Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Paanch

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  6,795
 • Joined

 • Last visited

 • Days Won

  17

Everything posted by Paanch

 1. எங்கள் வீட்டில் திருவலை எடுக்க அவ என்னைத்தான் கூப்பிடுவா... அவவுக்கு எட்டாது.
 2. அமெரிக்க முன்னணி பல்கலைக்கழகத்தில்(Salisbury University) அரசியல்துறை விரிவுரையாளராக இருக்கும் கீதபொன்கலன்(S.i. Keethaponcalan) தெரிவித்துள்ளார். பேராசிரியர் லக்ஸ்மன் அவர்கள் மத்திய வங்கியின் ஆளுநராக இருந்தபோது அரசாங்கம் தனக்கு ஏற்றது போல மத்திய வங்கியை பயன்படுத்திக் கொள்வதில் சிக்கல்கள் இருந்திருக்கலாம். அதன் காரணமாக தங்களது தேவைகளுக்கு ஏற்ப, அரசியல் ரீதியாக செயற்படக்கூடிய ஒருவர் ராஜபக்ச அரசிற்கு தேவைப்பட்டது. அதற்கு கப்ரால் ஒரு சிறந்த நபர் என்று கூறலாம். ஏனெனில் அவர் ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 3. தமிழ்ப் பேரன்பர் வித்துவான் க. வேந்தனார் அவர்களின் நூற்றாண்டுப் பிறந்த தினம் trttamilolli | November 5, 2018 வித்துவான் வேந்தனார் அவர்களின் நூற்றாண்டுப் பிறந்த தினம் இன்றாகும். ஈழத்து வித்துவான்களில் அவரொரு மாறுபட்ட, சமுதாயப் பிரக்ஞை அதிகமுள்ள, முற்போக்கான வித்துவான். பாரதியின் வழிவந்த மரபுக் கவிஞராக அவர் தென்பட்டார். அவரது விடுதலைக் கவிதைகள், கவிதைகளில் தொனிக்கும் முற்போக்குக் கருத்துகளெல்லாம் அவற்றைத்தான் எடுத்தியம்பின. “பாடுகின்றோர் எல்லோருங் கவிஞ ரல்லர் பாட்டென்றாற் பண்டிதர்க்கே உரிமை யல்ல ஓடுகின்ற பெருவெள்ளப் பெருக்கே போல உணர்ச்சியிலே ஊற்றெழுந்த ஒளியால் ஓங்கி வாடுகின்ற மக்களினம் மாட்சி கொள்ள மறுமலர்ச்சிப் பெருவாழ்வை வழங்கு மாற்றல் கூடுகின்ற கொள்கையினால் எழுச்சி கொண்டு குமுறுகின்ற கோளரியே கவிஞ னாவான்” என்று அவர் பாடினார். அதற்கேற்ப குமுறுகின்ற கோளரியாக விளங்கிய கவிஞன் அவர். பரமேசுவராக் கல்லூரியின் தமிழ் ஆசிரியர். மறைந்தும் அவரை அறிந்த மக்களின் மனதில் வாழ்பவர். வாழ்த்துக்கள்!!
 4. சுபேசு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
 5. அதாவது நான் இலங்கையை எப்படி, எவ்வாறு சீரழித்தேன் என்பதுபற்றி அந்தத் தலைவர்களுக்கும் விளக்கி... அவர்களும் தங்கள் நாட்டைச் சீரளிப்பதற்கு ஏதுவான அறிவுரைகளைச் சொல்லும் பேச்சுவார்த்தைகளாக இருக்கும்.
 6. அரசியல் கைதிகள் எவருமில்லை – பிரதமர் நாட்டில் தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் இன்று (10) நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சிறைகளில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். உதயன் 16.09.2021
 7. எனக்கும் தொற்று 10 மாதத்திற்கு முன் வந்தது. அதனை விரட்ட நான் எதுவுமே செய்யவில்லை. இருந்தும் பிறரை அது பற்றிக்கொள்ளாமல் இருப்பதற்கு வேண்டிய அறிவுரைகளைப் பின்பற்றினேன். அது சில நாட்களில் என்னைவிட்டுப் போய்விட்டது. ஆகவே பயம் வேண்டாம்.
 8. சுமந்திரன் தெரிவித்துள்ள இந்தக் கூற்று அரசுக்குப் பாதகம் ஏற்படுவதை விரும்பாமல் அதனைத் தடுக்கும் முயற்சிபோலவே தென்படுகிறது. ஒருவேளை இராசாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை எதிர்க்கட்சிக்கு மாறத் திட்டமிட்டு உள்ளாரோ....??
 9. அடுத்த ஒலிம்பிக் போட்டியில் கொழுக்கட்டை, மோதகம் உண்ணும் போட்டி இணைக்கப்படலாம் சாமியார். அங்கயனை நீங்கள் நேரில் கண்டதில்லையா.... போட்டியில் பங்குபற்றப் பயிற்சியை எப்போதோ தொடங்கிவிட்டார்.
 10. இது உண்மையாக இருந்தால் அந்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள். ஒருவேளை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்துவிட்டதாக தமிழர்களைக்கொண்டே அறிவித்து ஐ.நா வையும் திசைதிருப்பும் ஒரு திட்டமாகவும் இருக்குமோ.
 11. பிள்ளையார் சிலை மட்டும் சிதைக்கப்பட்டு இருந்தால் இது கிறித்தவ மக்களின் வேலையாக இருக்குமோ என்ற ஐயப்பாடு எழலாம். ஆனால் அந்தோனியார் சிலையை அங்கு வைத்துத் தங்களை முழுமையாக வெளிக் காட்டிக்கொள்ள கிறித்தவர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. இதன்பின்னால் பெரும் அரசியல் சூழ்ச்சிகள் நிச்சயம் உண்டு.
 12. இது விருப்பமல்ல, இறைவனின் படைப்பு. நிலவின் அழகை இருளில்தான் காண வைத்துள்ளான்.
 13. பிரச்சனை மட்டுமல்ல இதில் பல ஆரோக்கியமான விடயங்களும் அடங்கியுள்ளன தமிழ் சிறி. இதுபற்றி நான் படித்து அறிந்தவற்றை இதோ தருகிறேன்:- ஆண்கள் உள்ளாடை அணியாமல் இருந்தால், தாம்பத்தியத்தில் கிடைக்க கூடிய பலன்கள் என்னென்ன..? மனித இனம் பரிணாம வளர்ச்சி அடைவதற்கு முன்னர் இருந்தே இந்த உள்ளாடைகள், ஆடைகள் எதுவுமே அணியாமல் பிறந்த மேனியாகவே திரிந்தனர். கால மாற்றம் அடைந்த பின்னர் உடைகளை மனிதர்கள் அணிய தொடங்கினர். அதிலும் குழந்தை பருவத்தில் நாம் பெரும்பாலும் பிறந்த மேனியாகவே இருந்து பழகி வந்திருப்போம். ஒரு கால கட்டத்திற்கு மேல், இந்த பழக்கம் மாறி உள்ளாடை அணியும் பழக்கம் நமக்கு வந்து விட்டது. உள்ளாடை அணியாமல் இருப்பதால் எண்ணற்ற நன்மைகள் உண்டாகும் என உள்ளாடைகளை பற்றிய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. சுகமான உணர்வு..! உள்ளாடை பற்றிய ஆய்வுகளில் சில உண்மைகள் தெரிய வந்துள்ளது. உள்ளாடை அணியாமல் இருக்க கூடிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் இது ஒரு தனி விதமான உணர்வை தருகிறதாம். காற்று சுலபமாக அந்தரங்க உறுப்புகளுக்கு செல்வதால் சுகமான நிலையை உணர்வதாக தெரிவிக்கின்றனர். நோய் தொற்றுகளுக்கு உள்ளாடை அணியாமல் இருந்தால் நோய் கிருமிகளின் இருந்து பெரும்பாலும் உங்களை காத்து கொள்ளலாம். நாள் முழுக்க உள்ளாடை அணிந்து கொண்டே இருப்போருக்கு சங்கடமான உணர்வு ஏற்படுவதோடு, நோய் தொற்றுகளும் உண்டாகும். இதனால் அந்தரங்க உறுப்பில் அரிப்பு ஏற்பட்டு பிறகு புண்ணாக மாறி விடும். ஆண்மை அதிகரிப்பு உள்ளாடை அணியும் ஆண்களை விட உள்ளடை அணியாமல் இருக்கும் ஆண்களுக்கே ஆண்மை அதிகமாக இருக்கும் என ஆராய்ச்சிகள் கூறியுள்ளன. காரணம், உள்ளாடை அணியாமல் இருந்தால் அந்தரங்க உறுப்பின் தட்பவெப்பம் குறைந்து விந்தணுக்கள் அதிக ஆரோக்கியத்துடன் இருக்கும். அத்துடன் இதன் எண்ணிக்கையும் கூடுமாம். சங்கடம் தவிர்..! உள்ளாடை அணியும் ஆண்களை விட உள்ளாடை அணியாமல் இருக்கும் ஆண்களுக்கே சுகமான நாளாக அமைகிறது என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. வருடத்தின் 365 நாட்களும் இப்படி உள்ளாடை அணிந்திருப்பது நல்லதல்ல. இது ரத்த ஓட்டத்தை முற்றிலுமாக குறைத்து விடும். சிறப்பான தாம்பத்தியம் உள்ளாடை அணியாமல் ஆண்களும் பெண்களும் உறங்கும் போது, சிறப்பான தாம்பாத்திய உணர்வை பெற இயலும். மேலும், இருவருக்குள்ளும் ஆரோக்கியான உறவு ஏற்படுத்த இது ஒரு பலமாக இருக்க கூடும், என்று உளவியல் மருத்துவர்களும் கூறுகின்றனர். பெண்களுக்கு எப்படி.? ஆண்களுக்கு விந்தணுக்களின் ஆரோக்கியம் கூடுகிறதென்றால் பெண்களுக்கு வேறு சில நன்மைகள் ஏற்படுகின்றன. பெண்களின் பிறப்புறுப்பு அதிகம் இறுக்கம் ஏற்பட்டால் வறட்சி தன்மை அதிகரிக்கும். இது நாளடைவில் பெண்ணுறுப்பிற்கு பாதிப்பை தருமாம். பெண்கள் தூங்கும் போது உள்ளாடை இல்லாமல் உறங்குவது இது போன்ற பாதிப்பில் இருந்து காக்குமாம்.
 14. தமிழினத்தை யாராலும் அழிக்க முடியாது. அது வேறு வேறு இனவடிவங்கள் எடுத்து இன்றுபோல் என்றும் நிலைத்திருக்கும். தமிழ் மொழியைத்தான் ஆராட்சியிலே தேடவேண்டியிருக்கும்.
 15. என்ன முனிவர் நீங்கள்... செவிட்டு மிசின் வாங்கி போட்டால் காதுச் சவ்வு இரண்டும் வெடித்துவிடுமே..!! பின்பு 'காதில்லாத மனிதர் முன்னே பாடல் இசைத்தார்' என்ற பாட்டுக்கு பொருளாகி விடுவோமே.
 16. அவனவன் தன் எடையைக் குறைக்க என்னென்னமோ செய்கிறான்....
 17. எல்லா இனங்களிலும் நல்லவர்களும் உண்டு. கிரிமினல்களும் உண்டு உண்மைதான். ஊரில் மதிப்புக்குரிய பெரியவர்கள் எனத் தமிழினத்தில் போற்றப்படுபவர்கள், அதாவது தூய தமிழர்களின் முன்னால் தங்கள் கிரிமினல் வேலைகளைப் பகிடியாகவேனும் செய்வதற்கு ஆசைப்படுபவர்கள் கூச்சப்படுவதையும், தயங்குவதையும் கண்ட அனுபவம் உண்டு. இந்த நிலை வேறு இனத்தில் அரிதாகவே தெரிகிறது.
 18. அப்போ நான் கேள்வியுற்றது உண்மைதான். ஆபிரிக்காவில் இன்னம் ஒரு படி முன்னேபோய் மணமாகும்வரை அதைத் தைத்துவிடுவதும் உண்டு. மிருகங்களுக்கும் கருணை உண்டு. அவை பிடிக்கும் இரையின் உயிரைப் போக்கிய பின்புதான் அதன் உடலைக் குத்திக் கிழிக்கும்.
 19. இந்த மதத்தில் பெண்குழந்தைகள் பிறந்தவுடன் அந்தஇடத்தில் சிறிது கிள்ளி எடுப்பார்களாமே.... கேள்விப்பட்டுள்ளேன் அது உண்மையா..? பொய்யா...? தெரியவில்லை.
 20. அமைச்சர் யீ.எல். பீரிசுக்கு அறளை பேந்துவிட்டது உண்மைதான். அவருக்கு நீதிமன்றுக்கும். அரசுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. லண்டனில் நாடு கடந்த அரசு பிரித்தானிய அரசு மீது தொடுத்த வழக்கு நாளுக்கு நாள் வலுப் பெற்று வருகிறது. விடுதலைப் புலிகளை தடை செய்தது ஓகே. ஆனால் அந்த தடையை ஏன் நீடிக்க வேண்டும்? என்று விளக்கம் கேட்டு சிறப்பு நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. இதற்கு பிரித்தானிய உள்துறை அமைச்சு கொடுத்த பதில் திருப்த்திகரமாக இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ள அதேவேளை, விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது தொடர்பாக பரிசீலிக்குமாறு, அது பரிந்துரை செய்துள்ளது. ATHIRVU.COM
 21. தாத்தா பாட்டி பற்றி 7வயதுச் சிறுவனின் கட்டுரை. அவர்கள் எப்போதும் மற்றவர்களின் குழந்தைகளைப் போலவே இருப்பார்கள். அவர்கள் விமான நிலையத்தில் வசிக்கிறார்கள், அங்கு இருந்து நாங்கள் அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும், பின்னர் திரும்பிச் செல்லவும் வேண்டும். ஒரு தாத்தா ஒரு மனிதன், மற்றும் ஒரு பாட்டி ஒரு பெண்! தாத்தா பெற்றோர் வால்மார்ட்டில் சாப்பிங் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் எப்போதும் வயதானவர்கள். அவர்கள் லாலிபாப் மற்றும் பிரஞ்சு பொரியலை கொண்டு வரும்போது நல்லது. எங்களை நடைப்பயணத்திற்கு அழைத்துச் செல்லும்போது, அவர்கள் எப்போதும் மெதுவாக இருப்பார்கள். அவர்கள் கடவுளைப் பற்றி எங்களிடம் பேசுகிறார்கள். அவர்கள் என் சகோதரனைப் போல் கெட்ட வார்த்தைகள் பேசுவதில்லை. பொதுவாக அவர்கள் காலையில் காபி குடிப்பார்கள். அவர்கள் கண்ணாடி மற்றும் வேடிக்கையான உள்ளாடைகளை அணிவார்கள். தாத்தா பாட்டி புத்திசாலி. அனைவரும் ஒரு பாட்டி மற்றும் தாத்தாவைப் பெற முயற்சிக்க வேண்டும். அவர்கள் எங்களுடன் பிரார்த்தனை செய்து எங்களை முத்தமிடுகிறார்கள். கிராண்ட்பா பூமியில் புத்திசாலி மனிதன்! எனது ஐ போனுக்கு வந்தது.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.