Jump to content

satan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9063
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Everything posted by satan

  1. நன்றி பெருமாள் இணைப்பிற்கு. இதைத்தான் நான் முன்பு கூறியிருந்தேன், அதற்கு ஒரு உறவு, சுமந்திரன் இராணுவ பாதுகாப்போடு வரவில்லை, இராணுவ புலனாய்வு பாதுகாப்புத்தான் கொடுக்கப்பட்டது, இது இன்றும் இருக்கிறது என்று கூறியிருந்தார். அவருக்கு இந்தப்படம் சமர்ப்பணம். சவேந்திர சில்வா புடைசூழ வந்த படமும் வெளிவந்தது. முடிந்தால், இணைத்துவிடவும். பார்த்து ரசிக்கலாம் முன்னைய வசந்த கால நினைவுகளை.
  2. மக்கள் அறிந்தது இருக்கட்டும். மக்களின் தேவைகளை அவர்கள் இவர்மூலம் எப்படி அணுகுகிறார்கள் என்று பொறுத்திருந்து பாப்போம். முன்பு, வன்னி பாராளுமன்ற உறுப்பினர் அடங்காத்தமிழன் எனும் அடைமொழியுடன் சுந்தரலிங்கம் என்று ஒருவர் இருந்தாராம். அவரை ஒருதடவை பாராளுமன்ற காவலர்கள் கதிரையோடு தூக்கிக்கொண்டுபோய் பாராளுமன்றத்திற்கு வெளியே வைத்துவிட்டார்களாம். அப்படியேதும் நிகழாமல் இருந்தால் சரி. எந்த இடத்தில எப்படி நடக்க வேண்டுமென்பது அவைப்பழக்கம், நாகரிகம்.
  3. பயமற்றவர் என்று பேய்த்தனம் காட்டக்கூடாது. இது ஒரு இனத்தின் விடிவு சம்பந்தப்பட்டது. இவரது காணொளிகளை நான் பார்த்ததில்; இவர் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர், அதிலும் புகழில் கவிழ்ந்து, தான் செய்ய வெளிக்கிட்டதை விட்டு வேறொன்றுக்கு மாறி விடுவார். அதை எப்படி சாதிக்க வேண்டுமென ஆராய்ந்து செயற்படமாட்டார், பட்டாலும் அதை திருத்த மாட்டார். இவரது தந்தை காவல் துறையிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர் என்கின்றனர், அதிக பிரயாசைப்பட்டு படித்தவர், இருந்தும் என்ன, ஒரு பிரயோசனமுமில்லை என ஆகிவிடுமென பயமாக இருக்கிறது. இவருடைய கோமாளித்தனத்தில் மக்களின் பிரச்சனை அடிபட்டுப்போய்விடக்கூடாது. ஒரு காணொளியில் பாத்தேன், தான் முதலில் பாராளுமன்றம் போகும்போது புலிக்கொடியுடன் போவேன் என்று சொல்லியிருந்தார், நல்லவேளை அப்படியொன்றும் நடக்கவில்லை. காலத்திற்கு ஏற்ப மாறி யோசித்து செயற்பட முடியவில்லை அவரால். நன்றி கந்தப்பு. தேர்தல் முடிவு அறிவிக்கும் வேலை மத்தியிலும் தேடி எடுத்து இணைத்ததற்கு.
  4. வாக்குப்போட்ட மக்களை நகைச்சுவையாளராக்க கூடாது. அவர்களை மெச்சும்வண்ணம் இவரது நடவடிக்கை இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் நல்லெண்ணத்தை காப்பாற்றி, அவர்களுக்கு உதவ வேண்டும். அதைவிட்டு கோமாளிக்கூத்து ஆடி தன்னையும் வாக்குப்போட்ட மக்களையும் அவமானப்படுத்தக்கூடாது.
  5. நீங்கள்தான் தைரியமான, பொருத்தமான ஆள் அதற்கு. பொறுப்பெடுத்து தெரியப்படுத்துங்கள் அவருக்கு, அவமானப்பட்டு வெளியேற்றப்படுவதற்கு முதல் மாற்று வழி காணும்படி. அதுவரை அவர் பாராளுமன்றத்தில் தாக்குப்பிடிக்க வேணுமே, இந்த லட்ஷணதில மாகாண சபை கனவு வேறையா? அந்த பிள்ளையின்ர மானத்தையும் வாங்கப்போறார்.
  6. மக்கள் அவரை பாராட்டி ஊக்கப்படுத்தியிருக்கலாம் அவரின் தைரியமான சேவைக்கு, ஆனால் அவரை பாராளுமன்றம் அனுப்பி அழகு பார்த்தது ரொம்ப அதிகம். பாவம் மக்கள்! அனுபவம் காணாது. முதல்நாள் பாராளுமன்றம் போயிருந்து காணொளியில் என்ன கதைக்கிறாரென பாருங்களேன்? சிங்களவர் சிரிக்கப்போகிறார்கள், இவர் சிங்களத்தால் தேவையில்லாமல் விளாச.
  7. பாராளுமன்றத்திற்கு சென்ற முதல்நாளே, எதிர்க்கட்சி தலைவரின் கதிரையில் அமர்ந்தாராம். அதை விட்டு வேறு ஆசனத்தில் அமரும்படி கேட்டுக்கொண்டவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். சிங்கள நாளிதழ்கள் செய்தியை வெளியிட்டுள்ளனவாம்.
  8. இவரை நம்பி வாக்களித்த மக்களின் மானத்தை வாங்கப்போகிறார். இப்பவே விலகி வேறு யாருக்கும் இடம் விடலாம்.
  9. நீங்கள் எப்படித்தான் இழுத்து மூடினாலும், அது அவிழ்ந்து விழுந்து கொண்டுதானிருக்கும். ஆகவே விட்டு விடுங்கள், அது அவிழ்ந்தாலென்ன, கவிழ்ந்தாலென்ன? நடக்கிறதை விடுப்பு பாப்போம் நாங்களும்.
  10. அப்பவே யாரோ சொன்னார்கள், தமிழரசுக்கட்சிக்கு மக்கள் வாக்குப்போட்டால், தோற்றவர்கள் தேசியப்பட்டியல் வழியாக உள் நுழைந்து விடுவார்கள் என. நிராகரிக்கப்படவேண்டியவர்களை மக்கள் நிராகரித்தார்கள், அவர்கள் ஆணையை ஏற்க மறுத்தால், இனிமேல் தமிழரசுக்கட்சியே காணாமல் ஒதுக்கப்படும் மக்களிடமிருந்து.
  11. அது எனது தனிப்பட்ட விருப்பம். அதை தடுக்கவோ, கேள்வி கேட்கவோ யாருக்கும் உரிமையில்லை. இது எனது கருத்து சுதந்திரம். அவரது வெற்றியை என்னால் மாற்ற முடியாது எனவே ஏற்றுக்கொள்கிறேன். ஏற்றுக்கொள்ள முடியாத நீங்கள் என்னை திட்டுவதால் பயனில்லை, அவரது வெற்றியை மாற்றிக்காட்டுங்கள் ஏற்றுக்கொள்கிறேன்.
  12. அது நானறியவில்லை. தான்தான் வரைந்தேன் என்று உரிமை கொண்டாடுபவர், தானும் வேறு ஒரு சிங்களவரின் பெயரையே சொன்னார். அனுராவை குறிப்பிடவில்லை, தான் இல்லாவிட்டாலும் கஜேந்திரன் பொன்னம்பலம் கையாள்வார், தன்னோடு கூட இருந்த அந்த நபரும் இருக்கிறார் என்றே குறிப்பிட்டார்.
  13. அவர் தரமாட்டேன் என்று சொல்லவில்லை. தருவோம் என்று சொன்னவர்கள் தரவில்லை. இவர் எல்லாமக்களும் சமமாக வாழும் தீர்வை வரைந்து நடைமுறைப்படுத்துவோம் என்கின்றனர். அவர் ஜனாதிபதியில்லை. மூன்றில் இரண்டிலும் அதிகமான ஆசனத்தைப்பெற்றவர் அனுரா. அத்தனை கை ஓசையில் மயூரனின் ஒரு கை ஓசை தனித்து ஒலிக்க வாய்ப்பேயில்லை. சுமந்திரன் கள்ளன் என்று நான் சொல்லவில்லை, சொன்னவர்களை கேளுங்கள். இப்போ புரியுது உங்கள் கொதி என்னவென்று. நான் யாரையும் அனுரா பஸ்ஸில் ஏற்றவில்லை. நீங்களே சொல்லியிருக்கிறீர்கள் அனுராவுக்கு யாழ்ப்பாணத்தில் அதிக வாக்குகள் கிடைக்கவில்லை. அதனால் அவர் வெல்லவுமில்லை. கடைசி நேரத்தில் தமிழ் கொம்புகள் ஆடிய விசர் ஆட்டத்தாலேயே மக்கள் அனுரா கட்சிக்கு வாக்களித்தனர். அவர் செய்வார் என்று எதிர்பார்த்து போட்டார்களா இல்லையா என்பதும் அவர்களைத்தான் கேட்கவேண்டும். அவர் ஜனாதிபதியாகிவிட்டார், அதை யாராலும் மாற்ற முடியாது, அவர் நல்லது செய்வேன் என்கிறார் நம்புவதை தவிர வேறு வழியில்லை. அப்படி செய்யாவிட்டால் அது அவருக்கு வாக்கு போட்ட மக்களின் பிரச்சனை. அதில் தலையிடவும் திட்டவும் எனக்கு அதிகாரமில்லை. எனக்கு அவர்மேல் நல்ல அபிப்பிராயம், எதிர்பார்ப்பு உண்டு. ஆனால் அதை யார்மீதும் நான் திணிக்கவில்லை. எனது கருத்தை எழுத எனக்கு உரிமை உண்டு. ஏதோ நான்தான் அனுராவை வெல்ல வைத்ததுபோல் கற்பனை பண்ணி விளாசுகிறீர்கள். தமிழ்தேசியத்துக்கு மரண சாசனம் எழுதியது நானல்ல, மக்கள் வற்புறுத்தப்பட்டனர். தமிழ்த்தேசியத்தை வைத்து தாம் ஏமாற்றப்படுவதை சகிக்க முடியாமல், அதை வைத்து பிழைப்பவர்களை நிராகரித்தனர்.
  14. தருவாரென நான் சொல்லவில்லை, அதைத்தான் அனுரா தரப்போகிறார் அதனால, தான் பாராளுமன்றம் போகவேண்டியது அவசியமென சுமந்திரன்தான் கூறினார். ஹிஹி.... நானா? போட வைத்தேனா? பரவாயில்லையே! எனது சொல்லையும் கொஞ்ச சனம் மதிச்சிருக்கு, சந்தோசமே. சரி, இப்போ சொல்லுங்க! யாரும் தீர்வு தரப்போவதில்லை. அப்போ யாரை தெரிந்தெடுத்திருக்கலாம்? உங்களுக்கு அவரைப்பற்றி ஒரு அபிப்பிராயம் இருப்பது போலவே, எனக்கும் அவரைப்பற்றி ஒரு அபிப்பிராயம், எதிர்பார்ப்பு உண்டு. உங்களது சரியா, என்னது சரியா என அறிவதற்கு, அவரை திட்டுவதற்கு இன்னும் ஐந்து வருடங்கள் நீங்கள் காத்து இருக்கத்தான் வேண்டும். உங்களது இயலாமை எனக்கு புரிகிறது. ஆனால் என்னை திட்டுவதனால் எதையும் மாற்ற முடியாது. அப்படி உங்களால் முடியுமென்றால் மாற்றுங்கள், நான் மறுப்பேதும் சொல்ல மாட்டேன். அவர் தனது கொள்கையில் நிலைத்து நின்றார் என்றுதான் சொல்கிறேன். அதற்குமேல் முயற்சிக்கவில்லை, அந்த நேர அரசியலும் காரணமாக இருந்திருக்கலாம். இது உண்மைதானே! என்னோடு சன்னதமாடுவது என்கிற முடிவோடு வந்திருக்கிறீர்களா? எருதோடு பொருதமாட்டேன், மேழியோடுதான் பொருதுவேன் என்று. நான் இங்கு ஒரு கருத்தாளன் மட்டுமே. உங்களுக்கு பட்டதை நீங்கள் எழுதுவது போலவே நானும்.
  15. இது, சுமந்திரன் என்கிற சட்ட நிபுணர் வரைந்த வரைபு. அவரது பிரதமமந்திரி கனவுக்கும் நேர்காணலில் தேவையில்லாமல் சிரித்ததற்கும் காரணம் இதுவே.
  16. ஒரே நேரத்தில் சிங்கள மக்களும், நம்மக்களும் விழித்து, போலிகளுக்கும் ஊழல்களுக்கும் எதிராக வாக்களித்தது நல்ல சகுனம். இதை பார்த்து மற்றையோரும் திருந்தி நல்லனவற்றுக்கு இடம் தரவேண்டும், நல்லது செய்ய முயற்சிக்க வேண்டும். எனக்கு பெரிய சந்தோஷமான விடயமென்னவென்றால், மக்களை பகடைக்காய்களாக ஏமாற்றி, போலிதேசியம், போலி அபிவிருத்தி பற்றி பேசியவர்களை மக்கள் வீட்டுக்கு அனுப்பியதே!
  17. ஒவ்வொரு மேடையிலும் போய் நின்று, தமிழ் இனச்சுத்திகரிப்பு தமிழருக்கு நடக்கவில்லை, அது உங்களுக்கே நடந்தது, அதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்று சத்தியம் செய்வார். மலையகத்தமிழரிடம் போய் வேறொன்று சொல்லி ஒன்றோடொன்று கொழுவி எதிரிகளாக்கி விட்டு, நான் சிங்களத்தோடேயே இருப்பேன், அது எனது அதிஷ்ட்டம் என்பார் கோமாளி. எல்லாம் சுபமே!
  18. களையப்படவேண்டிய களைகளை களைந்தாலே நன்மையடைய முடியும். இல்லையேல் பழைய குருடி கதவைத் திறவாடி கதைதான். பொது அமைப்புகள் சேர்ந்து ஆரம்பித்த நடைபவனியை தமதாக்கிக்கொண்டதுபோல் நான்தான் இணைத்தேன், நான்தான் செய்தேன் என்பார்கள். பிரிந்து சென்ற தேசியக்கட்சிகளை மீண்டும் இணைத்துக்கொள்வீர்களா என்று சுமந்திரனிடம் வினவியபோது, மக்களே தீர்மானித்து எங்களுக்கு வாக்களித்து விட்டார்கள் என்று பதிலளித்துள்ளார். ஆனால் அவரையுந்தான் விலக்கியுள்ளார்கள் என்பதை அவர் ஏற்றுக்கொள்வதாக இல்லை. ஆகவே அவரை விலத்திவிடுவது எல்லோர்க்கும் நல்லது. அவர் இனி கட்சியைப்பற்றி எந்த முடிவும் எடுக்க அனுமதிக்க கூடாது. அவரே சொன்னவற்றை, செய்தவற்றை நினைவு படுத்துங்கள். மற்றவருக்கு குழிபறிக்கும்போது மண்வெட்டி தன்பக்கமும் பாத்திருக்கு என்பதை விளங்க மறுத்து, மறந்து விடுகிறார்கள். ஆம், என்றால் கோட்டுக்கு போவேன் என்று எச்சரிக்கிறது, முக்கிய தனக்கு பாதகமான தீர்மானம் எடுக்கும், கூட்டங்களுக்கு சமூகமளிக்காமல் விடுவது, நழுவுவது இதெல்லாம் அழகா? அவரது சொல் செயல் வடக்கின் வசந்தம் கட்சிக்கே பொருத்தமானவர்.
  19. காமாலைக்கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சசலாம். இது நீங்கள் என்மேல்கொண்டுள்ள தப்பபிப்பிராயம். தனிப்பட்ட முறையில் நாம் ஒருவரை ஒருவர் அறியோம், களத்தில் நான் எழுதிய பதிவுகளை கொண்டு அனுமானிக்கிறீர்கள். ஆனால் வேறொரு கள உறவும் இப்படி என்னை அனுமாய்க்கவில்லை. ஆகையால் இது உங்களின் தனிப்பட்ட கருத்து. இதற்கு நான் பொறுப்பாளியல்ல.
  20. அவர் நாட்டில் இதுவரை காலமும் யாரும் பெறாத பெரும்பான்மையோடு வெற்றியீட்டியிருக்கிறார். அவர்க்கு பாரிய பொறுப்புண்டு இதற்குப்பின்னால். முன்னிருந்த அரசாங்கங்கள் யாரும் சொன்னதை நிறைவேற்றினார்களா? இவர் எதுவும் சொல்லவில்லை, யாரும் அதுபற்றி கேட்கவுமில்லை. அது இருக்க, ஏன் அனுரா வந்தவுடனேயே இவ்வளவு கேள்வி, கோபம்? அவர் இன்னும் பாராளுமன்றமே அமைக்கவில்லை, எதற்காக இத்தனை அவசரம்? ஜனாதிபதி தேர்தலில் கூட, வடக்கு மக்கள் அந்த கட்சிக்கு வாக்களிக்கவில்லை, இறுதி நேரத்தில் தங்கள் முடிவை மாற்றியதன் காரணத்தை விளங்க முடியும். மட்டக்களப்பில் கூட சிவநேசதுரை சந்திரகாந்தன், விநாயக மூர்த்தி முரளிதரன் மேல் சட்ட நடவடிக்கை கட்டாயம் எனும் செய்தி பரவியதால் மக்கள் அவர்களை தவிர்த்திருக்கலாம். அது தமிழசுகட்சிக்கு சாதகமாய் அமைந்துள்ளது அவ்வளவே. அதோடு கிழக்கின் விடி வெள்ளிகளால் அனுராவிடம் இருந்து எந்த சலுகைகளையும் பெற முடியாது என்பதும் மக்கள் புரிந்ததே.
  21. நீங்கள் ஏன் பாராளுமன்றம் போக விரும்புகிறீர்கள் என்று பத்திரிகையாளர் சுமந்திரனை கேட்ட கேள்விக்கு, சுமந்திரன் அளித்த பதில், "அனுரா,தங்களால் நல்லாட்சி 2015-2019 காலத்தில் வரையப்பட்ட சட்ட வரைபைஅமுல்படுத்துவேன் என்று தேர்தல் வாக்குறுதியில் சொல்வதாகவும், அது தன்னாலும் இன்னொரு சிங்களவரின் பெயர், (மறந்துவிட்டேன்) வரையப்பட்டதாகவும் அதை முன்னெடுத்து செல்ல தான் பாராளுமன்றம் போய் தனது திறமைகளை உபயோகித்து அதை நடைமுறைப்படுத்த முடியும் என தான் நம்புவதாலுமே தான் பாராளுமன்றம் போக விருப்பப்படுவதாக." ஒரு நேர்காணலில் சுமந்திரன் தெரிவித்திருந்தார். ஆனால் இவர் முன்பு பலதடவை அந்த வரைபில், ஏக்கய ராஜ்ய எனும் சட்ட வரைபு அது என கூறியிருக்கிறார், அதே ஒரு சர்ச்சையான சொல். இவர் சொல்கிறார் ஒருமித்த என்று, வேறொருவர் விளக்குகிறார் ஒற்றை ஆட்சி என்று. இவர் பாராளுமன்றம் போனால் ஏதோ மக்களை ஏமாற்றி சடைஞ்சு நிறைவேற்றி போடுவார். பொன்னம்பலம் அதை ஆராய வெளிகிட்டால் அங்கு சுமந்திரன் என்ன திருகுதாளம் வரைந்தார் என்பது வெளிவரும், கண்டிப்பாக எதிர்ப்பு வரும், ஆகவே தான் வரைந்ததை பொன்னம்பலம் கஜேந்திரன் குழப்பி விட்டார் என பரப்பலாம். அல்லது மாற்றம் செய்தால் நான் போயிருந்தால்; அதை சாதித்திருப்பேன், இதை சாதித்திருப்பேன் மக்கள் ஆணை தரவில்லை என்பார். ஆனால் எல்லாம் வரைந்தவருக்கு ஏன் நடைமுறைப்படுத்த முடியாமல் போனது? என்பது கேள்விக்குறி. கோத்த ஓடியபின் அரகலயாவை அடக்கிய ரணில் ஏன் அதை நடைமுறைப்படுத்தவில்லை? நாட்டின் கடந்த சரித்திரம் புரியாமல் பேசுகிறீர்கள். சந்திரிகாவும் ஒருகாலத்தில் இராணுவத்தை ஒரு வரையறைக்குள் கொண்டுவர எடுத்த எடுப்பில் முயற்சித்தவர், ஆனால் அவர்களுக்கு அடிபணிவதை தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை அவரால். இதற்கு பல செயற்திட்டங்கள் தேவைப்படும் மாற்றியமைக்க முன்பு. அதற்கு முன் பொருளாதார உடனடிப்பிரச்சனையிலேயே தான் கவனம் செலுத்தப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆக்கப்பொறுத்த நாம் ஆறவும் பொறுக்க வேண்டும். இல்லையேல் எல்லாம் கெட்டுவிடும். இதில் நான் என்ன தவறுதலாக எழுதிவிட்டேன்? அவர் இறுதிவரை கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார் என்று சொன்னேன், மாற்றத்தை அவரால் ஏற்படுத்த முடியவில்லை. அனுராவுக்கு காலம், சந்தர்ப்பம், அரசியல் எதிர்ப்பற்ற வெற்றி சூழல், மக்கள் மனங்களில் மாற்றம், சாதகமாக அமைந்துள்ளது என்றேன். இதிலென்ன தவறு? எழுபத்தைந்து வருடங்களாக வேரோடி அடர்ந்து வளர்ந்து வளர்த்து விட்ட விருட்ஷத்தை ஒரு நொடியில் அடியோடு அழிப்பதென்பது எத்தனை பாரிய விளைவை ஏற்படுத்தும் என்பதை புரிந்து பேசுகிறீர்களா? அல்லது என்னோடு விதண்டாவாதம் பண்ண வேண்டுமென்று பேசுகிறீர்களா தெரியவில்லை? முதலில் அதில் உள்ள தழைகளை களைய வேண்டும், கிளைகளை மெதுவாக வெட்ட வேண்டும், பின் மரத்தை சிறு சிறு துண்டுகளாக்க வேண்டும், அதன்பின் வேர்களை கிளற வேண்டும், அதன் பின்னே அடிமரத்தில் கைவைக்க வேண்டும். இலகுவாக தானாகவே மரம் ஆட்டம் காணும், சரியும். அதை தமிழர் மத்தியிலேயே சிங்களம் மிகச்சாதுரியமாக செய்தது. இவர் நாட்டில் தொடர்ந்து ஆட்சி செய்ய வேண்டுமாயின் கட்டாயம் இதை செய்தே ஆகவேண்டும். இல்லையேல் அரசியலை ஒருதடவைக்கு மேல் கனவு காணக்கூடாது. இது வெறும் உதாரணம். பிறகு இதில கேள்வி கேட்டு விதண்டாவாதம் பண்ணி குடையக்கூடாது.
  22. சுமந்திரன் நினைக்கிறார், அத்தோடுதான் அனுர நிற்பார், ஆகவே தனது பங்கு முக்கியமானது அதனால் தனக்கு பிரதம மந்திரி பதவி அழைப்பு வருமென்று தேர்தலுக்கு முன்னதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அனுரா தரப்போ சுமந்திரனுக்கு பதவி இல்லை என்று உறுதியாக சொல்லிவிட்டது. ஆகவே இவரின் தேவை அங்கு அற்றது. அதை விட அனுராவின் இறுதி தேர்தலின் பின்னான முடிவு, இதுவரை காலமும் வரைந்த எல்லா வரைபுகளையும் ஆராய்ந்து, ஆலோசித்து, எல்லாமக்களுக்கும் சம உரிமை வழங்கக்கூடிய வரைபை அமுல்படுத்துவோம் என்பதே. இதில் சுமந்திரன் பங்கில்லாமலே நடக்கும். அதை விட சுமந்திரன் வரைபு நிறைவேற்றப்பட்டு அமுலுக்காக காத்திருப்பதாக பலதடவை சுமந்திரன் கூறியிருக்கிறார். பின்னர் ஏன் இவர் பாராளுமன்றம் போகவேண்டும்? வேறு தொழிலில்லையா இவருக்கு? ம்.... எந்தச்சிங்களமும் இதைத்தான் செய்ய துடித்தது, சர்வதேசமும் கூட. ஆனால் எங்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் மக்களை விட்டு எங்கோ சென்று பதுங்கி விட்டார்கள். பின்னர் வந்து நாம் ஆயுதப்போராட்டத்தை ஆதரிக்கவில்லை, இங்கு நடந்து இனப்பிரச்சனையேயல்ல என்று அறிக்கை விட்டார்களே, அதை என்ன சொல்வது? சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்று மக்கள் தீர்மானித்து விட்டார்கள். இந்த அனுர குழுவும் நம்மைப்போன்று பல துன்பங்களை அனுபவித்தவர்கள். சாரை தின்னி ஊருக்குப் போனால் நடுமுறி எனக்கு. அப்படி இல்லாமல் கொள்கையோடு நின்ற விக்கிரமபாகு கருணாரத்ன, தன் கொள்கையை அரசியலுக்காக விட்டுக்கொடுக்காமல் இருந்ததால் கொள்கையாளனாய் இறந்து விட்டா.ர் கொஞ்சம் இறங்கி அவர்களின் போக்கில் போய் அதிகாரத்தை கைப்பற்றி அதன் பின் சிறிது சிறிதாக மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம். இன்று, அனுர சொல்வதை யாரும் எதிர்க்க திராணியற்று இருக்கிறார்கள். ஆனால் ஒன்று, மக்கள் விழிப்படைந்து ஊழல்களை கையிலெடுத்ததும் ஊழல்வாதிகளை விரட்டியதும் அனுராவுக்கு பிளஸ் பொயிண்ட். இப்போ உடனடியாக இராணுவத்தில் அனுர கைவைக்கப்போவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரிகளை மாற்றி, கொள்கைகள் சட்டங்களை மாற்றி அவர்களது மனநிலையை மாற்றி, அதன் பின்னே இந்த கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர முடியும். அழிக்க ஒரு நிமிடம் போதும், ஆனால் அதை கட்டியெழுப்ப பல தசாப்தங்கள் வேண்டும். இது எழுபத்தைந்து வருடங்கள் புரையோடிப்போன விருட்ஷம். சிவஞானம் அங்கும் பாடி இங்கும் பாடி, விக்கினேஸ்வரன் காலத்திலிருந்து சுமந்திரனின் விசிறி.
  23. நல்லாட்சி காலத்தில் வரைந்த சட்ட வரைபை நிறைவேற்றுவேன், என்று அனுரா தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். அதற்கு தான் பாராளுமன்றம் போக வேண்டும் என்று முன்பே சுமந்திரன் கூறியிருந்தார். இன்று கஜேந்திரன் பொன்னம்பலம் செய்யமுடியும் என்று சொல்லும்போதும் ஒரு பெரிய சிரிப்பு தெரிகிறது. அங்கெ நிக்கிறார் சூழ்ச்சி சுமந்திரன். அந்த தீர்வை வரைந்தவர் சுமந்திரன், சிங்களத்தோடு சேர்ந்து. அதற்கு பரிசாக பிரதமமந்திரி பதவியை எதிர்பார்த்தார். அப்போ, அந்த தீர்வில் என்ன இருக்கும்? "ஏக்கய ராஜ்ய" அதற்காக தான் போயே ஆகவேண்டும். முழுதாக தேசியத்துக்கு ஆப்பு. இல்லையென்றால் அதில் சம்பந்தபடுபவரை அந்த ஆப்பில் செருகி தான் தப்பிப்பது. இதுதான் இவரின் சூழ்ச்சி, தந்திரம். ஆனால் அனுர சொல்லியிருக்கிறார். இதுவரை எடுத்த சட்ட வரைபு எல்லாவற்றையும் ஆராய்ந்து, ஆலோசித்து, நடைமுறைக்கு சாத்தியமானதே நடைமுறைப்படுத்துவோமென அறிவித்திருக்கிறார். அந்த ஏக்கய ராஜ்ய சட்ட வரைபை ஏற்காவிடடாலோ, அல்லது பொன்னம்பலம் கஜேந்திர குமார் மாற்றிவடிவமைத்தாலோ, வேறொரு சட்ட வரைபை அமுல்படுத்தினாலோ, நான் செய்திருப்பேன், நான் மறுத்திருப்பேன், மக்கள் என்னை நிராகரித்ததால் அது வீணாக போய்விட்டது என மக்கள் மேல் பழியை போடுவது. அவரால் இனிவருங்காலத்தில் முடியுமென்றால்; ஏன் அவர் முட்டுக்கொடுத்த அரசுகளால் செய்விக்க முடியவில்லை இவரால். ஒவ்வொரு தவறுக்கு வேறொருவரை காரணம் சொல்லி தப்புவது இவரது இயல்பு.
  24. சுயநல வாதிகளை சுற்றி இப்படி பல உண்ணிகள் தொற்றிக்கொண்டிருக்கும். அவர்களின் செயற்பாட்டு நிலை இறங்கும்போது உண்ணிகள் யாவும் தானாகவே இறங்கி வேறிடத்தில் மாற்றிக்கொள்ளும். அதைத்தான் கண்ணதாசனும் சொன்னார் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் உன் நிழலுங்கூட மிதிக்கும். இவர்களின் நலன்விரும்பி, உறவினர், மாமன், மச்சான் சுமந்திரனாய் இருந்தால்; தங்கள் எதிர்கால சூனியத்தை மக்கள்மேல், மதத்தின் மேல் திணித்து வாழ வைக்க முயற்சிக்கிறார்கள்.
  25. கிறிஸ்தவத்தை தமது சுயலாபத்திற்காக பாவிப்பவர்களே இந்த தத்துவத்தை பேசுவார்கள். இது போலிகிறிஸ்தவர்களின் வாதம். ஆனால் உண்மையான கிறிஸ்தவம் அதுவல்ல, எங்கு பிழை உள்ளதோ அதை கண்டித்து திருத்தும். இல்லையேல் அவரை அந்நியர் போல் விட்டுவிடும். இவர்களின் வாதம் உண்மையென்றால்; இவர் எவ்வாறு இரண்டுதடவை தேர்தலில் நின்று வெற்றி பெற்றேன் என்கிறார். தனது தவறை ஏற்றுக்கொள்ளாதவர், மதத்தின்மேல் தன் தவறை திணிக்கிறார். கிறிஸ்தவர்கள் வாக்களித்தாலே இவர் வெற்றி பெற வாய்ப்புண்டு. சரி கிறிஸ்தவரை ஒதுக்கினர் என்றே வைத்துக்கொள்வோம். அப்போ, அனுரா கட்சி எப்படி வென்றது? சாதாரணம். இவரின் அடாவடியின் உச்சக்கட்டம், கடைசி நிமிடத்தில் இவர் கட்சிக்குள் செலுத்திய சர்வாதிகாரம். இவர் இந்த முறை வென்றிருந்தால் கூட எதுவும் சாதிக்க முடியாது. ரொம்ப அவமானப்படுத்தப்பட்டிருப்பார். அவர் போவது, தான்தான் எல்லாம் தெரிந்த சட்டத்தரணி என்று காட்டுவதற்கு, அந்த திமிர் ஒட்ட நறுக்கப்பட்டிருக்கும். சரியாக சொன்னீர்கள் மீரா! அனுரா கட்சி பெரியளவில் யாழ்ப்பாணத்தில் பிரச்சாரம் செய்யவில்லை, வாக்குறுதிகள் அளிக்கவில்லை, யாரையும் விமர்சிக்கவில்லை, யாரும் கேள்வி, சந்தேகம் என்று கூட கேட்கவில்லை. அப்படியிருந்தும் மக்கள் அமோகமாக வாக்களித்துள்ளார்கள். காரணம்; இவர்கள் மேலிருந்த வெறுப்பு, தங்கள் தேசிய உணர்வை வைத்து இவர்கள் தங்களை ஏமாற்றுகிறார்கள், தாங்கள் இந்த உணர்வோடு இருக்குமட்டும் இந்த போலிதேசிய வாதிகள் தம்மை ஏமாற்றி தம்மிடம் உள்ளவற்றையும் பறிக்கும் என்பதை உணர்ந்தே, அனுரா மேல் நம்பிக்கை வைத்து தெரிந்தெடுத்துள்ளார்கள். இவர்களை வெறுத்து இன்னொரு சிங்கள கட்சியை அவர்கள் ஆதரிக்கவில்லை. குறிப்பாக அனுராவை தேர்ந்தெடுத்துள்ளார்கள். எல்லோரும் அதன் விளைவை எச்சரித்தும் வாக்களித்தார்கள். மக்களின் நம்பிக்கை, அந்த இரும்பு மனங்களை கவரும், உடைக்கும். கட்டாயம் மற்ற சிங்கள கட்சிகளை போலல்லாது ஏதாவது செய்வார்கள். அது இருக்க, சிறிதரன் ஒத்துக்கொள்கிறார். மக்கள் நம்மீது வெறுப்பு கொண்டு எங்களை அகற்றியிருக்கிறார்கள், நாங்கள் அதற்கு மதிப்பளிக்கிறோம், திருந்துவோம். ஆனால் சுமந்திரனோ, நாங்கள் வென்று விட்டோம், பிரிந்து சென்ற கட்சிகள் தோற்றுவிட்டார்கள், நாங்கள் இத்தனை ஆசனங்களை பெற்றோம் என்று வரிசைப்படுத்துகிறார். இதிலிருந்து அவர் மனநிலையை பாருங்கள். எதுவுமே தெரியாதவர் போல் சிரித்துக்கொண்டு பேட்டியளிக்கிறார். இதுதான் வெட்கங்கெட்ட தன்மை. தனது தோல்வியை மறைத்து, மற்றவர்களை விமர்சிக்கிறார். இவர் ஒரு உளறுவாயன். தன்னைத்தானே உயர்த்துவதற்காக எதையும் செய்ய தயங்காதவர். இந்த முறை தேர்தலில் ஏமாற்றுக்காரருக்கு நல்ல பாடம் படிப்பித்திருக்கிறார்கள் மக்கள். நீ உன் நண்பனைப்பற்றி சொல்லு நான் உன்னைப்பற்றி சொல்கிறேன் எனும் பழமொழி உண்டு. கபித்தான் நேரடியாகவே தன் குணாதிசயங்களை காட்டுகிறார், ஆனால் இன்னும் சிலர் அங்கு பாதி இங்கு பாதி என தளம்பி தம்மை மறைக்க முயற்சிக்கின்றனர். ஒரு தடவை தமிழரசுக்கட்சி எல்லா ஆசனங்களையும் வென்றிருந்தது, எந்த தேர்தல் என்பது நினைவில்லிலை. அப்போ மக்கள், சம்பந்தரை ஆரத்தி எடுத்து, பொட்டு வைத்து, மாலை போட்டு, மேளம் கொட்டி ஊர்வலமாக அழைத்துச்சென்றனர். இவர்கள் மனம் இளகவில்லை, இந்த மக்களுக்கா நாம் துரோகம் செய்கிறோம், ஏமாற்றுகிறோமென்று. எத்தனை கயவர்கள் இவர்கள்? இதிலை தாங்கள் வெற்றியாமென ஆர்ப்பரிக்கிறார் சுமந்திரன். வெட்கம் கெட்டவனுக்கு சூடென்ன, சுரணையென்ன என்று கூறுவார்கள். அநாகரிக வார்த்தை பிரயோகம் மூலம் உண்மை பேசுபவர்களின் வாயை அடைப்பது. இதுவும் ஒரு யுக்தி. ஆனால் தாம் எப்படியும் யாரையும் விமர்சிக்கலாம். நேற்ரொரு காணொளி பாத்தேன். எல்லா தமிழ்தேசிய கட்சி அரசியல் வாதிகளும் இருக்கிறார்கள். எல்லோர் முகங்களிலும் சந்தேகம், சோகம், அமைதியாக ஒருவரோடு ஒருவர் பேசவில்லை அமைதியாக இருக்கிறார்கள். சுமந்திரன் மட்டும் தேவையற்ற ஒரு சிரிப்பு, கரட்டி ஓணான் மாதிரி தலையை உயர்த்தி தாழ்த்தி, முன்னுக்கு பின்னுக்கு திரும்பி, பாவனை காட்டுகிறார். இவரை யாரும் விமர்சிக்க மாட்டார்கள் எனும் பாவனை. இந்த மனிதன் எப்படியானவர்?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.