கண்ணதாசனின் ஒரு கவிதையில் கண்ட வரிகள்.
தன் தம்பி மகளை மருமகளாக்க ஆசைகொண்ட ஒரு தாய், மகனின் செயலைத் தடுக்க முடியாமல்..... அவன் வேறொருத்தியை கட்டிவந்ததால் கொண்ட ஆற்றாமையின் புலம்பல்.
பெண்ணா இவ சனியன்
புத்தி கெட்டு போனேனே
தம்பிமக சமைச்சா
சபையெல்லாம் வாசம் வரும்
அள்ளி இலையிலிட்டா
அடுக்கடுக்கா வெள்ளிவரும்
உண்ணவொரு கையெடுத்தா
உள்நாக்கில் நீர்வடியும்
கத்தரிக்காக் கூட்டுவச்சா கடவுளுக்கே பசியெடுக்கும்
வெண்டைக்கா பச்சடியும்
வெள்ளரிக்கா தக்காளி
கிண்டி விட்ட கீரைக்கும்
கீழிறங்கும் தெய்வமெல்லாம்!
அப்படிக்கி சமைப்பாளே
அள்ளியள்ளி வைப்பாளே
அடுப்படிக்கு நான்போக
அவசியமே இல்லாமே
உட்கார்ந்த பாய்வரைக்கும்
ஓடிவந்து வைப்பாளே
இவளும் சமைச்சாளே
எல்லாந் தலையெழுத்து