Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. நாம் ஆயிரம் ஆறுதல் வார்த்தைகள் சொன்னாலும் ஆறாது உங்கள் உள்ளம், அந்த இழப்பை ஈடு செய்யவும் முடியாது. மீளாத்துயரில் இருக்கும் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் அதிலிருந்து மீண்டு வரவும், அவரின் ஆன்மா அமைதியில் இறைவனோடு இளைப்பாறவும் பிரார்த்திக்கிறேன்.
  2. தெரியும், ஒரு தொழில் கூட மிச்சமில்லை, எல்லாமே அவர்கள்தான். தனியார் தொழிற்சாலை, அதில் எப்படி திருட முடிந்தது என்பதே எனது கேள்வி. அதுவும் ஒரு வருடத்தில் ஐம்பது மில்லியன், எப்படி இவ்வளவு அஜாக்கிரதையாக இருந்தார்கள்? அரசாங்க நிறுவனத்தில் அரச ஊழியர், அரசியல்வாதிகள் செய்வதுதான் இதுவரைக்கால வழமை. இது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது.
  3. தங்கள் ஊழல் வெளியில் தெரிவதற்குமுன், மக்களின் கவனத்தை திசைமாற்றுவதற்கே எல்லா அரசியல்வாதிகளும் இப்படி சில்லறை விடையங்களை கையிலெடுத்து விமர்சிப்பதும் போராடி நாடகம் நடத்துவதென்றும் மக்களுக்கு தெரியும். அதனாற்தான் இவர்களது அறைகூவலுக்கு யாரும் இப்போது செவிமடுப்பதில்லை, போராட்டங்களில் பங்கெடுப்பதுமில்லை. ஊழல்வாதிகளும் கூலிக்கு மாரடிப்பவர்களும் இப்படி காலத்தை வீணாக்கி தங்களுக்கு வெள்ளையடிப்பதற்காக பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். அடுத்த கருணாநிதி நாடகம்! என்ன ஒரு நாடகம், வந்தவுடன் படுத்துவிட்டார் போலும். படுக்கை எல்லாம் தயாராக்கி வைத்துவிட்டுத்தான் சத்தியாக்கிரகம் தொடங்கியிருக்கிறார். ஏதோ இறுதி வார்த்தை சொல்கிறார் என நான் நினைத்துவிட்டேன். இப்போ இவர்களுக்கு வேலையில்லை, கொள்ளையடிக்க முடியாது, ஊழல் குற்ற விசாரணைகளை எதிர்கொள்கிறார்கள், அதனால் எங்கே ஏதாவது விடையம் கிடைக்கும் தெருவில் இறங்கி கூப்பாடு போடலாமென அலைகிறார்கள்.
  4. விமலுக்கு நன்றாகவே தெரியும், தான் உண்ணாவிரதமிருந்தால் எல்லாரும் சேர்ந்து தன்னை சாக விட்டுவிடுவார்கள் என்பது. அதனாலேயே சத்தியாக்கிரகமாக மாற்றியிருப்பார். அவர் என்ன போராட்டம் செய்தாலும் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படப்போவதில்லை, இருந்து, எழும்பி, பின் களைத்து வராமலே போய்விடுவார். இவருக்கு இருப்பது வாய் மட்டுந்தான். திஸ்ஸ விகாரைக்கு மக்களை திரட்ட பிக்குகளையும் திரட்டிக்கொண்டு தெருவில நின்று ஊழையிட்டு விட்டு போய் படுத்தவர், இப்போ வந்து கருணாநிதி ஸ்ரைலில் கருப்பு கண்ணாடி, வந்த கணத்திலேயே படுத்துவிட்டார், தூக்கம் கலைய எழும்பிப்போவார். பொதுஅரங்கில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இப்படி அசிங்கமாக பேசிக்கொண்டு, எப்படி கல்வி திட்டத்திற்கு எதிராக சத்தியாக்கிரகம் செய்ய முடியுது இவரால்? அசிங்கமாக பேசுவது இவர்களுக்கு சர்வ சாதாரணம், பிறகு கல்வி திட்டம் பிழையாம் என்கிற குற்றச்சாட்டு. இவரை ஏன் இன்னும் போலீசார் கைது செய்யவில்லை? ஒரு நாட்டின் பிரதமரை பகிரங்கமாக இழிவு படுத்துவதை வேடிக்கை பார்ப்பது தான் பொலிஸாரின் கடமையா? ஐ .நாவின் மனித உரிமையாளரை தான் கலியாணம் கட்டுகிறேன் என்று சொன்னார் மேவின், அது அவரின் கருத்து சுதந்திரமென்று விளக்கமளித்தார் மஹிந்தா. இதுதான் ஒரு நாட்டின் ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம், கருத்துச்சுதந்திரம். நாமல் பேரணி நடத்தினார் எதுவும் சாதிக்க முடியவில்லை. வந்தது இயற்கை சீற்றம். பயமுறுத்தல், இல்லாத விடயங்களை பரப்புதல், சேறடித்தல் வேலைகளை செய்கிறார். பூச்சாண்டி பிடிக்கும் என்று குழந்தைகளுக்கு பயம் காட்டுவதுபோல், அமெரிக்கா இலங்கைக்குள் நுழையப்போகுதாம் என்று அனுராவுக்கு பயம் காட்டுகிறார். இவர் எதிர்கால ஜனாதிபதியாம். இவர் ஜனாதிபதியாக வந்தால் எப்படியிருக்கும்? இனவாதம் மதவாதம் பேசும் அரசியல் கலாச்சாரமே இந்த நாட்டில் இருக்கவேண்டும், அது இல்லாத, பேசாதவர் அரசியல் செய்யக்கூடாது என்பது இவர்களின் எழுதப்படாத சட்டம். எப்போ இவர்களின் ஊழல், கொலை, கொள்ளை வெளிவருகிறதோ, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறதோ உடனே நாட்டை குழப்பி, ஆட்சியை பிடித்து தம்மை புனிதர்களாக, சிங்கள, பௌத்த காவலர்களாக காட்டுவார்கள். இதில இன்னொரு பகிடி என்னவென்றால்; தேசிய மக்கள் சக்தி பாரியளவில் பொய்பிரசாரங்களை மேற்கொண்டு ஆட்சியை கைப்பற்றியதால்தெய்வ கோபம் ஏற்பட்டு நாடு அனர்த்தங்களை எதிர்நோக்கியதாம், வஜிர அபேவர்த்தன சொல்கிறார். அப்போ, சுனாமி ஏன் வந்தது? எத்தனை உயிர்களை துடிக்க துடிக்க கொன்று குவிக்கும்போது தெய்வம் மகிழ்ச்சியடைந்ததோ? சரி, இவர்களது பொய்யால் அனர்த்தம் ஏற்பட்டதென்றால் அவர்கள் ஆட்சியை கைப்பற்றியவுடன் அல்லவா அனர்த்தம் நேரிடிருக்க வேண்டும்? பருவகால அனர்தத்திற்கும், தெய்வ கோபத்திற்கும் வேறுபாடு தெரியாத அமைச்சர். கல்வியறிவு இல்லை, திறமையில்லை நாட்டை நிர்வகிக்க. இனவாதம், மதவாதம் பேசி அரசியலை கைப்பற்றி கொள்ளையடிப்பது, கேள்வி கேட்போரை கொலை செய்வது, இவர்கள்தான் சிறந்த அரசியல்வாதிகள். நாட்டில் மக்களை சிந்திக்க விடுவதில்லை, உண்மையை தெரிந்துகொள்ள அனுமதிப்பதில்லை.
  5. தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதி என்று சொல்லிக்கொள்பவர், தமிழர் பிரதேசங்களிலும் தனக்கு உயிரச்சுறுத்தல் எனக்கூறி அந்த மக்களை கொன்றொழித்த இராணுவத்தின் பாதுகாப்பு, அதற்கும் மேலதிகமாக போலீஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு பெற்று வலம் வந்து, அந்த மக்களின் வாக்கோடு பாராளுமன்றம் சென்ற ஒரு உறுப்பினரை உலகில் வேறெங்காவது நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? இவர் செய்கிற கோமாளித்தனம் அதுதான். அந்தமக்களால் தனது உயிருக்கு ஆபத்து என்று சொல்லிக்கொண்டு, அந்த மக்களிடம் வாக்கு பெற்று, அந்த மக்களை கைகழுவி, தன் பதவி காப்பவர். அறிவுமில்லை, திறமையுமில்லை, மனச்சாட்சியுமில்லை. ஆனால் எல்லா வசதிகளும், பதவிகளும், தகுதிகளும் தான் அனுபவிக்க வேண்டுமென்கிற பேராசை மட்டுந்தான். அதற்காக அடம்பிடித்து எதுவேண்டுமானாலும் செய்வார்.
  6. தேர்தல் நெருங்கும் வேளையில் இவ்வாறான கெடுபிடிகள் ஏற்படுத்துவது சுமந்திரனின் வழக்கம். அகம்பாவம் கொண்ட சுமந்திரன் ஒரு தேர்தல் காலத்தில் தமிழரசுக்கட்சி, கூட்டுக்கட்சிகளை விட்டு தனியாக போட்டியிடுமென்று தன்னிச்சையாக அறிவித்தார், அடுத்து ரவிராஜின் மனைவியை ஓரங்கட்ட கிளம்பி ஒரு கோமாளியையும் அனுராவையும் மக்கள் தெரிந்தெடுக்க வழியமைத்தார், இப்போ சிறிதரனில் பலகட்சிகள் பயத்தில் இருக்கின்றன. சிறிதரனை, சிறி நேசனை கட்சியிலிருந்து விலக்கிவிட்டால் அந்த வாக்குகள் தமக்குச்சேரும் என கனவு கண்டு, மக்கள் வேறொரு கட்சியை தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்கிறார்கள். இவரது கடைசி முயற்சி இது மட்டுமல்ல பொறாமையும் பயமும் கூட. தமக்கு பதவி வேண்டுமென்றால் இல்லாத பதவிகளையும் ஏற்படுத்தி அனுபவிப்பார்கள், மற்றவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென்றால் இல்லாத குற்றச்சாட்டுக்களும் சேறடிப்புகளும் செய்வார்கள். அங்காலை ஒருவர் ஜனாதிபதி கனவில் என்ன செய்வதென்று தெரியாமல் வெறிபிடித்து ஆடுகிறார், இங்காலை இவர் முதலமைச்சர் கனவில். பதவி கொடுக்காவிட்டால் கட்சியை விட்டு வெளியேறுகிறார்கள் என்று குற்றச்சாட்டு வைத்த இவர், பதவியை குறிவைத்து மற்றவர்களை கட்சியை விட்டு வெளியேற்றுகிறார் என்பதே உண்மை. சிறிதரனைதெரிந்தெடுக்கும் மக்கள், அவர் எந்தக்கட்சியில் தேர்தலில் நின்றாலும் தெரிந்தெடுப்பார்கள். இவர்கள் நினைப்பதுபோன்று தமிழரசுக்கட்சி என்பதாலேயே மக்கள் அவரை தெரிந்தெடுப்பது என்பது பொய் என்பதை, சாவகச்சேரியில் மக்கள் நிரூபித்து விட்டார்கள். கட்சியை இல்லாமற்செய்வதே இப்படியான கறையான்கள்தான். மக்கள் தங்களுக்கு சேவை செய்பவர்களைத்தான் தேர்தெடுப்பார்கள், சும்மா இருப்பவர்களையல்ல. நமது கட்சியைத்தான் மக்கள் தெரிந்தெடுப்பார்கள் என கட்சியின் பெயரை குத்தகைக்கு எடுத்துவிட்டு சும்மா இருந்துவிட்டு வாக்குசேகரித்த காலம் மலையேறி பல கட்சிகளை உள் இழுத்து விட்டிருக்கிறார்கள். பின் மக்களை குறை கூறுவது. தாமும் செய்ய மாட்டார்கள் செய்பவர்களையும் செய்ய விட மாட்டார்கள்.
  7. எல்லோருக்கும் வாழ்வில் நோய், மரணம் உறுதி, அதற்கு யாரும் விதிவிலக்கல்ல. எல்லோரின் வாழ்வில் ஏற்படும் நோயைப்பற்றி, மரணத்தைப்பற்றி யாரும் அலட்டிக்கொள்வதில்லை. இருந்தபோதிலும் சிலரின் வாழ்வில் இந்த நிலைகள் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஒரு சிலர் தம்மை இழந்து வருத்தி, தம் இன்ப துன்பம், களைப்பு பாக்காமல் அடுத்தவரின் விடிவுக்காக, மகிழ்ச்சிக்காக இடைவிடாமல் உழைப்பார்கள், தங்களால் இயன்றதை செய்வார்கள். அவர்களுக்கு நோயோ, மரணமோ நேரிட்டால் அவரால் பாதுகாக்கப்பட்டவர்கள், பயனடைந்தவர்கள் சொல்வது. "இப்படிப்பட்ட நல்ல மனிதனுக்கான இப்படி நேர்ந்தது? அவர் ஒரு தியாகி, அவருக்கு இப்படி வந்திருக்கவே கூடாது,இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருக்கலாமென வருந்துவார்கள். அப்படிப்பட்டவர்கள் இறந்தாலும் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டே இருப்பார்கள் தியாகியாக. அதேநேரம் தமது அதிகார திமிரினால், வரட்டுகவுரவத்தினால், பழிவாங்கலினால்,மற்றவர்களை வருத்தி, தாம் இன்பம் பெறுவதற்காக அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து வாழ்பவர்களுக்கு இப்படியான நிலை ஏற்படும்பொழுது, பாவி! எத்தனை பேரின் வாழ்வை கெடுத்தார்கள், இப்போ வந்த இந்த நோய், மரணம் பல ஆண்டுகளுக்கு முன் வந்திருக்கக்கூடாதா இவருக்கு? எத்தனை பேரின் வாழ்க்கை பாதுகாக்கப்பட்டிருக்கும் என நினைக்கத்தோன்றும். அவர்கள் வாழ்ந்தாலும் இறந்தவர்களாகவே கருதப்படுவார்கள். அவரவர் வாழ்வு எப்படியானதென்பதை அவர்கள் நோயின், மரணத்தின் போது கூடியிருப்போர் கூறும் கருத்துக்களில் இருந்து வெளிப்படும். நாகாசுரனை கொன்றது தெய்வம். அவன் கொடுமையிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக. அதற்காக தெய்வத்தை குறை கூறுவோமா? அல்லது நாகாசுரனால் வதைக்கப்பட்டவர்களை குறை கூறுவோமா?
  8. அப்போ, எதிர்க்கட்சிகள் கூவுவதுபோல் இது அரசியல் பழிவாங்கல் அல்ல. நீதிமன்றம் தன்னிச்சையாக வழக்கை விசாரித்து பிணை வழங்கியிருக்கிறது. பிணை மட்டுந்தான் விடுதலையல்ல. அரசியல் செய்வார்கள், சவால் விடுவார்கள், கொலை, கொள்ளை, எல்லா குற்றங்களும் செய்வார்கள், கைது, விசாரணை என்று வந்துவிட்டால்; இல்லாத நோயெல்லாம் வந்து வைத்தியசாலையில் படுத்து விடுவார்கள். அவசரசிகிச்சை, சத்திரசிகிச்சை என்று சிபாரிசு வேற. பிணையில் வந்தவுடன் மீண்டும் விறுவிறுப்பான அரசியலை, விட்ட இடத்திலிருந்து தொடருவார்கள். இவருக்காக வாதாடிய சட்டத்தரணி சாலிய பிரீஸ் சொல்லி இவரை பிணை எடுத்த விடயம், முன்பு சிறையில் தாக்கியதால் இவருக்கு ஞாபக மறதி, ஒழுங்காக காதுகேக்காது, பார்வைக்கோளாறு, நீரிழிழிவு இன்னும் பல்வேறு நோய்கள் இருப்பதாக அடுக்கி, இவரால் திருப்பி கையளிக்கப்பட்ட துப்பாக்கிகளால் எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை, அதற்குரிய எந்த விசாரணைகளும் நடத்தப்படவில்லை, சிறையில் அவருக்கு உயிரச்சுறுத்தல் இருக்கிறது, அதனாலேயே அரசாங்கம் அவருக்கு மெய்ப்பாதுகாவலர்களை அளித்திருக்கிறது என்று சொல்லி பிணை பெற்று கொடுத்துள்ளார். சொன்னவர் ஒரு வைத்தியரல்ல, இவருக்காக ஆஜரான சட்டத்தரணி. இவரோ தனது அரசியல் பயணம் தடையின்றி தொடரும் என்கிறார். தமிழ் அரசியல் கைதிகள் சிறையில்சித்திரவதைப்படிருக்கிறார்கள்,அடித்துக்கொல்லப்பட்டிருக்கிறார்கள், பல நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையின்றி இறந்திருக்கிறார்கள், அரசியல்வாதிகளால் பலவகை துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்காக எந்த அரசியல்வாதிகளும் சட்ட வல்லுனர்களும் நீதிபதிகளும் குரலெழுப்பியதுமில்லை, இரக்கம் காட்டியதுமில்லை, பிணை வழங்கியதுமில்லை. எதிலும் பாரபட்ஷம். இவரது சொந்தப்பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று பாதாள உலக தலைவனிடம் கைமாறியிருக்கிறது. மிகுதிக்கு என்ன நடந்தது என்று சொல்லத்தவறியிருக்கிறார். அதுக்கு என்ன நடந்தது என மறந்துவிட்டாராம். அதை தான் அவரது வக்கீலும் உறுதிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு நடத்தப்பட்ட தாக்குதலில் ஞாபக மறதியாம். ஆனால் மக்களால் நிராகரிக்கப்படும்வரை அவர் அரசியல் செய்திருக்கிறார், அன்று எதை சொன்னேனோ அதையே இன்றுவரை சொல்லி வருகிறேன் என்று வேறு அடிக்கடி ஞாபகமூட்டுகிறார். அன்று சொன்னது எதுவென இன்றுவரை ஞாபகமிருக்கிறது, தொடர்ந்தும் தடையின்றி அரசியல் செய்வேன் என்கிறார், இத்தனை வியாதிகள் உள்ளவரால் எப்படி அரசியல் செய்ய முடியும்? அதைவிட இராணுவ புலனாய்வாளரால் இவருக்கு வழங்கப்படாத முப்பத்தொன்பது துப்பாக்கிகளை திரும்ப கையளித்துள்ளாராம். அவை எங்கிருந்து இவருக்கு கிடைத்தன? யாரை கொலை செய்து இவற்றை அபகரித்தார்? புலிகளையா? இராணுவத்தினரையா? விரிவாக விசாரணை நடத்தப்படவேண்டும்!
  9. என்ன செய்வது? இளமையில் அக்களிப்போடும் திமிரோடும் விதைப்பதை முதுமையில் கண்ணீரோடுதான் அறுவடை செய்யவேண்டியிருக்கிறது. "ஏழை அழுத கண்ணீர் ஏழுதலைமுறைக்கும்." என்பார்கள். "ஏழை விட்ட கண்ணீர் கூரிய வாளை ஒத்தது." என்றும் சொல்வார்கள். "அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்."
  10. பல காரணங்கள். அதில் ஒன்றையாவது சொல்லவேண்டியது, நாங்களும் தெரிந்துகொள்வோம் அவர் எப்படியான நல்ல மனிதர் என்று. ராஜபக்ச குடும்பத்தை காட்டிக்கொடுக்கிறேன் என்று பேரம் பேசியிருப்பாரோ, அல்லது காட்டிக்கொடுத்துவிட்டுதான் பிணையில் வந்தாரோ? "துரோகி துரோகத்தாலேயே அழிவான்." வெடிகொழுத்தியதை மறைக்கிறாரோ?
  11. இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்று கனடா, தமிழருக்கு ஆதரவு தெரிவிக்கும் வேளையி, இவர்கள் அதிகாரத்திற்காக கொலை செய்யும் போது அவர்களும் தங்கள் கருத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டி வரும். அதெல்லாம் நமக்கு கவலையில்லை, நமக்கு வேண்டியது; அதிகாரம் நம் கையில் இருக்க வேண்டும். நாடு கடந்து சென்றாலும் எங்கள் சுயநலத்தையும் எங்களோடு கொண்டே செல்கிறோம். "தலைவனாய் இருக்க விரும்புகிறவர், சுயநலம் களைந்து, தன்னை தாழ்த்தி மற்றவர்களுக்கு ஊழியம் செய்கிறவர்களாய் இருக்கவேண்டும்." அதுவே உண்மையான தலைமைத்துவம். ஒருவரை கொலை செய்து அல்லது நற்பெயரை கொலை செய்து பதவியை கைப்பற்றுவது நல்ல தமைமைத்துவ பண்பு கிடையாது. இவரது சுயநலம், பணபலம் இப்போது இவரை சிறைக்கு கொண்டு செல்லப்போகிறது, அனிஞாயமாக நாட்டில் வாழும் இருவரையும் சேர்த்து விட்டிருக்கிறது.
  12. எங்கும், எதிலும் அதிகாரப்போட்டி நாடுகடந்தும் கொலை செய்யுமளவிற்கு போயிருக்கிறது. எப்போதும் தாங்களே தலைமைப்பீடத்தில் இருக்கவேண்டும் என்கிற அதிகார வெறி. கோயிலிலுமா? இதென்ன மனநிலை?
  13. இந்தியாவை கொஞ்சம் எச்சரித்த மாதிரியும் இருக்கும். இந்தியா பதறியடித்துக்கொண்டு ஓடி வரும், வந்துவிட்டது என்றும் செய்தி சொல்கிறது.
  14. அங்கு மட்டுமல்ல அவர் செல்லுமிடமெங்கும் அதே கூத்துத்தான்! மக்களுக்குரிய பிரச்சனைகளை கதைக்கும்போது இடையூறு விளைவித்து தன்னை பெரியவராக காட்ட கத்தி கூச்சலிடுபவர். அடிக்கடி தேவையற்ற பிரச்சனைகளில் மாட்டுப்படுபவர், சட்டத்தை மீறுபவர். இவர் தனது பாராளுமன்ற பிரவேசத்தின்பின் எத்தனை தடவை நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்? மக்களின் பிரச்சனைகளுக்காகவா? அதேதான்! பாராளுமன்ற பிரவேசத்தின்போதே இவர் வேறொருவருக்குரிய ஆசனத்தில் இருந்துகொண்டு போட்ட அலப்பறை தெரியுமே. பாராளுமன்ற கோமாளி.
  15. இதைவிட இவர்களால் வேறென்ன செய்ய முடியும்? வந்த அழிவுகளை கண்டும் திருந்தாத நம் இனம், பின்னர் யாரும் இதுபற்றி எச்சரிக்கவில்லை என்றும் பதிவிடுவார்கள். இயற்கையை முற்று முழுதாக நம்மால் கணிக்கமுடியாது, ஒருவேளை எதிர்பார்த்ததைவிட குறைவாக இருக்கும், அல்லது கூடுதலாக இருக்கும், அது இயற்கையின் மாற்றத்தை பொறுத்தது. கவனமாக முன்னெச்செரிக்கையுடன் இருப்பதில் எந்த தப்பும் இல்லை.
  16. அதுசரி, இவர் பொதுவெளியில் பகிரங்கமாக, தனக்குப்பிடிக்காதவர்களை, தமது உரிமைகளுக்காக போராடுபவர்களை, ஒருமையில் விளித்து, தகாத, கேவலமான வார்த்தைகளை பேசும் இவர், பொதுமக்களை அதுவும் பெண்களை அச்சுறுத்தும் இவர் பாராளுமன்றம் செல்லவோ, மற்றவர்களுக்கு பாடம் நடத்தவோ தகுதியற்றவர். தனக்கென்றால் கொதிப்பு, மற்றவர்க்கென்றால் ரசிப்பு.
  17. ஆமா, இந்த மேதாவித்தனமெல்லாம் நாடுகள் சந்தர்ப்பம் பார்த்துத்தான் வெளிவருமா? கண்ணுக்கு முன்னுக்கு இந்தக்கொடூரங்கள் நடைபெறும்போது ஏன் அந்த மௌனம்?
  18. ட்ரம்பிற்கு நோபல் பரிசு தயார்! இதை பிடுங்குவதற்கு வேறு பல காரணங்கள். சீனா ஒருபுறம், அமெரிக்கா மறுபுறம்.
  19. மனநலம் பாதிக்கப்பட்டவர், தூக்க மாத்திரை எடுத்துக்கொள்பவர், எல்லை தாண்டி கடற்தொழிலுக்கு வந்துள்ளார்? எதற்கும் இலங்கையில் ஒரு பரிசோதனை செய்து உண்மையை கண்டுபிடித்து விட வேண்டியது.
  20. நான், அனுரா செய்யும் நல்ல காரியங்களை வரவேற்கும் அதே நேரம் அடாவடிகளை விமர்சிக்கிறேன். நீங்கள் அதை கவனிப்பது இல்லை. இப்போ நான் விமர்ச்சித்த படியினாலேதான் இப்படி ஒரு பதிவை எனக்கெதிராக இட்டிருக்கிறீர்கள். சரி..... இப்ப சொல்லுங்கள், நான் எந்த அரசை வரவேற்கவேண்டுமென நீங்கள் கருதுகிறீர்கள்? மஹிந்தா, கோத்தா, ரணில், மைத்திரி. இவர்களின் ஆட்சியில் இதைவிட மேலாக ஏதும் நடந்ததா? அவர்கள் போட்ட திட்டம், கட்டடங்கள்தானே இவையனைத்தும், அவர்களின் ஆலோசனைப்படிதான் இவைகள் நிறைவேற்றப்படுகின்றன. மெல்லெனப்பாயும் நீர் கல்லையும் உருக்கிப்பாயுமாம். சட்டம் அவர்கள் வீட்டுக்கதவை தட்டுமட்டும் அனுராவை விழுத்த அல்லது தமக்கு கீழ் அடிபணிய வைக்க முயற்சிப்பார்கள். அதையேதான் எதிர்கட்சிகள், விசேடமாக நாமல் சூழுரைக்கிறார்.
  21. முன்பு ஈராக்கிலும் அணுஆயுதம் தயாரிக்கிறார்கள் என்று குற்றம் சுமத்தி அந்த நாட்டை சூறையாடி, நிர்வாகத்தை குலைத்து, மக்களை அகதியாகிவிட்டார்கள். ஆனால் அப்படி ஒரு அணு ஆயுத களஞ்சியத்தையோ, ஆய்வு கூடத்தையோ யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. நாடுகள் மேல் குற்றம் சுமத்தி, தனது ஆளுகைக்குள் கொண்டுவந்து, அந்த நாட்டிலுள்ள வளங்களை சூறையாடுவதும் அந்நாட்டின் நிர்வாகங்களை குழப்புவதுந்தான் அமெரிக்காவின் பிழைப்பு. இவர் மூன்றாம் உலக யுத்தத்தை ஆரம்பிப்பாரானால் அமெரிக்காவே முதல் அழிக்கப்படும்.
  22. இவற்றிற்கு நீதிமன்றம், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள், அவைதான் இந்தப்பிரச்னைக்கு காரணம் என்றும் சுட்டிக்காட்ட யாரும் முன்வரவும் மாட்டார்கள். போன பௌர்ணமிதினத்தன்று மக்கள் அமைதியாக தெரு ஓரத்தில் கூடாரம் அமைத்து தமது எதிர்ப்பை வெளியிட்டுக்கொண்டிருந்தனர், போலீசார் அவர்களின் கூடாரங்களை பிடுங்கி, அராஜகம் புரிந்தனர். அது ஜனநாயகத்திற்கு எதிரானதில்லையோ? எப்படியும் நாட்டில் ஒரு இனவன்முறையை ஏற்படுத்தி ஆட்சியை கைப்பற்ற மாட்டோமா எனும் நப்பாசையில் ஒருவரும், இவர்களை உசுப்பிவிட்டால் தம் ஊழலுக்கான தண்டனையில் இருந்து தாம் தப்பிவிடாலெமென்கிற கனவில் ஊழல்வாதிகளும் பிக்குகளுக்குப்பின்னால் அலைகிறார்கள். முற்றுந்துறந்த துறவிகள் தமிழரின் காணிகளை அடாத்தாக பிடிப்பதற்கு, மண்ணாசை கொண்டு நாட்டை கொழுத்தியே தீருவோமென கொழுத்தாடு பிடிக்குதுகள். இதுகளின்ர காவியை கழட்டி வீட்டுக்கனுப்ப வேண்டும்.
  23. எங்கள் அர்ப்பணிப்புள்ள இராணுவமே பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர் என்று விழா கொண்டாடினார்கள். இன்னொரு புறம் அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், இன்னும் பல நாடுகளை குறிப்பிட்டு இவர்களின் உதவியில்லாமல் இந்த போரை முடிவுக்கு கொண்டு வந்திருக்க முடியாது என்றார்கள். உண்மையில் இனத்தை காட்டிக்கொடுத்த துரோகிகள் இல்லாமல் இந்தப்போரை முடிவுக்கு கொண்டு வந்திருக்க முடியாது. இதை பலதடவை சிங்களம் ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறது, வருகிறது. வி. முரளிதரன் சொன்னார்(ன்). நான் காட்டிக்கொடுக்கவில்லை, தலைவரின் உடலை இனங்காண்பதற்கு நான் போகவில்லை என்று. அப்படியெனில் இவர்களுக்கு பதவி, பாதுகாப்பு, வசதிகள் ஏன் கொடுக்கப்பட்டன? இன்று சிங்களம் பகிரங்கமாக சாட்சி சொல்கிறது, துடிக்கிறதே இவர்களுக்காக. அதுமட்டுமல்ல இந்த எஜமானர்களுக்காக பல சட்ட விரோத கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, ஊழல் செய்திருக்கிறார்கள். அந்த மறுபக்கம் வெளிவந்தால் தங்கள் அகப்பட்டு விடுவேமெயென தவிக்கிறார்கள் கதறுகிறார்கள். எப்படியிருந்தாலும் இவர்கள் தமிழரால் ஒதுக்கப்படவேண்டியவர்கள் இனத்தை கெடுத்த, கட்டிக்கொடுத்த கோடரிக்காம்புகள். அவர்கள் கைது, சமூக விரோத கொலை, கொள்ளைகளுக்காக என்பதை புரிந்து கொள்ளவேண்டும். விசாரணையை திசை திருப்ப முயலவேண்டாம். இவர்களுக்கு தண்டனை அளிக்காத முன்னைய அரசாங்கங்களும் விசாரிக்கப்படவேண்டும், விளக்கம் அளிக்க வேண்டும்!
  24. அவரோடு கூட இருந்தவர்கள், தங்கள் பிள்ளைகளை இவர்கள் அழைத்துச் சென்றதை கண்டவர்களின் சாட்சி உள்ளதே. தீவகத்தில் நடந்தகொலைகள், இவர்கள்தானே அப்போ அங்கே ஆயுதங்களுடன் இருந்தார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.