நீங்கள் மேற்கை பற்றி அதீத எதிர்பார்ப்போடு உள்ளீர்கள்.
தமது இராணுவத்தின் அழிப்பை குறைக்க, இரெண்டு ஜப்பானிய நகரங்களை தவிடு பொடியாக்கியவர்கள் மேற்கு.
இதை விட ஒரு யுத்த குற்றம் உலகில் இருக்க முடியுமா? இன்று வரை அதுக்கு ஒரு மன்னிப்பு கூட கேட்கவில்லை.
சர்வதேச ஒழுங்கில், நீதி, நியாயம், மனித உரிமை, ஜனநாயக விழுமியம், லொட்டு, லொசுக்கு எல்லாம் இரெண்டாம் பட்சம். இதே போலத்தான் இனங்களின் சுய நிர்ணய உரிமையும்.
பங்களாதேசில் சுய நிர்ணயத்தை ஆதரித்த இந்தியா, கஸ்மீரிலும், இலங்கையிலும் அதை முடக்க்கியது.
அதே போலத்தான் ரஸ்யாவும். அபகாசியா, தென் ஒசெசியாவின் சுய நிர்ணயத்தை அங்கீகரிக்கும், ஆனால் எம்மை அங்கீகரிக்காது.
நாடுகள் இந்த தத்துவங்களை தம் சுய நலனுக்கு ஏற்ப கையில் எடுக்கும், கைவிடும்.
இந்த கள யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் ஈழத்தமிழர் ஒரு அடி கூட முன் நகர முடியாது.
# வல்லான் வகுப்பதே (சர்வதேச) சட்டம், நடைமுறை.