Everything posted by ஈழப்பிரியன்
-
கண்டியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி கண்டுபிடிப்பு!
மொட்டாக்க பார்த்தாலேதெரியுதே.
-
கண்டியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி கண்டுபிடிப்பு!
ஒன்றாக இருந்திருக்கிறார்கள் பயணிக்கிறார்கள் .இங்கே தான் சந்தேகமாக உள்ளது.
-
பொங்கல் சிரிப்புகள்.
இணைப்புக்கு நன்றி உடையார். அடபாவிகளா பொங்கலுக்கு முதல்ல கண்டுபிடிங்க.
-
கண்டியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி கண்டுபிடிப்பு!
சிறி இது கடத்தலா? சேர்ந்து கூத்தடித்த மாதிரி உள்ளதே.
-
ஜேர்மன் மக்களிடம் எலான் மஸ்க் விடுத்துள்ள கோரிக்கை.
https://www.cbsnews.com/news/musk-petition-pac-1-million-trump-legal-questions/
-
ஜேர்மன் மக்களிடம் எலான் மஸ்க் விடுத்துள்ள கோரிக்கை.
என்ன சிறி இந்திய இலங்கை வாக்காளர்களாகவே மாறிவிட்டீர்களே? ஆளுக்கு ஒரு மில்லியன் தாறேன் என்றவரிடம் ஆளுக்கு ஒரு ரொஸ்லா கார் ஆவது கேட்டிருக்கலாமே?
-
ஜேர்மன் மக்களிடம் எலான் மஸ்க் விடுத்துள்ள கோரிக்கை.
சேன்சலர் ஓலாஃப் ஷோல்ஸுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டாம் என டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க் ஜேர்மன் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜேர்மனியில் பெப்ரவரி 23ஆம் திகதி நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலில் ஆளும் SPD கட்சி சார்பாக மீண்டும் சேன்சலர் ஓலாஃப் ஷோல்ஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையிலேயே எலான் மஸ்க் ஜேர்மன் மக்களிடம் கோரியுள்ளார். மேலும், ஜேர்மன் மொழியில் சாக் நீன் சூ ஸ்கோல்ஸ் (Sag Nein zu Scholz!) என தமது சமூக ஊடக பக்கத்தில் எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஷோல்ஸ் அரசாங்கம் தோல்வியடைந்ததை அடுத்து, ஜேர்மனியின் புதிய நாடாளுமன்றத்திற்கான திடீர் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி 23ஆம் திகதி அன்று நடைபெறவுள்ளது. ஜேர்மனியில் செயற்பட்டு வரும் தீவிர வலதுசாரி கட்சியான AfDக்கு எலான் மஸ்க் வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்துள்ளார். AfD கட்சியின் தலைவர்களில் ஒருவரான Alice Weidel-ஐ புகழ்ந்துள்ள எலான் மஸ்க், அவருக்கான தனது ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளார். https://tamilwin.com/article/elon-musk-appeal-germans-preparing-for-elections-1736712657 ஜேர்மனி வாழ் உறவுகளே எலான் சொன்னதைக் கேட்டு யாருக்கு வாக்கு போடச் சொல்கிறாரோ அதையே செய்யுங்கள்.
-
ரணில் – சஜித்தை இணைக்க முயற்சி!
சஜித் தரப்புடன் கூட்டிணைவு! ரணில் விடுத்துள்ள விசேட கோரிக்கை. கட்சித் தலைமையைப் பொருட்படுத்தாமல், அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு வெற்றி பெற வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை முன்வைத்துள்ளார். கடுவலையில் உள்ள ஜக்கிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி பிரதிநிதிகள் குழுவுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பில் இதனை கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் ருவன் விஜேவர்தன, பொதுச் செயலாளர் தலதா அதுகோரல, தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் குறித்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ரணில் விக்கிரமசிங்க இந்த நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “இந்த இணைவு நாட்டிற்கு ஒரு நல்ல வாய்ப்பு. 1991 ஆம் ஆண்டு பதவி நீக்கம் காரணமாக கட்சி இரண்டாகப் பிரியவிருந்தது. ஆனால் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவைப் கட்சியை பாதுகாத்து முன்னேறும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார். தலதா அதுகோரலவின் சகோதரரும் அப்போது தனக்கு உதவினார். , இப்போது தலதா அதுகோரல அனைத்துக் கட்சிகளுடனும் பேசி ஒன்றிணைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்” என்றார். https://tamilwin.com/article/ranil-makes-a-special-request-to-sajith-s-side-1736673849 தலைமைக்காகவே கட்சியை இரண்டாக்கியவர் சாத்தான் வேதம் ஓதுவது போல இல்ல.
-
சீன நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை இரத்துச்செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை.
இலங்கையின் மத்திய அதிவேக வீதித்திட்டத்தின் மிகவும் தாமதமான பிரிவு 1க்கு பொறுப்பான சீன நிறுவனத்தின் ஒப்பந்தத்தை இரத்துச்செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது MCC என்ற மேட்ச்லலுர்ஜிக்கல் கோப்ரேஷன் ஒப் சீனா (Metallurgical Corporation of China (Ltd)) நிறுவனத்துடனேயே இந்த ஒப்பந்தம் செய்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தநிலையில் திறந்த, வெளிப்படையான ஏலச் செயல்முறையின் கீழ் புதிய கேள்விப்பத்திரங்களை கோருமாறு, இலங்கையின் மிகப்பெரிய ஐந்து கட்டுமான நிறுவனங்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளன. MCC உடனான ஒப்பந்தம் The Lanka Infrastructure Development Consortium (LIDC) PLC, Maga Engineering (Pvt) Ltd, International Construction Consortium (Pvt) Ltd (ICC), KDA Weerasinghe & Co. (KDAW), kw;Wk; NEM Construction மற்றும் NEM Construction என்பனவே அந்த நிறுவனங்களாகும். சீன நிறுவனமான MCC உடனான ஒப்பந்தம் மிகவும் விலை உயர்ந்தது என்றும் இந்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்தநிலையில், பிரிவு 1 இன் மீதமுள்ள பணிகள் உள்நாட்டு ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்பட்டால் குறிப்பிடத்தக்க செலவுக் குறைப்பு இருக்கும் என்று இந்த நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. அமெரிக்க டொலர்கள் குறிப்பாக சீன நிறுவனத்துடன் செய்துக்கொள்ளப்பட்டுள்ள தற்போதைய ஒப்பந்தத்தின் கீழ், ஒரு கிலோமீட்டருக்கு சுமார் 33 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என விலை குறிக்கப்பட்டுள்ளது. எனினும் பகுதி 2 க்கு உள்ளூர் நிறுவனங்களால் ஒரு கிலோமீற்றர் ஒன்றுக்கு சுமார் 18 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே குறிக்கப்பட்டுள்ளதாக கட்டுமான நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. https://tamilwin.com/article/lanka-builders-urge-revoke-deal-with-china-1736653996?itm_source=article வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இரட்டிப்பு செலவு என்னும் போது ஏன் இதை வெளிநாடுகளுக்கு செய்ய கொடுக்கிறார்கள். செய்து முடிந்து பாவனைக்கு திறந்துவிட்டாலும் அதிலே வரும் வருமானம் குறிப்பிட்ட காலத்துக்கு அந்த வெளிநாட்டு நிறுவனமே எடுக்கப் போகுது. இலங்கையில் உள்ள நிறுவனங்களுக்கு ஏன் கொடுக்க முடியாது?
-
பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது குற்றச்சாட்டு!
சில கொன்ராக்கில் கையெழுத்திட்டால் அதிலிருந்து மீளமுடியாது.
-
எழுத்தாளர் அந்தனி ஜீவா காலமானர்
ஆழ்ந்த அஞ்சலிகள்.
-
பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது குற்றச்சாட்டு!
சிலவேளை பழக்க தோசமாகவும் இருக்கலாம். கொழும்பில் பேரூந்துகளில் பயணித்தவர்களைக் கேட்டால் கதைகதையாக சொல்லுவார்கள்.
-
புட்டினுடனான சந்திப்புக்கு ஏற்பாடு – ட்ரம்ப் அறிவிப்பு!
ரம்படனான சந்திப்பு புளோரிடாவில் உள்ள ரம்பின் மாளிகையிலேயே நடக்கப் போகிறது போல. உலக நாடுகளுக்கு போகப் பயப்பட்டு அடங்கியிருந்த பூட்டின் தடை செய்த அமெரிக்காவுக்கே வந்து இறங்கினால் எப்படி இருக்கும்? திருப்பதிக்கே லட்டு கொடுத்த மாதிரி இல்ல. ஒருவேளை கனடா பிரதமரை வெருட்டியது போல ரசியா அமெரிக்காவின் 52வது மாநிலம் என்று ரம் சொன்னாலும் சொல்லுவார்.
-
பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது குற்றச்சாட்டு!
ம், வரப்போவது பாலியல் குற்றவாளி. அதில முகவசீகரம் தேவைதானா? பயம் அவமானம் அவற்றை தாங்குமா, காக்குமா? அவரும் கதாநாயகன் போட்டியென்று, அலங்காரத்துடன் வந்து துலைக்கப்போகிறார் இதெல்லாம் கையை காலை போடுற நேரங்களில் சிந்திக்க வேண்டும். அற நனைந்த பின் குளிரென்ன கூதல் என்ன.
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
நியூயோர்க்கில் உள்ள Fire Hydrant எல்லாம் அடிக்கடி வேலை செய்யுதா என்று திறந்து பார்ப்பார்கள். லாஸ் அங்கிலஸ்சில் அப்படியான சோதனைகள் செய்து திருத்துவதில்லைப் போல தெரிகிறது. பல திறந்த போதும் தண்ணீரே வரவில்லையாம். அங்குள்ள மேயர்மாருக்கு இது ஒரு பிரச்சனையாக மாறலாம்.
-
இன்று ரம்புக்கு தீர்ப்பு.
செய்தது பிரச்சனை இல்லை. ஆனால் கடசிப் பணத்தைக் கொடுத்து அமுக்க நினைத்தது தான் பிழை.
-
இங்கிலாந்து,அமெரிக்காவில் பயண ஒழுங்குகளில் மாற்றம்.
இங்கிலாந்துக்கு பயணிப்பவர்கள் அல்லது இடைத்தங்கல் பயணம் செய்பவர்கள் இந்த மாதம் 8ம் திகதியில் இருந்து 13 டாலர்கள் கட்டி எலற்றோனிக் விசா(Electronic Travel Authorization) எடுக்க வேண்டும். இது அமெரிக்கா கனடா ஐரோப்பியர்களுக்கும் பொருந்தும். அமெரிக்காவில் இதுவரை சாதாரண வாகன அனுமதிப் பத்திரத்துடன் விமானபயணம் செய்யலாம் வைகாசி 7ம் திகதி 2025 இல் இருந்து றியல் ஐடி(REAL ID) என்ற சாரதி அனுமதிப் பத்திரம் அல்லது கடவுச்சீட்டு வைத்திருந்தாலே விமானப் பயணமோ அரச அலுவகங்களுக்குள்ளோ போக முடியும். இப்போதுள்ள சாரதி அனுமதிப் பத்திரம் பொய்யான தரவுகளைக் கொடுத்து பலரும் எடுத்திருந்தார்கள். குறிப்பிட்ட காலத்துக்கொரு தடவை புதுப்பிக்கும் போது அடுத்த காலத்துக்காக பணத்தைக் கட்டினால் சரி. பல லட்சம் பேருக்கு இது ஆப்பாகப் போகிறது. நீண்ட காலமாகவே சொல்லிக் கொண்டு வந்து பிற்போட்டுக் கொண்டு வந்து வரும் வைகாசி மாதம் 7ம் திகதி கட்டாயமாக்குகிறார்கள். https://abc7ny.com/post/new-travel-requirements-taking-effect-2025-domestic-international-destinations/15734635/?ex_cid=TA_WABC_FB&utm_campaign=trueAnthem%3A+Trending+Content&utm_medium=trueAnthem&utm_source=facebook
- கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் பிரிகேடியர் சங்கர் எ சூசை
-
கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சி
- கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சி
உண்மை தான் ஆனால் அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டு நொண்டிச் சாட்டாகத் தெரியலையா? இது யாருடையதோ தூண்டுதலின் பேரில் சிஐடி இயங்கியதாகவே தெரிகிறது.- கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சி
விமானநிலைய சம்பவம் பொய்யா கப்பி?- கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
இது அப்ப. நீங்க பார்த்தது இப்ப.- கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சி
இப்போ கக்கீம் ஒரு நேரடி சாட்சியாகிவிட்டார்.- பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது குற்றச்சாட்டு!
தொலைக்காட்சியில் வரப் போகிறீர்கள். அதற்கேற்ப வசீகரமாக இருக்க வேண்டும்.- கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சி
சிறிதரனுக்கு அழைப்பு கிடைத்து விருந்தாளியாக போகும்போது ஏன் கக்கீமின் உதவி தேவைப்படுகிறது? ஒருவேளை சேர்ந்தே போயிருக்கலாம். இந்தப் பிரச்சனையை பார் ஆளுமன்றுக்கு கொண்டு செல்லப்பட்டு விமானநிலைய அதிகாரிகள் விசாரிக்கப்பட வேண்டும். - கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சி
Important Information
By using this site, you agree to our Terms of Use.