Everything posted by ஊர்க்காவலன்
-
5 வயது பேரனின் கேள்வி
உண்மையை சொல்லுங்கள்.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
கமலை இறக்கி பார்த்தார்கள். ரஜனியை இறக்கி பார்த்தார்கள். இப்பொழுது விஜய். பொறுமை புலம்பெயர்ந்தவர்களே. ஒரு சராசரி மனிதனுக்கு புரியும் படி இப்பொழுது எந்த அரசியல் காய் நகர்த்தல்களும் இடம்பெறுவதில்லை. நாம் பார்ப்பதையும் அவர்கள் பேசுவதையும் வைத்து எந்த முடிவிற்கும் வர முடியாது. 😁
-
பணப்பறிப்பு(Pig Butcher)
இதற்கு சிறந்த வழி prepaid கடனட்டைகள். தேவையென்றால் பணத்தை போட்டுவிட்டு உபயோகித்துக்கொள்ளலாம். கைத்தொலைபேசியில் இருந்து கடனட்டைக்கு பணப்பரிமாற்றம் சில வினாடிகளில் நடக்கிறது. கைத்தொலைபேசியில் இருந்து கைரேகை மூலம் தான் உள்ளே செல்ல முடியும். அப்படியே சென்றாலும் பணம் வெளியில் போகும் போது ஒரு தகவல் வரும்படி setting செய்துள்ளேன். இதையெல்லாம் தாண்டி உள்ளே போனாலும் எடுப்பதற்கு பெரிய தொகை பணம் இருக்காது. சமபலம் வந்தவுடனே எல்லாம் பிரித்து பிரித்து ஒவ்வொரு திசைக்கும் அனுப்பிவிடுவேன். அந்த மாத செலவிற்கு ஒரு தொகை மட்டும் இருக்கும். ஒரு மூன்று அடுக்கு பாதுகாப்புடன் தான் நடமாடுகின்றேன். 🤣
-
'இது நிச்சயமாக சிறந்த ஆரம்பம்', இரண்டு வாரங்களை அனுரகுமார சிறப்பாக பயன்படுத்தியுள்ளார், "சர்வதேச சமூகம் இலங்கைக்கு ஆதரவளிக்கவேண்டும்" - எரிக்சொல்ஹெய்ம்
நரிஊளையிட்டிருச்சு... இனி ஊஊஊ தான் 😂
-
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்கமாட்டோம்; பிரிட்டன், பிரான்ஸ் அறிவிப்பு
இந்த அணுகுண்டு பூச்சாண்டி எல்லா நாடும் எல்லா காலங்களிலும் செய்யிறது தான். அவ்வளவு முட்டாள்தனமாக எந்த நாடும் அணுகுண்டு பாவனைக்கு போகாது. இது முழு உலகத்தையும் எதிர்ப்பதற்கு சமன். இந்த சமாச்சாரம் சாதாரண மனிதர்கள் யூகிக்க மட்டுமே முடியும். ஒரு போதும் "இப்படி தான்" என்று உறுதியாக சொல்லமுடியாது. உதாரணமாக அமெரிக்க இந்த தாக்குதல் பற்றி ஏற்கனவே எச்சரித்திருந்தது. அப்படியிருந்தும் இதை இஸ்ரேல் அனுமதிருக்கிறது. யுகத்தின் அடிப்படையில் வேண்டும் என்றால் இஸ்ரேல் உலக நாடுகளிடம் அனுதாபம் தேடுவதற்கு வேண்டும் என்றே இந்த தாக்குதலை நிகழ்த்த விட்டிருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம். அதேவேளை ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். அந்த ஹெலிகாப்டர் பேரிச்சம் பழத்திற்கு போடும் அளவு கண்டிசனில் இருந்தது நமக்கு தெரியும். இந்த சம்பவத்தை வைத்துகூட ஈரானின் நவீன ஆயுத பலத்தை யுகத்தின் அடிப்படையில் கணக்கிட முடியும். வெளியில் வாய்ப்பேச்சில் எல்லோரும் வீரர்கள் தான். உள்ளே நிலைமை எப்படியென்று சண்டை வரும் போதுதான் தெரிய வரும்.
-
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்கமாட்டோம்; பிரிட்டன், பிரான்ஸ் அறிவிப்பு
ஈரானிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு கொடுக்கவிருக்கின்ற நாடுகளை நினைத்து தான் இஸ்ரேல் தடுமாறுகிறது என்று நினைக்கிறன். அதே வேளை இஸ்ரேலிற்கு அமெரிக்காவை தவிர வேறொரு நாடும் ஆக்கபூர்வமான ஆதரவை வெளிப்படுத்தவில்லை ஐ.நா. உட்பட. வெறுமனே ஈரானும் இஸ்ரேலும் ஒன்றோடு ஒன்று மோதுமாயின் ஈரானிற்கு சக்கை அடி விழும். இஸ்ரேலின் தொழில்நுட்பம் அப்படி.
-
புலம்பெயர் தமிழர்கள் vs புலம்பெயர் சிங்களவர்கள்
சிங்களவர்கள் நினைத்தால் மட்டுமே தமிழர்களிற்கு நன்மை கிடைக்கும் என்பது தான் இனவாதம். இதை ஒருவருக்கு ஒரு ஓட்டு உள்ள பல்லினங்களை கொண்ட நாடுகளில் இந்த இனவாதத்தை வேறு வழிகளில் சரி செய்வார்கள். பெரும்பாலும் பாராளமன்ற அமைப்பின் மூலம் நடைபெறும்.
-
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்கமாட்டோம்; பிரிட்டன், பிரான்ஸ் அறிவிப்பு
பிரிட்டன் மற்றும் பிரான்சின் இந்த முடிவுகள் புரிந்துகொள்ளக்கூடியவை தான். இருவருக்கும் உள்நாட்டில் பலஸ்தீனாவுக்கு ஆதரவான குடியேறிகள் அதிகம். இது உள்நாட்டிற்குள் தேவையில்லாத கலகங்களை கொண்டுவரும். ஏற்கனவே 1008 பிரச்சனை. இதுக்குள்ள எதுக்கு இந்த தேவையில்லாத பிரச்சனை என்று விலகியிருப்பார்கள். இந்த முடிவு தான் ஜெர்மனியும் எடுக்கும் என்று நம்பலாம்.
-
சுவிஸ் இளையராஜா கச்சேரி நிறுத்தம்
அனைவருக்கும் வணக்கம் வருகின்ற சனிக்கிழமை இளையராஜாவின் இசைநிகழ்ச்சி ஒன்று சுவிஸில் தாளம் வானொலி ஏற்பாடு செய்திருந்தது. அவர்கள் இப்பொழுதும் டிக்கெட் விற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மண்டபம் உத்தியோகபூர்வமாக அவர்களது இணையதளத்தில் நிகழ்ச்சி கான்செல் செய்யப்பட்டுள்ளது என்று அறியத்தந்திருக்கிறார்கள். இணையத்தில் டிக்கெட் இப்பொழுதும் வாங்கக்கூடியதாக இருக்கிறது. என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. எனவே யாரும் டிக்கெட் வாங்கி ஏமாற வேண்டாம். அல்லது நிகழ்ச்சி நடத்துபவர்களிடமே தொடர்பு கொண்டு நிகழ்ச்சி வேறு இடத்திற்கு மற்றம் செய்யப்பட்டிருக்கிறதா என்று கேட்டுவிட்டு டிக்கெட் வாங்கவும். இது ஒரு விழிப்புணர்வு பதிவு மாத்திரமே. https://www.ticketcorner.ch/event/ilaiyaraaja-live-music-concert-st-jakobshalle-19069134/ டிக்கெட் விற்பனை நடந்துகொண்டிருக்கிறது... https://stjakobshalle.ch/kalenders/maestro-ilaiyaraaja/ மண்டபத்தின் இணையதள அறிவிப்பூ
-
புலம்பெயர் தமிழர்கள் vs புலம்பெயர் சிங்களவர்கள்
"இனவாதிகள் இனி இலங்கையை ஆள முடியாது" என்று அனுரா பேசியதாக ஒரு youtube தலைப்பு பார்த்தேன். அவருடைய பின்புலமே ஒரு இனவாத பின்புலம் தான். அது இருக்கட்டும். இனவாதம் ஒன்று அவ்வளவு பொல்லாத நிலைப்பாடு இல்லை. அதை சரியான முறையில் கையாண்டால் அதுவும் நல்லது தான். அனுரா தெரிவுசெய்யப்பட்டதே ஒரு இனவாத தேர்தல் முறையில் தானே. 5௦% வாக்குகளை ஒருவர் பெறவில்லையென்றால் அவர் வென்றதாக அறிவிக்கமுடியாது. ஒரு தமிழருக்கு 5௦% வாக்குகள் கிடைப்பது இலங்கையில் சாத்தியமா? அப்படியே ஒரு தமிழர் 49% வாக்குகள் பெறுகிறார் என்று வைத்துக்கொள்ளவோம். அடுத்தக்கட்ட விருப்பு வாக்குகள் சிங்களவர்கள் யாருக்கு போடுவார்கள் என்று நினைக்கிறீர்கள்? தமிழருக்கா? எண்ணிக்கையளவில் பல மடங்கு அதிகமாக உள்ள சிங்களவர்களின் விருப்பு வாக்கு ஒரு சிங்களவருக்கு தான் விழும். இந்த முறை ஒரு இனவாதம் இல்லையா? அனுரா இதை புரியாதவர் ஒன்றும் இல்லை. இலங்கையின் இந்த ஆட்சி மாற்ற முறை தென்னமெரிக்க நாடுகள் பலவற்றில் நடந்திருக்கிறது. அரபு புரட்சியையும் மறந்துவிடுவதற்கில்லை. ஊழல், பொருளாதார நெருக்கடி என்று பேசி முன்னர் இருந்த அரசை வீழ்த்தி ஒருவர் வருவார். பின்னர் அதே காரணத்தை கூறி அவரை வீழ்த்துவதற்கு இன்னொருவர் வருவார். இந்த நாடுகளில் IMF, அமெரிக்கா எதிர்ப்பு தலைதூக்கியிருக்கும். எனவே இப்படி நடைபெறும் ஆட்சி மாற்றங்களை அமெரிக்கா ஒருபோதும் விரும்பாது. IMF ஒன்றும் ஆட்சியில் இருப்பவர்களுக்கு கடன் கொடுப்பதில்லை. அது ஒரு அரசாங்கத்திற்கு தான் கொடுக்கிறது. எனவே ஏற்கனவே இருந்தவர்கள் வாங்கிய கடனில் இருந்து அனுரா தப்ப முடியாத வரை அவர் வெளித்தோற்றத்திற்கு IMFயை எதிர்ப்பது போல் பாசாங்கு செய்யலாம். உள்ளே அவரும் IMF கைப்பாவையாக செயல்படத்தான் வேண்டும். எந்த அமெரிக்கா நிறுவனங்களிலும் அவர் கை வைக்க முடியாது. அனுரா அமெரிக்காவையும் எதிர்க்கிறார். IMFயையும் எதிர்க்கிறார். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்களையும் எதிர்க்கிறார். இந்த மூன்றையும் எதிர்த்து அவர் நீண்ட நாட்கள் ஆட்சியில் நிலைப்பது சாத்தியமில்லை. அவர் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தி, தமிழர்களுக்கு சிறிதளவேனும் நன்மை செய்ய தொடங்குகிறார் என்றால், இப்பொழுது வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற முன்னாள் ஜனாதிபதிகளின் பிள்ளைகளை சிங்கள மக்களே மீண்டும் நாட்டுக்குள் கொண்டு வந்து ஆட்சியில் அமரவைப்பார்கள். புரட்சியின் மூலம் ஆட்சி மாற்றம் வந்த நாடுகளில் இதுவும் நடந்து தான் இருக்கிறது. இலங்கையில் புரட்சியாளன், சிவப்பு புரட்சி வென்றது என்று புலம்பெயர் தமிழர்கள் சில்லறைகளை சிதறவிடுவதை கொஞ்சம் தள்ளி போடுவது நல்லது. தமிழர்களிற்கு இலங்கை அரசியலில் எப்பொழுதுமே "சங்கு" தான். எல்லோருக்குமே ஒரு மாற்றம் தேவைபட்டது. மற்றும்படி இதில் சிங்கள டயஸ்போராக்களின் புத்திசாலித்தன்மை என்று ஒன்றையும் நான் காணவில்லை.
-
ரகுபதி தொடர்பாக புலிகளின் சுவிஸ் பிரிவின் அறிக்கை
சுவிஸ் தமிழர்களின் தொகையைவிட அமைப்புகளின் தொகை அதிகரித்துக்கொண்டு போகிறது. கடவுள் புண்ணியத்தில் "ஒரிஜினல்" புலிகள் மீதான தடையை நீக்காமல் விட்டது நல்லதா போச்சு. இலையென்றால் இப்ப விடுதலைப்புலிகள் என்ற பெயரிலையே 1008 அமைப்பு தோன்றியிருக்கும்.
-
சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
இந்த திரியே 2009ற்கு பின்னர் நடந்த மோசடி பற்றித் தான். 2009ற்கு முன்னர் நடந்தவற்றை யாரும் மோசடியாக தூக்கிக்கொண்டு வரவில்லையே. 2009ற்கு முன்னரும் சிறிய அளவில் நடைபெற்றதுகொண்டு தான் இருந்தது. அதை பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை. கொஞ்சம் யதார்த்தத்திற்கு வாருங்கோ. புலிகளுக்கு பணம் சேர்ப்பது எல்லா நாடுகளிலும் தடைசெய்யப்பட்டிருக்கேலை. அதனால அது குற்றமாகாது. அடிச்ச பணத்தை மக்களிட்ட திருப்பி கொடுக்கிறதுக்கு 1008 சாட்டு சொல்ல வெளிக்கிடாதேங்கோ . அப்பிடி அந்த அடித்த பணத்தை திருப்பிக்கொடுக்க முடியாமல் மனவேதனையில் இருப்பவர்களை என்னிடம் அனுப்பிவிடுங்கள். அவர்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நான் அந்த பணத்தை வெள்ளையாகி உரியவர்களிடம் ஒப்படைக்கிறேன். என்னிலை நம்பிக்கையில்லாட்டில் குழந்தை பிள்ளைக்கு விளங்கிற மாதிரி ஒரு திட்டம் சொல்லுறேன் கேளுங்க. இதை அந்த மனவேதனையில் தவிக்கிற மாபியா கும்பலிட்ட சொல்லி பயம் இல்லாமல் செயல்படுத்த சொல்லுங்க. இங்க கடைகளில் இப்ப Bitcoin gift card வந்திருக்கு. கையில இருக்கிற காசுக்கு ஒரு 10 bitcoin card வாங்கிட்டு அதை ஒரு bitcoin walletற்கு transfer செய்திட்டு, அந்த bitcoinஐ வெள்ளையா ஒரு வங்கி கணக்குக்கு transfer செய்யலாம். கடைசிக்கட்டத்தில ஒருத்தரும் வங்கி மூலமா போராட்ட நிதி சேகரிக்கேலை. எல்லாரிட்டையும் கட்டிலுக்கடியில தான் காசு இருக்கும். இதை ஏன் சொல்லுறேன் என்றால், பிறகு நீங்கள் வேற ஒரு உருட்டோட வந்தாலும் வருவீங்கள். எதுவாகினும் உருட்டுவதை நிறுத்தாதவர்கள் எத்தனை ஆண்டுகளானாலும் இருக்கத்தான் போகிறார்கள். மேற்கொண்டு இந்த திரியில் எழுதுவதை நான் தவிர்க்கிறேன்.
-
சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
ஐயா இது என்ன படு பயங்கரமான வித்தியாசமான ஒரு உருட்டா இருக்கு இது வரைக்கும் இந்த கோணத்திலை ஒரு உருட்டை நான் கேள்விப்படேலை. கருப்பு பணத்தை வெள்ளையாகிறது எப்படி என்று தெரியாத அடிமுட்டாள்கள் இல்லை இந்த மாபியாக்கள். ஒரு உதாரணம்: ஐரோப்பாவில நிறைய நாடுகளில நீங்கள் கையில காசா கொடுத்து பொருட்களை வாங்கலாம். உதாரணமாக உங்களிட்ட இருக்கிற கருப்பு பணத்தை (அதை எந்த முட்டாளும் வங்கியில் போட்டுவச்சிருக்க மாட்டான்) கையில கொடுத்து ஒரு கார் வாங்கறிங்கள். பிறகு அந்த காரை வேற ஒருத்தருக்கு விற்கிறீங்கள். அந்த கார் விற்ற பணத்தை கொண்டு போய் வங்கியில போட்டால் அது வெள்ளையாகிவிடும். இன்னும் ஒரு படி பாதுகாப்பாக செய்யவேணும் என்றால், வங்கிக்கணக்கை ஏதாவது ஒரு தீவுகளில திறந்து அதில பாதுகாப்பை வச்சிருக்கலாம். இந்த விளையாட்டை இன்னும் பாதுகாப்பா நகை வாங்கி விக்கிறதில செய்யலாம். இதனால தான் பல நாடுகள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல கையில காசா வாங்கிறதை தடைசெய்திருக்கு.
- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
-
தமிழர் தலைநிமிர் காலம் கண்முன்னே நிற்கிறது என்ற நம்பிக்கையில் டாவோஸ் மகாநாடு சிறப்பாக முடிவடைந்தது.
எனக்கும் இந்த மாநாட்டில் மாறுபட்ட கருத்து இருக்கிறது. அதற்காக போகிற போக்கில் சிங்கள அடிவருடி அமெரிக்க கைக்கூலி என்று சொல்லிவிட முடியாது. ஏதாவது ஆதாரம் அல்லது நிரூபிக்க கூடியவை இருந்தால் பதிவிடுங்கள்.
-
துவாரகா உரையாற்றியதாக...
என்னுடைய சந்தேகம் இப்பொழுதும் இதை RAW செய்திருக்க வாய்ப்பில்லை என்பது தான். அதற்கு வலுசேர்க்கும் விதமாக நேற்று முதல் இணையத்தில் மித்துஜா என்பவர் உள்ளே கொண்டுவரப்பட்டிருக்கிறார். அவரின் அடையாள அட்டை முதல், கணவர், பிள்ளைகளுடன் இருக்கும் புகைப்படம் வரை வெளியிட்டிருக்கிறார்கள். அதை நான் இங்கே இணைக்க விரும்பவில்லை. அது மித்துஜா இல்லையென்றால் அவர் எல்லோர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் மித்துஜா சுவிசில் அகதி அந்தஸ்து நிலையில் தான் இருக்கிறார் என்பது அவருடைய அடையாள அட்டையில் இருந்து தெரிந்துகொள்ளலாம். சில மாதங்களிற்கு முன்னர் சுவிசில் துவராகவின் பெயரை வைத்து ஒரு பணவேட்டை நடந்தது அனைவரும் அறிந்ததே. அதுவும் மித்துஜாவின் திருவிளையாடலாக இருக்கலாம். இந்த சில்லறைத்தனமான வீடியோ கூட பணவேட்டை கும்பலின் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்பிருக்கிறது. எது எப்படியோ மித்துஜா இதற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்றால் வெளியில் வந்து பேசவேண்டும். சம்மந்தம் இல்லாத பட்சத்தில் இணையத்தில் வதந்தி பரப்பிய அனைவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுத்து நஷ்டஈடு பெறட்டும். அவரின் மௌனம் மேலும் மேலும் அவர் மீதான சந்தேகத்தை அதிகரித்துக்கொண்டே செல்லும்.
-
துவாரகா உரையாற்றியதாக...
RAW ஒரு மூன்றாம் தரப்பு நாட்டின் உளவுத்துறையல்ல. தொழில்நுட்பத்தை கையாளுவதில் அவர்களிற்கு பெரிய சிக்கல் இருக்கப்போவதில்லை. அப்படியிருக்கையில் இப்படி ஒரு மட்டமான அரைவேக்காட்டுத்தனமான காணொளியை ஏன் வெளியிட வேண்டும்? பார்ப்பவர்கள் இவ்வளவு இலகுவாக இது பொய் என்று கண்டுபிடிக்க கூடிய ஒரு காணொளியை வெளியிடவேண்டிய தேவை என்னவென்று புரியவில்லை. ஒன்றில் அவர்கள் தெரிந்தே இந்த தவறை செய்திருக்கவேண்டும். அல்லது இந்திய உளவுத்துறை அப்படி தரம்குறைந்து போயிருக்கவேண்டும் (இதை நான் பெரிதும் நம்பவில்லை). 2009இல் இருந்து தமிழர் பிரச்சனையில் "யாரோ" ஒரு மீட்பர் வருவார் அதுவரை காத்திருங்கள் என்று ஆசைகாட்டியே தமிழர்களின் போராட்டத்தை கிடப்பில் போட்டு வைத்திருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ அமைப்பு தாங்கள் தான் என்று சொல்பவர்கள் கூட தலைவர் வருவார் என்ற ஒரு மாயைக்குள் தான் தமிழர்களை வைத்திருக்கிறார்கள். அந்த மாயைக்குள்ளயே தமிழர்கள் இருக்கும் வரை அடுத்த கட்டத்திற்கு நகரமுடியாது. பெரும்பாலானவர்கள் இனி தலைவர் வருவார் என்பதை 14 ஆண்டுகள் சென்றபின்னர் நம்புவதாக இல்லை. ஆனாலும் தலைவர் வருவார் என்று நம்புகிற ஒரு சிறிய கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அது புலம்பெயர்ந்த முதலாம் தலைமுறை பெரியவர்கள் தான். இந்த காணொளி அவர்களை மறுபடியும் அந்த மாயைக்குள்ள வைத்திருப்பதற்காக இருக்கலாம். ப்ரொஜெக்ட் தலைவர் குடும்பம் என்று ஒன்றை தொடங்கி அடுத்த 10 ஆண்டுகள் காலத்தை ஒட்டட்டும் என்று நினைத்தார்களோ என்னவோ தெரியவில்லை.
-
துவாரகா உரையாற்றியதாக...
நான் சில மதங்களிற்கு முன்னர் AI 2041 என்ற புத்தகம் வாசித்திருந்தேன். அது 2041 உலகம் தொழில்நுட்பத்தில் முக்கியமாக செயற்கை நுண்ணறிவு எவ்வளவு தூரம் வரை செல்லும் அல்லது செல்லலாம் என்பது பற்றியது. அந்த புத்தகம் வாசித்த பின்னர் இப்படி ஏதாவது வரும் என்று எதிர்பார்த்திருந்தேன். Deep fake என்பதை இன்னும் சரியாக கையாள தெரியாத ஒரு கூட்டம் இதை செய்திருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. இன்னும் ஒரு 10-15 வருடங்களில் அதை சரியாக பயன்படுத்தி தலைவரின் உரையை வெளியிடுவார்கள். அது வரை பொறுமை காக்கவும். நான் உரையை கேட்கவில்லை. வீடியோவின் thumbnail பார்த்தே புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. 😄
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- வீரமங்கை செங்கொடியின் 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று
https://www.youtube.com/watch?v=dUwEOd_Cq5g- சொர்ணம்: களத்தில் நின்ற சண்டியன் – 01 0
யாருப்பா அது Pagetamil.com ? சும்மா மேலோட்டமா வாசித்த எனக்கு இவ்வளவு எழுத்துபிழை எழுதினதை ஒருக்கா மீளாய்வு செய்திட்டு வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் (பகுதி 2லும் இதே நிலை தான்).- சொர்ணம்: களத்தில் நின்ற சண்டியன் – 01 0
- பெயர் மாற்றங்கள்.
சரி. அப்படியென்றால் எனது பெயரை "ஊர்க்காவலன்" என்று மாற்றிவிடுங்கள்.- பெயர் மாற்றங்கள்.
வணக்கம் எனது பெயரை "தம்பி" என்று மாற்றிவிட முடியுமா? நன்றி.- சிந்தனைக்கு சில படங்கள்...
- வீரமங்கை செங்கொடியின் 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.