Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. அவர்கள் எப்போதும் அப்படித்தான். ஏனையோர் ஒத்து ஓடுகிறார்களா, பாத்து ஓடுகிறார்களா, குறுக்கால ஓடுகிறார்களா என்பதை பொறுத்து அவர்களின் தலைவிதி தீர்மானிக்கப்படும்.
  2. திறைமையாக காய் நகர்தினால் ஒரு முன்னால் அல்கொய்தா உறுப்பினரும் வெள்ளை மாளிகையில் போய் செண்ட் அடி வாங்கலாம். இல்லாவிட்டால் ஷெல் அடிதான் வாங்கலாம்.
  3. உங்களுக்கு நான் சொல்வது விளங்குதெல்லா?….அவ்வளவும் போதும். விக்ரமாதித்தன் அளவுக்கு எனக்கு பொறுமை இல்லை😂
  4. பூர்வீகம் பார்க்கப்படுவதை நான் இல்லை என சொல்லவில்லை, ஆனால் அமெரிக்காவில் பூர்வ குடிகள் செவ்விந்தியர் மட்டுமே, அவுஸ், கனடா, நியூசிலாந்து எல்லாரும்தான். இலங்கையில் கூட வேடுவர் மட்டுமே பூர்வ குடிகள் என்கிறனர். ஆக, அனைவரும் ஆபிரிக்காவின் ரிட் சமவெளொயில் மட்டும்தான் பூர்வகுடிகள். உலகின் மிச்ச பாகம் எங்கும் மனித குலமே வந்தேறிகள்தான். ஆனால் இதை எந்த நாட்டிலும் பெரும்பானமை ஒத்து கொள்ளாது. எனவேதான் மம்தானியின் வாய்சவாடல் - வெள்ளை, வலதுசாரி அமெரிக்கர்களை மேலும் டிரம்ப் நோக்கி திருப்பும் என நான் எண்ணுகிறேன்.
  5. அனுர காவடிகள்… தூக்கு காவடிகள்… களம் எட்டுக்கு அழைக்கப்படுகிறார்கள்😂
  6. இதுக்கு பதிலடி கொடுக்கிறேன் பேர்வழி எண்டு சின்ராசு எத்தனை ரஃபேலை பப்படம் ஆக்கப்போறானோ😂
  7. "There are only two ways to live your life. One is as though nothing is a miracle. The other is as though everything is a miracle.” Albert Einstein (மிராக்கிளை, காம்பிளக்ஸ் என பொருள் கொள்க). இடியப்பத்தின் சுவை ஏன் குன்றியது என்பதற்கான விடையை மாவை ஆராய்ந்தாலே கண்டு பிடித்து விட முடியும். இடியப்பத்தின் நூல்களின் சிக்கலை ஆராய்ந்து அதை காண முடியாது. கோஷான்😂 #Boutique shop economics #பெட்டிக்கடை பொருளியல்
  8. வரி விடயத்தில் நனைத்து சுமக்கிறோம் என நினைக்கிறேன். மீண்டும் back to basics போய், அடிப்படையை விளங்கினால் அதிகம் சிக்கலான வரி கொள்கைகளுக்குள் மாட்டி விழி பிதுங்க வேண்டி வராது. மிக இலகுவாக - புரிந்து கொள்ள கூடியது - ஒரு கம்பெனியின் உருவாகிவிட்ட வரிச்சுமையின் பால்பட்ட வரிக்காசு திறைசேரிக்கு சொந்தமானது . கம்பெனியை நன்றாக நடத்தி வங்குரோத்தாகாமல் நடத்தி இருந்தால் - அந்த வரிப்பணம் தகுந்த நேரத்தில் அரசை போய் சேர்ந்திருக்கும். இது கிட்டதட்ட ஊழியரின் சம்பள காசு போன்றதே. கம்பெனியை நன்றாக நடத்தி வங்குரோத்தாகாமல் நடத்தி இருந்தால் - அந்த சம்பள பணம் தகுந்த நேரத்தில் ஊழியரை போய் சேர்ந்திருக்கும். இரெண்டையிம் கட்ட முடியாமல் கம்பெனியை வங்குரோத்தாக்கி விட்டு, எரியும் வீட்டில் புடுங்குவது இலாபம் என டிவிடெண்ட் என இருப்பதையும் துடைச்சு வழிச்சு கொண்டு, நாட்டை விட்டு கம்பி நீட்டினால்…. அது அரசுக்கும், ஊழியருக்கும் போடப்பட்ட நாமமே. அப்புட்டுத்தே.
  9. இங்கே எழுதும் சிலருக்கு சஞ்சீவை தனிப்பட்டு தெரிந்திருக்கலாம் என எழுதியவர் நீங்கள் - அதைத்தான் சொன்னேன். மற்றது இதில் பலர் சம்பந்த பட்டிருக்கலாம் என்பதை யாரும், நான் உட்பட ஏற்காமல் இல்லை. அப்படி இருக்க, நீங்கள் மீள மீள இதில் இவர்கள் மட்டுமே சம்பந்தபட்டனர் என நாம் எழுதுகிறோம் என ஏன் எழுதுகிறீர்கள் என்பதுதான் புரியவில்லை. இதை தவிர நீங்கள் தனிப்பட்டு என்னை நோக்கி எழுதியதாக தெரியவில்லை. மேலே சொன்ன இரு விடயங்களையும் நீங்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் ஏன் மீள, மீள ஒப்புவிக்கிறீர்கள் என்பது மட்டுமே என் மனதை குடையும் கேள்வி.
  10. நல்ல மங்குனி அமைச்சர் 😂. வவுனியா-புளியங்குளம் இடையான துரம் 26 கிமி. இதற்கு 2 கடவை மட்டும்தான் எண்டால் மக்கள் சராசரியாக தொடரூந்து பாதைக்கு அந்தப்பக்கம் போக, வர 13+13=26 கிமி யாவது பயணிக்க வேண்டும். கடவைகளின் எண்ணிக்கையை வெள்ளைகாரன் போட்ட அளவில் (அப்போ இதெல்லாம் வெறும் காடு)வைத்திருக்காமல் சனத்தொகை வளர்சி நகரமயமாதலுக்கு ஏற்ப மாற்ற வேண்டும். இந்தாள் பேக்கதை கதைக்குது. அக்மார்க் ஜேவிபி மூளை😂
  11. கடற்புலி மாவீரகளுக்கு கடலில், கரையில் அஞ்சலி முன்பும் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் அது மாவீரர் தினம் அன்றே நடைபெறும். ஆனால் இந்த “கரையோர” மாவீரர் என்ற பதமும், தனியாக நவம்பர் 10 இல் நினைவுகூருவதும் விரும்பதாகதும், தவிர்க்கவேண்டியதும். மாவீரர் என்ற ஒற்றைபதமே போதுமானது. கரையோர மாவீரர், வயக்காட்டு மாவீரர், பெருந்தோட்ட மாவீரர், என்ற எதுவும் அவர்களுக்குள் இல்லை. இந்த அடையாள சனியன்களை எல்லாம் அடித்து துரத்திவிட்டு இருந்தால் தமிழன், இறந்தால் மாவீரன் என வாழ்ந்த அவர்களை இப்படி வகைப்படுத்துவது சிறுமை செய்வதாகும்.
  12. தனியே ஈயூ பாராளுமன்றில் உள்ள சீட் எண்ணிக்கையை வைத்து மட்டும் ஜேர்மனிதான் ஈயூ என்பது சரியல்ல. இந்த பாராளுமன்றம் தனியே சட்ட ஆக்க சபை மட்டுமே. அதிகார பலம் European Council (ஒவ்வொரு நாட்டின் தலைவர்களும் அங்கத்தவர், 27), Council of the European Union (அந்த துறைசார் 27 அமைச்சர்களின் கூட்டு) ஆகியவற்றிடமே உள்ளது. இந்த பாராளுமன்றில் கூட அங்கத்தவர் நாடுகள் அடிப்படையில் ஒருமித்து செயல்படுவதில்லை. உதாரணமாக AfD, நேஷனல் புரொண்ட், UKIP, போன்ற அதி வலதுசாரிகள் தம் நாடுகளில் இருந்து வரும் ஏனைய கட்சிகளுடன் ஒன்றாக இணைந்து பயணிக்கா. மாறாக தமக்குள் ஒன்றான ஒரு பிணைப்பை உருவாக்கி extreme right wing block என செயல்படுவார்கள். ஜேர்மனி பொருளாதார பலம் காரணமாக ஈயூவில் பெரும் செல்வாக்கு செலுத்துகிறது. பிரெக்சிற்க்கு முன் இதை பேலன்ஸ் செய்த யூகே யும் இப்போ இல்லை என்பதால், பிரான்ஸ்சுன் ஜேர்மனியோடு சேர்ந்தே 50+ ஆண்டுகளாக பயணிப்பதால் ஜேர்மனியின் கை ஈயுவில் மேலும் ஓங்கி உள்ளதே ஒழிய, பாராளுமன்ற அங்கத்தவர் எண்ணிக்கையால் அல்ல.
  13. நன்றி. தகவல் கிடைப்பின் பகிரவும். ஒரு தகவல் உதவி. அங்கே ஊபரில் நம்பி போகலாம்தானே? கெய்ரோவில் இருந்து புறப்பட்டு, சுயசை ferry அல்லது பாலம் மூலம் கடந்து, சுத்தி பார்த்து கொண்டு, ஒரே பகலில் கெய்ரோ திரும்பலாமா? நேரம் போதுமாக இருக்குமா?
  14. இந்த திரியை வாசித்த போது இதே எண்ணம் எனக்கும் ஏற்பட்டாலும், குளோபல் தமிழ் நியூஸ் வெளியிட்ட இந்த செய்தியின் அடிப்படையிலேயே கருத்துகள் பரிமாறப்படுவதை கண்டு கொண்டேன். இந்த பெண்மணிக்கு இந்த ஆடவரை முன்னமே தெரிந்துள்ளது, அவரை நம்பி போன இடத்தில் எதோ விபரீதம் நடந்துள்ளது என - செய்தியின் அடிப்படையில்தான் கருத்துகள் வந்துள்ளன. வவுனியாவுக்கு திருமணத்துக்கு போவதாக சொல்லி போன குலதீபா அம்மையாருக்கு சங்குபிட்டியில் என்ன வேலை? என்பது நியாயமான கேள்விதான். ஒன்றில் தவில்காரர் வவுனியா பஸ்சில் இருந்து அவரை தர தர என இழுத்து போயிருக்க வேணும். அப்படி என்றால் அது செய்தியாகி இருக்கும். அல்லது கேரதீவு- பூநகரி இடையே இவராக இறங்கி இருக்க வேண்டும். பிகு எழுதிய பாங்கை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் கருத்தின் போக்கு நியாயமானதே.
  15. ஆண்கள் மிக வெளிப்படையாக பாலியல் உணர்வுகளை வெளிபடுத்துவார்களாமே? எனது இங்லிலாந்தில் பிறந்த பஞ்சாபி நண்பி ஒருவர் தனது ஆண் நண்பருடன் சியம் அல் ஷைக் போனார். ஆண் நண்பர் அருகில் அமர்ந்திருக்கும் போதே தன்னை அணுகி நம்பர் கேட்டதாகவும், சிலர் ஆண் நண்பரிடமே பேச்சு கொடுத்தாயும் கூட கூறினார். அதே போல் கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் பாலியல் சீண்டல்களும் அதிகம் என்றார். இவை உண்மைதானா. பிகு அங்கே நிற்கும் போது அருகே ஜோர்டானில் சில இடங்களையும் போய் பார்த்து வாருங்கள். பண்டைய ரோமுக்கு நிகரான பெட்றா நகரம், வாடி ரம் என அழைக்கப்படும் பாலைவன சோலை, ஓட்டமன் சாம்ராஜத்தால் கட்டப்பட்டு, லோரண்ஸ் ஆப் அரேபியா துணையுடன் அரபு கிளர்சியாளர்களால் அழிக்கப்பட்ட ரயில் பாதை, யேசு ஞானஸ்தானம் பெற்ற ஜோர்தான் நதி என இன்னொரு லிஸ்ட் வைத்துள்ளேன்😂.
  16. பிகு நாம் இப்போ கைக்கொள்ளும் “இனம்” என்ற ஒற்றை வரைவிலக்கணத்துள் அரேபிய வருகைக்கு முன்னான பண்டைய எகிப்தியர்களை உள்ளடக்க முடியாது என்பதே துறைசார் ஒருமித்த கருத்து. அவர்கள் வட ஆபிரிக்காவுக்குரிய தனித்துவத்துடன், நூபியன், லெவண்ட் மக்கள் மற்றும் பலவகை தோல் நிறங்கள் சேர்ந்த ஒரு இனக்குழு கூட்டே இவர்கள். பின்னாளில் வந்த எகிப்திய அழகி கிளியோபட்றா உண்மையில் கிரேக்கத்தின் மசிடோனியா அடியில் வந்தவர்.
  17. ஆக்டோபர் 6 நகரம், கீசா, சுயஸ், கெய்ரோ, அலக்சாண்டிரியா என ஒரு 10 நாள் திட்டம் ஒன்று தயாரித்துள்ளேன். பண்டைய தமிழர் தொடர்பு உள்ள இடங்கள் பற்றிய தகவல்கள தந்துதவ முடியுமா?
  18. உயிரியல், மரபியலில் பெரும் பாய்ச்சலை ஆரம்பித்த, டி என் ஏ யின் டபிள் பீலிக்ஸ் கட்டமைப்பை கண்டுபிடித்த மூவரில் ஒருவர். பிற்காலத்தில் குறிப்பாக 2019 இல் ஈயூஜினிக்ஸ் எனப்படும், இனத்துக்கும் புத்தி கூர்மைக்கும் தொடர்பு உள்ளது எனச்சொல்லும் வகையான கருத்துக்களை சொல்லி, அறிவுசார் சமூகம் இவரை ஒதுக்கிவைத்தது. ஆபிரிக்கர்கள், ஏனையோரை விட புத்தியில் பிந்தங்கியோர் என்பது இவர் நிலைப்பாடு. யாழ்பாணத்தமிழருக்கு மூளையில் ஒரு எக்ஸ்ரா மடிப்பு உள்ளது என நம்பும் நம்மவர்களும் உளர் அன்றோ😂.
  19. மம்தானியின் பூர்வீகம் உகண்டாவா? இந்தியாவா? இதே அணுகுமுறைப்படி டிரம்ப் ஜேர்மனியில் அல்லது ஸ்கொட்லாந்தில் அல்லவா சாதிக்க முயலவேண்டும்? மம்தானியின் பேச்சுக்கள், எனக்கே எரிச்சலூட்டுகிறன. பெருநகரங்களுக்கு அப்பாலான அமெரிக்கன் வாக்காளரை இது செம்ம கடுப்பாக்கும், என்பதும், ஜனாதிபதியாக வரமுடியாத இவர் நாடளாவிய ரீதியில் தன் கட்சிக்கே பின்னடைவை ஏற்படுத்துவார் என்பதும் என் நிலைப்பாடுமே. ஆனால் “பூர்வீகம்” பற்றிய உங்கள் கருத்து காலாவதியாகுவிட்ட கருத்தாக எனக்கு படுகிறது. குறிப்பாக பூர்வகுடிகளை ரிசவேசன் எனும் திறந்த சிறைகளில் வைத்துள்ள அமெரிக்கா போன்ற நாடொன்றில்.
  20. உங்களுக்கு உண்மையில் என்ன பிரச்சனை என புரியவில்லை😂. உங்களின் முதலாவது பதிவிற்கான பதிலிலேயே இதற்கு இவர்கள் மட்டுமே பின்னால் இருப்பார்கள் என்பதல்ல என் வாதம் என்பதை தெளிவுபடுத்திவிட்டேன். எந்த கருத்தாளரும் சொல்லாத ஒன்றை சொல்லியதாக, இவர்கள் இருவரும் கருத்தாளர்களுக்கு அறிமுகமானவராக இருக்க கூடும் என, கற்பனையில் கம்பு சுத்துவது ஏன் செம்பா🤦‍♂️.
  21. ஒரு நிறுவனத்தின் வரிச்சுமை (tax liability) என்பது இலாபம் ஈட்டப்பட்டதும் உருவாகிவிடும். Tax liability உருவாகிய தருணம் முதல் அந்த tax amount அரசுக்கு சொந்தமான பணம். தனியே இலாபத்தில் எடுக்கும் வரி மட்டும் அல்ல, நட்டத்தில் ஓடும் நிறுவனங்களுக்கு அவை அரசின் சார்பில் வாடிக்கையாளரிடம் வசூலிக்கும் VAT உட்பட பல வரிச்சுமைகள் இருக்கும். சரியாக தெரியவில்லை ஆனால் இது எண்ணை சம்பந்தபட்ட வியாபாரம் என்பதால் - fuel duty அல்லது அதுபோல் வேறு ஏதும் வரியும் சேர்ந்தே 250 மில்லியன் வரை இந்த கம்பனிக்கு வரிச்சுமை ஏற்பட்டிருக்கலாம். நமக்கு தெரிந்த ஒரே தரவு திவாலான கம்பெனியின் வரிச்சுமை, அதாவது வரியாக அரசுக்கு கட்ட படவேண்டிய தொகை 250 மில்லியன் அண்ணளவாக. இவ்வாறாக தேங்கும் வரிச்சுமையின் பால்பட்ட வரியை செலுத்த ஒரு கால எல்லை இருக்கும். அந்த கால எல்லைக்குள் நிறுவனம் வங்குரோத்து ஆகிவிட்டால் - அது அரசின் வருவாய்க்கு வரவேண்டிய வரியில் நட்டமே. ஒரு பெட்டிகடை உதாரணம். நான் ஒரு பொருளை 100 ரூபாய்க்கு வரி உட்பட விற்கிறேன். இதில் 17.50 ரூபாய் VAT என வைப்போம். இதை நான் வாடிக்கையாளரிடம் பொருள் விற்கும் போது அறவிட்டு விடுவேன். அதேபோல் எனது வியாபார வரி 2.50. இந்த 100 ரூபாய் வியாபாரத்தில் என் வரிச்சுமை 20 ரூபாய். இது வரிக்கொள்கையில் இருக்கும் இசைவுகள் relief ற்கு ஏற்ப மேலும் குறைந்து 18 ஆகிறது என வைப்போம். இந்த 18 ரூபாய் வரியை நான் கட்ட எனக்கு ஒரு கால எல்லை இருக்கும். சில சமயம் இந்த எல்லையை திறைசேரி நீட்டிக்கலாம், அல்லது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் எனில் அரைவாசியாக கூட குறைக்கலாம், ஏன் ரத்து கூட செய்யலாம். ஆனால் வரிச்சுமை, வரிச்சுமைதான். இந்த வரிப்பணத்தை உள்ளபடியே அரசால் தகுந்த நேரத்தில் வசூலிக்க முடிந்தால் அது அரசின் திறை சேரியில் +18 ரூபாய் என முடியும். அந்த 18 ரூபாயில் அரசு நாலு பேருக்கு டொபி வழங்கும் நலத்திட்டத்தை செய்யலாம். இந்த 18 ரூபாயை அரசு வசூலிக்க முன்னர் கம்பெனி திவாலானால் - அரசுக்கு 18 ரூபாய் சுவாகா. இதுதான் நாமம். மேலே ரசோ அண்ணா சொன்ன இந்திய வியாபார, நான் சொன்ன நகை கடை உதாரணங்களில், மாறி மாறி வங்குரோத்து செய்து தனியே வங்கியை மட்டும் சுத்துவதில்லை, இப்படி திறைசேரியையும் சுத்துவார்கள்.
  22. தலைவா…..வா! தளபதி விஜை அரசியலுக்கு வந்ததால் சினிமாவில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப நீதான் சரியான ஆள் தலைவா… பிகு கறுப்பன் குசும்பன் முதலமைச்சர் பதவிக்கு ரூட்டு போடுறான்😂
  23. எப்ப ஊருக்கு கிளம்புறியள்? மானஸ்தனனுக்கு இன்னொரு இனத்தின் ஊரில் என்ன மினக்கெடு?😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.