-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
விளக்கம் பிரமாதம்😂
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
உண்மையில் நான் எழுதியது பகிடி இல்லை. இது என்னால் நினைத்து கூட பார்க்க முடியாத காரியம். உங்களுக்கு நினைவிருக்கலாம், அத்தனை எதிர் கருத்து இருந்த போதும் தான் அரசியலில் இறங்க யோசிப்பதாக நெடுக்ஸ் சொன்னபோது அதை நான் வரவேற்றேன். அப்படியாவது ஒரு வினைதிறானவர் முன்னுக்கு வரவேண்டும் என்பதால். என் போன்றவர்களை நம்பினால் இன்னும் அழிவே மிஞ்சும். நீங்கள் 2017 க்கு பின் கோஷானின் கருத்து எதையும் வாசிக்கவில்லையா? இதில் எந்த கடும்கருத்து நிலையும் எனக்கு இல்லை.
-
நாமலின் பட்டச் சான்றிதழ் தொடர்பில் கேள்வி!
அஸ்கு, புஸ்கு…😂 விசாரிப்பவர் தன்னை வெளிப்படுத்த வேணும். பிறகு நான் எப்படி கொலிடே போறது?😂 தக்க காரணமும் காட்ட வேண்டி வரலாம். பொதுநல காரணத்தை காட்டி ஊடகம், யூடியூப்பர் யாராவதுகேட்கலாம். லெட்டர் வேணும் எண்டால் அடிச்சுத்தரலாம்😂.
-
நாமலின் பட்டச் சான்றிதழ் தொடர்பில் கேள்வி!
இது சம்பந்தமாக எவரேனும் City University ஐ அணுகி உள்ளனரா? இதுவரை காலமும் நாமலின் போட்டி பரீட்சை பிந்தைய பரீட்சைகள் சகலதையிம் ஜீ எல் பீரிஸ் எழுதி கொடுத்ததாக அல்லவா சொல்வார்கள்.
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
இண்டைக்கு திருமலை நாளைக்கு மட்டகளப்பு, யாழ்ப்பாணம். கருண காட்டவே மாட்டாத தெய்வங்களுக்குகான காவடிகளை இறக்கி வைத்து விட்டு, தன் பலம், பலவீனம் அறிந்து, ஒரு கூர்ப்பில் முன்னேறிய உயிரி கூட்டம் போல் ஒன்றிணைந்து செயல்படாதவரை…. இந்த இனத்துக்கு உய்வே இல்லை.
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
புதிதாக தேவையில்லை. ஒரு காலத்தில் மிக முக்கிய பெளத்த நகரம் காஞ்சிபுரம். அதே போல் இலங்கையின் முதல் பெளத்தன், மன்னர் தேவநம்பிய தீசனும் ஒரு தமிழனே. தேவநம்பிய தீசனின் தந்தை மூத்த சிவன். இந்த 6 திருத்தத்தை ஏற்காது கூண்டொட்டோடு பதவி விலகினர் கூட்டணியினர். ஆனால் புலிகளின் பினாமிகான ததேகூ இதை ஏற்று கொண்டது. புலிகள் காலத்திலேயே.
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
சண்டித்தனம் செய்யாமல் ஒன்று பட்டு நகரலாம். தீர்வை அவர்கள்தான் தரவேண்டும். தனி நாடு, பிரிந்து போகும் சமஸ்டி எண்டு மூச்சும் காட்ட கூடாது. நீங்கள் சொல்லும் தீர்வை தரவேண்டிய ஏது நிலையை அவர்களுக்கு நாம் உருவாக்க வேண்டும். ஆனால் இதை செய்ய என்னால் (அக்னியாலும்?😂) முடியாது. ஏன்னா… பேசிக்கலி நான் ஒரு சோம்பேறி😂. அங்கே பா ஊ க்குரிய சிறப்புரிமை பாராளமன்றத்துள் இருக்கு. இங்கே பேசினால் அடுத்த முறை நோ வீசா😂
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
ஸ்டார்ட் மீசிக்😂 70 வருடம் ஏதுவும் தராதோரிடம் என்னத்தை பேசி…என்னத்த …? இந்த பம்மாத்தை தானே சுமனும் செய்கிறார்.
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
சரி, நீங்கள் கூறும் யதார்த்த அரசியல்தான் என்ன என ஒரு விளக்க்கம் கொடுக்கிறது?
-
யாழ் களமூடாக அறிமுகமான வில்லுப்பாட்டு இராஜன் காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
சிங்களர் தீர்வு மட்டும் அல்ல, சக வாழ்வை கூட தரப்போவதில்லை. இப்போ உள்ள அத்தனை தமிழ் அரசியல்வாதியும் - ஒரு சதம் தேறாத கேசுகள். வெளியக சுயநிர்ணயம் ஒருபோதும் சரிவராது. உள்ளக சுயநிர்ணயம், சமஸ்டி என்பன நீண்ட கால இலக்காக இருத்தல் அவசியம் ஆனால் இதற்கும் குறைவான ஒரு காணி உரிமையாவது பாதுகாக்கபடும் தீர்வை நோக்கி நகர்வதே இப்போ செய்ய கூடியதும், வேண்டியதும். இந்த 4 பிரபஞ்ச உண்மைகளி கீழ் புலம், புலம்பெயர் தமிழர் ஒன்றுபட்டு, ஒரு புதிய அரசியலை, தலைமையை உருவாக்க வேண்டும். சொல்வது மிக இலகு… செய்வது….
-
திருக்கோவில் வெளிநாட்டு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட சம்பவம் ; கைதான நபருக்கு விளக்கமறியல்
சும்மாக்காட்டியும், ஒரு சின்ன பொருளை, பெரிது என்பது போல் எழுதுவது.
-
கோடி ரூபாயில் யாழில் உருவாகப்பட்ட சொகுசுப்படகு! வெள்ளோட்டம் குறிகட்டுவானில் | Luxury tourist Ship
ஒரே கல்லில் ஒன்பது மாங்காய் அடிப்பது என்பது இதைத்தான்😂 பிகு என்னிடம் சட்டின் வெள்ளை பெயிண்ட் வாங்க கூட காசில்லை. சும்மா ஒரு நப்பாசையில் எழுதியதுதான்😂
-
திருக்கோவில் வெளிநாட்டு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட சம்பவம் ; கைதான நபருக்கு விளக்கமறியல்
தமிழில் உயர்வு நவிற்சி என்பது இதைத்தான் 😂
-
இங்கிலாந்தில் நிரந்தர குடியிருப்பு பெற 20 ஆண்டுகள் காத்திருப்பு!
லேபர் பார்ட்டிக்குள்ளே கடும் எதிர்ப்பு. இங்கிலாந்து திருச்சபை தலைவரும் கடுப்பாகியுள்ளார். ஆனால் இப்போ லேபர் சட்டத்தினை இறுக்கா விட்டால், அடுத்த தேர்தலில் ரிபோர்ம் வந்து ஒட்டு மொத்தமாக எல்லோருக்கும் ஆப்பு இறுக்குவார்கள். இந்த 20 வருடம் என்பது தலைப்பு செய்திதான். அகதிகள் கற்றல் அல்லது வேலை வாய்ப்பில் இருந்தால் அவர்கள் புதிதாக உருவாக்கப்படும் work and study ரூட்டுக்கு மாறி விரைவிலேயே நிரந்தர உரிமை, குடும்பத்தை அழைக்கும் உரிமை பெறலாம். இப்படி பல ஓட்டைகள் உள்ளதால்… ரிபோர்மின் எழுச்சியை இந்த அறிவிப்புகள் மழுங்கடிக்கும் என நான் நினைக்கவில்லை.