Everything posted by goshan_che
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கணிப்பு வேறு விருப்பம் வேறு. விருப்பபடி தேர்வு செய்தால் நான் இந்தியா, அவுஸ், இலங்கை சுப்பர் எட்டுக்கு கூட போகாது, ஆப்கானிஸ்தான், ஸ்கொட்லாந்து பைனல் விளையாடும் எண்டுதான் எழுத வேண்டும் 😂.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஆம் சொல்லி உள்ளேன். பெரிய கை தான் ஆனால் கேட்ச் பிடிக்க சொன்னால் butter fingers 😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஆம் 15 வயதுக்கு கீழ்பட்ட அணிக்கு
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நம்ம பழைய கிளப்❤️
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
துல்லியமான கணிப்பு 😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
மே.இ.தீ நாட்டுபாடலை பாடிய உத்வேகத்தை பார்த்தால் ஒற்றுமையா, உத்வேகமா விளாடுவாங்கள் போல கிடக்கு. வழமையா பாட்டு பாடும் போது பலர் பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸுக்கு நிற்பது போல் நிற்பார்கள்😂.
-
அறிவியல் உலகை ஆளும் ஈழத்துத் தமிழ் பெண் - அவுஸ்திரேலியாவில் கலாநிதி மேகலா பாலமுரளி சாதனை!
சும்மா வாய்க்கு வந்ததை எல்லாம் எழுதி அறிவியல் உலகை ஆள்கிறார் என லூசுதனமாய் பேஸ்புக்கில் எழுதபடும் பிஸ்கோத்து தகவல்களை இப்படித்தான் நாறடிக்க வேண்டும். இல்லை என்றால் நிஜமாக சாதிக்கும் தமிழரின் சாதனைக்கும் மதிப்பில்லாமல் போய்விடும். கீழே மித்திலாவின் வேலையிட புரோபைலை தந்துள்ளேன். அவர் ஒரு சாதராண முனைவர்தான். அப்படி ஒன்றும் அரிய சாதனை நிகழ்தியதாக அதில் இல்லை. தமிழன் என்பதால் பிஎச்டி எடுப்பது, மருத்தடிக்கும் விமான லைன்சன்ஸ், ரோட்டு கூட்டு இயந்திர லைசன்ஸ் எடுப்பதை எல்லாம் சாதனை என கொண்டாடுவதும், ஏனையோரும் அதை ஏற்க வேண்டும் என நினைப்பதும் மடமை. இவற்றை எல்லாம் ஒரு அமேசன் பழங்குடியில் செய்யதால் அதன் முதன் முயற்சி பாராட்டலாம், ஈழதமிழரில் அல்ல. https://profiles.sydney.edu.au/mehala.balamurali
-
அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?
ஓம் நாகரத்தினமேதான். எனக்கு தெரிந்த நாகரத்தினம் எண்டா அது எங்கட நக்கத் மட்டும்தான்😀
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ராஜா பாதி ரஹ்மான் பாதி…90s teenager 😀 ஆப்கானிஸ்தான் குர்பாசை முதல்ல அனுப்பி இருக்கலாம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் 13 தரம் அதில் 6 தரம் தியேட்டரில். ஊரில் இருந்து யார் கொழும்பு வந்தாலும் கூட்டிப்போவதுதான் வேலை😂.
-
அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?
நான் கேள்விபட்டுள்ளேன். சாணியை பாம்பின் முத்து மேல் போடும் தைரியம் எல்லாம் இல்லை, அதனால் பாம்பு முத்தை துப்பிய பின் இயற்கை/அகால மரணம் அடைந்தால் நான் போய் முத்தை நைசாக எடுத்து கொள்ளலாம் என நப்பாசை கொண்டதுண்டு😂.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
அப்ப யாழை மூடி விடுவோம் என்கிறீர்களா?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தேவராஜ் ரசோ அண்ணா, சூர்யா கோஷான் அமுல் பேபி கலெக்டர் - வசி😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சக்தி கொடு….😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ரசோ அண்ணா நவ் 😂👇 பிந்திய தகவல்களின் படி கிரிகெட் அணிதான் இறங்குமாம்😂
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
ஆம். நன்றி
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஹொல்ட் ஓன் ப்ரோ… ஐ ஆம் ஒன் மை வே… நாளைக்கு நானும் நமிபியாவும் சேர்ந்து உங்களை மேலே தூக்கிறம்😂.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவர் நெற்றி முழுக்க நீறு பூசி முதல்வாங்கில் அமர்ந்து கரிசனையாக படிக்கும் மாணவர் … நாங்கள் நோட்ஸ் எடுக்க கொப்பி கூட கொண்டுபோகாமல் பின்வாங்கில் இருந்து கலாட்டா பண்ணும் ஆட்கள். பெண்கள் கவனம் முழுக்க எம்மீது இருப்பது வழமைதானே😀. 😀 தெனாலியில் டொக்டரிண்ட எச்சிலும் மருத்துதானே எண்டு கமல் சொன்ன மாரி போகுது கதை😂
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
நான் எழுதிய தொனி பிழைத்து விட்டது. தமிழ் தேசியத்தில் நம்பிக்கை இல்லாத ஒருவர் அதை விமர்சிக்கலாம், கேள்வி கேட்கலாம், அது தமிழருக்கு தேவையே இல்லாத அரசியல் வழி எனவும் வாதிடலாம், தப்பே இல்லை, ஆனால் தமிழ் தேசியத்தை நம்புவோருக்க்குத்தான் அதை தொடர்ந்து என்ன மாற்றங்களோடு முன்னெடுக்க வேண்டும் என சொல்லும் உரிமை இருக்க முடியும். முற்று முழுதாக முதலாளிதுவத்தை நம்பும் ஒருவர், கம்யூனிசத்தை எப்படி காலமாற்றத்துக்கு ஏற்ப reform பண்ணலாம் என்பதை தீர்மானிக்க முடியாது - அப்படி நடந்தால் அவர் கம்யூனிசத்தை, முதலாளித்துவத்தின் இன்னொரு வடிவம் ஆக்கி விடுவார். இதைத்தான் நான் சொன்னேன். கருத்து சொல்வதை அல்ல.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
உங்களிடம் நான் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்…. தொடர்ந்து எழுதுங்கள். யாழ் போன்ற களங்களில் தமிழ் தேசியத்தை ஆதரித்து எழுத பலர் வருவார்கள், ஆனால் கேள்வி கேட்டு எழுத மிக சிலரே வருவார்கள். இது ஒரு பஜனை மடம் ஆகாமல் தடுப்பவர் நீங்கள். மன உழைச்சல் உட்பட அதற்கு நீங்கள் கொடுக்கும் விலை மிக அதிகம். ஆனால் சில சமயங்களில் உங்கள் கருத்துகள் அதீத மேலோட்டமானவையாக இருப்பதும் உண்மை. துரையப்பா ஒரு நல்ல உதாரணம் - அவர் ஒரு நல்ல மேயர் மறுக்கவில்லை, அவரை தமிழரசு மூர்க்கமாக எதிர்த்தது அதையும் மறுக்கவில்லை. ஆனால் மக்கள் மத்தியில் அவர் பற்றி இருக்கும் மதிப்பீடு இதனால் மட்டும் விளைந்தது அல்ல. தனி சிங்கள சட்டத்தின் பின், தமிழராய்ச்சி மாநாட்டு கொலைகளின் பின், இன்ன பல கலவரங்கள், கொடுமைகளின் பின் அதை எதையும் ஒரு துளி கூட கேள்வி கேட்காமல் தான் சார்ந்த ஒரு கட்சிக்கும் அதன் மூலம் இனவாதத்துக்கு சுயநலமாக அடிமை சேவகம் செய்த ஒருவர்தான் துரையப்பா. துரையப்பா ஒரு நல்ல தமிழனாக மட்டும் அல்ல, ஒரு நல்ல அரசியல்வாதியாக மட்டும் அல்ல, ஒரு நல்ல மனிதனாக கூட நடந்து கொள்ளவில்லை. இதனால் அவரை கொன்றது சரி என வாதிடவில்லை. ஆனால் அவரை பற்றி எழுதும் போது இந்த பக்கத்தை நீங்கள் ஒரு போதும் எழுதுவதில்லை. அது உங்கள் இஸ்டம். ஆனால் அதற்கு எதிர்வினையாற்றுவதும் ஏனையோர் இஸ்டம். ஆனால் ஒன்று - யாழில் மிக கண்ணியமாக எழுதுபவர்களில் நீங்கள் ஒருவர். பலவாறான சீண்டல்கள் name calling இன் மத்தியிலும். என்னால் எல்லாம் அப்படி வார்த்தையை கட்டுப்படுத்த முடியாது😀. இதற்கும் இன்னொரு பக்கம் உள்ளது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அனுர, ஷபாஸ் ஷெரிபுடன் பேசிய பிந்தான் விளையாடும் முடிவை பாக்கிஸ்தான் எடுத்ததாம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எங்கையோ எண்டு மொட்டையா சொன்னால் எப்படி? காபூல்.கொம் மிலா அல்லது கந்தஹார்.கொம் மிலா?😀
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எனக்கு விளையாட ஓரளவு தெரியும். முன்னர் ODI, Test போட்டிகளின் விபரம் எல்லாமும் ஒரு கணினி போல டேட்டாவை மனதில் வைத்திருப்பேன். அசாருதீன், ஹன்சி கொரொஞ்சே, ஹெர்செல் கிப்ஸ், என சில மனதுக்கு பிடித்த வீரர்கள் செய்த ஊத்தை வேலையால் கிரிகெட் பார்பதையே ஒரு 10 வருடம் விட்டு விட்டேன். 2005 பேர்மிங்காம் ஆஷஸ் போட்டியை நண்பர் வீட்டில் சும்மா பார்க்க தொடங்கிய பிந்தான் மீளவும் கிரிகெட் பார்ப்பது. ஆனால் அதுவும் இங், அவுஸ், இந்தியா, தெ.ஆ விளையாடும் டெஸ்ட் போட்டிகளை மட்டுமே. குறிப்பாக T20 பார்ப்பதே இல்லை. அதனால்….வைபவ் சூர்ய வன்சிக்கும், சூர்யவம்சம் சரத்குமாருக்கும் கூட எனக்கு இப்போ வித்தியாசம் தெரியாது 😀.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
மேலே எழுதியதை தயவு செய்து அப்படி விளங்கி கொள்ள வேண்டாம். அந்த திரியில் நீங்கள் இத்தனை கெட்ட அனுபவதின் பின்னும் சிங்களவர் மீது தனிப்பட்டு இனக்குரோதம் காட்டாத நபர் என்பதை, பிள்ளைகளை கூட அப்படியே வளர்க்கும் நபர் என கண்டேன். ஆனால் வெளிநாட்டில் கூட இங்கே வளரும் பிள்ளை கூட இனக்குரோதியாக வளர்கிறதே எனும் உங்கள் ஆதங்கத்தையும் கண்டேன். நானும் இத்தனை கசப்புக்கு பின்னும் தனிப்பட்டு எவரிடமும் இன வன்மம் பாராட்டுவதில்லை, பிள்ளைக்கு அநீதியை சொல்லிகொடுத்தாலும் அது கண்மூடித்தனமாக இன வன்மத்தை வளர்க்க கூடாது என்றும் சொல்லியே வளர்கிறேன். அப்படி பட்ட ஒருவர் “ முஸ்லிமுகெல்லாம் பதில் சொல்ல முடியாது” என எழுதுகிறாரே என்பதே நான் சொல்ல வந்தது. மனம் புண்பட்டால் மன்னித்து கொள்ளவும்.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
உங்கள் தன்னிலை விளக்க்கத்தை முற்றாக ஏற்று கொள்கிறேன். அவருக்கு நானா பட்டம் அளித்தவரும், நான் ஏனைய திரிகளில் சகஜமாக பேசும் உறவுதான் (சீமான் திரி தவிர😀). உங்கள் மூவர் இடையிலான பல விடயங்களை கண்டும் தலையிடாமல்தான் இருந்தேன். ஆனால் ஒரு ஆதாரமற்ற கருத்து, மீள மீள சொல்லப்படுவதால் உண்மை ஆகி விடக்கூடாது என்பதாலேயே என் கருத்தை பகிர்ந்தேன். தனிப்பட்டு உங்களை சீண்டும் அல்லது கருத்தை முடக்கும் நோக்கில் அல்ல. அவரும் எனக்கு உங்களை ஒத்த சம தூரத்தில் உள்ள உறவுதான். அவர் தமிழ் தேசியவாதி இல்லை என்பதால் அவர் சில விடயங்களை சொல்லும் தகுதி அற்றவர் என்பதையும், சில இடங்களில் அவர் அளவைதாண்டி விமர்சனம் செய்யும் போது அதையும் விமர்சித்துள்ளேன்( குசா அண்ணை மொழியில் - எல்லா பக்கமும் சுழண்டு சீன அடி 😀) . குறிப்பாக போராடி இருக்கவே தேவையில்லை அல்லது இலங்க அடையாளத்துள் கரையலாம் போன்ற கருத்துக்களை அவர் சொல்லும் போதோ, துரையப்பாவை விதந்துரைக்கும் போது, இப்படி பல சந்தர்பங்களில் என் எதிர்வினை காட்டமாகவே வந்துள்ளது.