Everything posted by Paanch
-
நடனங்கள்.
மனிதர்களுக்கு மட்டுமா நடனமாடத் தெரியும்.... நாங்களும் ஆடுவோமே.🤔
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழை மீட்டும் ஓர் உறவு விசுகு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! 🙌
-
விவசாய பழமொழிகள் விளக்கத்துடன்
விவசாய பழமொழிகள் விளக்கத்துடன் விவசாய பழமொழிகள் நம் நாட்டில் பல உள்ளன. அவை விளக்கத்துடன் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன. குறைந்த சொற்களில் நிறைந்த பொருள் தரும் அத்தகைய விவசாய பழமொழிகள் சிலவற்றைப் பார்ப்போம். தவளை கத்தினால் தானே மழை மழைக்கான அறிகுறிகள் உண்டாகும் போதுதான் தவளைகள் பொதுவாகக் கத்தும். இதனைத் தான் தவளை கத்தினால், தானே மழை என்றனர். அந்தியில் ஈசல் பூத்தால் அடைமழைக்கு அச்சாரம் மாலை வேளையில் ஈசல்கள் நிறைய பறந்தால் தொடர்ச்சியாக நீண்ட நேரம் மழை பெய்யும். தும்பி எட்ட பறந்தால் தூரத்தில் மழை. தும்பி கிட்டப் பறந்தால் பக்கத்தில் மழை. தட்டான் உயரமாகப் பறந்தால் தூரமாக மழை பெய்யும். தட்டான் தாழ்வான உயரத்தில் பறந்தால் அருகில் மழை பெய்யும். எறும்பு திட்டை ஏறில் பெரும் புயல். எறும்பு உயரமான இடத்திற்கு வாயில் முட்டையை கவ்விக் கொண்டு கூட்டமாகச் சென்றால் கட்டாயம் பெரும் புயல் வரும். மார்கழி மழை மண்ணுக்கு உதவாது. மார்கழி மாதத்தில் பயிர்கள் அறுவடைக்கு தயாராயிருக்கும். அப்போது தண்ணீர் தேவை இருக்காது. அப்போது மழை பெய்வது பயிர் விளைச்சலை பாதிக்கும். எனவே மார்கழி மழை மண்ணுக்கு உதவாது. தை மழை நெய் மழை நெய்யானது சிறிதளவு ஊற்றினால் உணவு ருசிக்கும். அதே போல் தை மாதத்தில் பெய்யும் சிறிதளவு மழையானது வேளாண்மையை மணக்கவே செய்யும். தைப் பனி தரையை துளைக்கும். மாசிப்பனி மச்சை பிளக்கும். தை மாதப்பனியானது தரையை துளைக்கும் அளவுக்கு இருக்கும். மாசி மாதப்பனி உள்வீட்டிற்குள்ளும் குளிரும் அளவு இருக்கும். மச்சி வீடு என்பது பழங்காலத்தில் நீளமான நெட்டு வீடுகளில் கடைசியில் இருக்கும் அறையைக் குறிக்கும். தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு தை மற்றும் மாசி மாதங்களில் குளிர் அதிகமாக இருக்கும். ஆதலால் கூரை உள்ள வீடுகளில் உறங்க வேண்டும். திறந்த வெளியில் உறங்கக் கூடாது. புத்து கண்டு கிணறு வெட்டு கரையான் புற்றானது நிலத்தடி நீர் இருக்கும் இடங்களில்தான் பொதுவாக அமைந்திருக்கும். எனவேதான் புற்று இருக்கும் இடங்களில் கிணறு வெட்டினால் தண்ணீர் கிடைக்கும். வெள்ளமே ஆனாலும் பள்ளத்தே பயிர் செய் பள்ளத்திலேயே தண்ணீர் தங்கும். வெள்ளம் சூழும் என்றாலும் பள்ளமான இடத்தில் பயிர் செய்தால் பயிருக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும். காணி தேடினும் கரிசல்மண் தேடு. சிறிய அளவு நிலம் வாங்கும்போது நீரினைத் தேக்கும் தன்மை உடைய வேளாண்மைக்கு ஏற்ற, கரிசல் மண் உள்ள நிலமாக வாங்குவது சிறந்தது. களர் கெட பிரண்டையைப் புதை களர் நிலத்தினை சீராக்க பிரண்டையை அந்நிலத்தில் புதைத்து வைக்க வேண்டும். கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி. கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு. வளமில்லாத நிலத்துக்கு வன்னி மரங்களை நட்டால் நிலம் வளமாகும். அதே போல் வறுமை மிக்க குடும்பத்திற்கு வெள்ளாடுகளை வளர்த்தால் வறுமை நீங்கும். நன்னிலம் கொழுஞ்சி, நடுநிலம் கரந்தை, கடைநிலம் எருக்கு. நல்ல நிலத்தில் கொழுஞ்சி விளையும். நடுத்தர வளமான நிலத்தில் கரந்தை விளையும். தரமற்ற நிலத்தில் எருக்கச் செடி விளையும். எனவே ஒரு நிலத்தின் வளமையை அந்நிலத்தில் இருக்கும் தாவரங்களை வைத்து அடையாளம் கண்டு கொள்ளலாம். நீரும் நிலமும் இருந்தாலும் பருவம் பார்த்து பயிர் செய். ஓரிடத்தில் வேளாண்மைக்கு தேவையான நீரும், வளமையான நிலம் இருந்தாலும், காலநிலையை கணக்கில் கொண்டே வேளாண்மை செய்ய வேண்டும். ஆடிப்பட்டம் பயிர் செய். ஆடி மாதத்தில் செய்யும் பயிரானது நல்ல விளைச்சலைத் தரும். இதனையே ஆடிப்பட்டம் பயிர் செய் என்றனர். விண் பொய்த்தால் மண் பொய்க்கும். பருவ மழை பெய்யாவிட்டால் பயிர் விளைச்சல் இருக்காது. மழையடி நஞ்சை, மதகடி புஞ்சை. மழை நீரை மட்டும் நம்பி இருக்கும் இடங்களில் நஞ்சை பயிர்களை பயிர் செய்யவும். மழை நீரை சேமித்து வைத்திருக்கும் கண்மாய், ஏரிகள் ஆகியவற்றின் மடைக்கு அருகில் இருக்கும் நிலங்களில் புஞ்சைப் பயிர்களை பயிர் செய்யலாம். களரை நம்பிக் கெட்டவனும் இல்லை. மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை. களர் நிலமானது தண்ணீரை தேக்கி வைக்கும் தன்மை கொண்டது. மணலானது தண்ணீரை வடித்து விடும் தன்மை உடையது. அதனால் களர் நிலத்திற்கு ஏற்ற பயிரை பயிர் செய்தவன் ஏமாற மாட்டான். மணலில் பயிர் செய்தால் விளைச்சல் நன்றாக இருக்காது. உழவில்லாத நிலமும் மிளகில்லாத கறியும் வழவழ. மிளகு சேர்க்காத குழம்பு எப்படி பலன் இல்லாது போகுமோ அது போல உழவில்லாத நிலம் பலன் தராது. அகல உழுவதைவிட ஆழ உழுவது மேல். வேளாண்மைக்கு நிலத்தை தயார் செய்யும்போது அகலமாக உழுவதைத் தவிர்த்து ஆழமாக உழ வேண்டும். புஞ்சைக்கு நாலு உழவு நஞ்சைக்கு ஏழு உழவு. புஞ்சை நிலத்தைவிட நஞ்சைக்கு உழவு செய்யும்போது மண்ணானது நன்றாக சந்தனம் போல் மையாக இருக்குமாறு உழவ வேண்டும். குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை. எரு இடப்படாத வேளாண்மை பயன் தராது. ஆடு பயிர் காட்டும். ஆவாரை கதிர் காட்டும். ஆட்டுச் சாணம் பயிரை வளரச் செய்யும். ஆவாரை உரம் பயிரில் தானிய முதிர்ச்சியை உண்டாக்கும். கூளம் பரப்பி கோமியம் சேர். கூளம் எனப்படும் சிதைந்த வைக்கோல் கழிவுகளை பரப்பி வைத்து அதன்மீது கோமியத்தை தெளித்தால் உரம் விரைவில் சத்தானதாக மாறும். ஆற்று வண்டல் தேற்றும் பயிரை. ஆற்று வண்டலானது வளமானதாக உள்ளதால் அது பயிரின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும். பசுந்தாள் உரப்பயிர்களை வளர்த்து பின் அதனை மடக்கி உழுது நிலத்தின் வளத்தை அதிகரிக்கும். காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும். பயிருக்கு தினமும் தண்ணீர் விடக்கூடாது. தண்ணீர் பாய்ச்சி நிலம் காய்ந்தபின் மீண்டும் தண்ணீர் விடவேண்டும். தேங்கிக் கெட்டது நிலம்; தேங்காமல் கெட்டது குளம். நிலத்தில் நீர் தேங்கினால் பயிர் செழித்து வளராது. குளத்தில் தண்ணீர் தேங்காவிடில் பயிர்கள் வாடும். கோரையைக் கொல்ல கொள்ளுப்பயிர் விதை. களைப்பயிரான கோரையின் வளர்ச்சியை தடை செய்ய கொள்ளுப்பயிரினை பயிர் செய்யவும். சொத்தைப் போல் விதையைப் பேண வேண்டும். வேளாண்மை செய்பவர் தன்னுடைய சொத்துகளைப் பாதுகாப்பது போல் விதைகளைப் பாதுகாக்க வேண்டும். பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு. சரியன பருவத்தில் பயிரினை பயிர் செய்ய வேண்டும். ஆடி ஐந்தில் விதைத்த விதையும், புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர் வைத்த தனம். ஆடி ஐந்தாம் தேதி விதைக்க வேண்டும். புரட்டாசி பதினைந்தாம் தேதி நடவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நம் முன்னோர்களின் சொத்து போன்று அது பலன் தரும். கலக்க விதைத்தால் களஞ்சியம் நிறையும். அடர விதைத்தால் போர் உயரும். விதைகளை இடைவெளி விட்டு விதைத்தால் விளைச்சல் பெருகும். அதனால் தானியங்களைப் பாதுகாத்து வைத்திருக்கும் களஞ்சியம் நிறையும். நெருக்கி விதைத்தால் விளைச்சல் பயன் தராது. அதனால் வெறும் வைக்கோல் மட்டும் கிடைக்கும். இதனால் வைக்கோல் போர் உயரும். விவசாய பழமொழிகள் படிப்போம். அவை தரும் பாரம்பரிய அறிவைப் பாதுகாப்போம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்ப் பேரன்பர் வித்துவான் க. வேந்தனார் அவர்களின் நூற்றாண்டுப் பிறந்த தினம் trttamilolli | November 5, 2018 வித்துவான் வேந்தனார் அவர்களின் நூற்றாண்டுப் பிறந்த தினம் இன்றாகும். ஈழத்து வித்துவான்களில் அவரொரு மாறுபட்ட, சமுதாயப் பிரக்ஞை அதிகமுள்ள, முற்போக்கான வித்துவான். பாரதியின் வழிவந்த மரபுக் கவிஞராக அவர் தென்பட்டார். அவரது விடுதலைக் கவிதைகள், கவிதைகளில் தொனிக்கும் முற்போக்குக் கருத்துகளெல்லாம் அவற்றைத்தான் எடுத்தியம்பின. “பாடுகின்றோர் எல்லோருங் கவிஞ ரல்லர் பாட்டென்றாற் பண்டிதர்க்கே உரிமை யல்ல ஓடுகின்ற பெருவெள்ளப் பெருக்கே போல உணர்ச்சியிலே ஊற்றெழுந்த ஒளியால் ஓங்கி வாடுகின்ற மக்களினம் மாட்சி கொள்ள மறுமலர்ச்சிப் பெருவாழ்வை வழங்கு மாற்றல் கூடுகின்ற கொள்கையினால் எழுச்சி கொண்டு குமுறுகின்ற கோளரியே கவிஞ னாவான்” என்று அவர் பாடினார். அதற்கேற்ப குமுறுகின்ற கோளரியாக விளங்கிய கவிஞன் அவர். பரமேசுவராக் கல்லூரியின் தமிழ் ஆசிரியர். மறைந்தும் அவரை அறிந்த மக்களின் மனதில் வாழ்பவர். வாழ்த்துக்கள்!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுபேசு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!🙌
-
அனைத்துலக ரீதியில் உணர்பூர்வமாக நடைபெற்ற 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு!
இது உண்மையாக இருந்தால் அந்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.🙏🙏 ஒருவேளை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்துவிட்டதாக தமிழர்களைக்கொண்டே அறிவித்து ஐ.நா வையும் திசைதிருப்பும் ஒரு திட்டமாகவும் இருக்குமோ.🤔
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
தாத்தா பாட்டி பற்றி 7வயதுச் சிறுவனின் கட்டுரை. அவர்கள் எப்போதும் மற்றவர்களின் குழந்தைகளைப் போலவே இருப்பார்கள். அவர்கள் விமான நிலையத்தில் வசிக்கிறார்கள், அங்கு இருந்து நாங்கள் அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும், பின்னர் திரும்பிச் செல்லவும் வேண்டும். ஒரு தாத்தா ஒரு மனிதன், மற்றும் ஒரு பாட்டி ஒரு பெண்! தாத்தா பெற்றோர் வால்மார்ட்டில் சாப்பிங் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் எப்போதும் வயதானவர்கள். அவர்கள் லாலிபாப் மற்றும் பிரஞ்சு பொரியலை கொண்டு வரும்போது நல்லது. எங்களை நடைப்பயணத்திற்கு அழைத்துச் செல்லும்போது, அவர்கள் எப்போதும் மெதுவாக இருப்பார்கள். அவர்கள் கடவுளைப் பற்றி எங்களிடம் பேசுகிறார்கள். அவர்கள் என் சகோதரனைப் போல் கெட்ட வார்த்தைகள் பேசுவதில்லை. பொதுவாக அவர்கள் காலையில் காபி குடிப்பார்கள். அவர்கள் கண்ணாடி மற்றும் வேடிக்கையான உள்ளாடைகளை அணிவார்கள். தாத்தா பாட்டி புத்திசாலி. அனைவரும் ஒரு பாட்டி மற்றும் தாத்தாவைப் பெற முயற்சிக்க வேண்டும். அவர்கள் எங்களுடன் பிரார்த்தனை செய்து எங்களை முத்தமிடுகிறார்கள். கிராண்ட்பா பூமியில் புத்திசாலி மனிதன்! எனது ஐ போனுக்கு வந்தது.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நந்தரே உறவே!- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
முயற்சி திருவினையாகும். அது எந்தக் களத்திலும், எந்தக் காலத்திலும். 😌- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருபன்.!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
பெண்களுக்கு இரண்டுமுறை பைத்தியம் பிடிக்கும்அவள் காதல் கொண்ட சமயம், தலை நரைக்கத் தொடங்கும் சமயம்- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? யார் சொன்னது இல்லையென்று! இதோ எங்கள் அன்புத்தம்பி...! வாழ்த்துக்கள்!! 🙌- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இரண்டுமல்ல ஒன்று போதுமே...!. "ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விசம்".- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
எருமைப் புத்தி என்று சொல்வார்கள்.... அதன் புத்தியில் ஒரு சிறிதாவது எங்களுக்கும் இருந்திருந்தால் இன்று தமிழீழத்தில் வாழ்திருப்போமே.- நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா
2050ல் நான் கைலாசத்தில் இருப்பேன் கு சாமி எந்தப்பகுதியில் இருப்பார் தம்பி.????????????🧐- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இசைப்பிரியனுக்கும், ஈழப்பிரியனுக்கும் எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்…!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.