-
Posts
312 -
Joined
-
Last visited
-
Days Won
1
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by வைரவன்
-
காரணம்: இது வீரப்பனின் கதையின் இன்னொரு பரிமாணம் அப்படியா? அப்ப நான் ஒரு பேய்க்காய் என்று சொல்றியள் இருக்கட்டும் இருக்கட்டும்
-
@வீரப் பையன்26 நீங்கள் இந்த படத்தை இன்னும் பார்க்கவில்லை யா? உங்களின் கதாநாயகனது படம் இது. நீங்கள் முதல் ஷோ பார்த்து இருப்பீர்கள் என நம்புகிறேன்
-
சுனாமி நேரத்தில் முதலில் பேரலை வந்தது, பின் புலிகள் வந்தனர் மக்களுக்கு உதவ. அவர்கள் தோற்றபின், வியாபாரிகள் எம் பிரதிநிதிகள் என்ற வேடம் போட்டு வந்தனர். மக்களின் எந்த இடரையும் களைய விருப்பின்றி காலம் கடத்தினர். மக்கள் இம் முறை அவர்களுக்கு பாடம் படிப்பித்தனர். இன்று தேசியப்பட்டியல் மூலம் தெரிவான, கடல் சூழா ஒரு இடத்தில் பிறந்து கடல் அலைகளில் கால்கள் நனைக்காது உப்புக் காற்றை கொஞ்சம் தானும் சுவாசிக்காது மலையகத்தில் வாழ்ந்த ஒருவர் கடல் வள , மீன் பிடித்துறை அமைச்சராகியவுடன் மீனவர்களை நோக்கி ஓடோடி வருகின்றார் துயர் துடைக்க! இது தான் மக்கள் சேவை. தமிழ் தேசியம் வாழ, முதலில் தமிழ் மக்கள் வாழ வேண்டும். அதற்காகத்தான் தமிழ் மக்கள மாற்றத்தை கோரினர். இப்போதைக்காவது அது நிகழ்கின்றது. தமிழ் கட்சிகளின் கடைசிக் கோவணமும் உருவப்பட்டுக் கொண்டு இருக்கு இப்போது.
-
யாழில் பேரிடர் பணியில் கடற்றொழில் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் களத்தில்! Published By: DIGITAL DESK 7 28 NOV, 2024 | 05:31 PM தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினால் பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் பல பிரதேசங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் இடைத்தங்கள் முகாம்களில் தஙகவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் யாழ் மாவட்டத்தில் பல பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களுக்கான உடனடி தேவைகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அதே போன்று தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஸ்ரீபானந்தராஜா அவர்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் நலன்கருதி நடமாடும் மருத்துவ சேவைகளை ஒழுங்குப்படுத்தி நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளையும் மேற்கொண்டு வருகின்றார். தற்போது முதல் கட்டமாக யாழ் இந்து மகளிர் கல்லூரியில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கான மருத்துவ சேவை வழங்கப்பட்டுவருகின்றது." அதே வேளை தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி அவர்களும் இடைத்தங்கல் முகாங்களில் உள்ள மக்களை சந்தித்து மக்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றார். அதே போன்று வடமராட்சி பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் அவர்களும் களப்பணியில் நின்று மக்களுக்கு தேவையான உதவிகளை களத்தில் நின்று புரிந்து வருகின்றார் . https://www.virakesari.lk/article/199941
-
ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்.: கட்டாயம் வாசிக்கவும் தோழர்களே
வைரவன் replied to வைரவன்'s topic in ஊர்ப் புதினம்
கட்டுரையின் நோக்கம் வரிக்கு வரி ஜேவிபி யை பின்பற்றச் சொல்வதல்ல. தோற்ற பின்னரும், தலைமை அழிக்கப்பட்ட பின்னரும், வெறுமனே வெறுப்பை உமிழ்ந்து கொண்டு இருக்காமல் சரியான செயற்திட்டங்களுடன், சகிப்புத்தன்மையுடன் பொறுமையாக, சில பல விட்டுக் கொடுப்புகளுடன், நெகிழ்வுத் தன்மை யை காட்ட வேண்டிய இடங்களில் காட்டி, மக்கள் மீது உண்மையான அக்கறையையும், நம்பிக்கையையும் வைத்து இயங்கினால் காலம் ஒரு நாள் எமக்கு சாதகமாக மாறும் என்பதையே. நான் வைரவன். என் பெயரை தவறாக எழுதியமைக்கு பிராயச்சித்தமாக வடை மாலை சாத்த வேண்டும் எனக்கு. -
இன்றைய ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்.: தியாகங்களின் பெறுமதி? ஜனதா விமுத்திப் பெரமுன (ஜே.வி.பி) ஆயுதப் புரட்சி ஒன்றின் மூலம் அதிகாரத்தை கைப்பற்ற முடியுமென்று நம்பி, இரண்டு முறை ஆயுதக் கிளர்சியில் ஈடுபட்டது. இரண்டு தடவைகளும் படு மோசமான அழிவை சந்தித்தது - இறுதியில் பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்களையும் இழந்து போனது. மகாவலியாற்றில் தினமும் சடலங்கள் மிதந்து கொண்டிருந்தன. அதன் தலைவர் (ருகுணு) றோகண விஜயவீர படுகொலை செய்யப்பட்டார். அவர் அரை உயிரில் இருக்கும் போதே எரியூட்டப்பட்டதாகவே பின்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஜே.வி.பியின் உறுப்பினர்களை அழித்தொழித்த விடயத்தில் உள்ளுக்குள்ளும் சரி, சர்வதேச ரீதியிலும் சரி அவர்களுக்கு எந்தவொரு நீதியும் கிடைக்கவல்லை. ஆனால் தங்களுக்கான நீதியென்பது அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் என்னும் உறுதியுடன் தங்களை புதுப்பித்துக் கொண்டு, ஜனநாயகத்தை அஸ்திபாரமாகக் கொண்டு, தங்களையொரு அரசியல் ஸ்பானமாக கட்டியெழுப்பினர். இந்தக் காலத்தில் அவர்களை அதிகாரத்தை கைப்பற்றக் கூடிய ஓரு தரப்பாக எவருமே கருதியதேயில்லை – ஆனால் அவர்கள் தொடர்ந்தும் நம்பிக்கையுடன் பயணித்தனர். அதிகாரத்தை நோக்கிச் செல்வதற்கான, ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் உச்சபட்சமாகப் பயன்படுத்திக் கொண்டு உழைத்தனர். அவர்களின் கடின உழைப்பு அவர்களை கொழும்பின் அதிகாரத்திற்கு கொண்டுவந்திருக்கின்றது. எந்த அரச படைகள் அவர்களை நிர்மூலமாக்கியதோ, அந்தப் படைகளின் தலைமைத் தளபதியாக ஜே.வி.பியே இருக்கும் அரசியல் சூழல் உருவாகியிருக்கின்றது. ஆயுதப் போராட்டத்தை நம்பிய போதிலும், தோல்வி தந்த படிப்பினைகளிலிருந்து கற்றுக்கொண்டனர் - ஆயுதங்களின் மூலம், தாங்கள் விரும்பும் அதிகாரத்தை, ஒரு பேதுமே கைப்பற்ற முடியாதென்பதை புரிந்து கொண்டு, சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றங்களை உள்வாங்கிய அதே வேளை, தங்களின் அடிப்படையான கொள்கைகளையும் விட்டுக்கொடுக்காமல் ஒரு அதிகாரத் தரப்பாக எழுச்சியுற்றிருக்கின்றனர். மார்க்சியம் தொடர்பில் பேசிய போதும் கூட, தற்போது யதார்த்தவாதத்திற்கே முன்னுரிமையளிக்கும் ஒரு அரசியல் ஸ்பானமாக தங்களை மாற்றியிருக்கின்றனர். இந்தப் பின்புலத்தில் நோக்கினால் அவர்களது தியாகங்கள் வீண் போகவில்லை. ஜே.வி.பி அதன் இலக்கில் வெற்றிபெற்றுவிட்டது. நமது சூழலை உற்று நோக்கினால் என்ன தெரிகின்றது? ஆயுத விடுதலைப் போராட்டத்தின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றப் புறப்பட்டு, 1990களில் ஜனநாயக நீரோட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட, டெலோ. ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் (டி.பி.எல்.எப்) ஆகிய அரசியல் கட்சிகளின் வளர்ச்சி என்ன? வடக்கு கிழக்கில் இவர்களுக்கு இருக்கின்ற அரசியல் கட்டமைப்பு என்ன? மக்கள் ஆதரவு என்ன? ஏதாவது இருக்கின்றதா? இலங்கை தமிழரசு கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டதன் மூலம், பெற்றுக்கொண்ட வெற்றியை, தனிக் கட்சியாக - ஆகக் குறைந்தது ஒரு கூட்டாகக் கூட தக்கவைக்க முடியாத கையறுநிலைக் கட்சிகளாகவே இருக்கின்றனர். மறுபுறம், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழிவுற்று, பதினைந்து வருடங்களாகின்றது. கடந்த பதினைந்து வருடங்களில் அந்த அமைப்பில் எஞ்சியவர்களால் புதிய சூழலுக்கான அரசியல் ஸ்பானமொன்றை கட்டியெழுப்ப முடிந்ததா? புலிகள் அமைப்பிலிருந்து, ஆகக் குறைந்தது, சில முனனேற்றகரமான சிந்தனையாளர்கள் கூட வெளித்தெரியவில்லையே – ஏன்? இத்தனை புலம்பெயர் அமைப்புக்கள் என்ன செய்திருக்கின்றன? ஏன் முடியவில்லை. ஜனநாயக பேராளிகள் என்னும் பதாகைகளையெல்லாம், தமிழ் மக்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதைத்தானே, கடந்த பொதுத் தேர்தல் நிரூபித்திருக்கின்றது. றோகண விஜயவீரவும் கொல்லப்பட்டார் - ஜயோ – தலைவர் போய்விட்டாரே என்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கவில்லையே அந்த அமைப்பு – அதே வேளை பழிவாங்கும் அரசியலையும் செய்ய முயற்சிக்கவில்லை – ஏனெனில் ஒரு அரச இயந்திரத்தை பழிவாங்க முடியாது – அதற்குப் பதிலாக அதனையே கைப்பற்றும் உக்திகள் பற்றியே ஜே.வி.பி சிந்தித்தது. சாதித்தது. எனவே தியாயங்களுக்கான பெறுமதி என்பது, வருடம் தோறும் விளக்கேற்றுவதுடனும், சில மரக் கண்றுகளை விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் பெற்றோருக்கு வழங்குவதுடன் முடிந்துவிடுவதில்லை. நம்வர்களது தியாயங்களுக்கான பெறுமதி என்பது, புதிய சூழ்நிலைகளுக்கான செயலிலேயே தங்கியிருக்கின்றது.
- 12 replies
-
- 10
-
தமிழ் இந்து‘ வில் ‘இலங்கைத் தேர்தல்கள் உணர்த்தும் செய்தி என்ன?‘
வைரவன் replied to nunavilan's topic in சமூகவலை உலகம்
தீபச்செல்வனிடம் இருந்து ஒரு நேர்மையான கட்டுரையை எப்படி எதிர்பார்க்கலாம்? இறுதி யுத்த காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்து விட்டு அப்படி போகவே இல்லை என்பவர். அது கூட OK ஆனால் அங்கிருந்து வந்தபின் டக்ளசின் ஆதரவாளராக, சிறிதர் தியேட்டரில் இருந்து இயஙகியவர் ( photo ஆதாரமும் இருக்கு) தன் தங்கையை புலிகள் பலவந்தமாக இறுதி யுத்தத்திற்கு சேர்த்த போது எதிர்த்து கவிதை எழுதியவர் எழுதி விட்டு புலிகள் அப்படி செய்யவே இல்லை என்பவர் ( அக் கவிதையும் சேமிப்பில் உள்ளது) இந்தியாவில் கொடுக்கும் பேட்டிகளில் உண்மைகளை திரித்து பதில் அளிப்பவர். புனைவை செய்தியாக்கி அதை வியாபாரமாக்கும் வியாபாரி பொறுக்கிகளின் கடைசி புகலிடம் தேசியவாதம். -
எழுதியது உது தான். யாழ்பாணிகளிடம் மண்டியிட்ட ஒரு சமூகம் இன்று அமைச்சராகி வந்து யாழ்பாணிகளின் குறையை தீர்க்கும் அளவுக்கு அதிகாரம் பெற்றதை கண்டதும் வெளிவந்த பச்சை துவேசம். வர்க்க வேறுபாட்டின் மூலம் சக தமிழனையே வெறுக்கும் மேட்டுக்குடித் தனம். இதே வெறுப்பைத் தான் அசானி மீதும் காட்டியதும். கொழும்பான் மீது நேற்று காட்டியதும். இப்படி அப்பட்டமாக தன்னை வெளிக்காட்டி விட்டு ஆயிரம் சாக்குப் போக்குகள். அதை ஆதரிக்கவென இன்னொரு குழு. நல்ல வேளையடாப்பா உங்களுக்கு தனி நாடு கிடைக்கவில்லை.
-
ஐயா, உங்களை போன்றவர்கள் தாம் எம் இனத்தில் அதிகம். ஊரிலும் அதிகம் தமிழனை சாதி ரீதியாக பிரதேச ரீதியாக மத ரீதியாக பிரித்து பார்ப்பதில்லை. ஆனால் அல்வாவாயன் மீரா போன்றோரின் குரல்களை எதிர்ப்பதும் இல்லை. எதிர்க்கப்படாத குற்றம் என்பது ஆதரிக்கப்படும் குற்றம். எனக் கொள்ளப்படும் இனியாவது இப்படியான பின்னூட்டம் எனும் விடம் பரவும் போது எதிர்த்து குரல் கொடுங்கள்.
-
எனக்கு பிடித்திருப்பத் உரு உமக்கு பிடித்திருப்பது பச்சை இனவாதம். தமிழனுக்குள்ளும் இன வேறுபாட்டை கண்டு பிடிக்கும் நச்சு இனவாதம். உம்மைப் போன்றவர்கள் எம் இனத்தின் பெரும் சாபம். இந்த மாவீர வாரத்தில் நீர் மற்றும் வியாபாரி மீரா கக்கியது பச்சை யாழ் மையவாதம். திருந்துங்கள் இனியாவது
-
எவ்வளவு வன்மம் எவ்வளவு வெறுப்பு எவ்வளவு பொறாமை உவ்வளவும் யார் மீது? சக தமிழன் மீது காரணம்? அவன் மலையக தமிழன் என்பதால். இப்படியே வெள்ளை காரனுக்கு குண்டி கழுவிக் கொண்டு வெறுப்பை கொட்டி சாகுங்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் வாழும் மக்கள் உங்களை போன்ற அற்பர்களை கை கழுவி நாளாச்சு
-
பச்சை யாழ்ப்பாண மையவாதம். உதுவே சிங்கள அமைச்சர் அல்லது வெள்ளைத்தோல் வெள்ளைக்காரர் வந்து குறை கேட்டிருந்தால் அப்டியே புல்லரித்து இருக்கும். மலையக தமிழர் அமைச்சராகி வந்து கேட்டவுடன் மனசுக்குள் அப்பிக் கிடக்கும் அழுக்கை வெட்கமின்றி இங்கு கொட்டுதுகள் வெளிநாட்டு க்கு வந்து வெள்ளைக் காரநிடம் அகதி கோரிக்கை வைத்து பிழைத்த கூட்டம்.
-
சார், ரஜினியை சீமான் சந்தித்தது பற்றி ஒரு வரியில் சொல்ல முடியுமா? ஓம் சங்கியை சந்தித்த monkey நன்றி சாரே.
-
உண்மைகளை போட்டு உடைக்கும் சுமந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பை முதலில் உடைத்து வெளியேறியவர் யார் எதற்காக போன்ற விடயங்களை தெளிவாக கூறுகின்றார்.
-
*நிகழ்ச்சி நிரல்* 6.30 ஆரம்பம்,அறிமுகம் (9am Toronto 2 pm London UK) 6.35 கனடா அமைப்பாளர் உரை 6.45 கருத்து பகிர்வு *Dr.அருள்கோகிலன்* தேசியபுத்திஜீவிகள் அமைப்பு வடமாகாணம் 7.30 கேள்விபதில்கள் 8.30 நிறைவுரை. Topic: புலம்பெயர் தோழர்களுடன் விசேட கூட்டம் Time: Oct 27, 2024 06:00 PM Colombo Join Zoom Meeting https://gurus-club.zoom.us/j/81920505564?pwd=8Q3PB3qGPqPpqnqGOPq9CvzWJ4B6br.1 Meeting ID: 819 2050 5564 Passcode: 271786
-
From the album: படங்கள்
-
தமிழரசு விரும்பினால் எம்முடன் இணையட்டும்; சுரேஷ் பிரேமச்சந்திரன்!
வைரவன் replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
சிறீதரன் என்னும், தன்னை தேசியத் தலைவர் என நினைக்கும் சுயநல கிருமிக்கு சொம்பு தூக்குவது யாரப்பா? அட இது பரபரப்பு ரிஷி! வேறு என்னாத்தை நைனா இவரிடம் இருந்து எதிர்பார்பது? -
மக்களை எப்படி ஏமாற்றலாம், அதன் மூலம் தம் சொந்த நிதி நிலையை உயர்த்தலாம் என அலையும் பிரிவின் அறிக்கை இது. பங்கு பிரிப்புச் சண்டை இன்னும் தீவிரமாக தொடர்கிறது.
-
அனைத்துக் கிளைப்பொறுப்பாளர்கள்> உபகட்டமைப்புப் பொறுப்பாளர்கள்> செயற்பாட்டாளர்களிற்கும்! வணக்கம் தமிழ்த்தேசியச் செயற்பாடுகளிலிருந்து ரகுபதி நீக்கப்பட்டுள்ளார். தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினால் உருவாக்கப்பட்டுக் கட்டமைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மரபுரீதியான நிர்வாக ஒழுங்கு விதிகளை மீறி> சுவிஸ் கிளையின் துணைப்பொறுப்பாளர் வி.ரகுபதி அவர்கள்> தேசியத்தலைவர் தொடர்பான உண்மைக்குப் புறம்பான தகவல்களைச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் பரப்பிவருகிறார். ஏற்கனவே கடந்த 2023 மாவீரர்நாளில்> தேசியத்தலைவரைச் சந்தித்தோமென்று கூறும் விடுதலைப்போராட்டத்தினைச் சிதைக்கும் குழுவொன்று> தேசியத்தலைவரின் மகள் துவாரகா என்றுகூறி போலியாக ஒரு பெண்ணை அறிமுகப்படுத்தியிருந்தமை யாவரும் அறிந்ததே. அதன் பின்னர்> இதுவொரு போலி நாடகமென எமது மக்கள் அதனை நிராகரித்திருந்தார்கள். இக்குழுவின் குறிக்கோள் யாதெனில்> தேசியத்தலைவரினால் உருவாக்கப்பட்ட அனைத்துலகத் தொடர்பகத்தையும் அதன் ஆளுகையின் கீழ் இயங்கும் கிளைகளையும் சிதைத்தழிப்பதேயாகும். இதன்மூலம்> விடுதலைப்போராட்டச் சிந்தனையை மக்கள் மனங்களிலிருந்து அகற்றுவதாகும். இக்குழுவிலிருந்த பலர் உண்மை புரிந்து வெளியேறியுள்ள நிலையில்> புதிதாக ரகுபதியும் வேறு சிலரும் உள்வாங்கப்பட்டதாக ஏற்கனவே தகவல்கள் கிடைத்திருந்தன. இவற்றை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் ரகுபதி அவர்கள்> தேசியத்தலைவரைச் சந்தித்ததாகவும் ஆரத்தழுவியதாகவும் அவருடன் உணவருந்தியதாகவும் போன்ற கற்பனைக்கதைகளை உருவாக்கிக் கதைத்துவருகிறார். இயக்கத்தின் நிர்வாக ஒழுங்குகளை மீறி> சுவிஸ்கிளைப் பொறுப்பாளரின் ஒப்புதலின்றிப் பயணங்களை மேற்கொண்டு> தேசியத்தலைவரின் சிந்தனையைப் புறந்தள்ளி> தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை வேரறுக்கும் குழுவொன்றினைச் சந்தித்து உரையாடி> தமிழ்த் தேசியக் கட்டமைப்புகளுக்கெதிரான தரப்புகளோடு இணைந்து மக்களைக் குழப்புகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றார். இவ்வாறாக> அனைத்துலகத் தொடர்பகத்திற்கும்> சுவிஸ் கிளைக்கும் தெரியாமல் உள்ளகப் பயன்பாட்டிற்கு மட்டுமானது. தான்தோன்றித்தனமாகச் செயற்பட்டு> தமிழீழத் தேசியத்தலைவரின் வீரப்பண்புகளையும் விடுதலைப்புலிகளின் மரபுவழிவந்த நிர்வாகப் பொறிமுறையையும் முற்றாக நிராகரித்து> சுவிஸ்கிளைப் பொறுப்பாளரும் அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளரும் இனி நானே என்றும் இதனைத் தேசியத்தலைவர் அவர்களே சொன்னதாகவும் கிளைப்பொறுப்பைத் தனதாக்கிக்கொண்டார். இவ்வாறாக> தமிழீழத் தேசியத்தலைவரின் கட்டமைப்பு சார்ந்த நிர்வாக ஒழுங்கு விதிகளை மீறி> சுவிஸ் கிளைமீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு எதிராகச் செயற்பட்ட சுவிஸ் கிளையின் துணைப்பொறுப்பாளர் வி. ரகுபதி அவர்களை> அனைத்துலகத் தொடர்பகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்துக் கட்டமைப்புசார் பொறுப்பு நிலைகளிலிருந்தும் செயற்பாடுகளிலிருந்தும் நீக்கம் செய்கிறோம். எனவே> ரகுபதி அவர்களுடனான சகல தொடர்புகளையும் நிறுத்திக் கொள்ளுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்