Everything posted by goshan_che
-
என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட முடியாது – எஸ்.சிறிதரன்
பார் சிறி, நீங்கள் அரசாங்கம் காட்டும் இடத்தில் எல்லாம் கையோப்பம் இட்டால் ஏன் அரச கட்டுபாட்டில் உள்ள திணைக்களம் உங்களை விசாரிக்க போகிறது. பார் சிறி, இதை இப்போதும் விலக்காமல் மேற்பார்வை செய்வது அனுர அரசல்லவா? இது மட்டும் போதுமே - பிரதமருக்கு எதிராக வாக்களிக்க? இராணுவ அதிகாரிக்கு ஆதரவு கொடுத்தீர்களா இல்லையா? நீங்கள் உங்களுக்கும், குடும்பத்துக்கும் மட்டுமே உரியவர். நசுவல் கள்ளன், அமசடக்கி.
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
❤️முன்னின்று நடத்தியமைக்கு நன்றியும், பாராட்டும்.
-
ஈரானை நோக்கி அமெரிக்கக் கடற்படை சென்று கொண்டிருப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு!
டாவோசில் வைத்து கனேடியன் கட்டதுரை குடுத்த குடுவையில் கிறீன்லாந்தும் வேண்டாம், ஐஸ்லாந்தும் வேண்டாம் என யார் ஓடினார்? அவரேதான்😂
-
ஈரானை நோக்கி அமெரிக்கக் கடற்படை சென்று கொண்டிருப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு!
தம்பரும் ஈரானும் 😂
-
'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' – பிபிசிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி
- 'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' – பிபிசிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி
இவர் தமிழர் என்பதால் ஒதுக்க பட்டதாக யாரும் சொல்லவில்லை. ஆனால்… ஹிந்தி எதிர்ப்பை மையமாக வைத்து, பராசக்தி ரீல் ஓட்டி விட்டு, அடுத்த வாரமே மோடியோடு பொங்கல் வைத்து… நான் தீ பரவட்டும் என சொல்லவில்லை… ஹிந்தீ பரவட்டும் என்றே சொன்னேன்… என்ற ரேஞ்சில் கோமாளித்தனம் பண்ணும் பச்சோந்திகள் நிறைந்த சினிமா உலகில்…. ஒரு ராஜசபா சீட்டுக்காக, பத்மபூசணுக்காக பிஜேபிக்கு தப்புதாளம் போடும் இசைமேதை வாழும் தமிழ்நாட்டில்…. கிடைத்த பல மேடைகளில் ஹிந்தி மேலாண்மையை தட்டி கேட்ட ரஹ்மான்….தமிழரின் மகுடத்தில் பதித்த வைரமே. இஸ்லாமிய ஒவ்வாமையை திரிதோறும் வெளிக்காட்டும் உறவுகள் என்ன நினைத்தாலும், இதுவே உண்மை. எனக்கு தமிழரை விட தன்னை தமிழன் என அடையாளபடுத்தும் இஸ்லாமியர்களை மிகவும் பிடிக்கும்.- வவுனியா மாவட்டத்தில் அரசு முன்னெடுக்கவுள்ள கிவுல் ஓயா திட்டம் தமிழருக்கு ஆபத்து; பல்லாயிரம் ஏக்கர் காணிகளைப் பறித்து சிங்களக் குடியேற்றத்துக்கு முயற்சி
யாழ்கள அனுர காவடிகளை இந்த பக்கம் காணோம்?- 'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' – பிபிசிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி
நீங்கள் சொன்னதே சரி.- கிரீன்லாந்து - ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா விதிக்க இருந்த மேலதிக வரி நீக்கம்
இது அந்த போரினால் ஏற்பட்ட மாற்றம் என்படில் இப்போதும் உடன்பாடில்லை. இது டிரம்ப் வருகையால் ஏற்பட்ட மாற்றம். டிரம்ப் மீள வன்டால் இது நடக்கும் என்படும் அப்போதே எதிர்வு கூறப்பட்டது.- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
ஏற்கிறேன்- 'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' – பிபிசிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி
Keeravani has earned several national and international accolades, including an Academy Award, a Golden Globe Award, a Critics' Choice Movie Award, two National Film Awards, eleven Nandi Awards, eight Filmfare Awards, and a LAFCA Award. In 2023, the Government of India honoured him with the Padma Shri for his contributions towards Indian cinema. ஒஸ்கார் இல்லை என நினைக்கிறேன்.- கிரீன்லாந்து - ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா விதிக்க இருந்த மேலதிக வரி நீக்கம்
அமெரிக்காவின் பங்களிப்பை மறுக்க முடியாது… ஆனால் பேர்ள் ஹாபர் தாக்குதல் வரைக்கும்… அத்தனை வருடமாக தன்னம்தனியாக (சோவியத் ரஸ்யாவோடு ஒப்பந்தம்) நாஜிகளை பிரிதானியா எதிர் கொண்டது…, இல்லை எண்டால் அமெரிக்கா போரில் குதிக்க முதலே எல்லாம் முடிஞ்சிருக்கும்.- 'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' – பிபிசிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி
தமிழன் என்பதை பெருமையாய் பறைசாற்றும் ரஹ்மான்… உலக தமிழர் மனதில் எப்போதும் வைரம்தான்… இவனுகள் எல்லாம் வருட கணக்கா முக்கிகிட்டு கிடக்க, அசால்டா ரெண்டு ஆஸ்கார கொண்டந்த சிங்கம் அவர். #ஹிந்தி தெரியாது போடா- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
நல்லா இருக்கு. இரு ஆலோசனை கருத்துகள். யாழ் என்பது தேவைதானா? முன்னோடி என்ற பெயரே போதும் என நினைக்கிறேன். யாழ்.கொம் உறுப்பினர்கள் ஒருங்கிணைக்கும் அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026 என்பதை subtitle ஆக போடலாம்? இதில் இந்த திரிக்கான இணையசுட்டியையும் சேர்க்கலாம்? ஏனையோர் கருத்துக்களையும் பார்ப்போம்.- கிரீன்லாந்து - ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா விதிக்க இருந்த மேலதிக வரி நீக்கம்
அதே சீனா ஒரு துருவமாவது தவிர்க்க முடியாது. செத்த கிளியின் ஆட்டம் தம்பர் இருக்கும் மட்டும்தான். பிறகு இத்துபோன அனுகுண்டை வைத்து நானும் ரவுடிதான் என காமெடி மட்டுமே பண்ணலாம். ஐரோப்பா தனி வழியே பயணிக்க, ஈயூ ஆர்மியை உருவாக்க காலம் கனிந்து விட்டது. ஜேர்மனி ஆயுதமயப்பட்டால் -ஈயுவும் ஒரு தன்னிறைவுள்ள இராணு சக்தியாகிவிடும்.- கிரீன்லாந்து - ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா விதிக்க இருந்த மேலதிக வரி நீக்கம்
வரவேற்க நாதியற்று போனியே தம்பா😂- கிரீன்லாந்து - ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா விதிக்க இருந்த மேலதிக வரி நீக்கம்
கிரின்லாந்து விடயத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பின்வாங்கியுள்ளதாக தெரிகிறது. கிரீன்லாந்தை அமெரிக்கா வசமாக்கியே தீருவோம் என அடம்பிடித்த டிரம்ப் சுவிஸ்லாந்தில் டவோசில் நேட்டோ பிரதானியுடன் நடந்த பேச்சின் பின் - நீண்டகால பாதுகாப்பை உறுதி செய்யும் ஒப்பந்தம் செய்வோம், பாதுகாப்பு வளையத்தை அமைப்போம் என நிலையை மாற்றியுள்ளார். டிரம்ப் ஏலவே இருந்த டென்மார்க்-அமரிக்கா ஒப்பந்தபடியே நடக்க ஒப்புகொண்டிருப்பதாக தெரிகிறது. கிரீன்லாந்தை அமெரிக்கா வசமாக்குவது பற்றி முன்னர் கூறினீர்களே என பத்திரிகைகள் கேட்க, மழுப்ப்பல் பதில் சொன்ன டிரம்ப்👇 டிஸ்கி மார்க் கார்னியும், ஐரோப்பிய தலைவர்களும் போட்ட போட்டில், தம்பர் கிரின்லாந்து வேண்டாம் என்ற நிலைக்கு வந்துள்ளார். டவோசில் ஆளை வரவேற்க எவரும் போகவில்லை. ஆளை எந்த தலைவரும் சந்திக்கவில்லை. நேட்டோ தலைமை அதிகாரி மூலம் பேசி பணிய வைத்துள்ளார்கள். சர்வதேச அரங்கில் அமெரிக்காவின் கோமணத்தை கனடா+ஈயூ உருவிய நாள் இன்று😂.- கனேடிய பிரதமர் மார்க் கார்னியின் உலக கவனத்தை ஈர்த்த உரை
என்னே அருமையான உரை! கார்னிதான் இப்போ மேற்கின் தலைவர். கார்னி அடி எடுத்து கொடுக்க ஏனைய ஐரோப்பிய தலைவர்கள் போட்டு வெளுக்க… தம்பர் கிரீன்லாந்து ஐடியாவையே கை விட்டு விட்டார்😂- சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.
வாழ்த்து. வழமை போலவே இதுவும் நம்மவர்களால் ஊதி பெருப்பிக்கப்படுவதாக எனக்கு படுகிறது. நான் அறிந்த வகையில்.… மாநிலம் என நாம் இந்திய, அமெரிக்க, கனடா வில் காண்பது போல் அல்ல சுவிசில். அங்கே கண்டோன் என்பது ஒரு நகரம் அளவிலான சமஸ்டி அலகு. உதாரணமாக சூரிக் ஒரு கண்டோன். St. Gallen உம் இப்படி ஒரு நகர-சமஸ்டி அலகு. அதேபோல் முதல்வர் என்பதும் தமிழில், சீப்மினிஸ்டர், மேயர் இரு பதவிக்கும் பயன்படுகிறது. ஆனால் இவர் தவிசாளராகத்தான் தேர்வாகியுள்ளார் என நினைக்கிறேன். அதாவது சிவிகே சிவனாஞானம் வடமாகாண சபையில் வகித்த சேர்மன், பதவி போன்றது. இந்த சென் கலான் சமஸ்டி அலகின் பாராளுமன்றின் (ஏனைய நாடுகளில் இதை மா நகரசபை என்பார்கள், ஆனால் சுவிசில் இவற்றின் அதிகாரம் கூட) தவிசாளராக/சேர்மனாக இவர் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். எய் சபாநாயகர் போல அவை நடவைக்கையை கட்டுப்படுத்தும் வேலை. சீப்மினிஸ்டரோ, மேயரோ இல்லை என நினைக்கிறேன். பிழையாயின் திருத்தவும்.- யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி.
இலங்கையில் இப்படி நடப்பது அரிது. ஆனால் சிலர் நூதனமாக களவு செய்வார்கள். உதாரணமாக ஏ எல் பாஸ்பண்ணி பல்கலை வெட்டுபுள்ளி எடுத்து மருத்துவம், சட்டம், பொறியியல் போவது மிக கஸ்டம். ஜனாதிபதி, அமைச்சர்களின் பிள்ளைகள் கூட களவு செய்து யூனி உள்ளே போனதாக இல்லை. ஆனால் அதி உயர் அதிகாரிகள் மிக அரிதாக இப்படி களவு செய்து அனுப்பியதாக பரவலாக நம்பபடுகிறது. ஒன்றில் பேப்பரை அவுட் ஆக்கி, அல்லது வேறு ஆளை சோதனை செய்ய வைத்து (குதிரை ஓடல்), அல்லது திருத்தும் இடத்தில் பேப்பரை மாற்றி இப்படி செய்வாகளாம். முன்னர் சிறி ரங்கா என ஒரு தறுதலை எம்பியாக இருந்தது. அதுவும், சைக்கிள் கஜன்ஸ்சில் ஒருவரான குதிரை கஜனும் இப்படித்தான் உள்ளே போனதாக சொல்லப்படும். குதிரை கஜன் காரணப்பெயர்.- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
சீலனிடமும் ஏனைய வேலை ஒப்பந்தகாரர்களிடமும் இரு விடயங்களை தெளிவுபடுத்தலாம் என எண்ணுகிறேன். ஏலவே நீங்கள் செய்திருக்கவும் கூடும். வேலைக்கு உரிய கூலி வழங்கபட வேண்டும். ஆனால் இது ஒரு கொடை உதவி (charity) என்பதை அவர்களும் கருத்தில் எடுக்க வேண்டும். தனியாரிடம் அறவிடுவதில் இருந்து 5% -3% கழிவை அவர்கள் தரமுடிந்தால் நல்லம். யாழ் உறவுகள் பணத்தால் உதவும் போது நாட்டில் இதில் ஈடுபடுவோர் கொஞ்சம் உழைப்பை தானமாக கொடுத்தால் அவர்களும் நல்லது செய்வதாக அமையும். அவர்களே கஸ்டஜீவனமாக இருக்கும். நாம் கேட்டு பார்க்கலாம். முடியாது என்றால் காரியம் இல்லை. அனுகூலமான விலை, நேர்த்தியான வேலை - நாம் மேலும் திட்டங்களை செய்ய உதவும். அது அவர்களுக்கு மேலும் தொழில் வாய்ப்பை உருவாக்கும். ஆகவே இதை அவர்களின் நீண்டகால நோக்கில் அணுக வேண்டும்.- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
வழங்கலாம் என்பது என் கருத்து. ஏனையோர் இருவரும் தம் கருத்தை சொல்லவும். 👍- யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி.
தட் குடுமியை மறைக்க மறந்த தருணம்😂. நாதமுனியை நான் மிஸ் பண்ணுகிறேன். நீங்களுமா?😂 ஓ எல், ஏ எல் என எந்த பொது பரிட்சையும் இல்லாத நாடு கனடா என்பதை அறிந்த போது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. இது இன்னமும் அதிர்சியாக உள்ளது. இங்கே மாணவர் ஐடி கார்ட் இல்லாமல் பல்கலை கழக கட்டிடத்துக்குள், சில வளாகங்களுக்குள் கூட நுழைய முடியாது.- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
ஏராளன் - செயல்கள் அத்தனைக்கும் நன்றி. கட்டப்பட்ட பின்னான படங்கள் ஒரு உத்தேகத்தை தருகிறது.- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
இதையும் நாமே செய்து கொடுக்கலாம் என்பது என் அபிபிராயம். வாத்தியார் அண்ணா, குசா அண்ணா, யாயினி அக்கா இவர்களோடு ஏனையவர்களும் உங்கள் கருத்தை சொல்லவும். பெரும்பான்மை முடிவுக்கு கட்டுப்படுவோம். இவ்வாறு புலரிடம் இருந்து எடுக்க தேவையில்லை. கீழே வாத்தியார் அண்ணா சொன்னது போல், இவ்விரண்டு வேலைகளையும் pilot ஆக செய்வது என்பது நாம் கூடி எடுத்த முடிவுதான். அதை அப்படியே செய்வோம். குசா அண்ணை கேட்டது நாம் தொடர்ந்தும் திருத்தபணிகளையா அல்லது புதிய கட்டுமான பணிகளையா செய்யப்போகிறோம் என்பதையே. தொடர்ந்து புதிய கட்டுமானப்பணிகளைத்தான் செய்ய போகிறோம். வேறு யாரும் இதுபோல் திருத்த பணி உதவி கோரின், அதை அப்போது பரிசீலிப்போம். - 'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' – பிபிசிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி
Important Information
By using this site, you agree to our Terms of Use.