Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

goshan_che

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  9,000
 • Joined

 • Last visited

 • Days Won

  72

Everything posted by goshan_che

 1. மேலே ****** என நிர்வாகத்தால் நீக்கப்பட்ட கள உறவு ஒருவரின் மீதான தனிபட்ட விமர்சனம் உட்பட நிர்வாகம் எடுத்த நடவடிக்கையை நானும் வரவேற்கிறேன். இந்த கருத்து மட்டும் அல்ல இந்த திரியில் ***** என நிர்வாகம் கள உறவு ஒருவரை தனிபட்டு நீங்கள் தாக்கி எழுதிய பல கருத்துக்களை நீக்கி உள்ளதையும் நான் வரவேற்கிறேன்.
 2. ஆகவே அவர்களுக்கு உண்மையை விளக்காமல் அடித்து விடலாம். இதைதான் புரட்டு என்கிறோம்.
 3. இங்கே ஓணாண்டியார் திராவிட அரசியலையும் எதிரியாக்காதீர்கள் சீமானையும் எதிரியாக்காதீர்கள் என சொன்னதை நல்ல கருத்து என சொல்லும் அதே பதிவில் இப்படியும் எழுதுகிறீர்கள் .
 4. இங்கே யாரும் திராவிட கட்சிகள் நல்லது என்று எழுதவில்லை - இந்த திரியே சீமான் சொன்ன பொய்யை பற்றிதான் ஓடி கொண்டிருந்தது **** சீமான் சொன்னது - எனது கடிதத்தை வைத்து இந்த நாடுகள் குடியுரிமை கொடுக்கிறன. இது பச்சை பொய் என்பது நிறுவப்பட தேவையில்லாத உண்மை. சீமான் இதை சொல்லவில்லை, அதை சொன்னார், காங்கிரஸ், இன அழிப்பு இத்யாதி எல்லாம் தேவையில்லாத வீண் கதைகள், வியாக்கியானங்கள். சீமானே இப்படி ஒரு விளக்கத்தை கொடுக்கவில்லை. ஆகவே சீமானின் ஆதரவாளர்கள் என்ன சொன்னாலும் சீமான் சொன்னதுதான் அவரின் வார்த்தை. அது 100% புரட்டு.
 5. “வீடியோவில வந்தா காணும்” - ஒத்த வசனத்தில பத்து வருச அரசியல் வாழ்கையில சாணிய கரைச்சு ஊத்திட்டானுவோ
 6. உவர் ஸ்ராலின பாத்து வயல்ல இறங்கின விவசாயி அண்ணை. அதுசரி குடத்தனை பக்கம் உப்பிடி வயல் இருக்கோ அண்ணை. இவர பார்த்த மண்கும்பியில நெல்விதைக்கிறவர் போலத்தான் தெரியுது எனக்கு.
 7. @பிரபா சிதம்பரநாதன் இன்னும் நேரம் இருக்கு ஓடியாங்கோ இது பட பஸ் இதை விட்டா ஊருக்கு நடந்துதான் போகோணும்.
 8. போராட வரும் போது அந்த டிரக்டரில் வர மறக்க வேண்டாம் ஸேர்
 9. பையா எப்படியாவது ஆளை இழுப்பம். லேட் ஆனாலும் ஜி விதியை கொஞ்சம் தளர்துவார்.
 10. @MEERA ஒரு கை போடுறது? ஒண்டரை மணத்தியாலம்தான் இருக்கு.
 11. இரெண்டு பேரும் ஒரு திரில நிண்டாலே கலகலப்புத்தானே…. ஒரு மாசம் கொடாட்டம்தான்…. கோஷான் ஹேப்பி அண்ணாச்சி…
 12. நாதம் வழமை போல் சீமான் பொய் சொல்கிறார் என்று நாம் சொன்னால் - “ஐயோ அகதிகள் பாவம்” என சம்பந்தமில்லாமல் நீலிகண்ணீர் வடிக்கிறார். மேலே யார் அகதிகள் பற்றி தப்பாக பேசியது? யாருமில்லை. இங்கே பேச்சு சீமானின் பொய்யை பற்றி மட்டுமே. அகதிகள் பற்றிய கரிசனை எல்லாருக்கும் உண்டு. மேலே மிக தெளிவாக குறிப்பிட்டேன் சீமான் கடிதம் கொடுத்திருந்தால் அது ஒரு வழக்கின் ஆதாரம் என்பதாக மட்டுமே கருதப்பட்டிருக்கும். ஏற்கனவே இலங்கையில் உயிராபத்து உள்ளவராக உள்ள இலங்கையர் ஒருவரை - அவரின் உயிருக்கு ஆபத்து என்பதை நிறுவ சீமானின் கடிதத்தையும் ஒரு சாட்சியாக நீதி மன்றம் ஏற்றிருக்கலாம். இலங்கை எம்பிகள் கொடுக்கும் கடிதம், இலங்கை வக்கீல்கள் கொடுக்கும் கடிதம் போல, தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு சின்ன கட்சியின் தலைவரின் கடிதம் என்ற அளவில் அதை நீதி மன்று கையாண்டிருக்கும். ஆனால் சீமான் சொல்வது போல் ஏதோ இவர் கடிதம் கொடுத்தால் இந்த நாடுகள் உடனே அந்தஸ்து கொடுத்தது என்பது விளக்கம் இல்லாத மக்கள் தலையில் மிளகாய் அரைக்கும் வேலைதான். அதில் கூட 10 வருடத்துக்கு முன் ஒரு தடவை இலங்கை போன சீமானுக்கு - இப்போ இலங்கையில் ஒருவருக்கு உயிராபத்து என்பது எப்படி தெரியும் என்ற கேள்வி நிச்சயம் எழும். ஆகவே 400 பேர் என்பதும் நம்பவியலாதது. மூன்று நாட்டில் 400 கடிதம் என்றால் ஒரு நாட்டில் அண்ணளவாக 125 கடிதம். கொடுக்கும் கடிதம் ஒவ்வொன்றிலும் அந்த நபரை தனக்கு எப்படி தனிப்பட்டு தெரியும், அவருக்கு என்ன ஆபத்து, அதைதான் இந்தியாவில் இருந்தபடி எப்படி தனிப்பட்டு அறிந்தேன் என விளக்க வேண்டும். சும்மா போட்டோ கொப்பி மாரி அடித்து அனுப்பினால் அதை கனம் பண்ண மாட்டார்கள். அல்லது கூலிக்கு கடிதம் கொடுக்கும் professional witness என்றே கருதுவார்கள். ஏலவே சீமான் பல பொய்களை நா கூசாமல் சொல்பவர் என்பதால் இதையும் ஒரு மிகைப்படுத்தல் என்றே பார்க்க முடியும். கெளரவம், விதி, போன்ற சினிமா படங்கள் போலன்றி evidence ஐ ஒரு நீதி மன்று எப்படி அணுகும் என்ற அடிப்படை புரிதல் இருந்தாலே சீமானின் 400 பேர், கப்ஸா என்பது வடிவாக புரியும். சீமான் இலங்கையில் சந்தித்த ஒரு சிலரின் வழக்குகளுக்கு இப்படி கடிதம் கொடுத்திருக்கலாம். சீமான் பின் வருமாறு கூறி இருந்தால் அதில் யாரும் பிழை காண முடியாது. “எனக்கு தெரிந்த சில ஈழத்தமிழர்களுக்கு உயிராபத்து என்பதை உறுதி செய்து நான் கொடுத்த்த கடிதத்தை, ஆதாரங்களில் ஒன்றாக ஏற்று இந்த நாடுகள் அவர்களுக்கு தஞ்சம் அளித்தன”. ஆனால் சீமான் சொன்னது? ஏதோ தான் கடிதம் கொடுத்தால் இந்த நாடுகள் எல்லாம் உடனே குடியுரிமை கொடுக்கும் என்பதான சோடிப்பு. இதைதான் கருணாநிதியும் செய்தார். ஆனால் கருணாநிதி பரம்பரை கள்ளன் - லேசில் மாட்ட மாட்டார். சீமான் பஞ்சத்துக்கு கள்ளன் - பொய் சொல்லி மக்களை ஏய்க்க வேண்டும் என்று தெரிகிறது ஆனால் எப்படி மாட்டு படாமல் பொய் சொல்வது என தெரியவில்லை.
 13. இது சரிதான். ஆனால் இது அதற்கும் மேல். இது பிரெக்சிற்காரர்களை போல், டிரம்பை போல் தெரிந்து கொண்டே பொய் சொல்லி அதில் அரசியல் ஆதாயம் அடையும் போக்கு. நாம் தமிழர் கட்சியும், சீமானும் பெரியாரை பற்றி, சில தமிழ்நாட்டு சாதிகளை பற்றி ஒரு தொகுதி புலம்பெயர் மக்களிடம் இப்படியான பொய்யைத்தான் பரப்பி வைத்துள்ளார்கள். அதே போல் ஒரு பொய்தான் இதுவும். ஆனால் இந்த பொய்யை புலம்பெயர் தமிழர் இலகுவில் இனம் காண கூடியதாய் உள்ளது.
 14. இது புரியாமலில்லை மீரா. ஒரு வழக்கில் பல ஆதாரங்கள் கொடுக்கப்படும். அப்படி இவர் கொடுத்த கடிதமும் ஒரு ஆதாரம். இவர் கடிதம் கொடுத்த சில வழக்குகள் வென்றிருக்கும். சிலது தோற்றிருக்கும். இலங்கையில் இருக்கும் எம்பிக்களும்தான் கடிதம் கொடுப்பார்கள். அவ்வளவுதான். ஆனால் நான் கடிதம் கொடுத்தேன் இந்த நாடுகள் அந்தஸ்து கொடுத்தன, என ஏதோ தன்வார்த்தைக்கு அப்படி மதிப்பு இருப்பது போல கூறுவது விபரம் தெரியாத தமிழ்நாட்டு அடி தட்டு மக்களை ஏமாற்றும் வேலை. உங்களுக்கும் எனக்குமே தஞ்ச அந்தஸ்துக்கும், குடியுரிமைக்கும் வித்தியாசம் தெரிகிறது- கடிதம் கொடுத்த சீமானுக்கு தெரியாதா? தெரியும். ஆனால் தமிழ்நாட்டு பாமர மக்களுக்கு தெரியாது என்பதால் அடிச்சு விடுகிறார். புலம் பெயர் தமிழன் சீமானின் மற்ற புரட்டுகளை நம்பினாலும் - இது ஒவ்வொருவருக்கும் தெரிந்த விசயம் - ஆகவே இந்த பொய்யை இலகுவாக இனம் கண்டு கொண்டார்கள்.
 15. தஞ்சம் கூட எப்படி கொடுப்பார்கள்? தஞ்சம் ஒரு நாட்டில் persecution உள்ளோருக்கே கிடைக்கும். நாதக கட்சி நடத்துவது இந்தியாவில், நாதக இந்தியாவில் தேர்தலில் நிற்கும் அளவுக்கு சுதந்திரம் உள்ள கட்சி. நாதக உறுப்பினர் என்பதால் இந்திய தமிழர் யாருக்கும் வேறு நாடுகள் தஞ்சம் கொடாது. அப்போ யாருக்கு சீமான் கடிதம் கொடுக்கிறார்? இலங்கை தமிழருக்கு? இலங்கையில் ஒருவருக்கு உயிராபத்து என இந்தியாவில் இருந்து ஒருவர் கொடுக்கும் கடிதத்தை யார் நம்புவார்கள்? ஒரு சிலர் இவரின் கடிதத்தை கேட்டு பெற்றிருக்கலாம், ஆனால் அதுக்கு இந்த நாடுகளில் ஒரு மதிப்பும் இருந்திராது என்பதே உண்மை. ஆனால் 400 பேருக்கு நான் கடிதம் கொடுத்து “குடியுரிமை” கொடுத்தார்கள் என்பது சீமானின் வெடிப் புழுகே. பிற்சேர்க்கை மீரா, முதலில் உங்களை கோட் செய்தேன் ஆனால் - நீங்கள் எழுதியது எனக்கல்ல என இப்போ படுகிறது. ஆகவே கருத்தை எடி செய்துள்ளேன்.
 16. இரெண்டு விசயம்: 1. எங்கள் மத்தியில் அப்படி யாரும் இருப்பதாக தெரியவில்லை. அப்படி பொம்மை அரசை நிறுவுவது என்றாலும் அவர்களுக்கு தெரியாமல் தான் நிறுவ வேண்டும் (indirect control) -அதுக்கு அவர்களுடன் நெருங்கி போக வேண்டும். அப்படி கிட்ட போனாலே உடனடியா துரோகி பட்டம் பார்சலில் வரும். அண்மைய உதாரணம் சுரேன் சுரேந்திரன். எனக்கு தெரியாது ஆனால் இப்படி ஒரு எண்ணத்தில் அவர் கோட்டவுக்கு பதில் சொல்லி இருக்கலாம் (ஊகம்). ஆனால் உடனே ஆளை கழுவில் ஏற்றிவிட்டோம். 2. எம்மை பொம்மை அரசை நிறுவவிடும் அளவுக்கு அவர்கள் மோடையர்களாக எனக்கு தெரியவில்லை.
 17. இலங்கை பிரச்சனை இந்திய பொருளாதாரத்தை அதிகம் பாதிக்கும் என நான் நினைக்கவில்லை. ஒப்பீட்டளவில் தமிழ் நாட்டின் பொருளாதாரமே இலங்கையை விட 3 மடங்கு என நினைகிரேன். தவிர இலங்கை அவர்களுக்கு பெரிய சந்தையும் இல்லை. கடத்தல் போன்றவை பெரிய அளவில் பாதிப்பை தராது என நினைகிறேன்.
 18. இதில் ஒரு சின்ன சிக்கல் இருக்கு. 1. விஜை அம்மா ஷோபா மலையாளி. அப்பா தமிழ். 2. தவிரவும் விஜை ஒரு கிறிஸ்தவர் (ஜோசப் விஜை -சர்சை). 3. இப்போ விஜை தமிழனா? மலையாளியா? தூய தமிழனா? என்பதில் தம்பிகளுக்கு குழப்பம். 4. இந்த குழப்பத்தை மேலும் அதிகமாக்கும் நான்கு காரணிகள். A. லைக்காவுக்கு ஆதரவாக இறங்கிய சமயம் சீமான் விஜயை எளிய தமிழ் பிள்ளை என்று அங்கிகரித்த நியாபகம். இப்போ மலையாளி என சொன்னால் - தமக்கு பிடித்தால் தமிழன், பிடிக்காட்டில் மலையாளி என்று சொல்கிறார்கள் என்பது அப்பட்டமாக தெரியும். B. சீமானின் மனைவியின் தாயார் தெலுங்கர் என்கிறார்கள் ஆகவே இதே வரைவிலக்கணத்தின் படி சீமானின் மகனும் தமிழன் இல்லை என ஏற்க வேண்டி வரும். C. விஜையின் பலம் - ரஜனியை போல அல்ல துடிப்பான இளைஞர்கள் விஜையோடு உள்ளார்கள். நேற்று ஒரு வாண்டு வீடியோ விட்டிருக்கு சீமானை திட்டி. D. சீமானும் கிறிஸ்தவர் ஆகவே அந்த பருப்பும் வேகாது. இப்படி எல்லா பக்கத்தாலும் விஜய் கேட்டை போடுவதால்- விஜே சேதுபதியை, பார்தீபனை தெலுங்கன் என கட்டம் கட்டியது போல் விஜையை செய்ய யோசிக்கிறார்கள்.
 19. நான் உங்கள் நிலைப்பாட்டை மட்டும் சொல்லவில்லை அக்னி. அப்படி எழுதிய பலரையும்தான் சொன்னேன். உங்கள் நிலைப்பாடு என்ன என்பதை பிறிதொரு திரியில் விளக்கி இருந்தீர்கள். 1. எப்படியும் கோத்தா வெல்லபோறார் - எதிர்த்து போட்டு ஏன் அடிவாங்க வேணும்? 2. கோத்தா அரசு சிக்கலில் மாட்டும் போது அதை வைத்து ஏதாவது நியாயமான உரிமைகளை நாம் அடைய முயற்சிக்கலாம். இவைதான் உங்கள் நிலைப்பாடு என நான் விளங்கி கொண்டேன். இதில் 1 உடன் முரண்பட ஏதும் இல்லை. கோட்ட வெல்ல போறார் - நாம் எதிர்த்து போட்டால் நூலிழையில் வெற்றி தவறக்கூடும் என்றே நான் அப்போ கூறினேன். ஆனால் முடிவுகள் நாம் என்ன செய்தாலும் கோட்டா வென்றிருப்பார் என காட்டின. 2 - நீங்கள் எதிர்பார்த்த இக்கட்டுக்கு இலங்கை வந்து விட்டது ஆனாலும் புலம்பெயர் தமிழர் தலையில் மிளகாய் அரைக்கவே திட்டம் போடுகிறார்களே ஒழிய ஒரு நியாமான தீர்வையும் தர முயற்சிப்பதாக காட்ட கூட இல்லை. இதே போல்தான் இலங்கைக்கும் சீனாவுக்கும் உறவை வளர்த்து அமெரிக்காவை உள்ளே இழுக்கும் திட்டமும் (நீங்கள் இப்படி சொல்லவில்லை). இதைதான் நான் சுட்டி காட்டினேன். வித்தியாசம் இருக்கு ஆனால் அடிப்படை physical security, food security, இல்லை என்றால் மனித இனம் மிக விரைவில் காட்டாட்சியே கதி என மாறலாம். எவன் ஒருவன் எனது ஊரில் அமைதியை உணவை பாதுகாக்கிறானோ அவனே ஆண்டகை எனும் நிலை. சோமாலியா மட்டும் அல்ல, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கூட இப்படித்தான். பழைய காலத்தில் மன்னர் பரம்பரைகள் கூட இந்த அடிப்படையில்தான் உருவானது.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.