Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    8910
    Posts
  2. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    2958
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87990
    Posts
  4. MEERA

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    5418
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/21/24 in Posts

  1. காசாவில் மயானங்களை கனரக வாகனங்கள் கொண்டு உழுது அழிக்கும் இஸ்ரேலிய இராணுவம் ஹமாஸ் தீவிரவாதக் குழுவினர் மீதான காசா யுத்தம் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை பதினாறு மயானங்களை இஸ்ரேலிய இராணுவ அழித்து நாசம் செய்திருப்பதாகத் தெரியந்திருக்கிறது. இவ்வாறு அழிக்கப்பட்டுள்ள மயானங்களின் நினைவுக் கற்கள் புரட்டப்பட்டு, குழிகள் தோண்டப்பட்டு, மனித எச்சங்களும் வெளியே எடுத்து விச்சப்பட்டிருப்பதை அமெரிக்காவின் சி.என்.என் செய்திச்சேவை ஆதாரங்களோடு செய்தி வெளியிட்டிருக்கிறது. இறுதியாகக் கான் யூனிஸ் பகுதியில் அமைந்திருந்த மயானத்தை அழித்து, புதைகுழிகளைத் தோண்டிய இஸ்ரேலிய இராணுவம் இஸ்ரேலியர்களை ஹமாஸ் இங்கு ஒளித்து வைத்திருக்கலாம் என்பதனால் மயானத்தை அழிக்கவேண்டி வந்ததாகக் கூறியிருக்கிறது. யுத்தத் தாங்கிகளையும், கனரக வாகனங்களையும் பாவித்தே இந்த மயானங்கள் இஸ்ரேலினால் அழிக்கப்பட்டிருக்கின்றன. காசாவினுள் இஸ்ரேலிய இராணுவம் புகுந்ததிலிருந்து மாயானங்களை அழிக்கும் கைங்கரியம் மிகவும் திட்டமிட்ட வகையில் நடத்தப்பட்டு வருவதை சி என் என் வைத்திருக்கும் ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. சர்வதேச சட்டங்களின்படி மதத் தலங்களை அழித்தல், மயானங்களை அழித்தல் ஆகியவை குற்றங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலின் இக்குற்றம் போர்க்குற்றம் ஆவதற்கான அனைத்து இலக்கணங்களையும் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. மயானங்களை ஹமாஸ் அமைப்பு இராணுவத் தேவைகளுக்காகப் பாவிப்பதால் அவையும் தனது இராணுவத்தின் முறையான இலக்குகள்தான் என்று இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் நியாயப்படுத்தியிருக்கிறார். கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் இஸ்ரேலிய பணயக் கைதிகளை ஹமாஸ் இந்த மயானங்களில் புதைத்திருக்கலாம் என்பதனாலேயே அனைத்து மயானங்களும் தோண்டப்படுவதாகவும் அவர் கூறினார். அவ்வாறு தோண்டியெடுக்கப்படும் உடல்கள் இஸ்ரேலியர்களினுடையவை அல்ல என்று உறுதிப்படுத்துப்படுமிடத்து அவை மீளவும் அங்கேயே புதைக்கப்படுவதாகவும் அவர் கூறுகிறார். ஆனால், சி என் என் பெற்றுக்கொண்ட ஏனைய விபரங்களின்படி, மயானங்கள் இஸ்ரேலிய இராணுவத்தால் தரைமட்டமாக உழப்பட்டு, அங்கே இராணுவத் தாங்கிகளும், ஆட்டிலெறித் தளங்களும் நிறுவப்பட்டு யுத்தத்திற்காகப் பாவிக்கப்பட்டு வருவது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. மயானங்களைச் சுற்றி பாரிய மதில்கள் அமைக்கப்பட்டு இராணுவ ஏவுதளங்களாக இவை மாற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், ஒரேயொரு மயானம் மட்டும் அப்படியே இருந்தது. அங்கே முதலாம், இரண்டாம் உலக யுத்தங்களில் கொல்லப்பட்ட கிறீஸ்த்த‌வர்கள், யூதர்கள், மேற்குநாட்டவர்களின் கல்லறைகள் காணப்பட்டன. ஆகவே, அதனை இஸ்ரேலிய இராணுவம் அப்படியே விட்டு விட்டது. மரணித்தவர்களுக்கான மரியாதையினை தாம் வழங்குவதாகக் கூறிய பேச்சாளர், எதற்காக மயானங்களின் மீது தமது யுத்தத் தாங்கிகளும், ஆட்டிலெறித் தளங்களும் நிறுத்தப்பட்டிருக்கின்றன என்று கேட்டபோது எதனையும் கூற மறுத்துவிட்டார். இவற்றைப் பார்க்கும்போது நினைவிற்கு வருவது ஒரு விடயம்தான். தாயகத்தில் எமது செல்வங்களின் கல்லறைகள் சிங்கள மிருகங்களால் உழப்பட்டு, மாவீரர்களின் திருமேனிகள் தூக்கி வெளியே எறியப்பட்டு, எமது கல்லறைகளின் மீது சிங்களப் பேய்கள் இராணுவத் தளங்களை அமைத்து இறுமாப்புடன் எம்மை இன்றுவரை ஆக்கிரமித்து வைத்திருப்பதுதான். 1980 களில் இஸ்ரேலியப் பயங்கரவாதிகள் சொல்லிக்கொடுத்த மிருகத்தனத்தை சிங்களப் பேய்கள் எம்மீது கட்டவிழ்த்துவிட்டன. இன்றோ சிங்களப் பேய்கள் 2009 இல் இருந்து செய்து வருபவற்றை இஸ்ரேலிய பயங்கரவாதிகள் பாலஸ்த்தீனத்தில் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
  2. வாழ்த்துக்கள் சிறிதரன் அவர்களே. தமிழ் மக்களின் இக்கட்டான நிலையில் தமிழ் மக்களையும் ஏனைய கட்சிகளையும் ஒற்றுமையாக்க கடுமையாக உழைக்க வேண்டிய தருணம் இது. சுமந்திரன் அவர்கள் தொடர்ந்தும் தமிழரசு கட்சியுடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும். இந்தியாவை விட்டு சுயமாக செயற்பட்டால் தமிழ் மக்களுக்கு வாழ்வுண்டு.
  3. இன்று ரணில் செய்வதை பார்த்தும் நீங்கள் திருந்தவில்லை. நாட்டின் தலைவரே IMF இன் சொல் கேட்டு ஆடும் நிலையில் மக்கள் எம்மாத்திரம்? ஆனால் நாடு இந்த நிலைக்கு வந்ததற்கு காரணமானவர்களை நீதிமன்றம் அறிவித்தும் ஒன்றும் செய்யாது உள்ளார்.
  4. 2009 இறுதி யுத்த முடிவின் பின், 15 வருட புலிகள் இல்லாத இந்த காலகட்டத்தில் போரை வென்ற, அடுத்தடுத்து பதவிக்கு வந்த "சிங்கள அரசியல்" இந்த நாட்டு சிங்கள மக்களுக்கு (தமிழர்களை விடுங்களன்) இன்றுவரைக்கும் செய்தது எதை? போராட்ட காலத்தில் வீட்டில் இருந்தவன் இப்போது ரோட்டில் பிச்சையெடுக்கிறான். தான் பதவிக்கதிரையில் அமர்வததற்கே 2019 இல், 263 பொது மக்களை தேவாலயம், நட்சத்திர ஹோட்டல், புனித நாள், பெருநாள் பார்க்காமல் குண்டு வைத்து தகர்த்து, சிதைத்த அரசியல் மாட்சி உள்ளவன், தமிழனுக்கு வெள்ளி தட்டில் வைத்து விடிவு, ஞாயம் வழங்கியதை போலவும் அதை எதோ நம்மவர்கள் புறங்கையால் தட்டி ஒதுக்கியதை போலவும் இங்கே கூவி கூவி 8 பக்க உரையாடலை நிகர்த்தியவர்களை நினைத்தேன். சிரிப்பதா அழுவதா தெரியவில்லை. புலிகளை விமர்சனம் செய்வதில் தவறு கிடையாது, ஆனால் அதில் நேர்மையாக இருக்க வேண்டும், அதற்கும் அப்பால் அந்த விமர்சனத்தின் நோக்கம் என்ன என்பதை நாங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
  5. நான் இறுதியாக ஊருக்குச் சென்றது 2018 இல். எனது சித்தியைப் பார்ப்பதற்காக அன்று சென்றிருந்தேன், கூடவே குடும்பமும். சித்தியைப் பற்றி முதல் ஒரு பதிவில் கூறியிருக்கிறேன். 1988 இல் எனது தகப்பனாரின் கொடுங்கரங்களிலிருந்து என்னை மீட்டு மட்டக்களப்பிற்கு அழைத்துச் சென்றவர். தன்னால் முடிந்தவரையில் எனக்கு உணவும், உறையுளும், கல்வியும் தந்தவர். அன்னைக்கு அடுத்த தானத்தில் இருப்பவர். என்மேல் உண்மையான அக்கறை கொண்டவர். ஆகவே, அவரது உடல்நிலை ஓரளவிற்கேனும் நல்லநிலையில் இருக்கும்போது பார்த்துவிட்டு வரலாம் என்கிற எண்ணத்தில், அதுவரை எனது 16 ஆண்டுகள் அஞ்ஞாதவாசத்தைக் கலைந்து சென்று வந்தேன். அந்தப் பயணம் பற்றி அதிகம் கூற எதுவும் என்னிடத்தில் இல்லை. சித்தியை ஊர்காவற்றுறையில் இருந்து அவர் இருந்த யாழ்ப்பாணம் கன்னியாஸ்த்திரிகள் மடத்தில் இருமுறை சென்று சந்தித்தோம். ஒரு சில நினைவுகளைத் தவிர பல நினைவுகளை அவர் தொலைத்திருந்தார். ஆனால், உடல் ஓரளவிற்குத் தாக்குப் பிடித்துக்கொண்டிருந்தது. அதிகம் பேசவில்லை. என்னையும் குடும்பத்தையும் நீண்டநேரம் பேச்சின்றிப் பார்த்துக்கொண்டிருந்தார். அவரைச் சென்று சந்தித்ததைத் தவிர அப்பயணத்தில் குறிப்பிடும்படியாக பல விடயங்கள் இருக்கவில்லை. எனது அன்னையின் இன்னும் மூன்று தங்கைகளை யாழ்ப்பாணத்தின் கரவெட்டி மற்றும் கொழும்பின் கம்பஹ ஆகியவிடங்களில் சென்று பார்த்தேன். எவருமே அதிகம் பேசவில்லை. சிலவேளை எனது குடும்பத்தை முதன்முதலில் பார்ப்பதால் வந்த சங்கோஷமாக இருக்கலாம். அவர்களை விடவும் நான் சந்தித்த வெகு சிலரில் எனது நண்பன் ஜெயரட்ணமும் அவனது சகோதரர் ராசா அண்ணையும் குறிப்பிடத் தக்கவர்கள். அவர்கள் பற்றியும் முன்னர் எழுதிவிட்டேன். அங்கிருந்த இரு வாரங்களில் மன்னாருக்கு ஒருநாள் சென்றுவந்தோம். இன்னொருநாள் காங்கேசந்துறைக்கும் கரவெட்டிக்கும் பயணம் இருந்தது. இடையில் நுவரெலியாவுக்குப் போனோம். குளிர், இதனைத்தவிர வேறு எதுவும் மனதில்ப் பதியவில்லை. நான் விரும்பிய இடங்களையும், மனிதர்கள் அனைவரையும் சந்திக்கும் சுதந்திரம் எனக்கு இருக்கவில்லை. பிள்ளைகளை விட்டு வெளியே செல்ல முடியாது, அவர்களும் வெளியே வரப்போவதில்லை. சித்திரை வெய்யில் காய்த்தெடுக்க வீட்டிலேயே இருந்துவிட்டார்கள். மேற்குநாட்டு வளர்ப்பு என்று கூறுவீர்கள், இருக்கலாம். என்னைப்போன்று இங்கிருந்து செல்லும் அனைத்துப் பெற்றொரும் முகம்கொடுக்கும் கேள்விகள் இவை, அதில் தவறுமில்லை.
  6. தமிழருக்குத் தேவைதானா குடும்பப் பெயர்? மு.இராமநாதன் ஆதியில் பான் (PAN) அட்டை வந்தது. அதை ஒன்றிய அரசு தயாரித்துக் கொடுத்தது. அடுத்து ஆதார் அட்டை வந்தது. அதைத் தயாரிக்கிற பணி சில உள்நாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. ஒரு புலர் காலைப்பொழுதில் அட்டைகள் இரண்டையும் இணைக்கச் சொல்லி ஆக்ஞை வந்தது. காஷ்மீர் முதல் திருப்பதி வரை புகார் ஒன்றுமில்லை. குடிமக்கள் இணைத்தனர். ஆனால், திருத்தணி முதல் தென்குமரி வரை வாழும் ஜீவராசிகளுக்கு அட்டைகளை ஒட்டவைப்பது எளிதாக இல்லை. பான் அட்டை விண்ணப்பத்தில் இரண்டு பெயர்கள் கேட்டார்கள். முதற்பெயர் (first name) ஒன்று. குடும்பப் பெயர் (surname) மற்றொன்று. தமிழர்களுக்கு ஆக உள்ளது ஒரு பெயர்தான். இரண்டில் ஒன்றிற்கு அதை எழுதினார்கள். மற்றதற்குத் தந்தையார் பெயரையோ கணவர் பெயரையோ எழுதினார்கள். ஆதார் அட்டையைத் தயாரிக்கிற பணி தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே கிடைத்தது. ஒருவருக்கு ஒரு பெயர் மட்டும் இருக்க முடியும் என்பதை அவர்கள் அறிவார்கள். முன்னொட்டாக ஒரு தலைப்பெழுத்தையும் (initial) இணைத்துக் கொண்டார்கள். ஆக, பான் அட்டையில் இரண்டு பெயர்கள்; ஆதார் அட்டையில் ஒற்றைப் பெயர், தலைப்பெழுத்து தனி. தமிழர்களின் இரண்டு அட்டைகளும் ஒட்டாமல் போனது இப்படித்தான். பலர் ஆக்ஞையை நிறைவேற்றப் பல மாதங்கள் இதன் பின்னால் ஓடினார்கள். தமிழன் துறந்த சாதிப் பெயர் உலகின் பெரும்பாலான நாட்டவர்களுக்கும், இந்தியாவில் தமிழகம் நீங்கலான பிற மாநிலத்தவர்களுக்கும் அவர்களது பெயர்களில் குறைந்தபட்சம் இரண்டு பகுதிகள் இருக்கும் - முதற்பெயர், குடும்பப் பெயர். இவை தவிர நடுப் பெயர் உள்ளவர்களும் உண்டு. குடும்பப் பெயர் பொதுவாகக் குழுவை அல்லது பரம்பரையைக் குறிக்கும். இந்தியாவில் அது மிகுதியும் தொழிலையோ சாதியையோதான் குறிக்கும். இந்த இடத்தில் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஆண்டு: 2019, இடம்: மும்பை, பாத்திரங்கள்: நால்வர்- நானும் எனது ஒரு சாலை மாணாக்கர் ஒருவரும் ஆக இரண்டு தமிழர்கள், இரண்டு மராட்டிய நண்பர்கள். பேச்சு, தமிழகமும் மராட்டியமும் இந்தியாவில் பல அலகுகளில் முன்னணியில் நிற்பதைப் பற்றித் திரும்பியது. அப்போது தமிழ் நண்பர் சொன்னார் : ‘தமிழகம், இந்தியாவின் மற்ற எல்லா மாநிலங்களைக் காட்டிலும் 90 ஆண்டுகள் முன்னால் நிற்கிறது.’ அது என்ன 90 ஆண்டுக் கணக்கு? நண்பர் 1929இல் நடந்த செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டை முன்னேற்றத்தின் தொடக்கப் புள்ளியாகக் குறிப்பிட்டார். அந்த மாநாட்டில்தான் சாதிப் பெயரைப் பின்னொட்டாக வைத்துக்கொள்வதற்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது. ‘ஈ.வெ. ராமசாமி நாயக்கராகிய நான் இன்றுமுதல் ஈ.வெ. ராமசாமி என்று அழைக்கப்படுவேன்’ என்று பெரியார் அறிவித்தது அந்த மாநாட்டில்தான். அந்தத் தீர்மானமும் அந்த அறிவிப்பும் அந்த மாநாட்டோடு நின்றுவிடவில்லை. அது தமிழ்ச் சமூகமெங்கும் பரவியது. தமிழர்கள் சாதிப் பெயரைக் களைந்தார்கள். நான் ஒரு கேள்வியை முன்வைத்தேன். ‘சாதி, பெயரில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் வேட்பாளர்கள் சாதி பார்த்துத்தானே நிறுத்தப்படுகிறார்கள்? திருமணங்கள் சாதிக்குள்தானே நடக்கின்றன? நம்மில் பலருக்கும் சாதி உணர்வு இருக்கத்தானே செய்கிறது?’ நண்பரிடம் பதில் இருந்தது. ‘இருக்கலாம். ஆனால் பெயரில் சாதியைத் துறப்பதற்கும் ஒரு மனம் வேண்டுமல்லவா? தமிழர்களிடம் அது இருந்தது. இப்போதும் தமிழகத்தில் பொதுவெளிகளில் சாதியைக் கேட்பதற்கும் சொல்வதற்கும் பலரும் கூச்சப்படவே செய்கிறார்கள். இன்றுகூட இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள பலரால் சாதிப் பெயர்களைச் சுட்டும் குடும்பப் பெயர்களைத் துறப்பதைச் சிந்தித்துக்கூடப் பார்க்க முடியாது.’ மராட்டிய நண்பர்கள் ஒப்புக்கொண்டார்கள். தமிழ்ப் பெயர்களின் தனித்துவம் சாதிப் பெயர்களைக் கைவிட்டதில் மட்டுமல்ல, பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டுவதிலும் தமிழர்கள் தனித்துவமானவர்கள். குடும்பத்தின் பெரியவர்கள் பெயர்களைப் பிள்ளைகளுக்கு விடும் வழக்கம் நம்மிடமுண்டு. அதிலிருந்துதான் தலைவர்களின் பெயர்களைச் சூட்டும் வழக்கமும் வந்திருக்க வேண்டும். காந்தி, நேரு, போஸ் என்று நம்மவர்கள் சூட்டி மகிழ்ந்த பெயர்கள் அந்தத் தலைவர்களின் குடும்பப் பெயர்கள். தமிழர்கள் உணர்ச்சிமயமானவர்கள். தத்தமது ஆதர்சத் தலைவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்களின் பெயரைப் பிள்ளைகளுக்குச் சூட்டுவார்கள். ஸ்டாலின் பெயரை மகனுக்குச் சூட்டியது கலைஞர் கருணாநிதி மட்டுமல்ல, அவரது தலைமுறையைச் சேர்ந்த ராஜாங்கமும் குணசேகரனும் கூடத்தான். சமீபத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தவர் பெயர் ஜெயகாந்தன். பொதிகைத் தொலைக்காட்சிச் செய்திப்பிரிவின் இயக்குநராக இருந்தவர் அண்ணாதுரை. சாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிமன்ற நடுவர் பாரதிதாசன். கல்லல் என்கிற ஊரின் காவல்துறை ஆய்வாளராக இருந்தவர் பெயர் ஜோதிபாசு. தமிழ்ப் பெண்களின் படங்களை அச்சொட்டாக வரைந்த ஓவியர் இளையராஜா. ரியாத்தில் என்னுடன் பணியாற்றிய ஓர் இளம் பொறியாளரின் பெயர் பாரதிராஜா. 2012இல் சத்தீஸ்கார் மாநிலத்தின் ஒரு மாவட்ட ஆட்சியர் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டார். அவர் பெயர் அலெக்ஸ் பால் மேனன். செய்தி வெளியானதும் அவர் மலையாளி என்று நினைத்தேன். அவர் தமிழர், பாளையங்கோட்டைக்காரர், வி.கே.கிருஷ்ண மேனன் மீதிருந்த ஈடுபாடு காரணமாக அவரது தந்தை சூட்டிய பெயரது. ஒரு முறை ரயிலில் என்னோடு பயணம் செய்தவரின் பெயர் கேப்டன் நாயர் என்று பட்டியலில் கண்டிருந்தது. வந்தவர் பட்டாளக்காரரல்லர், மலையாளியுமல்லர். திருச்சிக்காரர். அவரது தந்தை ராணுவத்தில் பணியாற்றியவர், பெயர்க் காரணம் எனக்குப் பிடிபட்டது. இப்படி அபிமானத் தலைவர்களின், மேலதிகாரிகளின் பெயர்களைப் பிள்ளைகளுக்குச் சூட்டுவது ஒரு புறமிருக்க, மறுபுறம் வடமொழிப் பெயர்களின் மீதான மோகத்தையும் இப்போது பார்க்க முடிகிறது. நான் சமீபத்தில் பார்த்த ஒரு விளம்பரம் எடுத்துக்காட்டாக அமையும். அந்த விளம்பரத்திற்கு நன்மரண அறிவிப்பு என்று தலைப்பிடப்பட்டிருந்தது. கனிவு ததும்பும் ஒரு மூதாட்டியின் படமும் இருந்தது. அது நல்ல மரணம்தான். அவருக்கு வயது 102. மூன்று தலைமுறை அவருக்கு அஞ்சலி செலுத்தியிருந்தது. பிள்ளைகளின் பெயர்கள் நாராயணன், சந்திரசேகரன், விசாலாட்சி, பார்வதி என இருந்தது. பேரப் பிள்ளைகளின் பெயர்கள் சதீஷ், சபிதா, சந்தோஷ், பிரவீன், ராகுல் என்று கொஞ்சம் ‘நவீன’மாகியிருந்தது. இந்தப் பேரப்பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர்களோடு ஓர் ஒவ்வாமை இருக்க வேண்டும். அது அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டிய பெயர்களில் இருந்து புலனாகியது. மூதாட்டியின் கொள்ளுப் பேரர்களின் பெயர்கள் அனிஷா, பிரமோத், லக்‌ஷிதா, திரிஷாணா, அனோன்யா, சரித், தனுஷா என்கிற ரீதியில் இருந்தது. இருபெயரொட்டு இன்னல்கள் குடும்பத்தின் பெரியவர்கள் பெயர், அரசியல் தலைவர்கள் பெயர், அபிமான நட்சத்திரங்கள் பெயர், வடமொழிப் பெயர்- இப்படி விரும்பிய வண்ணம் பெயரிடுவது தமிழர்களுக்குச் சாத்தியமாகிறது. அதற்கு இந்த முதற்பெயர் - குடும்பப் பெயர் கலாச்சாரம் இல்லாததுதான் காரணமாக இருக்க வேண்டும். இப்படி பெயர் சூட்டும் வழக்கத்தை உலகின் பிறபகுதிகளில் காண முடியாது என்றுதான் நினைக்கிறேன். ஆனால் இப்படி திறந்த மனத்துடன் பெயரிடுவதற்காகவும் சாதிப் பின்னொட்டைக் கைவிட்டதற்காகவும் தமிழர்களுக்கு யாரும் பாராட்டுக் கூட்டம் நடத்தியதாகத் தெரியவில்லை. மாறாக இன்னல்கள்தாம் வருகின்றன. இந்த முதற்பெயர்- குடும்பப் பெயர் ஆகிய இரு பெயரொட்டுத் தொடர்பான தமிழர்களின் இன்னல்கள் இரண்டு அட்டைகளின் வடிவத்தில் வந்தது. அது அத்தோடு முடிவதில்லை. திரைகடல் தாண்டும் எல்லாத் தமிழர்களும் இந்த இரு பெயரொட்டுப் பிரச்சினையை நேரிட்டிருப்பார்கள். அந்தச் சிக்கல்களுக்குள் போவதற்கு முன்னால் இது தொடர்பான சில சர்வதேச நடைமுறைகளைப் பார்க்கலாம். மேலை நாடுகளில் குடும்பப் பெயர் வெளிநாடுகளில் ஒருவருக்குக் குடும்பப் பெயர் தந்தை வழியாகவோ கணவர் வழியாகவோ வரும். ஆகவே, அது ஆண்பால் பெயராகவே இருக்கும். அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப்பின் தாத்தா பிரெடரிக் டிரம்ப், ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்தவர். டிரம்ப் என்பது ஜெர்மனியில் வழங்கும் ஒரு குடும்பப் பெயர். அதிபரின் அப்பா பிரெட் டிரம்ப், அம்மா மேரி ஆன் டிரம்ப், மனைவி மெலனியா டிரம்ப், மகள் இவாங்கா டிரம்ப், ‘எங்கள் குடும்பம் எப்படி உலகின் அதிபயங்கர மனிதனை உருவாக்கியது?’ என்கிற நூலின் ஆசிரியர் மேரி டிரம்ப், அதிபரின் அண்ணன் மகள். குடும்பப் பெயருடன் திருவாளர், செல்வி, முனைவர் போன்ற மரியாதை முன்னொட்டுகளைச் சேர்க்க வேண்டும். முதற்பெயருக்கு மரியாதை விளி தேவையில்லை. நேர்ப்பேச்சுகளில் மின்னஞ்சல்களில் முதற்பெயரையும், சம்பிரதாயமான கூட்டங்களில் அலுவல்ரீதியான கடிதங்களில் குடும்பப் பெயரையும் பயன்படுத்துவார்கள். வயதில் மூத்தவர்களையும்கூட அணுக்கமானவர்களெனில் முதற் பெயரில் விளிக்கலாம். வயதில் குறைந்தவர்களானாலும் குடும்பப் பெயரைப் பயன்படுத்துகிறபோது மரியாதை முன்னொட்டைச் சேர்க்க வேண்டும். உங்கள் மேலதிகாரியின் பெயர் டோனி பிளச்சர் என்று வைத்துக்கொள்ளலாம். அவரை நீங்கள் டோனி என்று நேர்ப்பேச்சில் விளிக்கலாம். மின்னஞ்சலில் அன்புள்ள டோனி என்று எழுதலாம். அவர் கோபிக்கமாட்டார். ஆனால் சம்பிரதாயமான கடிதங்களில், பொதுக்கூட்டங்களில் மிஸ்டர் பிளச்சர் என்றுதான் அழைக்க வேண்டும்; அந்த இடத்தில் டோனி என்று அழைப்பது தவறு. மிஸ்டர் டோனி என்றழைப்பதும் பிழை. ஷெர்லக் ஹோம்ஸ் கதைகளில் வரும் வீட்டின் சொந்தக்காரர் திருமதி ஹட்சன் வீட்டையும் பராமரிப்பார். எல்லாக் கதைகளிலும் ஷெர்லக் ஹோம்ஸ் அவரைத் திருமதி. ஹட்சன் என்றுதான் அழைப்பார். ஹாரி பாட்டர் தனது நண்பனின் பெற்றோரை திருவாளர் வெஸ்லி, திருமதி. வெஸ்லி என்றுதான் அழைப்பான். (உறவினர் அல்லாதவரை அங்கிள், ஆன்ட்டி என்றழைக்கும் வழமை ஆங்கிலேயரிடத்தில் இல்லை). சீனர்களின் குடும்பப் பெயர் சீனர்களுக்கும் இப்படியான சம்பிரதாயங்கள் உண்டு. ஆனால் ஐரோப்பியர்களைப் போலச் சீனர்கள் குடும்பப் பெயரைப் பின்னால் எழுதமாட்டார்கள். முன்னால் எழுதுவார்கள். சீன அதிபரின் பெயர் ஷி ஜிங்பிங். இதில் ஷி என்பதுதான் குடும்பப் பெயர். மா சேதுங்-இன் குடும்பப் பெயர் மா. ஹாங்காங் பன்னெடுங்காலம் பிரிட்டிஷ் காலனியாக இருந்ததால் அவர்கள் ஓர் ஆங்கிலப் பெயரைக் கூடுதல் முதற்பெயராக வைத்துக்கொண்டார்கள். ஹாங்காங்கின் ஜனநாயகப் போராட்டங்களின்போது செயலாட்சித் தலைவராக இருந்தவர் கேரி லாம் செங் யூட்-கோர். இதில் ‘லாம்’ என்பது கணவரின் குடும்பப் பெயர். ‘செங்’ என்பது தந்தையாரின் குடும்பப் பெயர். பலரும் திருமணமான பின் தந்தையாரின் குடும்பப் பெயரைத் துறந்து கணவரின் குடும்பப் பெயரை வைத்துக்கொள்வார்கள். இவரது குடும்பப் பெயர் இப்போது ‘லாம்’ என்றாலும், திருமணத்திற்கு முன்பிருந்த ‘செங்’ எனும் பெயரையும் களையாமல் வைத்திருக்கிறார். ‘யூட்-கோர்’ என்பது சீன முதற்பெயர். அதை உச்சரிப்பதற்கு ஆங்கிலேயர்களுக்குச் சிரமமாக இருக்குமென்பதால், கேரி எனும் கிறிஸ்தவப் பெயரொன்றையும் முதற்பெயராகச் சூடிக்கொண்டிருக்கிறார். காலனிய ஆட்சியாளர்களின் வசதிக்காகப் பலரும் செய்துகொண்ட ஏற்பாடுதான் இது. (பழனியப்பன் அமெரிக்கா போனதும் பால் ஆவதோடு ஒப்பிட்டுக்கொள்ளலாம்). செயலாட்சித் தலைவருக்கு அணுக்கமானவர்கள், அவரைக் கேரி என்றழைப்பார்கள்; மற்றவர்கள் லாம் தாய் என்று அழைப்பார்கள்; திருமதி லாம் என்று பொருள். அவரது கணவரை லாம் சாங் என்று அழைப்பார்கள்; திருவாளர் லாம் என்று பொருள். எல்லாக் குடும்பப் பெயர்களும் மரியாதைப் பின்னொட்டோடுதான் அழைக்கப்பட வேண்டும். ஆண்டாண்டுக் காலமாக இப்படி முதற்பெயர், குடும்பப் பெயர் கலாச்சாரத்தோடு வளர்ந்தவர்களுக்கு நமது ஒற்றைப் பெயர் கலாச்சாரம் புரிபடுவதில்லை. என் கதை 1995இல் நான் ஹாங்காங்கிற்குப் புலம்பெயர்ந்தபோது எனக்கு இந்தக் கதையொன்றும் தெரியாது. அலுவலகத்தில் என்னை ‘ராமா’ என்று அழைத்தார்கள். சீன உச்சரிப்பிற்கு அது இசைவாக இருந்ததே காரணம். வேலையில் சேர்ந்த சில நாட்களில் ஒரு திட்டப்பணி தொடர்பான கூட்டத்திற்குப் போனேன். கட்டிடக் கலைஞர்களும் பொறியாளர்களும் அரசு அலுவலர்களும் கலந்துகொண்டார்கள். ஓர் இளம்பெண் சிரத்தையாகக் குறிப்பெடுத்தார். அடுத்த நாள் அது தொலைநகலில் வரும். பங்கேற்றவர்களின் பெயர்-விவரம், குறிப்பின் முதல் பக்கத்தில் இருக்கும். கூட்டம் முடிந்ததும் அந்தப் பெண் நேராக என்னிடம் வந்தார். ‘உங்கள் முதற்பெயர் ராமா, குடும்பப் பெயர் நாதன், அப்படித்தானே?’ என்று கேட்டார். என் மீதமுள்ள வாழ்நாளின் மிக முக்கியமான கேள்வியை எதிர்கொள்வதை நான் அறிந்திருக்கவில்லை. தவறான பதிலைச் சொன்னேன், ‘இல்லை, என் பெயர் ராமநாதன்; ஒரே சொல், சேர்த்துத்தான் எழுத வேண்டும்’. அவர் அடுத்தபடியாக, ‘அப்படியானால் உங்கள் பெயரின் முன்னால் வருகிற எம் என்பது என்ன?’ என்று கேட்டார். ‘அது தலைப்பெழுத்து’ என்றேன். தொடர்ந்து, ‘அப்படியானால் அதுதான் உங்கள் குடும்பப்பெயராக இருக்க வேண்டும்’ என்றார். ‘இல்லை, அது என் தகப்பனார் பெயரின் முதலெழுத்து’ என்றேன். ‘அப்படியானால், ராமநாதன் என்பதுதான் உங்கள் குடும்பப் பெயராக இருக்க வேண்டும்’ என்றார். ‘இல்லை, அது என்னுடைய பெயர்’ என்றேன். அம்மணி அத்துடன் கேள்விகளை நிறுத்திக்கொண்டார். ஆனால் இதே கேள்விகளை 25 ஆண்டுகளாக வெவ்வேறு வடிவங்களில் எதிர்கொண்டுவருகிறேன். கடவுச்சீட்டு வாங்கப்போனால் முதற்பெயரும் கடைசிப் பெயரும் கேட்பார்கள். கடவுச்சீட்டு அலுவலர்களும் முகவர்களும் தமிழர்களிடம் தகப்பனார் பெயரைக் குடும்பப் பெயர் என்று எழுதச் சொல்வார்கள். எனக்கும் அப்படியே சொன்னார்கள். ஆனால், அதில் ஒரு சிக்கல் வந்தது. என் தகப்பனார் பெயர் எனது குடும்பப் பெயராகிவிடும். என்னுடைய பெயர் என் மனைவி மக்களின் குடும்பப் பெயராகிவிடும். அதாவது, ஒரே குடும்பத்தில் இரண்டு குடும்பப் பெயர்கள் வரும். ‘இது எப்படி சாத்தியம்?’ என்று ஹாங்காங்கில் பலரும் என்னிடம் கேட்டார்கள். அதற்காக நான் ஒரு யுக்தி செய்தேன். என் தகப்பனார் பெயரை எனது முதற்பெயராகவும், எனது பெயரைக் குடும்பப் பெயராகவும் மாற்றிக்கொண்டேன். இப்போது மொத்தக் குடும்பத்திற்கும் ஒரே குடும்பப்பெயர் கிடைத்தது. ஆனால், இதைவிட எளிய வழிகள் இருந்தன என்பது எனக்கு அப்போது தெரியவில்லை. பெயரைக் கூறு போடலாம் அ.முத்துலிங்கத்தின் ‘முழு விலக்கு’ என்கிற கதையை அப்போது நான் படித்திருக்கவில்லை. நாயகன் கணேசானந்தன் ஆப்பிரிக்காவுக்குப் போவான். போகிற இடமெல்லாம் குடும்பப் பெயர், நடுப்பெயர், முதற்பெயர் என்று கேட்பார்கள். ‘தாமோதிரம்பிள்ளை கணேசானந்தன்’ என்று இவன் விஸ்தாரமாக எழுதி முடிப்பதற்கிடையில் அவர்கள் தங்கள் சுருண்ட தலைமுடியை பிய்த்துக் கொண்டு நிற்பார்கள். கடைசியில் ஒரு சுலபமான வழியைக் கண்டுபிடிப்பான். ‘கணே சா நந்தன்’ என்று தன் பெயரை மூன்றாகப் பிரித்துவிடுவான். முத்துலிங்கம் இந்தக் கதையை 1995இலேயே எழுதிவிட்டார். நான் பல ஆண்டுகள் கழித்துத்தான் படித்தேன். அதற்குள் காலம் கடந்துவிட்டது. கடவுச் சீட்டு, ஹாங்காங் அடையாள அட்டை, தொழிற் பட்டயங்கள், வங்கிக் கணக்குகள் எல்லாவற்றிலும் என் பெயருடன் தகப்பனார் பெயரும் இரும்பால் அடிக்கப்பட்டுவிட்டது. முன்னதாக இந்தக் கதையைப் படித்திருந்தால் 1995இல் என்னிடம் கேள்வி கேட்ட பெண்மணியிடம் ‘ஆம், ஆம்’ என்று பதிலளித்திருப்பேன். இணைய வெளியிலும் இரட்டைப் பெயர் இந்த இரட்டைப் பெயர் இன்னல் பான் அட்டையிலும் கடவுச்சீட்டிலும் மட்டுமல்ல சமூக வலைதளங்களிலும் தொடர்கிறது. இந்தத் தளங்களில் கணக்குத் தொடங்க வேண்டுமென்றால் முதற்பெயரையும் கடைசிப் பெயரையும் உள்ளிட வேண்டும். தலைப்பெழுத்தை மட்டும் எழுதினால் இணையம் ஒப்புக்கொள்ளாது. ஆக தமிழகத்திற்குள் நிலவும் ஒற்றைப் பெயர், இணையவெளியிலும் கடவுச்சீட்டிலும் பான் அட்டையிலும் வெளிநாடுகளுக்குப் போகிறபோதும் இரண்டு பெயர்களாகிவிடுகின்றன. பெயரைப் பிரித்து எழுதலாம் என்கிற யோசனை முத்துலிங்கத்திற்கே காலங்கடந்துதான் தோன்றியிருக்க வேண்டும். சமூக வலைதளங்களில் அவரது பெயர் அப்பாதுரை முத்துலிங்கம் என்றுதான் இருக்கிறது. உள்ளூரில் விளையாடுகிறபோது வி.ஆனந்தாக இருந்தவர் சர்வதேச அரங்கிற்குப் போனதும் விஸ்வநாதன் ஆனந்த் ஆகிவிடுகிறார். நோபல் விருது பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் சிதம்பரத்தில் பிறந்தபோது ஆர்.வெங்கட்ராமன் என்றே அறியப்பட்டிருப்பார். 2020 செப்டம்பர் மாதம் மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சரும் வெளியுறவு அமைச்சரும் கலந்துகொண்டார்கள். முன்னவர் உள்நாட்டு ஊடகங்களிலும் வெளிநாட்டு ஊடகங்களிலும் ராஜ்நாத் சிங் என்றே அழைக்கப்பட்டார். பின்னவரின் பெயர் உள்நாட்டில் எஸ்.ஜெய்சங்கர் எனவும் வெளிநாட்டு ஊடகங்களில் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் எனவும் குறிப்பிடப்பட்டது. ஏனெனில் வெளிநாட்டு ஊடகங்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு பெயர்கள் இருக்க வேண்டும் என்று நம்புகின்றன. என்ன செய்யலாம்? என்ன செய்யலாம்? பலரும் செய்வதுபோலத் தலைப்பெழுத்தை விரித்தெழுதி அதுதான் முதற்பெயரென்றோ குடும்பப் பெயரென்றோ சொல்லிக் கொள்ளலாம்; அல்லது பெயரைப் பிரித்தெழுதி ஒரு பாதி முதற் பெயர் என்றும் மறுபாதி குடும்பப் பெயர் என்றும் சாதிக்கலாம். ஆனால் இவையெல்லாம் குறுக்கு வழிகள். நமக்கு பான் அட்டை வேண்டும், கடவுச்சீட்டு வேண்டும், சமூக வலைதளங்களில் கணக்கு வேண்டும்; அதற்காக ஒற்றைப் பெயருள்ள நாம் இரண்டு பெயர்கள் உள்ளதாக அபிநயிக்கிறோம். தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு என்று முழங்குவதோடு நிறுத்திவிடாமல், அந்தத் தனிக்குணங்களில் ஒன்றுதான் சாதிப்பெயரைத் துறந்தது, அதன் நீட்சியாகத் தமிழன் ஒரு பெயரோடுதான் நிற்பான் என்று சொல்ல வேண்டும். தமிழக அரசும் தமிழ் அறிவாளர்களும் இதை ஒரு பிரச்சினையாகக் கருதி முன்னெடுக்க வேண்டும். முதற்கட்டமாக பான் அட்டையிலும் கடவுச்சீட்டிலும் தமிழர்கள் தலைப்பெழுத்துடன் தங்கள் ஒற்றைப் பெயர்களைப் பதிவுசெய்ய அனுமதி பெற வேண்டும். அடுத்த கட்டமாக இணையத்திலும் அதற்கு வகை செய்யப்பட வேண்டும். எல்லாப் பெயர்களையும் முதற்பெயர் - குடும்பப் பெயர் என்று பார்க்கும் வெளி நாட்டவர்க்கும் வெளி மாநிலத்தவர்க்கும் இதைப் புரிந்துகொள்வது ஆரம்பத்தில் சிரமமாகத்தான் இருக்கும். அவர்கள் அதை அங்கீகரிப்பதற்குத் தாமதமாகலாம். ஆனால், நாம் மற்றவர்களுக்காக வலிந்து இல்லாத குடும்பப் பெயரை உருவாக்கிக்கொள்வதைவிட ஒரு சமூகமாக எழுந்து நின்று தமிழர்களுக்கு ஒற்றைப் பெயர்தான் என்று சொல்ல வேண்டும். மனத்தடைகளைக் கடந்துவருகிறபோது அவர்களுக்கும் ஒற்றைப் பெயர் பழக்கமாகும். அதன்பிறகு அவர்கள் தமிழர்களுக்கு எழுதுகிற மின்னஞ்சல்களிலும் சம்பிரதாயமான கடிதங்களிலும் ஒற்றைப் பெயரைப் பயன்படுத்துவார்கள். வெளிநாட்டு ஊடகங்களில் வி.ஆனந்த், ஆர்.வெங்கட்ராமன், அ.முத்துலிங்கம், எஸ்.ஜெய்சங்கர் போன்ற பெயர்களைப் பார்க்கிற காலமும் வரும். https://www.arunchol.com/mu-ramanathan-article-on-tamilians-family-name இது பற்றி நான் முன்னர் எழுதியது..
  7. வாட்ஸபில் இருந்து 1. சிவஞானம் சிறிதரன்: 184 2. எம்.ஏ.சுமந்திரன்:137 3. சீ.யோகேஷ்வரன்:00 நிராகரிக்கப்பட்ட வாக்குகள்:42 தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவானார்
  8. இந்த உண்மை உங்கள் வாயால் கேட்டதில் நான் மிகவும் பெருமை கொள்கின்றேன்...நன்றி நன்றி.
  9. யாழ்ப்பாணத்துக்கான எனது பயணத்தின் ஒற்றை நோக்கமே சித்தியைப் பார்ப்பதும், அவருடன் ஒவ்வொரு நாளும் சில மணிநேரங்களைச் செலவிடுவதும் தான். ஆனால், அது சாத்தியப்படாது என்பது அவருடனான முதலாவது சந்திப்பிலேயே என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. அவரால் அதிகம் பேச முடியவில்லை. அவரது உடல்நிலை அதற்கு இடம்கொடுக்கவில்லை. அதற்கு மேலாக, அவரை அவரது அறையிலிருந்து வெளியே அழைத்துவருவதற்கு அவருக்கு உதவி தேவைப்பட்டது. பிறரை எந்தவிதத்திலும் சிரமப்படுத்தக் கூடாது என்று நினைப்பவர் அவர், ஆகவே தன்னைப் பார்க்க வருவோரிடத்தில் நீங்கள் அலைக்கழிய வேண்டாம், இடைக்கிடை வந்தால்ப் போதும் என்று கூறியிருக்கிறார். அடுத்தது, மிகுந்த பலவீனமான நிலையில் இருப்பதால் அவரால் ஓரளவிற்கு மேல் சக்கர‌நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்துகொள்ளவும் முடியாது. 30 - 40 நிமிடங்களுக்கு மேல் அவரால் அங்கிருப்பதே கஸ்ட்டமாகத் தெரிந்தது. அவரைப் பார்ப்பதற்காகவே நான்கு நாட்கள் யாழ்ப்பாணத்தில் நிற்க முடிவெடுத்திருந்தேன். எனது மொத்தப் பயணத்தினதும் காலம் வெறும் 7 நாட்கள்தான். ஒவ்வொருநாளும் போய் அவருக்குச் சங்கடத்தை ஏற்படுத்தக் கூடாதென்று நினைத்தேன். இடையில் இருக்கும் இரண்டு நாளில் யாழ்ப்பாணத்தைச் சுற்றிப் பார்க்கலாம் என்று ஒரு ஆசை. 1988 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதன்முதலாக யாழ்ப்பாணத்தின் தெருக்களில் யாழ்ப்பாணத்தவர்களில் ஒருவனாகச் சுற்றப்போகிறேன் என்பதே மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. எவ்வளவு நேரம் தூங்கியிருப்பேன் என்று தெரியவில்லை, திடீரென்று முழிப்பு வந்தது. நேரம் 5 மணிதான். இனித் தூங்க முடியாது, மைத்துனரோ நல்ல நித்திரை. அக்குடும்பத்தில் ஆறுபேர். பாடசாலைக்குச் செல்வோர், வேலைக்குச் செல்வோர் என்று அனைவருமே காலை வேளையில் அவசரப்பட்டு ஆயத்தப்படுவார்கள். ஆகவே, அவர்களின் நேரத்தை வீணடிக்காது, சிரமம் கொடுக்காது எனது காலைக் கடன்களை முடிக்க எண்ணினேன். அதன்படி 5:30 மணிக்கு குளித்து முடித்து வீட்டின் வரவேற்பறையில் இருந்த கதிரையில் அமர்ந்தபடி நேற்றைய உதயனைப் படிக்கத் தொடங்கினேன். மைத்துனரின் வீட்டில் இருந்த ஒரு சில நாட்களில் என்னைக் கவர்ந்த இன்னொரு விடயமும் இருக்கிறது. அருகில் இருக்கும் சிறிய கோயிலில் இருந்து காலை 5:45 மணிக்கு மணியோசையும் அதனைத் தொடர்ந்து ஒலிக்கும் சுப்ரபாதமும். அமைதியான அந்தக் காலை வேளையில், மனதிற்கு ஆறுதலைத் தரும் அந்த இசையயைக் கேட்கக் கொடுத்து வைத்திருக்கவேண்டும். இருந்த மூன்று நான்கு நாட்களில் அதனை முற்றாக அனுபவித்தேன். இந்த அமைதியும், பரவசமும் எங்கும் இல்லை. ஏனையவர்கள் ஒருவர் பின் ஒருவராக எழத் தொடங்கினார்கள். மைத்துனரின் மனைவி சுடச் சுட கோப்பி கொடுத்தார். அருந்திவிட்டு மாமியோடும் மைத்துனரோடும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருக்க காலையுணவு வந்தது. அவர்கள் என்னைக் கவனித்துக்கொண்ட விதம் அருமை. தமது வீட்டில் ஒருவனாக என்னையும் நடத்தியது பிடித்துக்கொண்டது. நிற்க, முதலாவது நாளில் நான் சந்தித்த முக்கியமான இன்னொருவரைப் பற்றிச் சொல்ல மறந்துவிட்டேன். நண்பனுடன் யாழ்ப்பாணத்தைச் சுற்றி வந்துகொண்டிருக்கும்போது, ராசா அண்ணையைப் (நண்பனின் மூத்த சகோதரர், எனக்கும் நெருங்கிய நண்பர்) பற்றிக் கேட்டேன். "இருக்கிறாரடா, பாக்கப்போறியோ?" என்று கேட்டான். "உங்களுக்கு நேரமொருந்தால்ப் போகலாம்" என்று நான் கூறவும், ராசா அண்ணையைப் பார்க்க ஆரியகுளத்திற்கு வாகனத்தை ஓட்டினான். ராசா அண்ணை சற்று மெலிந்து காணப்பட்டார். கடந்த ஐந்து ஆண்டுகளில் அவரிலும் சிறிய மாற்றங்கள். ஆனால் அதே புன்சிரிப்பும், அன்பான வார்த்தைகளும். சில நிமிடங்கள் ஆளையாள் சுகம் விசாரித்துக்கொண்டோம். "உங்களைப்பற்றிச் சிறிய கதையே எழுதினேன் அண்ணை" என்று நான் கூறியபோது, "என்னைப்பற்றி எழுத என்ன இருக்கிறது?" என்று கூறிச் சிரித்தார். சபரிமலைக்கு மாலை அணிந்திருந்தார். உரும்பிராயில் இருக்கும் சபரிமலை ஆலயத்திற்கு தனது வேலைத்தளத்தில் பணிபுரியும் ஒரு இளைஞனுடன் போகவிருந்தவரை நாம் நிறுத்திவைத்துப் பேசிக்கொண்டிருந்தோம். சுடச்சுட கோப்பியும் வடையும் கொடுத்தார். அதிகநேரம் அவரைக் காத்திருக்க வைக்க விரும்பவில்லை. "நான்கு நாட்கள் நிற்கிறேன், இன்னொருநாள் வந்து ஆறுதலாகப் பேசலாம்" என்று கிளம்பி வந்துவிட்டோம். சரி, பழையபடி இன்றைய நாளுக்கு வரலாம், ஒரு 7:30 - 8 மணியிருக்கும். நண்பன் தொலைபேசியில் வந்தான். "மச்சான், இண்டைக்கு என்ன பிளான் உனக்கு?" என்று கேட்டான். "ஒண்டுமில்லை, சில நண்பர்களைப் பார்க்க வேண்டும். உரும்பிராயில் எனது நண்பர் ஒருவரின் தகப்பனாரைச் சென்று சந்திக்க வேண்டும். இப்போதைக்கு அவ்வளவுதான்" என்று கூறினேன். "சரி, பின்ன வா அக்கராயனுக்குப் போவம். நானும் கமத்துக்குப் போய் ஒரு மாசமாகுது, ஒண்டு இரண்டு மாத்து உடுப்பும் கொண்டுவா, அங்க இண்டைக்கு இரவு நிண்டு வருவம்" என்று கூறினான். எனக்கு அளவற்ற மகிழ்ச்சி. நண்பன் அடிக்கடி அக்கராயனில் உள்ள கமம் பற்றிப் பேசியிருக்கிறான். கொழும்பில் இருந்த காலங்களில் கமத்திலிருந்து வருவோரைக் கண்டு நான் பேசியிருக்கிறேன். ராசா அண்ணையும், நண்பனும் அக்கராயன் பற்றி அந்நாட்களில் பேசும்போது நானும் அங்கிருந்திருக்கலாம் என்றும் எண்ணியிருக்கிறேன். அந்த அக்கராயனைக் காணச் சந்தர்ப்பம் இப்போது வந்திருக்கிறதென்றால் எனது மகிழ்ச்சிபற்றிக் கேட்கவும் வேண்டுமா? இந்த அக்கராயன் பற்றிக் கூறவேண்டும். வன்னியில் இருக்கும் பச்சைப் பசேல் என்கிற விவசாயக் கிராமங்களில் ஒன்று அக்கராயன். 13 ஆம் நூற்றாண்டில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களைக் கலைத்துவிட்டு இப்பகுதியை தமிழ் மன்னனான அக்கராயன் ராசன் ஆண்டுவந்ததால் இதனை அக்கராயன் என்று அழைக்கிறார்கள். 70 ஆம் ஆண்டுகளில் இப்பகுதியில் தங்கி நின்று விவசாயம் செய்வதற்கு பொதுமக்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. கமம் செய்வதற்கு 10 ஏக்கர்களும், வீடுகட்டி தோட்டம் செய்வதற்கு 5 ஏக்கர்களும் என்று மொத்தமாக 15 ஏக்கர்கள் ஒவ்வொருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு வந்தன. அக்காலத்தில் இலங்கையிலிருந்து மலேசியாவுக்கு வேலை நிமித்தம் சென்று வாழ்ந்தவர்கள் நாடுதிரும்பத் தொடங்கியிருந்தார்கள். அவ்வாறு மலேசியாவிலிருந்து நாடுதிரும்பிய நூறுபேருக்கும் அக்கராயனில் இந்த 15 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டது. அப்படி மலேசியாவிலிருந்து நாடு திரும்பிய குடும்பங்களில் ஒன்று எனது நண்பன் ஜெயரட்ணத்தின் குடும்பமும். அவர்கள் பிற்காலத்தில் இன்னும் பல நிலங்களைப் பணம் கொடுத்தும் வாங்கியிருந்தார்கள். அவர்களின் குடும்பத்திற்கு மட்டுமே இப்பகுதியில் கிட்டத்தட்ட 90 ஏக்கர்கள் நிலம் சொந்தமாக இருக்கிறது. அக்கராயனில் ஜெயரட்ணத்தின் குடும்பத்தாரின் காணிகள் இருக்கும் பகுதியை ஊடறுத்து ஒரு அழகான சாலை செல்கிறது. வன்னியில் இருக்கும் மிகவும் ரம்மியமான சாலைகளில் முதன்மையானது அது. அப்பகுதிக்குச் சென்று அதனைக் காட்சிப்படுத்தாத யூடியூப் பதிவாளர்கள் இல்லையென்று சொல்லுமளவிற்கு மிகவும் பிரபலமானது. அதற்கான காரணம் இந்தச் சாலையின் இருபுறமும் ஓங்கி வளர்ந்து பாதையினை மூடிக் குடைபோல காத்துநிற்கும் மரங்களும், சாலையின் ஒருபுறம் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் தெரியும் பச்சைப் பசேல் என்ற வயற்காணிகளும் மறுபுறம் தெரியும் தென்னை மற்றும் கமுகு மரத் தோட்டங்களும்தான். இச்சாலையினைப் பலர் சொர்க்கத்தின் வாசற்படி என்று கூறவும் கேட்டிருக்கிறேன். இதில் விசேசம் என்னவென்றால், சாலையை அணைத்து வளர்ந்து நிற்கும் மரங்களை வைத்தது வேறு யாருமல்ல, அதே ராசா அண்ணைதான். சுமார் 600 மீட்டர்கள் தூரத்திற்கு சாலையின் இருபக்கமும் இந்த மரங்களை அவர் நட்டிருக்கிறார். 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தானபோது, நாட்டிற்கு அமைதி திரும்பிவிட்டதாக நினைத்து பலர் நற்காரியங்களில் ஈடுபடத் தொடங்கினார்கள். அப்படி இறங்கியவர்களில் ஒருவர் ராசா அண்ணை. அக்கராயனில் தமது கமம் இருந்த பகுதியூடாகச் செல்லும் சாலையின் இரு பக்கத்திலும் மரங்களை அவர் நட்டார். அவ்வாறு நட்டுக்கொண்டுவருகையில் இந்தியா ராணுவம் எம்மீதான தாக்குதலைத் தொடங்கியிருந்தது. இந்திய வல்லாதிக்கம் வன்னியை ஆக்கிரமித்த காலத்திலும் ராசா அண்ணையின் மர நடுகை தொடர்ந்து நடந்துவந்தது. அப்படியான‌ ஒரு நாளில் ராசா அண்ணையை இந்திய ராணுவம் தாக்கியது. புலிகள்மீதான ஆத்திரம் வீதியில் மரம் நட்டவர் மீது பாய்ந்தது. ஆனால், அவர் அன்று செய்த இந்த நற்காரியத்தின் பலனை இன்று அப்பகுதி மக்களும், அப்பகுதிக்கு வருவோரும் அனுபவிக்கிறார்கள். தனது நோக்கம் கனகபுரத்திலிருந்து அக்கராயன் முழுவதற்குமான வீதியின் இரு புறத்திலும் மரங்களை நடுவதுதான் என்று அண்மையில் கூறியிருந்தார். அவரது முயற்சி வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்.
  10. சரி, போவதற்கான அனுமதி கிடைத்தாயிற்று. பயணச் சீட்டை வாங்கலாம் என்று பார்த்தால் எல்லாம் விலை. எனக்கு மட்டும்தானே, சொகுசு எவையும் வேண்டாம், என்னையும், இரு பொதிகளையும் கொண்டுசெல்ல எந்த விமானமாக இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்தேன். பார்த்துக்கொண்டு போனால் எயர் இந்தியாவே உள்ளவற்றில் மலிவானதாய் இருந்தது. அதற்கு அடுத்ததாக மலிவான எயர்லங்காவுக்கும் கிட்டத்தட்ட 500 டொலர்கள் வித்தியாசம். எதற்காக அவனுக்குக் கொடுக்க வேண்டும்? பேசாமல் இந்தியாவுக்கே போய் அங்கிருந்து கொழும்பிற்குப் போகலாம் என்று நினைத்து, அதனை வாங்கிவிட்டேன். பயணச் சீட்டு வாங்கியாயிற்று, ஆனாலும் பயணம் நடக்குமா என்பது இன்னமும் உறுதியில்லை. இறுதிநேரத்தில்க் கூட வீட்டில் சூழ்நிலை மாறலாம். பிள்ளைகள் ஏதாவது கூறலாம் என்று நினைத்து மூத்தவளிடம் "நான் தனியே போவதுபற்றி என்ன நினைக்கிறாய்?" என்று கேட்டேன். "நீங்கள் போகத்தான் வேணுமப்பா, அவ உங்களைப் பாத்தவ, போட்டு வாங்கோ, நாங்கள் சமாளிக்கிறம்" என்று சொன்னாள். அப்பாடா, பிள்ளைகள் ஓக்கே, அப்போ பயணிப்பது கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது. சரி, யாழ்ப்பாணத்தில் எங்கே தங்குவது, கொழும்பில் எங்கே தங்குவது, பயணிப்பது எங்கணம் என்று அடுத்த விடயங்கள் தொடர்பான கேள்விகள். கொழும்பில் தங்குவதற்கு மனைவியின் சித்தியின் வீடு இருந்தது. என்னை ஒரு சில நாட்களுக்கு தம்முடன் தங்கவைப்பதில் அவர்களுக்குப் பிரச்சினையேதும் இல்லையென்று சொன்னார்கள். எனக்கும் நன்கு பரீட்சயமானவர்கள்தான், நானும் ஆமென்றுவிட்டேன். விமானநிலையத்திற்கு வந்து என்னை வரவேற்றது முதல், யாழ்ப்பாணத்திற்கான ரயில் சீட்டுக்களை முன்பதிவுசெய்து, அதிகாலை 5 மணிக்கு புறக்கோட்டை புகையிரத நிலையம் வந்து, ஓடி- ஏறி ஆசனம் பார்த்துத் தந்ததுவரை எல்லாமே சித்தப்பாதான். கடமைப்பட்டிருக்கும் சிலரில் அவருமொருவர். சரி, பயணத்திற்கு வரலாம். யாழ்ப்பாணத்தில் தங்குமிடம் பார்க்கவேண்டும். நண்பனிடம் கேட்டேன். "நீ பேசாமல் வா, நானெல்லோ இடம் ஒழுங்குபடுத்தித் தாரது" என்று சொன்னான். அவன் சொன்னால் செய்வான் என்பது தெரியும், ஆகவே மீண்டும் கேட்டுத் தொல்லை கொடுக்கவிரும்பவில்லை. பயணிப்பதற்கு முதல்நாள் அவனுக்கு குறுந்தகவல் அனுப்பினேன். "மச்சான், அறுவைச் சிகிச்சை ஒன்றிற்காக கொழும்பு வந்திருக்கிறேன், ஆறுதலாய் எடுக்கிறேன்" என்று பதில் வந்தது. அடக் கடவுளே, இப்போது என்ன செய்வது? வேறு இடமும் ஒழுங்குசெய்யவில்லையே, சரி போய்ப் பாப்பம் என்று கிளம்பிவிட்டேன். யாழ்ப்பாணத்தில் மைத்துனனின் வீடு இருக்கிறது, அவசரமென்றால் அங்கு தங்கலாம் என்று சொல்லியிருந்தான். ஆகவே, பரவாயில்லை என்று எண்ணிக்கொண்டேன். இந்தப் பயணத்தில் நான் செய்யவேண்டிய இரு முக்கிய விடயங்கள் என்று நான் நினைத்தவைகளில் முதலாவது சித்தியுடன் முடிந்தவரை அதிக நேரம் செலவிடுவது. மற்றையது வன்னிக்குச் செல்வது. குறிப்பாக கிளிநொச்சியில் இருந்து முல்லைத்தீவு வரை 2009 இல் எமது மக்கள் இடம்பெயர்ந்து சென்ற பாதை வழியே நானும் செல்வது, முள்ளிவாய்க்காலில் இறங்கி வணங்குவது. இவைதான். வேறு எதுவுமே மனதில் இருக்கவில்லை.
  11. 2018 இன் பயணம் அதிக கனதிகளின்றி, குறைவான மனப்பதிவுகளுடன் முடிந்துவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்களேன். ஆனால் எனது கடந்த கார்த்திகை மாத இறுதிநாட்களின் பயணம் அப்படிப்பட்டதல்ல. எனது சித்தியின் உடல்நிலை கவலைக்கிடகமாக மாறிப்போனது. நினைவுக‌ள் குழம்பிப் போய், ஒரு சில விடயங்கள் மட்டுமே மனதில் இன்னும் எஞ்சி நிற்க, உடலாளும், மனதாலும் அவர் பலவீனமான நிலையில் இருந்தார். இருமுறை கால்தவறி வீழ்ந்துவிட்டதால் வயதான அவர் உடலில் சத்திரசிகிச்சை மூலம் தகடுகள் பொறுத்தப்பட்டு முறிவுகள் சரிசெய்யப்பட்டிருந்தது. நடக்கப்பதற்கான உடல்வலுவின்றி சக்கர நாற்காலியில் அவரைப் பராமரித்து வருகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். பார்த்துவந்தவர்களில் ஒருசிலர் "உன்னைப்பற்றித்தான் அடிக்கடி கேட்கிறா, ஒருக்கால்ப் போய் பார்த்துவிட்டு வா" என்று கூறினார்கள். ஆகவே, போவதென்று முடிவெடுத்தேன், தனியாக ! அங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது. "கண்டறியாத அரசியல் எழுதுறியள், உந்த லட்சணத்தில ஊருக்குப் போகப்போறியளோ? போதாக்குறைக்கு பேர் வேறை போட்டு எழுதுறியள், அவங்கள் பிடிச்சால் என்ன செய்வியள்?" என்று கேள்விகளுடன் ஆரம்பித்து, "நீங்கள் தனியாக உல்லாசமாக ஊர் சுத்தப் போறியள், பச்சுலர்ஸ் பாட்டிக்குத்தானே போறியள்? அதுதான் எங்கள்மேல அக்கறை இல்லாமல், விட்டுப்போட்டுப் போறியள், நீங்கள் ஒரு சுயநலவாதி" என்பதுவரை பல தடங்கல்களும் நான் போகக்கூடாது என்பதற்கான காரணங்களும் முன்வைக்கப்பட்டன. நான் பிடிவாதமாக இருந்துவிட்டேன். "இல்லை, நான் போகத்தான் போகிறேன், பிள்ளைகளை நீங்கள் பாத்துக்கொள்ளுங்கோ" என்பதே எனது முடிவான பதில். அதன்பின் எவருமே எதுவும் பேசவில்லை. வீட்டில் அமைதி, சில நாட்களுக்கு. அவ்வப்போது மீண்டும் இதே சம்பாஷணை வரும், அதே கேள்விகள், அதே விளக்கங்கள், முடிவான எனது பதில். இப்படியே சில வாரங்கள் கரைந்துவிட்டன. இறுதியாக ஒரு சமரசம், "சரி, நீங்கள் கிறிஸ்மஸ் விடுமுறைக்கு வீட்டை நிற்கவேணும், அதுக்கு ஓமெண்டால் நீங்கள் போய்வரலாம்" என்று அனுமதி கிடைத்தது. எனக்கும் அது சரியாகப் பட்டது. ஆகவே சரி என்றேன்.
  12. இந்தியவாழ் இலங்கை அகதிகளுக்கு சர்வதேச அங்கிகாரமிக்க கடவுச்சீட்டு! சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலின்கீழ் சர்வதேச கடவுச்சீட்டு இன்று (19) சென்னையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மேலும் தெரிவிக்கையில்” வடக்கு கிழக்கை சேர்ந்த இலங்கையர்கள் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவின் பல்வேறு முகாம்களில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இலங்கைக்குத் திரும்புவதாயினும் வெளிச்செல்லும் பாஸ்கள் மாத்திரமே வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்கு கொண்டுசென்ற போது, அவரது வழிகாட்டுதலின்கீழ், இந்தியவாழ் இலங்கை அகதிகளுக்கு உடன் அமலுக்கு வரும்வகையில் இலங்கை அரசின் வரலாற்றில் முதல்தடவையாக சர்வதேச அங்கிகாரமிக்க கடவுச்சீட்டுகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. உலகில் வேறெங்கிலும் இதற்குமுன்னர் இலங்கை அரசால் இவ்வாறானதொரு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவில்லை. மேலும் இந்திய அகதி முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குமாறு இரண்டுமுறை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட பஜக தமிழகத் தலைவர் அண்ணாமலையிடம் கோரிக்கை முன்வைத்ததைத் தொடர்ந்து, இந்திய உள்துறை அமைச்சர் அமத்ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரால் அவ்விடயம் தொடர்பான வேலைத் திட்டங்களுக்கான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இந்த தருணத்தில் 40 வருடங்களாக தாய் நாட்டை விட்டு வெளியேறியவர்களுக்கு அடைக்கலம் வழங்க உதவிய இந்திய அரசுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வருக்கும் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் ” இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1366575
  13. நிர்வாகத்தினர், இந்தத் திரியில் முன்வைக்கப்பட்ட கடைந்தெடுத்த இழிந்த மதவாதக் கருத்துக்களை நீக்கிமாறு கோரிக்கை வைக்கிறேன்.
  14. சிசிலியாஸ் கொன்வென்ட்டில் 80 களில் கணிதம் படிப்பித்தவர்.
  15. ரணில் என்ன நரிப்புத்தியோட இதைச் செய்தாலும் தமிழ்மக்கள் அதைச தங்களுக்குச் சாதகமாக மாற்றப் பார்க்கணும்.
  16. வாழ்த்துக்கள் சிறிதரன்...இருவரும் அரசியல் தெரிந்த மேதைகள் ... யார் ஊடக பேச்சாளர்? சம்பந்தன் சுமத்திரனை உள்வாங்கி தமிழ்தேசியத்தை ஆட்டம் காண வைத்தது போல.... சிறிதரன் நம்பிக்கையான உண்மையான தமிழ் தேசிய பற்று உள்ள இளைஞர்களை உள்வாங்கி தனக்கு அடுத்த கட்ட செயல் வீரர்களை உருவாக்க வேண்டும்... இன்றைய இக்கட்டான் நேரத்தில் தமிழ் தேசியத்தை நீக்க பல கோணங்களிலிருந்து செயல் படுகின்றனர். சர்வதேசமும் தமிழ் தேசிய நீக்கத்தை விரும்புகிறது .இந்தியா ஒருபடி மேலே சென்று இந்து அடையாள அரசியலை திணிக்க முயல்கிறது..இவை யாவற்றையும் சுளிச்சு வெட்டி ஒடி தமிழ் தேசியத்தை தக்க வைப்பார்களா இவர்கள்?
  17. நீங்கள் பதிவிடும் பெரிய பெரிய கட்டுரைகளைப் பார்த்து, “இந்த மனுசன் பலவற்றை எல்லாம் வாசித்து அதில் நல்லவற்றை எடுத்து வந்து யாழில் பதிவதற்கு எவ்வளவு நேரம் தேவைப்படும்” என்று ஆச்சரியப் பட்டிருக்கிறேன். ஆகவே ஒரே மூச்சில் படித்து விடுவது உங்களுக்குப் பெரிதல்ல. நன்றி கிருபன்
  18. யாழ்கள உறுப்பினர்களிடமிருந்து ஒரு வாக்கும் பெறாத சிறீதரன் வெற்றி பெற்றுள்ளார்🤣🤣🤣🤣 இதில் இருந்து நீங்கள் கற்றுக் கொண்டது யாது?
  19. தாயக தமிழர்கள் மிக அவதானமாகவே நடந்து கொள்ள வேண்டும். அவர்களது வாழ்வு அங்கே தான் உள்ளது. அவர்களது பிள்ளைகளின் பாதுகாப்பு, கல்வி, வாழ்ககை தொடர்பாக அக்கறை தேவை. (ஏற்கனவே பட்டறிவு உள்ளது) புலம் பெயர் தமிழர்களை பொறுத்தவரை மாற்றதை புரட்சியை எதிர்பார்ரப்பார்கள். ஏனென்றால் அவர்களது பிள்ளைகளை கல்வியை முடிக்க பாதுகாப்பாக வாழ அவர்கள் வாழும் நாடுகளில் உத்தரவாதம் உள்ளது. அவர்கள் எதிர்பார்ககும் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஏதாவது விரும்ப தகாத சம்பவங்கள் நடைபெற்றாலும் ஒரு சில நாட்கள் செய்தியுடன், தமது வீரா வேசங்களை முகநூல் போன்ற இணையங்களில் கொட்டி விட்டு தமது குடும்பங்களை கவனிக்க சென்றுவிடலாம்.
  20. அதனை இந்தியாதான் தீர்மானிக்கும். யாப்பு எல்லாம் ஒரு பிரச்சினை இல்லை.
  21. இது எமக்கு ஒரு பெரிய பிரச்சினைதான் ...... பொதுவாகவே எமது பெயர்கள் நீள ....ம்கூம்...ரொம்ப நீளமானது......இந்த லட்ஷணத்தில் தந்தையின் பெயரையும் சேர்த்தால் மிச்ச எழுத்துகளை படிவத்தை விட்டு மேசையில்தான் எழுதவேண்டும்......இப்பொழுது எனது தந்தையின் பெயர் என் பெயராகவும் என் பெயர் குடும்பப் பெயராகவும் இருக்கின்றது.......படிவங்கள் நிரப்பும்போது குடும்பத்திலும் எப்படி எழுதுவது என்னும் பிரச்சினை வரும்.......முக்கியமாக பெண்களுக்கு......எனது மனைவியார் (ஒருவர்தான், மரியாதையின் நிமித்தம் "யார்" போட்டிருக்கு) பெரும்பாலும் தனது தந்தையின் பெயரையே பாவிப்பதுண்டு....... அதற்கு பெண்களுக்கு அனுமதியுண்டு......அது ஒரு "பை ரோட்" மாதிரி.....! 😂
  22. வாற தீபாவளி மட்டும் பொறுத்திருந்து பாப்பம்.
  23. வாக்கு எண்ணுகின்ற இடத்திற்கு... சுமந்திரனை விடாதேங்கோ.
  24. வன்னிப் பெருநிலப்பரப்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழீழ காவல் பணிமனைகளின் இருப்பிடத்தைக் காட்டும் நிலவரை(map)
  25. இணைப்புக்கு நன்றி, வெயில் காலத்தில் ஏற்படும் தொண்டைக் கரகரப்பு ஏற்படும்போது பாவித்தால் கரகரப்புக் குறையும். அன்னம் என்ற பெயரில் இந்தியாவிலிருந்து வருகிறது. பனம்பொருள் உற்பத்திச் சபை இதுபோன்ற தொழில் முயற்சிகளை ஊக்குவித்தால் அன்னியச் செலாவணியை ஈட்டலாம். இன்று நவீன கருவிகளை தேவைக்கேற்றவாறு தயாரித்துப் பெறக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன. மூலப்பொருளைத் திரட்டுவதற்கான பொறிமுறைகளை இலகுவாக்கி இலாபமீட்டும் தொழிலாக மாற்றலாம். பொலிகண்டியில் 50ஆண்டுகளின் முன் இருந்த தொழிலை மீண்டும் ஏன் கொண்டுவரக்கூடாது. நன்றி
  26. அவர் இருப்பது பாஷையூர் திருக்குடும்பக் கன்னியாஸ்த்திரிகள் மடம். அவரது பெயர் சிஸ்ட்டர் கிறிஸ்டபெல். யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் கணித ஆசிரியராக நெடுங்காலம் பணியாற்றியவர். பின்னர் வன்னியில் உளநலம் பாதிக்கப்பட்டோருக்கான மனோதத்துவ நிபுணராக இறுதிவரை பணிபுரிந்தவர். தற்போது ஓய்வெடுத்திருக்கிறார்.
  27. ஈரானின் பற்கள் ஒவ்வொன்றாக புடுங்கப்படுவை காண மகிழ்ச்சி. இது மேலும் தொடர வேண்டும்.
  28. என்ன நடந்தது என்பதை அறியத்தூண்டும் வகையில் சிறப்பான எழுத்துநடை.துளையிடுவதும் எண்களைக் கூறுவதும்,...என்ன கொடுமை. சட்டத்தைக் கையிலே எடுக்கும்நிலை. பயமாக இருக்கிறது. முடிவில் உள்ளதுபோன்று அவர்கள் தமது சொந்தநாட்டில் செழிப்பான வாழ்வுக்கான அத்திவாரமோ யாரறிவார்... உண்மைச் சம்பவமானபோதும் அதனை வாசகன் சுவைக்கும் வகையில் அழகுற நகர்த்திச் செல்வதென நன்றாக உள்ளது. பாராட்டுகள். (அண்மையில் ஒரு செய்தியில் நொயிஸ் நகரில் உள்ள பாடசாலை உயர்வகுப்பு இஸ்லாமிய மாணவரிடைய நடந்த கருத்தாடலில் "சரியா பொலிஸ்,, தேவையென்று கூறியதாகப் படித்தேன்.)
  29. இரசிக்கும்படியாக நடந்த சம்பவத்தை கதையாக்கிய கவி ஐயாவிற்கு நன்றி.
  30. "இண்டைக்கு கார்த்திகை விளக்கீடு மச்சான், வீட்டிலை மரக்கறி, எங்க சாப்பிடப் போகிறாய்?" என்று கேட்டான். "எனக்கு மரக்கறி பிரச்சினையில்லை" என்று நான் கூறவும். "இல்லை, பிள்ளைகளுக்கும் மரக்கறியெண்டால் இறங்காது, வா கொத்து ஏதாவது சாப்பிடுவம், அப்படியே பிள்ளைகளுக்குக் எடுத்துக்கொண்டுவரலாம்" என்று நண்பன் கூறவும், சரியென்றேன். அவனது வீட்டிலிருந்து கச்சேரி நோக்கிப் போகும் வழியில், வைத்தியசாலை வீதியில் யு.எஸ் ஹோட்டல் என்று ஒரு அசைவக உணவகம் இருக்கிறது. சில மாடிகளைக் கொண்ட அக்கட்டிடத்தின் முதலாவது மாடியில் உணவகமும் அதற்கு மேல் நிகழ்வுகளுக்கான மண்டபமும் இருக்கிறது. கட்டடத்தின் முன்னால் வாகனத்தை நிறுத்திவிட்டு, அருகிலிருந்து மற்றைய உணவகங்களைப் பார்த்துக்கொண்டு வரும்போது நண்பனின் அலுவலக மேலாளர் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சிங்களவர், யாழ்ப்பாணத்தில் வசிப்பவர். தென்பகுதி அரசியல்வாதிகள், அமைச்சர்களோடு நெருங்கிய தொடர்பில் இருப்பவர். நண்பனைக் கண்டதும் சத்தமாகச் சிங்களத்தில் பேசினார். நண்பனுடன் அவர் பேசிக்கொண்டிருக்க, அப்பகுதியைச் சுற்றி நோட்டமிட்டேன். அந்த உணவகங்களின் முன்னாலும் பல சிங்களவர்களைக் காணக் கிடைத்தது. வான்கள், கார்கள் என்று ஓரளவிற்கு வசதிபடைத்த தென்பகுதி மக்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகிறார்கள் என்பது தெரிந்தது. அவரிடம் பேசும்போது, "இப்பகுதியில் ஓரளவிற்கு நல்ல கொத்து எங்கு வாங்கலாம்?" என்று நண்பன் கேட்கவும், "ஏன், யு.எஸ்ஸை முயற்சி செய்து பாருங்கள், அல்லது இன்னும் இரண்டு மூன்று இடங்கள் எனக்குத் தெரியும்" என்று அந்தச் சிங்களவர் கூறினார். நான் திகைத்துப் போனேன். ஒரு சிங்களவர் யாழ்ப்பாணத்தில் நல்ல உணவு கிடைக்கும் இடங்களை நன்கு தெரிந்து வைத்திருக்கிறார் என்றால், அவர்கள் எவ்வளவு தூரத்திற்கு அங்கு ஒற்றிவிட்டார்கள் என்பது புரிந்தது. அவர் கூறியவாறே யு.எஸ் உணவகத்திற்குச் சென்று ஆட்டுக் கொத்தும், கோழிக்கறியும் கேட்டோம். இடையே குடிப்பதற்கு ஜிஞ்சர் பியரும் கேட்டோம். சாப்பாடு அருமை. குளிர்ந்த சோடாவோடு சேர்த்து உண்ணும்போது அமிர்தமாக இருந்தது. அந்த உணவகத்தில் பணிபுரிந்தவர்கள் யாழ்ப்பாணத்துத் தமிழர்களாக இருக்கலாம், ஆனாலும் பேச்சு வழக்கில் வேறுபாடு தெரிந்தது. மிகவும் மரியாதையாகவும், பணிவாகவும் நடந்துகொண்டார்கள். அடிக்கொருமுறை சேர் என்று அழைத்தார்கள். நண்பன் இக்கடைக்கு அடிக்கடி வந்திருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன். சாப்பிட்டு முடிந்ததும் அதற்கான கட்டணத்தையும், பணியாளருக்கான "சந்தோசப் பணத்தையும்" நண்பனே கொடுத்து (நான் கொடுக்கிறேன் என்று நான் கூறியும் பிடிவாதமாக மறுத்து, உனக்கு செலவுசெய்ய நான் சந்தர்ப்பம் ஒன்றைத் தருவேன், அப்போதுச் செய்தால்ப் போதும் என்று கூறிவிட்டான்) பிள்ளைகளுக்கும் தேவையான உணவினை வாங்கிக்கொண்டு மறுபடியும் வீடு வந்தோம். இரவு ஒன்பதரை ஒன்பதே முக்கால் ஆகுகையில் மீண்டும் என்னை மைத்துனரின் வீட்டின் முன்னால் இறக்கிவிட்டான் நண்பன். நான் உள்ளே போகும்வரை அப்பகுதியிலேயே வாகனத்தை நிறுத்திவிட்டு காத்து நின்றான். கேட் உட்பகுதியால் பூட்டப்பட்டிருந்தது. வெளியிலிருந்து அதனைத் திறக்க என்னால் முடியவில்லை. பலமாக கேட்டினைத் தட்டிப் பார்த்தேன், எவரும் வீட்டிற்கு வெளியே வரவில்லை. நண்பன் இன்னமும் அங்கு நிற்பது தெரிந்தது, "நீங்கள் போங்கோ, நான் கோல்பண்ணிப் பார்க்கிறேன்" என்று கூறி அவனை அனுப்பிவைத்தேன். ஆனாலும் வீட்டிலிருந்து எவரும் வெளியில் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. நான் தட்டிய சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர் தனது கார்த்திகை விளக்கீட்டினை வீதிக்கு வந்துபார்ப்பது போல பாசாங்கு செய்துகொண்டு என்னை யாரென்று நோட்டம் விடுவது எனக்குத் தெரிந்தது. தோளில் பாரிய பையொன்று தொங்க, முன்பின் தெரியாத ஒருவர் பக்கத்து வீட்டின் முன்னால் இரவு 10 மணிக்கு நிற்கிறார் என்றால் சந்தேகம் வரத்தானே செய்யும்? சயன்ஸ் சென்ட்டர் எனும் பிரபல டியுஷன் நிலையத்திற்கு மிக அருகிலேயே மைத்துனரின் வீடு. இரவு வகுப்பு முடிந்து மாணவர்களும் போயாயிற்று. வீதியில் வெளிச்சம் இருந்தாலும் எப்போதாவது அவ்வீதியூடாகச் செல்லும் மோட்டார் சைக்கிள் அல்லது முச்சக்கர வண்டியைத் தவிர ஆளரவம் மிகவும் குறைவான வீதியது. என்னடா செய்யலாம்? இப்படியே காலை மட்டும் வீதியில் நிற்கவேண்டி வந்துவிடுமோ என்று ஒரு பக்கம் யோசனை. ஆனால், எவராவது சந்தேகத்தின் பேரில் என்னைப் பொலீஸில் போட்டுக்குடுத்தால் என்னசெய்வது என்கிற பயமும் உள்ளுக்குள் இருந்தது. ஆனால் ஒரேயொரு ஆறுதல், மைத்துனர் வேலை முடிந்து 10:30 மணிக்குத்தான் வீடுவருவார். அவர் வரும்வரை காத்திருக்கலாம் என்று அப்படியே வீதியில் நின்றுகொண்டேன். அதிஸ்ட்ட‌வசமாக மைத்துனரின் மனைவி வீட்டின் முன்கதவினைத் திறந்துபார்க்கவும், நான் பலமாக அவரை அழைத்து, "கேட்டை ஒருக்கால் திறவுங்கோ" என்று கேட்டேன். "அடகடவுளே, எவ்வளவு நேரமாய் உதிலை நிக்கிறியள்?" என்று கேட்டார். நானும், "இப்பத்தான், ஒரு அரைமணித்தியாலம் இருக்கும்" என்று கூறிச்சிரித்தேன். "கேட்டைத்திறந்து வந்திருக்கலாமே?" என்று கேட்கவும், திறக்க முயற்சித்தேன் ஆனால் முடியாமற்போய்விட்டது என்று கூறவும் சிரித்துவிட்டார். மறுபடியும் அலங்கார குமுழைத் திருகிக்கொண்டு நின்றிருக்கிறேன் என்பது புரிந்தது. குளித்துவிட்டு மாமியுடன் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தேன். பழைய கதைகள், நீண்டகால தொடர்பில்லாத உறவினர்கள், எவரெவர் இப்போது எங்கிருக்கிறார்கள் என்கிற கேள்விகள் என்று சம்பாஷணை தொடர்ந்தது. மைத்துனர் இரவு 10:30 இக்கு வந்ததும் இரவுணவு அருந்திவிட்டு, வீட்டின் மண்டபத்தில் பாய் தலையணையுடன் படுத்திருந்து நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். இரவு 12:30 - 1 மணிக்குத் தூங்கியிருப்போம் என்கிற நினைவு. யாழ்ப்பாணத்தில் எனது முதலாவது நாள் நிறைவிற்கு வந்தது.
  31. பாஷையூரிலிருந்து நாம் படித்த பாடசாலையான பத்திரிசியார் கல்லூரி வழியால் சென்றோம். பழைய நினைவுகள் வந்து போயின. நான் படிக்கும் காலத்தில் இருந்த உயர் வகுப்புக்கள் இருந்த பகுதி முற்றாக காணாமற்போயிருந்தது. பாடசாலையின் மத்திய வகுப்புக்கள் இருந்த பகுதிக்கு அதனை மாற்றியிருப்பதாக நண்பன் சொன்னான். ஒரு சில கட்டடங்களைத்தவிர 80 களில் இருந்ததுபோன்றே அப்பகுதி தெரிந்தது. அப்படியே சேமக்காலை வீதிவழியாக கடற்கரை வீதிக்கு வந்து அங்கிருந்து யாழ்ப்பாணம் பண்ணைப்பகுதி நோக்கிச் சென்றோம். அப்பகுதியில் பாரிய மாற்றம் ஏதும் இல்லை. சின்னக்கடைக்கும் பண்ணைப்பகுதிக்கும் இடையில் இராணுவ முகாம் ஒன்று இருந்தது. சிறியதுதான், ஆனாலும் அவர்களின் பிரசன்னம் நன்றாகவே தெரிந்தது. அப்படியே புதிதாகக் கட்டப்பட்டுவரும் யாழ்ப்பாண மாநகரசபைக் கட்டத்தையும் பார்த்துக்கொண்டே பண்ணைப்பகுதிக்கு வந்தோம். சுற்றுலாத்தளம் போல் மிகவும் சுறுசுறுப்பாகவும் மக்கள் நிறைந்தும் காணப்பட்டது. கோட்டையின் பின்பகுதியில் தெற்கிலிருந்து சிங்கள மக்களை கொண்டுவந்த பஸ்வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்க, அதில் வந்தவர்கள் அப்பகுதியில் கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள். கொத்துரொட்டிக் கடைகள், சிற்றுண்டிக் கடைகள், ஐஸ் கிறீம் கடைகள், சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட் கடைகள் என்று அப்பகுதியெங்கும் மக்கள் அலைமோதிக்கொண்டிருந்தார்கள். அங்கிருந்தவர்களில் தமிழர்களைவிடவும் சிங்களவர்களே அதிகமாகக் காணப்பட்டார்கள். யாழ்ப்பாணத்தைச் சென்று பார்ப்பதென்பது அவர்களைப்பொறுத்தவரையில் விருப்பமான ஒரு பொழுதுபோக்கு என்றே நினைக்கிறேன். நான் யாழ்ப்பாணம் வந்த ரயிலில்க் கூட பெருமளவு சிங்களவர்கள் யாழ்ப்பாணம் வந்திருந்தார்கள். பலவிடங்களில் இவர்களின் பிரசன்னம் இருந்தது. பண்ணையிலிருந்து ஊர்காவற்றுறை நோக்கிச் செல்லும் பாதையில் கடற்படை முகாமிற்கு சற்று முன்னர் வாகனத்தை நிறுத்திக்கொண்டோம். இறங்கி, இருபக்கமும் தெரிந்த இயற்கை அழகை மாலைச் சூரியன் மங்கும் வேளையில் படமெடுத்தேன். ரம்மியமாகவிருந்தது. இதேபகுதியை பலமுறை யூடியூப் தளத்தில் பலர் பதிவேற்றியிருக்கிறார்கள். மிகவும் அழகான‌ பகுதி. என்னைப்போலவே வேறு சிலரும் அப்பகுதியில் நின்று படமெடுப்பது தெரிந்தது. அன்று கார்த்திகை விளக்கீடு. யாழ்நகரெங்கும் வீடுகளின் முன்னால் விளக்குகள் ஏற்றப்பட்டு மிகவும் அழகாகத் தெரிந்தது. நண்பனின் வீட்டிற்குச் சென்றோம். அவனது வீட்டிலும் பிள்ளைகள் விளக்கீடு வைத்திருந்தார்கள். வீட்டின் முன்னால், முற்றத்தில், மதிலின் நீளத்திற்கு என்று பல விளக்குகள். யாழ்ப்பாணத்தில் நான் வாழ்ந்த காலத்தில் பார்த்ததற்குப் பின்னர் இன்றுதான் விளக்கீட்டினை மீண்டும் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஊரை விட்டு எப்போதுமே நீங்கியதில்லை என்கிற உணர்வு ஒருகணம் வந்துபோனது. ஊரில் வாழ்பவர்கள் கொடுத்துவைத்தவர்கள் என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டேன்.கைலாசபிள்ளையார் கோயிலுக்குப் பின்னால் அவனது வீடு. கோயிலின் சுற்றாடல் என்றால் கேட்கவும் வேண்டுமா? அப்பகுதி விளக்கீட்டில் தெய்வீகமாகக் காட்சியளித்தது. பின்னர் அவனது பிள்ளையை வகுப்பிலிருந்து கூட்டிவர கட்டப்பிராய்ப் பகுதிக்குச் சென்றோம். போகும்போது நல்லூர்க் கோயிலூடாக செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. என்னைப்பொறுத்தவரை நல்லூரே யாழ்ப்பாணத்தின் அடையாளம் என்று எண்ணுவதுண்டு. கோயிலின் கம்பீரமும், அழகும் என்னைக் கவர்ந்தவை. அதனைப் பார்க்கும்போதே மனதிற்கும் இனம்புரியாத சந்தோசமும், பெருமையும் ஒருங்கே வந்துபோகும். இரவு விளக்கு வெளிச்சங்கள் கோயிலை இன்னும் அழகுபடுத்த, காரில் பயணித்தவாறே சில படங்களையெடுத்தேன். நாளை மாவீரர் நாள். நல்லூர் திலீபன் நினைவிடத்தில் பாரிய பந்தல்கள் இடப்பட்டு மக்கள் அப்பகுதியில் கூட்டமாக நின்று மாவீரர் நாள் ஒழுங்குகளைச் செய்துகொண்டிருப்பது தெரிந்தது. பந்தலின் முன்னால் நூற்றுக்கணக்கான மோட்டார்சைக்கிள்கள். இளைஞர்கள் விருப்புடன் வந்து அப்பகுதியில் பணிகளில் ஈடுபட்டிருந்ததைப் பார்க்கும்போது மக்களின் மனோநிலை எப்படியிருக்கிறதென்பது புரிந்தது. கட்டப்பிராயில் பருத்தித்துறை வீதியிலேயே வகுப்பு நடைபெற்றது. வாகனத்தை வீதியோரத்தில் நிறுத்திவிட்டு சில நிமிடங்கள் காத்திருந்தோம். அந்த இரவு வேளையிலும் பருத்தித்துறை வீதி மக்களும் வாகனங்களும் நிறைந்து காணப்பட்டது. குறுகலான வீதி, ஆனாலும் இருபுறமும் செல்லும் வாகனங்கள் வேகத்தைக் குறைக்காது, இலாவகமாக வீதியின் இடதுபக்கமும், வலதுபக்கமுமாக மாறி மாறி ஓட்டிக்கொண்டிருந்தார்கள். இவர்களுக்கிடையே மோட்டார்சைக்கிள்கள், முச்சக்க வண்டிகள், நடந்துசெல்லும் மனிதர்கள் என்று ஒரே கலேபரம். நண்பனின் பிள்ளை வகுப்பு முடிந்து வந்ததும், அவரை ஏற்றிக்கொண்டு மீண்டும் வீடு வந்தோம்.
  32. பாகிஸ்தான் ஆட்களை பற்றி தெரியாது. ஈரானிய மதவாத அரசை கடுமையாக வெறுக்கும் ஈரானியர்கள் இருக்கின்றார்கள்.
  33. இவன் யாரை தனது எதிரியென்று சொல்கிறான்? தமிழ் மக்களையோ? தமிழினத்திற்குத் துரோகம் இழைத்து, எதிரியுடன் நின்று தமிழர்களையே ஆயிரக் கணக்கில் கொன்றாயே, அந்தத் தமிழர்களையா சொல்கிறாய்? இன்னுமாடா உன்னை தமிழ்ச் சனம் நம்பும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறாய்?
  34. ஆட்கடத்தல் மற்றும் சித்திரவதைகள் போன்ற குற்றச்சாட்டின் கீழ் மூன்று கட்டமாக ஹைல்புறோன் நகரில் வழக்கு நடத்தப்பட்டது. எனது மகன் தொலைபேசியில் அழைத்துக் கேட்டான், நாளைக்கு (09.01.2024) டாடோவின் வழக்கின் முடிவு அறிவிப்பார்கள். வரப் போறீங்களோ?” “ஓம், வாறன்” “ விவசாயிகள் போராட்டம் நாளைக்குத் தொடங்கினம். ரக்ரர்களைக் கொண்டுவந்து றோட்டுகளை ப்ளக் செய்யலாம். வெள்ளெனவாப் போறது நல்லது. ஏழு மணிக்கு நான் உங்களை பிக் அப் பண்ணுறன்” நீதிமன்றத்தின் உள்ளே போகும் முன் கைத்தொலைபேசி உட்பட அனைத்தையும் ஒரு பெட்டிக்குள் போட்டு ‘லொக்கரில்’ என்னைக் கொண்டே பூட்ட வைத்து திறப்பை எடுத்துக் கொள்ளும்படி சொன்னார்கள். கூடவே உடல் எல்லாம் தடவிப் பார்த்து விட்டு, “ நீங்கள் பார்க்க வந்த ஆட்கடத்தல் வழக்கு 106வது மண்டபத்தில், ஒன்பது மணிக்குத் தொடங்குகிறது” என்று தகவலைத் தந்தார்கள். கைவிலங்கு போட்டபடியே முகமதுவையும் லூக்காவையும் பொலிஸார் அழைத்து வந்தார்கள். முதல் வரிசையில் முகமதுவும் அவனது சட்டத்தரணியும் அமர்ந்திருந்தார்கள். இரண்டாவதில் லூக்காவும் அவனது சட்டத்தரணியும் மூன்றாவதில் எல்விஸும் அவனது சட்டத்தரணியும் அமர்ந்திருந்தார்கள். “போதைப் பொருட்களை முகமது பாவிப்பதால் அவனுக்கு, தான் என்ன செய்கிறேன் என்று சில சமயங்களில் தெரிவதில்லை. சம்பவத்தன்றும் ஸ்வேபிஸ்ஹாலில் இருந்து பேர்லினுக்குப் பயணிக்கும் போதும் அவன் போதைப் பொருள் எடுத்திருந்தான்” என்பதை முகமதுவின் சட்டத்தரணி தனது தொகுப்புரையில் வலியுறுத்தி இருந்தார். “லூக்கா சம்பவம் நடந்த அன்று போதைப் பொருள் உட்கொண்டிருந்தான்” என லூக்காவின் சட்டத்தரணி சொன்னார். எல்விஸ் முகமதுவின் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு தொழிலாளி . முதலாளி சொன்ன வேலையைத்தான் அவர் செய்தார். மற்றும்படி குற்றச் செயல்களில் அவர் ஈடுபடவில்லை” என எல்விஸின் சட்டத்தரணி குறிப்பிட்டார். “நடந்த சம்பவங்களுக்காக நான் வெட்கப்படுகிறேன்,வருத்தம் தெரிவிக்கிறேன். மன்னிப்பும் கேட்கிறேன். அழகானதும் ஒழுங்கானதுமான வாழ்க்கை எனக்கு இருந்தது. போதைப் பழக்கத்தால் எல்லாவற்றையும் நான் வீணடித்து விட்டேன். எனக்கு எனது பழைய வாழ்க்கை வேண்டும். நல்லபடியாக நான் வாழ வேண்டும். லூக்கா காரை ஓட்டி வந்ததைத் தவிர அவன் எந்தக் குற்றமும் செய்யவில்லை. தயவு செய்து அவனுக்கு தண்டனை தந்து விடாதீர்கள்” என முகமது குறிப்பிட்டான். “போதைப் பொருள் பாவித்ததால் தடுமாறி விட்டேன். மன்னித்து விடுங்கள்” என லூக்கா சொன்னான். “குற்றத்தை ஒப்புக் கொள்கிறேன்” என எல்விஸ் சொன்னான். அரச சட்டத்தரணியான லுஸ்ரிக் தன்னுடைய முடிவுரையில், “டாலிபோ மிகவும் பாதிக்கப் பட்டிருக்கிறார். உடல் வலிகளால் சிரமப்படுகிறார். அதிகளவு வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்வதால் மட்டுமே அவரால் எழுந்து நடமாட முடிகிறது. வீட்டை விட்டு வெளியே வரப் பயப்படுகிறார். இப்பொழுது மனநல வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். டாலிபோவுடன் வாழ்வது ஆபத்தானது என அவரது மனைவி அவரைப் பிரிந்து தனது இரண்டு மகள்களையும் அழைத்துக் கொண்டு குரோஸியாவுக்குப் போய்விட்டார். தனிமையில் ஒருவரது உதவியும் இல்லாமல் வாழ்வது அவருக்குச் சிரமமானது. சினிமாவில் வருவது போல்தான் நிஜத்தில் டாலிபோ மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. முகமது போதைக்கு அடிமையானவர் என்பது இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக அவர் கண்ட வழி. இது லூக்காவிற்கும் பொருந்தும். சிறப்பு அதிரடிப் படையினர் சம்பவ இடத்தில் பார்த்ததை அறிக்கையில் விபரித்திருக்கிறார்கள். ஆகவே முதலாவது,இரண்டாவது, மூன்றாவது குற்றவாளிகளுக்கு முறையே ஏழு,ஐந்து,இரண்டு வருடங்கள் சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என முடித்தார். நீதிபதி தோமாஸ் பேர்க்னர் தனது தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார். “டாலிபோவை ஸ்வேபிஸ்ஹாலில் இருந்து பேர்லினுக்கு கடத்தியது, அவரைச் சித்திரவதை செய்தது, மரண பயத்தை ஏற்படுத்தியது என்பவை நிரூபிக்கப் பட்டிருக்கின்றன. ஆகவே முகமதுவுக்கு ஏழு ஆண்டுகளும் ஆறு மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது…” நீதிபதி தீர்ப்பை வாசிக்கும் போது முகமது மேசையில் தன் கைகளால் ஓங்கி அடிக்க ஆரம்பித்தான். வாசிப்பை நீதிபதி இடைநிறுத்த, அவனின் சட்டத்தரணி முகமதுவை சமாதானம் செய்தார். அதன்பின்னர் நீதிபதி தனது வாசிப்பைத் தொடர்ந்தார் “முகமது போதைப் பொருள் பாவித்ததாகக் கருத முடியாது. இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக அவர் அப்படிக் குறிப்பிட்டிருக்கலாம் என வைத்திய அறிக்கை சொல்கிறது. இதில் முகமது போதைப்பொருள் பாவிப்பவரா இல்லையா என்பது தெளிவாகச் சொல்லப்படவில்லை. ஆகவே அதைக் கருத்தில் கொண்டு மூன்று ஆண்டு கால சிறைத்தண்டனைக்குப் பின் போதைப்பொருளில் இருந்து விடுபட மருத்துவ உதவி பெறுவதற்கு முகமதுவுக்கு இரண்டு ஆண்டுகள் வாய்ப்பளிக்கப்படுகிறது” ஒருநாள் மட்டும் போதைப் பொருள் பாவித்தேன் என்ற லூக்காவின் கூற்றை இங்கே ஏற்றுக் கொள்ள முடியாது. கடத்தல், சித்திரவதைகள் போன்ற குற்றச்சாட்டில் அவருக்கு ஐந்து வருடங்களும் ஆறு மாதமும் சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது. முகமது சொன்னார் என்பதற்காக அவற்றைச் செய்திருந்தாலும் எதற்காகச் செய்கிறேன் என்று எல்விஸுக்குத் தெரிந்திருக்கிறது. ஆகவே எல்விஸுக்கு இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கிறேன். ஆனாலும் அவரது குடும்ப சூழ்நிலையைக் கருதி இரண்டு வருட சிறைத்தண்டனையை மூன்று வருடங்கள் நன்னடத்தையாக மாற்றி இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. இந்த மூன்று வருடங்களில் ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபட்டால், எல்விஸ் இரண்டு வருட சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்” வழக்கு முடிந்து விட்டது. ஆனால், டாடோ உண்மையில் தனது நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தானா? அல்லது பணத்தை பதுக்கி வைத்து விட்டு திவால் என அறிவித்தானா? டாடோவிடம் பணம் இல்லை, நிறுவனம் திவால் என்றால் இருபத்தைந்தாயிரம் யூரோக்களை வங்கியில் எடுப்பதற்கு அவனது மனைவி ஏன் போனாள்? உண்மையிலேயே டாடோவின் மனைவி அவனைப் பிரிந்து போய் விட்டாளா? அல்லது எல்லாம் ஆறிய பின்னர் குறோஸியாவில் சொகுசாக குடும்பமாக வாழப் போகிறார்களா? இது அவர்களுக்கு மட்டுமே தெரியும். இங்கே முகமதுவின் நிலை அபாயகரமானது. தண்டனை முடிந்து வந்தாலும் அவன் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்தே ஆக வேண்டும். அவனது தாயும் சகோதரியும் பேர்லினில் வாழ்வதால் எங்கேயும் அவனால் மறைந்து வாழ முடியாது. மாபியாக்கள் சும்மா விட்டு விடுவார்களா என்ன? Photos Thumilan Selvakumaran
  35. எனது தோட்டத்தில்தான் எனது சமையலுக்கு தேவையான பல வகை கீரைகள், மரக்கறிகள் & பழங்களை விளைவிக்கின்றேன், பொழுது போகின்றது, உடம்புக்கும் நல்ல உடற் பயிற்ச்சி, இதை இலங்கையில் சர்வ சாதரணமாக செய்யலாம் எமது மண் & கால நிலையுடன் ஓப்பீடும் போது
  36. முகமதுவின் கார் பேர்லினை அடையும் போது இருட்டி விட்டிருந்தது. கார் முகமதுவின் இருப்பிடத்துக்கு வந்தவுடன், முகமதுவும், லூக்காவுமாக டாடோவின் முகத்தை மூடி, வாகனத்தில் இருந்து இறக்கி, வீட்டுக்குள் இழுத்துப் போனார்கள். முகம் மூடப்பட்டிருந்தாலும் வெளியே என்ன நடக்கிறது என்பதை டாடோவால் ஓரளவுக்குப் பார்க்க முடிந்தது. வீட்டின் முதல் மாடியில் இருந்த அறை முழுவதும் பொலித்தீன் விரிக்கப் பட்டிருந்தது. அதன் மேலே மரம் வெட்டும் வாள், சுத்தியல், துளையிடும் இயந்திரம், கத்தி, பேஸ்போல் துடுப்பு... போன்ற பல பொருட்கள் பரப்பி வைக்கப் பட்டிருந்தன. அதை எல்லாம் ஒழுங்கு செய்து வைத்தது எல்விஸ். தொலைபேசியில் அழைத்து முகமது அவனுக்குச் சொன்ன வேலைகள் அவை. முகமூடி அகற்றப்பட்டு, ஆடைகள் களையப்பட்டு உள்ளாடை மட்டும் அணிந்திருந்த டாடோ பொலித்தீன் விரிக்கப்பட்ட தரையில் அமர்ந்திருந்தான். பார்ப்பதற்கு மரண பயம் தரும் வகையில் அவன் முன்னால் தாக்குதலுக்குத் தேவையான பல வகையான ஆயுதங்கள். டாடோ அணிந்திருந்த ஆடைகளில் இரத்தக் கறைகள் இருந்ததால் அவற்றை அழித்து விடும்படி முகமது, எல்விஸ்ஸிடம் சொன்னான். எல்விஸ் அவற்றை எல்லாம் ஒரு பொலித்தீன் பையில் போட்டுக் கட்டி காட்டுக்குள் எறிந்து விட்டு வந்தான். பயணக் களைப்புத் தீர்ந்ததன் பிற்பாடு தரையில் இருந்த டாடோவின் முன்னால் முகமது வந்து நின்றான். முதலில் அவன் கையில் எடுத்த ஆயுதம் துளையிடும் இயந்திரம். டாடோவின் பின்புறம் போய் நின்ற முகமது ஒன்றி்ல் இருந்து எண்ணும்படி டாடோவுக்குச் சொன்னான். துளையிடும் இயந்திரத்தின் சத்தம், கட்டளையிடும் முகமதுவின் அதிகாரக் குரல். டாடோ எண்ண ஆரம்பித்தான். ஒன்று, இரண்டு…. டாடோ இருபது என்று சொல்லும் போது, அவனின் பிடரியை அண்டிய முதுகில் முகமது ஒரு துளை போட்டான். வலி தாங்காமல் துடித்த டாடோவிடம் “சத்தம் போடாமல் தொடர்ந்து எண்ணு” என்று சத்தமாகச் சொன்னான். வலியுடன் டாடோ தொடர்ந்து எண்ணினான். முகமது என்ன கணக்குப் போட்டானோ தெரியாது 20,40,60,.. என ஒவ்வொரு இருபதுக்கும் டாடோ முதுகில் ஒவ்வொரு துளையாகப் போட்டுக் கொண்டிருந்தான். மொத்தமாக ஆறு துளைகள். 120க்கு மேலே எண்ண டாடோவால் முடியவில்லை. முகமது ஓய்வெடுக்கும் போதெல்லாம், தன் பங்குக்கு லூக்காவும் டாடோவைச் சித்திரவதை செய்து கொண்டிருந்தான். டாடோவின் மேலான தாக்குதல்கள் அடுத்த நாளும் தொடர்ந்தன. தனக்குத் தெரிந்த வைத்தியர் ஒருவரைக் குறிப்பிட்டு, அவரை அழைத்து வரும்படி முகமது எல்விஸ்ஸிடம் சொன்னான். வந்த வைத்தியர், அறையில் இருந்த நிலைமையைப் பார்த்து உறைந்து போய் நின்றார். “டொக்டர் எந்த இடத்தில் துப்பாக்கியால் சுட்டால் ஒரு மனிதன் உடனடியாக இறக்கமாட்டான்?” கையில் துப்பாக்கியுடன் நின்ற முகமதுவின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் டொக்டரால் அங்கே நிற்க முடியாது. “தொடையில் சுட்டால்…” “எல்விஸ், டொக்டருக்கு காசு குடுத்து அனுப்பி விடு” கனரக வாகனங்களுடன் முகமதுவின் வீடு இருந்த பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினர் நின்றனர். வழமைபோல் யாரோ சிரியா நாட்டைச் சேர்ந்த தீவிரவாதியைக் கைது செய்யத்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் பொது மக்கள் தங்கள் வேலையில் கவனமாக இருந்தார்கள். உள்ளே என்ன நடக்கிறது என்பதைச் சிறப்பு படை அணியினரால் அவதானிக்க முடியவில்லை. தங்களது அதிகாரியின் கட்டளைக்காக அவர்கள் ஆயத்தமாக நின்றார்கள். முகமது துப்பாக்கியால் சுட்ட குண்டுகள் இரண்டு இலக்குத் தவறாமல் டாடோவின் தொடையில் போய்த் தங்கின. துப்பாக்கியால் சுடும் சத்தங்கள் கேட்டதும், “இது உயிரைப் பறிக்கும் வேலை. இனியும் தாமதிக்க முடியாது. நிலமை தீவீரமாக இருக்கிறது. உள்ளே செல்லவும்” அதிகாரியின் கட்டளை கேட்டு சிறப்பு அதிரடிப்படை முகமதுவின் வீட்டுக்குள்ளே நுளைந்தது. பேர்லின் அரச சட்டத்தரணி முன்னால் முகமது, லூக்கா,எல்விஸ் மற்றும் அறுபது வயதான முகமதுவின் இன்னுமொரு தொழிலாளியும் நின்றார்கள். முகமது, லூக்கா இருவரையும் குற்றவாளிகளாகக் கண்டு இருவரையும் தடுப்புக் காவலில் வைக்கும்படியும் எல்விஸின் மேல் வழக்குப் பதியும் படியும், மற்ற ஊழியரில் ஒரு குற்றமும் இல்லாததால் அவரை விட்டுவிடும்படியும் அரச சட்டத்தரணி உத்தரவிட்டு, கையெழுத்திட்டார்.
  37. கோரோனாவின் பின்னர் விலைவாசிகள் ஏறிக் கொண்டே இருந்தன. கூடவே பல பொருட்களுக்குத் தட்டுப்பாடுகளும் இருந்தன. அதிலும் முக்கியமாக கட்டிடப் பொருட்களை பெரும் விலைகள் கொடுத்தே வாங்க வேண்டிய நிலை உருவாகி இருந்தது. இந்த நிலையால் பெரிய பெரிய நிறுவனங்களே ஆட்டம் காணத் தொடங்கிய போது, சின்னச் சின்ன நிறுவனங்கள் தள்ளாடி விழுந்து கொண்டிருந்ததில் ஒன்றும் ஆச்சரியமில்லை. டாடோவினால் ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைத்துக் கட்ட முடியாத நிலை உருவாகி இருந்தது. அவனுடன் ஒப்பந்தம் செய்தவர்கள் “வீட்டு வேலை எப்போது முடியும்?” என்று அவனை நெருக்க ஆரம்பித்தார்கள். தனியாக இருந்து தவிப்பதை விட வேறு சில கட்டிட ஒப்பந்தக்காரர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டால், இந்தக் குழிக்குள் இருந்து வெளியே வந்து விடலாம் என்று டாடோ கணக்குப் போட்டுக் கொண்டான். பலரைத் தொடர்பு கொண்ட போது பேர்லின், பிராண்டன்பூர்க் நகரத்தில் இருந்து சேர்பியா நாட்டைச் சேர்ந்த முகமுது(28), டாடோவுடன் துணை ஒப்பந்தக்காரராக இணைய விருப்பம் தெரிவித்தான். இங்கேதான் தவறு நடக்கப் போகிறது. அது தனது வாழ்க்கையையே புரட்டிப் போடப் போகிறது என்பதை டாடோ அப்பொழுது அறிந்திருக்கவில்லை. அப்பொழுதே தனது நிறுவனம் திவால் ஆகிப் போய்விட்டது என்று டாடோ அறிவித்திருந்தால் தப்பித்திருப்பான். கொரோனா காலம் முடிந்ததன் பின்னர் பல நிறுவனங்கள் தாங்கள் திவாலாகிவிட்டன என்று சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டு, அரச உதவிகளையும் பெற்றுக் கொண்டன. ஆனால் ஏனோ டாடோ அதைப் பற்றி அப்பொழுது சிந்திக்கவில்லை. புதிதாக இணைந்த துணை ஒப்பந்தக்காரன் முகமதுவின் உதவியுடன் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கும் டாடோ ஒப்பந்தங்கள் செய்ய ஆரம்பித்தான். புத்துணர்ச்சி வந்ததால் பழைய, புதிய ஒப்பந்தங்களுக்கான கட்டிட வேலைகள் இரண்டையும் ஒரே நேரத்தில் முடுக்கி விட்டான். வரும் பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காது இரண்டு குதிரைகளில் ஒரே நேரத்தில் பயணிக்கத் தொடங்கினான். டாடோ கேட்கும் பொழுதெல்லாம் முகமது பணம் கொடுத்துக் கொண்டிருந்தான். அப்படி முகமது, தனது பங்குக்காக, டாடோவிடம் கொடுத்த பணம் இப்பொழுது இரு நூறு ஆயிரங்களைத் தாண்டி விட்டிருந்தது. ஆனால் இலாபத்தின் பங்கோ அல்லது கொடுத்த பணத்துக்கான கணக்கோ முகமதுவுக்குக் கிடைக்கவில்லை. பல தடவைகள் நச்சரித்தும் வெறும் பத்தாயிரம் யூரோக்கள் மட்டுமே டாடோவிடம் இருந்து முகமதுவுக்கு திரும்பக் கிடைத்திருந்தது. அதே நேரம் டாடோவிடம் முதலீடு செய்யவென கடனாகப் பெற்ற பணத்தை, திருப்பிக் கொடுக்க வேண்டிய கட்டாயமும் முகமதுவுக்கு வந்திருந்தது. முகமதுவுக்கு பணம் தந்தவன் குர்தீஸ் இனத்தைச் சேர்ந்தவன். ஒரு மாபியா குழுவாக பேர்லீனில் செயற்பட்டுக் கொண்டிருப்பவன். தமிழ்ச்சினிமாவில் வரும் கந்து வட்டி வில்லன்களை இப்பொழுது கற்பனை செய்து பார்த்தீர்களானால் குர்தீஸ் இன மாபியாவை ஓரளவுக்கு நீங்கள் வடிவமைத்துக் கொள்வீர்கள். பணக் கொடுக்கல் வாங்கல்களினால், 18.03.2023 இல் பேர்லின் வீதியில் இரு குழுக்களுக்கிடையே ஒரு கை கலப்பு நடந்திருக்கிறது. அந்தக் கைகலப்பில் ஈடுபட்டவர்கள் பொருட்களைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கியும் இருக்கிறார்கள். இந்தக் கைகலப்பில், துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடனும் அடிபட்ட காயங்களுடனும் 26 மற்றும் 28 வயதுடைய இருவரை பொலிஸார் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். கைகலப்பில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அந்தக் கைகலப்பில் முகமதுவும் இருந்திருக்கிறான் என்பதை விசாரணையில் பொலிஸார் தெரிந்து கொண்டார்கள். முகமது ஒரு நிறுவனத்தின் சொந்தக்காரனாக இருந்து கொண்டு யேர்மன் நாட்டின் கராட்டி சம்பியனாகவும் இருந்தவன். ஆகவே அவனுக்கும் அடிதடி கைவந்திருந்தது. இன்னும் பணம் இருந்தால்தான் டாடோவினால் தனது கட்டிட வேலைகளைத் தொடர முடியும் என்ற நிலை உருவாகி விட்டிருந்தது. மேற்கொண்டு பணம் வரும் வழிகள் எதுவும் இனி இல்லை என்று டாடோவுக்குத் தெரியத் தொடங்கியது. ஒரு பக்கம் கொடுத்த பணத்தை முகமது திருப்பிக் கேட்டு அவசரப் படுத்திக் கொண்டிருந்தான். மறு பக்கம் “வீடு எப்போ முடியும்?” என ஒப்பந்தக்காரர்கள் நெருக்க ஆரம்பித்திருந்தார்கள். டாடோ பயணித்த இரு குதிரைகளும் ஒன்றாகத் தரையில் வீழ்ந்திருந்தன. வேறு வழியில்லை எனத் தீர்மானித்த டாடோ, தான் திவாலாகி விட்டதாக அரசாங்கத்துக்கு அறிவித்து விட்டான். விடயத்தை அறிந்து தொலைபேசியில் அழைத்து தான் கொடுத்த பணத்தை முகமது கேட்ட போது அரசாங்கத்துக்கு அறிவித்த ‘திவால்’ என்ற வார்த்தையையே டாடோ, முகமதுவுக்கும் சொன்னான். பணத்தைக் கொடுத்து ஏமாந்து விட்ட மனவுளைச்சல், பணத்தைக் கடனாகத் தந்தவனிடம் இருந்து வந்த அச்சுறுத்தல் இரண்டுக்கும் நடுவே மாட்டிக் கொண்ட முகமது தூக்கம் இன்றித் தவித்தான். முகமதுவால் ஓடி ஒளிய முடியாது. காரணம் அவனது தாயும் சகோதரியும் பேர்லினில்தான் வசிக்கிறார்கள். தன்னால் அவர்களுக்கு பிரச்சனைகள் வந்துவிடுமோ என்ற அச்சம் அவனை ஒரு புறம் பயமுறுத்தியது. முகமது தனது வேலையாளான லூக்காவை தொலைபேசியில் அழைத்தான். “காரை எடுத்துக் கொண்டு வா ஸ்வேபிஸ்ஹாலுக்குப் போகவேணும்” என்றான். லூக்காவும் வேலை நிமித்தம் சேர்பியாவில் இருந்து யேர்மனிக்கு வந்தவன்தான். லூக்கா, முதலாளி முகமதுவுக்கு மிகவும் பிடித்தவன், நம்பிக்கையானவன். சாலை விதிகளைச் சரியாகக் கடைப் பிடிக்காமல் தனது சாரதி பத்திரத்தை இழந்திருந்த முகமதுவுக்கு லூக்காதான் இப்பொழுது சாரதி. VW UP காரில் பேர்லினில் இருந்து இருவரும் அதிகாலை புறப்பட்டு மதியம் ஸ்வேபிஸ்ஹாலை வந்தடைந்தார்கள். டாடோ வீட்டில் ஒன்று கூடிப் பேசினார்கள். இனிமையாக, கோபமாக, அதட்டி என்று எந்தவகையில் கேட்டாலும், டாடோ திரும்பத் திரும்பச் சொன்னது ,”என்னிடம் பணம் இல்லை. நான் திவாலாகிப் போயிட்டன்” என்பதுதான். முகமது பொறுமை இழந்து கொண்டிருந்தான். அவன் பழகிய கராத்தே வெளியேவரத் தொடங்கியது. வன்முறைக்கும் டாடோ அசைந்து கொடுக்கவில்லை. டாடோவை இழுத்துக் கொண்டு வந்து காருக்குள் ஏற்றிக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள். நடந்ததை அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்த டாடோவின் மனைவிக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. நான்கு வருடங்களுக்கு முன்னர்தான் குறேஸியாவில் இருந்து யேர்மனிக்கு வந்தவள். மொழி அவளுக்கு இன்னும் பரிட்சயம் ஆகவில்லை. திகைத்துப் போய் பல்கணியில் அவள் நின்றாலும் தனது கணவனை ஏற்றிக் கொண்டு அவர்கள் புறப்பட்ட வாகனத்தின் இலக்கத்தை எழுதி வைத்துக் கொண்டாள். காரின் வலது பக்க இருக்கையில் டாடோ இருந்தான். பின் இருக்கையில் முகமது இருந்தான். அவன் கையில் ஒரு சுத்தியல் இருந்தது. வாகனத்தில் பயணிக்கும் போது முன் இருக்கை இரண்டுக்கும் இடையே இருந்த இடத்தைக் காட்டி “இங்கே உன் வலது கையை வை” என்று டாடோவிடம் முகமது சொல்ல அவனும் அந்த இடத்தில் கையை வைத்தான். முகமதுவின் கையில் இருந்த சுத்தியல் வேகமாக டாடோவின் கையில் இறங்கியது. டாடோ அலற ஆரம்பித்தான். சிறிது நேரப் பயணத்துக்குப்பின், “டாடோ உன் இடது கையை வை” என முகமது திரும்பவும் கட்டளையிட்டான். முகமதுவின் கையில் இருக்கும் சுத்தியல் தன் தலையில் இறங்கினால்..? டாடோவுக்குப் பயம் பிடித்துக் கொண்டது. காரை ஓட்டிக் கொண்டிருந்த லூக்காவும் இடையிடையே டாடோவுக்கு ஏதாவது செய்து கொண்டிருந்தான். தலைக்கு வர இருப்பது கையோடு போகட்டும் என்று டாடோ இடது கையை வைத்தான். மீண்டும் சுத்தியலால் முகமது டாடோவின் கையில் அடித்தான். பேர்லினுக்கான பயணம் ஆறு மணித்தியாலங்கள் நீடித்தது. அந்த ஆறு மணித்தியாலங்களும் தமக்குக் கோபம் வரும் பொழுதெல்லாம் டாடோவை சுத்தியலாலும் கைகளாலும் முகமதுவும் லூக்காவும் தாக்கிக் கொண்டே பயணித்தார்கள். பயணத்தின் போது தனது இன்னுமொரு வேலையாளான எல்விஸ்ஸை முகமது அலைபேசியில் அழைத்து, சில வேலைகளைச் செய்யும்படி சொன்னான். எல்விஸ்ம் சேர்பிய நாட்டைச் சேர்ந்தவன் . அவனது அடுத்த தொலைபேசி டாடோவின் வீட்டுக்குப் போனது. வீட்டுத் தொலைபேசி அழைப்பை டாடோவின் மனைவியே எடுத்தாள். “உன்னுடைய புருசன் உனக்குத் திரும்பத் தேவை என்றால், முதற்கட்டமாக இருபத்தைந்தாயிரம் யூரோக்களை தருவதற்கு ஏற்பாடு செய்” முகமதுவின் குரல் அவளுக்கு எச்சரித்தது. “ஹலோ” சொல்லிவிட்டு புன்னகையுடன் டாடோவின் மனைவியைப் பார்த்த வங்கி ஊழியர் என்ன வேண்டும் என்ற பார்வையுடன் நின்றார். “பணம். இருபத்தையாயிரம்” “இருபத்தையாயிரம்?” கேட்டு விட்டு டாடோவின் மனைவியைப் பார்த்தார் வங்கி ஊழியர். “அவ்வளவு பணத் தேவையா? தனியாகவா வந்தீர்கள்?” கேட்டுக் கொண்டே பணம் எடுப்பதற்கான படிவத்தை நிரப்பித் தரும்படி அவளிடம் கொடுத்தார். யேர்மனியில் சில காலமாக தனியாக இருப்பவர்களை வயது போனவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் வேலைகள் நடந்து கொண்டிருப்பதால், வங்கிகளில் அதிகமாகப் பணத்தை எடுக்கும் போது இப்படியான கேள்விகள் கேட்பது வழக்கம். இன்றும் வங்கி ஊழியர் டாடோவின் மனைவியிடம் அப்படித்தான் கேட்டார். அது பலனைத் தந்தது. பொலிஸாரின் கேள்விகளுக்கு டாடோவின் மனைவி பதில் சொல்ல, அவளுக்கு அப்பொழுது மொழி பிரச்சனையாக இருக்கவில்லை. அவளது இரண்டு மகள்மாரும் பாடசாலை முடித்து வீடு திரும்பி இருந்ததால், தாயின் பதிலை அவர்கள் மொழிபெயர்த்தார்கள். ஒரு குற்றம் நடந்த இடத்தில் அதைச் செய்தவன் பதட்டத்தில் ஏதாவது சிறிய தடயத்தையாவது விட்டுச் செல்வான் என்று சொல்வார்கள். முகமது தனது சொந்தக் காரில் வந்து பெரிய தடயத்தையே விட்டுச் சென்றிருந்தான். பொலிஸாருக்கு அதிக பிரச்சனைகள் இருக்கவில்லை. வாகன இலக்கத்தை வைத்தே ஆளை அடையாளம் கண்டு விட்டார்கள். ஸ்வேபிஸ்ஹால் பொலிஸாரிடம் இருந்து பேர்லின் பொலிஸாருக்கு தகவல்கள் போனாலும் அவர்கள் நிதானமாகவே நடவடிக்கை எடுத்தார்கள். முகமதுவின் நடவடிக்கைகளை அவர்கள் ஏற்கனவே அவதானித்து இருந்ததால், சிறப்பு அதிரடிப்படையை வரவழைத்தார்கள்.
  38. தமிழரசுக் கட்சியின் தலைவராக யார் வந்தாலும் பேரினவாதிகளுக்கு எதிராக அரசியல் செய்து தமிழருக்கு உரிமைகளை பெற்றுகொடுக்கும் வல்லமை தமிழரசு கட்சிக்கோ மற்றய கட்சிகளுக்கோ இல்லாத நிலையில், ஏனப்பா மதவாதம் என்ற விஷக்கருத்துகளை பேசி, மட்டுப்படுத்தப்பட்ட வாழும் உரிமைகளுடனும் கொடிய யுத்தம் கொடுத்த பேரிழப்புகளின் பாதிப்புகளை சுமந்தவாறு ஓரளவுக்காவது மகிழ்வாக வாழ துடிக்கும் மக்கள் மீது பிரிவினைகளை விதைத்து அவர்களை மேலும் துன்பத்துக்கு உள்ளாக்குகின்றீர்கள்.
  39. ஓம். ஆனால் மதம் என்றவுடன் நியூசிலாந்து பாராளுமன்றத்தில் ஒரு பெண் எம்பி சாமிஉரு ஆடினது பார்த்திருப்பீர்கள் அது மாதிரி வந்துவிடுகின்றனர்
  40. ஒரு சிறிய விளக்கம் தமது தந்தையாக .....
  41. கிறீஸ்தவ மதவாதம் உங்களைப் போன்றவர்களின் மண்டைக்குள் இருக்கும் வரை விடிவில்லை…. தங்களின் தலைவராக ஓர் கிறீஸ்தவரை ஏற்றுக் கொண்ட தமிழினம் என்பதை மறந்து இன்று கிறீஸ்தவனால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்று மதவாத உரிமை கொண்டாடும் நிலையில் நீங்கள்….
  42. அங்கு தமிழ் இந்துக்கள்தான் பெரும்பாண்மை. அப்படி இருக்கும்போது சுமந்திரன் எப்படி அந்த ஆயுதத்தை எடுக்க முடியும்? ஒரு கிறிஸ்தவனால் ஆரம்பிக்கப்படட கட்சியில் இன்று கிறிஸ்த்தவன் என்ற காரணத்துக்காக புறக்கணிக்கப்படும் நிலைமை. சிங்கள பவுத்தன் இதை விட மேல் என்று நினைக்கிறேன். சரத் வீரசேகர, விமல், கம்மன்பில பாடு கொண்டாட்டம்தான். வாழ்க தமிழ் ஈழம்.
  43. அயோக்கியர்களின் இறுதி ஆயுதம் மதம் 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.