள் ஆரம்பிக்கும் முன்னரே எடுத்திருந்தனர். தனது மகன் ரவியின் முதல்த்தாரமும் தமிழருமான சார்மெயின் வன்டர்க்கோன் மற்றும் அவரது மகள், தாயார் ஆகியோரைப் பாதுகாப்பாக தனது செயலகத்திற்கு அழைத்துவர ஆயுதம் தாங்கிய ராணுவப் பிரிவொன்றினை அனுப்பிவைத்தார் ஜெயார். தமிழரான சார்மெயின் சிங்களக் காடையர்களால் தாக்கப்படக் கூடும் என்று ஜெயார் கருதினார். தான் கொல்லப்படுவதற்கு முன்னர் சிங்களக் காடையர்களால் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் தமிழர் ஒருவர் ‍ - தமிழ் இனக்கொலை ஆடி 1983 சிங்களக் காடையர்களால் முன்னாள் அமைச்சர் குமாராசூரியர் அவஸ்த்தைக்குள்ளாகியுள்ளார் என்று கேள்விப்பட்டபோது அவரைப் பாதுகாப்பாக அழைத்துவர ராணுவ ஜீப் வண்டியொன்றினை ஜெயார் அனுப்பிவைத்தார். குமாராசூரியரை வீட்டிற்கு வெளியே இழுத்துவந்த சிங்களவர்கள், அவரது கைகளைக் கட்டி அருகில் உள்ள பெற்றோல் நிரப்பும் நிலையம் வரை இழுத்துச் சென்று கொல்வதற்கு முயற்சித்ததை தாம் கண்ணுற்றதாக பலர் தெரிவித்திருக்கின்றனர். அவரைக் கொல்வதற்கு வாட்களை வெளியே சிங்களவர்கள் எடுத்துக்கொண்டிருக்க அவ்விடத்திற்கு வந்த ஜெயார் அனுப்பிய ராணுவத்தினர் அவரை மீட்டிருக்கின்றனர். http://www.oferrceylon.com/wp-content/uploads/2017/01/chief.jpg செல்வாவின் மகனும், பின்னாட்களில் இந்தியாவின் முகவராகவும் மாறிய சந்திரஹாசன் காலஞ்சென்ற தந்த செல்வாவின் மகனான சந்திரகாசனையும் அவரது தாயாரையும் காப்பற்ற காமிணி திசாநாயக்கா தனது பாதுகாப்புப் பிரிவினை அனுப்பியிருந்தார். சட்டக்கல்லூரிக் காலத்திலிருந்து காமிணியும் சந்திரகாசனும் நண்பர்களாக இருந்தவர்கள். தொண்டைமான் என்னுடன் பேசும்போது, தனது பேத்தியை பாதுகாப்பாகக் கூட்டிவர பிரேமதாசா தனது குண்டர்படையினர் சிலரை அனுப்பி காடையர்களிடமிருந்து அச்சிறுமியை மீட்டுவந்ததாகக் கூறினார். வணிக மற்றும் கப்பற்றுரை அமைச்சரான லலித் அதுலத் முதலியை இனக்கொலை நடைபெற்று சுமார் 10 நாட்களின் பின்னர் அவரது அமைச்சில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது. "நான் வன்டேர்வட் பிளேசில் இருந்த எனது நண்பர்கள் சிலரைப் பாதுகாக்கும் செயற்பாடுகளில் அன்று ஈடுபட்டிருந்தேன், என்னிடம் நீங்கள் கேட்டிருந்தால் உங்களது வீட்டையும் என்னால் காப்பாற்றியிருக்க முடியும்" என்று அவர் என்னைப்பார்த்துக் கூறினார். அந்தவேளையில் நான் வேறு அமைச்சர்களுடன் தொடர்புகொள்ள முயன்றுகொண்டிருந்தேன். எனது வீடு எரிந்துகொண்டிருக்கிறதென்பது எனக்குத் தெரிந்தே இருந்தது, எனக்கு அப்போது தேவைப்பட்டதெல்லாம் எனது இரு மகன்களையும் காப்பற்றிக்கொள்வதுதான். எனது வீட்டைப்பற்றி எனக்குக் கவலை இருந்தது. நிச்சயம் எனது வீடு தாக்கப்பட்டு, உடமைகள் சூறையாடப்பட்டு, வீடும் எரிக்கப்படும் என்று நான் ஊகித்திருந்தேன். நான் காலை 11:30 மணியளவில் வீட்டிற்கு தொலைபேசி அழைப்பினை எடுத்தபோது தொலைபேசி வேலை செய்தது. அரைமணித்தியாலம் சென்றபின்னர் மீண்டும் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்த முயற்சித்தேன், இம்முறை தொலைபேசி மெளனமாகக் கிடந்தது. எனது அயலவரான சோமதாசவுடன் தொலைபேசியூடாகப் பேசினேன். எனது வீடு எரிந்துகொண்டிருப்பதாக அவர் கூறினார். மறுமுனையில் அவர் விசும்புவது எனக்குக் கேட்டது. "எமது பகுதியில் இருந்த தமிழர்களின் வீடுகளைப் பாதுகாக்க‌ நாம் முயன்றோம், ஆனால் எம்மால் அது முடியாமற் போய்விட்டது" என்று சில வாரங்களுக்குப் பின்னர் நான் அவரைச் சந்திக்கச் சென்றபோது அவர் என்னிடம் கூறினார். "தமிழர்களின் வீடுகளைத் தேடி ஒரு கூட்டமொன்று எமது பகுதிக்குள் நுழைந்தது. நாம் இங்கு தமிழர்கள் எவரும் இல்லையென்று கூறவே அக்கூட்டம் சென்று விட்டது. ஆனால், சில நிமிடங்களுக்குப் பின்னர் அதே கூட்டம் தெகிவளைப் பொலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சிங்களப் பொலீஸ் அதிகாரி ஒருவருடன் மீண்டும் எமது பகுதிக்குள் நுழைந்தார்கள். கையில் வக்காளர் அட்டையினை வைத்திருந்த பொலீஸ் அதிகாரி, "தமிழர்களைக் காப்பாற்ற நினைக்கிறீர்களா?" என்று எங்களைப் பார்த்துக் கேவலமாகத் திட்டிக்கொண்டே உங்கள் வீட்டிற்கு காடையர்களை அழைத்துக்கொண்டு போனார்" என்று கூறினார். 1983 இனக்கொலையில் சிங்களவர்களால் எரிக்கப்பட்ட தமிழரின் வீடு ஒன்று எனது அயலவர் என்னுடன் பேசும்போது, "தமிழர்கள அனைவரையும் நாம் அடித்துக் கலைக்கவேண்டும், அவர்கள் இங்கே வாழக்கூடாது என்று அந்தப் பொலீஸ் அதிகாரி எம்மைப் பார்த்துக் கத்தினார். எமது வீதியில் (பி டி டி சில்வா மாவத்தை, தெகிவளை) இருந்த மூன்று தமிழர்களின் வீடுகளைக் கொழுத்திவிட்டு வெளியே வந்த அந்தப் பொலீஸ் அதிகாரி தன்னுடன் வந்த சிங்களவர்களைப் பார்த்து, "அப்பி சுத்த கரா" ( நாங்கள் தூய்மைப்படுத்திவிட்டோம்) என்று சிங்களத்தில் கோஷமிட்டார்" என்று கூறினார். அதாவது அப்பகுதியை தமிழர் எனும் கிருமிகளிடமிருந்து தூய்மைப்படுத்தி விட்டோம் என்பதே பொருள். எனது வீடு மூன்று நாட்களாக எரிந்துகொண்டிருந்ததாக அயலவர் கூறினார். எமக்கு ஒவ்வொருநாளும் மீன் வழங்கும் மீனவரான சைமன் எமது வீட்டினை எரித்த சிங்களக் காடையர் குழுவில் தானும் இருந்ததாகக் கூறினார். "அவர்கள் முதலில் உங்களின் வீட்டுக்கதவை உடைத்துத் திறந்தார்கள். பின்னர் உள்ளே நுழைந்த அவர்கள் விருந்தினர் தங்கும் அறையில் இருந்த ஷோகேஸ் (காட்சிப்படுத்தும் அலுமாரி) இனை அடித்து நொறுக்கினார்கள். வீட்டினுள் இருந்த உங்களின் புத்தகங்களை வெளியே எடுத்துவந்து இருக்கைகளில் பரப்பினார்கள். பின்னர் புத்தகங்கள் மீது கொண்டுவந்த பெற்றொலினை ஊற்றினார்கள்" என்று கூறினார். சைமன் மேலும் கூறும்போது, "கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பொலீஸ் அதிகாரி கூட்டத்தைப் பார்த்து, "உங்களுக்குத் தேவையானதையெல்லாம் எடுத்துக்கொள்ளுங்கள்" என்று கூறவும் வெறும் 10 நிமிடத்தில் அங்கிருந்தவற்றை அவர்கள் சூறையாடினார்கள். பின்னர் உங்கள் வீட்டிற்கு அவர்கள் நெருப்பு மூட்டினார்கள்" என்று கூறினார். எனது காட்சிப்படுத்தும் அலுமாரியில் நூதணப் பொருட்கள் எவற்றையும் நான் வைத்திருந்ததில்லை. அகராதிகள், சொற்களஞ்சியங்கள் போன்றவையே அதில் அடுக்கப்பட்டிருந்தன. 1957 இல் நான் லேக் ஹவுஸ் நிறுவனத்தில் இணைந்தபோது இலங்கை சமூக கலாசார மாற்றம் ஒன்றிற்கூடாகச் சென்று கொண்டிருந்தது. பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் தொடர்பாடல் மொழியாக அதுவரை இருந்துவந்த ஆங்கில மொழியினை சிங்களமும், தமிழ் மொழியும் பிரதியீடு செய்துவந்தன. இதனாலேயே அகராதிகள், சொற்களஞ்சியங்கள் ஆகியவற்றின் தேவை அந்நாட்களில் அதிகமாகக் காணப்பட்டது. ஆங்கிலத்திலும் தமிழிலும் எனக்கிருந்த புலமை காரணமாக கல்வியமைச்சினூடாக வெளியிடப்பட்டு வந்த அரசியல் மற்றும் பொருளாதாரம் சம்பந்தமான பல்கலைக்கழக நூட்களை நான் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துக் கொடுத்துவந்தேன். 1961 ஆம் ஆண்டு விஞ்ஞானப் பட்டதாரியான எனது மனைவிய மணந்துகொண்டதன் பின்னர் பாடசாலைப் பாடப்புத்தகங்களை மொழிபெயர்க்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தேன். எமது மொழிபெயர்ப்புப் பணிகளுக்காக பெருமளவு ஆங்கிலம் ‍- தமிழ் அகராதிகளை, சொற்களஞ்சியங்களை நாம் வாங்கிச் சேகரித்து வந்தோம். நாம் காலம் காலமாகச் சேகரித்து வைத்திருந்த தடித்த அட்டையிலான அகராதிகள் சிங்களக் காடையர்கள் தமது நாசகார வேலையினைச் செய்ய வரப்பிரசாதமாக அமைந்தன. ஆகவேதான் தொடர்ந்து இருநாட்களாக எரிந்த வீட்டிலிருந்து அனைத்து உடமைகளும் முற்றாக எரிந்து சாம்பலாகிக் கிடந்தன. எனது வீட்டிற்கு வெளிப்புறமாக எனது படிக்கும் அறையினை நான் அமைத்திருந்தேன். அதற்குள் நான் சேகரித்து வந்த அரசியல் புத்தகங்கள், ஆவணங்கள், முக்கிய பத்திரிக்கைச் செய்திகள், நான் விரும்பிப் படிக்கும் புத்தகங்க்கள், பெறுமதியான நூட்கள் என்று பல சேமிக்கப்பட்டிருந்தன. அங்கும் சென்ற சிங்களவர்கள் அவற்றின் மீது பெற்றோலினை ஊற்றி பற்றவைத்திருந்தனர். எனது புத்தகங்களில் எவையுமே மிஞ்சியிருக்கவில்லை.
  2. 83 யூலைக் கலவரம் என்று பிரபல்யம் அடைந்த யூலை மாதத்தில் இந்தக் கலவரங்களைப் பற்றி எழுதுவது மனதுக்கு இதமாக உள்ளது. மீண்டும் கப்பல் வேலைக்காக புறப்பட தயாராக கொழும்பில் தயாராக இருந்த வேளை நானும் மாட்டிக் கொண்டேன். இதுவே வாழ்வின் திரும்புமுனையாகவும் அமைந்துவிட்டது.
  3. ஆண்டு: 2008 திகதி: பெப்ரவரி 4, 2008 அடிபாட்டுக் காலம்: மாலை 6:30 மணியளவில் நிகழ்வு இடம்: மன்னாருக்கும் இரணைதீவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: குறித்த பரப்பில் 450 மேற்பட்ட இந்திய இழுவலை படகுகள் மீன்பிடித்துக்கொண்டிருந்தன. எனவே அவற்றை விரட்டுவதற்காக சிங்களக் கடற்படையின் இரண்டு டோறாக்கள் பாய்ந்து சென்றன. அநேரத்தில் அனைத்து இந்திய இழுவலை படகுகளும் அகலவே இரண்டு மட்டும் நின்றுகொண்டிருந்தன. அவை பழுதடைந்து நிற்கின்றன எனக் கருதிய சிங்களக் கடற்படையினர் அவற்றிற்கு அருகே செல்ல முற்பட்ட போது அவற்றிலிருந்து உந்துகணை பிலுறுந்திய கைக்குண்டால் (ஆர்.பி.ஜி.) தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதோடு வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன. இதையடுத்து அந்த டோறாவும் அதிலிருந்த 7 கடற்படையினரும் காணாமல் போனதாக படைத்துறை வட்டாரங்கள் கூறியதென்று தமிழ்நெற் செய்தியினை வெளியிட்டது. இது நிகழ்விற்கு அடுத்த நாள் (07/02) வெளியான தகவல் ஆகும். அடுத்த நாள் (07/02) இந்திய ஊடகம் ஒன்றிற்கு செவ்வியளித்த சிங்களக் கடற்படையின் பேச்சாளர் கொமொடோர் டி.ஜெ.பி. தஸநாயக்க தமது படகு ஒன்று மட்டும் சேதமடைந்திருப்பதாக மட்டும் கூறினார். ஆனால் இந்தக் காணாமல் போனது குறித்து அவர் கருத்து எதையும் கூறவில்லை. இந்நிகழ்வு குறித்து விடுதலைப்புலிகளும் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. காணாமல்போன அ சேதமடைந்த கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த போராளிகள்: அறியில்லை ஆதாரம்: உதயன்: 06/02/2008 | தமிழ்நெற்: 5/02/2008 (SLN Dvora missing in the seas off Mannaar) திகதி: பெப்ரவரி 7, 2008 அடிபாட்டுக் காலம்: அறியில்லை நிகழ்வு இடம்: தனங்களப்பு நிகழ்வு விரிப்பு: குறித்த பரப்பிலுள்ள கடற்கரையில் மாலை 6:45 மணியளைவில் தாக்குதலிற்கு ஆயத்தமாக நின்றதாகக் கூறப்படும் கடற்புலிகளின் படகொன்றின் மீது தாம் சேணேவி எறிகணை வீச்சு மேற்கொண்டதாகவும் அதில் அப்படகிலிருந்த நான்கு புலிவீரர்களும் அப்படகும் மூழ்கடிக்கப்பட்டதாக சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் செய்தி வெளியிட்டது. அதே நேரம் விடுதலைப்புலிகளோ தனக்களப்புப் பரப்பில் சிங்களக் கடற்படையுடன் மோதல் ஒன்று ஏற்பட்டது என்றும் அதில் கடற்படையின் இரு கரையோர காவலரண்கள் அழிக்கப்பட்டன என்றும் தெரிவித்ததோடு 40 குதிரைவலுவில் இயங்கவல்ல ஒரு படகும் (கட்டைப்படகு) கைப்பற்றப்பட்டது என்றும் அறிவித்தனர். கைப்பற்றப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: படகு (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை) கலவகை: அறியில்லை சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த போராளிகள்: அறியில்லை ஆதாரம்: உதயன்: 09/02/2008 திகதி: மார்ச் 22, 2008 அடிபாட்டுக் காலம்: வைகறை 2 மணியிலிருந்து 2:45 மணி வரை டோறா மீது இடியன் மோதிய நேரம்: வைகறை 2:10 மணியளவில் நிகழ்வு இடம்: நாயாற்றுக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த கடற்படையின் பி 438 என்ற தொடரெண் கொண்ட டோறா கலத்தோடு கடற்புலிகள் குறித்த காலத்தில் பொருதிய போது வைகறை 2:10 மணியளவில் நீர்முழுகி இலக்கிய மிதக்கும் ஏவரி கொண்டு தாக்கி அழித்து மூழ்கடித்தனர். ஆனால் சிங்களப் படையினரோ கடற்புலிகள் தம்மோடு பொருதவில்லையென்றும் கடற்கரும்புலித் தாக்குதலே மேற்கொள்ளப்பட்டதென்றும் அறிவித்தனர். கடற்புலிகளின் படையேற்பாட்டுக் கப்பல்கள் 2007ம் ஆண்டு மூழ்கடிக்கப்பட்டதிற்கு பழிவாங்கும் விதமாக மேற்கொள்ளப்பட்ட முதலாவதுவது தாக்குதலாகையால் ‘பழிவாங்கல்-1’ என இத்தாக்குதலிற்குப் பெயர் சூட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிகத் தகவல்: இத்தாக்குதலின் பின்னர் அக்கடற்பரப்பில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட கடற்படையினர் கீழ்வரும் ஒரு நீர்முழுகி இலக்கிய மிதக்கும் ஏவரியைக் (Diver aimed floating torpedo) கண்டுபிடித்தனர். இதற்குப் புலிகள் சூட்டியிருந்த வகை/வகுப்புப் பெயர் எனக்குத் தெரியவில்லை. இம் மிதக்கும் நீர்முழுகி இலக்கிய ஏவரியுடன் ஒரு சிங்கள நீர்முழுகி மிதக்கும் காட்சி | படிமப்புரவு: Sri Lankan Navy படிமப்புரவு: Shutterstock மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 14 பேர் காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 3 பேர் தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் அன்புமாறன், மேஜர் நிறஞ்சினி, மேஜர் கனினிலா கடற்கரும்புலி வகை: நீரடி நீச்சல் கரும்புலிகள் சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 1 கல வகை: நீர்முழுகி இலக்கிய மிதக்கும் ஏவரி ஆதாரம்: உதயன்: 23/03/2008 | மாவீரர் பட்டியல் | தமிழ்நெற்: 21/03/2008 (Black Sea Tigers sink SLN Dvora, 14 SLN killed - LTTE) திகதி: மே 10, 2008 அடிபாட்டுக் காலம்: வைகறை 2:23 மணி நிகழ்வு இடம்: திருகோணமலை சீனக்குடாவிலுள்ள அஷ்ரப் இறங்குதுறை நிகழ்வு விரிப்பு: திருகோணமலை சீனக்குடாவிலுள்ள அஷ்ரப் இறங்குதுறையில் காங்கேசன்துறைமுகத்திற்குக் கொண்டுசெல்வதற்காக படைக்கலன்கள் மற்றும் வெடிபொருட்கள் ஏற்றப்பட்ட நிலையில் நின்றிருந்த ஏ 520 என்ற தொடரிலக்கம் கொண்ட இன்விசிபிள் என்ற கப்பல் கங்கையமரன் நீரடி நீச்சல் பிரிவுக் கரும்புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இத்தக்குதலில் விடுதலைப்புலிகளால் நீரடிக் கடற்கலங்கள் ஏதேனும் பயன்படுத்தப்பட்டனவா என்பது தெரியவில்லை. வெடியதிர்வில் நகரமே அதிர்ந்ததாம். தாக்குதல் நடந்து 13 நிமிடங்களில் கப்பல் முழுமையாக தாண்டுவிட்டது. இக்கப்பாலனது 2007ம் ஆண்டு கடற்புலிகளின் கப்பல் பிரிவிற்குச் சொந்தமான 3 படையேற்பாட்டுக் (mili. logistics) கப்பல்களை ஆழ்கடலில் மூழ்கடிக்க உதவியதாகும். அதற்குப் பழிவாங்கும் விதமாக மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது தாக்குதலாகையால் ‘பழிவாங்கல்-2’ என இத்தாக்குதலிற்குப் பெயர் சூட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கலப் பெயர்: இன்விசிபிள் (Invisible) கல வகை: கொள்கலன் காவி படிமம்: திருமலை துறைமுகத்தினுள் நுழையும் இன்விசிபிள் கப்பல் | படிமப்புரவு: Eaglespeak.com சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 2 பேர் தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் அற்புதன், லெப்.கேணல் செம்பியவளவன் கடற்கரும்புலி வகை: நீரடி நீச்சல் கரும்புலிகள் சக்கை வண்டிகள், எண்ணிக்கை: அறியில்லை கல வகை: அறியில்லை ஆதாரம்: உதயன்: 11/05/2008, 18/05/2008 | மாவீரர் பட்டியல் | தமிழ்நெற்: 5/11/2000 (Sea Tiger commandos sink SLN supply ship in Trinco Harbour) திகதி: செப்டெம்பர் 18, 2008 அடிபாட்டுக் காலம்: நண்பகல் 10:30 மணியளவிலிருந்து எற்பாடு 3:30 மணிவரை நிகழ்வு இடம்: இரணைதீவுக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: இரணைதீவு நோக்கி மன்னாரிலிருந்து சிறிலங்காக் கடற்படையின் சிறப்புப் படகுச் சதளம் மற்றும் விரைவுச் செயல் படகுச் சதளம் ஆகியன முன்னகர்வு நடவடிக்கையினை மேற்கொண்டன. இதில் 10 வோட்டர் ஜெட் வகுப்புப் படகுகள் மற்றும் 20 கூகர் வகுப்புப் படகுகள் என்பன களமிறக்கப்பட்டிருந்தன என்று புலிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர் நடவடிக்கையாக தாம் தமது சிறிய வகைப் படகுகளையே களமிறக்கியதாக புலிகள் தெரிவித்திருந்தனர். நண்பகல் 10:30 மணியளவிற்குத் தொடங்கிய கடும் கடற்சமர் எற்பாடு 3:30 மணி வரை நீடித்தது. முடிவில் சிங்களக் கடற்படையினர் பின்வாங்கி ஓடிவிட்டனர் என்று கடற்புலிகள் தெரிவித்தனர். வழக்கம் போல் தம்தரப்பு இழப்புகளைப் புலிகள் வெளியிடவில்லை. சேதப்பட்ட கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: அறியில்லை சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: அறியில்லை ஆதாரம்: உதயன்: 20/09/2008 திகதி: ஒக்டோபர் 22, 2008 அடிபாட்டுக் காலம்: வைகறை 5:10 மணியளவில் நிகழ்வு இடம்: காங்கேசன் துறைமுகத்தினுள் நிகழ்வு விரிப்பு: துறைமுகத்தினுள் மூன்று நீரடி நீச்சல் கடற்கரும்புலிகளில் இருவரால் மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் மக்களுக்கு உணவுகள் எடுத்து வருகிறோம் என்ற போர்வையில் படைக்கலங்கள் மற்றும் வெடிபொருட்களை ஏற்றிவந்த நிமலவ மூழ்கடிக்கப்பட்டதோடு றுகுணு சேதப்படுத்தப்பட்டது. மூன்றாவது கடற்கரும்புலியால் ஓட்டிவரப்பட்ட மிதக்கும் ஏவரி கவிழ்ந்தபடியே சிங்களவரால் கைப்பற்றப்பட்டது. ஆனால் சிங்களமோ வழக்கம் போல எந்தவொரு கப்பலும் மூழ்கடிக்கப்படவில்லை என்றும் நிமலவவிற்கு மட்டும் சேதமென்று தவறுத்தகவலைப் பரப்பியது. சிங்கள அரசின் ஒட்டுக்குழுவும் தமிழ்தேசிய எதிர்ப்புக் கட்சியுமான ஈபிடிபியும் இத்தாக்குதலைக் கண்டித்து கடையடைப்பிற்கு யாழில் அழைப்பு விடுத்திருந்தது. இந்நடவடிக்கைக்கு பெயர் ஏதேனும் சூட்டப்பட்டதா என்பது பற்றிய தகவல் தெரியவில்லை. இக்கப்பலின் அடித்தளத்தில் சிறிலங்காப் படைத்துறைக்கான ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டிருந்தன என்று விடுதலைப்புலிகள் குற்றம் சாட்டியிருந்தனர். மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கலப் பெயர்: எம்வி நிமலவ (MV Nimalawa) கல வகை: வழங்கல் கப்பல் படிமம்: படிமப்புரவு: அறியில்லை படிமப்புரவு: shipspotting.com சேதப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கலப் பெயர்: எம்வி மெர்க்ஸ் றுகுணு (MV MERCS Ruhunu) கல வகை: வழங்கல் கப்பல் படிமம்: படிமப்புரவு: MarineTraffic.com சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 2 பேர் தரநிலையுடனான பெயர்கள்: 'கடற்புலிகளின் மகளீர் பிரிவு துணைக் கட்டளையாளர்' லெப். கேணல் தாட்சாயினி எ இலக்கியா (இந்நடவடிக்கையின் கட்டளையாளர்), லெப். கேணல் குபேரன் கடற்கரும்புலி வகை: நீரடி நீச்சல் கரும்புலிகள் சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 3 (இரண்டு மோதியிடித்து வெடித்தன. மற்றொன்று கடலினுள் கவிழ்ந்தபடியே சிங்களவரால் கைப்பற்றப்பட்டது. எப்படி கவிழந்தது என்பது அறியில்லை) கல வகை: தாழ் தோற்றுருவத் தட்டை முச்சோங்கு (Low Profile Phontoon-Trimaran/Tritoon) கைப்பற்றப்பட்ட படிமம்: இதற்குப் புலிகள் சூட்டிய வகுப்புப் பெயர் அ வகைப் பெயர் தெரியவில்லை. 'கடல் நீரில் கவிழ்ந்த நிலையில்' 'கடற்கரைக்கு கட்டியிழுத்து வந்த பின்னர்' 'கடையார்' ஆதாரம்: உதயன்: 23/10/2008 | தமிழ்நெற்: 22/10/2008 (Explosions target Sri Lankan ships in the seas off Vadamaraadchi), (Sea Tigers sink Sri Lankan supply ship) | றெக் சைற்: https://www.wrecksite.eu/wreck.aspx?286246 திகதி: நவம்பர் 1, 2008 அடிபாட்டுக் காலம்: வைகறை 4:00 மணியளவில் இருந்து காலை 7:00 மணி வரை நிகழ்வு இடம்: வடமராட்சி கிழக்கில் உள்ள மணற்காட்டுக்கு நேரான கடற்பரப்பு & நாகர்கோவில் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: தவிபு அறிக்கையின் படி, வடமராட்சி கிழக்கில் உள்ள மணற்காட்டுக்கு நேரான கடற்பரப்பில் குறித்த நாள் வைகறை 4:00 மணியளவில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடற்புலிகளின் கலமணியை சிறிலங்கா கடற்படையின் சுலவுக்கலம், வோட்டர் ஜெட் வகுப்புப் படகுகள் மற்றும் பிற படகுகள் வழிமறித்துத் தாக்குதலை நடத்தின. அப்போது வெடித்த கடும் மோதல் 15 நிமிடம் நீடித்தது. கடற்புலிகளின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத சிறிலங்கா கடற்படையினர் பின்வாங்கிச் சென்றனர். இதன் பின்னர், அதே நாள் வைகறை 5:15 நிமிடமளவில் கடற்புலிகளின் 15 படகுகள் நாகர்கோவில் கடற்பரப்பில் சென்று கொண்டிருந்த போது, பருத்தித்துறையிலிருந்து குடத்தனை முதல் நாகர்கோவில் வரையான கடற்பரப்பில் ஆழ்கடல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆறு டோறாக் கலங்கள், வோட்டர் ஜெட் படகுகள், சுலவுக்கலம் (Hovercraft) உள்ளிட்ட 20 கலங்களுடன் கடற்புலிகளினதும் கடற்கரும்புலிகளினதும் படகுகளை தாக்கியழிக்க சிறிலங்கா கடற்படையினர் வியூகம் அமைத்துக் காத்திருந்தனராம். இந்த வியூகத்தை கடற்புலிகளும் கடற்கரும்புலிகளும் இணைந்து தீவிர தாக்குதல் மூலம் உடைத்தெறிந்தனராம். இதில் டோறாக் கலம் ஒன்றும் சுலவுக்கலம் ஒன்றும் கடற்புலிகளாலும் கடற்கரும்புலிகளாலும் அந்த இடத்திலேயே தாக்கி மூழ்கடிக்கப்பட்டனவாம். அத்துடன் வோட்டர் ஜெட் ஒன்று கடுமையாக சேதமாக்கப்பட்டதாம். அதேவேளை, சிறிலங்கா வான்படையின் கிபீர் வானூர்திகளும் கடற்படையினருடன் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளதுடன் தரையிலிருந்து பல்குழல் உந்துகணைத் தாக்குதலை சிறிலங்கா தரைப்படையினர் நடத்தினராம். கடற்புலிகளின் தீவிரமான தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாது சிறிலங்கா கடற்படையினர் காங்கேசன்துறைக்கு பின்வாங்கி ஓடினராம். இத்தாக்குதலில் சிறிலங்கா கடற்டையைச் சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டதாகவும் கடற்கரும்புலிகள் ஏழு பேர் வீரச்சாவடைந்ததாகவும் புலிகள் தெரிவித்தனர். ஆனால் இத்தாக்குதல் முடிந்தவுடன் சிறிலங்காக் கடற்படையினர் தமது சுலவுக்கலம் கொழும்பில் தரித்து நிற்பதாகவும் தாம் ஒரு கடற்தாக்குதலுக்கு ஏன் சுலவுக்கலத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் வினா எழுப்பியிருந்தனர். அத்துடன் இத்தாக்குதலில் தாம் எந்தவொரு கடற்கலத்தையும் இழக்கவில்லை என்றும் புலிகளின் அறிக்கைக்கு மறுப்புத் தெரிவித்திருந்தனர். ஆனால் நான்காம் ஈழப்போர் முடிந்த பின்னர் இக்கடற்சமரின் போது தமது படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டதாக அறிக்கையிட்டனர், சிங்களக் கடற்படையினர். முதலில் ஒன்றும் இழக்கவில்லை என்று கூறிவிட்டு பின்னர் ஒரு கடற்கலத்தை இழந்ததாக சிங்களம் கூறியிருப்பதால் சிங்களக் கடற்படையின் கல இழப்புத் தொடர்பான தகவலையும் நம்ப ஏலாமல் உள்ளது. சிறிலங்காக் கடற்படையின் சுலவுக்கலம் 2012ம் ஆண்டுதான் கடற்படையிலிருந்து ஆணையிழக்கப்பட்டது என்று சிங்களக் கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இத்தாக்குதல் தொடர்பில் புலிகள் வெளியிட்ட முதல் ஊடக வெளியீட்டில் உள்ள தகவல் தவறானது என்று புலப்படுகிறது. ஆதலால் இம்மொத்தத் தாக்குதல் தொடர்பான புலிகளின் & சிங்களக் கடற்படையின் தகவலை ஐயத்துடனே பார்க்கவேண்டியுள்ளது. புலிகள் இவ்வாறு செய்தது தரையில் ஏற்பட்ட தொடர் பின்னடைவுகளால் சோர்ந்து போயிருந்த மக்களை உற்சாகப்படுத்தும் நோக்குடன் வெளியிடப்பட்ட பரப்புரைத் தகவலோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. இல்லை, சிலவேளை விடுதலைப்புலிகள் "கூகர்" என்பதைத் தான் "கூவர்" என்று பிழையாகக் கூறினர் என்று எண்ணத் தோன்றினாலும் அவர்களின் கடந்தகால அறிக்கைகளின் உண்மைத்தன்மை இவ்வெணக்கருவிற்கு இடமளிக்க மறுக்கின்றன. எவ்வாறெயினும் போரின் போது ஓய்வு கிடைத்திருந்தால் புலிகள் தமது 'உயிராயுதம்' தொடர் மூலம் உண்மை நிலவரத்தை வெளியிட்டிருக்கக் கூடும்! மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: அறியில்லை புலிகள்: டோறா & சுலவுக்கலம் சிங்களக் கடற்படை: முதலில் ஒன்றுமில்லை என்று மறுப்புத் தெரிவித்திருந்தாலும், பின்னாளில் (2010) ஒரு கடற்கலம் என அறிக்கையிட்டுள்ளது சேதப்பட்ட (மோசமாக) கடற்கலங்கள்: அறியில்லை புலிகள்: வோட்டர் ஜெட் இத்தாக்குதல் தொடர்பாக சிங்களவர் வெளியிட்ட காட்சிப்பதிவுகள்: சமர் முடிந்த பின்னர் அதே நாளில் செம்பியன்பற்றுக் கடற்பரப்பில் கடற்புலிகளின் சண்டைப்படகொன்று தாக்கப்படும் காட்சிப்பதிவினை இங்கு பதிவிட்டுள்ளேன். சிங்கள வான்படையின் வேவு வேனூர்திகள் மூலம் எடுக்கப்பட்ட நிகழ்பட காட்சிப்பதிவின் மூலம் ஆகக்குறைந்தது கடற்புலிகளின் ஒரு வேவ் ரைடர் சண்டைப்படகாவது சிங்கள வான்படையால் செம்பியன்பற்றுக் கடற்பரப்பில் காலை 8:30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவீச்சில் தாக்கப்பட்டுள்ளது (மூழ்கடிக்கப்பட்டதா சேதமடைந்ததா இல்லையா என்பது தெரியவில்லை) தெளிவாகத் தெரிகிறது (இவ் வான் தாக்குதலில் கடற்புலிகளின் இரு சண்டைப்படகுகள் அழிக்கப்பட்டதாக சிங்கள வான்படைப் பேச்சாளர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது). கடற்சண்டையின் அகச்சிவப்புக் காட்சிப்பதிவு: சிங்களக் கடற்படையால் வெளியிடப்பட்ட இவ் அகச்சிவப்பு நிகழ்படக் காட்சிப்பதிவில் கடற்புலிகளின் நான்கு இடியன்கள் வெடிப்பது தெரிகிறது. முதலாவது பேரொளிகள்: இரு இடியன்கள் வேறு இரு கடற்கலங்களை அண்மையாக நெருங்கிய பின்னர் ஏற்படுகிறது. இதனால் இரு தீப்பிழம்புகள் ஏற்பட்டுள்ளன. பின்னர் அங்கு இரு கடற்கலங்கள் தொடர்ந்து சுடர்விட்டு எரிகின்றன. கரும்புலிப்படகுகள் எரிந்தாலும் இப்படித்தான் தெரியும் என்பதை உயிராயுதம் தொடர் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. இரண்டாவது பேரொளி: எப்படி ஏற்படது என்று தெரியவில்லை. ஆனால் இது கண்டிப்பாக ஏதேனும் ஒரு கடற்கலத்துடன் மொதியதால் ஏற்பட்டதாக இருக்க வேண்டும். ஏனெனில் மோதியிடிப்பதன் மூலம் ஏற்படும் கரும்புகை எழுந்து மேற்பரப்பில் பரவுவது தெளிவாகத் தெரிகிறது. அத்துடன் கடற்கலங்கள் எதுவும் தொடர்ந்து சுடர்விட்டு எரியவில்லை. மூன்றாவது பேரொளி: தீப்பிழம்பு எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் கடற்கலமொன்று தொடர்ந்து சுடர்விட்டு எரிகிறது. சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை புலிகள்: 20 பேர் சிங்களக் கடற்படை: 5 பேர் வீரச்சாவடைந்த மொத்தப் போராளிகள்: அறியில்லை கடற்கரும்புலிகள்: 7 பேர் தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் பதுமன் (பதுமன் மாஸ்டர்), லெப். கேணல் புலிக்குட்டி, லெப். கேணல் கண்ணன், மேஜர் கலைமதி, மேஜர் செந்தூரன், கப்டன் அகச்சேரன், கப்டன் கொள்கைக்கோன் கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் கடற்புலிகள்: அறியில்லை தரநிலையுடனான பெயர்கள்: சிறிலங்காக் கடற்படையின் தகவலின் படி, தாம் ஒட்டுக்கேட்டதாகவும், அதன் மூலம் 7 கடற்கரும்புலிகள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டதாகவும் மேலும் 16 பேர் காயப்பட்டதாகவும் தெரிவித்தனர். இதை உறுதிப்படுத்த முடியவில்லை. அத்துடன் கடற்சமரின் பின்னர் தாம் நடாத்திய தேடுதல் வேட்டையின் போது கடற்புலிகளின் 4 சிதைந்த சடலங்களையும் சில படைக்கலன்களையும் கைப்பற்றியதாகவும் தெரிவித்தனர். மேலும், 4ம் திகதி தவிபு ஓ 2922 என்ற தகட்டெண் உடைய ஆண் போராளியின் வித்துடல் பருத்தித்துறைக் கடற்கரையிலுள்ள சிங்களக் காவலரண் ஒன்றிற்கருகில் கரையொதுங்கியது. இது இக்கடற்சமரின் போது கொல்லப்பட்ட போராளியினுடையதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 4 கல வகை: அறியில்லை ஆதாரம்: உதயன்: 2/11/2000 | தமிழ்நெற்: 1/11/2008 (SLN Dvora, hovercraft sunk in major naval clash - Sea Tigers), 4/11/2000 (Male corpse washed ashore on Point Pedro coast) திகதி: நவம்பர் 18, 2008 அடிபாட்டுக் காலம்: காலை 6:15 மணியிலிருந்து சுமார் 45 நிமிடங்கள் நிகழ்வு இடம்: முல்லைத்தீவு நாயாற்றுக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: முல்லைத்தீவு நாயாற்றில் உள்ள கறுப்புமுனைக் நோக்கி சிறிலங்காக் கடற்படையின் சிறப்பு கடல் அதிரடிப்படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சிக்கு எதிரான கடற்புலிகளின் முறியடிப்புத் தாக்குதல் இதுவாகும். குறித்த பரப்பு நோக்கி வந்து கொண்டிருந்த சிறிலங்காக் கடற்படையின் இரண்டு வோட்டர் ஜெட் படகுகள் மற்றும் 12 அரோப் படகுகளைக் கொண்ட சிறப்பு அதிரடிப்படை அணியை வழிமறித்து 6:15 மணியளவில் கடற்புலிகள் தாக்குதல் மேற்கொண்டனர். சிங்களக் கடற்படையின் இந்நடவடிக்கைக்கு ஆதரவாக சிறிலங்காத் தரைப்படையினர் செறிவான எறிகணை வீச்சை மேற்கொள்ள வான்படையினர் மிக்- 27 தாரை வானூர்திகள் மற்றும் எம்.ஐ. 24 தாக்குதல் உலங்குவனூர்திகள் கொண்டு வான் சூட்டாதரவில் மிண்டினர். இருந்தபோதிலும் கடற்புலிகள் மிகத் தீவிரமாக எதிர்கொண்டு வலிதாக்குதலை முறியடித்தனர். கடற்புலிகள் தம் தரப்பில் எதுவித இழப்பும் ஏற்படவில்லையென்று தெரிவித்தனர். சேதமடைந்த கடற்கலங்கள்: 3 கடற்கல வகுப்புப் பெயர்: "சிறப்புப் படகுகள்" (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை. ஆனால் சிறப்புப் படகுகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் அவை அரோ ஆக இருக்கலாம் என்று கருதுகிறேன்.) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த போராளிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 19/11/2008 ******
  4. ஜெயார் தமிழருக்கு வழங்கிய இறுதித் தீர்வு - ‍ஜூலை 83, தொடரும் இனக்கொலை டெயிலிநியூஸ் ஆசிரியர் ஆரனை நான் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன். "நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?" என்று அவர் கேட்டார். "தாற்போதைக்கு வரை" என்று நான் பதிலளித்தேன். முழுக் கொழும்பு நகரமே எரிந்துகொண்டிருக்கிறது என்று அவர் கூறினார். 1977 ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்முறைகளைப் போலல்லாது இம்முறை தமிழரின் வீடுகள் மட்டுமே இலக்குவைக்கப்பட்டு எரியூட்டப்படுவதாக அவர் கூறினார். பின்னர், கவனமாக இருந்துகொள்ளுங்கள் என்று கூறிவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டார். மதியம் ஆகிக்கொண்டிருக்க ஆரன் சொல்வதன் அர்த்தத்தை நான் உணரத் தொடங்கினேன். நாங்கள் தங்கிருந்த வீடு அமைந்திருந்த ஒழுங்கையில் கடைசியாக அமைந்திருந்த வீடு தமிழர் ஒருவருடையது. அவ்வீட்டின் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதலை ஆரம்பித்திருந்தார்கள். அவர்கள் கடற்கரையோரமாக வந்திருக்க வேண்டும். வேறு சில தமிழர்களும் நாம் தங்கியிருந்த வீட்டில் அடைக்கலம் தேடியிருந்தார்கள். எனது மருமகனின் மூத்த சகோதரரும் பல்வைத்தியருமான எஸ் அருளம்பலம் அவர்கள் வேலைநிமித்தம் கொழும்பிற்கு வந்திருந்தார். அன்று வெளியில்ச் சென்ற அவரும் மிகுந்த பதற்றத்துடனும், களைப்புடனும் வீடு வந்து சேர்ந்தார். கொழும்பு மாநகரசபை அமைந்திருந்த பகுதியிலிருந்து கால்நடையாகவே பம்பலப்பிட்டி வரை அவர் நடந்து வந்திருக்கிறார்.வீதியில் பல தமிழர்களை அடித்தே கொன்ற சிங்களவர்கள், அவர்களை அவ்விடத்திலேயே எரித்துக்கொண்டிருப்பதைத் தான் பார்த்ததாகக் கூறினார் . எனது ஒழுங்கையின் முடிவிலிருந்து இரண்டாவது மூன்றாவது வீடுகளும் இபோது தாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. நான் வீட்டிலிருந்த அனைவரையும் வீட்டின் மதிலைத் தாண்டி அயலவரின் காணிக்குள் குதிக்குமாறு கூறினேன். அயலவர் ஒரு இஸ்லாமியர், எம்மைத் தமது கழிவறையில் ஒளிந்துகொள்ளுமாறு கூறினார். வைத்தியர் உடற்பருமன் கொண்டவர், ஆகவே ஐந்தடி மதிலைத் தாவிக் குதிப்பதென்பது அவருக்கு மிகவும் கடிணமாக இருந்தது. ஆகவே, இந்தப்பக்கம் இருந்து இரண்டு இளைஞர்கள் அவரைத் தூக்கி மதில் மேலால் எறிந்துவிட, அடுத்த பக்கம் நின்ற சிலர் அவரைத் தாங்கிப் பிடித்துக்கொண்டனர். நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. எனது இரு மகன்களையும் அன்று எம்முடன் வீட்டில் இருந்தவர்களையும் எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும். ஆகவே மகாவலி அபிவிருத்தி அமைச்சர் காமிணி திசாநாயக்காவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டேன். தொலைபேசியின் மறுமுனையில் பேசிய அவரது மனைவி, "தனது நண்பர்களில் ஒருவருக்கு உதவுவதற்காக அவர் வெளியே சென்றுவிட்டார்" என்று அவர் பதிலளித்தார். அவருடன் பேசி எனது நேரத்தை மேலும் வீணடிக்க நான் விரும்பவில்லை. ஆகவே நான் நிதியமைச்சர் ரொனி டி மெல்லுக்குத் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தினேன். அவரும் ஜனாதிபதி ஜெயவர்த்தனவுடன் கூட்டம் ஒன்றில் இருப்பதாக எனக்குச் சொல்லப்பட்டது. பின்னர் மீன்வளத்துறை அமைச்சர் பெஸ்ட்டஸ் பெரேராவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டேன். அவரும் ஜெயவர்த்தனவுடன் அச்சமயம் இருப்பதாக எனக்குக் கூறப்பட்டது. ஆனால், என்னுடன் பேசியவர் பெஸ்ட்டஸ் பெரேராவுக்கு ஏதும் தகவலை வழங்க விரும்புகிறீர்களா என்று கேட்டார். நான் அப்போது தங்கியிருந்த வீட்டின் முகவரியை அவரிடம் கொடுத்து, எனக்குப் பாதுகாப்பு தரமுடியுமா என்று அமைச்சரைக் கேளுங்கள் என்று கூறிவிட்டு வைத்துவிட்டேன். ஜெயார் காலை 8 மணியிலிருந்து ஜனாதிபதிச் செயலகத்தில் இருந்திருக்கிறார். பின்னாட்களில் ரொனி டி மெல் என்னிடம் பேசும்போது அன்று காலை 11 மணியிலிருந்து மதியம் 1 மணிவரை ஜெயாருடன் தான் பேசிக்கொண்டிருந்ததாகக் கூறினார். தமிழ் மக்களின் சொத்துக்களைக் குறிவைத்து சிங்களவர்கள் காலை 10 மணிக்கு அன்று தாக்குதலை ஆரம்பித்திருந்தனர். இதனையடுத்தே தான் ஜெயாரைச் சந்திக்க காலை 11 மணியளவில் அவரது செயலகத்திற்குச் சென்றதாக ரொனி டி மெல் கூறினார். பெஸ்ட்டஸ் பெரேரா பேசும்போது தான் அன்று நாள் முழுதும் ஜெயாருடன் இருந்ததாகக் கூறினார். ஜெயாரை அன்று தொண்டைமானும் சந்தித்ததாகக் கூறினார். அவரது சுயசரிதையினை எழுதியவன் என்கிற முறையிலும், அவருடன் சுமார் 30 வருடங்களாக நட்பில் இருந்துவருபவன் என்கிற வகையிலும் அவரை எனக்கு நன்றாகப் பரீட்சயமாகியிருந்தது. அன்று தான் ஜெயாரைச் சந்தித்தபோது ஜெயார் மகிழ்வாகவும், நிதானத்துடனும் காணப்பட்டதாக தொண்டைமான் என்னிடம் கூறினார்.தன்னைச் சந்திக்க வந்திருந்த அமைச்சர்களும் அதிகாரிகளும் வெளியே தாம் கண்ட பயங்கரங்கள் குறித்து கூறும்போது ஜெயார் அமைதியாகச் செவிமடுத்துக்கொண்டிருந்தார் என்று தொண்டைமான் கூறுகிறார். "என்னை கோபம் ஆட்கொண்டிருந்தது. நான் அப்போதுதான் எனது பேத்தியை மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் எனது வீட்டிற்குப் பாதுகாப்பாக அழைத்து வர முடிந்திருந்தது.எனது வீட்டிலிருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு வந்துகொண்டிருக்கும்போது வீதிகளில் தமிழர்களை சிங்களவர்கள் அடித்துக் கொல்வதையும், அவரது சொத்துக்களை சூறையாடி எரித்துக்கொண்டிருப்பதையும் கண்டேன். "நீங்கள் கட்டாயம் இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்" என்று ஆத்திரம் கொண்டு ஜெயாரைப் பார்த்துக் கத்தினேன். அதற்கு அமைதியாகப் பதிலளித்த ஜெயார், "அதற்கு நான் என்ன செய்யமுடியும்?" என்று அலட்சியமாக என்னைப் பார்த்துக் கேட்டார். "உடனேயே ஊரடங்குச் சட்டத்தினை அமுல்ப்படுத்துங்கள்" என்று நான் பதிலளித்தேன். "ஊரடங்குச் சட்டமா? அதை அமுல்ப்படுத்தப்போவது யார்?" என்று ஜெயார் என்னைப் பார்த்து மீண்டும் கேட்டார். அதன்பின்னர் அவரோடு பேசுவதில் பயனில்லை என்று எனக்குப் புரிந்தது, எனக்குத் தேவையானதெல்லாம் தமிழர் மீதான வன்முறைகளை எப்படியாவது தடுத்து நிறுத்துங்கள் என்பது மட்டும்தான்" என்று தொண்டைமான் கூறினார். நான் வேண்டிக்கொண்டதற்கேற்ப பெஸ்ட்டஸ் பெரேரா எனக்குப் பாதுகாப்பினை ஒழுங்குபடுத்தியிருந்தார். நான் தங்கியிருந்த பம்பலப்பிட்டி காஸல் ஒழுங்கைக்கு பொலீஸ் ரோந்து அணியொன்று வந்துசென்றதுடன், எனது ஒழுங்கையின் முகப்பிலும் பொலீஸ் காவல் இடப்பட்டது. ஏற்கனவே ஒழுங்கையின் பின்புறத்தால் தமிழர்களின் வீடுகளைத் தாக்கிக்கொண்டு வந்த சிங்களக் காடையர்கள் பொலீஸாரின் பிரசன்னத்தைக் கண்டதும் அங்கிருந்து விலகி மற்றைய பகுதிகள் நோக்கிச் சென்றது.
  5. ஜெயாரினால் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட இறுதித் தீர்வு பொரள்ளைப் பகுதியிலிருந்து தீயின் நாக்குகள் மேலெழுந்துவருவதைப் பார்த்தபோது நான் கலக்கமடைந்தேன். அந்த நெருப்பு நானிருந்த திசைநோக்கி நகர்ந்துவரவே நான் மிகுந்த துயரமடையத் தொடங்கினேன். பியதாச என்னிடம் சிலநேரத்திற்கு முன்னர் கூறிய விடயங்கள் உண்மைதானோ? இதற்கு மேலதிகமாக எனது அலுவலகத்திற்கு வந்துகொண்டிருந்த தொலைபேசி அழைப்புக்கள் மேலும் கவலையைக் கொடுத்தன. எனது அலுவலகத்திற்குப் பதற்றத்துடன் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்திய பல தமிழர்கள் தம்மீது இன்னொரு இனக்கலவரத்தினை சிங்களவர்கள் ஆரம்பித்துவிட்டார்களா என்று கேட்டபோது என்னால் பேசமுடியாது போய்விட்டது. அவ்வாறு என்னுடன் பேசிய பல தமிழர்களில் ஒருவர் முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் சி. குமாரசூரியர். "ஜெயவர்த்தனா தமிழர்கள் மேல் தனது குண்டர்களை இன்னுமொருமுறை ஏவி விட்டாரா?" என்று அவர் என்னைக் கேட்டார்.நான் அவரிடம் பியதாச என்னிடம் கூறிய விடயங்களைக் கூறி, அரசுக்கெதிரான சிங்களவர்களின் கோபத்தினை ஜெயார் தமிழர்கள் மீது திருப்பிவிட்டிருக்கிறார் என்று கூறினேன். "நான் மடத்துடன் பேசியிருக்கிறேன் (சிறிமாவைக் குறிப்பிட்டுக் கூறினார்), அந்த ராஸ்க்கல் தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள என்னவும் செய்யக்கூடியவர் என்று மடம் என்னிடம் கூறினார்" என்று குமாரசூரியர் கூறினார். சிறிமாவின் ஆட்சியில் குமார‌சூரியர் அமைச்சராகப் பதவி வகித்தவர், அதனாலேயே சிறிமாவை அவர் "மடம்" என்று விளித்திருந்தார். ராஜன் ஹூல் பொரள்ளைச் சம்பவத்தை தனது புத்தகமான "அதிகாரத்தின் மமதை" என்பதில் பின்வருமாறு விபரிக்கிறார், "என்னிடம் பேசியவர்கள் அனைவரும் பொரள்ளை மயானத்திலிருந்து ஆத்திரத்துடன் வெளியேறிச்சென்ற மக்களிடம் அரசுக்கெத்கிரான உணர்வே இருந்தது என்று கூறினார்கள். அவர்கள் என்னிடம் மேலும் கூறும்போது இரவு 10 மணியளவில் புதிதாக காடையர் குழுக்கள் அப்பகுதிக்குக் கொண்டுவந்து இறக்கப்பட்டனர். இவர்களே அக்கூட்டத்தின் அரசுக்கெதிரான ஆத்திரத்தினை தமிழருக்கெதிரான கோபமாக மாற்றினார்கள். அவர்கள் அனைவரும் அரசின் காடையர் குழுக்கள். ஆரம்பத்தில் இவ்வாறு அரசால் இறக்கப்பட்ட காடையர் குழுவுக்கும் மயானத்தில் இருந்து வெளியேறி பொரள்ளைச் சந்தி நோக்கி வந்துகொண்டிருந்த ஆத்திரப்பட்ட மக்கள் கூட்டத்திற்கும் இடையே முறுகல் ஏற்பட்டிருந்தது. நேரம் செல்லச் செல்ல அரசுக்கெதிரான தமது கோஷங்களைக் கைவிட்ட மொத்தக் கூட்டமும் தமிழருக்கெதிரான கோஷங்களை எழுப்ப ஆரம்பித்தது. இந்தச் சூழ்நிலையினைப் பாவித்தே அரச காடையர் குழு தன‌து நோக்கத்தினை நிறைவேற்றிக்கொள்ள ஆரம்பித்தது. பொரள்ளைப் பகுதியிலிருந்த தமிழருக்குச் சொந்தமான சொத்துக்களைக் குறிவைத்து தான் ஏலவே திட்டமிட்டதன்படி தாக்குதலை ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்து மொத்தக் கூட்டமும் தமது கைகளில் அகப்பட்ட தமிழர்களை அடித்துக் கொல்லத் தொடங்கியது". தமிழரின் கட்டடங்கள் எரியூட்டப்பட்டன, அவர்களின் வாகனங்கள் புரட்டிப் போடப்பட்டன, தமிழரின் கடைகளில் இருந்து பொருட்களைச் சிங்களவர்கள் கொள்ளையடிக்கத் தொடங்கினர். அன்றிரவு எமது செய்திப்பிரிவிற்குக் கிடைத்த தகவல்களுடன் ராஜன் ஹூலின் பதிவுகளும் ஒத்துப் போவதால் அவற்றினை இங்கே பாவித்திருக்கிறேன். பொரள்ளையிலிருந்து கொழும்பு நகர் நோக்கிய பாதையில் அமைந்திருக்கும் புஞ்சி பொரள்ளைப் பகுதிக்கு பியதாசவும் இன்னும் சில நிருபர்களும் நிலவரத்தை ஆராயச் சென்றிருந்தனர். அங்கே அரசின் தொழிற்சங்கக் காடையர் குழுவான ஜாதிக சேவக சங்கமய கலவரங்களை முன்னின்று நடத்திக்கொண்டிருப்பதைக் கண்டனர். லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஜாதிக சேவக சங்கமயவில் நானும் ஒரு உறுப்பினராக அப்போது இருந்தேன். அன்றிரவு நிறுவனத்தில் சாரதியாகக் கடமையில் இருந்த வாகனச் சாரதி ஆரியரட்ண ஜாதிக சேவக சங்கமயவின் செயற்குழு உறுப்பினராக இருந்தார்.அவரே பியதாசவையும் ஏனையவர்களையும் புஞ்சி பொரள்ளைச் சந்திக்கு அழைத்துச் சென்றிருந்தார். ஆரியரட்ண என்னுடன் பேசும் போது புஞ்சி பொரள்ளைப் பகுதியில் தமிழர்கள் மீது தாக்குதலை முன்னின்று நடத்திக்கொண்டிருந்தவர்கள் தனது தொழிற்சங்கத்தின் மூத்த உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் மட்ட அமைப்பாளர்களும்தான் என்று கூறினார். அவர் குறிப்பிட்டுக் கூறியவர்களில் முக்கியமானவர் கொழும்பு மாநகரசபையின் கவுன்சிலர் சங்கதாச, இவர் பிரேமதாசவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர். அன்றிரவு 11 மணிக்கு பியதாசவும் ஏனையோரும் நிலையத்திற்குத் திரும்பினர். அவர்கள் அங்குநடந்துகொண்டிருந்த தாக்குதல்கள் பற்றிக் குறிப்பிடுகையில் கின்ஸி வீதி, பார்ன்ஸ் வீதி, ஹோர்ட்டன் பிளேஸ், ரோஸ்மீட் பிளேஸ், காஸ்ட்டல் பிளேஸ், மற்றும் கொட்டா வீதி ரயில்வே நிலையத்தின் அருகிலிருந்த பிரதேசங்கள் அனைத்திலுமிருந்த தமிழர்களின் வீடுகளையும் கடைகளையும் இக்காடையர் குழு இலக்குவைத்து தாக்கி எரித்து வருவதாகப் பதற்றத்துடன் கூறினர். வீதி விளக்குகள் அணைக்கப்பட்ட நிலையில் பொரள்ளைப் பகுதியில் இருந்த தமிழரின் கடைகளிலிருந்து வான் நோக்கி எழுந்த தீச்சுவாலைகள் அப்பிரதேசத்தை இரவு வேளையிலும் வெளிச்சமாக்கிக் கொண்டிருந்தன. எரிந்துகொண்டிருந்த தமிழர்களின் கடைகள் வீடுகளிலிருந்த கூரைகளும், கன்னார்த் தகடுகளும் தீயின் வெப்பத்தில் வெடித்துச் சிதறியபோது துப்பாக்கிச் சுடும் சத்தம் போன்று தமக்குக் கேட்டதாக அவர்கள் கூறினர். சிங்களவர்கள் தங்கு தடையின்றி தமிழர்களின் சொத்துக்களைச் சூறையாடிக்கொண்டிருந்தனர்.
  6. ஆண்டு: 2007 திகதி: சனவரி 21, 2007 அடிபாட்டுக் காலம்: எற்பாடு 3:45 மணி முதல் மாலை 6:30 மணி வரை நிகழ்வு இடம்: திக்கத்திற்கும் பொலிகண்டிக்கும் இடைப்பட்ட கரையிலிருந்து 3 மைல் தொலைவிலுள்ள கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: வெற்றிலைக்கேணியிலிருந்து 15 முதல் 20 வரையான சண்டைப்படகுகளைக் கொண்ட கடற்புலிகளின் பல கலத்தொகுதிகள் பருத்தித்துறை துறைமுகத்தை நோக்கி வலிதாக்கும் நோக்கத்தோடு சென்றுகொண்டிருந்தன. அப்போது எதிர்பாராத வேளையாக கடற்புலிகளின் சில கலத்தொகுதியினர் சிங்களக் கடற்படையினரோடு முட்டுப்பட மோதலொன்று வெடித்தது. சம நேரத்தில் பருத்தித்துறைத் துறைமுகத்தில் சிட்டி ஒஃவ் லிவர்பூல் கப்பல் பொருட்களை (சிறிலங்கா அரசின் தகவலின் படி உணவுப்பொருட்களாம்) இறக்கிவிட்டு நின்றிருந்த வேளையே தாக்குதல் நடந்ததால் அதன் பாதுகாப்பின்பொருட்டு நங்கூரம் உயர்த்தப்பட்டு காங்கேசன்துறை நோக்கிப் பயணமானது. அப்போது கப்பலை 5 அல்லது 6 பல வகுப்புப் படகுகளைக் கொண்ட கடற்புலிகளின் இரு கலத்தொகுதிகள் பின்தொடர்ந்து சென்றன. உடனே கப்பலின் பாதுகாப்பிற்காக தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 10 கடற்படையினர் கடற்புலிகளை நோக்கிச் சுடத்தொடங்க அங்கும் ஒரு மோதல் வெடித்தது. சமரின் நடுவே கப்பலை இலக்குவைத்து நோக்கிப் பாய்ந்துசென்ற கடற்கரும்புலிகளின் இடியன் ஒன்று பகைச் சூட்டிற்கு இலக்காகி வெடித்துச் சிதறியது. அதன் வெடிப்பில் கப்பலின் கலக்கூடு (hull) சிறிது சேதமடைந்தது. எனினும் கப்பல் 3:45 மணி முதல் 5:45 மணிவரை கடற்புலிகளால் சுற்றிவளைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடற்புலிகள் அவ்விடத்தை விட்டகன்ற பின்னரே சிங்களக் கடற்படையின் கடற்கலங்கள் கப்பலை நெருங்கின. பின்னர் கப்பல் காங்கேசன்துறை நோக்கிப் படையினரால் கொண்டுசெல்லப்பட்டது. தொடர்ந்த கடற்சமரில் கடற்படையின் கடற்கலங்களை தாம் தொண்டைமானாறு வரை அடித்துக் கலைத்துச் சென்று விரட்டிவிட்டுத் திரும்பியதாகக் கடற்புலிகள் தெரிவித்தனர். நடந்த கடற்சமரில் கடற்புலிகளுடன் மிண்டிய சிங்களக் கடற்படையின் பல்வேறு வகுப்புகளைச் சேர்ந்த 15 சுடுகல & டோறாப் படகுகளுக்கு ஆதரவாக மாலை 6 மணியளவலிலிருந்து சிங்கள வான்படையின் மிக்-29 தாரை வானூர்திகள்-2, கிபிர் தாரை வானூர்திகள்-2, எம்.ஐ. 24 வகை தாக்குதல் உலங்குவானூர்திகளும் தாக்குதல் நடாத்தின. கடற்படையினருக்கு உதவியாக தரையிலிருந்து முள்ளி, நாகர்கோவில், மந்திகை ஆகிய முகாம்களிலிருந்து சேணேவி, தகரி மற்றும் பல்குழல் உந்துகணைத் தாக்குதல்கள் கடலை நோக்கி மேற்கொள்ளப்பட்டன. இக் கடற்சமரால் கரையோரப் பகுதி மக்கள் இடம்பெயர்ந்து வேற்றிடங்களுக்குச் சென்றனர். கடலில் மோதல் வெடித்ததிலிருந்து பலாலி மற்றும் பல்லப்பை ஆகிய இடங்களிலிருந்து வடமராட்சி வடக்குப் பரப்பு நோக்கி சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான எறிகணை வீச்சில் ஒரு எறிகணை அல்வாய் சிறிலங்காப் பாடசாலையில் வீழ்ந்தது. இதன் சிதறல்களால் கிறேசியன் பானுமதி என்ற பெண் கொல்லப்பட்டதோடு அவருக்கு அருகில் நின்றிருந்த அவரின் இரு பிள்ளைகளும் காயமடைந்தனர். இக்கப்பலானது யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்காப் படையினருக்கும் பொதுமக்களுக்கும் வழங்கல் பொருட்கள் எடுத்து வரப்படும் கப்பல்களில் ஒன்றாகும். இக்கப்பலில் 10 சிறிலங்காப் படையினரும் 15 பொதுமக்களும் பயணித்திருந்தனர். இதிலிருந்த 15 பொதுமக்கள் கலக்குழுவினரில் பெரும்பாலாtனோர் இந்தியர்கள் ஆவர். கப்பலிலிருந்த கலக்குழுவினருக்கோ கடற்படையினருக்கோ எவ்விதச் சேதமுமில்லையென்று சிறிலங்கா அரசின் படைத்துறைப் பேச்சாளர் பிரசாத் அமரசிங்கே அற்றைநாளே ஊடகங்களுக்குத் தெரிவித்தார். சேதப்பட்ட (சிறிய) கடற்கலங்கள்: 1 கடற்கலப் பெயர்: சிட்டி ஒஃவ் லிவர்பூல் (City of Liverpool) கல வகை: சரக்குக் காவி படிமம்: படிமப்புரவு: அறியில்லை சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 1 ஆள் தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் கார்குழலி கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் சக்கை வண்டிகள், எண்ணிக்கை: ஆகக்குறைந்தது 1 கல வகை: அறியில்லை ஆதாரம்: உதயன்: 22/01/2007 | தமிழ்நெற்: 21/01/2007 (Sea Tiger boats enter Point Pedro harbour), (SLA shelling kills mother, wounds children in Pt. Pedro) திகதி: சனவரி 29 & 30, 2007 அடிபாட்டுக் காலம்: வைகறை 5:40 மணியளவில் நிகழ்வு இடம்: கொழும்புத் துறைமுகம் நிகழ்வு விரிப்பு: கொழும்புத் துறைமுகத்தினுள் ஊடுருவிய கடற்கரும்புலிகளால் அங்கு தரித்து நின்ற நான்கு புளு ஸ்ரார் வகுப்புப் படகுகள் அழிக்கப்பட்டன. வெடிப்பு அதிர்வால் துறைமுகத்தினுள் இறங்கிக்கொண்டிருந்த ஒரு சரக்குக் கப்பலும் மெல்லிய சேதமடைந்தது. ஆனால் இவற்றை மூடி மறைந்த சிங்களம் தாம் துறைமுகத்தினுள் நுழைந்த மூன்று இடியன்களை சுட்டு வெடிக்க வைத்துவிட்டதாகவும் ஒரு தமிழர் மற்றும் 8 சிங்களவர் என மொத்த 9 மீனவர்களைக் கைது செய்து அவர்கள் புலிகள் என்றும் அவர்களில் ஒருவர் சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்தார் என்றும் மற்றொருவர் சயனைட் உட்கொண்ட படி பிடிபட்டார் என்றும் கதை அளந்தது. ஆனால் 31 ம் திகதி மட்டில் அகில இலங்கை மீனவ சங்கம் பிடிக்கப்பட்டவர்கள் முன்னக்கரையைச் சேர்ந்த மீனவர்கள் என்றும் அவர்களுக்கும் இதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையென்று கூறிட சிங்களத்தின் குட்டு உடைபட்டது. பின்னர் கரையோர மக்கள் போர்க்கொடி தூக்க அவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அந்த அப்பாவித் தமிழர் மட்டும் சிங்களப் புலனாய்விப் பிரிவினரால் தொடர்ந்து மறியலில் வைக்கப்பட்டார். தாக்குதலின் முழு விரிப்புக் கிடைக்கப்பெறவில்லை. புலிகளும் இத்தாக்குதல் தொடர்பாக எந்தவொரு அறிக்கையையும் வெளியிடவில்லை. வீரச்சாவடைந்த கரும்புலிகளின் பெயர் விரிப்பினை மட்டும் அறிவித்தனர். இந்த மீனவர் சிக்கல் தொடர்பாக தொடர்பாக மேலும் வாசிக்க: மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 4 கடற்கல வகுப்புப் பெயர்: புளூ ஸ்ரார் (விதப்பான கல வகுப்பு அறியில்லை. இந்த புளூ ஸ்ரார் நிறுவனத்தால் படைத்துறைக்கு K-71, K-72, சீ கார்ட் ஆகிய வகுப்புக் கடற்கலங்கள் உருவாக்கப்படுகின்றன) கல வகை: அறியில்லை சேதப்பட்ட (மெல்லிய) கடற்கலங்கள்: 1 கடற்கலப் பெயர்: பெலொபோனேசியன் பிறைட் (PELOPONESIAN PRIDE) கல வகை: கொள்கலன் காவி படிமம்: படிமப்புரவு: MarineTraffic.com சிறிலங்கா கடற்படை ஆளணியினkozhuரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 5 பேர் தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் சுகந்தன், மேஜர் தீக்கதிர், லெப். மணிக்கொடி, கப்டன் முறையமுதன், லெப். எழுகடல் இவர்களில் லெப். எழுகடல் மற்றும் கப்டன் முறையமுதன் ஆகியோர் இத்தாக்குதலிற்கு கடல் வேவுப்புலிகளாகச் சென்று பின்னர் கடற்கரும்புலிகளாகி வீரச்சாவடைந்தனர் என நான் தமிழீழத்தில் வசிக்கும் போது கேள்விப்பட்டனான். கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் வீரச்சாவடைந்த கடற்புலிகள்: அறியில்லை ஆதாரம்: தமிழ்நெற்: 27/01/2007 (Attack boats enter Harbour of Colombo, SLN claims destroying 3 boats), (Confusion amidst harbour attack black out), 31/01/2007 (Union: Navy destroyed fishing boats, not Tiger craft), 02/02/2007 (Fishing hamlet fears backlash after Navy arrests) | எரிமலை: மார்ச் 2007 திகதி: மார்ச் 28 & 29, 2007 அடிபாட்டுக் காலம்: மாலை 10:00 மணி முதல் சாமம் 1:00 மணி வரை நிகழ்வு இடம்: முல்லைத்தீவிற்கும் அளம்பிலிற்கும் இடைப்பட்ட கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக் கடற்பரப்புக்குள் நுழைந்த சிறிலங்காக் கடற்படையின் 23 டோறாக்கள் மீது கடற்புலிகள் நடாத்திய எதிர்த்தாக்குதல் இதுவாகும் என்று தவிபு தெரிவித்திருந்தனர். இதில் சிறிலங்காக் கடற்படையின் 2 டோறாக்கள் மோசமாக சேதமடைந்தன. சேதமடைந்த டோறாக்களை ஏனைய டோறாக்கள் கட்டியிழுதவாறு திருமலை நோக்கி தப்பியோடின. கடற்புலிகள் அவர்களை திருமலை வரை விரட்டிச்சென்றுவிட்டுத் திரும்பினர். இத்தாக்குதலில் குறைந்தது 10 வரையான கடற்புலிப் படகுகள் பங்குபெற்றியிருந்தன என்று சிங்களக் கடற்படை தெரிவித்தது. கடற்புலிகள் தரப்பில் படகுகள் எதுவும் மூழ்கடிக்கப்படவில்லை. இக்கடற்சமரினிடையே அளம்பில் கரையோரத்தில் சிங்களக் கடற்படையினர் சேணேவித் தாக்குதல் நடாத்துவதால் அங்கு வசித்து வந்த மக்கள் அவலப்பட்டு பாதுகாப்பான இடம்தேடி இடம்பெயர்ந்தனர். இத்தாக்குதலில் ஒரு தரைப்புலிப் போராளி வீரச்சாவடைந்துள்ளதை வைத்துப் பார்க்கும் போது இது தென் தமிழீழத்திலிருந்து வட தமிழீழத்திற்குப் போராளிகளை ஏற்றிப்பறிக்கும் நடவடிக்கையின் போது ஏற்பட்ட முட்டலால் வெடித்த கடற்சமரெனத் துலங்குகிறது. சேதப்பட்ட (மோசமாக) கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினkozhuரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த தரைப்புலிகள்: 1 ஆள் தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் குட்டிவீரன் எ கனிவாளன் வீரச்சாவடைந்த கடற்புலிகள்: அறியில்லை ஆதாரம்: உதயன்: 30/03/2007 திகதி: ஏப்ரல் 6, 2007 அடிபாட்டுக் காலம்: நண்பகல் 15 மணியிலிருந்து 11:30 மணிவரை நிகழ்வு இடம்: மன்னாரின் புலிகளின் கட்டுப்பாட்டுக் கற்பிட்டி கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: இரு தரப்பின் சுற்றுக்காவல் கலத்தொகுதி ஒன்றை ஒன்று நேருக்கு நேர் சந்தித்த போது வெடித்த கடற்சமர் இதுவாகும். இதில் கடற்புலிகளின் சுற்றுக்காவல் படகுத்தொகுதியின் கட்டளையாளரின் தகவலின் படி சிங்களவரின் வோட்டர் ஜெட் ஒன்று மூழ்கடிக்கப்பட்டதாக தவிபு படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்தார். எனினும் சிறிலங்காப் படையினர் இதை மறுத்ததோடு கடற்கரும்புலிப் படகொன்றை தாம் மூழ்கடித்ததோடு அதன் வெடியதிர்வில் தமது வோட்டர் ஜெட் ஒன்று சேதமடைந்தது என்றனர். அதனால் அது கற்பிட்டி கடற்றுறைக்கு இழுத்துவரப்பட்டது என்றும் கூறினர். ஆயினும் விடுதலைப்புலிகளின் மாவீரர் பட்டியலின் படி கடற்கரும்புலிகள் யாரும் இத்தாக்குதலில் வீரச்சாவடையவில்லை. மேலும் சிறிலங்காக் கடற்படையின் வட்டாரங்களின் படி காயப்பட்டு கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 8 சிங்களக் கடற்கலவர் சிறிலங்கா வான்படையால் காப்பாற்றப்பட்டு கொழும்புக்கு வான்தூக்கிச் செல்லப்பட்டனர். ஆகவே இதில் கடற்படையின் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டிருப்பது உறுதியாவதோடு கடற்படையின் வழமையான மறைப்பும் இங்கு தெரிகிறது. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட் சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 7 பேர் காயப்பட்டோர்: சிறிலங்காக் கடற்படையின் வட்டாரங்களின் படி 8 பேர் கடலில் காயப்பட்டு தத்தளித்துக்கொண்டிருந்னர். வீரச்சாவடைந்த கடற்புலிகள்: ஆகக்குறைந்தது 1 ஆள் தரநிலையுடனான பெயர்கள்: கப்டன் றெஜி ஆதாரம்: உதயன்: 7/04/2007 | தமிழ்நெற் 6/04/2007 (SLN vessel sunk, 7 killed in Mannar seas - LTTE) திகதி: மே 4 & 5 , 2007 அடிபாட்டுக் காலம்: சாமம் 11:30 மணியளவில் தொடங்கி அடுத்தநாள் விடிகாலை வரை தொடர்ந்தது. நிகழ்வு இடம்: புல்மோட்டைக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: இரு தரப்பின் சுற்றுக்காவல் கலத்தொகுதிகள் நேருக்கு நேர் சந்தித்த போது வெடித்த கடற்சமர் இதுவாகும் என்று புலிகள் தெரிவித்தனர். எனினும் அக்கால கட்டத்தில் கடல்வழியாக திருமலையிலிருந்து வன்னிக்கு போராளிகளை ஏற்றிப்பறிக்கும் நடவடிக்கை நடந்துகொண்டிருந்ததால் அதில் ஈடுபட்ட கடற்புலிகளுக்கும் சிங்களக் கடற்படைக்கும் ஏற்பட்ட கடற்சமராக இது இருக்கலாம் என்று இவ்வெழுத்தாளர் கருதுகிறார். மூண்ட சமரில் கடற்படையின் இரு டோறாக் கலங்கள் மோசமாகச் சேதப்படுத்தப்பட்டன. அவை சமரின் முடிவில் கடற்படையினரால் கட்டியிழுத்துச் செல்லப்பட்டன. இதே வேளை கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் சிக்கி திரியாய்க் கடற்பரப்பில் மூன்று சிங்கள மீனவர்கள் கொல்லப்பட்டனர் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சேதப்பட்ட (மோசமாக) கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: பலர் காயப்பட்டோர்: பலர். வீரச்சாவடைந்த போராளிகள் : ஆகக்குறைந்தது 3 பேர் கடற்கரும்புலிகள்: 1 ஆள் தரநிலையுடனான பெயர்கள்: லெப்.கேணல் தமிழவன் எ புதியவன் கடற்புலிகள்/ தரைப்புலிகள்: ஆகக்குறைந்தது 2 பேர் தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் சதா, வீரவேங்கை தூயோன் ஆதாரம்: உதயன்: 6/05/2007 திகதி: மே 24, 2007 அடிபாட்டுக் காலம்: சாமம் 12:45 மணிக்குத் தரையிறக்கப்பட்டு சாமம் 1:15 மணிக்கு தளம் முற்றுக்கையிடப்பட்டு தாக்குதல் தொடுக்கப்பட்டு வைகறை 2:45 மணிக்கு முற்றாக அழிக்கப்பட்டது. நடவடிக்கை இரண்டு மணிநேரம் நீடித்தது நிகழ்வு இடம்: நெடுந்தீவு குந்துவாடியில் அமைந்துள்ள குயின்ராக் கடற்படைத்தளம் & அண்டிய கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: நெடுந்தீவின் குந்துவாடியில் 2006ம் ஆண்டு சிறிலங்கா கடற்படையினர் அமைத்த குயின்ராக் கடற்படைத்தளம் மீதான ஈரூடகத் தாக்குதலணியின் (2008இல் 'சேரன் ஈரூடகத் தாக்குதலணி' எனப் பெயர் சூட்டப்பட்டப்பெற்றனர், இதன் முதலாவது கட்டளையாளரின் பெயரால்) தாக்குதல் இதுவாகும். தமிழீழத்தின் மேற்குப் பக்கத்திலுள்ள கடற்புலித் தளமொன்றிலிருந்து 23ம் திகதி மாலை வேளையில் கடற்புலிகளின் துணையுடன் ஈரூடகத் தாக்குதலணியினர் புறப்பட்டனர். இவர்கள் 6 கட்டைப்படகுகளில் (Dinghy) ஏற்றிச்செல்லப்பட்டனர். இவற்றோடு வேறு பல படகுகள் என மொத்தம் 12 படகுகள் இத்தாக்குதலில் பங்கேற்றிருந்தன. சென்றவர்கள் நெடுந்தீவு வெள்ளைப் பரப்பில் சாமம் 12:45 மணியளவில் தரையிறக்கப்பட்டனர். அங்கிருந்து குந்துவாடி நோக்கி நகர்ந்த தமிழரின் ஈரூடகப் படையினர் சாமம் 1:15 மணிக்குத் தளத்தை முற்றுகையிட்டு தாக்குதலைத் தொடுத்தனர். வைகறை 2:45 மணியளவில் தளம் முற்றாக அழிக்கப்பட்டது. இந்நடவடிக்கை இரண்டு மணிநேரம் நீடித்தது. தளத்தினுள் சமர் நடந்துகொண்டிருக்கும் போது உதவிக்கு விரைந்த கடற்படையினர் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டது. அப்போது டோறா ஒன்று தாக்குதலிற்குள்ளாகி அருகிலிருந்த முருகைப் பாறையில் மோதி முற்றாகச் சேதமடைந்தது. மேலும் இரு வோட்டர் ஜெட்கள் சேதமடைந்தன. அத்தளத்தினுள்ளிருந்த போர்த்தளவாடங்கள் - குறிப்பாக கதுவீ (RADAR) ஒன்று - மற்றும் படைக்கலன்கள், கணைகள் என்பனவற்றைக் கைப்பற்றிக்கொண்டு பாதுகாப்பாகத் தளம் திரும்பினர், ஈரூடகப் படையினர். கடற்படையின் தளக் கட்டமைப்புகளுக்கு வலுத்த சேதம் விளைவிக்கப்பட்டது. தளத்தினுள் கடற்படையினரின் 34 சடலங்கள் கிடக்கக் காணப்பட்டது கடற்புலிகளால் உறுதிப்படுத்தப்பட்டது. இத்தாக்குதலில் யாழ் மாவட்ட கடற்புலிகளின் பொறுப்பாளர் லெப் கேணல் அருணன் மாஸ்டரும் பங்காற்றியிருந்தார். இத்தக்குதலின் போது படைத்தளத்தினுள்ளிருந்த படையினர் சிறிலங்கா வான்படையினை உதவிக்கு அழைத்தும் அவர்கள் உதவிக்கு கடைசிவரை வரவேயில்லை. இத்தீவில் வெட்டுக்கழி, பெரிய கழி, பேய்க்கழி, வெள்ளைக்கழி, செம்பட்டைக்கழி, இராமிழாப்புக்கழி, இரவதைக்கழி போன்ற கழிகளும் சண்ணாங்குளம், நெழுவினிக்குளம், கம்பராமடை, சமனன் குளம், வடக்குறாவெளிக் குளம் போன்ற குளங்களும் காணப்படுகின்றன. நிகழ்படம்: https://eelam.tv/watch/24-05-2007-ச-ற-த-த-வ-camp-attack-video_sFX5YAPmUeXthd2.html படிமங்கள்: படிமப்புரவு: நிலாவரை நூல் சேதமடைந்த கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட் சேதமடைந்த (முற்றாக) கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 34 பேர் காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த போராளிகள்: 7 பேர் ஈரூடகத் தாக்குதலணியினர்: 4 பேர் தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் தமிழ்வேந்தினி & பெயர் அறியில்லாப் போராளிகள் சிறிலங்கா அரசாங்கத்தின் தகவலின் படி தரநிலை அறியில்லாத முகிலன் (வீரசிங்கம் ஜங்கரன்), சுகிர்தன் (பாஞ்சாளன் சுகந்தன்), சிறிமாறன் (சந்திரசேகரன் மயூரன்), தமிழ்வேந்தினி, ??னிவிழி (செபஸ்தியாம்பிள்ளை மேரி கனிஷ்ரா), காலைத்தென்றல் (கதிரிப்பிள்ளை மரியா கௌரி), காதல்மைந்தன் (பிரான்ஸிஸ் ??னிகுமார்) தரை நடவடிக்கையின் போது 4 போராளிகள் மட்டுமே வீரச்சாவடைந்ததாக தவிபு அறிவித்தனர். ஆனால் சிறிலங்கா அரசின் (ஒற்றாடலால் அறியப்பட்டதாம்) இத்தகவலில் 7 பேர் வீரச்சாவடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. எனவே மேலதிகமான மூன்று பேர் கடலில் நடந்த சமரில் வீரச்சாவடைந்திருக்கலாம் என்று எண்ணுகிறேன். ஆதாரம்: உதயன்: 24/05/2007 | தமிழ்நெற் 24/05/2007 (Tigers attack Sri Lanka Navy installations in Delft) | கட்டுரை: மேஜர் தமிழ்வேந்தினியின் வாழ்க்கை வரலாறு திகதி: சூன் 19, 2007 அடிபாட்டுக் காலம்: எற்பாடு 5:30 மணிக்குத் தொடங்கி சாமம் 10:30 மணி வரை நிகழ்வு இடம்: பருத்தித்துறை முனை கடற்பரப்பிற்கும் வெற்றிலைக்கேணி - பருத்திக்காடு கடற்பரப்பிற்கும் இடைப்பட்ட கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: சிறிலங்காக் கடற்படையின் கட்டுப்பாட்டிலுள்ள நீர்ப்பரப்பான முனைக்குள் நின்றுகொண்டிருந்த கடற்புலிகள் மீது சிறிலங்காக் கடற்படையினர் மேற்கொண்ட வலிதாக்குதல் இதுவாகும். இதன்போது வெடித்த கடற்சமரில் கடற்புலிகளின் கல்லப்படாத வேவ் ரைடர் வகுப்பைச் சேர்ந்த 'இந்துமதி' என்ற கலப்பெயரைக் கொண்ட சண்டைப்படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டது. அது பின்னர் சிறிலங்காக் கடற்படையினரால் மீட்டெடுக்கப்பட்டது (இதை மறுநிலை பொறியியல் (reverse engineering) செய்து அதன் மூலமே சிறிலங்காக் கடற்படையினர் தமது வேவ் ரைடர் வகுப்புப் படகை 2008இல் உருவாக்கினர் என்று நம்பப்படுகிறது). வேறு சண்டைப்படகுகள் ஏதேனும் சேதப்படுத்தப்பட்டதா என்பது பற்றிய தகவல் தெரியவில்லை. இவ் மூழ்கடிக்கப்பட்ட சண்டைப்படகிலிருந்து பல ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கடற்படையினர் கைப்பற்றினர். இதிலிருந்த நான்கு வித்துடல்களையும் தரைவழிப் பாதை மூடப்பட்டுள்ளதால் கடல் வழியாக புலிகளிடம் கையளிக்க செஞ்சிலுவைச் சங்கம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்காக் கடற்படை தெரிவித்திருந்தது. கடற்படையினருக்கு தமது வரணி மற்றும் பல்லப்பை ஆகிய இடங்களிலுள்ள படைமுகாம்களிலிருந்து பல்குழல் உந்துகணை செலுத்தி மூலம் தரைப்படையினர் சூட்டாதரவை வழங்கினர். அவை வடமராட்சிக் கடற்பரப்பில் நீண்ட நேரமாக கடற்புலிகள் நின்றுகொண்டிருந்த இடங்களில் வீழ்ந்து வெடித்தன. சிறிலங்காக் கடற்படையினர் தரப்பில் அவர்களின் டோறா ஒன்று சேதப்படுத்தப்பட்டு சிங்கள கடற்படையினரால் கட்டியிழுத்துச் செல்லப்பட்டது. சேதப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: ஆகக்குறைந்தது 4 பேர் தரநிலையுடனான பெயர்கள்: 'படகு கட்டளை அதிகாரி' லெப். கேணல் முல்லைமகள், லெப். வர்மா, வீரவேங்கை இளங்கீரன், கப்டன் அன்புமலர் (இவர் காயமடைந்து மருத்துவமனையில் காயச்சாவடைந்தவர்) ஆதாரம்: உதயன்: 21 & 23/06/2007 | தமிழ்நெற் : 19/06/2007 (SLN, Sea Tigers battle at Point Pedro seas) திகதி: சூலை 7, 2007 அடிபாட்டுக் காலம்: அதிகலை சுமார் 3 மணிநேரம் நிகழ்வு இடம்: கொக்கிளாய் தொடக்கம் கொக்குத்தொடுவாய், புல்மோட்டை வரையான கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: தமிழீழக் கடற்பரப்புக்குள் நுழைய முற்பட்ட சிறிலங்காக் கடற்படையின் 21 டோறாக் கலங்களை வழிமறித்து கடற்புலிகள் மேற்கொண்ட முறியடிப்புத் தாக்குதல் இதுவாகும். தாக்குதலின் போது கடற்படையினருக்கு தமது கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், புல்மோட்டை ஆகிய இடங்களிலுள்ள படைமுகாம்களிலிருந்து சேணேவிகள் மூலம் தரைப்படையினர் சூட்டாதரவை வழங்கினர். ஆயினும் கடற்படையினர் திருமலை நோக்கி விரட்டப்பட்டனர் என்று கடற்புலிகள் தெரிவித்தனர். சிறிலங்காக் கடற்படையினர் தரப்பில் அவர்களின் டோறாக்கள் மூன்று சேதப்படுத்தப்பட்டு சிங்கள கடற்படையினரால் கட்டியிழுத்துச் செல்லப்பட்டன. கடற்புலிகளின் சண்டைப்படகுகளுக்கு ஏற்பட்ட சேத விரிப்புகள் தெரியவில்லை. எனினும் சிறிலங்காக் கடற்படையின் பேச்சாளரோ கடற்புலிகள் குச்சவெளியிலிருந்த தமது படைமுகாமை தரைவழியாகவும் கடல்வழியாகவும் (ஆகக்குறைந்தது 15 படகுகள்) நுழைந்து தாக்கினர் என்றும் மூண்ட முரட்டுத்தனமான இருமுனைச் சமர் முறியடிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். எவ்வாறெனினும் அற்றை நாள் சமரில் இரு போராளிகளே வீரச்சாவடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சேதப்பட்ட கடற்கலங்கள்: 3 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 2 பேர் தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் நீலன், வீரவேங்கை சுடர்வேந்தன் ஆதாரம்: உதயன்: 9/07/2007 | தமிழ்நெற்: 8/07/2007 (SLN, Sea Tigers clash in the seas off Pulmoaddai) திகதி: ஓகஸ்ட் 12 & 13, 2007 அடிபாட்டுக் காலம்: சாமம் 10:00 மணி முதல் வைகறை 2:30 மணி வரை நிகழ்வு இடம்: கொக்கிளாய், நாயாறு, புல்மோட்டை ஆகிய கடற்பரப்புகள் நிகழ்வு விரிப்பு: கடற்புலிகளிடம் தலைநகர் திருமலையின் புல்மோட்டையில் இருந்து வன்னிக்கு பின்வாங்கி வந்த போராளிகளை ஏற்றிப்பறிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. இதனை சிறிலங்காப் படையினரினர் தமது கட்டளைப் பீடத்திற்கு அனுப்பியதை புலிகளின் ஒற்றாடல் பிரிவினர் அறிந்து கடற்புலிகளுக்குத் தெரிவித்திருந்தனர். இதனை அறிந்தபடியே புல்மோட்டையை நோக்கிக் கடற்புலிகளின் வழங்கல் படகுகளை உள்ளடக்கிய கலத்தொகுதிகள் தாக்குதல் கட்டளையாளர் லெப். கேணல் தியாகனின் தலைமையில் புறப்பட்டுச் சென்றன. அப்போது கரையை நோக்கித் தரைவழியாக நகர்ந்துகொண்டிருந்த தரைப்புலிகள் எதிர்பார்த்தது போலவே சிறிலங்கா தரைப்படையுடன் முட்டுப்பட்டதால் அவ்விடத்தில் சமரொன்று வெடித்தது. அதேவேளை புலிகளின் நகர்வினை ஏற்கனவே அறிந்து வைத்திருந்த சிறிலங்காக் கடற்படையினர் வெளியேற எத்தனித்த போராளிகளை ஏற்றவென வந்த கடற்புலிகளை தடுக்கும் கடல் வியூகத்தினையும் கடலில் அமைத்தார்கள். புல்மோட்டையை நோக்கி வந்த கடற்புலிகளின் கலத்தொகுதிகளுக்கும் காத்திருந்த கடற்படையினரின் 20இற்கும் மேற்பட்ட டோறாக்களுக்கும் இடையில் கடுஞ்சமர் வெடித்தது. இதேவேளை கடற்படையினருக்கு ஆதரவாக தரைப்படையினரும் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், புல்மோட்டை ஆகிய இடங்களிலிருந்து கடலை நோக்கி எறிகணை வீச்சு நடாத்தினர். சிறிலங்காக் கடற்படையினர் தரப்பில் 3 டோறாக்களை கடற்புலிகள் சேதமாக்கியதாகவும் அவர்களை திருமலை நோக்கி விரட்டியடித்ததாகவும் புலிகள் அறிவித்தனர். ஆனால் கடற்புலிகளால் தரைப்புலிகள் அற்றை நாளில் அங்கிருந்து ஏற்றிப்பறிக்கப்பட்டனரா என்பது தெரியவில்லை. முல்லைத்தீவு மற்றும் சிலாவத்தையில் புலிகளின் ஆட்புலங்களில் பொதுமக்கள் வசிக்கும் பரப்புகளை நோக்கியும் எறிகணைகள் வீசப்பட்டன. கரையோரங்களில் உள்ள மக்கள் முள்ளியவளை மற்றும் முள்ளிவாய்க்கால் பரப்புகளுக்கு இடம்பெயர்ந்தனர். இந்தச் சமரில் தமிழரின் வேவ் ரைடர் வகுப்பைச் சேர்ந்த சண்டைவண்டியான ராஜ்மோகன் என்ற கலப்பெயரைக்கொண்ட படகு மூழ்கடிக்கப்பட்டது. இதன் படகு கட்டளை அதிகாரியாக லெப். கேணல் தியாகன் செயற்பட்டிருந்தார். சேதப்பட்ட கடற்கலங்கள்: 3 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 6 பேர் தரநிலையுடனான பெயர்கள்: ‘படகு கட்டளை அதிகாரி’ & 'தாக்குதல் கட்டளையாளர்' லெப். கேணல் தியாகன், 'படகு கட்டளை அதிகாரி' லெப். கேணல் கன்னியத்தம்பி, கப்டன் அகன்போர் எ செவ்வந்தன், 2ம் லெப். அகரக்கடல், 2ம் லெப். ஒளிநிலவன், 2ம் லெப். செந்தமிழ்வாணன் ஆதாரம்: உதயன்: 14/08/2007 | தமிழ்நெற்: 13/08/2007 (SLN, Sea Tigers battle at Point Pedro seas) | கட்டுரை: லெப். கேணல் தியாகனின் வாழ்க்கை வரலாறு திகதி: செப்டெம்பர் 26 & 27, 2007 அடிபாட்டுக் காலம்: சாமம் 10:30 மணியிலிருந்து வைகறை 3:30 மணிவரை நிகழ்வு இடம்: கொக்கிளாய்-புல்மோட்டைக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: சுருக்கமாக, திருமலையின் பேராறு மற்றும் கும்புறுபிட்டிக் காடுகளில் மறைந்திருந்த 300 இற்கும் மேற்பட்ட போராளிகளை வன்னிக்கு ஏற்றிப்பறிக்கும் கடல் நடவடிக்கை இதுவாகும். இக்கடல் நடவடிக்கையின் போது கடற்புலிகளின் சுமார் 20 வழங்கல் மற்றும் சண்டைப்படகுகள் பயன்படுத்தப்பட்டன. நடவடிக்கையின் போது சிறிலங்காக் கடற்படையின் 17இற்கும் மேற்பட்ட டோறாக்களுடன் ஏற்பட்ட கடற்சமர் வெடித்தது. இதேவேளை கடற்படையினருக்கு ஆதரவாக தரைப்படையினரும் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், புல்மோட்டை ஆகிய இடங்களிலிருந்து கடலை நோக்கி எறிகணை வீச்சு நடாத்தினர். புலிகளின் அலுவல்சார் அறிக்கையின்படி, நடந்த கடற்சமரின் ஒரு கட்டத்தில் கடற்புலிகள் கடற்படையின் டோறாக்களை புல்மோட்டை வரை பின்தள்ளிச் சென்று அங்கு வைத்து தீவிர தாக்குதல் தொடுத்தனர். இதன் போது கடற்படையின் இரு டோறாக்கள் மீளப்பாவிக்கேலாத நிலைக்கு சேதப்படுத்தப்பட்டன. அவற்றை கட்டியிழுத்துச் செல்லவென திருமலையிலிருந்து வந்த டோறாக்கள் மீதும் கடற்புலிகள் கலைத்து வலுவாக அடித்தனர். இதன் போது திருமலை துறைமுகத்திற்கு அருகில்வைத்து மேலுமொரு டோறா சேதமாக்கப்பட்டது. இழப்புகளுடன் சிறிலங்காக் கடற்படையினர் திருமலைக்குப் பின்வாங்கினர். புலிகள் தரப்பில் எந்தவொரு படகுகளும் மூழ்கடிக்கப்படவில்லை. அதே வேளை புலிகளின் படகுகள் சில சேதமடைந்தன. ஆனால் வழக்கம் போல் சிறிலங்காக் கடற்படையினர் தமது டோறாக்களுக்கு எவ்விதச் சேதமுமில்லையென்றும் கடற்புலிகளுக்கே அள்ளுகொள்ளையான இழப்புகளென்றும் கதை கட்டினர். முழு நிகழ்வின் விரிப்பையும் வாசிக்க: சேதப்பட்ட (மீளப்பாவிக்கேலாது) கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சேதப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை கடற்புலிகளின் ஆளணியினரில் வீரச்சாவடைந்தோர்: 3 பேர் தரநிலையுடனான பெயர்கள்: ‘படகு கட்டளை அதிகாரி’ லெப் கேணல் நிசாந்தன், பெயர் அறியா கடற்புலி (‘படகு கட்டளை அதிகாரி’ சுதாவின் படகில் இருந்த சூட்டாளர்களில் ஒருவர்), மற்றும் இன்னுமொரு பெயர் அறியா கடற்புலி காயப்பட்டோர்: பலர் ஆதாரம்: உதயன்: 29/09/2007 | தமிழ்நெற்: 28/09/2007 (Sea Tigers, Sri Lanka Navy clash in Eastern waters) திகதி: ஒக்டோபர் 13, 2007 அடிபாட்டுக் காலம்: காலை 9:45 மணி முதல் நண்பகல் 10:45 மணி வரை கடற்கலம் மூழ்கடிக்கப்பட்ட நேரம்: நண்பகல் 10:45 மணியளவில் நிகழ்வு இடம்: கல்லடி - முகத்துவாரக்கட்டை ஆகிய பரப்புகளுக்கு இடைப்பட்ட கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: விடுதலைப் புலிகளின் நீர்ப்பரப்புக்குள் புகுந்த சிறிலங்கா கடற்படையின் மூன்று கடற்கலங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வலிதாக்குதலால் மூண்ட கடற்சமர் இதுவாகும். இக்கடற்சமரின் போது சிறிலங்காக் கடற்படையினர் தரப்பில் ஒரு சுடுகலப் படகு மூழ்கடிக்கப்பட்டதோடு அதிலிருந்த படைக்கலன்களும் மூன்று சடலங்களும் கைப்பற்றப்பட்டன. கடற்புலிகள் தரப்பில் ஆளணியோ கடற்கல இழப்புகளோ ஏற்படவில்லை. கடற்சமரின் போது கடற்படையினருக்கு ஆதரவாக தரைப்படையினரும் பலாலியிலிருந்து கடலை நோக்கி எறிகணை வீச்சு நடாத்தினர். இவ்வெறிகணைகள் கொழும்புத்துறை, மணியந்தோட்டம், அரியாலை கிழக்கு ஆகிய பரப்புகளில் வீழ்ந்து வெடித்தன. இதனால் இப்பரப்பு மக்கள் பதற்றமாகினர். இக்கடற்சமரால் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் அலறித் துடித்து ஓடினர். எனினும் மீனவர்கள் ஆருக்கும் பாதிப்பு வரவில்லை. மாலை 7:30 மணியளவில் 40 மீனவர்கள் படையினரால் கைது செய்யப்பட்டு அவர்களின் கடல் "பாஸ்" பெறப்பட்டது. அதனை அடுத்த நாள் மாதா கோவிலடி படைமுகாமில் வந்து பெற்றுக்கொள்ளவும் என்று கடற்படையினர் கூறினராம். ஆனால் மீனவர்கள் குருநகர் படைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டனர். பாசையூர் - குருநகர் கடற்பரப்பில் 13/10 இடம்பெற்ற மோதலின் போது கொல்லப்பட்ட சிறிலங்காக் கடற்படை வீரர்களின் 3 சடலங்களை விடுதலைப் புலிகளின் அரச சார்பற்ற நிறுவனமும் ஐ.நா.வின் தொடர்பு அதிகாரியுமான எம். பாவரசன் கிளிநொச்சியில் உள்ள பன்னட்டு செஞ்சிலுவைச் சங்க நிகராளி திருமதி கட்ஜா லோரன்ஸிடம் 14ம் திகதி காலை 10:00 மணியளவில் கையளித்தார். மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: உட்கரை சுற்றுக்காவல் கலம் படகிலிருந்து கைப்பற்றப்பட்ட படைக்கலன்கள் வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், காயப்பட்டோர்: அறியில்லை கொல்லப்பட்டோர்: 5 பேர் படிமங்கள்: ஆதாரம்: உதயன்: 14/10/2007 | தமிழ்நெற்: 13/10/2007 (SLN arrests 32 Jaffna fishermen), (Sea Tigers sink SLA vessel, recover 3 bodies), 14/07/2007 (LTTE hands over 3 SLA bodies to ICRC) திகதி: நவம்பர் 23, 2007 அடிபாட்டுக் காலம்: காலை 7:50 மணியளவிலிருந்து தொடங்கி 2:35 மணி நேரமாகத் தொடர்ந்தது. நிகழ்வு இடம்: பேசாலை & தலைமன்னார் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: பேசாலைக் கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப்புலிகளின் நீர்ப்பரப்புக்குள் நுழைந்த சிறிலங்காக் கடற்படையின் 6 வோட்டர் ஜெட் வகுப்புப் படகுகள் மீது கடற்புலிகள் தாக்குதல் நடாத்தி விரட்டியடித்தனர். இத்தாக்குதலின் போது இரு வோட்டர் ஜெட் படகுகள் சேதமடைந்தன. கடற்படையின் நடவடிக்கையை வெற்றிகரமாக முறியடித்துவிட்டுத் திரும்பும் போது பேசாலைக் கடற்படைத்தளம், அதன் காவலரண்கள் மற்றும் காவல் நிலையம் மீது கடற்புலிகள் சுட்டனர். கடற்புலிகள் கரைக்கு அண்மையாக 75 மீட்டர்கள் வரை நெருங்கி வந்து தாக்குதல் நடாத்தினர் என மன்னார் சிறிலங்காக் காவல்துறையினர் தெரிவித்தனர். இதனால் கடற்படைத்தளக் கட்டடங்கள் சேதமடைந்தன. இம் மொத்த தாக்குதலில் எவ்வித சேதமுமின்றி கடற்புலிகள் பாதுகாப்பாகத் தளம் திரும்பினர் என்று தவிபு படைத்துறைப் பேச்சாளர் மார்சல் தெரிவித்தார். மன்னார் காவல்துறை வட்டாரங்களின் மேலதிகத் தகவலின் படி, கடற்புலிகளுடன் பேசாலை மற்றும் வங்காலைப்பாடு கடற்படையினர் கரையிலிருந்து 2 கிமீ தொலைவில் மிண்டியதால் மோதல் ஒன்று வெடித்து 35 நிமிடங்கள் நீடித்தது. பின்னர் அது வடமேற்காகப் பெயர்ந்து தலைமன்னார் கடற்பரப்பில் மேலும் 2 மணிநேரம் நீடித்தது. மோதலின் போது பேசாலை கரையோரத்தில் உள்ள சிறுதோப்பு மற்றும் வங்காலைப்பாடு ஆகிய சிற்றூர்களைச் சேர்ந்த சில வீடுகள் சேதம் அடைந்ததுடன் 01, 02, 03 மற்றும் 04 ஆகிய வட்டங்களில் உள்ள 400+ பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெற்றி மாதா தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தனர். பின்னர், மீதமுள்ள நான்கு வட்டங்களை சேர்ந்த பொதுமக்களும் செயின்ட் மேரிஸ் பாடசாலையில் தஞ்சம் அடைந்தனர். ஏ௧4 வீதியில் பேசாலை ஊடாக தலை மன்னார் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்துப் போக்குவரத்துகளும் காலை 7.50 மணி முதல் நிறுத்தப்பட்டன. சேதப்பட்ட கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட் சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 24/11/2007 | தமிழ்நெற்: 23/11/2007 (Sea Tigers open fire on coastal sentry in Peasaalai) திகதி: திசம்பர் 25 & 26, 2007 அடிபாட்டுக் காலம்: நண்பகல் 11:00 மணி முதல் 1:50 மணி வரை நிகழ்வு இடம்: நெடுந்தீவுக்கும் கச்சதீவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: நெடுந்தீவுக் கடற்பரப்பில் கடற்புலிகள் தமது வழமையான கடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது தொலைவில் ஒரு கடற்கலம் தென்பட்டது. அது இரணைதீவிலிருந்து 4 அ 5 கடல்மைல் தொலைவில் நின்றுகொண்டிருந்தது. அது எப்படியான இலக்கு என்று காண்பதற்காக பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடற்புலிகளின் இரு சண்டைப்படகுகளைக் கொண்ட கலமணி (squadron) ஒன்று புறப்பட்டுச் சென்றது. கடற்புலிகளின் சண்டைப்படகுகள் அதனை அண்மித்ததும் அக்கடற்கலம் கடற்புலிகளை நோக்கி வேட்டுகளைத் தீர்க்கத் தொடங்கியது. உடனே கடற்புலிகளும் சிங்களவரின் டோறா தாக்குகின்றது என்பதை அறிந்து பகரடித் தாக்குதலில் களமிறங்கினர். கடற்புலிகளின் தாக்குதலில் டோறாவில் சில வேட்டுகள் பட்டுத் தெறிக்க அது காரைநகரை நோக்கி ஓட்டம்பிடித்தது. எனவே கடற்புலிகளின் சண்டைப்படகுகளும் அதனை துரத்தியபடி உயரச் சென்றன. அப்போது இவ் டோறாவோடு தலைமன்னாரிலிருந்து வந்திருந்த வேறு மூன்று டோறாக்கள் கரைநகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த கடற்புலிகளின் சண்டைப்படகுகளை கீழாக வழிமறித்து சுற்றிவளைப்பதற்காக கீழே இறங்கி வந்துகொண்டிருந்தன. இதைக் கரையிலிருந்து கவனித்த கடற்புலிகள் அவசரமவசரமாக இரு கலத்தொகுதிகளை (6-7 சண்டைப்படகுகள்) கடலேற்றினர். கடற்புலிகளின் சண்டைப்படகுகள் தம்மை நோக்கி வருவதைக் கவனித்த சிங்களக் கடற்படையின் மூன்று டோறாக்களும் நெடுந்தீவுக்கு உயர கச்சதீவை நோக்கி செல்லத் தொடங்கினர். அதாவது சிங்களக் கடற்படையினர் தந்திர வழிவகையாக தமது பாதுகாப்பு எல்லைக்குள் ஓடுகின்றனர். ஓடிய கடற்படையினர் மேலதிக உதவியினைக் கோரினர். காரைநகர் கடற்படைத்தளத்திலிருந்து 30 மிமீ தெறுவேயங்கள் (Cannons) பொருத்தப்பட்ட சூட்டுவலு கூடிய டோறாக்கள் உடனே உதவிக்கு விரைந்தன. இப்போது கடற்படையின் தரப்பில் டோறாக்களின் எண்ணிக்கை 11 (பேபி டோறாக்கள் & சுப்பர் டோறாக்கள்) ஆகக் கூடியது. இவற்றைக்கொண்டு சிங்களவர் அங்கு கடல் வியூகமொன்றை அமைத்தனர். அது அவர்களின் வழமையான அரைநிலவு வடிவ வளைய வியூகமாகும். அந்நேரத்தில் கடற்புலிகளுக்கும் சிங்களக் கடற்படைக்குமான இடைவெளி கிட்டத்தட்ட 5 கிமீ ஆக இருந்தது. உடனே கடற்புலிகள் நெடுந்தீவைத் தாண்டியதும் தமது ஓட்டத்தை நிறுத்தி மேலதிக உதவியினை அனுப்புமாறு கட்டளைப்பீடத்திடம் கோரினர். ஏனெனில் அப்பொழுது கச்சதீவிற்கு கிட்டவாக நின்ற டோறக்களின் எண்ணிக்கை காரைநகரிலிருந்து அனுப்பப்பட்ட உதவிகளால் பத்தைத் தாண்டிவிட்டிருந்தது. கடற்புலிகளின் கட்டளைப்பீடமும் அதற்கமைவாக மேலதிக கலத்தொகுதிகளை அனுப்பி வைத்தது. கடற்புலிகளின் படகுகளின் எண்ணிக்கை இப்போழுது 16 படகுகளாக ஏகிறியது. சமரும் வெடித்தது. தமது வியூகத்திற்குள் கடற்புலிகளை உள்ளிழுத்துத் தாக்கியழிக்க எண்ணிய போது கடற்புலிகளும் உட்செல்வது போன்று சென்று போக்கிக்காட்டி பகைவர் மேல் கடுமையான தாக்குதலை தொடுத்தனர். சிங்களக் கடற்படையினருக்கு ஆதரவாக அ'புரத்திலிருந்து சிங்கள வான்படையின் எம்.ஐ. 24 உலங்குவானூர்தியொன்றும் விரைந்து சூட்டாதரவு வழங்கியது. எனவே கடற்புலிகள் அத்தாக்குதலிலிருந்து தமது கடல் வியூகத்தை விரித்தனர். உலங்குவானூர்தி தாக்குதல் நடாத்திக்கொண்டிருக்கையில் சிங்களக் கடற்படையின் டோறாக்கள் அதன் பக்கவலுவோடு கீழிறங்கி வந்து கடற்புலிகளோடு பொருத அது பாரிய கடற்சமராக மூண்டது. எனினும் கடற்புலிகள் விடாது தாக்கினர். அதனால் ஒவ்வொரு டோறாக்களும் தம் நிலையிலிருந்து தளர அவை ஒவ்வொன்றிற்கும் இடையிலான இடைவெளி 100, 200, 300 மீட்டர்கள் என கூடிக்கொண்டு சென்றது. ஒரு கட்டத்தில் சிறிலங்காக் கடற்படையின் டோறா ஒன்று செயலிழந்தது. அதாவது அதன் கலக்குழுவினர் சிலர் கொல்லப்பட்டதோடு அதன் வேகமும் குறைந்த நிலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது சிங்களவரின் கடல் வியூகத்திற்கும் வான்தாக்குதலிற்கும் நடுவணிலும் வெடிப்படகொன்று ஊடறுத்துச் சென்று சிங்கள வியூகத்தின் பக்கவாட்டிலிருந்து மூன்றாவதாக நின்றிருந்த டோறா மீது நண்பகல் 12:45 மணிக்கு மோதியிடித்து அதை மூழ்கடித்தது. இரண்டாவது கடற்கரும்புலித் தாக்குதல் எப்பொழுது மேற்கொள்ளப்பட்டது என்பது தெரியவில்லை. தொடர்ந்த கடற்சமரில் கடற்படையின் மற்றொரு டோறா நண்பகல் 1:00 மணியளவில் திருத்த வேலைகளக்கு அப்பால் சேதமாக்கப்பட்டது. மற்றொன்று 1:50 மணியளவில் சேதமாக்கப்பட்டது. அத்துடன் சிங்களக் கடற்படையினர் தமது தளங்களுக்கு பின்வாங்கி ஓடினர். இத்தாக்குதலை கடற்புலிகளின் தாக்குதல் கட்டளையாளர் லெப். கேணல் செழியன் கடலில் வழிநடாத்தினார். இங்கு சிறிலங்காக் கடற்படையினர் இரு வேறு வியூகம் அமைத்துக் கடலில் இறங்கியிருந்தனர். கடற்புலிகளை கரைவரை அண்மித்துத் தாக்குவது அல்லது அவர்களை சீண்டி வலிந்திழுத்து தமக்கு ஏலுமான கடற்பரப்பில் வைத்துத் தாக்குவது (சூழ்ச்சிப்பொறி) ஆகியனவாகும். ஆனால் கடற்புலிகளின் எதிர் வியூகங்களால் அவர்களின் இரண்டு வியூகமும் பொய்த்திடவே சிங்களம் பின்வாங்கி ஓடியது. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) தொடரெண்: பி 413 சேதப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சேதப்பட்ட (மீளப்பாவிக்கேலாது) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: ஒரு அதிகாரி உட்பட 11 பேர் காயப்பட்டோர்: 2 பேர் வீரச்சாவடைந்த போராளிகள்: 13 பேர் கடற்கரும்புலிகள்: 4 பேர் தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் சங்கரி, லெப். கேணல் கலையரசி, மேஜர் ஈழவீரன், மேஜர் மதிமுகிலன் கடற்புலிகள்: 13 பேர் பதவிநிலை & தரநிலையுடனான பெயர்கள்: 'படகு கட்டளை அதிகாரி' லெப். கேணல் நிலவன் எ மாறன், கப்டன் ஈகைத்தீ, லெப். அகப்புலவன், 2ம் லெப். சந்தன அறிவன், 2ஆம் லெப். கோதைக்கொற்றவன், 2ஆம் லெப். செந்தமிழரசு, 2ஆம் லெப். அகக்கதிர், 2ஆம் லெப். ஈழத்திண்ணன், கப்டன் தப்தகி எ இந்து மற்றும் நான்கு பேர். சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 2 கல வகை: அறியில்லை ஆதாரம்: உதயன்: 24/11/2007 | தமிழ்நெற்: 26/12/2007 (Black Sea Tigers sink SLN Dvora attack craft in the seas off Delft island) | நெடுந்தீவுத் தாக்குதல் விரிப்பு நிகழ்படம் ******

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.