Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. உண்மை தான். ஓய்வு பெற்ற பின்னரே இதை உணர்கிறேன். சுயதொழில் செய்தபடியால் எவ்வளவுக்கு செலவைக் காட்டி அரசிடமிருந்து பணத்தைப் பெற முடியுமோ அதையெல்லாம் செய்தோம். இப்போது இளைப்பாறிய பின் சோசல் பணத்தை மட்டும் வைத்து வாழ்வதென்றால் முடியாத காரியம். அரச வேலை செய்தவர்களுக்கு சோசலும் வரும்.ஓய்வூதியப் பணமும் வரும்.
  2. The Capital One Venture X credit card offers many benefits, including: No foreign transaction fees: Avoid fees for using your card internationally Protection: Get protection for your cell phone, luggage, purchases, and more Price drop protection: Get up to $50 in travel credit if the price of your flight drops within 10 days of booking Flight cancellation: Cancel your flight for any reason Flight price freeze: Freeze the price of your flight and book later Transfer miles: Transfer your miles to over 15 travel loyalty programs Travel rewards: Earn miles for travel, including 10X miles on hotels and rental cars, and 5X miles on flights and vacation rentals Lounge access: Get unlimited access to Capital One Lounges and over 1,300 Priority Pass lounges worldwide Travel credits: Receive a $300 annual credit for travel bookings made through Capital One Travel Experience credits: Receive a $100 experience credit for every hotel or vacation rental booked from the Premier Collection Reimbursement: Receive up to a $120 statement credit every four years for Global Entry or TSA PreCheck இது அமெரிக்கர்கள் விசேடமாக பாவிக்கலாம். You can also earn bonus miles when you open your account and on each account anniversary. இந்த காட் வைத்திருப்பவர் 4 பேருக்கு மேலதிக சந்தா கட்டாமல் காட் எடுத்து கொடுக்கலாம். அவர்கள் குடும்ப உறுப்பினர்களாகவோ மிகவும் நம்பிக்கையானவர்களாகவோ இருக்க வேண்டும். எவர் செலவு செய்தாலும் காட்டின் சொந்தக்காரருக்கே அனைத்து புள்ளிகளும் போகும். இப்போது எடுக்கும் அனேகமான விமான சீட்டுக்கள் அந்தநாளில் பயணிக்காவிட்டால் 300 டாலருக்கு மேல் கட்டியே திகதியை மாற்றலாம். இந்த காட் மூலம் ரிக்கட் எடுத்தால் ஒரு டாக்ரர் சேர்டிபிக்கற்ருடன் அபராதம் ஏதும் இல்லாமல் திகதியை மாற்றலாம். @ரசோதரன் @நீர்வேலியான் @பிரபா நீங்கள் Global Entry எடுத்து வைத்திருக்கிறீர்களா? ஆம் எனில் அதன் நன்மை தீமையை பகிர்ந்து கொள்ளுங்கள்.
  3. போட்டிக்கு ரம்பும் நாளையில் இருந்து பலரையும் விடுவிப்பார்.
  4. எல்லா குதிரைகளிலும் சவாரி செய்த சக்கடத்தார் இங்கே தான் தவறி விழப்போகிறார்.
  5. ஊரவர்(நியூயோர்க்)ஒருவர் என்மேல் அனுதாபப்பட்டு வீடியோ அனுப்பியிருந்தார். ஆனாலும் அது போதுமான கிழுகிழுப்பைத் தரவில்லை. சரிசரி மலிந்தா சந்தைக்கு வரும் தானே.
  6. ஆமா ஆமா பெக்கற்றும் காலியாகும். நானும் ஏதோ பெட்டைகள் தான் மசாஜ் செய்யினம் என்று பேப்பரை பிரட்டி பிரட்டி பார்த்தா தடியன் குத்தியன்கள் மசாஜ் பண்ணுறாங்களே. கிருபன் வேணுமென்றே படங்களை ஆட்டையைப் போட்டுவிட்டார் போல?
  7. இதே தான் அமெரிக்க தேர்தலிலும் நடந்து ரம் வென்றும் விட்டார். அஜித்துக்கும் மன்றம் இருக்கிறதா?
  8. சிறியரைக் கலைக்கும் வரை கூட்டம் நடாத்திக் கொண்டே இருப்போம்.
  9. ம் நாயை என்ன சொல்வது.சரியான இடத்துக்கு கொண்டு போயுள்ளது. அடிக்கடி நாய்கள் போய்வருவதைப் பார்த்திருக்கும் என எண்ணுகிறேன்.
  10. 2000 ம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் கடனட்டை என்பது மிக பெரிய சவாலாக இருந்தது.இலவச கடனட்டை என்று கொடுக்க மாட்டார்கள்.வருடாவருடம் சந்தாவாக ஒருதொகை வாங்குவார்கள். எங்காவது நாங்கள் சிறு தவறு செய்துவிட்டாலும் ஒருதொகையை அபராதமாக செலுத்த வேண்டிவரும். இந்தக் கடனட்டையாலேயே மூழ்கிப் போன குடும்பங்களும் உண்டு. 2000 ம் ஆண்டுக்குப் பின்னர்(சரியான ஆண்டு நினைவில் இல்லை)இலவச கடனட்டைகள் கொடுக்கத் தொடங்கினார்கள். இதிலும் பலர் நன்மையும் தீமையும் அடைந்தார்கள். அண்மையில் திரு @நியாயம் அவர்கள் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் ஒரு தேநீர் குடிக்கக் கூட வழியில்லை என்று விசனமாக எழுதியிருந்தார்.அப்போதே இப்படி ஒரு பதிவு எழுதணும் என்று எண்ணினேன்.இப்போ தான் கொஞ்சம் கொஞ்சம் நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன். 2020 ஓய்வெடுத்த பின்பு பயணம் செய்யத் தொடங்கி இப்போது கடந்த 2-3 வருடங்களாக குறைந்தது வருடத்துக்கு 10 ஒருவழி பயணமாவது மேற்கொள்ளுகிறேன்.முதலில் மகளின் American Express Platinum Card காட்டில் இருந்து Additional Card எடுத்து தந்தார்.பயணம் செய்யும் போது கூடுதலான விமானநிலையங்களில் Airport Lounge இருக்கிறது.அங்கு இலவசமாக சாப்பிடலாம் குடிக்கலாம் (நான் குடிப்பதில்லை)பொழுதை கழிக்க நல்லதொரு இடம். American Express Platinum Card க்கு கூடுதலான பணம் என்று Capital One Venture X இல் இப்போ எடுத்து வைத்திருக்கிறார்கள். இதற்கு வருடாவருடம் 400 டாலர்கள் சந்தாவாக கட்ட வேண்டும். ஆனால் விமான ரிக்கட் 300 க்கு மேல் எடுத்தால் வருடம் ஒருதடவை அதைக்கழித்து விடுவார்கள். இதைவிட வேறுவேறு வழிகளிலும் நிறைய சலுகைகள் தருவார்கள்.நாங்கள் கட்டும் பணத்துக்கு அதிகமாக சலுகைகளை அனுபவிக்கலாம். இந்தக் காட்டை எடுத்தவுடன் Priority Pass காட்டுக்கு கோல்பண்ணினால் அந்தக் காட்டை வைத்து ஒரே நேரத்தில் 3 பேர் Airport Lounge க்குப் போகலாம். இலங்கையிலும் Airport Lounge இருக்கிறது.சிறியதாக இருந்தாலும் தரமாக இருந்தது. கடைசியாக இலங்கையில் இருந்து வரும்போது துருக்கியில் 10 மணிநேரம் இடைத்தங்கல்.எப்படித் தான் நேரம்போகப் போகுதோ என்று போனால் நல்ல சாப்பாடுகள் பழச்சாறுகள் என்று மாறிமாறி பசிக்கும் போது சாப்பிட்டோம். அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு இன்னும் ஒரு சலுகை இருக்கிறது. இலவசமாக Global Entry க்கு விண்ணப்பிக்கலாம். இது இருந்தால் அமெரிக்காவில் எந்த விமானநிலையத்திலும் TsaPre என்ற விசேடமாக உள்ள இடத்தால் உள்நுழையலாம். சப்பாத்து கழட்டத் தேவையில்லை கணனி எடுக்கத் தேவையில்லை. சர்வதேச பயணம் முடிந்து உள்நுழையும் போது பிரத்தியேகமாக உள்ள இடத்தில் பல கணனிகள் இருக்கும்.ஏதாவது ஒரு கணனியில் முகத்தைக் காட்டினால் Proceed என்று அறிவுறுத்தும்.குடிவரவு உத்தியோகத்தரிடம் போனால் கிட்ட போகும்போதே போகச் சொல்லி கையைக் காட்டுவார். இத்தனையும் 2-3 நிமிடங்களில் முடிந்துவிடும். இதுபற்றி நிறைய பேருக்கு தெரிவதில்லை.நான் சொல்லி இங்கு பலர் எடுத்து அனுபவிக்கிறார்கள்.பலரும் வருடாவருடம் பயணம் செய்பவர்கள் இருந்தால் இப்படியான சலுகைகளை உங்கள் நாடுகளில் ஈருந்தால் நீங்களும் அனுபவிக்கலாம். நன்றி.
  11. https://www.facebook.com/story.php?story_fbid=1174871980867740&id=100094901267134&mibextid=wwXIfr எமது கோவிலில் கனேடிய பிரதமர்.
  12. வியட்நாமில் உள்ள மீனவர்கள் மற்றும் உணவகங்களில் இருந்து ஓட்டுமீன்களை வாங்கிய பின்னர், உள்ளூர் சுவையான உயிரினங்களின் பிரபலமடைந்து வருவதை ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் புதிதாக ஒரு "சூப்பர்ஜெயண்ட்" கடல் பிழை இனத்தை அடையாளம் கண்டுள்ளனர். ஆழ்கடல் உயிரினம், இப்போது பாத்தினோமஸ் வதேரி என்று அழைக்கப்படுகிறது, அதன் தலை "ஸ்டார் வார்ஸ்" வில்லன் டார்த் வேடர் அணிந்திருந்த ஹெல்மெட்டுடன் ஒத்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கவனித்ததை அடுத்து அதன் பெயர் வந்தது. விஞ்ஞானிகள் செவ்வாயன்று ZooKeys இதழில் புதிய உயிரினங்களை அதிகாரப்பூர்வமாக விவரித்தனர், B. வதேரியின் உடல் அமைப்பின் சில கூறுகள் தென் சீனக் கடலில் காணப்படும் மற்ற பாத்தினோமஸ் மாதிரிகளிலிருந்து பெரிதும் வேறுபடுகின்றன என்பதை உறுதிப்படுத்துகிறது. https://www.cnn.com/2025/01/17/science/giant-sea-bug-darth-vader-vietnam/index.html
  13. TikTok ஒரு புதிய, சீனர் அல்லாத உரிமையாளரைக் கண்டறிய அல்லது தடையை எதிர்கொள்ள வேண்டிய ஒரு சட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைமுறைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது - மேலும் அதற்கு முன்னர் நிறுவனம் விற்பனையை நிறுத்துவதற்கான சிறிய அறிகுறிகளும் இல்லை. அதாவது, 170 மில்லியன் அமெரிக்கர்கள் பொழுதுபோக்கு, செய்திகள் மற்றும் சமூகத்தைக் கண்டறிய அல்லது வணிகத்தை நடத்துவதற்குப் பயன்படுத்தும் தளத்திற்கான அணுகலை இழக்க நேரிடும், டிக்டோக் பல ஆண்டுகளில் முதல் புதிய தளமாக ஆன பிறகு, அமெரிக்க சமூக ஊடகப் பிரமுகர்களுக்கு உண்மையான போட்டி அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. Instagram மற்றும் YouTube. சுப்ரீம் கோர்ட் வெள்ளிக்கிழமை சட்டத்தை உறுதி செய்தது, தடையை ஒரு படி நெருக்கமாக கொண்டு வந்தது. ஆனால் தடை காலக்கெடு இன்னும் இரண்டு நாட்களே உள்ளது என்றாலும், சரியாக என்ன நடக்கும் என்பது பற்றி இன்னும் பல தெரியவில்லை. டிக்டாக் அமெரிக்காவில் முற்றிலுமாக நிறுத்தப்படுமா? இது பயனர்கள் அல்லது நிபுணர்கள் எதிர்பார்த்தது அல்ல, ஆனால் ஒரு அறிக்கை அதைச் செய்யக்கூடும் என்று சுட்டிக்காட்டியது. வெளியேறும் ஜனாதிபதி ஜோ பிடன் நிர்வாகம் வழிகாட்டுதலை வழங்குமா? இது ஒலிக்க வாய்ப்பில்லை. வரவிருக்கும் அதிபர் டிரம்ப் தலையிடுவாரா? அவரது பதவியேற்பு விழாவில் எதிர்பார்க்கப்படும் பங்கேற்பாளர்களின் பட்டியல் ஏதேனும் அறிகுறியாக இருந்தால், அவர் முயற்சி செய்வார். தடை காலக்கெடு நாள் பற்றி எங்களுக்குத் தெரிந்தவை - நமக்குத் தெரியாதவை இங்கே உள்ளன. ஆப்பிள் மற்றும் கூகுள் ஆப் ஸ்டோர்களில் இருந்து ஞாயிற்றுக்கிழமை ஆப்ஸ் அகற்றப்படும் என்று நிபுணர்கள் எதிர்பார்த்தனர் - காலக்கெடுவிற்குப் பிறகு டிக்டோக்கை தொடர்ந்து ஹோஸ்ட் செய்ததற்காக சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படலாம். அதாவது, ஏற்கனவே தங்கள் ஃபோன்களில் ஆப்ஸ் இல்லாத எவரும் இதைப் பதிவிறக்க முடியாது, ஆனால் தற்போதுள்ள பயனர்கள், பாதுகாப்புப் புதுப்பிப்புகள் இல்லாமல், இறுதியில் அது செயலிழக்கும் வரை அல்லது வேலை செய்வதை நிறுத்தும் வரை தொடர்ந்து அணுகலாம். ஆனால் பிடென் நிர்வாக அதிகாரி ஒருவர் CNN வியாழன் அன்று, வெளியேறும் ஜனாதிபதி தடையை அமல்படுத்த டிரம்ப்பிடம் விட்டுவிட திட்டமிட்டுள்ளார் என்று கூறினார். "இது குறித்த எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது: டிக்டோக் அமெரிக்க உரிமையின் கீழ் தொடர்ந்து செயல்பட வேண்டும். பதவியேற்புக்கு ஒரு நாள் முன்னதாக விடுமுறை வார இறுதியில் இது நடைமுறைக்கு வரும் நேரத்தைக் கருத்தில் கொண்டு, அதை அடுத்த நிர்வாகத்தால் செயல்படுத்த முடியும், ”என்று அந்த அதிகாரி கூறினார். அதாவது, தடை அமலுக்கு வந்த மறுநாளே டிரம்ப் பதவியேற்றால், ஞாயிற்றுக்கிழமை இயங்குதளத்தை அகற்றுமாறு ஆப் ஸ்டோர்களுக்கு வெளிப்படையாக அறிவுறுத்த யாரும் இருக்க மாட்டார்கள், இணங்க வேண்டுமா என்பதை அவர்களே தீர்மானிக்க முடியும். ஆனால் ஆப் ஸ்டோர்கள் TikTok ஐ தனியாக விட்டுவிட்டாலும், நிறுவனம் தானே பிளக்கை இழுக்க முடிவு செய்யலாம். டிக்டோக் ஞாயிற்றுக்கிழமை தன்னை முழுவதுமாக மூடுவதற்கு தயாராகி வருவதாகவும், அதற்கு பதிலாக பயனர்களை தடை குறித்த தகவல் பக்கத்திற்கு வழிநடத்துவதாகவும் தகவல் புதன்கிழமை தெரிவித்தது. எனவே, பயனர்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் பயன்பாட்டிற்கான அணுகலை இழக்க மனரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் தயாராக வேண்டும், தடையைச் சமாளிக்க VPN ஐப் பதிவிறக்க விரும்பினால் தவிர. https://www.cnn.com/2025/01/17/tech/tiktok-getting-banned-trump-biden/index.html டிக்டொக் பயனர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
  14. https://www.facebook.com/ramya.ambur.5/videos/1300145340974038/?fs=e&s=TIeQ9V&mibextid=wwXIfr&fs=e சீனப் பெண்ணின் பக்திப்பாடல். அதிசயமும் ஆச்சரியமும்.
  15. உங்களுடன் சேர்ந்து நாங்களும் அண்ணனின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  16. இந்திய யுரியூப் காரரின் அலப்பறைகளைத் தாங்க முடியவில்லை. வல்லரசான அமெரிக்கா தீயை அணைக்க முடியாமல் திக்குமுக்காடுது அதுஇது என்று போட்டுத் தாக்குகிறார்கள். இந்தியாவில் எண்ணெய் கசிவின் போது வாளியால் அள்ளியதை மறந்தே விட்டார்கள். இயற்கை அழிவுகள் நீர் நெருப்பு காற்று இவைகளுக்கு எதிராக யாரால் தான் போராட முடியும்?
  17. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.