Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    39
    Points
    8910
    Posts
  2. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    34974
    Posts
  3. பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    15745
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46797
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/29/24 in Posts

  1. நீதிமன்ற விசாரணைகளில் குற்றவாளிகள் இவ்வாறு அதிருப்தியும் மக்களை குழப்பி மேலும் நாசங்களை தொடர்வதை கண்டும் காணாமலும் இருக்க பழக்குவதும் வழமை தான். பாதிக்கப்பட்டவர்கள் தமக்கான நீதி கோரி தமக்கான நீதி கிடைக்கும் வரை எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். அது அவர்களது வலி. அதனை அவர்கள் மட்டுமே உணர்வார்கள். அதற்கு பக்கபலமாக இருப்பவர்களை கூட இவர் போன்ற குற்றவாளிகளுக்கு பைத்தியங்களாக தான் தெரியும். எல்லாவற்றையும் இழந்து போராடும் கூட்டத்தை பிழைக்க தெரியாத பைத்தியங்களாகவும் சுயநலவாதிகளை புத்திசாலிகளாக வளைந்து நெளிந்து தம்மை வளப்படுத்திய சாதனையாளர்களாகவும் போற்றுவது தானே இன்றைய உலக நிலை.
  2. யாழ்ப்பாணத்தை மாலை 5 மணியளவில் வந்தடைந்தோம். அங்கிருந்து சித்தி தங்கியிருந்த பாஷையூர் மடத்திற்குத் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தினேன். மறுமுனையில் பேசியவர் ஒரு கன்னியாஸ்த்திரி. "நீங்கள் யாருடன் பேசவேண்டும்?" என்று என்னைக் கேட்டார். சித்தியின் பெயரைக் கூறினேன். "சற்றுப் பொறுங்கள், அவரிடம் கேட்டுவிட்டு வருகிறேன்" என்று சென்றுவிட்டார். சுமார் 5‍ அல்லது 6 நிமிடங்கள் சென்றிருக்கும். மீண்டும் அவர் பேசினார், "தம்பி, அவாவால இப்ப வர ஏலாதாம், ஆறுதலாய் 8 மணிக்குப் பிறகு எடுக்கட்டுமாம்" என்று கூறினார். எனக்குப் புரிந்தது. சித்தியினால் பேசுமளவிற்கு தெம்பில்லை. அடிக்கடி அவரைச் சென்று பார்ப்பது கிட்டத்தட்ட ஒரு தொல்லையாகவே அவருக்கு மாறிப்போயிருந்தது. நேற்று மாலைதான் அவருடன் பேசிவிட்டு வந்தேன். சிலவேளை அதுபோதும் என்று கூட அவர் நினைத்திருக்கலாம். "பரவாயில்லை சிஸ்ட்டர், நான் நாளைக்கு மீண்டும் கொழும்பிற்குச் செல்கிறேன், அவருடன் ஆறுதலாய்த் தொடர்பு கொள்கிறேன் என்று சொல்லிவிடுங்கள்" என்று கூறிவிட்டுத் துண்டித்துக்கொண்டேன். பயணம் செல்லுமுன் அவருடன் பேசமுடியாது போனது சற்று வருத்தத்தைத் தந்தது. ஆனால் இரண்டு நாட்கள் அவருடன் இருந்து பேசிவிட்டேன். மற்றைய இரு சித்திமாரையும் கூட்டிவந்து அவரைக் காண்பித்துவிட்டேன். ஆகவே இப்போதைக்கு இது பரவாயில்லை என்று மனதை ஆறுதற்படுத்திக்கொண்டேன். இரவாவதற்கு இன்னும் சில மணிநேரம் மீதியாய் இருந்தது. யாழ்ப்பாணத்தில் சில பொருட்களை வாங்கவேண்டிய தேவை இருந்ததனால் மைத்துனரையும் கூட்டிக்கொண்டு யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியில் இருக்கும் கடைத்தெருவிற்குச் சென்றேன். பனங்கட்டி, பனங்கற்காரம், கருவாடு என்று சில பொருட்களை வாங்கிக்கொண்டேன். உணவுப்பொருட்களை அவுஸ்த்திரேலியாவிற்குக் கொண்டுவருவதென்றால் அவற்றை நேர்த்தியாக காற்றுப்புகா பைகளில் அடைத்து, உணவுப்பொருளின் விபரம், காலாவதியாகும் திகதி போன்றவற்றையும் பொதிகளில் குறிப்பிடவேண்டும் என்பது கட்டாயம். அதுமட்டுமல்லாமல் உள்ளே கொண்டுவரும் பொருட்கள் பற்றி நீங்கள் தெரியப்படுத்துவதும் அவசியம். இல்லையென்றால் பொருட்களை எங்களுக்கு முன்னிலையிலேயே குப்பைத் தோட்டியில் கொட்டிவிடுவார்கள். தெரியப்படுத்தத் தவறுமிடத்து தண்டப்பணமும் கட்டவேண்டியிருக்கும். ஆகவே கடைக்காரரிடம் நான் கொள்வனவு செய்தவற்றை விபரமிட்டு பொதிசெய்து தருமாறு கேட்டபோது, "தம்பி ஒஸ்ட்ரேலியாவோ?" என்று அவர் கேட்டார். எப்படி தெரிந்துகொண்டீர்கள் என்று நான் கேட்கவும் "அங்கேயிருந்து வாற ஆக்கள் உப்பிடித்தானே கேக்கீனம்?" என்று சொன்னார். பொருட்களை வாங்கிக்கொண்டு மைத்துனரின் வீட்டை அடையும்போது இரவு 8 மணியாகிவிட்டிருந்தது. காலையில் மீண்டும் 5:45 மணிக்கு ரயில் ஏறவேண்டும். ஆகவே சின்னக்குளியலுடன் இரவுணவை முடித்தோம். அருமையான உழுத்தங்களி.பனங்கட்டி போட்டிருக்கலாம், சுவையே தனி. உண்டுவிட்டு மைத்துனருடனும் அவரது துணைவியாருடனும் பேசிக்கொண்டிருந்தேன். பெரும்பாலும் இறுதியுத்தகால அனுபவங்கள், இடைக்கிடையே உறவினர்கள் என்று சில விடயங்கள் பேசப்பட்டது. 11 மணியானதும் மாமியிடமும் விடைபெற்றுக்கொண்டு தூங்கச் சென்றேன். கால 4 மணிக்கு தூக்கம் கலைந்துவிட்டது. வழமைபோல அமைதியாகக் காலைக்கடன்கள், புறப்படுவதற்கான ஆயத்தப்படுத்தல்கள் என்று கிரமமாக ஈடுபடலானேன். நான் தயாராகும் சத்தம் கேட்டிருக்கவேண்டும். மைத்துனரும் துணைவியாரும் எழுதிருந்தார்கள். அங்கே நான் அருந்தும் கடைசிக் கோப்பியுடன் வீட்டில் இருந்தவர்களுக்கு விடைகொடுத்து, மைத்துனரின் மோட்டார் சைக்கிளில் ஏறி யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை வந்தடைந்தேன். ஓரளவிற்குச் சன நெரிசல் காணப்பட்டது. ஆனால், சரியான பெட்டியில் ஏறி ஆசனத்தில் அமர்வது சிரமமாக இருக்கவில்லை. கொண்டுவந்த பொருட்களைக் காட்டிலும் அதிகளவு பொருட்களை கொண்டு செல்கிறேன் என்பது பைகளைத் தூக்கித் தலைக்கு மேலால் உள்ள தட்டுக்களில் வைக்கும்போது புரிந்தது. நண்பன் ஜெயரட்ணமும் அதே புகையிரதத்தில் கொழும்பு செல்வதுபற்றிக் கூறியிருந்தமையினால், பைகளை வைத்துவிட்டு அவரைத் தேடிக் கண்டுபிடித்தேன். எனது பெட்டியில் இன்னொரு மூலையில் அவரது இருக்கை. அவருக்கருகில் இன்னொருவர் அமர்ந்திருந்தார். எனக்கருகில் இருந்த ஆசனம் காலியாகவே இருந்தமையினால், ஜெயரட்ணம் அங்கே வந்து அமர்ந்துகொள்ள நண்பனை மீண்டும் காணக் கிடைத்த கிடைத்த மகிழ்ச்சியில் கொழும்பு நோக்கிய புகையிரதப் பயணத்தை ஆரம்பித்தேன். மிக்க நன்றி அல்வாயான் !!!
  3. எனக்கு நம்பிக்கை இல்லை ஆனால் சுமத்திரன் போல் யுத்த விசாரணை முடிந்து விட்டது இன அழிப்பு நடக்கவில்லை அப்படி நடந்தால் புலிகளையும் விசாரிக்கணும் எனும் உருட்டல்கள் இருக்காது . தற்போதைய நிலையில் அங்கு இனி யார் வந்தாலும் எதுவுமே செய்ய முடியாதபடி சுமதிரனை வைத்து ரணில் உடைத்து விட்டார் .
  4. சரி, பயணத்திற்கு வரலாம். வட்டுவாகல்ப் பாலத்தினூடாக முல்லைத்தீவு நோக்கிச் செல்லத் தொடங்கினோம். பாலத்தின் முள்ளிவாய்க்கால் கரையில் பிரபல சிங்கள பெளத்த இனக்கொலையாளியும் போர்க்குற்றவாளியுமான கோத்தாபய ராஜபக்ஷ என்பவனின் பெயரில் அமைக்கப்பட்ட கடற்படை முகாம் காணப்பட்டது. அதன் வாயிலில் ஆக்கிரமிப்பாளர்கள் அகம்பாவத்துடன் நின்றுகொண்டு அப்பாலத்தால் போய்வருவோரை நோட்டம் விட்டபடி இருந்தனர். அப்பகுதியை வாகனத்தில் இருந்தவாறே காணொளி எடுத்துக்கொண்டிருந்த என்னைக் கண்ட சாரதி, "அண்ணை, கமராவை ஒளியுங்கோ, கண்டாங்கள் எண்டால் பிரச்சினை" என்று கூறவும், சடாரென்று கீழே பதித்துக்கொண்டேன். பாலத்தின் மறுகரையில் இன்னொரு சோதனைச் சாவடி. ஆயுதங்களுடன் ஆக்கிரமிப்பாளர்கள் வாகனங்களை மறித்துக் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்கள். எம்மையும் கேட்டார்கள். முல்லைத்தீவிற்குப் போகிறோம், யாழ்ப்பாணத்திலிருந்து வருகிறோம் என்று கூறிய பின்னர் போக விட்டார்கள். அப்படியே முல்லைத்தீவு நகரைச் சுற்றி வந்தோம். ஒருகாலத்தில் தமிழர்களின் இராச்சியமாக, பலப்பிரதேசமாக இருந்த எமது தாயகத்தின் முக்கிய நகரம் ஒன்று சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பாளர்களின் கைகளில் அகப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டுக் கிடப்பதைப் பார்த்தபோது ஆற்றாமையும், கோபமும் ஒருங்கே வந்தது. வரும் வழியில் புலிகளின் முகாம் இருந்த பகுதியில் சிங்களப் பேய்கள் கட்டிவைத்திருக்கும் வெற்றிச் சின்னத்தைப் பார்க்க வாகனம் நின்றது. மைத்துனர் படங்களை எடுத்துக்கொண்டு என்னைப் பார்த்து, "அண்ணை, நீங்கள் இதைப் படம் எடுக்கேல்லையோ?" என்று கேட்டார். "ஏன் சுவி, எங்களை அழிச்சு, அடிமைப்படுத்தினதை அவன் சாதனையாகக் கட்டிவைச்சிருக்கிறான், அதை ஏன் நான் பாக்கவேண்டும்?" என்று கேட்டேன். அவர் புரிந்துகொண்டார். "இல்லையண்ணை, வந்ததுக்கு சும்மா எடுத்துவைக்கலாம் எண்டபடியால் கேட்டன்" என்று கூறிச் சமாளித்தார். அப்பக்கமே நான் திரும்பவில்லை. எதற்கு திரும்பவேண்டும், எதற்குப் பார்க்கவேண்டும், எதற்குப் படமெடுக்க வேண்டும்? கொல்லப்பட்டது எனது மக்கள், அழிக்கப்பட்டது எனது போராட்டம், ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது எனது தாயகம், இந்த லட்சணத்தில் எம்மை ஆக்கிரமித்து நிற்பவனின் சாதனையினை எதற்காகக் நான் கொண்டாடவேண்டும்? ஆகவேதான் அந்த மிருகங்களின் அடையாளங்களை எங்கு செல்லினும் நிராகரித்து வருகிறேன். முல்லைத்தீவைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்த வழியினால் மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தோம். வட்டுவாகல்ப் பாலத்தைக் கடந்து முள்ளிவாய்க்காலுக்குள் ஏறி அப்படியே சென்ற வழியில் திரும்பி வந்தோம். போகும்போது இருந்த உற்சாகம் எல்லோரையும் அப்போது கைவிட்டிருந்தது. எவரும் அதிகம் பேசவில்லை. இடையிடையே கடந்துசெல்லும் ஊர்கள் குறித்து எனது கேள்விகளும் அதற்கான மைத்துனரின் பதில்களையும் தவிர அதிகமாகப் பேசவில்லை. யாழ்ப்பாண மாவட்டத்திற்குள் நுழைந்தபோது கடும் பசி. எங்காவது வாகனத்தை நிறுத்திச் சாப்பிடலாம் என்று எண்ணியவாறு வீதியின் ஓரத்தில் இருந்த கடைகளைப் பார்த்துக்கொண்டே வந்தோம். சாவகச்சேரிப் பகுதியில் பிரதான வீதியின் வலப்புறத்தில் பழமையான ஆனால் அழகிய வீடொன்றில் வீட்டில் சமைத்த உணவுகளை பரிமாரிவருவதாக முகப்புத்தகத்தில் மைத்துனரின் மகன் பார்த்திருக்கிறார். ஆகவே அங்கு செல்வதாக முடிவெடுத்தோம். அப்பகுதியை அடைந்ததும் வாகனத்தை வீட்டின் முற்றத்தில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றோம். மழை பெய்யத் தொடங்கியிருந்தது. கொத்து ரொட்டி, பிரைட் ரயிஸ் (Fried Rice) என்று ஆளாளுக்கு விரும்பியதை ஓடர் கொடுத்தோம். 15 - 20 நிமிடங்களில் ஆவிபறக்க உணவு கொண்டுவந்து பரிமாறப்பட்டது. சுவையானதாக இருந்தது. ஆனால், யாழ்ப்பாணத்தைக் காட்டிலும் இங்கு விலை அதிகமாக இருப்பதாக அவர் கூறினார். பரவாயில்லை, பசிக்கு வயிராற உண்ண, சுவையான உணவு. சற்று அதிகம் என்றாலும் திருப்தியாக இருந்தது. கட்டணத்தைச் செலுத்துவிட்டி மீண்டும் வாகனத்தில் ஏறிக்கொண்டோம். சாதுவான தூறளில் யாழ்ப்பாணம் நோக்கி வாகனத்தைச் செலுத்தத் தொடங்கினார் சாரதி.
  5. முள்ளிவாய்க்காலில் இருந்து பரந்தன் முல்லைத்தீவு வீதிக்குச் சமாந்தரமாக கடற்கரையினை அண்மித்ததாக ஒரு சிறிய மண்வீதி செல்கிறது. இவ்வீதியின் இருபக்கத்திலும் இருந்த பற்றைக்காணிகளில் பல்லாயிரம் மக்கள் தமதுயிரைக் காத்துக்கொள்ள தஞ்சம் அடைந்திருந்தார்கள். கடற்கரையினை அடையும் பகுதியுடன் இவ்வீதி முடிவிற்கு வருகிறது. இப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் குறித்து சில வலைத்தள பதிவாளர்கள் விலாவாரியாக எடுத்துரைத்திருக்கிறார்கள். அந்நாட்களில் பனைமரங்கள் சிலவிருந்த பகுதிக்குக் கீழாகத் தஞ்சம் அடைந்த மக்களை நோக்கி சிங்கள பெளத்தர்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பலரின் நினைவுகள் ஒரு காணொளி ஒன்றில் பகிரப்பட்டிருந்தன. அந்தப் பனைமரம், அப்பதிவில் குறிப்பிட்டதுபோலவே இன்னமும் அங்கு நிற்கின்றது. நாம் அப்பாதையால் பயணிக்கும்போது இருவர் மோட்டார் சைக்கிளில் எதிர்ப்புறமிருந்து வந்தார்கள். எங்கே போகிறீர்கள் என்று தமிழில் கேட்டார்கள். ஒரு இடமும் இல்லை, இடம்பார்க்க வந்தோம் என்று கூறினோம். இதற்குமேல் போகமுடியாது, பாதை இத்துடன் முடிகிறது, திரும்பிச் செல்லுங்கள் என்று கூறிவிட்டுத் தம் வழியில்ப் போனார்கள். அவர்கள் அந்த ஊரைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். சுத்தத் தமிழில் பேசினார்கள். அப்பகுதியைச் சுற்றிச் சுற்றி வாகனத்தில் வலம் வந்தோம். மைத்துனர் தானும் தனது குடும்பமும் இறுதி நாட்களில் அப்பகுதியில் தஞ்சம் அடைந்திருந்த சில பகுதிகளைத் தேடிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு இடத்தையும் பார்த்தபோது, "இங்கதான், இங்கதான்" என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். அவரது மனோநிலை எனக்குப் புரிந்தது. இறுதியாக முள்ளிவாய்க்காலை விட்டு நீங்க மனமின்றி எமது பயணத்தைத் தொடர்ந்தோம். மீண்டும் அதே பரந்தன் முல்லைத்தீவு வீதியில் வாகனம் ஏறியது. குறுகலான வீதி, ஆனாலும் வாகனம் ஓரளவிற்கு ஓடக்கூடிய விதத்தில் பராமரிக்கப்பட்டிருந்தது. இடதுபுறம் முள்ளிவாய்க்கால், வலது புறம் நந்திக்கடல். சற்றுத் தொலைவில் அழகாக வர்ணம் பூசப்பட்டிருந்த வற்றாப்பளை அம்மன் கோயில். இவற்றினைக் கடந்துசெல்லும்போது மைத்துனர் தனது நினைவுகளைப் பகிரத் தொடங்கினார். இராணுவத்தை தாம் நேருக்கு நேராக, ஒரு சில நூறு மீட்டர்கள் தொலைவில் கண்டதாக அவர் கூறினார். தாம் தஞ்சம் அடைந்திருந்த பகுதியில் தன்னுடன் இன்னும் ஆயிரக்கணக்கானோர் வட்டுவாலக்ப் பாலத்தைக் கடந்து முல்லைத்தீவு நோக்கிச் செல்வதற்காக மெதுமெதுவாக நடந்துசெல்லும்போது பதிவாக நிலைஎடுத்துக்கொண்ட இராணுவத்தினர் தாம் இருந்த பகுதிநோக்கி கனரக இயந்திரத் துப்பாக்கிகளால் சுட்டுக்கொண்டிருந்ததாக அவர் கூறினார். தாம் இனிமேல் இப்பகுதியில் இருக்க முடியாது. மீதமாயிருக்கும் அனைவரையும் உள்ளே வந்தவுடன் கொன்றுவிடுவார்கள், ஆகவே சாவரினும் பரவாயில்லை, பாலத்தின் அடுத்த பக்கத்திற்குப் போய்விட வேண்டும் என்கிற ஒற்றை எண்ணம் மனதில் இருக்க, மக்களோடு மக்களாக கையில் குழந்தைகளையும் சுமந்துகொண்டு பொழுது புலராத அவ்வேளையில் தாம் ஓடத் தொடங்கியதாக அவர் கூறினார். தம்முடன் கூட வந்த பல குடும்பங்களில் சிலர் ஓடிக்கொண்டிருக்கும்போதே சூடுபட்டுக் கீழே விழ, அவர்களை விட்டுவிட்டு அக்குடும்பங்கள் பாலம் நோக்கி ஓடிக்கொண்டிருந்ததை மைத்துனர் பார்த்திருக்கிறார். இராணுவத்தினரின் கடுமையான துப்பாக்கித் தாக்குதலுக்ககு முகம்கொடுத்து இறந்து வீழ்ந்தவர்கள் விழ, மீதியாக ஓடிக்கொண்டிருந்தோர் வட்டுவாகல்ப் பாலத்தின் முள்ளிவாய்க்கால்க் கரையினை அடைந்திருக்கிறார்கள். இப்போது இராணுவத்தை மிகக் கிட்டத்தில் அவர்களால் பார்க்க முடிந்தது. ஆயிரக்கணக்கான இராணுவத்தினர், முள்ளிவாய்க்கால் நோக்கி முன்னேற ஆயத்தமாக நிற்க, வட்டுவாகல்ப் பாலத்தின் இடப்புறமாகவும் வலப்புறமாகவும் ஆயிரக்கணக்கில் பிணங்கள் மிதந்துகொண்டிருப்பதை அப்போதுதான் மைத்துனர் கண்ணணுற்றிருக்கிறார். "இந்தப் பக்கமும், அந்தப்பக்கமும் ஒரே பிணக்குவியல் அண்ணா, பொம்மைகளைக் குப்புறப் போட்டுத் தண்ணிக்குள்ள தள்ளின மாதிரி, சிவந்து போய் ரோஸ் நிறத்தில இருந்தது. எப்ப செத்த சனங்களோ தெரியாது, கண்ணுக்கெட்டின தூரம் வரைக்கும் பிணங்கள்" என்று அவர் கூறினார். யுத்தத்தில் சிதைந்துபோய்க் கிடந்த வட்டுவாகல்ப் பாலத்தின் மீது பெருந்திரளான மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிநோக்கிச் சென்றுகொண்டிருந்தார்கள். பாதையின் அகலம் போதாமையினால் பலர் கழுத்தளவு நீரிற்குள் இறங்கி நடக்கத் தொடங்கினார்கள். இராணுவத்தினரின் பகுதிக்குள் வந்ததும் வெளியான இடமொன்றில் அவர்கள் இருத்திவைக்கப்பட்டார்கள். புலிகளுடன் முரண்பட்டு, இராணுவத்துடன் இணைந்துகொண்ட முன்னாள் போராளிகள் பலரை தான் அங்கு கண்டதாக மைத்துனர் கூறினார். அடிக்கடி ஒலிபெருக்கியில் பேசிய அவர்கள், "இயக்கத்தில ஒரு நாள் வேலை செய்த ஆக்களெண்டாலும் கையை உயர்த்திக்கொண்டு வந்திருங்கோ, விசாரிச்சுப்போட்டு விட்டுவிடுவம். நாங்களாப் பிடிச்சமெண்டால் தெரியும்தானே?" என்று மிரட்டல்கள் அவர்களால் விடுக்கப்பட்டன. இதனையடுத்து மக்களோடு மக்களாக நின்ற பல போராளிகள் கைகளை உயர்த்திக்கொண்டு முன்னால் செல்ல, அவர்களை இராணுவத்தினர் தனியாக அழைத்துச் சென்றதைத் தான் கண்டதாக அவர் கூறினார். மைத்துனர் இயக்கத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டவர் அல்ல. வீதிப் புணரமைப்பு வேலைகளில் சம்பளத்திற்காக வேலை பார்த்தவர். ஆகவே, இயக்கத்தில் ஒருநாள் பணிபுரிந்தவர்கள் என்றாலும் முன்னால் வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டபோது அவர் தெரியாததுபோல் இருந்துவிட்டார். அன்று மைத்துனர் அடையாளம் கண்ட போராளிகள் பலர் உயிருடன் இல்லை. ஆனால், அவர்களை இராணுவம் அழைத்துச் சென்றதை அவர் கண்டிருக்கிறார். மைத்துன‌ரைப் போல அக்காலை வேளையில் அப்பகுதியில் தடுத்துவைக்கப்பட்ட பல்லாயிரம் மக்களும் இதனைக் கண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களின் சாட்சியங்களை எவரும் கேட்கப்போவதில்லை.
  6. கடற்கரையினை அண்மித்ததாகச் செல்லும் சிறிய வீதிவழியாக எமது வாகனம் பயணத்தைத் தொடர்ந்தது. வலைஞர்மடம் பகுதியிலிருந்து குறுகிய பாதை வழியாக மீண்டும் பரந்தன் முல்லைத்தீவு பாதைக்கு ஏறி சிறிய தூரம் ஓடியபின்னர் இடதுபுறமாகத் திரும்பி முள்ளிவாய்க்காலை அடைந்தோம். நான் பார்க்க வந்தது இந்த இடத்தைத்தான். என் உறவுகள் பல்லாயிரக்கணக்கில் சிங்கள இராணுவ மிருகங்களால் பலியிடப்பட்டதும் இந்த இடத்தில்த்தான். இந்தவிடத்தை காணொளிகளில் பார்க்கும் ஒவ்வொரு கணமும் மிகுந்த வலியை எனக்கு ஏற்படுத்தும். ஆனாலும், நாம் ஏன் சோர்ந்து வீழ்ந்துவிடக்கூடாது என்பதற்கும் இதே முள்ளிவாய்க்காலே எமக்குக் காரணமாகவும் அமைந்திருக்கும். அதைவிடவும் ஒட்டுமொத்த ஈழத்தமிழினத்திற்காகவும் தம்மை அர்ப்பணித்த லட்சக்கணக்கான மக்களினதும் இறுதிவரை தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய மாவீரர்களினதும் ஆன்மாக்கள் இப்பகுதியின் காற்றில் பரவியிருப்பதாக நான் உணர்கிறேன். ஆகவே தான் அந்த ஆன்மாக்களுக்கு எனது இறுதிவணக்கத்தைச் செலுத்த இங்குசெல்லவேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன். நாம் வாகனத்தை வீதி முடிவடையும் இடத்தில் நிறுத்திவிட்டு இறங்கிக்கொண்டோம். முன்னிரவு பெய்த மழையால் நிலம் சற்று ஈரமாக இருந்தது. மணல் நிறைந்த மைதானம் போன்று காட்சியளித்த அப்பகுதியின் மத்தியில் சீமேந்தினால் கட்டப்பட்ட சிறிய நினைவுச் சின்னம் தெரிந்தது. அதனை நோக்கி நடக்கத் தொடங்கினோம். சுமார் 200 - 300 மீட்டர்கள் பக்க நீளத்தைக் கொண்ட சதுரவடிவ மைதானமாகக் காட்சியளித்தது அப்பகுதி. ஒருபுறம் பற்றைகளும், பனைமரங்களும் காணப்பட, இன்னொரு புறம் சில வீடுகள் தெரிந்தன. மக்கள் இப்போது அங்கு வாழத் தொடங்கியிருக்கலாம். இனம்புரியாத நிசப்தம் அங்கு நிலவியது. எந்தச் சத்தமும் இன்றி அமைதியாகக் கிடந்தது அந்தப் பகுதி. இற்றைக்கு 15 வருடங்களுக்கு முன் பல்லாயிரக்கணக்கான மக்களின் ஓலங்களையும், அழுகுரல்களையும் இடைவிடாது கேட்ட அந்தப் பூமி இப்போது அமைதியாகக் கிடந்தது. மணற்றரையூடாக நினைவுச் சின்னம் நோக்கி நடக்கத் தொடங்கினோம். மனதில் ஆயிரமாயிரம் எண்ணங்கள். நான் எடுத்துவைக்கும் ஒவ்வொரு காலடியிலும் எத்தனை உறவுகள் கொல்லப்பட்டிருக்கலாம்? எத்தனை உறவுகள் போராடி மடிந்திருக்கலாம்? எத்தனை பெண்களை சிங்கள மிருகங்கள் கடித்துக் குதறியிருக்கலாம்? சாவரும் வேளையில் அந்த உறவுகள் முகங்கொடுத்த அவலங்கள் எப்படி இருந்திருக்கும் ? என்று பல கேள்விகள் மனதில் எழ முள்ளிவாய்க்கால் பலிப்பீடத்தின் மத்திநோக்கி நடந்துகொண்டிருந்தோம். மைத்துனரின் மகனுக்கும், சாரதியாக வந்த இளைஞருக்கும் இப்பகுதி குறித்த பிரக்ஞை எவ்வளவு தூரத்திற்கு இருந்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், எனக்கும் மைத்துனருக்கும் மனதில் எழுந்த எண்ணங்களைச் சொல்லில் வடித்துவிடமுடியாது. அப்பகுதியில் இறங்கியதுமுதல் மைத்துனர் தனது கையடக்கத் தொலைபேசியில் அப்பகுதியை ஒளிப்படமாக எடுக்கத் தொடங்கினார். அப்பகுதியில் கையில் குழந்தைகளைச் சுமந்துகொண்டு உயிர்காக்க ஓடிக்கொண்டிருந்த பொழுதுகள் அவரது நினைவிற்கு வந்திருக்கலாம். ஆகவே தான் எடுத்துக்கொண்டிருந்த ஒளிப்படத்துடன் பின்னணியில் தனது நினைவுகளையும் அவர் பகிர்ந்துகொண்டிருந்தார். நானும் ஒளிப்படம் எடுக்கத் தொடங்கினேன். இறுதி யுத்த காலத்திலும், அதற்குப் பின்னரான காலத்திலும் முள்ளிவாய்காலில் சிங்கள மிருகங்களால் நிகழ்த்தப்பட்ட மனித நாகரீகத்திற்கு முரணான படுகொலைகளை, அட்டூழியங்களை நான் அறிந்துகொண்ட வகையில் அந்த ஒளிப்படத்தில் பின்னணியில் பதிந்துகொண்டேன். ஆனால், எம்மைப்போல பலர் இந்த பகுதியைப் படமாக்கியிருப்பதுடன் அவலங்களையும் பதிந்திருக்கிறார்கள் என்பதால் எனது ஒளிப்படம் குறித்து நான் இங்கு தனியாகப் பதியவேண்டிய தேவையில்லை என்று நினைக்கிறேன். நீண்டநேரம் அப்பகுதியில் நின்றிருந்தோம். சுற்றிச் சுற்றி நடந்து அப்பகுதியினை அண்மித்துக் காணப்பட்ட இடங்களை, பற்றைகளை, பனைமரக் கூடல்களைப் பார்வையிட்டோம். மேல்மணலைத் தட்டிவிட்டுப் பார்த்தால் உடைந்த மட்பாண்டங்கள், அலுமினிய கோப்பைகள், எவர்சில்வர் பாத்திரங்கள், கிழிந்த உடைகள், செருப்புக்கள் என்று பல பொருட்கள் அப்பகுதியெங்கும் இன்னமும் பரவிக் கிடக்கின்றன. இவை எல்லாமே எமது உறவுகளால் அவர்களின் இறுதிக் கணங்களில் பாவிக்கப்பட்டவை. இவற்றுக்கு உணர்வுகளும், பார்வையும் இருந்திருந்தால் எம்மக்கள் பட்ட துன்பங்களை இன்று சாட்சியாகச் சொல்லியிருக்கும். ஆனால், சாட்சியங்கள் எதுவுமற்ற பாரிய இனக்கொலையொன்றினை சிங்கள பெளத்த தேசம் எம்மீது கட்டவிழ்த்து விட்டது என்பதே உண்மை. இறுதியாக முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தினைச் சிலமுறை சுற்றிவந்துவிட்டு அதன் முன்னால் நின்று படமெடுத்தேன். இது எனக்காக நான் எடுத்துக்கொண்டது. அநியாயமாகக் கொல்லப்பட்ட எனது உறவுகளைப் பார்க்கவந்தேன் என்பதை எனக்கு நானே அவ்வபோது சொல்லிக்கொள்ள எடுத்துகொண்டது, எதனையும் விளம்பரப்படுத்தவல்ல.
  7. அம்பலவன் பொக்கனையிலிருந்து கடற்கரைச் சாலையூடாக வலைஞர் மடம் பகுதிக்கு வந்தோம். அண்மையில் பெய்த கடும் மழையினால் அப்பகுதியெங்கம் வெள்ளம் தேங்கி நின்றிருந்தது. இப்பகுதியில் பெரும்பாலான வீடுகள் இன்னமும் இடிந்த நிலையிலேயே காணப்படுகின்றன. நிலங்கள் மக்களின் பாவனையின்றி இருப்பதால் பாரிய பற்றைக்காடுகளாக வளர்ந்திருக்கின்றன. வெகு சிலரையே இங்கு காண முடிந்தது. இனக்கொலையாளிகளான சிங்களப் பேரினவாத மிருகங்களின் படங்களைத் தாங்கி நிற்கும் போரின் சாட்சிகளான வலைஞர் மடக் கட்டிடங்கள் இப்பாதையினால் பயணித்து வலைஞர் மடம் (முள்ளிவாய்க்காலுக்கு உட்பட்ட இன்னொரு பகுதி) பகுதியை வந்தடைந்தோம். இப்பகுதியில் காணப்பட்ட இரு கட்டடங்கள் இனக்கொலையில் முக்கிய பாத்திரத்தை வகித்திருக்கின்றன. மைத்துனரின் குடும்பமும் இடப்பெயர்வின்போது இப்பாகுதியில் பனைமரங்களுக்குக் கீழ் மறைப்புக்கட்டி வாழ்ந்திருக்கின்றது. இக்கட்டடங்களில் இருந்து சுமார் 50 மீட்டர்கள் தூரத்திலேயே அவரது குடும்பம் தஞ்சம் அடைந்திருந்தது. அக்காலத்தில் இப்பகுதியெங்கும் மக்கள் வெள்ளத்தால் நிறைந்து காணப்பட்டதாக அவர் சொல்கிறார். இப்பகுதியிலும் ஆயிரக்கணக்கானோர் இராணுவத்தால் பலியிடப்பட்டனர். தற்காலிக வைத்தியசாலைகளாக மாற்றப்பட்டிருந்த இக்கட்டடங்களுக்குள் காயங்களோடு கொண்டுவந்து சேர்க்கப்பட்ட பலர் மருந்தின்றியும், கடுமையான இரத்தப்போக்கினாலும் இறந்துபோயினர். தான் அங்கிருந்த ஓரிரு நாட்களில் மட்டும் இக்கட்டடங்களுக்கு முன்னால் கிடத்திவைக்கப்பட்டிருந்த உடல்களின் எண்ணிக்கை பல நூறுகளைத் தாண்டும் என்று தனது நினைவுகளைப் பகிரும்போது கூறினார். கொல்லப்பட்டவர்களின் பிணங்களிலிருந்து வீசியவாடை அப்பகுதி முழுதையும் ஆக்கிரமித்திருந்தது. கொல்லப்பட்டவர்களைப் பற்றி எவரும் அதிகம் அக்கறை கொண்டிருக்கவில்லை. உயிருடன் மீதமாயிருப்போர் தமதுயிரைக் காத்துக்கொள்வதில் மட்டுமே அக்கறை காட்டினர். மரணம் என்பது மலிந்த பொருளாகிவிட்டிருந்தது என்று அவர் கூறினார்.
  8. முல்லைத்தீவு நோக்கிய பயணத்தில் நான் கண்ட இன்னொரு முக்கியமான இடம் புலிகளால் நடப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வந்த தேக்கங்காடு. காட்டுவளத்தைக் காக்கவும், எதிர்காலத்தில் மக்களின் பயன்பாட்டிற்கென்றும் புலிகளால் தாயகத்தின் சிலவிடங்களில் இவ்வாறான காட்டு வளர்ப்பு முன்னெடுக்கப்பட்டு வந்தது. இச்சாலையூடாகப் பயணிக்கும்போது இதனழகைத் தரிசிக்க முடியும். ஆனால், இன்று இத்தேக்கங்காடுகளை வெட்டி விற்பதற்கு தெற்கிலிருந்துந்து வரும் வியாபாரிகளுக்கு அரசாங்கம் அனுமதி கொடுத்திருப்பதாக சாரதி கூறினார். அதன்படி இக்காட்டின் ஒருபகுதி தற்போது வெட்டப்பட்டு வருகிறது. இதன் முழு நீளத்திற்கும் வீடியோப் பதிவொன்றினைச் செய்திருந்தேன். இக்காட்டின் மத்தியில், பரந்தன் முல்லைத்தீவு வீதியில் பாரிய இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருக்கிறது. அவப்போது இவ்வீதியால் பயணிப்போரை மறித்து விசாரிப்பதும் நடக்கும். எனது ஒளிநாடாவிலிருந்து எடுக்கப்பட்ட படம் கீழே. பரந்தன் முல்லைத்தீவு பாதையிலிருந்து கண்டல் வழியாகக் கடற்கரை நோக்கிச் செல்லும்போது இறுதி யுத்தத்தின் இனக்கொலை நாட்களின் அவலங்களைத் தன்னகத்தே அமிழ்த்தி வைத்திருக்கும் சிலவிடங்கள் வருகின்றன. அவற்றுள் முக்கியமானது புதுமாத்தளன் பகுதி. துரதிஸ்ட்டவசமாக அப்பகுதியில் இடம் பார்க்கும் அவதியில் படமெடுக்கமுடியாது போய்விட்டது. ஆனால் அம்பலவன் பொக்கனைப் பகுதியில் நின்று, நிதானித்து சில படங்களையும், ஒளிப்படங்களையும் பதிவுசெய்துகொண்டோம். அவற்றுள் சில கீழே. அம்பலவன் பொக்கனைப் பகுதியில் கடற்கரையினை அண்மித்ததாக சிறிய பற்றைகள் காணப்படுகின்றன. இப்பகுதியில் அகோர பல்குழல்த் தாக்குதலிலும், விமானக் குண்டுவீச்சிலும் கொல்லப்பட்ட பலரை இவ்வாறான பற்றைக்காடுகளுக்குள் மக்கள் கைகளால் மணலைத் தோண்டிப் புதைத்திருக்கிறார்கள். காயப்பட்டவர்களுக்கு இப்பகுதியில் வைத்தே அறுவைச் சிகிச்சை மயக்கமருந்தின்றி நடைபெற்றிருக்கிறது. இப்பகுதியில்த் தோண்டிப் பார்த்தால் கொல்லப்பட்ட மக்களின் எச்சங்கள் இன்னும் இருக்கும் என்று மைத்துனர் கூறினார்.
  9. மேற்குலகில் தான் அதிகம் சாத்தியம். உக்ரேன் போருக்காக ஏன் உலக விளையாட்டுக்களில் ரஷ்யாவை தள்ளி வைத்தார்கள்?
  10. தமிழ் தேசியம் என்பதன் உண்மையான அர்ததம் என்பது, இலங்கை தீவில் தமிழ் மக்கள் சம உரிமையுடனும் கெளரவத்துடனும் வாழும் வகையிலான அரசியலைச் செய்வது. இனவாதத்தை ஒழிக்க அனைத்து இன மக்களுடனும் அவர்களது மக்கள் அமைப்புகளுடனும் தொடர் கலந்துரையாடல்களை நிகழ்த்தி சிங்கள அரசின் மற்றும் இரு பெரும் கட்சிகளினதும் இனவாத அரசியல் நிகழ்சசி நிரலை நீர்த்துப் போகச் செய்வது. இனவாதத்தை முதலீடு செய்து இலங்கையில் அரசியல் செய்ய முடியாது என்ற நிலையை ஏற்படுத்த முனைவதோடு அதற்காக சவால்களை எதிர் கொண்டு அரசியல் செய்வது, அதன் மூலம் இலங்கை என்பது பல்லின பல் கலாச்சார நாடு என்பதை தமிழர், சிங்களவர், முஸ்லீம்கள் என பெரும்பான்மையான இலங்கை மக்களை ஏற்று கொள்ள செய்வதற்கான அரசியல் என்பதாகும். ஆனால், நடைமுறைத் தமிழ் அரசியலில் அதன் அர்ததம் என்பது, நடக்க முடியாத விடயங்களை பற்றி வருடக்கணக்கில் பேசி காலத்தை வீண்டிப்பது, நடைமுறையில் வாழும் மக்களின் மகிழ்சசியை கெடுப்பது, முன்பு இருந்ததை விட தமிழ் மக்களின் அரசியல் பலத்தை பின்னோக்கி இழுத்துச் செல்வது செலுத்துவது, சிங்கள இனவாதிகளை பலப்படுத்தி தமிழரின் இருப்பை கேள்விக்குள்ளாக்குவது பின்பு அதையே முதலீடாக வைத்து தமிழ் மக்களை உசுப்பேற்றி அரசியல் செய்வது, இணையங்களில் அல்லது முக நூல்களில் வெட்டி வீரம் பேசுவது அல்லது ஒப்பாரி வைப்பது.
  11. இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராகவுள்ள முன்னாள் நியுசிலாந்து அணித்தலைவர் பிரன்டன் மக்கலத்தின் ஆடுமுறை உத்தி, வழமையான 5 தின போட்டிகளில் ஆடும் பாதுகாப்பு முறையுடன் கூடிய 5 நாளிற்குரிய நேர்த்தியான ஆட்டம் போலில்லாமல் வழமைக்குமாறான ஆட்டமுறைமை, இது இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது குறிப்பாக கை மாற்றி ஆடுவது, நிலை மாற்றி ஆடுவது என. இதே போலவே மக்கலம் ஆக்கிரோசமாக இந்த மைதானத்திலே 200 ஓட்டங்களுக்கு மேல் குவித்திருந்தார் என கருதுகிறேன், இவரது பாணியினை இங்கிலாந்து அணிக்கு கடத்தியுள்ளார், இந்த வெற்றிகளின் பின்னே சத்தமின்றி இருந்த வீரராக மககலத்தினை கருதுகிறேன். https://en.wikipedia.org/wiki/Bazball
  12. காலையுணவு அருந்தியபின் கிளிநொச்சியிலிருந்து மீண்டும் பரந்தன் நோக்கிப் பயணித்தோம். பரந்தனிலிருந்து வலதுபுறம் திரும்பி, பரந்தன் முல்லைத்தீவு வீதியில் முரசுமோட்டை நோக்கி வண்டி பயணித்தது. எனது மைத்துனர் புலிகளின் கட்டுமாணப் பிரிவில் வீதி வேலைகளில் சம்பளத்திற்கு பணிபுரிந்ததனால் புலிகள் பின்வாங்கிச் சென்ற பகுதிகளுடு மக்களோடு மக்களாக அவரும் தனது குடும்பத்தை இழுத்துக் கொண்டு சென்றார். ஆகவே, இந்த வீதியில் அமைந்திருக்கும் மக்கள் அவலங்களால் நிறைந்த ஊர்கள் ஒவ்வொன்றிலும் அவர் சிலகாலமாவது வாழ்ந்திருக்கிறார். அவலங்களை அனுபவித்திருக்கிறார். அதனால், தாம் ஆங்காங்கு தங்கியிருந்த ஊர்கள் வந்தபோது வாகனத்தை நிறுத்தி அவ்விடங்களைப் பார்வையிடத் தொடங்கினார். நானும் அவருடன் அவ்விடங்களை தரிசித்தேன். போரின் வடுக்கள் சிறிது சிறிதாக மறைந்துப்போய், வாழ்வு மீளவும் சாம்பலில் இருந்து பூக்க ஆரம்பித்திருந்தது. சிலவிடங்கள் அடையாளமே மாறிப்போயிருந்தது அவருக்கு. வீதியின் ஓரத்தில் 15 வருடங்களுக்கு முன்னர் இருந்த சில கட்டடங்களை, அடையாளங்களை அவர் தேடினார், எவையுமே அங்கு இருக்கவில்லை. முரசுமோட்டை, புளியம்பொக்கனை, குமாரசாமிபுரம், உடையார்கட்டு, வல்லிபுனம், புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம், கரைய முள்ளிவாய்க்கால் என்று பல இடங்களில் அவரும் அவரது குடும்பமும் இடம்பெயர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள். சிலவிடங்களில் ஓரிரு நாட்கள் மட்டுமே தங்கியிருந்து மறுபடியும் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். எங்கெங்கு வெளிகள் காணப்பட்டனவோ அங்கெல்லாம் மக்கள் வெள்ளம் இருந்ததாக அவர் கூறினார். கையில் கிடைத்த தகரம், ஓலை, சீலைகள், பிளாத்திக்குப் பைகள் என்று ஏதோவொன்றை எடுத்து மறைவு வைத்து, கூட்டத்தோடு கூட்டமாக குடும்பங்கள் வாழ்ந்திருக்கின்றன. இவ்வாறு மக்கள் செறிவாக வாழ்ந்த பகுதிகள் மீது கடுமையான எறிகணை மற்றும் விமானக் குண்டுவீச்சு, துப்பாக்கிச் சன்னங்கள் என்று தாக்குதல் நடத்தப்பட்டபோது பலர் உயிரிழந்தும், இன்னும் பலர் காயப்பட்டும் இருந்திருக்கின்றனர். கொல்லப்பட்டவர்கள் அவ்விடத்திலேயே கைகளால் மண் தோண்டி புதைக்கப்பட, காயப்பட்டவர்களில் வயதானவர்கள் அவர்களின் சொந்தங்களாலேயே கைவிடப்பட்டு சென்றதை மைத்துனர் கண்ணுற்றிருக்கிறார். வண்டி ஆனந்தபுரத்தைத் தாண்டியதும், பரந்தன் முல்லைத்தீவு வீதியிலிருந்து கடற்கரை நோக்கிச் செல்லும் வழியில் இடதுபுறமாக பயணிக்க ஆரம்பித்தது. ஏனென்றால், கண்டல்த் தாவரங்களும், வெளிகளும் இருக்கும் இப்பிரதேசத்திலேயே பெருமளவு மக்கள் உயிரைக் காக்க அடைக்கலம் புகுந்திருந்தனர். முக்கியமாக இப்பகுதியில் பனக்கூடல்களுக்கு மத்தியில் புதுமாத்தளன் இந்து ஆலயம் அமைந்திருக்கிறது. இப்பகுதியில் பெருமளவு மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர். இவ்வாறு தஞ்சம் அடைந்தவர்களில் மைத்துனரின் குடும்பமும் அடங்கும். மக்கள் இப்பகுதியில் அடைக்கலமாகி இருப்பது தெரிந்ததும் இப்பகுதி நோக்கிக் கடுமையான விமானக் குண்டு வீச்சும், எறிகணைத்தாக்குதலும் நடத்தப்பட்டபோது பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர். கொல்லப்பட்டவர்களையும், காயமடைந்தவர்களையும் மீட்டெடுக்கும் பணியில் மைத்துனரும் ஈடுபட்டிருக்கிறார். கடற்கரை நோக்கிப் பயணித்த நாம், கரையில் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி மணலில் நடந்தோம். தூரத்தே சாலை தெரிந்தது. கடற்புலிகளின் பாரிய முகாம் சாலைப்பகுதியிலேயே இருந்திருக்கிறது. இந்த முகாமைக் கைப்பற்ற இராணுவம் கடுமையாகச் சண்டையிட்டபோதும் பலத்த இழப்புக்களைச் சந்தித்ததாக அவர் கூறினார். ஈற்றில் கடற்புலிகள் இம்முகாமைக் கைவிட்டுப் போக, இராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டது. இப்பகுதியில் சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டதோடு, இங்கு அவரின் அனுபவங்களையும் அவர் என்னோடு பகிர்ந்துகொண்டார். பின்னர் அங்கிருந்து அம்பலவன் பொக்கனை, வலைஞர் மடம், இரட்டை வாய்க்கால் ஆகிய பகுதிகளை கடற்கரைச் சாலையூடாகவே வலம் வந்தோம். அம்பலவன் பொக்கனை பகுதியில் வெற்றுக் கடற்கரை வெளியில் மக்கள் கூடாரங்களை அமைத்து தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். ஒருபுறம் கடலில் இருந்து ஏவப்படும் எறிகணைகள், மறுபுறம் வானிலிருந்து பொழியப்படும் குண்டுகள், இன்னொருபுறம் முல்லைத்தீவுப் பகுதியில் இருந்து கனரக இயந்திரத் துப்பாக்கிகள் உமிழும் ரவைகள் என்பவற்றிற்கு மத்தியில் ஏந்த நம்பிக்கையும் அற்றும் உயிரை மட்டுமே கையில் ஏந்திக்கொண்டு மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இப்பகுதியிலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருப்பதாக அவர் கூறினார். கொல்லப்பட்டவர்களை அருகில் இருந்த பற்றைகளுக்குள் இழுத்துச் சென்று போட்டுவிட்டு, ஒற்றை அழுகையுடன் கடமை முடித்தோரும் அங்கு இருந்திருக்கிறார்கள். காயப்பட்டவர்களுக்கு மயக்க மருந்தின்றி கடற்கரையிலேயே அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டிருக்கிறது. இரத்தப்போக்கினால் கொல்லப்பட்டவர்களும் அதிகம் இருந்திருக்கிறார்கள்.
  13. வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த அப்பாவிப் பொதுமக்களைச் சுட்டுக்கொன்ற இஸ்ரேலிய இராணுவம் காசாவில் இஸ்ரேலியப் பயங்கரவாதிகள் நடத்திவரும் திட்டமிட்ட இனக்கொலையில் மிக அண்மையில் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த , யுத்தத்தில் எவ்விதத்திலும் பங்கேற்றிருக்கத பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். தீவிரவாதக் குழுவான ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்குமிடையிலான போரில் அகப்பட்டு கடுமையான அவலங்களைச் சந்தித்துவரும் பாலஸ்த்தீன மக்கள் தமதுயிரைக் காத்துக்கொள்ள முடிந்தவகையில் இப்பகுதியிலிருந்து வெளியேற முயன்று வருகிறார்கள். அவ்வாறான ஒரு முயற்சியில் தனது பேரக்குழந்தையின் கைகளைப் பிடித்தவாறு சுமார் 15 முதல் 20 வரையான பெண்கள் சிறுவர்கள் கொண்ட மக்கள் கூட்டமொன்றை இஸ்ரேலின் முன்னரங்கு நோக்கி கைகளில் வெள்ளைக்கொடியினை ஏந்தியவாறு வந்த வயோதிபப் பெண்னொருவரை சுமார் 200 மீட்டர்கள் தூரத்தில் நின்ற இராணுவத் தாங்கியிலிருந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் சுட்டுக் கொன்றிருக்கின்றனர். இன்னொருவிடத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமது சகோதரரைப் பார்வையிட இன்னும் மூவரை அழைத்துக்கொண்டு இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியொன்றினுள் வெள்ளைக்கொடியுடன் சென்ற நபரை வெகு அருகில் இருந்து இஸ்ரேலியத் தாங்கி சுட்டுக் கொல்கிறது. அவரது வெள்ளைக்கொடி அவரது குருதியில் முற்றாகத் தோய்ந்திருக்கிறது. இன்னொரு சம்பவத்தில் உங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெள்ளைக்கொடியுடன் வெளியே வாருங்கள் என்று இஸ்ரேலிய இராணுவத்தால் அழைக்கப்பட்டபோது, அதனை உண்மையென்று நம்பி வெள்ளைக்கொடியுடன் வெளியே வந்தவர்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நடத்திக் கொல்கிறது. இத்தாக்குதல்களின் ஒளிப்படங்கள் சி.என்.என் தொலைக்காட்சியில் விலாவாரியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், கொல்லப்பட்ட மக்களுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருக்கும் இஸ்ரேலிய மிருகங்களின் தாங்கிகளும் தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றைப் பார்க்கும் போது 2009 இல் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தபோது கொல்லப்பட்ட பலநூற்றுக்கணக்கான புலிகளின் அரசியல்த் துறைப்போராளிகளும், பொதுமக்களும் நினைவிற்கு வருகின்றனர். அன்று நடந்தது அப்பட்டமான போர்க்குற்றமும் இனவழிப்பும் தான் என்பதில் சந்தேகம் இல்லை. இன்று இஸ்ரேலின் இனவழிப்பைச் சரியென்று வாதிடும் குரூரர்களுக்கு இது சமர்ப்பணம். https://edition.cnn.com/2024/01/26/middleeast/hala-khreis-white-flag-shooting-gaza-cmd-intl/index.html#:~:text=The IDF has repeatedly claimed,raising questions about those efforts.
  14. தமிழ் தேசியம் என்பது.... தமிழ் மக்களை ஒன்று திரட்டி தமிழ் மொழி கலை கலாசார பண்பாடுகள் மற்றும் தமிழ் மக்களின் நிலங்களை பாதுகாத்தல். அவற்றிற்கு ஆபத்து வரும் போது எதிர்த்தல் போராடுதல். பல்லாண்டு காலமாக ஒரு நிலப்பகுதியில் வாழ்கின்ற ஒரு இனத்தின் உரிமை இது. இதில் எதிரி என்று எவரும் இல்லை. ஆனால் எவர் இவற்றிற்கு இடைஞ்சல் செய்தாலும் அவர் அல்லது அந்த நாடு எதிரியே. இது தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்த உலகில் வாழும் அத்தனை மக்களுக்கும் நாடுகளுக்கும் உரியது. இதில் வேடிக்கை என்னவென்றால் நம்ப இனத்தின் சாபக்கேடு வீட்டுக்குள் இருந்தபடியே கல் எறிவோம்.
  15. இனியும் சுத்து மாத்து சுமத்திரனை கட்சியில் வைத்திருப்பது ஆபத்து .
  16. தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தமிழர்கள் மட்டுமே விளையாடுவார்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பார் சீமான் பேசியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற வீரவணக்க பொதுக்கூட்டத்தில், அவர் இவ்வாறு பேசியுள்ளார். பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், ''கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து, எவரோடும் சமரசம் இல்லை, எவரோடும் கூட்டணியும் இல்லை. நோட்டுக்கும், சீட்டுக்கும் எவரோடும் பேரமில்லை. சாவோ, வாழ்வோ தனித்துதான். வெற்றியோ, தோல்வியோ தனித்துதான். ஒத்தையடி பாதையில்தான் செல்வேன். CSK னு ஒரு கிரிக்கெட் அணி இருக்குல. அதுல, ஒருத்தர் கூட தமிழர் கிடையாது. நாம் ஆட்சிக்கு வந்தால், 11 வீரர்களும் தமிழனாகதான் இருப்பான், உங்க அண்ணனும் வந்து விளையாடுவேன்'' எனக் கூறினார். சீமானின் இந்த பேச்சு, தற்போது தமிழகத்தில் நெட்டிசன்களின் பேசுபொருளாக மாறியுள்ளது https://www.madawalaenews.com/2024/01/i_858.html
  17. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சுஷிலா சிங், ஆதர்ஷ் ரத்தோர் பதவி, பிபிசி செய்தியாளர்கள் 28 ஜனவரி 2024 நீங்கள் ரயில் பயணம் அல்லது சாலை வழியாக நீண்ட தூரம் பயணம் செய்கிறீர்கள் என்றால், பயணத்தின் நடுவில் கண்டிப்பாக ஏதாவது சாப்பிட தோன்றும். சில நேரம் பசிக்கிறது என்பதற்காக சாப்பிடலாம். சில நேரம் பொழுது போக வேண்டும் என்பதற்காகவும் சாப்பிடலாம். அப்போது, நாம் காய்கறி, சாதம் அல்லது சப்பாத்தி போன்றவற்றை சாப்பிட விரும்பமாட்டோம். சிப்ஸ், பிஸ்கட் மற்றும் குளிர் பானங்கள் போன்ற உணவுப் பொருட்களையே விரும்புவோம். பாரம்பரிய உணவு மற்றும் பானங்களுக்கு பதிலாக உண்ணப்படும் இந்த சுவையான உணவுகள் 'மிக பதப்படுத்தப்பட்ட உணவு' என்று அழைக்கப்படுகின்றன. அவற்றை அதிகபடியாக உட்கொண்டால், அவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது மட்டுமல்லாமல், அவை சாப்பிட தூண்டும் வகையில், தயாரிக்கப்படுகின்றன. எனவே நாம் அவற்றுக்கு அடிமையாகி விடுகிறோம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய ஆராய்ச்சி கவுன்சில் (ICRIER) ஆகியவற்றின் சமீபத்திய அறிக்கை , இந்தியாவில் மிக பதப்படுத்தப்பட்ட உணவுக்கான சந்தை கடந்த 10 ஆண்டுகளில் வேகமாக வளர்ந்துள்ளது என்று கூறுகிறது. மிக பதப்படுத்தப்பட்ட உணவு என்றால் என்ன? மருத்துவர் குப்தா ஒரு குழந்தை மருத்துவர் மற்றும் பொது நலனுக்கான ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு மற்றும் முன்னெடுப்புகளை ஒருங்கிணைக்கும் NAPI என்ற சிந்தனைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆவார். மிக பதப்படுத்தப்பட்ட உணவின் அர்த்தம், “எளிமையான வார்த்தைகளில், மிக பதப்படுத்தப்பட்ட உணவு என்பது உங்கள் சமையலறையில் நீங்கள் வழக்கமாக தயாரிக்க முடியாத உணவுப் பொருள். உதாரணமாக பாக்கெட்டில் வரும் சிப்ஸ், சாக்லேட், பிஸ்கட், ரொட்டி, பன் போன்றவை.” என்று விளக்குகிறார். "ஒவ்வொரு சமூகமும் அதன் சுவை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப உணவைத் தயாரிக்கின்றன. இதை உணவு பதப்படுத்துதல் என்றும் கூறலாம். பாலில் இருந்து தயிர் தயாரித்தால், அது பதப்படுத்தப்படுகிறது. ஆனால் ஒரு பெரிய தொழிற்சாலையில் பாலில் இருந்து தயிர் தயாரிக்கப்பட்டு, நிறம், சுவை, சர்க்கரை அல்லது சோள சிரப் சேர்த்து சுவையாக இருந்தால், அது மிக பதப்படுத்தப்பட்ட உணவாக இருக்கும். மிக பதப்படுத்தப்பட்ட உணவில் சேர்க்கப்படும் இந்த பொருட்கள் அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்காது. நீங்கள் அவற்றை தொடர்ந்து சாப்பிடலாம், தொடர்ந்து விற்பனை செய்யலாம் மற்றும் அதிக லாபம் ஈட்டலாம். இத்தகைய சூழ்நிலையில், பெரிய தொழிற்சாலைகள் மட்டுமே அவற்றை தயார் செய்ய முடியும். பட மூலாதாரம்,மருத்துவர் அருண் குப்தா இயற்கை பதப்படுத்திகள் தீங்கு விளைவிக்காது மிக பதப்படுத்தப்பட்ட உணவு ‘காஸ்மெடிக்’ உணவு என்றும் அழைக்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, மிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் தொழில்துறை நுட்பங்கள் மற்றும் செயல்முறைகளுடன் தயாரிக்கப்படுகின்ற மிக பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கான சில எடுத்துக்காட்டுகள்- கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர் பானங்கள் இனிப்பு, கொழுப்பு அல்லது உப்பு தின்பண்டங்கள், மிட்டாய் மொத்தமாக தயாரிக்கப்பட்ட ரொட்டிகள், பிஸ்கட், பேஸ்ட்ரிகள், கேக்குகள் இறைச்சி, சீஸ், பாஸ்தா, பீட்சா, பர்கர், ஹாட் டாக் இன்ஸ்டன்ட் சூப், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், பேபி ஃபார்முலா நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த உணவு பொருட்கள் அனைத்தும் தொழில்துறை செயல்முறையின் கீழ் சர்க்கரை, உப்பு, கொழுப்புகள் திரவ ரசாயனங்கள், கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அவை பொதுவாக நம் சமையலறையில் பயன்படுத்துவதில்லை. தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் முன்னாள் மூத்த விஞ்ஞானியும், ஹைதராபாத்தில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் விஞ்ஞானியுமான மருத்துவர் வி சுதர்ஷன் ராவ் கூறுகையில், நாகரிகம் தொடங்கிய போது பதப்படுத்தும் செயல்முறை தொடங்கியது என்கிறார். மேலும், “நீண்ட கால பயன்பாட்டிற்காக பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்றவற்றால் உணவை கெட்டுப் போகாமல் பாதுகாப்பதே இதன் முக்கிய செயல்பாடாகும். உணவில் இருந்து ஈரப்பதத்தை அகற்றினால், அதை பாதுகாக்க முடியும் என்பதை நம் முன்னோர்கள் கற்றுக்கொண்டனர். எனவே வெயிலில் உலர்ந்த உணவுகளை நீண்ட நேரம் பயன்படுத்தலாம் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.” என்று அவர் விளக்கினார். மருத்துவர் வி சுதர்ஷன் ராவ், “உப்பு, சர்க்கரை ஆகியவை பதப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டன, அவற்றை நீங்கள் பதப்படுத்திகள் என்று அழைக்கலாம். ஆனால் தற்போது புதிய தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளதால், இந்த செயல்முறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன” என்றும் சுட்டிக்காட்டுகிறார். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள மாநகராட்சி சுகாதாரத் துறை பேராசிரியர் மருத்துவர் ஹர்ஷ் வர்தன், "ஊறுகாயை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். இது அதிக உப்பு, சர்க்கரை, வினிகர் மற்றும் சிட்ரிக் அமிலத்தை கொண்டது. அவை இயற்கை பாதுகாப்புகளாக செயல்படுகின்றன. செயற்கை பாதுகாப்புகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்றால், அவை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) தரத்தின்படி பயன்படுத்தப்பட வேண்டும்” என்று கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES பல வகையான நுண்ணுயிர் எதிர்ப்பிகள், ஆக்ஸிஜனேற்றிகள், அமிலங்கள் உள்ளிட்டவற்றில் உள்ள பதப்படுத்தும் தன்மையை ஒவ்வொரு உணவுப் பொருளிலும் பயன்படுத்த முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உணவுகளில் பாக்டீரியாவைத் தடுக்க ஆண்டிமைக்ரோபியல்கள் பயன்படுத்தப்படுகின்றன. உணவுப் பொருட்களில் மட்டுமல்ல, கிரீம்கள், ஷாம்புகள், சன்ஸ்கிரீன்கள் போன்ற அழகுசாதனப் பொருட்களிலும் அவை நீண்ட காலம் கெடாமல் இருப்பதற்கான செயல்முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவை தீங்கு விளைவிக்குமா? இந்த கேள்விக்கு பதிலளிக்கும் மருத்துவர் ஜெயேஷ் வகானி, "எந்தவொரு உணவுப் பொருளிலும் ப்ரிசர்வேடிஸ் எனும் பதப்படுத்திகள், பாதுகாப்பு தரங்களை மனதில் வைத்து பயன்படுத்தப்படுகின்றன. மேலும் அவை குறைந்த அளவு மட்டுமே தேவைப்படுகிறது, ஏனெனில் அதிகப்படியான பயன்பாட்டால் எந்த நன்மையும் இல்லை." மருத்துவர் வி சுதர்ஷன் ராவ் கூறுகையில், “இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்.எஸ்.எஸ்.ஐ) உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் பதப்படுத்திகள் சோதித்து, அவற்றை 60-70 ஆண்டுகள் எடுத்துக் கொண்ட பிறகும், அவை உடலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுத்தாது என்று கண்டறியப்பட்டுள்ளது.” என்கிறார். நுகர்வோர் விழிப்புணர்வு அமைப்பான ‘நுகர்வோர் குரல்’ன் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிம் சன்யால் கூறுகையில், “உணவு மற்றும் பானங்கள் நீண்ட காலமாக கெட்டுப்போகாமல் தடுக்க வண்ணங்களைச் சேர்ப்பதன் மூலம் சுவையை அதிகரிக்கவும், உணவை கவர்ச்சிகரமானதாக மாற்றவும் பதப்படுத்திகள் பயன்படுத்தப்படுகின்றன” என்கிறார். இந்த பதப்படுத்திகள் பொதுவாக குறைந்த அளவிலேயே சேர்க்கப்படுகின்றன. ஆனால் மிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் கெட்டுப்போகாமல் தடுக்க பின்பற்றப்படும் முறைகள் அவற்றை மிகவும் தீங்கு விளைவிக்கும் உணவுகளாக மாற்றுகின்றன. உணவுப் பொருட்களில் பதப்படுத்திகளின் பயன்பாட்டை தனிமையில் பார்க்க முடியாது. ஆனால் இது மிக பதப்படுத்தப்பட்ட உணவுடன் தொடர்புடையதாக பார்க்க வேண்டும் என்று மருத்துவர் ஆஷிம் சன்யால் விளக்குகிறார். இந்தியாவின் பதப்படுத்தப்பட்ட உணவுத் துறையின் மதிப்பு 500 பில்லியன் டாலர். காய்கறிகள், பருப்பு வகைகள் போன்றவற்றை தயாரிப்பதும் பதப்படுத்தப்பட்ட உணவு என்று அழைக்கப்படுகிறது, ஆனால் மிக பதப்படுத்தப்பட்ட உணவு என்பது தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் ஆய்வகத்தில் புதிய வடிவத்தில் தயாரிக்கப்படுகிறது என்று ஆஷிம் சன்யால் விளக்குகிறார். இதில் சர்க்கரை, நிறைவுற்ற கொழுப்புகள் போன்றவற்றுடன் கூடுதலாக நிறைய பதப்படுத்திகள் உள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES "மிக பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பதப்படுத்திகள் மற்றும் ரசாயனங்கள் நிறைந்துள்ளன என்றும் உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. அவற்றில் பதப்படுத்திகள் சேர்க்கப்படுகின்றன, இதனால் அவை நீண்ட காலம் பயன்படுத்தப்படலாம். அவற்றைப் பழக்கப்படுத்த சில சேர்க்கைகளும் சேர்க்கப்படுகின்றன. உதாரணமாக, சிப்ஸ், குளிர் பானங்கள் அல்லது பிற உணவுப் பொருட்கள் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு பழகிவிட்டன, மேலும் இந்த பழக்கத்தை வளர்ப்பதற்காக இது போன்ற பொருட்கள் சேர்க்கப்படுகின்றன” என்று ஆஷிம் சன்யால் கூறுகிறார். மேலும், "மிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் பல நோய்களுக்கு வேராக மாறியுள்ளன என்பதும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நாங்கள் விசாரித்தபோது, மிக பதப்படுத்தப்பட்ட உணவில் நிறைய பதப்படுத்திகள் மற்றும் பிற ரசாயனங்கள் இருப்பதைக் கண்டறிந்தோம்” என்கிறார். அதிக பிராசசிங்கில் ஊட்டச்சத்துக்கள் இழக்கப்படுகின்றன. இந்த உணவில் தரம் இல்லை. புகையிலை அல்லது சிகரெட்டுகளுக்கு அடிமையாவதைப் போலவே, அத்தகைய உணவுக்கு அடிமையாவதும் ஏற்படுகிறது. மிக பதப்படுத்தப்பட்ட உணவுகளின் சிக்கல் என்னவென்றால், அவற்றை எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது நமக்குத் தெரியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் போதும் என்று ஏன் தோன்றுவதில்லை? மருத்துவர் அருண் குப்தா கூறுகையில், "உணவு உண்ணும் போது, நமது மூளை இப்போது வயிறு நிரம்பியுள்ளது என்ற சமிக்ஞையை நமக்கு வழங்குகிறது. ஆனால் மிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் நீங்கள் அவற்றை விரும்பி சாப்பிடும் வகையில் தயாரிக்கப்படுகின்றன. நீங்கள் அதை சாப்பிடும்போது, வயிறு நிரம்பிவிட்டது என்பதற்கான எந்த சமிக்ஞையும் மூளையில் இருந்து வராது, நீங்கள் அதை சாப்பிட்டுக் கொண்டே இருப்பீர்கள்” என்கிறார். செயற்கை பதப்படுத்திகளை குறிப்பிட்ட அளவை விட அதிகமாகவும், நீண்ட காலமாகவும் பயன்படுத்தினால், உடலில் புற்றுநோயும் உருவாகலாம் என்று மருத்துவர் ஜெயேஷ் வகானி கூறுகிறார். தீங்கு விளைவிக்கும் உணவுகளின் ஆயுளை அதிகரிக்க பல முறை பதப்படுத்திகள் சேர்க்கப்படுகின்றன என்றும் மருத்துவர் அருண் குப்தா குறிப்பிடுகிறார். "அவற்றில் பதப்படுத்திகள் மற்றும் வண்ணமேற்றிகள் போன்ற ரசாயனங்கள் உள்ளன, அவை உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்தும் அல்லது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். இது உடனடியாக தெரியாவிட்டாலும், நீண்ட காலத்தில் இது ஆபத்தானது” என்று எச்சரிக்கிறார். உலகளாவிய பட்டினி குறியீட்டின் 2023 அறிக்கையின்படி, 125 நாடுகளில் பசியைப் பொறுத்தவரை இந்தியா 111 வது இடத்தில் உள்ளது மற்றும் பசியுடன் போராடும் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடு. நாடு ஊட்டச்சத்து குறைபாட்டின் சவாலை எதிர்கொண்டுள்ள அதே வேளையில், வளர்ந்து வரும் உடல் பருமன் பிரச்சினையையும் எதிர்கொள்கிறது பட மூலாதாரம்,GETTY IMAGES மிக பதப்படுத்தப்பட்ட உணவுகளும் உடல் பருமனை அதிகரிப்பதில் பங்கு வகிக்கின்றன. மருத்துவர் அருண் குப்தா , "சில நேரங்களில் அவற்றை சாப்பிடலாம், ஆனால் நம் உணவில் பத்து சதவீதத்திற்கும் அதிகமாக உட்கொள்ளத் தொடங்கும் போது, முதலில், எடை அதிகரிக்க தொடங்கும், பின்பு பல நோய்களுக்கு இதுவே காரணமாகும். இது நீரிழிவு, ரத்த அழுத்தம், இதயம் மற்றும் சிறுநீரக நோய்கள் மற்றும் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது. அதிக பதப்படுத்தப்பட்ட உணவின் பயன்பாடு மனச்சோர்வு மற்றும் பதட்டத்தையும் ஏற்படுத்தும் என்பதை சமீபத்திய ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. இது ஏன் என்ற , ஆராய்ச்சி இன்னும் நடந்து கொண்டிருப்பதாக மருத்துவர் அருண் குப்தா கூறுகிறார். பொதுவாக, எல்லா வயதினரும் வகுப்பினரும் மிக பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிடுவதைக் காணலாம். ஆனால் இந்தியாவை பொறுத்தவரை , குழந்தைகள் அதிக ஆபத்தில் உள்ளனர். ஏனெனில் குழந்தைகள் பொதுவாக இனிப்பான உணவுகளை விரும்புகிறார்கள். அவர்கள் சிப்ஸ், மிட்டாய், சாக்லேட், பேக் செய்யப்பட்ட பழச்சாறுகள் மற்றும் குளிர் பானங்கள் சாப்பிட விரும்புகிறார்கள். இது தொடர்பான பெரும்பாலான ஆராய்ச்சிகள் பெரியவர்கள் மீது செய்யப்பட்டிருந்தாலும், 2017 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், சுமார் 50% குழந்தைகள் மிக பதப்படுத்தப்பட்ட உணவுகளால் பாதிக்கப்படுவதாகவும், அது அவர்களை உடல் பருமனை நோக்கித் தள்ளுகிறது என்றும் கூறுகிறது. பட மூலாதாரம்,மருத்துவர் ஆஷிம் சன்யால் உணவு லேபிளிங்கின் முக்கியத்துவம் மிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இதுபோன்ற உணவு அல்லது உணவுகளை வாரத்திற்கு நான்கு முறை சாப்பிட்டால், படிப்படியாக அதன் உட்கொள்ளலைக் குறைக்க வேண்டும் என்று ஆஷிம் சன்யால் விளக்குகிறார். அதேசமயம், உணவு பொருட்களின் மீது உள்ள உணவு லேபிள்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிறார். இது தவிர, இதுபோன்ற உணவுப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், மூலப்பொருட்கள் குறித்த தகவல்களையும் வழங்க வேண்டும். “உணவு பொருட்களின் பாக்கெட்டில் முன் பக்கமாக இருக்கும் ஊட்டச்சத்து லேபிளிங்கை நாங்கள் வலியுறுத்துகிறோம். இதனால் சர்க்கரை அதிகம், அதிக உப்பு அல்லது கொழுப்பு அதிகமாக உள்ளதா என்பதை லேபிள் காட்டுகிறது. இந்த முக்கிய விஷயங்களை கவனித்தால், 80% பிரச்னை நிறுத்தப்படும். இப்போது இந்த தகவல்கள் அனைத்தும் லேபிளின் பின்புறத்தில் எழுதப்பட்டுள்ளன மற்றும் வாடிக்கையாளர்கள் கவனிக்காத அளவுக்கு சிறியதாக உள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகள் முன் பக்கம் லேபிள் ஒட்ட தொடங்கியுள்ளன, இது மக்களின் உணவுப் பழக்கத்தை மாற்றியுள்ளது” என்பதை ஆஷிம் சன்யால் உதாரணமாகக் கூறுகிறார். அதே நேரத்தில், லேபிளிங்கில் தகவல் கொடுத்தால், அது விற்பனையை பாதிக்கும் என்ற விவாதமும் உள்ளது. இதற்குப் பதிலளித்த ஆஷிம் சன்யால், சிகரெட் மற்றும் புகையிலை மீது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அத்தகைய பொருட்களின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதா? பட மூலாதாரம்,GETTY IMAGES அரசின் பங்கு என்ன? இந்த விஷயத்தில் மிகப்பெரிய பங்கு அரசுக்கே உள்ளது என சுட்டிக்காட்டுகிறார் மருத்துவர் அருண் குப்தா கூறுகிறார். அவர் கூறுகையில், "அரசாங்கத்தின் பொறுப்பு மிகப்பெரியது. மக்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இது தவிர, இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது ஊடகங்கள், சமூகம் மற்றும் நிறுவனங்களின் கடமையாகும். பின்னர் என்ன செய்ய வேண்டும் என்பதை மக்கள் தங்கள் சொந்த விருப்பப்படி தேர்வு செய்கிறார்கள். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான குழந்தை உணவு விளம்பரங்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதைப் போலவே, உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள பொருட்கள் குறித்து தவறான விளம்பரங்களும் தடை செய்யப்பட வேண்டும்” என்று மருத்துவர் அருண் குப்தா வேண்டுகோள் விடுக்கிறார். தீங்கு விளைவிக்கும் என்பதை மக்கள் அறிய வேண்டும். ஒருவேளை மக்கள் இன்னும் சாப்பிடலாம், ஆனால் இந்த விஷயங்களை குறைவாக சாப்பிட வேண்டும் என்பதை அவர்கள் அறிவார்கள். மருத்துவர் அருண் குப்தா, "இத்தகைய கொள்கைகள் தொழில்துறைக்கு ஒரு செய்தியை அனுப்புகின்றன, அவர்கள் பதப்படுத்தப்பட்ட உணவை தயாரித்து லாபம் ஈட்டினாலும், அதில் தவறில்லை. ஆனால் லாபம் சம்பாதிப்பதும், மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடுவதும் சரியல்ல.” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். https://www.bbc.com/tamil/articles/c72g41we0d5o
  18. போர் என வந்தால் அதில வாழும் நோயாளிகள்,சாதாரண மக்கள் மற்றும் ஏனைய அப்பாவிகளை சுட்டுக்கொல்லலாம் என்பது ஐ.நா வின் எழுதப்படாத சட்டம்....அதிலும் வலது சாரி நாடுகளில் நடந்தால் அவர்கள் மெளனமாக கடந்து செல்வார்கள் ....இடது சாரி நாடுகளில் நடந்தால் இடது சாரி நாடுகள் மெளனமாக கட்ந்து செல்வார்கள்....
  19. அடுத்த‌ ம‌ச்சில் இந்தியா த‌ங்க‌ளுக்கு சாத‌க‌மான‌ பிச் அமைச்சு சூழ்ச்சி முறையில் வெல்ல‌ பாப்பின‌ம்..............விளையாட்டில் நேர்மை இருக்க‌னும் ஆனால் இந்தியாவில் விளையாட்டு ந‌ட‌ப்ப‌தால் அதை எதிர் பார்க்க‌ முடியாது.....................
  20. 27 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த வரலாற்று வெற்றி: கண்ணீர் சிந்திய லாரா - வைரலாகும் வீடியோ வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், 2 ஆவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. 2 ஆவது போட்டியில் 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய அவுஸ்திரேலிய அணி 50.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 8 ரன் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷமர் ஜோசப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு அவுஸ்திரேலிய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசியாக 1997 ஆம் ஆண்டில் பெர்த்தில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் 2 ஆவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றதும் வர்ணனையில் ஈடுபட்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரையன் லாரா அருகில் இருந்த அவுஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட்டை கட்டியணைத்து ஆனந்த கண்ணீர் விட்டார். கண் கலங்கியபடி வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களுக்கு லாரா வாழ்த்துகள் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. https://thinakkural.lk/article/289746 கில்லி முகத்திலும் புன்னகை!!
  21. உங்களுடன் நாங்களும் கூடவே வரும் உணர்வைத் தந்திருக்கின்ரீர்கள்........! பாராட்டுக்கள்......ரஞ்சித் .......! 👍
  22. கொள்ளையும் ஊழல்களாலும் நிரம்பி வழியும் நாடு அது. இந்த நாடு தன்னை காப்பாற்ற என உலகம் முழுவதும் தண்டல் செய்கிறது. விடயம் என்னவென்று இப்போதாவது புரிகின்றதா? 🤣
  23. அமெரிக்கா முந்தினைய மாதிரி நினைச்ச இடமெல்லாம் சோட்டிக்கொண்டு திரியுறதுக்கு இனி வரும் காலங்கள் இடம் கொடுக்காது கண்டியளோ. 😎
  24. டக்ளஸ் கொலை செய்தவர்களிடமே நீதி கேட் குமாறு கோருகிறாரா? உள்ளக பொறிமுறை என்பது அது தானே?
  25. நானும் இப்போது பார்த்தேன். இரண்டாவது சுற்றில் முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் அரை இறுதிக்கு செல்லும். கால் இறுதி இல்லை. ஆனால், இரண்டு குழுக்களையும் பார்த்த அளவில் இரண்டும் சமநிலையில் காணப்படுவது போல தென்படவில்லை. இலங்கை அணி உள்ள குழு மிகவும் பலமானது. இங்கே போட்டியிட்டு அரையிறுதிக்கு செல்வது சாத்தியமா தெரியவில்லை. ஆனால் என்ன ஒரு காலத்தில் தேசிய அணிக்காக விளையாடப்போகும் எதிர்கால நட்சத்திரங்களுக்கு நல்ல பயிற்சி, அனுபவம் இங்கு கிடைக்கும்.
  26. சர்வதேச விசாரணை என்பது நடக்கப்போவதில்லை என்பது உலக அரசியலை கவனிக்கும் சாதாரண மக்களுக்கு எப்பவோ தெரிந்த விடயமே. 2009 வரை தமிழ் ஈழம் என்ற வெற்றுக் கோஷத்துடன் தமிழ் அரசியல் வலம் வந்தது. இப்போது அந்த இடத்தை சர்வதேச விசாரணை, இனக்கொலை போன்ற சொல்லாடல்கள் நிரப்பி உள்ளது அவ்வளவு தான். மொத்தத்தில் தமிழ் தேசிய அரசியல் பரப்பில் உள்ள (புலம் பெயர், தாயக) உள்ள அனைவருமே சுத்து மாத்துக்கள் தான். உண்மையில் தமிழ் அரசியல் பரப்பில் இவ்வாறாக நடைமுறை சாத்தியமற்ற கோரிக்கைகளுடன் வலம் வரும் சுத்து மாத்துக்களின் குரல் பலமாக உள்ளவரை டக்லஸ் போன்ற அரசியல்வாதிகளின் காட்டில் மழை தான். உண்மையில் தமிழ் அரசியல் ஆரோக்கியமாக தன்னை மாற்றி கொள்வதை டக்லஸ் போன்ற ஆளும் அரசை அண்டிப் பிழைக்கும் அரசியல்வாதிகள் விரும்பமாட்டார்கள.
  27. யுத்த காலத்தை அவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார்கள். அபிவிருத்தியாகட்டும், காணி பிடிப்பதாகட்டும், கிராமங்களை மாற்றியமைப்பதாகட்டும், கோவில்களை மசூதிகளாக்குவதா இருக்கட்டும் எல்லாமே அவர்களுக்கு சாதகமாக இருந்தது. இப்போது இந்த யுத்தம் முடிந்தது ஒரு வகையில் அவர்களுக்கு நடடமென்றுதான் கருதுகிறார்கள். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட்டபோது இப்படி எல்லாம் ஆர்ப்படடம், போராட்டம் எல்லாம் செய்யவில்லை. அங்கிருந்து வரும் பணத்துக்காகவும், தமது மதம் சார்ந்தவர்கள் என்பதட்காகவுமே எல்லாம். எல்லாம் மாய்மாலம்தான். இருந்தாலும் அதட்காக சங்கிகளின் அடடாகாசங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அதுவும் ஒரு கொள்ளை கூடடம்தான்.
  28. இப்போதைய செய்திகளின் படி இந்த தாக்குதல்கள் சிரியா, இராக் போன்ற நாடுகளில் இருக்கின்ற இரானிய குழுக்களால் நடத்தப்பட்டிருப்பதால் அங்குதான் தாக்குதல் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம். இது பைடேனின் அரசியல் பிரச்சினையாக மாறி இருப்பதால் பதில் தாக்குதல் கனதியாக இருக்க போகின்றது. இருந்தாலும் ஈரானில் நேரடி தாக்குதலில் இப்போதைக்கு அமெரிக்கா இறங்க சந்தர்ப்பம் குறைவு.
  29. அதாவது எங்களது தமிழ் தலைகள் இனி கொண்டு செல்வதட்கு ஒன்றுமில்லை என்று சொல்ல வருகிறீர்கள். 😜
  30. தெற்காசிய நாடான இலங்கை எனும் நாடு ஒரு முன்னுதாரணமாக உள்ளது, அதனை பார்த்தும் திருந்தாத நாடுகளில் இந்தியாவும் ஒன்று, மக்களை பிரிக்கும் சாதாரண அரசியல் இலாபங்கள் இலங்கை போன்ற அதிகமான முட்டாள்கள் வாழும் நாடுகளிலே சாத்தியம்
  31. உண்மை அண்ணா........... 2008ஜ‌பிஎல் வ‌ருகைக்கு பிற‌க்கு ப‌ல‌ தேசிய‌ அணிக‌ள் கீழ் ம‌ட்ட‌த்துக்கு போய் விட்ட‌ன‌.............ஜ‌பிஎல் வ‌ருகைக்கு முத‌ல் 1ஒரு நாள் தொட‌ர் ம‌ற்றும் 5நாள் விளையாட்டு.............வீர‌ர்க‌ள் 5வ‌ருட‌ம் தேசிய‌ அணியில் விளையாடி வேண்டும் ச‌ம்ப‌ள‌த்தை ஒரு சீச‌ன் ஜ‌பிஎல்ல‌ விளையாடி எடுக்கின‌ம்.............முந்தி எல்லாம் தென் ஆபிரிக்கா அணிய‌ ஜ‌ந்து நாள் விளையாட்டில் வெல்வ‌து மிக‌ சிர‌ம‌ம்...........திற‌மையான‌ வீர‌ர்க‌ள் தென் ஆபிரிக்கா அணிக்கு விளையாடாம‌ சீக்கிர‌மே ஓய்வை அறிவிக்கின‌ம் ஜ‌ந்து நாள் விளையாட்டில் .................இப்ப‌த்த‌ வீர‌ர்க‌ளுக்கு தேசிய‌ அணிய‌ விட‌ ஜ‌பிஎல் தான் முக்கிய‌ம்.............இன்று ந‌ட‌ந்த‌ விளையாட்டில் மேற்கிந்தியத் தீவு வீர‌ர் 7விக்கேட் எடுத்து திற‌மையை வெளிக்காட்டினார்............இவ‌ரும் ஜ‌பிஎல்ல‌ சீக்கிர‌ம் விளையாடுவார்.............பொய் என்றால் பாருங்கோ அண்ணா இவ‌ரும் ஜ‌ந்து நாள் விளையாட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பார்..........இப்ப‌டி தான் ஜ‌பிஎல் ப‌ல‌ நாட்டு அணிக‌ளை ப‌ண‌ம் மூல‌ம் அழித்தார்க‌ள்............தென் ஆபிரிக்காவில் நிலைத்து நின்று ஆட‌க் கூடிய‌ வீர‌ர்க‌ள் சிறு வ‌ய‌திலே ஓய்வை அறிவித்த‌வ‌ர்க‌ள் கார‌ண‌ம் ஜ‌பிஎல் ப‌ண‌ம் ...............நியுசிலாந் ரெஸ் தொட‌ருக்கு அறிவிக்க‌ப் ப‌ட்ட‌ வீர‌ர்க‌ளை பாருங்கோ ஒரு வீர‌ர‌ தவிற‌ ம‌ற்ற‌ வீர‌ர்க‌ள் எல்லாம் அனுப‌வ‌ம் இல்லாத‌ வீர‌ர்க‌ள்..................
  32. இதிலும் முத‌ல் மூன்று இட‌ங்க‌ளை பிடிக்கும் அணிக‌ள் தான் அடுத்த‌ சுற்றுக்கு போவ‌தாக‌ போட்டு இருக்கு அண்ணா.............ச‌கோத‌ர‌ர் நாய‌ம் த‌வ‌றாக‌ விள‌ங்கி விட்டார் போல் இருக்கு.................
  33. செலரி & உருளைக்கிழங்குடன் ஒரு அருமையான உணவு.......! 👍
  34. இன்று (24-12-2023) என் குருநாதர் பேரா.தொ.பரமசிவன் அவர்கள் நினைவு நாள். "பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே" எனும் கொள்கை வழி நின்றவர் தொ.ப. எனவேதான் தமிழூரில் என்னைப் போன்ற சாமானியரும் அவர் அருகில் செல்ல முடிந்தது; எங்கள் அறிவுக்கு எட்டிய வரை அவரிடம் திரட்ட முடிந்தது; என் குருநாதர் என்று அவரைச் சொல்லிக் கொள்ளும் அளவு தைரியம் வந்தது; ஏன், எழுத்தாணி பிடிக்கும் அளவு மனத்திடமே வந்தது ! எனது முதல் முயற்சி 'என் வானம் என் பூமி' என முகிழ்த்தது. இரண்டாம் முயற்சி 'அதே வானம் அதே பூமி' என விரிந்து நிற்கிறது; என் மனம் கவர்ந்த அதே காவ்யா பதிப்பகத்தில் - வாசகர் வட்டம் அதே என்றில்லாமல் மேலும் விரிந்து அமையும் எனும் ஆவலுடன். தம் சீடன் ஒருவன் தாம் காட்டிய வழியில் எழுதிய நூலொன்றை வெளிக்கொணர்வதை விட ஒரு ஆசானுக்கான சிறந்த நினைவேந்தல் வேறு என்னவாக இருக்க முடியும் ! https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02mMW5ESc8ubZvGyR1EgjGymKrN67rms1E6k87TmCLZyuD7dV5Mkr6bcXpv9YcK5ctl&id=100083780391980&mibextid=Nif5oz
  35. https://www.espncricinfo.com/series/icc-under-19-world-cup-2023-24-1399722/match-schedule-fixtures-and-results கிறிக்கின்போ அட்டவணையில் முதல் 3 அணிகளும் விளையாடுவதாகப் போட்டிருக்கிறது.
  36. இனவாத சிங்களத்தின் அரசியல் வரலாறுகள் கண் முன்னே தெரிந்தும் நம்மவர்கள் இன்னும் நல்லிணக்க அரசியலில் நீந்த ஆசைப்படுகின்றார்கள். சுகமான நீரோட்டம்.😂
  37. இப்ப ஈழத்தமிழர்களுக்கு சிங்களவர்கள் எப்படி சுவாசிக்கின்றார்கள் எண்ட பிரச்சனை இல்லை. முதல்ல தமிழர் மூச்சு காற்றை கவனியுங்கோ சிறிதரன்.
  38. இராஜதந்திரிகளுக்கு என்றுதான் அரசு சொல்லும். அங்கேயும் ஓட்டைகள் இருக்கத்தானே செய்யும். மது குடிக்கேலாது என்பது சட்டம். குடிக்கிற ஆக்கள் பிடிபடாமல் குடியுங்கோ.🤣 ஈரானியனியர்களிடம் கேட்டால் கதை கதையாக சொல்வார்கள். அரச அதிகாரிகளுக்கு தெரியாமல் பன்றி இறைச்சி வாங்க முடியுமாம்.
  39. கார்த்திகை 29. நான் இலங்கைக்கு வந்த காரணங்களில் இரண்டாவது முக்கியமானது. முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம். 2009 வைகாசியிலிருந்து முள்ளிவாய்க்கால் எனும் பெயர் எனது மனதில் மிக ஆளமாகப் பதிந்துவிட்டது. எனது இனத்தின் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட இனக்கொலையும், எமது ஒரே நம்பிக்கையாகவிருந்த போராட்டம் முற்றாக அழிக்கப்பட்டதும், தாயக விடுதலைக்கான கனவு முற்றாகக் கலைந்துபோனதும் இந்த இடத்தில்தான். பல்லாயிரக்கணக்கான எனது சொந்தங்களின் குருதி வழிந்து உறைந்துபோனதும் இந்த மணற்றரையில்த்தான். ஆகவே, முள்ளிவாய்க்கால் என்கிற பெயர் உச்சரிக்கப்படும் ஒவ்வொரு கணமும் மனதில் தாங்கொணாத் துயரும், ஏமாற்றமும், விரக்தியும் வந்துசேர்ந்துவிடும். காணொளிகள் மூலம் முள்ளிவாய்க்காலைப் பார்க்கும்போது அப்பகுதியில் இருந்து காற்றோடு காற்றாகக் கலந்து மாவீரரினதும், மக்களினதும் ஆன்மாக்களை மனம் தேடும். அவர்களின் உயிர் கடற்காற்றோடு கலந்து இன்னும் அங்கேயே இருப்பதாக மனம் நினைக்கும். ஆகவே அந்தவிடத்தைப் போய்ப்பார்த்துவிடவேண்டும் என்பது எனது நெடுநாள்த் தவம். ஆகவேதான் இலங்கை நோக்கிய எனது அண்மைய பயணத்தை அதற்காகத் தேர்ந்தெடுத்தேன். இலங்கைக்கான பயணம் ஓரளவிற்கு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முள்ளிவாய்க்கால் பயணத்தை மைத்துனர் மூலம் ஒழுங்குசெய்திருந்தேன். தனது வேலைக்கு லீவு போட்டுக்கொண்ட அவர் தனது இளைய மகனையும் அப்பயணத்திற்கு அழைத்திருந்தார். இப்பயணத்தில் மைத்துனரும் பங்குகொள்வதற்கு அவருக்கென்றொரு காரணமும் இருந்தது. மைத்துனரும் அவரது குடும்பமும் 2009 ஆம் ஆண்டு வைகாசி 17 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினரிடம் சரணடைந்து, முகாமில் வதைபட்டு சில மாதங்களின் பின்னர் வெளியே வந்தவர்கள். 2008 இலிருந்து 2009 வரையான படுகொலைகளையும் இறுதி இனக்கொலையினையும் நேரடியாகக் கண்டு மரணத்துள் வாழ்ந்து மீண்டவர்கள். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துவந்தபோதும் இனக்கொலையின் ரணங்களும், அவலங்களின் அதிர்வுகளும் அவர்களை மீண்டும் அப்பகுதிக்குச் செல்வதைத் தடுத்தே வந்திருந்தன. ஆனால், நான் இப்பயணம் குறித்து அவரிடம் கேட்டபோது அவரும் வர ஒத்துக்கொண்டார். மேலும், தனது பிள்ளைகளுக்கும் நடத்தப்பட்ட அவலங்கள் குறித்த பதிவுகளை புரியவைப்பதற்கு இதனை ஒரு சந்தர்ப்பமாகவும் அவர் பாவிக்க நினைத்தார்.
  40. உயிர்த்தமிழே நீ வாழ்வாய்........ ஒலி ஒளிப் படச்சேர்க்கையில் கவிதை அருமையாக உள்ளது......! 🙏 நன்றி கோபி.......!
  41. 5:30 மணியளவில் பாசையூரை அடைந்தோம். ஆட்டோச் சாரதியை வீதியில் காத்திருக்கச் சொல்லிவிட்டு சிஸ்ட்டர் அன்ராவை பார்க்க கட்டடத்தின் உள்ளே நுழைந்தோம். எங்களை விருந்தினரை வரவேற்கும் அறையில் அமரச் சொல்லிவிட்டு அவரை சில நிமிடங்களின் பின்னர் அழைத்து வந்தார்கள். என்னுடன் வந்த மற்றைய இரு சித்திகளும்கூட சிஸ்ட்டர் அன்ராவை பல மாதங்களுக்குப் பிறகுதான் காண்கிறார்கள். ஆகவே, அவருடன் இருந்து பேச ஆரம்பித்தோம். ஒவ்வொருவராக எங்களிடம் விபரங்களைக் கேட்கத் தொடங்கினார் அவர். சில விடயங்களைப் பற்றிப் பேசியபோது அவருக்கு அதுகுறித்த நினைவுகள் எதுவும் இருக்கவில்லை. ஆகவே, முதன்முறையாகக் கேள்விப்படுவதுபோல‌ நாம் கூறியவற்றைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவர பேச்சில் ஈடுபடும் ஆர்வம் நேரம் செல்லச் செல்ல குறைவடைவது தெரிந்தது. சிறிது நேரத்திற்குப் பின்னர் என்னுடன் வந்த சித்திமாருடன் நான் பேசிக்கொள்ள சிஸ்ட்டர் அன்ரா அமைதியாக எங்கள் மூவரையும் பார்த்துக்கொண்டிருந்தார். ஏன் அமைதியாகவிருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு சிரிப்பைத் தவிர வேறு பதில் இல்லை. எனக்குப் புரிந்தது. அவரால் தொடர்ந்து அங்கே இருக்க முடியவில்லை. சரி, அவருக்கு இனிச் சிரமத்தைக் கொடுக்கக் கூடாது என்று எண்ணிவிட்டு, "உங்களை நாளைக்கு வந்து சந்திக்கலாமா?" என்று கேட்டேன். "ஏன், இண்டைக்குத்தானே வந்தனீர், ஏன் நாளைக்கும்?" என்று அவர் கேட்கவும், "அவன் நாளண்டைக்கு அவுஸ்த்திரேலியாவுக்குப் போயிடுவான் , இனி எப்ப வாறானோ தெரியாது. வந்து ஒருக்கால் பயணம் சொல்லிப்போட்டுப் போகட்டுமன், ஏன் வேணாம் எண்டுறீங்கள்?" என்று ஒரு சித்தி கூறவும், "அப்ப சரி, பின்னேரம் 5 மணிக்குப்பிறகு வாருமன்" என்று சொன்னார். அவரது நிலை எனக்குப்புரிந்தது. கன்னியாஸ்த்திரியாக இருந்த காலத்தில் க.பொ.த சாதாரண‌ தரம் வரை கணித ஆசிரியராக பல பாடசாலைகளில் பணிபுரிந்தவர். கற்பித்தல் முடிவடைந்த காலத்திற்குப் பின்னர் யாழ்ப்பாணம் திருக்குடும்பக் கன்னியாஸ்த்திரிகள் மடத்திற்குப் பொறுப்பாக இருந்தவர். மத நிகழ்வுகள், மக்கள் பணிகள், உளநலச் சேவைகள் என்று மிகுந்த உற்சாகத்துடன் பணியாற்றியவர்.தேசியத்தின்பால் மிகுந்த பற்றுக்கொண்ட அவர் வன்னியில் போயிருந்து பல கிராமங்களில் புலிகளின் மருத்துவப் பிரிவு மற்றும் பொதுமக்கள் மனோவியல் சேவைகள் போன்றவற்றில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டவர். சி - 90 எனப்படும் மோட்டார் சைக்கிளில் எப்போதும் சுறுசுறுப்பாக வலம்வரும் அவர் தன்னால் நடக்க இயலாது போகும்வரை சமூகத் தொண்டில் ஈடுபட்டவர். 2002 இல் புலிகளுக்கும் ரணில் அரசிற்கும் இடையே இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளின்போது ஏ- 9 பாதை திறப்பு நிகழ்விற்காக இவரும் சென்றிருந்தார். ஆக, சமூகத்திற்காக இடைவிடாது தொண்டாற்றி, பலருக்கும் உதவிய தன்னால் இன்று தன்னைத்தானே பார்த்துக்கொள்ள முடியாமல் இருப்பதென்பது கவலையளிப்பதாகவே எனக்குப் பட்டது. தனது சாதாரண கடமைகளைச் செய்யவே இன்னொருவரின் உதவி தேவைப்படும் என்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வீழ்ந்து ஏற்பட்ட காயத்தினையடுத்து பிறரின் உதவியுடனேயே கட்டிலில் அமரவும், எழுந்துகொள்ளவும், சக்கர நாற்காலியில் தன்னை ஏற்றி இறக்கவும் முடிகிறது என்றகிவிட்டபோது, தன்னைப் பார்க்க வருபவர்களை அடிக்கடி வரவேண்டாம் என்று அவர் கோருகிறார் என்பதும் புரிந்தது. ஆகவேதான் இன்று மாலையும் வந்துவிட்டு நாளையும் வரப்போகிறேன் என்று நான் சொன்னபோது அவரை அறியாமல் "ஏன்" என்று கேட்டுவிட்டார் என்பதையும் புரிந்துகொண்டேன், ஆகவே, முடிந்தால் வருகிறேன், இல்லையென்றால் தொலைபேசியில் அழைக்கிறேன் என்று கூறிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்று கிளம்பினோம். வெளியில் இன்னமும் மழை பெய்துகொண்டிருந்தது. எமக்காகக் காத்துநின்ற ஓட்டோச் சாரதியுடன் மீண்டும் பேச்சுக்கொடுத்துக்கொண்டே ஆரியகுளம் நோக்கிப் பயணமானோம். ஆரியகுளத்தை அடைந்ததும் சித்திமார் இருவருக்கும் பயணம் சொல்லி வழியனுப்பி வைத்துவிட்டு கண்ணாதிட்டியில் அஅமைந்திருக்கும் மைத்துனர் வீட்டிற்கு நடக்கத் தொடங்கினேன். மழை இன்னும் மெதுவாகத் தூறிக்கொண்டிருந்தது. நாளை வன்னிநோக்கிய பயணம் என்று மனம் சொல்லிக்கொண்டது.
  42. வல்லை வெளியிலிருந்து நெல்லியடி நோக்கி ஓடிக்கொண்டிருந்தது மினிபஸ். வழியெங்கிலும் நான் சைக்கிளில் ஓடித்திருந்த இடங்கள். அன்றைய தென்னோலையினாலும், பனையோலையினாலும் வேயப்பட்ட பதிவான கூரைகளைக்கொண்ட பழைய பலசரக்குக் கடைகளும், சைக்கிள் திருத்தும் நிலையங்களும் மறைந்துவிட்டன. வீதியின் இருமரங்கிலும் சீமேந்தினால் கட்டப்பட்ட கடைகள் முளைக்கத் தொடங்கியிருந்தன. மூத்தவிநாயகர் கோயில் புதிய வர்ணத்தால் பூசப்பட்டு அழகாகக் காட்சியளித்தது. நாவலர் மடத்திலிருந்து நெல்லியடிச் சந்திவரையான பகுதி நன்றாக அபிவிருத்தியடைந்திருந்தது. புதிய கடைகள், வங்கிகள் என்று சுறுசுறுப்பான பகுதியாக மாறியிருந்தது. நெல்லியடிச் சந்தியில் என்னை இறக்கிவிட்டார்கள். "இறங்கின உடனே ஓட்டோவில ஏறிப்போடாதை, கனக்கக் காசு சொல்லுவாங்கள். மகாத்மா தியெட்டர் மட்டும் நடந்துவந்து அங்கையிருந்து ஓட்டோ பிடி" என்று சித்தி கூறியது நினைவிற்கு வரவே நடக்கத் தொடங்கினேன். கடைவீதிகளில் சனம் அலைமோதியது. யாழ்ப்பாணத்திற்குப் பிறகு அதிக சனநடமாட்டம் உள்ள பகுதிகளில் நெல்லியடியும் ஒன்றென்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு ஐந்து அல்லது ஆறு நிமிட நடையில் மகாத்மா தியெட்டருக்கு அருகில் வந்தாயிற்று. வரிசையாக நின்ற மூன்று ஓட்டோக்களில் முதலாவதாக நின்றவரிடம் "உச்சில் அம்மண் கோயிலடிக்குப் போக எவ்வளவு எடுப்பீங்கள்" என்று கேட்டேன். சாரதிக்கு 35 வயதிருக்கும். வலதுகை மணிக்கட்டுடன் வெட்டப்பட்டிருந்தது. இடதுகையினால் ஓட்டோவைச் செலுத்திவருகிறார் போலும். "உச்சில் அம்மண் கோயிலுக்குக்கிட்டவோ அல்லது அதுக்கு முதலோ?" என்று கேட்டார். சித்தியின் பெயரைச் சொன்னபோது புரிந்துகொண்டார். "ஏறுங்கோ அண்ணை, 400 ரூபா தாங்கோ" என்றார். வழியில் பேசிக்கொண்டே போனோம். கையில் என்ன நடந்தது என்று கேட்டேன். சிரித்துக்கொண்டே, "நான் முன்னாள்ப் போராளியண்ணை, தீபன் அண்ணையின்ர குறூப்பில இருந்தனான். சண்டையில் கை போட்டுது. முகாமில இருந்து வெளியில வந்துட்டன். உங்கட தம்பி (சித்தியின் மகன்) எங்களோட‌ கொஞ்சக்காலம் இருந்தவர்" என்று கூறினார். இறுதிப்போர்க்கால நிகழ்வுகள் சிலவற்றை அவர் சொன்னபோது வலித்தது. மிகுந்த அன்புடன் அவர் பேசியது பிடித்துப்போயிற்று. என்னைப்பற்றிக் கேட்டார். 2018 இற்குப்பிறகு இப்போதுதான் வருகிறேன் என்று கூறினேன். பேசிக்கொண்டே வீடு வந்தோம். ஆயிரம் ரூபாயைக் கொடுத்தேன். "சில்லறை இல்லையோ அண்ணை?" என்று கேட்க‌, "மிச்சம் வேண்டாம், வைச்சுக்கொள்ளும்" என்று சொன்னபோது, நன்றியண்ணை என்று சொன்னார். அவரின் கதையினைக் கேட்கும்போது அழுகை வந்தது. இவ்வாறானவர்களையல்லவா நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்? என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். இவர்போல் இன்னும் எத்தனைபேர் எமது சமூகத்தில் இருக்கிறார்கள்? எம்மை நம்பியல்லவா எமக்காகப் போராடப் போனார்கள்? இன்று அவர்களின் நிலையென்ன? அவரை வழியனுப்பி வைத்துவிட்டு அம்மம்மாவின் வீட்டினுள் நுழைந்தேன். எனது வருகையைப் பார்த்துக்கொண்டிருந்த சித்தி, "ஓட்டோவுக்கு எவ்வளவு குடுத்தனீ?" என்று கேட்டார். "நானூறு கேட்டு ஆயிரம் குடுத்தேன்" என்று கூறினேன். "உனக்கென்ன வருத்தமே? ஏன் அவ்வளவு குடுத்தனீ?" என்று கேட்க, "இல்லை, அவர் முன்னாள்ப் போராளி சித்தி, கையும் இல்லை, பாவமாக் கிடக்கு" என்று கூறவும் அவர் அடங்கிவிட்டார். அம்மாவின் வீட்டின் பெயர் இராணி இல்லம். அதற்கொரு காரணம் இருக்கிறது. எனது அம்மாவுடன் சேர்த்து ஆறு பெண்களும் இரண்டு ஆண்களும் குடும்பத்திலிருந்தனர். எல்லாப்பெண்களுக்கும் இராணி என்ற சொல்லில்த் தான் பெயர் முடிவடையும். அன்னராணி, செல்வராணி, புஷ்ப்பராணி, யோகராணி, இதயராணி, கலாராணி என்று ஆறு ராணிகள். அதனால், ஐய்யா (அம்மாவின் தகப்பனார்) 1960 இல் அவ்வீட்டைக் கட்டும்போது இராணி இல்லம் என்று பெயர் வைத்துவிட்டார். அந்நாட்களில் அப்பகுதியில் கட்டப்பட்ட வீடுகளில் விசாலமானதும் அழகானதுமாக அவ்வீடு இருந்தது. கொழும்பில் எனது குடும்பம் வாழ்ந்த காலத்தில் மார்கழி விடுமுறைக்கு அங்கு வந்து தங்குவோம். எம்மைப்போன்றே யாழ்ப்பாணத்திற்கு வெளியே வாழ்ந்துவந்த அம்மாவின் சகோதரர்களும் அதேகாலப்பகுதியில் விடுமுறைக்கு வருவார்கள் அம்மம்மாவின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்று பெரும் பட்டாளமே அவ்வீட்டில் நிற்கும். அம்மம்மாதான் எல்லோருக்கும் கட்டளை வழங்குவது. பாடசாலை ஆசிரியரான அவர் இயல்பாகவே கண்டிப்பானவர். ஆனால், அன்பானவர். வீட்டில் உள்ள சின்னக் கிணற்றில் துலாமரத்தினால் அள்ளிக் குளிப்பது ஒரு சுகம். மாமா எல்லாச் சிறுவர்களையும் வரிசையில் இருத்திவைத்து குளிக்கவைப்பார். "உனக்கு மூண்டு வாளி, எனக்கு நாலு வாளி" என்று போட்டி போட்டு மாமாவிடம் வாங்கிக் குளிப்போம். கடைசி வாளியை வார்க்கும்போது "சுகம், சுகம், சுகம்" என்று சொல்லிக்கொண்டே வார்ப்பார். ஏனென்றால், குளிர்தண்ணியில் குளிப்பதால் வருத்தம் ஏதும் வந்துவிடக்கூடாதென்பதற்காக அப்படிச் சொல்வது வழமையாம். அப்படியிருந்த வீட்டில் இப்போது சித்தி மட்டும் ஒற்றை ஆளாக வாழ்ந்துவருகிறார். அன்றிருந்த கலகலப்பும், மக்கள் கூட்டமும் அற்றுப்போய் வெறிச்சோடி அமைதியாகக் கிடந்தது எங்கள் அம்மாமாவின் வீடு. சிறுவயதில் வீட்டின் விறாந்தையில் இருந்து விளையாடிய இடங்களை ஆசையுடன் தொட்டுப்பார்த்தேன். மழைகாலத்தில் கப்பல்விட்டு விளையாடிய முன் விறாந்தை, பின்முற்றத்தில் பரந்து விரிந்து வளர்ந்து அப்பகுதியெங்கும் இலைகளையும் மாம்பிஞ்சுகளையும் கொட்டும் கிளிச்சொண்டு மாமரம் என்று ஒவ்வொரு இடத்தையும் மனம் தேடிப் பார்த்துக்கொண்டது. விறாந்தையில் போடப்படிருந்த வாங்கில் அமர்ந்தபடியே சித்தியுடன் பேசினேன். அவரை இறுதியாக 2022 புரட்டாதியில் அவுஸ்த்திரேலியாவில் பார்த்தேன். திருமண நிகழ்வொன்றிற்காக வந்திருந்தார். ஆகவே, சிட்னியில் இருக்கும் குடும்பங்கள் குறித்து நலம் விசாரித்தார். பின்னர் ஊர்க்கதைகள் மேடைக்கு வந்தன. ஒரு இரண்டு மணிநேரமாவது பேசியிருப்போம், "குளிச்சுப்போட்டு வா சாப்பிடுவம்" என்று கூறவும் பழைய நினைப்பில் கிணற்றில் துலாவினால் அள்ளிக் குளிக்கலாம் என்று போனால் துலாவைக் காணோம். "எங்கே சித்தி துலா?" என்று நான்கேட்க, "இந்தவயசில என்னால துலாவில அள்ளிக் குளிக்க ஏலுமே? உள்ளுக்கை வக்குக்கட்டியிருக்கிறன், மோட்டர் போட்டால் தண்ணிவரும், அங்கை போய்க்குளி" என்று சொன்னார். அங்கிருந்த வெய்யில்ச் சூட்டிற்கும், வியர்வைக்கும் குளிரான நீரில் அள்ளிக் குளித்தது உடலுக்கு மிகுந்த புத்துணர்ச்சியைத் தந்தது. ஆசைதீரக் குளித்தேன். குளித்து முடிந்து வந்ததும், அருகில் வசிக்கும் இன்னொரு சித்தியும் இணைந்துகொள்ள மதிய உணவு உட்கொண்டோம். சித்தியின் சமையல் அசத்தலாக இருக்கும். கோழி, ஆடு, கத்தரிப்பொரியல், இறால்ப்பொரியல், பருப்பு என்று அட்டகாசப்படுத்தி வைத்திருந்தார். பசியொரு புறம், அவரது சமையலின் சுவை இன்னொருபுறம் என்று ஆகிவிட இருமுறை போட்டுச் சாப்பிடாயிற்று. மாம்பழம் வெட்டிவைத்திருந்தார். அதையும் ருசித்தாயிற்று. தொடர்ந்து கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தோம். "இண்டைக்கு இங்கதானே நிற்கிறாய்?" என்று சித்தி கேட்கவும், "இல்லைச் சித்தி உங்களையும் மற்றச் சித்தியையும் கூட்டிக்கொண்டு சிஸ்ட்டர் அன்ராவைப் பாக்கப் போயிட்டு, நீங்கள் திரும்பி வாங்கோ, நான் யாழ்ப்பாணத்திலை நிற்கிறன்" என்று சொன்னேன். அவருக்கு அது அவ்வளவாக மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. "ஏன், நிக்கிறன் எண்டுதானே சொன்னனீ? இப்ப ஏன் இல்லையெண்டுறாய்?" என்று மீண்டும் கேட்டார். "இல்லைச் சித்தி, நாளைக்கு வன்னிக்குப் போறதெண்டு நெய்ச்சிருக்கிறன். இங்க நிண்டுட்டு நாளைக்குக் காலையில யாழ்ப்பாணம் போய் பிறகு வன்னிக்குப் போறதெண்டால் நேரம் காணாது. அடுத்த‌நாள் கொழும்புக்கும் போறன், குறை நெய்க்காதேங்கோ" என்று கூறினேன். அதன்பிறகு, "உன்ர" விருப்பம் என்று விட்டுவிட்டார். மாலை 4:30 மணிக்கு சித்தியின் வீட்டிற்கு அருகில் சொந்தப் பாவனைக்கென்று ஓட்டோ ஒன்றினை வைத்திருக்கும் நண்பர் ஒருவரை எம்மை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டோம். நண்பர் ஆதலால் யாழ்ப்பாணம் போய்வர 3500 ரூபாய்கள் மட்டுமே கேட்டார். நியாயமான விலைதான். கடும் மழை பெய்யத் தொடங்கியது. முன்னால் செல்லும் வாகனத்தைப் பார்க்க முடியாதளவிற்கு மழை. ஓட்டோவின் இருபக்கத்திலும் இருந்த ரப்பர் சீலையினை சாரதி இறக்கிவிட்டார். மெதுமெதுவாக யாழ்ப்பாணம் நோக்கிய எமது ஓட்டோப் பயணம் ஆரம்பித்தது. வழிநெடுகிலும் அவருடன் பேச்சுக்கொடுத்துக்கொண்டு வந்தேன். நான் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறேன் என்பதால் இடங்கள் குறித்து எனக்கு அவ்வளவாகத் தெரியாது என்று நினைத்திருக்கலாம். ஆகவே, வழியில் பலவிடங்களின் பெயர்களைக் கூறிக்கொண்டு வந்தார், நானும் தெரியாவர் போல்க் கேட்டுக்கொண்டு வந்தேன். ஊரில் உள்ள பிரச்சினைகள், அரசாங்கம், இளைஞர்கள் என்று பலவிடயங்கள் குறித்துக் கூறினார். கலியாணக் கொண்டாட்டங்கள், வெளிநாட்டுக் காசு படுத்தும் பாடு என்றும் அலசப்பட்டன. சித்திமார் இருவரும் அமைதியாக இருக்க நாங்கள் இருவரும் பேசிக்கொண்டே வந்தோம்.
  43. படம் 1 ‍& 2 பண்ணைப் பாலத்தின் கரை படம் 2 : நல்லூர் முருகன் கோவில் இரவு வெளிச்சத்தில் படம் 3 & 4 : நாவற்குழி கேரதீவு மன்னார் வீதி படம் 5 : மாவீரர் நாள் அலங்காரம் படம் 6: கார்த்திகை விளக்கீடு ஜெயாவின் வீட்டில் படம் 7 : வெள்ள‌டியான் சண்டை சேவல் படம் 8 :அக்கராயன் விருந்தினர் விடுதி படம் 9 : கரவெட்டியில் அம்மம்மா வீடு
  44. மாலை ஆறு மணிக்கு எழுந்திருப்போம் என்று நினைக்கிறேன். இன்னமும் வெளிச்சம் இருந்தது. வீட்டின் வெளிப்பகுதியிலிருந்து பேசத் தொடங்கினோம். கொழும்பில் கல்விகற்ற நாட்களில் நடந்தவை, தெரிந்த நண்பர்கள் பற்றிய விபரங்கள், அந்தநாள்க் காதல்கள், குடும்ப வாழ்க்கை என்று பல விடயங்கள் அலசப்பட்டன. நண்பர்களுடனான தனி விடுமுறைக் காலங்கள் குறித்துப் பேச வேண்டும். நாம் நாமாக இருப்பது நண்பர்களுடன் இருக்கும் வேளையில் மட்டும் தான் என்று நான் நினைப்பதுண்டு. எந்த விடயத்தையும் ஒளிவு மறைவின்றி, வெளிப்படையாக, கூச்சமின்றி, என்னைப்பற்றி என்ன நினைப்பான் என்கிற சிறிய அச்சமும் இன்றி எந்த விடயத்தையும் பேசமுடியும். உங்களுக்கு இதில் மாற்றுக் கருத்துக்களிருக்கலாம். ஆனால், நான் உணர்ந்துகொண்டது இதைத்தான். ஆகவே, பல விடயங்களை ஒளிவுறைவின்றிப் பேசினோம். ஏமாற்றங்கள், துரோகங்கள், வஞ்சனைகள், பிணக்குகள் கூட சம்பாஷணைகளில் வந்துபோயின. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிக்கிடும்போது ராசா அண்ணையையும் கூடிவரலாம் என்றே ஆரம்பத்தில் நண்பன் சொன்னான். அவருடன் பேசிக்கொண்டிருந்தால் நேரம் போவது கூடத் தெரியாது, ஆகவே நானும் உடனேயே ஓம் என்று கூறிவிட்டேன். ஆனால், உரும்பிராயிலிருந்து கிளம்பும்போது எமது முடிவை மாற்றிக்கொண்டோம். "மச்சான், அண்ணை வந்தால் எங்களால சுதந்திரமாக் கதைக்கேலாது. நீ அவரோட ஊர்க்கதை பேசிக்கொண்டிருப்பாய், அவர் நிக்கட்டும், நாங்கள் போட்டு வருவம். அவர் நாளைக்கு நாளண்டைக்கு எப்படியும் அங்க போவார்" என்று கூறவும் நானும் சரியென்றேன். ஆக, இந்தப் பயணம் நானும் நண்பனும் மட்டும் எமது கடந்தகால வாழ்க்கையை அலச, எடைபோட, சுக துக்கங்களை அலச நடத்தப்பட்டது என்றே வைத்துக்கொள்ளலாம். சிட்னியிலிருந்து கிளம்பும்போது "நீங்கள் பச்சுலர்ஸ் பாட்டிக்குத்தான் போறியள்" என்று சொல்லப்பட்ட குற்றச்சாட்டை ஓரளவிற்கு உறுதிப்படுத்தியிருக்கிறது அக்கராயன் நோக்கிய எனது பயணம் என்றும் எடுத்துக் கொள்ளலாம். நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தபின்னர் 9 மணியளவில் இரவுணவு ஆயத்தமாகியிருந்தது. தேங்காய்ப்பூ பிசைந்த மா ரொட்டி. கூடவே கோழிக்கறி. அருமையான சாப்பாடு. பேசியபடியே இரவுணவை முடித்தோம். இருள் படர்ந்த இரவு, சுற்றியிருக்கும் மரங்களில் கூடுகளுக்குள் அடைக்கலாமிவிட்ட குருவிகளின் இரைச்சல். இடைக்கிடையே கிளைகள் வழியே தாவித் திரிந்த குரங்குகள், இடைவிடாது இரைச்சலிட்டுக் கொண்டிருந்த சில்வண்டுகள், இவை எல்லாவற்றிற்கிடையிலும் தொலைவில் கேட்ட புகையிரதச் சத்தம் என்று பல வருடங்களுக்குப் பின்னர் நகரத்தின் சலசலப்பும், அவசரமும் இன்றி, சிட்னியிலிருந்து வெகு தூரத்தில், மறுநாள் பற்றிய எந்தக் கவலையுமின்றி ஒரு இரவை முற்றாக உணரவும் அனுபவிக்கவும் முடிந்தது. 10 மணியளவில் தூங்கியிருப்போம். காலை 5 மணிக்கே தூக்கம் கலைந்துவிட்டது. வழமைபோல நண்பனுக்கு சிரமம் கொடுக்காது காலைக்கடன்களை முடித்துவரலாம் என்று கிளம்பினேன். வெளியில் வெளிச்சம் மெதுமெதுவாகப் பரவிக்கொண்டிருந்தது. காலைக்கடன் முடித்து, குளித்துவிட்டு வெளியே வரும்போது அந்த அம்மா காப்பி கொண்டுவந்திருந்தார். குடித்துக்கொண்டிருக்க நண்பன் எழும்பிவந்தான். "எப்படி நித்திரை?" என்று கேட்டேன். "மச்சான், சொன்னால்க் குறைநெய்க்கக் கூடாது, நல்லாத்தான் குறட்டை விடுறாய் நீ" என்று சொன்னதும் தூக்கிவாரிப்போட்டது எனக்கு. அட, இங்கையுமா? கடந்த சில‌ மாதங்களாக நித்திரை கொள்வதென்பது என்னைப்பொறுத்தவரையில் ஒரு பிரச்சினையாகவே மாறியிருந்தது. இரண்டு, மூன்று மணித்தியாலங்கள் தூங்கினாலே போதும் என்கிற நிலையில்த்தான் நான் இருந்து வருகிறேன். யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் ஒழுங்குகள் செய்யத் தொடங்கிய நாளிலிருந்து இருந்த நித்திரையும் காணாமற் போய்விட்டிருந்தது. விமானத்தில் தூக்கம் வராது என்பதனால் சில நாட்களாகவே தூங்குவதென்பது பெரிய பிரச்சினையாக மாறிப்போயிருந்தது. ஆகவேதான், அக்கராயனில் தங்கிய இரவன்று அசதியில் நன்றாகவே நான் தூங்கியிருக்க வேண்டும். அது நண்பனின் தூக்கத்தைக் கலைத்துப் போட்டு விட்டது. காலை சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியது. காலையுணவு இடியப்பமும் சொதியும். அவசர அவசரமாகச் சாப்பிட்டு விட்டு கிளம்புவதற்குத் தயாரானோம். நண்பனின் மோட்டார்ச் சைக்கிள் வியாபார ஸ்த்தாபனம் யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் அமைந்திருக்கிறது. அடிக்கடி தொலைபேசியில் நிலையத்தின் ஊழியர்களைத் தொடர்புகொண்டு அலுவல்கள் கிரமமாக நடப்பதை உறுதிப்படுத்திக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது. மேலும், ஒருநாள் என்னுடன் செலவிட்டதனால் காலையிலேயே நிலையத்திற்குச் சென்று காரியங்களை மேற்பார்வை செய்ய நினைத்திருக்கலாம். "உன்ர பிளான் என்ன?" என்று கேட்டான். "கரவெட்டிக்குப் போய், மற்றைய இரண்டு சித்திமாரையும் கூட்டிக்கொண்டு சிஸ்ட்டர் அன்ராவிடம் போய்வரவேண்டும். இண்டைக்கு அதுமட்டும்தான்" என்று கூறினேன். தோட்டத்தில் கிடந்த தேங்காய்கள் சிலவற்றை அங்கிருந்தவர்கள் உரித்து காரில் வைத்தார்கள். அவற்றையும் எடுத்துக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்டோம். அக்கராயன் வந்த அதே பாதை வழியே திரும்பினோம். முன்னைநாள் மாலை மாவீரர் தினம் நடைபெற்ற கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் மீண்டும் அநாதரவாகக் கிடந்தது. சுற்றிவரக் கொடிகள் இன்னும் அசைந்துகொண்டிருக்க, மக்களின்றி அமைதியாகக் கிடந்தது. முதள்நாள் கண்ட தென்னங்கன்றுகளும் காணாமற் போயிருந்தன. அக்கராயனிலிருந்து கிளிநொச்சி வரையிலான வீதிகளில் பல விடங்களில் மாவீரர்தின ஏற்பாடுகளின் மிச்ச சொச்சங்களை காலையிலும் காண முடிந்தது. மன்னார் பூநகரி நாவற்குழி பாதை வழியே யாழ்ப்பாணம் திரும்பினோம். இடையில் நிற்கும் எண்ணம் இருக்கவில்லை. முடிந்தளவிற்கு வேகமாகவே வண்டி பயணித்தது. காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் நண்பன் என்னை இறக்கிவிட, கன்னாதிட்டி வீதி நோக்கி நடக்கத் தொடங்கினேன்.
  45. கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திலிருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவிலேயே அக்கராயன் பகுதி வருகிறது. நான் ஏற்கனவே குறிப்பிட்ட எழில்மிகுந்த சாலையும் இப்பகுதியிலேயே இருக்கிறது. பிற்பகல் 3 மணியளவில் அக்கராயனில் அமைந்திருக்கும் நண்பனின் குடும்பத்திற்குச் சொந்தமான கமத்தினை அடைந்தோம். 90 ஏக்கர்கள் வயற்காணியும், தோட்டக்காணியும் கொண்ட பாரிய காணித்தொகுதி அது. நண்பனின் சகோதரர்கள் அனைவருக்கும் இங்கே காணித்துண்டுகள் அவர்களது தந்தையினால் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன. வயல்கள் விதைக்கப்பட்டிருந்தன. அண்மையில் பெய்த கடும் மழையினால் வயல்களுக்குள் வெள்ளம் நிற்பது தெரிந்தது. நண்பனின் கமத்தில் பணிபுரிவோர் அடுத்த மழை ஆரம்பிக்கும் முன்னர் மருந்தடிக்கும் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. அவ்வாறே தோட்டக் காணிகளில் தென்னை மரங்களும் பழம் தரும் மரங்களும் காணப்பட்டன. சூரிய வெளிச்சம் நிலத்தில் விழுவதே அரிதாகும் அளவிற்கு அக்காணி சோலைபோன்று காட்சியளித்தது. மரமுந்திரிகை, தேக்கு மரங்களும் வரிசைக்கு நேர்த்தியாக நடப்பட்டிருந்தது. நண்பனின் சகோதரகள் அடிக்கடி இங்கு வந்து தங்கிச் செல்வதுண்டு, குறிப்பாக வெளிநாட்டில் வசிப்போர். விருந்தாளிகள் வந்தால் தங்குவதற்கென்று சகல வசதிகளுடனும் கூடிய விருந்தினர் மாளிகை ஒன்றினை அவர்கள் கட்டியிருந்தார்கள். மேற்கத்தைய பாணியில் அமைக்கப்பட்ட குளியல் அறைகள், கழிவறைகள், விருந்தினர் மண்டபம், படுக்கையறைகள் என்று நகரப்பகுதியில் இருந்து தொலைவாக அமைந்திருக்கும் ஒரு விவசாயக் கிராமத்தில் இவ்வாறான வசதிகளுடன் கூடிய விருந்தினர் மாளிகையினைக் காண்பது அருமையே. இந்த விருந்தினர் தங்குமிடத்தைப் பராமரிக்கவும், வயற்காணிகளையும், தோட்டக்காணிகளையும் பராமரிக்கவும் என்று சில பணியாளர்கள் இங்கே வசித்துவந்தனர். அவர்களுக்கென்று தனியான வீடுகளும் அங்கே கட்டப்பட்டிருந்தன. நாம் செல்லும் வழியில் கிளிநொச்சி நகரில் இருந்த அங்காடியொன்றிலிருந்து மீன்கள் சிலவற்றையும், இறால்களையும் வாங்கிச் சென்றிருந்தோம். நண்பனின் விருந்தினர் தங்குமிடத்தைப் பராமரிக்கும் அம்மா ஒருவர் அவற்றைத் துப்பரவு செய்து சமைக்கத் தொடங்கினார். சற்று ஓய்வெடுத்தபின், கமத்தில் இருந்த கிணற்றில் குளித்துவிட்டு சுற்றவர இருக்கும் காணிகளைப் பார்ப்பதற்கு நடந்துசென்றோம். நண்பனின் சகோதர்களின் காணிகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டவை. சிலவற்றில் எல்லைகளே காணப்படவில்லை. இடையிடையே செல்லும் குறுக்கு வீதிகள் அவற்றை பிரித்துச் சென்றபோதும், அவை அனைத்துமே ஒரே பணியாளர்களால் பராமரிக்கப்பட்டு வந்தன. இக்காணிகளில் இருந்த பனை மற்றும் தேக்கு மரங்களில் மயில்கள் இருப்பதைக் கண்ணுற்றேன். மயில் இங்கு அடிக்கடி காணப்படும் ஒரு பறவை. அப்பகுதியில் எங்கேயோ ஒரு மூலையில் இருந்து மயில் அகவுவது கேட்டுக்கொண்டே இருக்கும். அக்காணிகளை அண்டிய வீடொன்றிற்குச் சென்றோம். நன்கு பரீட்சயமானவர்கள். அவ்வீட்டில் வசிக்கும் இளைஞன் ஒருவன் சண்டைக்கு வளர்க்கும் வெள்ளடியான் சேவல்களை வைத்திருந்தார். குறைந்தது 80 இலிருந்து ‍ 100 வரையான சேவல்களும், குஞ்சுகளும் அவரிடம் இருந்தன. தமக்குள் சண்டைபிடிக்கும் சேவல்களைத் தனியாகப் பிடித்து அடைத்து வைத்திருந்தார்கள். இப்போதும் சண்டைக்கு சேவல்களை வளர்க்கும் வ‌ழக்கம் இருக்கிறதா என்று கேட்டபோது, ஆம், ஆட்கள் வந்து வாங்கிச் செல்வார்கள். கறிக்கும் எடுப்பது உண்டு என்று அந்த இளைஞன் கூறினார். அப்படியே காணிகளிருந்து வெளியே வந்து வீதிக்கு ஏறினோம். அதுதான் ராசா அண்ணை மரம் நட்டு வளர்த்த வீதி. வீதியின் ஒரு எல்லையிலிருந்து மற்றைய எல்லைக்கு நடந்து சென்று சுற்றவர இருக்கும் வயற்காணிகளைக் கண்டு களித்தோம். இடையிடையே புகைப்படங்கள், செல்பிகள். வீதிக்குச் சமாந்தரமாக ஓடிக்கொண்டிருக்கும் வாய்க்காலுக்கு மேலாக சீமேந்தினால் பாலம் ஒன்றைக் கட்டியே நண்பனின் வீட்டிற்குச் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டிருந்தது. அக்கட்டிலிருந்து சிறிது நேரம் பழங்கதை பேசினோம். சிறிதுநேரம் பேசிக்கொண்டிருக்கப் பசியெடுத்தது. நாம் கொண்டுவந்திருந்த மீன், இறால் என்பவற்றைக் குழம்பாக வைத்திருந்தார் அந்த அம்மா. அவற்றுடன் கரட் சம்பலும், உருளைக்கிழங்குக் கறியும் பரிமாறப்பட்டது. வீட்டுக்கிணற்றில் ஆசைதீர குளித்த குளியலும், தோட்டக்காணிகளைச் சுற்றிவர நடந்த நடையும் களைப்பினையும் பசியினையும் ஒருங்கே ஏற்படுத்தியிருக்க வயிறார உண்டோம். தோட்டத்தில் காய்த்த பப்பாளிப்பழமும், வாழைப்பழமும் கொண்டுவந்தார்கள். சிறிது நேரத்தில் களைப்பு மிகுதியால் தூங்கிப்போனோம்.
  46. காலை 8 மணியிருக்கும். தான் கூறியதுபோலவே மைத்துனரின் வீட்டு வாயிலில் நண்பனது கார் வந்து நின்றது. "வெளிக்கிட்டியாடா?" என்று நண்பன் தொலைபேசியில் கேட்டான். "ஓம், வாறன்" என்று சொல்லிவிட்டு மைத்துனரின் வீட்டிலும் விடைபெற்று கிளம்பினேன். ஆனைப்பந்தியூடாக, பலாலி வீதியை குறுக்கறுத்து பருத்தித்துறை வீதியில் ஏறினோம். பருத்தித்துறை வீதியில் நல்லூருக்கு அண்மையில் ஒரு அசைவக உணவகம். காலைச்சாப்பட்டிற்காக வண்டியை நிறுத்தி வாங்கிக்கொண்டோம். சுடச்சுட பட்டீஸும், ரோல்ஸும். அருமை. ஒரு பை நிறைய வாங்கிக்கொண்டு வந்தான். பயணம் முழுதற்கும் என்று யோசித்திருக்கலாம். மீண்டும் பலாலி வீதியில் வண்டி ஏறியது. தின்னைவேலி, பாமர்ஸ் ஸ்கூல், கோண்டாவில்ச் சந்தி, டிப்போவடி என்று நான் சிறுவயதில் தவழ்ந்து திரிந்த வீதிகளும் ஊர்களும் நண்பனது வாகனத்தில் பயணிக்கும்போது சடுதியாகத் தோன்றி மறைந்தது போலவும், வீதிகள் சுருங்கிவிட்டது போலவும் ஒர் உணர்வு. இந்தவிடங்கள் எல்லாவற்றிலும் நிறையவே நினைவுகள் கலந்திருக்கின்றன. பசுமரத்தாணி போல என்று சொல்வார்களே? அதுபோல. என்றும் பசுமையான நினைவுகள். எளிதில் எழுத்தில் வடித்துவிடமுடியாதவை. ஆதலால் தொடர்ந்து செல்கிறேன். சிட்னியிலிருக்கும் நண்பர் ஒருவரது தகப்பனாரைப் பார்ப்பதே உரும்பிராய்ப் பயணத்தின் நோக்கம். ஊரில் பிரபல வர்த்தகரான அவர் அண்மைக்காலமாகச் சற்று சுகயீனமற்று இருந்தார். அவரது உடல்நிலை குறித்த கவலைகள் நண்பருக்கு இருந்து வருகின்றன‌. ஆகவே நான் யாழ்ப்பாணம் போகிறேன் என்று கேள்விப்பட்டதும், "ஒருக்கால்ப்போய் அப்பாவையும் பார்த்துவிட்டு வரமுடியுமா?" என்று கேட்டபோது ஆமென்றேன். டிப்போவடி தாண்டியதும் வரும் சிற்றொழுங்கையில் வீடு. விசாலமான இரண்டுமாடிக் கட்டடம். ஒழுங்கையினிரு மரங்கிலும் கமுக மரங்கள் ஓங்கி வளர்ந்திருக்க, வீட்டைச் சுற்றி சோலைபோன்று மரங்கள் நடப்பட்டிருந்த அமைதியான அழகான வீடு. நண்பன் தான் வாகனத்திலேயெ இருப்பதாகக்கூறிவிட நான் உள்ளே சென்றேன். என்னை முதன்முதலாகப்பார்ப்பதால் அவர் அதிகம் பேசவில்லை. பலவீனமாகத் தெரிந்தார். சிறிதுநேரம் மட்டுமே அவரால் வெளியில் வந்து அமர்ந்துகொள்ள முடிந்தது. "தம்பி, எனக்கு இப்படி கனநேரம் இருக்கேலாது, நான் உள்ளுக்கை போகப்போகிறேன், இருந்து தேத்தண்ணி ஏதாச்சும் குடிச்சுப்போட்டு போம்" என்று சொன்னார். "இல்லை அங்கிள் உங்களை பார்க்கத்தான் வந்தேன். நீங்கள் உள்ளுக்கைபோங்கோ, முடிந்தால் கொழும்பு போகுமுன் இன்னொருமுறை வந்து சந்திக்கிறேன்" என்று கூறிவிட்டுக் கிளம்பினேன். உரும்பிராயிலிருந்து பலாலி வீதியூடாக கோண்டாவில்ச் சந்திநோக்கிச் சென்றோம். அங்கிருந்து இடதுபுறம் திரும்பி இருபாலை, பின்னர் செம்மணிப் பகுதியூடாகச் சென்று கண்டிவீதியில் ஏறினோம். செம்மணி பற்றி 80 களிலும் 1995 இலும் நாம் கேள்விப்பாடிருக்கிறோம். புளொட் அமைப்பின் ஆரம்பகால உள்வீட்டுப்பிரச்சினைகளின்போதும் பின்னர் கிருசாந்தி குமாரசாமி மற்றும் அவரது தாய், சகோதரர், உறவினர் ஆகியோரின் படுகொலைகளின் போதும் இப்பெயர் தமிழர்களுக்கு மிகுந்த பரீட்சயமாகிப்போனது. செம்மணிச் சுடலையூடாக வரும்போது, "இதுதான் மச்சான் செம்மணிச் சுடலை, இங்கதான் கிருசாந்தியையும் மற்ற ஆக்களையும் கொண்டு புதைத்தவங்கள்" என்று நண்பன் கூறிக்கொண்டு வந்தான். கண்டிவீதிவழியாக பூநகரி நோக்கித் திரும்பி பயணிக்கத் தொடங்கியது நண்பனின் வாகனம். பூநகரி என்று கேள்விப்படும்போதெல்லாம் 1993 இல் புலிகள் நடத்திய தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையும் நாகதேவந்துறை என்கிற பெயரும் என்னால் தவிர்க்கமுடியாமல் மனதில் வந்துபோகிறது. பூநகரியின் புதிய பாலத்தினூடு வரும்போது இருவகையான உணர்வுகள். முதலாவது தமிழ்மக்களின் பயணம் இப்பகுதியில் சற்று இலகுவாக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது, எம்மீதான இனக்கொலை புரிந்தவர்கள் கட்டியிருக்கும் இப்பாலத்தில் நாம் பயணிக்கிறோம் என்பது. மக்களுக்கு இப்போது எது தேவையானதோ, அது இருந்தால்ப் போதும் என்று மனதை ஆறுதல்ப்படுத்திக்கொண்டேன். மப்பும் மந்தாரமுமாக இருந்த அந்த முற்பகல் வேளையில், சனநடமாட்டம் இல்லாத அப்பாதையில் நண்பன் 130 - 140 வேகத்தில் வாகனத்தைச் செலுத்திக்கொண்டு சென்றான். சிறுவயதில் இருந்தே காரோட்டுவதில் நன்கு பரீட்சயமானவன். ஆகவே, அவனது திறமையில் முழு நம்பிக்கை வைத்து இருக்கையில் அட்டை போல ஒட்டிக்கொண்டேன். பாலம் கடந்து இருமருங்கிலும் அண்மையில் பெய்த வெள்ளத்தில் வழிந்தோடாது இன்னும் மிச்சமாய் இருக்கும் நீர் வீதியின் ஓரங்களில் தரித்து நிற்க, பனை வடலிகளும், பற்றைகளும் செழித்து வளர்ந்து நிற்க, நன் இதுவரை வந்திராத தாயகத்தின் ஒரு பகுதியூடாகச் சென்றுகொண்டிருந்தேன், நண்பனின் அனுக்கிரகத்தில். யாழ்ப்பாணத்தில் நான் வாழ்ந்த 7 வருடங்களில் குடாநாட்டைத் தவிர வேறு எந்தப் பகுதிகளுக்கும் சென்றது கிடையாது. அதற்கான தேவையும் அப்போது இருந்ததில்லை. ஆகவே, தாயகத்தில் கிட்டத்தட்ட 90 வீதமான பகுதிகள் நான் வாழ்நாளில் பார்க்காதவை. எனவேதான் அக்கராயன் நோக்கிய பயணத்தில் எல்லாமே புதிய இடங்களாக எனக்குத் தெரிந்தது. நாவற்குழி - கேரதீவு - மன்னார் வீதியிலிருந்து விலகி கிளிநொச்சி நோக்கிப் பயணித்தோம். இந்த வீதியின் இருமருங்கிலும் தெரிந்த இயற்கை அழகு அபரிமிதமானது. சிட்னியில் சில இடங்கள் பார்க்கும்போது அழகாக இருப்பதாகத் தோன்றும். ஆகா ஓகோ என்று செயற்கையாகப் புகழ்ந்துந்துகொள்கிறோம் என்றுகூட நினைப்பதுண்டு. ஆனால், தாயகத்தில் இருக்குமிந்த அழகையெல்லாம் பார்க்க மறந்துவிட்டோமே என்று பெரிய ஏக்கம் வந்துபோனது. அத்துடன் நான் இங்கு இருக்கப்போவது ஓரிரு நாட்களுக்கு மட்டுமே என்று நினைத்தபோது ஏக்கமும் சேர்ந்துகொண்டது. தாயகத்தில் வாழும் மக்கள்பேறுபெற்றவர்கள் என்று நான் நினைப்பதற்கு இந்த இயற்கை அழகும் இன்னொரு காரணம். ஒருவாறு கிளிநொச்சி நகரை அடைந்தோம். நகரே விழாக்கோலம் பூண்டிருந்தது. அன்று மாவீரர் நாள். கண்டி - யாழ்ப்பாணம் பிரதான வீதியிலும், அவ்வீதியிலிருந்து கனகபுரம், அக்கராயன் நோக்கிச் செல்லும் வீதியிலும், வீதியின் மேலாகக் கம்பீரமாக அலங்கரிக்கப்பட்டிருந்த வளைவுத் தோரணம் "மாவீரர் நாள் 2023" என்று சொல்லிற்று. ஆக்கிரமிப்பாளனின் ஏதோவொரு படைத் தலைமையகம் முன்னால் இருக்க, மாவீரர் நாள் அனுஷ்ட்டிக்கப்படும் கொட்டகைகளும், வளைவுகளும், தோரணங்களும் அப்பகுதியெங்கிலும் சிவப்பு மஞ்சள் வர்ணத்தை அள்ளித் தெளித்திருந்தன‌. எமது விடுதலை வீரர்களை அழித்துவிட்டோம், எச்சங்களையும் தோண்டி எறிந்துவிட்டோம் என்று ஆக்கிரமிப்பாளன் கொக்கரித்து வந்தபோதும் மக்களின் மனங்களில் அவர்கள் இன்னும் வாழ்கிறார்கள் என்பதற்கு நான் அன்று பார்த்த காட்சிகள் சாட்சியம். மாவீரர் நாள் வளைவுகளூடாக நாம் பயணிக்கும்போது அவற்றை முடிந்தளவு படமாக்கிகொண்டேன். "மச்சான் , கவனம், பாத்தெடு. உன்ர போனை நோண்டினாங்கள் என்டால் பிரச்சினை வரலாம்" என்று நண்பன் கூறவும், "உவ்வளவு சனம் நிண்டு அவனுக்கு முன்னாலை உதைச் செய்யுது?" என்று கேட்டேன். "ஆருக்குத் தெரியும், பிரச்சினை குடுக்கிறதெண்டால் குடுப்பாங்களடா" என்று பதில் வந்தது. கிளிநொச்சியிலிருந்து அக்கராயன் போகும் வீதியில்த்தான் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் வருகிறது. நாம் அவ்விடத்தை அடையும்போது மாலையாகிவிட்டிருந்தது. மாவீரர் துயிலும் இல்லம் ஆக்கிரமிப்பாளனினால் அழிக்கப்பட்டபோது மாவீரர் கல்லறைகள் தோண்டப்பட்டு, நடுகற்கள் உடைத்தெறியப்பட்டிருந்தன. ஆனால், தொடர்ந்து வந்த வருடங்களில் அப்பகுதி மக்கள் துயிலும் இல்லத்தைப் புணரமைத்து, நடுகற்களைச் சேகரித்து ஒரு மலைபோல குவித்து வைத்திருந்தார்கள். அக்குவியலின் அடிவாரத்திலிருக்கும் இன்னும் முற்றாக உடையாத நடுகற்களில் மாவீரரது பெய‌ர்கள் உச்சரித்துக்கோன்டிருந்தன. இவற்றோடு அந்தத் துயிலும் இல்லம் எங்கும் மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கவென தென்னங்கன்றுகள் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தன. அப்பகுதியெங்கும் வீதிகளும், வளைவுகள் மஞ்சள் சிவக்கு நிறக் கொடிகளில் அலங்கரிக்கப்பட்டிருக்க, தேசம் எழுச்சி பெற்று நின்ற‌து போன்ற உணர்வு. கனகபுரம் மாவீரர் துயிலும் இல்ல வாயிலில் பெருத்த சனக்கூட்டம். நிகழ்வுள் ஆரம்பிக்கப்பட இன்னும் பல மணித்தியாலங்கள் இருக்கவே மக்கள் பெருவாரியாக அப்பகுதிக்கு வந்துகொண்டிருந்தார்கள். மழை தூரத் தொடங்கியிருந்தது. ஆனால் மக்கள் வெள்ளமும் குறையவில்லை. அக்கூட்டத்தைப் படமெடுக்கவென ஒரு சிலர் வீதியின் எதிர்க்கரையில் நின்றுகொண்டிருந்ததைக் காணக்கூடியதாய் இருந்தது. அவர்கள் எமது மக்களில்லை என்பதும் தெளிவாகத் தெரிந்தது. எனது தம்பியின் பூதவுடலும் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திலேயே விதைக்கப்பட்டதாக அறிந்தேன். துயிலும் இல்லத்தைக்கடந்து கார் மெதுவாகச் சென்றுகொண்டிருக்கும்போது அவனுக்காகவும் இன்னும் மரணித்த ஆயிரமாயிரம் மாவீரகளுக்காகவும் மனம் வேண்டிக்கொண்டது. இப்போதைக்கு இதைத்தவிர வேறு என்னதான் செய்ய முடியும் என்னைப்போன்றவர்களா? உங்கள் கனவுகள் வீண்போகாது என்று மனதிற்குள் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டேன். வீண்போகக்கூடாது.
  47. மக்கள், பாமரர்- இன்று December 29, 2023 அறிவியக்கத்தில் செயல்படுவதில் ஓர் அடிப்படையான சிக்கல் உள்ளது. அதை ஒவ்வொரு நாளும் நடைமுறையில் நாம் சந்தித்தாலும் தெளிவாக உணர்ந்திருப்பதில்லை. நேற்றைய அறிவியக்கம் அதன் முழு ஆற்றலுடன் சில கருத்துக்களை விவாதித்து சமூகமனதில் நிறுவுகிறது. இன்றைய சமூகத்தில் சிந்தனையின் அடித்தளமாகவே அவை மாறிவிட்டிருக்கும். ஆனால் இன்றைய அறிவியக்கம் அக்கருத்துக்களின் போதாமையை உணர்ந்து முன்னகரும். அவற்றை வளர்க்கவும், மாற்றியமைக்கவும் முயலும். அப்போது அந்த முன்னகர்வுக்கு முதல் தடை என பெருகி முன்வந்து நிற்பவை சென்றகால அறிவியக்கம் உருவாக்கிய சிந்தனைகளாகவே இருக்கும். ‘அரசியல்சரிநிலை‘கள் என நாம் இன்று சொல்பவை எல்லாம் நேற்று சமூகத்தைச் சீண்டிய, கொந்தளிக்கச் செய்த புதிய சிந்தனைகளாக முன்வைக்கப்பட்டவை. கடும் எதிர்ப்பைச் சந்தித்தவை. மெல்லமெல்ல தங்களை நிறுவிக்கொண்டவை. இன்று அவை பொதுமக்களில் ஓரளவு சிந்திப்பவர்களிடம் ஆழமாக வேரூன்றியுள்ளன. அவற்றை கடந்து செல்வதே பெரும் மீறல் என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அவர்களை மீறி அச்சிந்தனைகளைக் கடந்துசென்றே ஆகவேண்டும். ‘மக்கள்’ என்னும் சொல்லின் புனிதமும் அவ்வாறாக ஒரு வகை அரசியல்சரிநிலையாக நிலைகொண்டுவிட்டது. பாமரர்களின் ‘களங்கமற்ற விழுமியங்கள்’ என்பதும் அவ்வாறே. ‘மக்கள்’ என்னும் கருத்துருவம் மானுட சிந்தனையில் பதினேழாம் நூற்றாண்டு முதல் உருவாகி வந்தது ஒரு மகத்தான முன்னகர்வு என்பதில் ஐயமில்லை. நாம் இன்று காணும் அரசியல், சமூகவியல் சூழலை உருவாக்கிய அடிப்படைச் சிந்தனையே அதுதான். ஜனநாயகம், மனிதாபிமானம், மானுட சமத்துவம், சமூகநீதி, தனிமனித உரிமை ஆகிய கொள்கைகள் எல்லாமே அதன் விளைகனிகள்தான். மக்கள் என்றால் என்ன? அவர்களிடம் அதிகாரம் எப்படி நிலைகொள்ள முடியும்? மிகச்சாமானியன் எப்படி அதிகாரத்தை கையாளக்கூடும்? பதினெட்டாம் நூற்றாண்டுச் சிந்தனையாளர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் இந்த வினாக்களுக்கு விடையாக முக்கியமான நூல் ஒன்றையேனும் எழுதியிருப்பார்கள்.ஜான் ரஸ்கினின் Unto This Last ரூஸோவின் The Social Contract ஆகியவை அவ்வகையில் மகத்தான மானுட ஆவணங்களாகக் கருதப்படும் நூல்கள். அந்த அறிவியக்கம் கீழ்க்கண்ட கருத்துக்களை நிலைநாட்டியது. மக்கள் என்னும் கூட்டான சக்தியின் உள்ளக்கிடக்கையை ஒட்டியே அரசுகள் அமையவேண்டும், சட்டங்கள் அமையவேண்டும், ஒழுக்கங்களும் அறங்களும் அமையவேண்டும். மக்களின் முடிவே அறுதியானது. அந்த எண்ணம் சென்ற இரு நூற்றாண்டுகளில் வலுத்தபடியே வந்தது. ஓர் அரசியலாளர் மக்களின் உள்ளக்கிடக்கையை அறியும் ஆற்றல் கொண்டவராக இருக்கவேண்டும்.ஓர் ஆட்சியாளர் மக்களின் உள்ளக்கிடக்கையை நிறைவேற்றுபவராக திகழவேண்டும். ஒரு மக்கள்தலைவர் என்பவர் மக்களின் உள்ளக்கிடக்கையை சரியாக பிரதிநிதித்துவம் செய்பவராக அமையவேண்டும். இன்னொரு பக்கம், ஒரு தத்துவசிந்தனையாளன் மக்களின் கூட்டான உள்ளக்கிடக்கையை நோக்கிப் பேசி அதை கட்டமைப்பபவனாகத் திகழவேண்டும் என்று சொல்லப்பட்டது. ஒரு சமூகசீர்திருத்தவாதி மக்களின் கூட்டான உள்ளக்கிடக்கையை ஊடுருவி அதை மாற்றியமைப்பவனாக வேண்டும். எல்லா சிந்தனைகளும் மக்களை நோக்கியே முன்வைக்கப்படுகின்றன. எல்லா கலைகளும் மக்களை நோக்கியே முன்வைக்கப்படுகின்றன. எல்லாவற்றையும் அறிபவர்கள், எல்லாவற்றையும் மதிப்பிடுபவர்கள், எல்லாவற்றையும் ஏற்பவர்கள் அல்லது மறுப்பவர்கள் மக்களே என்று கூறப்பட்டது. ஜனநாயகம் என்னும் நவீன அரசுவடிவம் நிலைகொள்ள மக்கள் என்னும் இந்தக் கருத்துருவம் மிகப்பெரிய பங்கு வகித்தது. ஆட்சியாளர்களின் கோணத்தில் வரலாற்றையும் தேசத்தையும் நிலத்தையும் சமூகத்தையும் பண்பாட்டையும் எல்லாம் மக்கள்த்திரளாக பார்க்க அது வழியமைத்தது. தனிமனிதர்களின் கோணத்தில் ஒவ்வொருவரும் தங்களை மக்கள் என்ற பேருருவ அமைப்பின் ஒரு துளியாக உணர வழியமைத்தது. தாங்கள் எவ்வளவு சாமானியராயினும் மக்கள் என்ற அமைப்பின் ஒரு பகுதி என்னும் நிலையில் உரிமைகளைக் கோரவும், போராடவும் ஆற்றல்கொண்டவர்கள் என்ற எண்ணத்தை அது ஒவ்வொருவரிடமும் உருவாக்கியது. இந்த இருமுனை நம்பிக்கையே ஜனநாயகத்தின் ஆதாரம். உலகமெங்கும் ஜனநாயக இயக்கங்கள் உருவாயின. ஜனநாயக அரசுகள் உருவாயின. அவை மக்கள் என்னும் கருத்துருவை வளர்த்துக்கொண்டே சென்றன. முன்பு தமிழில் நாம் இன்று சொல்லும் பொருளில் மக்கள் என்னும் சொல்லே இல்லை என்பதை நாம் கவனிக்கவேண்டும். மக்கள் என்னும் சொல் மைந்தர்கள் என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்ட ஒன்று. குறிப்பிட்ட ஒரு திரளைச் சொல்ல மாக்கள் என்னும் சொல் பயன்படுத்தப்பட்டது. சென்ற நூறாண்டுகளில் மக்கள் என்னும் அச்சொல் எப்படியெல்லாம் திரண்டு பொருள்கொண்டிருக்கிறது என்று பாருங்கள். ‘பெருமக்கள்’ என்னும் சொல் முன்பு சான்றோரை குறிக்க பயன்பட்டது. இன்று அது அனைத்து மக்களையும் குறிக்கிறது. அரசியல்கட்சிகளின் பெயர்களில் மக்கள் உள்ளது. வணிகநிறுவனங்களின் பெயர்களில் மக்கள் உள்ளது. மக்கள் திலகம், மக்கள் செல்வன், மக்கள் நீதி மையம், மக்கள் டிவி… எல்லா அரசியல்பேருரைகளும் எல்லா விளம்பரங்களும் மக்கள் மக்கள் என்றே பேசுகின்றன. மக்களால் ஏற்கப்பட்டுவிட்டால் அதன்பின் விவாதத்திற்கே இடமில்லை. அது உண்மை, அது சரியானது, அது தேவையானது, அது மாறாதது. ‘மக்கள் ஏற்றுக்கொண்டாயிற்று, அதற்குமேல் என்ன?’ என்ற பேச்சு நம் காதில் விழாத நாளே இல்லை. ஓர் ஊழல் அரசியல்வாதி தேர்தலில் வென்றுவிட்டால் உடனே அந்த வரி வந்து நிற்கிறது, ‘மக்களே சொல்லிவிட்டார்கள்’ ஜனநாயகம் உருவானபோது கூடவே உருவான வேறு இரு அமைப்புகள் ஜனநாயகத்தில் மிகப்பெரிய செல்வாக்கைச் செலுத்தின. ஒன்று, பொதுக்கல்வி. இரண்டு, பொது ஊடகம். இரண்டுமே நவீனத் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொண்டு மிகப்பெரிய அளவில் வளர்ந்தன. பள்ளிக்கல்வி அல்லது பொதுக்கல்வி அமைப்பு அனைவருக்கும் சமானமான கல்வியை அளித்து சமானமான மனநிலைகள் கொண்ட மக்களை உருவாக்கியது. இது மக்கள் என்னும் கருத்துருவை வலிமைப்படுத்திய அம்சம். ஜனநாயகத்தின் ஆற்றலின் அடிப்படையும்கூட. நவீனக்கல்வி வழியாக உருவான ‘எழுத்தறிந்த’ சமூகம் நவீன ஊடகங்களை உருவாக்கியது. அச்சு ஊடகம் முதலில். பின்னர் வானொலி, சினிமா, தொலைக்காட்சி போன்ற பிற மின்னூடகங்கள். தொடக்கத்தில் மிகச்சில காலம் மட்டுமே ஊடகங்கள் செய்திகளை பரப்பவேண்டும் என்னும் நோக்கம் கொண்டிருந்தன. அறிஞர்களும் சமூகசீர்திருத்தவாதிகளும் அரசியலாளர்களும் அவற்றை தொடங்கி நடத்தினர். மிக விரைவிலேயே செய்தி என்பது ஒரு விற்பனைப்பொருள் என ஆயிற்று. ஊடகம் என்பது ஒரு பெருந்தொழிலாக மாறியது. ஊடகம் பெருந்தொழிலாக ஆனதுமே ‘விளம்பரம்’ என்னும் புதிய ஒரு நிகழ்வு அறிமுகமாகியது. அது பொருளியலின் முக்கியமான கூறாக மாறியது. மக்களின் கருத்தை திட்டமிட்டு உருவாக்கமுடியும் என்பது கண்டறியப்பட்டது. மக்களை ஊடகங்கள் வழியாக திரட்டமுடியும், நுகர்வோராகவும் தொண்டர்களாகவும் கட்டமைக்கமுடியும் என்று நிறுவப்பட்டது. மக்கள் என்னும் சொல்லை கற்பனாவாத நெகிழ்வுடன் சொன்ன ஜனநாயக முன்னோடிகள் எவருக்குமே தெரியாத ஒரு சரித்திர முன்னகர்வு இது. இன்றைய மக்கள் என்பவர்கள் ஊடகங்களால் உருவாக்கப்பட்ட திரள். உள்ளும், புறமும். ஜனநாயக அரசுகள் உருவாகி ஒரு தலைமுறைக்குள்ளாகவே அவற்றின் தொடக்க காலகட்டத்தில் இருந்த இலட்சியவாதம் இல்லாமலாகியது. அவையும் அதிகார அரசியலாடல் கொண்டவையாக மாறின. மன்னராட்சிக்காலத்தில் அதிகாரம் போர்கள் வழியாக வந்தது. இனப்போர்கள், தேசியப்போர்கள், மதப்போர்கள். ஜனநாயகத்தில் வென்றெடுக்கப்படவேண்டியவர்கள் மக்கள் என ஆகியது. ஆகவே எல்லா போர்களும் மக்களை வெல்வதற்கானவை ஆக மாறின. போர்கள் ஊடகங்களில் நிகழலாயின. மக்களைக் கவர்பவர்களுக்கு அதிகாரம், செல்வம் எல்லாமே அமைந்தன. புகழ் என்பது நேரடியாகவே பணமாகவும் அதிகாரமாகவும் மாறியது இன்றைய ஜனநாயக யுகத்தில்தான். எண்ணிப்பாருங்கள் எத்தனை மகத்தான கவிஞனாக இருந்தாலும் கம்பன் ஆட்சியாளனோ செல்வந்தனோ ஆகமுடியாது. மாபெரும் கலைஞர்களாக இருந்தாலும் ஆட்சியாளர்களின் கருணைக்கொடைகளை நம்பியே மன்னராட்சிக்காலத்தில் வாழமுடியும். நவீன ஊடகம் உருவானதுமே புகழ்பெற்ற கலைஞர்கள் மன்னர்களுக்குரிய வாழ்க்கையை வாழ ஆரம்பித்தனர். தியாகராஜ பாகவதர் தங்கத்தட்டில் உணவு உண்டார் என்பதும் அதனால் சீண்டப்பட்ட அக்கால உயர்குடிகளின் சீற்றமே அவருடைய அழிவுக்கு வழிவகுத்தது என்பதும் வரலாறு. அவ்வாறாக மக்கள் என்பது ஒருவகை நவீன தெய்வமாக ஆகியது. அதை வழிபடவேண்டும், கேள்வி கேட்காமல் பணியவேண்டும், அதற்கு படையலிடவேண்டும், அதை புகழ்ந்து துதித்துக்கொண்டே இருக்கவேண்டும். அதன் அருள்பெற்றவர்கள் அனைத்தையும் அடைவார்கள். பணம் ,புகழ் ,அதிகாரம் எல்லாமே அதன் கடைக்கண் பட்டால் வந்துசேரும். அது அனைத்துக் கல்யாணகுணங்களும் கொண்டது. அதன்மேல் சிறு விமர்சனம் வைத்தால்கூட அவன் அழிக்கப்படவேண்டிய எதிரி. மக்கள் என்னும் கருத்துருவை கடவுளின் இடத்துக்கு கொண்டுசென்றவர்கள் இடதுசாரிகள். அவர்கள் கடவுளை மறுத்து அங்கே மக்கள் என்னும் கருத்துருவை வைத்தனர். லெனின் முதலான இடதுசாரிகளின் எழுத்துக்களை வாசித்தால் முன்பு மதவாதிகள் கடவுளின் பெயரை எப்படியெல்லாம் பயன்படுத்தினார்களோ அப்படியே மக்கள் என்னும் பெயரை இவர்கள் பயன்படுத்துவதைக் காணலாம். இவர்களைப் பொறுத்தவரை அனைத்து அதிகாரமும் மக்களுக்குரியது. அனைத்துச் செல்வங்களும் மக்களுக்குரியவை. அனைத்து அறங்களும் மக்களால் முடிவெடுக்கப்படுபவை. மக்களின் எதிரிகள் அழித்தொழிக்கப்படவேண்டியவர்கள். ஆனால் மக்கள் என்பது கண்கூடான ஒன்று அல்ல, அது ஒரு கருத்துருவம். ஆகவே மக்களின்பொருட்டு மக்களின் பிரதிநிதிகளாகிய ‘நாங்கள்’ எல்லாவற்றையும் செய்வோம். நாங்கள் செய்பவை எல்லாம் உண்மையில் மக்களால் மக்களுக்காகச் செய்யப்படுபவைதான். எங்களை எதிர்ப்பவர்கள் மக்களை எதிர்க்கிறார்கள். அவர்களை மக்களின்பொருட்டு நாங்கள் அழிக்கிறோம். இன்றும் அதைத்தான் உலகமெங்கும் இடதுசாரி சர்வாதிகாரிகள் எல்லாமே சொல்கிறார்கள். இந்த மக்கள் என்னும் கருத்துரு அதன் வரலாற்றுப் பாத்திரத்தை வகித்துவிட்டு, அதன் நன்மைகளை எல்லாம் அளித்துவிட்டு, அதன் தீமைகளை வெளிக்காட்டும் காலகட்டம் வந்துவிட்டது என்று ஜனநாயக யுகம் உருவாகும் தொடக்ககாலத்திலேயே சிந்தனையாளர்கள் சொன்னார்கள் இயல்பாக திரண்டு உருவான ஒரு திரளை மக்கள் என உருவகித்தனர் முன்னோடியான ஜனநாயகச் சிந்தனையாளர்கள். நவீன அரசியலில் அந்த மக்கள்த்திரள் ஊடகவல்லமையால், ஆதிக்க நோக்குடன் செயற்கையாக கட்டமைக்கப்பட முடியும் என்னும் நிலை உருவானது. மக்களிடமிருந்து அதிகாரத்தை பெறுவதற்கு பதிலாக மக்களையே அதிகாரத்திற்கு ஏற்ப வடிவமைக்க முடியும் என நிரூபிக்கப்பட்டது. மக்கள் என்னும் கருத்துருவின் எதிர்மறைக்கூறுகளை முதன்மையாக வெளிக்காட்டியது ஃபாஸிசமும் நாஸிஸமும்தான். இனம், மொழி, மதம் போன்ற அடையாளங்களைக் கொண்டு மக்களை மிக எளிதாகத் திரட்டமுடியும் என அவை காட்டின. மிகப்பெரிய அழிவுச்சக்தியாக அந்த மக்கள் அதிகாரத்தை மாற்றமுடியும் என்று நிரூபித்தன. வரலாற்றில் மன்னராட்சியும், மதஆட்சியும் நிகழ்த்திய அழிவை விட அதிகமான பேரழிவை முஸோலினி, ஹிட்லர், ஸ்டாலின், போல்பாட் உள்ளிட்ட நவீன சர்வாதிகாரிகள் உருவாக்கிய மக்கள்அதிகாரம் நிகழ்த்திக்காட்டியது. அவர்களெல்லாம் மக்களின் ஏற்பு வழியாக அதிகாரத்தை அடைந்தவர்கள்தான். இந்த விவாதத்தில் மிகமுக்கியமான நூல், நான் முப்பதாண்டுகளாகத் தொடர்ந்து மேற்கோள் காட்டிவரும் நூல், வில்ஹெல்ம் ரீஹ் எழுதிய The Mass Psychology of Fascism. ஒரு தனிமனிதனின் சராசரி அறிவுத்தரம் அவனைப்போன்றவர்கள் ஒன்றாகி ஒரு திரளாக ஆகும்போது மிகமிகக் குறைகிறது என அந்நூல் வாதிடுகிறது. அதாவது நூறு புத்திசாலிகள் ஒரு கூட்டமாக ஆனால் முட்டாள்தனமான ஒரு கும்பல்தான் உருவாகும். அதிலுள்ள ஒவ்வொரு புத்திசாலியும் கும்பலாக செயல்படும்போது முட்டாளாகவே இருப்பான். பெருந்திரள் என்பது உணர்ச்சிகளால் ஆனது என்றார் ரீஹ். எதிர்மறை உணர்ச்சிகளே மேலும் வலுவானவை.எதிரிகள் மீதான வெறுப்பும் அச்சமும்தான் மக்களை ஒருங்கிணையச் செய்கிறது. ஒரு எதிரியை சுட்டிக்காட்டி, அதன் மேல் வெறுப்பை உருவாக்கி பிரச்சாரம் செய்யும் ஒருவர் மிக எளிதாக மக்களின்மேல் முற்றதிகாரத்தை அடையமுடியும். ஹிட்லரும் முஸோலினியும் அழிந்தாலும் இன்று உலகமெங்கும் அரசியல்வாதிகளின் அரசியல்நடவடிக்கை என்பதே எதிரிகளை சுட்டிக்காட்டி வெறுப்பை உருவாக்கி அதிகாரத்தை வெல்வதாகவே உள்ளது. சிந்தனைகள் பெருந்திரளைச் சென்றடைவது மிக அரிது. அடையாளங்களும், குறியீடுகளும், ஆசாரங்களும், உணர்ச்சிக் கூச்சல்களுமே பெருந்திரளைச் சென்றடைகின்றன. தர்க்கபூர்வமாக நிறுவப்படுவனவற்றை விட திரும்பத் திரும்பச் சொல்லப்படுபவையே மக்களால் ஏற்கப்படுகின்றன. மக்கள் அறிவாளிகளை விட தங்களைப்போன்ற அறிவுத்தரம் கொண்ட ஒருவரையே நம்பி ஏற்று கொண்டாடுகிறார்கள். திரள் பெரிதாகும்தோறும் அவர்கள் ஏற்றுக்கொள்பவர்களின் அறிவுத்திறன் குறைகிறது. இந்தச் சிந்தனைகள் முன்னர் ஜனநாயகத்தின் முன்னோடிச் சிந்தனையாளர்கள் மக்கள் என்னும் கருத்துரு பற்றி என்னென்ன சொன்னார்களோ அவற்றுக்கு நேர் எதிரானவை என்பதைக் காணலாம். வில்ஹெல்ம் ரீஹின் நூல் வெளிவந்து நூறாண்டுகளாகப்போகிறது. இன்றைய வணிக உலகின் விளம்பரக்கொள்கைகள் அனைத்துமே வில்ஹெல்ம் ரீஹ் கண்டுசொன்ன அடிப்படைகளை ஒட்டியே வடிவமைக்கப்படுகின்றன என்பது கண்கூடு. மக்களின் சிந்தனைகளை வடிவமைப்பவை கோடிக்கணக்கான ரூபாய் செலவில் திட்டமிட்டு செய்யப்படும் பிரச்சாரங்கள்தானே ஒழிய முன்னோடிச் சிந்தனைகள் அல்ல. மக்களை பிரச்சாரம் வழியாக தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளும்படி செய்யமுடியும் என்பதற்கு வரலாறெங்கணும் உதாரணங்கள் உள்ளன. அந்தப் பிரச்சாரங்கள் மூன்று நிலைகள் கொண்டவை. ஒன்று, விரிவான களஆய்வு வழியாக மக்களின் மனநிலையும் தேவைகளும் கண்டடையப்படுகின்றன. இரண்டாவதாக, நிபுணர்களால் மக்களிடம் கொண்டுசெல்லப்படவேண்டிய கருத்துக்களும் அவற்றை கொண்டுசெல்லும் வழிமுறைகளும் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. மூன்று மிகப்பெரிய பொருட்செலவில் அக்கருத்துக்கள் பிரச்சாரம் செய்யப்படுகின்றன. மக்கள் சிந்தனை செய்வதற்குள்ளாகவே அக்கருத்துக்கள் மக்களின் மனதுக்குள் ஆழமாக நிறுவப்படுகின்றன. கட்சியரசியல், நுகர்வு, கேளிக்கை ஆகிய மூன்று தளங்களில் இன்றைய மக்கள் இடைவிடாமல் பிரச்சாரத்திற்கு இரையாகிறார்கள். சிந்திக்கவே விடாமல் அவர்கள் முற்றுகையிடப்படுகிறார்கள். அவர்களின் தெரிவுகள், ரசனைகள் எல்லாமே அரசியல்கட்சிகள், வணிக விளம்பரங்கள், கேளிக்கையூடகங்கள் ஆகிய மூன்று மாபெரும் பிரச்சார அமைப்புகளால் கட்டமைக்கப்படுகின்றன. உங்களைச் சூழ்ந்திருப்பவர்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று கவனியுங்கள். மேலே சொன்ன மூன்றை மட்டும்தான். வேறெதையும் அவர்கள் கவனிக்க மாட்டார்கள், கவனிக்க அவர்களால் இயலாது. ஒரு சொல்கூட உள்ளே செல்ல வழி கிடையாது. அவர்கள் ஒருவகை இயந்திரங்கள்போல உள்ளிருக்கும் மென்பொருளில் பொறிக்கப்பட்டுள்ள ஆணைக்குக் கட்டுப்பட்டு இயங்குபவர்கள். இன்றைய சூழலில் மக்கள் என்னும் சொல்லுக்கு என்னதான் பொருள்? மக்கள் என்ற சொல்மீது ஏற்றப்பட்டுள்ள பழைய நெகிழ்வுகள், புனிதங்கள் ஆகியவற்றுக்கு என்னதான் மதிப்பு? (மேலும்) https://www.jeyamohan.in/195304/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.