Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்க்காவலன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஊர்க்காவலன்

  1. கொஞ்சம் பொறுங்கோ. தலைவன் Trump பங்குச்சந்தையில எல்லாம் வாங்கி முடிஞ்ச பிறகு நிலைமை சாதாரணமா வந்திடும். பிறகு திருப்பி வித்திட்டு மறுபடியும் பங்குச்சந்தை இறங்கிறதுக்கு இப்பிடி எதாவது செய்யலாம்.
  2. இவையள் என்னமோ திறம் மாதிரி. டெல்லி, மும்பை போன்ற விமனநிலையங்களில தமிழ் ஆட்களை இவையள் படுத்திற பாட்டுக்கு இது பரவாயில்லை என்று தான் சொல்லனும்.
  3. ஏன் சும்மா இதுகளுக்கு சண்டை பிடிப்பான்? கொஞ்சம் பொறுங்கோ. ரஜனி, கமல், விஜய் இந்த வரிசை அடுத்த தேர்தலில் இன்னும் ஒரு நடிகருடன் தொடரும். ஒரு அரசும் அதனை சார்ந்து இயங்குகின்ற உளவுத்துறையும் சும்மாவே! 🤣
  4. மரியாதையை என்பது ஒருவரின் காலில் விழுந்து கொடுப்பது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எழுந்து நிற்பது, கையெடுத்து வணக்கம் வைப்பது போன்றவைகளும் மரியாதையின் அடையாளம் தானே. ஒருவரின் காலில் விழும் பொழுது எம்மை நாமே தாழ்த்துகிறோம் என்பது என்னுடைய கருத்து. கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி. காணொளி நான் இணைக்கவில்லை. 😀
  5. குசும்புக்காரங்கள் 🤣 இன்னும் தங்களிட்ட அதிக கடன் வாங்குங்க எண்டதை எப்பிடி சுத்திவளச்சு சொல்லுறாங்கள்.
  6. நான் இது வரையும் யாரின் காலிலும் விழுந்ததில்லை. அதை ஆதரிப்பவனும் அல்ல. அண்மையில் நடந்த ஒரு நிகழ்வில் பேராசிரியரின் காலில் பல மாணவர்கள் விழுந்து கும்பிட்டு சென்றதை அவதானித்தேன். அதை அந்த பேராசிரியர்களும் ரசித்திருக்க வேண்டும் என்பது என்னுடைய அனுமானம். உண்மையிலயே காலில் விழுதல் என்பது ஒரு பண்பா? ஒருவருக்கு மரியாதையை செலுத்தும் முறையா? எதாவது சங்க இலக்கியங்களில் இது பற்றி கூறப்பட்டிருக்கிறதா?
  7. நான் விடியோவை பாக்கவும் இல்லை, பாக்கிற நோக்கமும் இல்லை. என்னடா தேர்தல் நெருங்குது இன்னும் விஜயலட்சுமியை காணலையே என்று பார்த்தேன். தேர்தல் முடியிற வரைபொறுத்திருப்பம். அந்தம்மா பிறகு காணாமல் போய் அடுத்த தேர்தலுக்கு திரும்பி வருவா. பிஜேபி, திமுக இந்த ரெண்டும் இந்த வழக்கை முடிக்கவே விடாது.
  8. தலைவர் இறந்து விட்டார் என்பதை இந்தியா ஸ்ரீலங்கா போன்ற நாடுகள் அடுத்த நூறு ஆண்டுகளுக்கு அல்லது எப்போதுமே தெளிவுபடுத்த போவதில்லை. அப்படி தெளிவுபடுத்துவதாக இருந்தால் அவர்கள் மே 2009 செய்திருக்க முடியும். அவர்களை பொறுத்த வரை தமிழர்களுக்கு இந்த குழப்பம் இன்னும் ஒன்று அல்லது இரண்டு தலைமுறைகள் அழியும் வரை இருக்க வேண்டும். இதை வைத்தே தமிழர்கள் தங்களுக்குள்ள குழுக்களாக மோதி நேரத்தை செலவிடுவது அவர்களுக்கு சாதகமானது. நாமும் 16 ஆண்டுகளாக வெற்றிகரமாக அந்த நிகழ்ச்சி நிரலை செய்துகொண்டு இருக்கிறோம். 02.08. சுவிசில் அஞ்சலிக்கூட்டம் நடத்தியவர்கள் அடுத்து வரும் ஆண்டுகளில் தலைவருக்கும் மாவீரர் தினத்தில் தான் அஞ்சலி செலுத்தப்படும் என்று கூறியிருக்கிறார்கள். அடுத்த மாவீரர் தினம் இரண்டாக நடந்தாலும் நடப்பதற்கு வாய்ப்புள்ளது. மே 18 என்பது தலைவருக்கான அஞ்சலி நாளாக அமையாது. அது தமிழின அழிப்பு நாள் என்றே தொடர்ந்து இருக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
  9. உண்மையிலையே இந்த உல்லாசப்பயணிகளை தாக்கிய தீவிரவாதிகள் பாகிஸ்தானியர்களா, இந்தியர்களா, முஸ்லிம்களா? எனக்கு இதுவே சந்தேகமாக தான் உள்ளது. தீவிரவாதிகள் அப்படி முட்டாள்களா என்ற சந்தேகமும் இருக்கிறது. யாருடைய ஆதாரத்திற்கு ஏதோ நடக்கிறது. ஆசியாவின் உக்ரைனாக உருவெடுத்திருக்கும் பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். இவற்றை எல்லாம் விட அதிர்ச்சியாக உள்ளது யாழ்கள அங்கத்தவர்களின் வன்ம மனநிலை.
  10. PI காயின் விலை கிட்டத்தட்ட 300% வரை உயர்வு!. இந்த ஏற்றத்திற்கு என்ன காரணம்? By Vignesh Rathinasamy Published: Thursday, February 27, 2025, 18:57 [IST] கிரிப்டோ கரன்சிகளில் ஒன்றாக ஆதிக்கம் செலுத்தப்படும் என அறியப்பட்ட PI காயின் விலை இப்பொழுது 300% உயர்வு ஏற்றம் கண்டுள்ளது. பை நெட்வொர்க்கால் உருவாக்கப்பட்ட பை நாணயம், கடந்த பிப்ரவரி 20 அன்று 1.84 டாலருக்கு (சுமார் ரூ. 160) க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. கிரிப்டோ மார்கெட்டில் ஹிட் அடித்த பை நெட்வொர்க் காயின், கடந்த சில நாட்களாக கடும் சரிவை சந்தித்து வந்தது. இந்தநிலையில், பை காயின் (Pi Coin) அதன் சமீபத்திய Open Mainnet துவக்கத்திலிருந்து 290% க்கும் மேலாக உயர்ந்துள்ளது. அதன் விலை $2.16 ஐ தாண்டியுள்ளது. இதன் காரணமாக பிட்காயின் (Bitcoin) மற்றும் எத்தெரியம் (Ethereum) போன்ற முக்கிய கிரிப்டோகரன்சிகளை பை நாணயம் மிஞ்சியுள்ளது. பை நாணயத்தின் அதிரடி ஏற்றம், பிட்காயின், எத்தெரியம் மற்றும் டோகோயின்( Dogecoin) போன்ற முக்கியமான நிறுவனங்களைவிட முன்னிலையில் உள்ளது. இந்த மூன்று க்ரிப்டோகரன்சிகளும் கடந்த வாரத்தில் 9-20% வரை வீழ்ச்சியடைந்துள்ளன. ஓபன் மெயின்நெட் வெளியீடு இப்போது பயனர்கள் தங்கள் பை நாணயங்களை பை நெட்வொர்க்கிற்கு வெளியே மாற்ற அனுமதிக்கிறது, இது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மைல்கல் ஆகும். கூடுதலாக, OKX, Bitget மற்றும் CoinDCX உள்ளிட்ட முக்கிய பரிமாற்றங்களில் அதன் பட்டியலிடல், அணுகல் மற்றும் பணப்புழக்கத்தை அதிகரித்துள்ளது. ஆனால் இந்த வளர்ச்சி நிலையானதா, அல்லது பை காயின் என்பது மற்றொரு Crypto Bubble என்று கேள்வி எழுந்துள்ளது. Crypto Bubble என்பது கிரிப்டோகரன்சிகளின் மதிப்புகள் திடீரென உயர்ந்து, பின்னர் மிக விரைவாக விழும் பரபரப்பான சந்தை நிலை. Bubble மதிப்பில் வீழ்ச்சி ஏற்படும் போது, பல முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும். பை நாணயத்தின் வளர்ச்சிக்கு என்ன காரணம்: Open Mainnet அறிமுகம் Pi Coin-இன் முக்கியமான திருப்பு முனையாக அமைந்தது. ஏனென்றால், பை நாணயங்களை மூடிய நெட்வொர்க்கிற்கு வெளியே முதல் முறையாக வர்த்தகம் செய்ய அனுமதித்தது. இந்த நடவடிக்கை முதலீட்டாளர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது மற்றும் சந்தை செயல்பாட்டைத் தூண்டியுள்ளது. வளர்ந்து வரும் பரிமாற்றப் பட்டியல்கள்: தற்போது பல பிளாட்பார்ம்கள் Pi Coin-ஐ ஆதரிக்கின்றன, இதனால் பரிவர்த்தகர்கள் எளிதில் வாங்கவும் விற்கவும் முடிகின்றது. அதிகமான அணுகல் வாய்ப்பு, இந்த உயர்ந்த ஈர்ப்பு, Pi Coin-இன் விலை அதிகரிப்புக்கும், முதலீட்டாளர்களின் ஈர்ப்பையையும் அதிகரிக்கும். Read more at: https://tamil.goodreturns.in/news/pi-coin-has-risen-by-around-300-since-its-recent-open-mainnet-launch-060025.html
  11. 24 மதங்களிற்கு முன்னர் தான் அவர்கள் அறிவித்திருந்தார்கள் விரைவில் சந்தைக்கு வரும் என்று. அன்று தொடக்கம் சில தளங்கள் அதன் பெயரில் விற்பனையை தொடங்கியிருந்தார்கள். அதாவது முற்பதிவு போன்றது. கையில் இல்லாத ஒன்றை மாறிமாறி விற்றுக்கொள்வது போன்றது. இதில் இப்பொழுது உள்ள சிக்கல் என்னவென்றால் Pi Network அவர்களை (இன்னும்) அங்கீகரிக்கவில்லை. அதாவது Pi wallet இல் இருந்து அவர்களிற்கு coins அனுப்ப முடியாது. உங்களின் தனிப்பட்ட தகவல்களை நீங்கள் உறுதிப்படுத்தியவுடன் அது வரை மைனிங் செய்தவை உங்களின் wallet க்கு வந்து விடும். இப்பொழுது வரை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பட்ட விற்பனை தளங்களை இங்கே சென்று பார்வையிடலாம். https://minepi.com/kyb-list/?_gl=1*ioiuju*_up*MQ..*_ga*NDQxMDE2ODU2LjE3NDA0MDczMDM.*_ga_3HN8DY36WY*MTc0MDQwNzMwMy4xLjEuMTc0MDQwNzMwNS4wLjAuMA.. நான் கிட்டத்தட்ட இதில் ஒவ்வொரு நாளும் என்ன நடக்கிறது என்பதை கவனித்துக்கொண்டு வந்திருக்கிறேன். உதவிகள் தேவை என்றால் அறியத்தாருங்கள்.
  12. உத்தியோக பூர்வமாக சில நாட்களிற்கு முன்னர் தான் சந்தைக்கு வந்திருந்தது. நீங்கள் சொல்வது எல்லாம் fake coins. ஒரு வருடத்திற்கு முன்னர் சீக்கிரமாக சந்தைக்கு வரும் என்று அறிவித்திருந்தார்கள். அந்த அறிவிப்பு வந்ததுமே பல தளங்கள் அதன் பெயரில் விற்கத்தொடங்கிவிட்டார்கள் (IOU ) என்று சொல்வார்கள் இதனை. உங்களின் miningrate மிக குறைவு தான். அது தொடர்ச்சியாக குறைந்து கொண்டே போகும். இது சர்வ சாதாரணம் தான். முயற்சியை கைவிடாமல் தொடருங்கள். தொலைநோக்கில் பயன் தரலாம். தராமல் போனாலும் இழப்பதற்கு ஒன்றும் இல்லை. Web3 இணைய வடிவம் பரவலாக தொடங்கும் பொழுது இதன் விலை அதிகரிக்கலாம். 10 வருடம் கூட ஆகலாம்.
  13. கடந்த 20.02.2025 இலிருந்து இந்த coins சந்தைக்கு வந்திருக்கிறது. இது crypto உலகில் தூரநோக்கில் பெரும் மாற்றத்தை கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு இந்த ப்ரொஜெக்ட் தொடங்கப்பட்டது. ஆரம்பத்திலிருந்தே நான் இதில் இணைத்திருக்கிறேன். கடந்த 5 வருடங்களாக இந்த திட்டம் சோதனை முயற்சியில் இருந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் விரும்பியவர்கள் pi coinsஇனை கைத்தொலைபேசி மூலம் மைனிங் செய்துகொள்ளும் வாய்ப்பும் இருந்தது. இது ஒரு ஏமாற்று வேலை, snowball system என்றெல்லாம் கல்லெறிகள் விழுந்த போதும் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டு தான் இருந்தது. இப்பொழுது 55 மில்லியன் மக்கள் இணைந்து இதனை சந்தைக்கு கொண்டுவந்திருக்கிறார்கள். இந்த 55 மில்லியன் மக்களும் தங்களின் தகவல்களை அரசபத்திரம் மூலம் உறுதிப்படுத்திய பின்னரே சந்தைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். எந்த விதமான அறிவியல் அறிவும் இதற்கு தேவையில்லை. ஒரு கைத்தொலைபேசி போதும். சந்தைக்கு வந்து முதல் நாளே எதிர்பார்ப்பினை விட அதிக விலைக்கு சென்றது. இதன் அடுத்தகட்ட வளர்ச்சி Web3 நோக்கியது. யாழ் உறவுகள் யாராவது இந்த coins வைத்திருக்கிறீர்களா?
  14. காணொளியில் நேர்காணல் கொடுக்கும் நிஷா என்பவர் கடந்த ஆண்டு நடுப்பகுதியிலிருந்தே போஸ்கோவின் அமைப்பான Global Tamil Movement என்ற அமைப்பிலிருந்து வெளியேற்றுவதாக அவர்களுடைய முகநூலில் அறிவித்திருந்தார்கள். நிஷாவின் தான்தோன்றித்தனமான செயல்பாடுகளிற்கும் தங்களிற்கும் சம்மந்தம் இல்லை என்பதையும் அறிவித்திருந்தார்கள். அதன் பின்னர் இப்பொழுது போஸ்கோ கைது செய்யப்படுகிறார். நிஷா போஸ்கோவிற்காக பேசுகிறார், வெளிச்சத்திற்கு வருகிறார். அவருடைய அமைப்போ அல்லது அவருடன் சேர்ந்து வேலைசெய்தவர்களின் முகநூலிலோ கூட இந்த செய்தி பகிரப்படவில்லை. ஒன்றுமே புரியவில்லை. https://www.facebook.com/photo/?fbid=813556027616050&set=a.553001930338129&locale=de_DE
  15. இது யாழ் மீது இருந்த நம்பிக்கையினை குறைக்கிறது. போற போக்கில் இப்படியான அவதூறூகளை (நிரூபிக்கப்படும்வரை அது அவதூறு தான்) எழுதிவிட்டு அதற்கு நக்கலாக வேறு பதில் சொல்வதை எப்படி யாழ் நிர்வாகம் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கிறது? அவர் இன்னொரு பெயரில் இருந்தார் என்பது அவரே சொன்னது தான். அதைப்பற்றி அவரே கலவைப்படாத போது நிர்வாகம் அந்த திரியை வெளியிடுவதில் என்ன தயக்கம்? ஒன்றில் அந்த திரியை வெளியிட்டு அது அவதூறு இல்லை என்று நிரூபிக்க வேண்டும். இல்லையென்றால் அவதூறு பரப்பியவர்களிற்கு எச்சரிக்கை கொடுத்து அந்த அவதூறு கருத்தினை நீக்க வேண்டும். யாழ் நிர்வாகம் செய்யுமா?
  16. உங்களுக்கு உங்களுடைய சிந்தனை முரண் புரிகிறதா? ஆதாரம் காட்ட முடியவில்லை. பின்னர் உங்களுடைய குற்றசாட்டை நியாயப்படுத்தவதற்கு அவரை ஏன் கைதுசெய்யவில்லை, இவரை ஏன் கைதுசெய்யவில்லை என்று வருகிறீர்கள். மரிதாஸை கைதுசெய்யவில்லை என்றால், அவரின் கருத்தை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று எடுத்துக்கொள்ளலாம். அல்லது அவரிடமும் ஆதாரம் இல்லாமல் இருக்கலாம் . எல்லோருமே எதோ ஒரு யுகத்தின் அடிப்படையில் குற்றசாட்டை அடிக்கிக்கொண்டு போவது தான் இங்கே பிரச்சனை. பெரியார் பற்றி எனக்கும் நல்லபிப்பிராயம் இல்லை தான். அதற்காக கண் மூடித்தனமான குற்றசாட்டுகளை ஏற்றுக்கொள்ளமுடியாது தானே. இந்த திராவிடர் / தமிழர் சண்டையில் இரண்டு பக்கமுமே மனசாட்சியே இல்லாமல் நடந்துகொள்கிறார்கள். இனி இந்த திரிக்குள்ள எழுதிப் பயன் இல்லை🙈
  17. ஆதாரம் கேட்டல் அவர்களிடம் இருக்கிறது இவர்களிடம் இறக்கிறது என்று சொல்வது தான் இங்கே பிரச்சனையே. சரி அவர்களிடம் ரகசியமாக இருந்தது உங்களிற்கு எப்படி தெரியவந்தது?
  18. மலத்துடன் ஒப்பிடத்தக்க சொல்கிறார்கள். ஆனால் நான் தேடிய வரையில் ஆதாரம் அகப்படவில்லை. இருந்தால் இணைத்துவிடுங்கள். ஜெர்மனில் ஒரு பெரியாரிஸ்ட் திருவள்ளுவருக்கு சிலைவைத்துள்ளார். அவரிடம் கருத்துக்கேட்கலாம் 😁
  19. இந்த திராவிடம் / தமிழர் என்ற சண்டைக்குள் எனக்கு வேறு சில தெளிவுகள் தேவைப்படுகிறது. இங்கே கேட்பது சரியாக இருக்கும் என்று நினைக்கின்றேன். அதற்கு முன்னர் புலிகள் தங்களை திராவிடர்களாக கருத்தினார்களா என்றால் கருத்தியிருப்பார்கள் அல்லது கருதினார்கள் என்று கூட வைத்துக்கொள்வோம். ஏன் எங்களில் பலர் 2009ற்கு முன்னர் எங்களை திராவிடர் என்று தான் வரையறை செய்திருப்போம். இப்பொழுது புலிகள் இருந்தால் ஒரு வேளை அவர்களின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். சரி அதை விடலாம். என்னுடைய கேள்வி: cardwell எழுதிய புத்தகத்தின் பெயர் Comparative Grammar of the Dravidian or South-Indian Family of Languages. ஆனால் ஏன் தமிழ் மொழிபெயர்ப்பு திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்று மட்டுமே இருக்கிறது? அதில் அல்லது தென்னிந்திய மொழிகள் என்பதை ஏன் தவறவிட வேண்டும்? இது திருட்டுத்தனம் இல்லையா? இதை விமர்சனமாக வைக்கவில்லை. சந்தேகமாகவே வைக்கின்றேன். இன்னும் நிறைய கேள்விகள் இருக்கிறது. இதற்கான பதிலை கண்டு அந்த கேள்விகளை வைப்பதா இல்லையா என்று முடிவு செய்கிறேன்.
  20. எனது கருதும் இதுவே தான். முக்கியமாக எனக்கு கல்விக்கு இது மிகவும் உதவியாக இருக்கிறது. AI 2041 என்ற புத்தகத்தை பரிந்துரைக்கின்றேன். இந்த செயற்கை நுண்ணறிவில் பல ஆண்டு கூகிள், facebook போன்ற நிறுவனங்களில் தலைமை நிர்வாகியாக இருந்தவர் எழுதியது. செயற்கை நுண்ணறிவு மின்சாரம் போன்றது. அதனை கட்டுக்குள் வைத்துக்கொள்ள மனிதர்கள் பழகிக்கொண்டார்கள். அதுபோல AI தொழில்நுட்பமும். வேண்டுமா இல்லையா என்பதல்ல கேள்வி. அதனை இன்னும் பல நுற்றாண்டுகளிற்கு தவிர்க்கமுடியாது.
  21. ChatGPT திருடுகிறது என்ற கருத்தே ஒரு நகைச்சுவையானது தான். ஒரு இணையதளத்தில் "search" என்ற வசதி இருந்தாலே அது தகவல்களை எங்கோ பதிந்து வைத்திருக்கிறது என்று தான் பொருள். இப்பொழுது இந்த search வசதி இல்லாமல் ஒரு இணையமும் இல்லை. ChatGPT தன்னை தானே வளர்த்துக்கொள்ளும் ஒரு மிருகம். அதனை இனி நிறுத்தமுடியாது. ஆனால் அதற்கு தீனி போடுவது நாங்கள் தான் என்பதை மறந்து தான் இங்கே குய்யோ முய்யோ என்று குதிக்கின்றோம். அதை வளர்ப்பதால் எங்களுக்கு இணையங்களில் "லைக்" என்ற அங்கீகாரம் கிடைக்கிறது. அதில் எங்களுக்கு ஒரு சுகம் இருக்கிறது தானே. ChatGPT தகவல்களை உள்வாங்கி, அதனை செதுக்கி, பின்னர் எங்களுக்கு ஒன்றை தருகிறது. இந்த செதுக்கும் இடம் ஒரு "black box". உள்ளே என்ன நடக்கிறது என்பதை இனி மனித அறிவால் பிரித்து மேய முடியாது. அவ்வளவு தூரம் இடியாப்பச் சிக்கல் போன்றது அதன் அல்கோரிதம். அந்த இளைஞன் வெறுமனே தகவல் திருட்டு என்பதற்காக கொலைசெய்யப்பட்டிருக்க மாட்டார். தகவல் திருட்டு என்பது எல்லோருக்குமே தெரிந்த ஒன்று தான். கொலை என்றால் அதை தாண்டி அவருக்கு வேறு ஏதோ ஒன்று தெரிந்திருக்க வேண்டும். கையில் எப்பொழுது தொலைபேசி வந்ததோ அன்றோடு "privacy" க்கு சாவுமணி அடித்தாகிவிட்டது. முன்னர் எங்களுடைய புகைப்படத்தை யாராவது இணையத்தில் வெளியிட்டால் அதை நாம் விரும்பமாட்டோம். ஆனால் இப்பொழுது நாங்களாகவே இணையத்தில் ஏற்றுகிறோம். உங்களிடம் ஒரு இணையதளம் இருந்தால் ChatGPT அந்த தளத்தினை தொடர்புகொள்ளாமல் இருப்பதற்கு வேண்டும் என்றால் இப்போதைக்கு நீங்கள் செட்டிங் செய்துகொள்ளலாம். மற்றும்படி தனிப்பட்ட தகவல், பிரைவசி எல்லாம் எதிர்காலத்தில் ஊ ஊ ஊ தான். இதிலிருந்து தப்பிக்க அமேசான் காடுகளில் குடியேறி செருக்கு காட்டலாம்.
  22. இந்த "இந்து" கோவில்களிற்கு ஈழ தமிழர்கள் செல்வதில்லையா? இது ஈழ தமிழர்களிற்கு நடந்திருந்தால் அடிவாங்கிக்கொண்டு சும்மா இருந்திருப்போமா அல்லது திருப்பி அடித்திருப்போமா? அல்லது அன்பே சிவம் என்று உருட்டிக்கொண்டிருந்திருப்போமா என்ற சந்தேகம் எனக்கு தமிழர்கள் அதிகமாக வாழுகின்ற நாடுகளில் இப்படியான சம்பவங்களை பார்க்கும் போது எழும் கேள்வி. முன்னர் ஒரு முறை இத்தாலியில் சிங்களவர்கள் தமிழர்களின் விளையாட்டுவிழாவில் இப்படி சண்டித்தனம் காட்டினார்கள். அதையும் பார்த்துக்கொண்டு தான் இருந்தோம்.
  23. 4 கிலோமீட்டருக்குள் இவ்வளவு நடந்திருக்கிறதென்றால் கடைக்காரர்களையும் கொஞ்சம் சந்தேகப்பட தான் வேண்டி இருக்கிறது. காப்பீட்டு நிறுவனங்களின் நஷ்டஈட்டு தொகை, மற்றும் கொள்ளையடித்த நகைகளில் பாதி அல்லது முழுவதும் என்று இரட்டிப்பு லாபம் பார்க்கலாம். இப்படி தான் நடந்திருக்கவேண்டும் என்று சொல்லவில்லை. இப்படியும் நடந்திருக்கலாம் 😉
  24. ஓ.. திராவிட பண்பாடா. நான் எதோ புத்தகமும் தொல்திராவிட மொழியில வரப்போகுதாக்கும் என்று நினைச்சன். 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.