Everything posted by ஈழப்பிரியன்
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
என்னையும் கேட்டிருந்தார். மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.
-
பிரபல தவில் வித்துவானின் மகன் விபத்தில் உயிரிழப்பு
ஆழ்ந்த இரங்கல்கள்.
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
மருதங்கேணி. இவர்கள் வேறு மாநிலங்களில் வாழ்கிறார்கள்.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
1970 களில் கொடிகட்டிப் பறந்தது Aeroflot தான். அத்துடன் (Thomas Cook travelers checks)தோமஸ்குக் ரவலேர்ஸ் செக்கும் கையில் இருக்கும். அந்த காலங்களில் இது தான் மிகவும் பாதுகாப்பானது.
-
தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
தாய்வான் பிரச்சனை இறுகினால் காலூன்ற இலங்கையை நாடலாம். அதுகூட இலங்கை அரசுக்கே வாய்ப்பாக அமையும். அவர்கள் சொன்னதை அவர்கள் கேட்டுப் பார்ப்பதில் தவறில்லைத் தானே?
-
அனைத்துலக தமிழாராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51ஆவது நினைவு தினம்!
ஆழ்ந்த நினைவஞ்சலிகள். நானும் ஒரு ஆள் என்று உந்த கூத்து பார்க்க போய் சைக்கிளையும் விட்டுவிட்டு வந்து அடுத்த நாள் போய் எடுத்தேன்.
-
தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
2009ம் ஆண்டு புலிகளை அழிக்க போகிறோம். அதன் பின் தமிழர்களுக்கு ஒரு தீர்வு பெற்று தருவோம். அதுவரை கொஞ்சம் பொத்திக் கொண்டிருங்கள் என்று சொல்லி வருடம் 15 ஆகிவிட்டதே அமெரிக்கா இன்னும் எவ்வளவு காலம்தான் பொறுத்திருக்கணும்? பொறுமைக்கும் ஒரு எல்லை இல்லையா என்று ஒருவரும் கேட்கலையோ?
-
பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள்
சித்திரை பத்தில் புத்திரன் பிறந்தால் அக்குடி நாசம் என்பார்களே.
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
சாப்பாடு தூக்கம் முக்கியம் தலைவரே. இனி என்ன நடந்தாலும் காலையில்த் தான். நன்றி.
-
நாடாளுமன்றத்தில் அர்ச்சுனாவிற்கு பாரிய அநீதி : எழுந்துள்ள புதிய சர்ச்சை
நன்றி வாலி. நாங்க இந்துவில் குப்பை கொட்டிய காலங்களில் (1966-1972)மருந்துக்கும் மாணவிகளோ ஆசிரியைகளோ இல்லை. கொஞ்சம் கலவனாக இருந்திருந்தால் வெட்கம் ரோசத்திலாவது கொஞ்சம் படித்திருக்கலாம்.
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
LA County Fire Department Five people have died in the Eaton Fire and there are a ‘significant number’ of other injuries, LA County fire chief says. At least 3 other fires are also threatening the region. தற்போது கிடைத்த செய்திகளின்படி 5 பேர் இறந்துள்ளனர்.
-
நாடாளுமன்றத்தில் அர்ச்சுனாவிற்கு பாரிய அநீதி : எழுந்துள்ள புதிய சர்ச்சை
விளக்கத்திற்கு நன்றி கிருபன். அடுத்த தேர்தலுக்குக் காணலாம்.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
திருமண நிகழ்வுகள் போன்றவற்றில் அங்கங்கே குறைகள் இருந்தாலும் சாப்பாடு பிரமாதமாக இருந்தால் சகல குறைகளும் அதற்குள் மறைந்துவிடும்.
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
பொதுமக்களில் இருவர் இறந்துள்ளதாக கூறுகிறார்கள். Raging wildfires in Los Angeles area kill at least 2 and destroy 1,000 structures
-
நாடாளுமன்றத்தில் அர்ச்சுனாவிற்கு பாரிய அநீதி : எழுந்துள்ள புதிய சர்ச்சை
செடில் என்றால் என்ன வாலி?
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
மகள் இன்று காலை இடம் பெயர்ந்து விட்டா. நீங்கள் இன்னும் கீழே இருக்கிறபடியால் பிரச்சனை இல்லை. எப்போதும் இல்லாதவாறு காற்று அசுர வேகத்தில் வீசுகிறது.
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
இப்போது தீ பிடித்திருக்கும் இடங்கள் மிகவும் பணக்கார இடம் என்கிறார்கள். இப்போது தான் மகளுடன் கதைத்தேன்.அவர்களது இடத்திலிருந்து வேறு இடங்களுக்கு நகருமாறு அறிவுறுத்தியுள்ளனர். அவசர அவசரமாக தேவையானதை எடுத்துக் கொண்டிருக்கிறா. கிட்டக்கிட்ட இருங்கோ என்றால் கேட்பதில்லை.இப்போ விசர் வருகிறது.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
எமது பயணங்கள் கட்டார் எதிகாட் துருக்கி விமான சேவைகள் தான். எமிரேட்ஸ் எப்போதும் கொஞ்சம் விலை கூட. இந்த விமான சேவைகளில் 50 இறாத்தல் 2 பொதிகள் கொண்டு போகலாம். இதையும் எப்போது நிற்பாட்டுகிறார்களோ தெரியவில்லை. எல்லாவற்றிலும் சாப்பாடு கவனிப்புகள் பரவாயில்லை. கூடுதலாக எமது நிறத்தவரே பயணிப்பார்கள்.
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
இது வருடாவருடம் திருவிழா மாதிரி வந்து போகிறது. எனது மகளும் மிக அருகிலேயே இருக்கிறார்.வேறு இடத்துக்கு போகவே எண்ணுகிறார். @நீர்வேலியான் @ரசோதரன் உங்கள் நிலமை எப்படி?
-
ChatGPT திருட்டுவேலை! அம்பலப்படுத்திய பாலாஜி இறந்தது எப்படி?
தற்போதுவரை தற்கொலை என்றே சொல்கிறார்கள்.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
அவனவனுக்கு எத்தினை எதிர்பார்ப்பு, சிலருக்கு பாதுகாப்பாய் விமானப்பயணம் அமைய வேண்டும் எனும் எதிர்பார்ப்பு, இன்னும் சிலருக்கு பயணத்தை தடங்கல் இல்லாமல் சுகமாய் சென்று மீள வேண்டுமென்கிற எதிர்பார்ப்பு, பரிமாறும் உணவு ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் சுவையாகவும் இருக்கவேண்டுமென்கிற எதிர்பார்ப்பு, இன்னும் சிலருக்கு உறவுகளை பிரிந்து மீண்டும் சந்திக்கப்போகிறோமென்கிற எதிர்பார்ப்பு, நம்ம சாமியாருக்கு; விமானத்தில் வேலை செய்பவர்கள் வடிவாக இருக்க வேண்டுமென்கிற எதிர்பார்ப்பு. ரசனை மன்னன்! பயணம் கிளுகிளுப்பாக இருக்கணுமில்ல.
-
ராணுவ உதவியுடன் கிறீன்லாந்தும் பனாமா கால்வாயும் கைப்பற்றப்படும்.
நோட்டோவுக்கு 60 வீதமான பணம் செலவு செய்வது அமெரிக்கா தானே. ஆனபடியால் உடைந்தாலும் அமெரிக்காவுக்கு லாபம் தானே.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
எம்மவரை விட வெள்ளைகளைக்கு கூடுதல் கவனிப்பு என்றும் கூறுகிறார்கள்.
-
ராணுவ உதவியுடன் கிறீன்லாந்தும் பனாமா கால்வாயும் கைப்பற்றப்படும்.
செனட்டும் காங்கிரசும் தலையாட்ட இருக்கும் போது ரம் இதுவும் செய்வார் இதற்கு மேலும் செய்வார்.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
அவர் ஒரு சாப்பாட்டுப் பிரியர். அவர் சாப்பிட்டதைச் சொல்கிறார். நீங்களோ சாப்பிடாமலே சேர்டிபிக்கற் கொடுக்க முனைகிறீர்கள்.