அடடா! வாத்தியாருக்கு ஐம்பதாவது அகவையா? மீண்டும் வாழ்த்துக்கள்!! இந்நிலையில் மாணவனாகிய நான் அவருக்கு அறிவுரை வழங்காதிருப்பது அழகல்லவே! ஆகவே நான் அறிந்ததை அவருக்கு எடுத்தியம்புவதை (பிரணவ மந்திரத்தை ) அவர் வரவேற்பார் என்று எண்ணுகிறேன்.
நாற்பது வயது என்பது.... இளமையில் முதுமை.
ஐம்பது வயது ....முதுமையில் இளமை’
வயதைத் தள்ளி வைத்துவிட்டு எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வது, ஆவியில் வேக வைத்த காய்கறிகள், அவித்த பருப்பு வகைகள், அரிசி உணவு, எண்ணெயில் பொரித்து எடுக்காத மீன் வகைகள், சொந்தப் பந்தங்களுடன் கூடி வாழ்வது, இயற்கையோடு இயைந்த வாழ்க்கை, போதும் என்ற மனம், போட்டி - பொறாமை அற்ற மகிழ்ச்சியான வாழ்க்கை போன்றவை, நோய்களையும் வயோதிகத்தையும் விரட்டி முதுமையிலும் இளமையாக வைத்திருக்கிறது.
நியூயார்க் நகரத்தில் ஓர் உணவகத்தில் எண்பது வயதைக் கடந்த ஒரு பெண், முதுகில் ஆக்சியன் சிலிண்டரைச் சுமந்தபடி உட்கார்ந்து உணவு அருந்திக்கொண்டிருந்ததைப் பார்த்து அசந்து போன ஒருவர் அவரிடம் சென்று அவரின் மனோதிடத்தைப் பாராட்டினார்.. “நான் என்னுடைய வாழ்க்கையை, அதனுடைய கடைசி விநாடிவரை மகிழ்ச்சியாகக் கழிக்க விழைகிறேன்” என்றார் அந்தப் பெண்.
இப்படிப்பட்ட மனோபாவத்தை வாத்தியாரோடு ஐம்பது வயதை அடையும் யாழ்ழுறவுகளும் கடைப்பிடிக்க வேண்டுகிறேன். முதுமையும் அதைத் தொடரும் இன்னல்களும் சூரியனைக் கண்ட பனியாக மறைந்துபோகும். முதுமையிலும் இனிமை காணலாம்.