Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. சட்ட விரோதமான வேலை செய்வோருக்கு கெத்து கூட, அறிவு சொற்பம். ஒருநாள் மாட்டுப்பட்டு, குட்டு வெளிவராது என்கிற அற்ப அறிவு. சேர்த்தது, தனிப்பட்ட, குடும்ப மானம் இழந்து வாழ்நாள் முழுதும் சிறை. தனக்கேற்ற வேலைசெய்து கஞ்சியோ கூழோ குடித்து நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம். இனிமேல் இவர் செய்யாததும் இவர் மேல் சுமத்தப்படும். எத்தனை பேர் வாழ்க்கையில் விளையாடியிருப்பர் தம் சொந்த பேராசையால். இவரோ? எவரோ?
  2. தமிழ் மக்களுக்கும் சர்வதேசத்துக்கும் கொடுத்த உறுதிப்பாட்டை நிறைவேற்ற இலங்கை அரசும் தவறியுள்ளது, அதையும் சேர்த்து சொல்லவேண்டியது. நீங்கள் இந்தியாவை கை காட்டி உங்கள் பொறுப்பை இந்தியாவிடம் விடுகிறீர்கள், தமிழர் பிரிந்து வாழ்வதையும் தடுக்கிறீர்கள். இது, நீங்களும் இந்தியாவும் விளையாடும் சொக்கட்டான் விளையாட்டு. தங்கள் பொறுப்பை இந்தியாவிடம் தட்டிக்கழிப்பது, பேசுவது; எங்கள் நாட்டுக்கு இறைமை உண்டு, இதில் யாரும் தலையிட முடியாது என. என்ன வேடிக்கையாக பேசுகிறார் கலாநிதி தயான் ஜயதிலக்க. இவர் ஒரு முன்னாள் ஐ .நாவில் இலங்கை சார்பாக தொடர்பாக பேசியவர். ஐ .நா. வையும் இந்தியாவையும் கை காட்டுவதால் பயனில்லை. நீங்களே அதற்கு முழுப்பொறுப்பு. தங்களின் கையாலாகாத்தன்மையை ஏற்றுக்கொள்ளத்தயாரில்லை.
  3. அதெண்டா நீங்கள் சொல்வது உண்மைதான். அப்போ, எந்தக்கட்சி பதவிக்கு வந்திருக்க வேண்டும் என்கிறீர்கள்? மகிந்த, மைத்திரி, ரணில், கோத்தா, சந்திரிகா? இவர்களெல்லாம் பதவியையிழந்தபின் குற்றம் சாட்டுபவர்கள். அனுராவுக்கும் ஒரு சந்தர்ப்பம். இல்லையெனில் பத்தோடு பதினொன்று! நீங்கள்தான் ஆட்சிக்கு வந்தாலும், தமிழர் பிரச்சனை முழுதாக தீர்க்க முடியாது, இதுதான் யதார்த்தம். ஆரம்பத்தில் விட்டு தவறு, மீண்டும் சரிசெய்வது முடியாத காரியம்.
  4. மாற்றம் ஒன்றே மாறாதது. மஹிந்த, தான் அரசியலில் நிலைத்து நிற்பதற்காக இனவாதத்தை கையிலெடுத்தார், இன்று அவரின் மாயையிலிருந்து மக்கள் விலகி விட்டனர். பொருளாதாரம் பின்னடைவை சந்தித்தது. நாடு முன்னேற வேண்டுமானால், மக்கள் அனுராவை தொடர்ந்து அரசியல் செய்ய அனுமதிக்க வேண்டுமானால் அவர்களிலிருந்து வித்தியாசமாக சிந்தித்து செயற்பட வேண்டும். நீங்கள் தந்தால் வேண்டாமென்றா சொல்வேன் நான்?
  5. உங்களுக்கு வெறுப்பு என்னிலா? அனுரா அரசிலா? சிங்களத்தின் சுய குணத்தை மாற்ற இயலாது. ஆனாலும் அனுரா சிறிது மாற்றி யோசிக்கிறார். அதிலும் ரில்வின் சில்வா தனது கடும் போக்கை சிறிது தளர்த்துவது போல் எனக்குத் தெரிகிறது. குறை சொல்வதை விடுத்து மாற்றத்தை ஏற்று ஊக்கப்படுத்துவதே நமக்கு இப்போதுள்ள ஒரு வழி. எழுபத்தாறு ஆண்டுகள் திட்டமிட்டு, தீனி போட்டு வளர்க்கப்பட்ட இனவாதத்தை சில ஆண்டுகளில் மாற்றி அழித்துவிட முடியாது. அதற்கு காரணமானவர்கள், காரணம், வெளிக்கொணர்ந்து மக்களுக்கு தெளிவூட்ட வேண்டும், பயத்தை நீக்கவேண்டும், உண்மையை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும். அதற்கு முதல், அதை ஏற்படுத்துபவர்கள் நடந்தது தவறு என ஏற்று, பொறுப்பெடுக்க வேண்டும். இதெல்லாம் சில ஆண்டுகளில் நடைபெறாது. அதை ஏற்படுத்துவதற்கு, சுயநல அரசியல்வாதிகளின் போலி முகங்களை களைவதற்கு, பல சவால்களை சந்திக்க வேண்டும். ஆமா.... இதை வாசித்ததன் பின், எனக்கு என்ன பெயர் சூட்டுவதாக உத்தேசம்? அதையும் அனுராவின் சவாலாக ஏற்றுக்கொள்வேன்.
  6. அரச, காவற்துறை, இராணுவ, புலனாய்வின் ஆதரவோடும் ஆசீர்வாதத்தோடும் பாதுகாப்போடும் நாடு முழுவதும் பரப்பப்பட்டு கொடிகட்டிப்பறந்த போதை பாதாள உலக வியாபார கலாச்சாரம், தப்பி வெளிநாடுகளுக்குள் மறைந்தவற்றை வெளிக்கொணர்ந்துள்ளார். மிகுதி, போகபோகத்தொடரும். அப்போ நீங்களும் தொடர்ந்து பாராட்டக்கூடும், பொறுத்திருந்து பாப்போம். நான் அனுராவின் காவடியாகவே இருந்து விட்டுப்போகிறேன். நல்லது செய்ய முயற்சிப்பவரில் எதிர்பார்ப்பு வைப்பதில் தப்பில்லை. அர்ச்சுனா, பாராளுமன்றத்தில் தேசியத்தலைவர், தெய்வம் என்கிறார். இதுவே முன்னைய அரசாங்கமாக இருந்திருந்தால்; பயங்கரவாத சட்டமோ வெள்ளை வானோ இவரை இல்லாமல் செய்திருக்கும். சுமணரத்ன தேரர் வேறு புலம்புகிறார், மஹிந்த காலத்தில், வடக்கு கிழக்கில் சுதந்திரமாக பௌத்த கொள்கைத்திட்டங்களை ஆற்றினோம், அனுரா வந்து தொல்பொருள் பௌத்த கொள்கைகளை தடுத்து விட்டார் என, தனது கொள்ளை தொழில் பறிபோன கடுப்பில் அங்கலாய்க்கிறார். மெல்லெனப்பாயும் நீர், கல்லையும் உருக்கிப்பாயுமாம். உங்கள் பார்வையும் வெறுப்பும் எண்ணங்களும் மாறலாம். அதற்காக, அனுரா தமிழீழத்தை தூக்கி தந்துவிடுவார் என நான் சொல்ல வரவில்லை. தமிழர் பயங்கரவாதிகள், வந்தேறு குடிகள், அவர்களுக்கு இந்த நாட்டில் அதிகாரமில்லை, எந்த அரசியல் உரிமையும் தேவையில்லை என்கிற வாதம் தகர்க்கப்பட வாய்ப்புண்டு.
  7. காணாமல் ஆக்கப்பட்ட தமிழரின், சொந்த விபரங்களை பயன்படுத்தி பல சிங்களவர்களும் ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்தப்பட்டிருக்கலாம். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுபவர்கள் சிலர் ஐரோப்பிய நாடுகளில் வசிப்பதாக கடந்த அரசாங்கங்கள் கூறிவந்தன. அன்றைய அமைச்சர் ஒருவர் ஐ. நாவிலும் இந்த கருத்தை வைத்திருந்தார். இந்த சம்பவத்தை வைத்துப்பார்க்கும் போது அதுவும் நடந்திருக்க வாய்ப்புண்டு. இந்திய அடையாள அட்டையை தயாரிக்க இவர்களால் முடிந்திருக்கிறதென்றால், உள்நாட்டில் தயாரிப்பது ஒன்றும் அவ்வளவு கடினமில்லையே இவர்களுக்கு. பல வருடங்களுக்கு முன் போர் முடிந்த கையோடு ஒரு செய்தி பரவலாக பேசப்பட்டது. அதாவது நாமல் வாட பகுதியில் உள்ள தமிழரின் காணிகளை குறைந்த விலையில் பெற்றுக்கொண்டு அவர்கள் கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல தூண்டப்படுவதாக. அந்தசெய்தியில் சில உண்மைகளும் இருக்கத்தான் செய்யும். ஒரு நாட்டில் அகதியாக தஞ்சம் புகுந்தவர்களில், இலங்கை சட்ட விரோத கடற் பயணங்களை தடுக்க அமைக்கப்பட்ட கடலோரக்காவல் பணியில் இருந்த ஒரு கடற்படை சிப்பாய், தன் நாயோடு தஞ்சம் அடைந்திருந்ததாக செய்திகள் வந்தன. அவர் மட்டுமல்ல, பல சிங்களவர்கள் இவ்வாறு நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர். நாட்டில் எல்லாத்துறைகளிலும் ஊழல், மோசடி, விசேடமாக போலீஸ், பாதுகாப்பு படைகளில் முழுவதும் இது பரவியிருக்கிறது. அரச துறைகள் முழுவதும் மாற்றியமைக்கப்படவேண்டும். தமிழருக்கெதிரானது என உருவாக்கப்பட்டது, நாட்டையே விழுங்கி விட்டிருக்கிறது. சுட்டுப்படுகொலைசெய்யப்பட கணேசமுல்ல சஞ்சீவ காரணமில்லாமல் அன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது எப்படி? உடனடியாக மத்துகமவுக்கு இஷாரா தப்பிச்செல்ல முடிந்தது எப்படி? போலீசார் மத்துக்கமவுக்கு தேடுதலுக்காக சென்றபோது மித்தெனியாவுக்கு தப்பிச்சென்று அங்கிருந்து யாழ்ப்பாணம் சென்று, கென்னடி பஸ்ரியனிடம் இஷாராவை கையளித்தது யார்? சாதாரண பொதுமகனால் முடியுமா இதனை செய்ய? போலீஸ் புலனாய்வாளர்கள் நேபாளத்திற்கு சென்று குற்றவாளிகளை கைது செய்து நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது வரை, ஒழுங்கு விதிகள் பின்பற்றப்படாதது வரை வெளியில் கசிந்தது எப்படி? அப்படியென்றால்; குற்றவாளிகள் புலனாய்வுப்படைக்குள் இவர்களுடன் பயணிக்கின்றனர். மகிந்த காலத்தில் போலீஸ், இராணுவப்படைகளுக்கு அதிகளவு அதிகாரம், செல்வாக்கு, தண்டனைகளிலிருந்து விலக்கு இத்தியாதி கொடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் என்ன தவறு செய்திருந்தாலும் நாட்டை காப்பாற்றியவர்கள் என்கிற விளக்கம் கொடுக்கப்பட்டது. அது போதைப்பொருள் கடத்தலாக இருந்தாலென்ன, கொலை கொள்ளையாக இருந்தாலென்ன. நாட்டை காப்பாற்ற வேண்டியவர்கள் நாட்டை அழிப்பதற்கு பயன்படுத்தபட்டார்கள். அனுராவுக்கு உயிர் அச்சுறுத்தல் இங்கே தான் உண்டு. அனுரவைத்தவிர வேறொருவர் ஆட்சி ஏற்றிருந்தால் இவையெல்லாம் நிறைவேறியிருக்காது. இப்போ நாமல் சொல்கிறார், இந்த குற்றவாளிகளின் பின்னால் செயற்படுபவர் யார், இந்த கள்ள அடையாள அட்டைகளை விநியோகித்தவர்கள் யார், புலனாய்வுத்தகவல்களை அளிப்பவர்கள் யாரென அரசு, மக்களுக்கு தெரிவிக்க வேண்டுமாம். ஏன் இவ்வளவு அவசரம் இவருக்கு? தன் பெயரை தெரிந்து கொண்டுவிட்டார்களா என்பதை தெரிந்துகொள்ள ஆவலா? அல்லது தகவல் கொடுப்போரை அழிப்பதற்காகவா? இவரை சுற்றி ஏலவே கண்காணிப்பு வலயம் ஏற்படுத்தப்பட்டுவிட்டது என்பதை இவர் அறிய வில்லையா? அதைவிட இஷாரா இவரின் முன்னாள் காதலியென்கிற பேச்சும் அடிபடுகிறது. இவர்களின் ஊதுகுழல்கள் அடங்கிவிட்டனவே, இனிமேல் எது பேசினாலும் அது தமக்கு எதிராகவே திரும்புமென உணர்ந்து கொண்டனரோ? அவர்கள் தம் பாட்டில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், வியாபாரம் என சொந்த நாட்டிலேயே கொடிகட்டிப்பறந்து சொகுசான வாழ்க்கை வாழ்ந்தவர்கள், அனுரா ஆட்சியேறியவுடன் நாட்டை விட்டு வெளியேறி, ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்து, கைதாகவும் வேண்டி வந்தது, ராஜபக்ச குடும்பத்துக்கு வந்த சோதனை. அவர்களின் கோர முகத்தையும், இருண்ட ஆட்சியையும் உலகிற்கும் சொந்த மக்களுக்கும் வெளிக்காட்டியுள்ளது. ஆனால் எல்லா துறைகளையும் மாற்றியமைக்க வேண்டியது, அனுராவுக்கு இன்னும் நாட்டை முன்னேற்றகரமாக கொண்டுசெல்ல உதவும். தமிழ் மக்களை மட்டுமல்ல சொந்த மக்களையும், உண்மையை வெளிக்கொண்டு வந்தவர்களையும், இவர்களுக்காக, இவர்களை காக்க, தம் சொந்த உயிரையும் பணயம் வைத்து ஏவல் வேலை செய்து இவர்களை செழிப்பாக்கி அழகு பார்த்தவர்களையும் கொலை செய்த இவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவேண்டும். ஹி.... ஹி..... நீங்கள் அவர் செய்தவற்றை கண்டதால் போற்றுகிறீர்கள். நாங்கள் அவர் சாதிப்பார் என நம்பினோம், கேலி செய்தீர்கள் அன்று, என் போன்றவர்களை.
  8. ஒரு இனப்படுகொலை இன்று சாதாரண பேசுபொருளாகியுள்ளது. அதற்காக இலங்கை, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அயராது உழைத்து, பல ராஜதந்திர வேலைகளை செய்துள்ளது. ஒரு பாதிக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதிகள் எதை சாதித்தார்கள்? அவர்கள் கூற்றை ஆமோதித்துக்கொண்டிருந்துள்ளார்கள். இதற்காகவா மக்கள் இவர்களுக்கு வாக்களித்தார்கள்? இவர்கள் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகளாம், தாங்களே சொல்லிக்கொள்கிறார்கள், அதைத்தான் சொன்னேன். உண்மை என்றும் மறைந்து போகாது. என்னை கிண்டலடிப்பதுபோல் உண்மையை ஏற்று, ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.
  9. இலங்கையில் விடுதலைப்போர் போர் முடிந்த கையோடேயே, தமிழரின் பண்பாட்டை, நாகரிகத்தை, விடாமுயற்சியை, கல்வியை குறிவைத்து அடுத்த போர் தமிழருக்கெதிராக தொடங்கப்பட்டுவிட்டது. எதிர்காலத்தில், நடைபெறும் எல்லா சமூக விரோத செயல்களிலும் ஜவ்னாவையும் இழுத்து விட்டு, அவர்களே இவற்றிற்கு காரணம் என்று தாம் தப்பித்துக்கொள்வது என முடிவு செய்து செயற்பட்டுள்ளார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.
  10. அப்படியெண்டா; செவ்வந்தியில் ஒரு மயக்கமுங்கோ உங்களுக்கு. ஒரு அமைச்சரே அவரின் திறமையை மெச்சியிருக்கிறார் என்றா பாத்துக்கொள்ளுங்களேன் செவ்வந்தி எப்படிப்பட்டவர் என்று. அதிலும் இருபத்தாறு வயதுதான் அவவுக்கு. எங்கள் பெண் போராளிகளை விமர்சிக்கிறார்கள், இவவையோ நினைத்து, கனவு கண்டு பாட்டுபாடுகிறார்கள். இருவேறு உலகமிது.
  11. இதுவே, தன் மகள் மாப்பிள்ளையின் காரில் அருகில் இருந்து பயணம் செய்திருந்தால், எப்படி மகிழ்ந்திருந்திருப்பார் இந்த மாமியார்!
  12. எதுக்கு? இராணுவத்தளம் அமைக்க இடம் பாக்கினமோ?
  13. இங்கு இணைக்கப்படும் இணைப்புகளை சொடுக்கினாலும் பார்க்க முடியவில்லை, அது ஏன்?
  14. வேலிக்கு வைச்ச முள்ளு, ஒருநாள் வைத்தவரின் காலையே பதம் பார்க்கும். அப்போ தெரியும் அதன் வலி.
  15. நாமல் வைக்கும் கோரிக்கையைப்பாத்தால் எங்கப்பன் குதிருக்குள்ள இல்லையாம். போதைப்பொருள் காரரை கைது செய்வதை விடுத்து, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்கிறார். இஷாராவை கைது செய்ய ஒரு வருடம் எடுத்திருக்கிறது இந்த அரசாங்கத்திற்கு என்று வேறு விமர்சிக்கிறார். இவ்வளவும் செய்த அரசாங்கத்திற்கு இந்தப்பெண்ணின் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது பெரிய விடயமா? அல்லது அது தெரியாமல்த்தான் நேபாளம் வரை சென்று கைது செய்தார்களா என்ன? இவருடைய நூறு கோடி சொத்துக்கள் எங்கிருந்து கிடைத்தன, நூறு கோடி மட்டுந்தானா என்பதையும் வெளிக்கொண்டு வரத்தான் போகிறார்கள். அதை விட, வெளிநாட்டில் பதுங்கியுள்ள சொத்துக்களும் அரச உடமையாகத்தான் போகிறது. இவர்களின் கோரமுகத்தை மக்களிடம் இருந்து மறைக்க பயங்கரவாதிகள் என்கிற கதையை இழுத்து மறைக்கப்பார்கிறார்கள். இவர்களின் சுய ரூபம் வெளிப்படுத்தப்படும்போது என்ன நடக்கபோகிறதென பாப்போம். இனிமேல் வெளிநாட்டுக்கும் தப்பியோட முடியாது. போதைப்பொருள் தாதாக்கள் என்றால், சர்வதேசமே பிடித்து அனுப்பிவிடும். பல நாடுகளின், துரோகியின் உதவியில்லாமல் புலிகளை முறியடித்திருக்க முடியாது என்று சொன்னவர்கள், பயங்கரவாதத்தை எப்படி முறியடிப்பது என்று சர்வதேசத்துக்கு பயிற்சியளித்தார்கள். போதைப்பொருள் மாபியாக்களை எப்படி கைது செய்து வலையமைப்பை அழிப்பது என்று பயிற்சி பெற சர்வதேசமே அனுராவை தேடி வரப்போகிறது. அதுமட்டுமல்ல இங்கையின் எந்த அரசாங்கமும் செய்யாத, செய்ய முயற்சிக்காத அதிரடியை செய்து, நாட்டின் வீழ்ச்சிக்கு காரணமானவர்களை உடனடியாக அடையாளம் கண்டு பிடித்தது பெரும் சாதனை. அதுவும் பதவியேற்று ஒருவருடத்திற்கு முன்.
  16. ஜெனீவாவின் இயலாமை. ஒரு இனவழிப்பை செய்துபோட்டு, இலங்கையில் இனவழிப்பே நடைபெறவில்லை, நடந்ததெல்லாம் பயங்கரவாதம், மோதல் என்று காட்ட சிங்களம் தலையாலை ஓடி காலால நடக்குது. ஆனால் அழிக்கப்பட்ட நம்மினத்தின் பிரதிநிதிகள், ஜெனிவாவில் போய் அதை நிரூபிக்க முயற்சித்ததுமில்லை, மாறாக வீட்டிலிருந்து கொண்டு நடந்தது ஆயுதப்போராட்டம், அதை நாம் ஆதரிக்கவில்லை, இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என நிரூபிக்க ஆதாரமில்லை என வாதாடுகிறார்கள். அரசாங்கத்திற்கு கால அவகாசம் வேண்டிக்கொடுப்பதும் இரகசிய சந்திப்புகளை நடத்துவதும் செய்து கொண்டு எப்படி நமக்கு நிஞாயம் கிடைக்குமென எதிர்பார்க்க முடியும்? எய்தவன் இருக்க அம்பை நொந்து பயனென்ன?
  17. இஷாரா செவ்வந்தி ஒன்றும் நேற்று இயங்கத்தொடங்கியவரல்லர். அவரது குழு, தலைவர்கள், இயக்கியவர்கள், இயங்கியவர்களென உங்கள் குடும்ப ஆட்சியிலிருந்தே உள்நாட்டுக்குள் இயங்குகிறார்கள். ஆனால் அவர்களை கைது செய்யவோ, நடவடிக்கை எடுக்கவோ, பயங்கரவாதிகளை அழித்தோம் என மார்தட்டும் உங்களால் முடியவில்லையே. காரணம் என்ன? நீங்கள் சாதித்தவைகள் இவையா? அன்றி பயங்கரவாதத்தை நாங்கள் அழித்தோம் என்று பெருமைப்படுவது இன்னொருவரின் சாதனையை உங்களது ஆக்குவதா? யாரவது நாட்டுக்கு நல்லது செய்தால், சாதித்தால் உங்களுக்கு பொறுக்காது, அதை உங்களது ஆக்குவதற்கு எது வேண்டுமானாலும் செய்து போலிப் பெருமை தேடுவீர்கள். நீங்கள் மக்களுக்கு என்ன சேவை செய்தீர்கள் இத்தனை ஆண்டுகளாய் ஆட்சி செய்தபோது? அதன் பயன்தான் இப்போ வெளிவருகிறதே. இதுவும் மக்களுக்கான சேவை என்பதை புரிந்து கொள்ளத்தெரியாதவருக்கு ஜனாதிபதி ஆசை வேறு. ஏன் இவர் சும்மா வாயை கொடுத்து தன்னை காட்டிக்கொடுத்து மாட்டிக்கொள்கிறார்?
  18. அதில் ராஜபக்ச குடுப்பதில் எத்தனை பேருக்கு தொடர்பு? யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே! சுமந்திரனின் விசிறிகள் கட்டியம் சொல்கின்றனர்.
  19. சந்தேகம் என்ன? இந்த மாபியாக்கள் கைது செய்யப்படும்போது, எதிர்கால கனவு ஜனாதிபதி பதறித்துடித்து, இதெல்லாம் தேவையில்லை, அபிவிருத்தி தான் நாட்டுக்கு தேவை என்று குதித்தாரே, இதிலிருந்து தெரியவில்லையா? சிலர் கொலை செய்யப்பட்டனரே, அதிலிருந்து தெரியவில்லையா முதலாளி முதலைகள் யாரென்று? இவர்களின் ஊழலை விசாரிக்கத் தொடங்கியிருந்தால் இவ்வளவு வெற்றி கிடைத்திருக்காது. இப்போ, தானாகவே சிக்கப்போகிறார்கள். அதை தவிர்ப்பதற்காக ஏழை மக்களை ஏமாற்றி, வீட்டுக்கு அழைத்து படம் காட்டி, தங்கள் குற்றங்களை மறைப்பதற்கு முயற்சிக்கிறார்கள். இந்த மக்கள் தானே இவர்களை வேரோடு அரசியலில் இருந்து விரட்டியவர்கள்? இவர்களை தேர்தலில் வீட்டிற்கு அனுப்பியவர்களும் இந்த மக்கள் தானே? சிறை செல்வதென்று முடிவாகிவிட்டது, எப்படி சிறையில் சாதாரண சிறைக்கைதிகள் போல வாழ்வதற்கு தம்மை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு கொலையை மறைத்து, தப்ப முயற்சி பண்ணி இப்போ பல கொலைகள், கொள்ளைகள், ஊழல்கள் பெருகி இவர்கள் வெளியே வரமுடியாதளவுக்கு தண்டனை காலம் இவர்களது வாழுங்காலத்தை விட அதிகரிக்க வாய்ப்புள்ளது. பல லட்ஷம் கொலைகளை, ஊழல்களை செய்தவர்களுக்கு மரணதண்டனையே பொருத்தமானது. பரம்பரையே உள்ளே போகப்போகிறது. குடும்பத்தில் ஒருவனாவது நல்லவன்? பெற்றவர்களைபோலவே பிள்ளைகளும் இருப்பார்கள். கசாப்புக்கடைக்காரருக்கு அரசியல் வந்தால், அரசியலும் கசாப்புக்கடையாய் மாற்றி விடுவார்கள், விட்டார்கள் முட்டாள்கள்.
  20. விடுதலைப்போராட்டம் முறியடிக்கப்பட்டபின், தமிழ்ப்பிரதேசங்களை ஆக்கிரமித்த இராணுவ, போலீஸ் புலனாய்வுப் பிரிவின் நேரடி, மறைமுக தலையீட்டின் வழிநடத்தலில் செயற்பட்ட ஆவா குழுவாக இருக்கலாமென சந்தேகம் எனது. தெற்கில் பாதாள, போதைக் குழு. வடக்கில் ஆவா குழு. ஆவா என்கிற பெயர் வடக்கில் அறிமுகமானது, இராணுவ ஆக்கிரமிப்பின் பின்னே. வடக்கில் தமிழர் தலைமை, அதற்கு பெயர் மட்டும் ஏன் "ஆவா." முன்னைய அரசாங்கம் இராணுவ, போலீசாரை பயன்படுத்தி. தமிழரின் கல்வி, கலாச்சாரம், சுதந்திரம் போன்றவற்றை நிரந்தரமாக அழிக்க, சமூக விரோத செயல்களை ஊக்குவிக்க, திட்டமிட்டு புகுத்தப்பட்ட போதை, வாள்வெட்டு. இதில் முன்னைய அரசாங்கங்களுக்கு பாரிய பங்கு உண்டு. சட்டம், நீதியை நிலைநாட்ட வேண்டியவர்களை அதை அழிப்பதற்கும், தங்களை செல்வாக்கை செழிப்பாக்குவதற்கும், பதவிகளை தக்க வைப்பதற்கும் பயன்படுத்திக்கொண்டார்கள். அனுரா அரசால் இதை செய்ய முடிந்ததென்றால்; ஏன் முன்னைய அரசாங்கங்களால் இதை செய்ய வேண்டாம், நடவடிக்கை ஏதும் செய்யப்படவில்லை? இப்போ நாமல் என்ன கருத்து வெளியிடப்போகிறார்? கோத்தா முந்திக்கொண்டு, சில போதைக்கும்பல் தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு, தனக்கு அவர்களுடன் தொடர்பில்லை என கருத்து வெளியிட்டிருக்கிறார். அது ஏன்? சிக்குவாரா முன்னாள் சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினர், நாமலின் நண்பர்?
  21. அது சரி, இதை வெளியிட எதற்காக இவ்வளவு காலம் காத்திருந்தார் இவர்? மஹிந்தவோ, புலிகளை அழித்தது தான் என்று பெருமையடிக்கிறார், கோத்தாவோ, போரை நிறுத்துமாறு சர்வதேசம் எங்களுக்கு அழுத்தம் கொடுத்தது, இருப்பினும் அதற்கு அடிபணியாது நாமே புலிகளை முற்றாக அழித்து போரை முடிவுக்கு கொண்டு வந்தோம் என்கிறார். அதை விட, தான் நம் தலைவரை நாயைப்போல் இழுத்து வந்ததாக வேறு கூறுகிறார். என் தலைவன் நிழலைக்கூட அவர் உயிருடன் இருக்கும்வரை நெருங்க முடியவில்லை இவர்களால். இன்று இல்லாவிடினும் என்றோ ஒருநாள் இவர்கள் வாயாலேயே அது வெளிவரும். மிஸ்ரர் பொன்சேகா! நீங்கள் இன்னும் சொல்லுங்கள், நிறைய சொல்லுங்கள், நாங்கள் கேட்ப்பதற்கு தயாராகவே இருக்கிறோம். உங்கள் கருத்துக்களுக்கு அவர்களும் பதில் சொல்லத்தானே போகிறார்கள். மக்கள் தம்மை மறந்துவிடக்கூடாது, அதே நேரம் தமது ஊழல்களை மறைக்கவும் கனவிலும் புலிகளை நானே அழித்தேனென புலம்புகிறார். பிரபாகரனை அழித்தேன் என்று யாரும் துணிந்து கூறவில்லை, கூறவும் முடியாது.
  22. ஏங்கோ அவ்வளவு தூரம் போறீங்கோ. நம் இனம் விழுந்து, எழுந்து நடமாட துடித்திருக்கும்போது, அந்த இனத்தின் பிரதிநிதி என்று பினாத்திக்கொண்டு திரிபவர், அவர்களை அழித்தவர்களோடு கிறிக்கெற் விளையாடினார். கேட்ட போது, அவர்களோடுதான் பேச்சு நடத்த வேண்டும் ஆகவே நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் நோக்கில் விளையாடினேன் என்று விளக்கம் கொடுத்தார். நமது விடுதலைக்காய் போராடி இறந்த நம் வீரருக்கு வணக்கம் செலுத்த முடியவில்லை, இவரோ பொப்பிப்பூ குத்திக்கொண்டு பாராளுமன்றம் போய் நம் இனத்தை அழித்த இராணுவத்திற்கு தம் மரியாதையை காட்டினார். சிங்கள மக்களோடு வாழ்வது தனது அதிஷ்டம் என்று வேறு பெருமை பாராட்டினார். ஆனால் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனின் மகன்கள் சிங்கள பெண்களை மணந்ததால், சிங்களச்சம்பந்தி என்று வாய்க்கு வாய் தூற்றிக்கொண்டு திரிந்தார். தனது மகன் சிங்களப்பெண்ணை மணந்து, தான் சிங்களசம்பந்தியான போது அமைதியாக இருந்துவிட்டார். எங்கள் வீட்டில் நடந்தால் போற்றுவோம், அடுத்தவர் வீட்டில் நடந்தால் தூற்றி ஏளனம் செய்வோம்.
  23. எதற்கு, கடத்துபவர்கள் பாதுகாப்பாக கொண்டு செல்வதற்காகவா? இத்தனை சட்ட விரோத செயல்களுக்கும் காரணமானவர்களே போலீசார்தானே! போதைப்பொருளுடன் போலீசார் கைது, கொலையில் போலீசார் கைது, ஊழல், கொள்ளை, கடத்தல் போன்றவற்றுடன் போலீஸ் அதிகாரிகள் தொடர்பு. இவர்கள் எப்படி அவற்றை தடுக்க முடியும்? நாமாக நம் வளங்களை பாதுகாக்காவிடின் இவர்கள் அழிக்கவென்றே அனுப்பப்பட்டவர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்களா? இவற்றை ஊக்குவிப்பதன்மூலமே அவர்கள் மேலதிக வருமானம் ஈட்டுகிறார்கள்.
  24. காதலனா, கள்வனா அவன்? இப்போவெல்லாம் எல்லாவற்றிலும் புதுமை! கலியாணம் செய்தாலும் வரதட்ஷணை என்கிற பெயரில் கொள்ளையிடுகிறார்கள். ஆண்கள் மட்டுமா? இப்போ, பெண்கள் கலியாணம் என்கிற பெயரில் செய்துவிட்டு வரதட்ஷணை கொடுமை, வீட்டு வன்முறை என்கிற பெயரில் கொள்ளையடிக்கிறார்கள். காதலும் வேண்டாம், கலியாணமும் வேண்டாம் என்று ஒதுங்கிக்கொள்கிறார்கள் சில இளையவர்கள்.
  25. அவர் அரசியலுக்கு வந்ததே தனக்கு பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்கே. நாளொரு சிக்கலில் மாட்டுப்படுவதும், வலிய பிரச்சனைகளை வாங்கி வாயை கொடுப்பதும், அவருக்கு வக்காலத்து கொடுப்பவர்களை புகழுவதும் இவரது பிழைப்பு. இவரை நம்பி தமிழர் இல்லை. அவருக்கே தான் ஏன் பாராளுமன்றம் போனேன் எனத் தெரியவில்லை. தலைவரின் பெயரை உச்சரித்தால் வாக்குகள் விழுமென நினைத்து தேவையில்லாமல் தலைவரின் பெயரை இழுத்து தனது தவறுகளை, முட்டாள்தனத்தை மறைக்கப்பார்க்கிறார். இவரைப்பற்றி நாம் அதிகம் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை. அவரின் கோமாளித்தனத்தை ரசிப்போம். வெகுவிரைவில் எல்லோராலும் கைகழுவி விடப்படுவார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.