Jump to content

satan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9063
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Everything posted by satan

  1. எதை கொடுத்தாலும் இவர்கள் பேரம் பேசப்போவதில்லை. சும்மா பழக்க தோஷத்தில பேசுறார் விடுங்கோ....
  2. கொஞ்சம் தெளியிற மாதிரி இருக்கு! கொளுத்தி விட்டிட்டு நல்லாய் எரியுமட்டும் காத்திருக்கிறார், ஆனால் அது அணைந்து விட்டது.
  3. சரி இருவரையும் சொல்லி இருப்பார் என்று இப்போதைக்கு எடுத்துக்கொள்வோம் மீரா வரும்வரை. மீரா......! விரைந்து வந்து விளக்கம் தரவும். இல்லையேல், விபரம் தெரியாமல் ஆளாளுக்கு ஒரு விளக்கம் கொடுக்க ஆரம்பிக்கப்போகிறார்கள்.
  4. இன்றைக்கு களம் சூடு பிடிக்கப்போகுது. மீராவின், கோத்துவிட்ட சிறியரின் தலையும் சேர்ந்து உருளப்போகுது. விபரீதம் புரியாமல் சிங்கத்தின் வாலை பிடித்து இழுத்து விட்டார்கள். பாவம் மீரா! சுட்டிக்காட்டியது சச்சியரை.
  5. இதற்குத்தான் மக்களிடம் வாக்கு பெற்று நேரம் செலவு செய்கின்றனர். சாள்சும், சிறீதரனும் கலந்து பேசி முறைப்பாட்டாளித்திருப்பார்களோ? இவர்களுக்கு குடைச்சல் கொடுப்பவர்கள் சி. வி. கே. சிவஞானம், சுமந்திரன், சத்தியலிங்கம். சத்தியலிங்கம் தன்னை தேசியபட்டியலில் இணைத்த சுமந்திரனுக்கு நன்றிக்கடன் ஆற்றுகிறார். சுமந்திரன் ஒருவரை அணைப்பது; அவர்களை வைத்து தனது காரியங்களை நிறைவேற்றுவது, அதன்பின் விரட்டுவது.
  6. கடைசியில், தோத்துப்போன எல்லாப்பிரிவினரும் மதத்துக்கு சேறடித்து தம்மை மறைக்க முனைகிறார்கள். அந்த மதத்துக்குரிய பெயரை வைத்துவிட்டால் மட்டும் அந்த மதத்துக்கு உரியவர்கள் ஆகிவிட மாட்டார்கள். அதன் போதனையின்படி, அவர்களின் கடவுளை மட்டும் நம்பி வழிபடவேண்டும், தன்னைப்போல தன் அயலானையும் நேசிக்க வேண்டும், பணம் புகழ் பொருள் பதவியை கடவுளாக நேசித்து மற்றவரை விரட்டி, அவர்களின் உரிமைகளை பறித்து வாழ்வது கிறிஸ்தவம் கிடையாது. ஆகவே சுமந்திரனை மதத்தின் பேரால் தூற்றுவதும் அல்லது போற்றுவதும் அவரின் தவறுகளை மறைப்பதும் ஏற்புடையதல்ல, அது கிறிஸ்தவத்தை பழித்துரைப்பது போலாகும். தங்கள் சுயநலத்திற்க்கு மதத்தை பாவிக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன் உடுவில் கிறிஸ்தவ பெண்கள் கல்லூரியில் அதிபர் மாற்ற பிரச்சனை ஏற்பட்டு, அக்கல்லூரியின் மாணவிகளை தெருவில் விட்டு கதவுகளை மூடிய சம்பவத்தின் பின்னால் சுமந்திரன்தான் என குற்றச்சாட்டு இருக்கிறது. அவருக்கு மதம், சமாதானம், ஒற்றுமை என்பது எட்டாப்பொருத்தம். தயவு செய்து உங்களின் காழ்ப்புணர்ச்சியில் சுமந்திரனை புனிதனாக்க முயற்சிக்க வேண்டாம். சுமந்திரன் எங்கே போனாலும் பிரச்சனை ஏற்படுத்தாமல் திரும்ப மாட்டார். அது அவரின் கூடப்பிறந்த இயல்பு. அவரை குற்றம் சாட்டுவதை விடுத்து அவரை விட்டு விலத்தி நடத்துவதே புத்திசாலித்தனம். ஒருவரை எல்லோரும் பேசுகின்றனரென்றால்; அவர் ஒரு சமூக நலன் கொண்டவராக அதற்காக உழைப்பவராக இருப்பார் அல்லது சமூகத்தை தன் சுயநலனுக்காக சீரழிப்பவராக இருப்பார்
  7. ஆல் போல் தழைத்து, அறுகுபோல் வேரூன்றி, பதினாறும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் செழித்து, பார் போற்ற வாழ மணமக்களை வாழ்த்துகிறேன். அறியத்தந்த பாஞ் அவர்களுக்கும் நன்றிகள் சேர்த்து.
  8. அழைப்பிற்கு நன்றி சிறியர். இதைத்தானே நாங்கள் தொடர்ச்சியாக கூறி வருகிறோம். சிலர் நாங்கள் தேவையில்லாமல் குறைகூறுவதாக குற்றம் சாட்டுகின்றனர். அவரை குறை கூற எங்களுக்கு என்ன அவசரம்? அவரோடு வாய்க்கால் வரம்புச்சண்டையா எங்களுக்கு ?தேவையில்லாத கம்பு செருகி அவரை மறைக்கிறார்கள். அவர் யாராகவும் இருந்துவிட்டு போகட்டும், ஆனால் ஒரு இனம், அதற்காக இழக்க வேண்டியதெல்லாம் இழந்து ஏதுமற்று நிற்பவர்களின் உரிமையை தாரைவார்த்துக்கொடுக்க இவருக்கு என்ன அருகதை? ஆதாரத்தோடு எழுதினால், பந்தி பந்தியாக அலட்டல் செய்கிறோமென்கிறார்கள். இதிலிருந்தே இவர்களும் அப்படியானவர்கள் என்றே புரிகிறது. இவர்களை திருத்த முடியாது, மாறவும் தயாரில்லை. மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்!
  9. இதை சொல்ல வெட்கமில்லை? அறுபத்தொன்பது லட்ஷம் மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற அவரை, சிங்களத்தின் கதாநாயகர்களை, புலிகள் ஆட்சியிலிருந்தே விரட்டியுள்ளனர். அப்போ, நீங்கள் பெற்ற வெற்றி, கொண்டாட்டம் எல்லாம் புஷ்வாணமே! உங்களை விட புலிகள் கெட்டிக்காரர். அறுபத்தொன்பது லட்ஷம் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவன் நான், ஒரு சிறு தொகையினரின் போராட்டத்தால் நான் ஆட்சி விலகமாட்டேன் என்று விதண்டாவாதம் பண்ணிக்கொண்டு இருந்தவர், ஏன் சொல்லாமல் கொள்ளாமல் தப்பியோடினார்? ஏன் அந்த மக்கள் அவரை காப்பாற்ற வில்லை? உங்களை நீங்கள் முட்டாளாக்குகிறீர்கள். போராட்டம் நடத்தியவர்களுக்கு தெரியும் யார் போராட்டம் நடத்தியவர்கள் என்று, அவர்களை முட்டாளாக்க முடியாது உங்களால்.
  10. 2010 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடந்தபோது இவர் தமிழரசுக்கட்சியில் நுழையவில்லை என நினைக்கிறன். ஆகவே அவர் அதைப்பற்றி கதைக்கத்தேவையில்லை. சரி, இருந்திருந்தாற் கூட யாருக்கு வாக்களித்திருப்பார்? அன்று தேர்தலில் நின்ற முக்கியமானவர்கள் மஹிந்தவும் சரத்பொன்சேகாவுமே. அப்படியென்றால் இவர் மஹிந்தவை தேர்வு செய்திருப்பாரா? பகிஷ்கரித்திருப்பாரா? அல்லது தானே தேர்தலில் நின்றிருப்பாரா? அதையும் தெரிவித்திருக்க வேண்டுமே? கடந்த ஜனாதிபதி தேர்தலில் எல்லா கட்சிகளையும் தனியாக சந்தித்தார், ஆனால் அனுராவை சந்திக்கவில்லை. அவர் தேர்தல் உறுதி மொழியில் இனப்பிரச்சினையை பரிசீலிப்பதாக சொன்னாராம், அதன்படி செய்வார் என்று ஏற்கெனவே சொன்னார். ஆனால் சஜித்தை ஆதரித்தார். இப்போ, பத்தாம் ஆண்டு தேர்தலைப்பற்றி பேசுறார். அரசாங்கம் ஒரு அழைப்பு தங்களுக்கு விடுத்தால்; கட்சி பரிசீலித்து முடிவெடுக்கும் என்பவர், தனியாக ஜனாதிபதியை, வெளிநாட்டுத்தூதுவர்களை சந்திப்பதும், தனியாக முடிவுகளை எடுப்பதும், பத்திரிகையாளர்களை சந்திப்பதும் சரியா? எல்லா கட்சிகளும் சுமந்திரனைப்பற்றி பேசுகிறார்களாம். இவர் தேர்தல் மேடைகளில் யாரைப்பற்றி பேசுகிறார்? மேடையில் ஏறினாரா, தான் சாதித்த காரியங்களை மக்கள் முன் எடுத்துரைப்பதும் இனிமேல் தான் என்ன செய்ய இருப்பதாக உள்ளதை அறிவித்து வாக்கு கேட்கலாமே, அதைவிட்டு அவர்களுக்கு வாக்குபோடவேண்டாம் என்று சொல்லவும் மற்றவர்களை விமர்சிக்கவும் இவர் யார்? சங்கு சின்னத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டது தவறு என்று சாபம் இட்டவர், இப்போ சங்கு சின்னத்தை திருடி விட்டார்களாம். சங்கு சின்னத்துக்கும் இவருக்கும் என்ன தொடர்பு? இவர் ஏன் கூக்குரலிடுகிறார்? தேர்தல் ஆணையமே அனுமதியளித்திருக்கிறது. அது அவர்களின் பிரச்சனை, இவர் ஏன் பயப்படுகிறார்? எதை எதனோடு ஒப்பிட்டு பேசுவது என்றே தெரியாத மனிதர். ஊரில் பிள்ளை பிறக்காவிட்டால் தங்களை குற்றம் சுமத்துகிறார்களாம். இது என்ன ஒப்புவமை என்றே புரியாமல் உளறுகிறார்? பதவி, ஆசனம் இல்லையென்று கட்சியை விட்டு விலகுகிறார்களாம். இவருக்கு அது தொடர்ந்து கிடைப்பதால் அவர் தொடர்ந்து இருக்கிறார். இல்லையெனில் இவரும் கிளம்பியிருப்பார். பேச்சாளர் பதவியையே விடாமல் கட்டிப்பிடிச்சுக்கொண்டிருக்கிறார். இப்போ பிரதம மந்திரி பதவி வருமென காத்திருக்கிறார் பதவி ஆசை இல்லாதவர். கட்சியோடு ஆலோசிக்காமல் ஓடிப்போய் தனியாக சந்திப்பதும், பேச்சுவார்த்தை நடத்துவதும் எப்படி சாத்தியமாகும்? தமிழருக்கு துரோகம் செய்து அவர்களை அடிமைப்படுத்துவது இவரது லட்சியம். அதற்காக எல்லா சிங்கள தலைவர்களும் தன்னை ஆதரித்து தனக்கு தகுந்த பதவி தருவார்கள் என்று ஓடிப்போய் முட்டுக்கொடுப்பது. அதற்கு இவருக்கு என்ன உரிமை இருக்கிறது? மக்களோடு சேர்ந்து போராடினாரா? உறவுகளை இழந்தாரா? உடைமைகளை இழந்தாரா? அல்லது அந்த இடத்தில வாழ்ந்தாரா போராட்ட காலத்தில்? இளைஞர் இரத்தம் சிந்த இவர் பதவி பெறுவாராம். தையிட்டியில் விகாரை கட்டும்போதுகஜேந்திரன் கட்சியினர் எங்கே போனார்கள் என்று கேட்கிறார், இவர் எங்கே போனார்? தொடர்ந்து எங்களுக்கே மக்கள் வாக்களித்து வந்தனர் என்கிறார், மக்களுக்காக இவர் என்ன செய்தார்? ஒருவருடத்திற்கு முதல் தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு அளித்தபோது, ஆனோல்ட் தன்னை அழைக்கவில்லை அதனால் தான் நீதிமன்றம் போகவில்லை, அழைத்திருந்தால் தான் போய் தடையுத்தரவை இல்லாமற் செய்வித்திருப்பேன் என பேட்டி கொடுத்தவர், தாங்கள் தானாம் மக்கள் பிரதிநிதி என்கிறார், கட்சியை கையகப்படுத்தி வைத்துக்கொண்டு. இவர் எப்போ வந்தார் கட்சிக்குள்? எதை இழந்தார் கட்சிக்காக? பதவி, ஆசனம், சுகபோகங்களை அனுபவிக்கிறார். ஆனால் கட்சிக்காக, மக்களுக்காக சிறைசென்றவர்கள் வெளியே.காணிகள் விட்டது மக்களின் தொடர் போராட்டம், பொதுநல வழக்குகளினாலேயே. இவர் அவர்களுக்காக ஆஜர் ஆன சட்டத்தரணியே. இவரை நம்புபவர்கள், இவரைப்பற்றி தெரியாதவர்களாயிருப்பர் அல்லது இவரைபோன்றவர்களே. இவர் சிங்களத்தோடு வாழ்வது என் அதிஸ்ரம், ஆயுதப்போராட்டத்தை நான் ஆதரிக்கவில்லை என்று பேட்டி கொடுத்தபோதே கட்சியினர் தங்கள் எதிர்ப்பை காட்டினர். அதற்கு சம்பந்தர் தான் சுமந்திரனுக்கு வக்காலத்து வாங்கி கட்சி உறுப்பினர்களை அடக்கினார். அப்பவே இவரை கட்சியிலிருந்து வெளியேற்றி இருக்க வேண்டும். கட்சியின் உறுப்பினர் அவர்களின் அனுமதியின்றி கட்சிக்கு எதிரான கருத்துக்களை சொல்ல இவருக்கு என்ன உரிமை இருக்கிறது? ஒன்றல்ல இரண்டல்ல பலமுறை தனது கருத்துக்களை கட்சியின் ஆலோசனையின்றி உளறியிருக்கிறார். கட்சி நடவடிக்கை எடுக்க தவறியதே இன்று இவர் கட்சியை தனது ஏகபோகமாய் கருதி எல்லோரையும் அடக்கியாள்வதும், கருத்துக்களை வெளியிடுவதும் பின்னர் கட்சிக்குப்பின்னால் ஒளிந்து கொள்வதும். இப்போ இவர்கள் (தாடியர், சுமந்திரன்) தொடர்ந்து அனுராவின் ஆட்சியில் பதவியில் அமர்ந்து முட்டுக்கொடுக்க தூது விடுகிறார்கள், ஆனால் யாரும் கவனத்தில் எடுப்பதாக தெரியவில்லை.
  11. ம் ..... பிரதேசவாதத்தை கிளப்பி வாக்குபறிக்க நினைக்கிறார். முதலமைச்சராக இருந்தபோதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வக்கில்லை, இப்போ யாரை குறை கூறுகிறரர்? சிறையிலிருந்தவண்ணம் தேர்தலில் வெற்றி பெற முடியுமென்றால், அந்த மக்களின் தேவைகளை ஏன் பூர்த்தி செய்ய முடியவில்லை? பிரதம மந்திரி பதவியும் உங்களுக்கு தரப்படும், அதை வைத்து உங்களுக்கு ஒரு பியூனை கூட நியமிக்க முடியாது.
  12. பிரதம மந்திரி, ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருவதற்காக திறந்திருக்கிறார்கள் போலும், பின்னர் மூடப்படும். மக்கள், தங்கள் நிலங்களுக்கு போகமுடியாதென்றால் வீதி எதற்கு திறக்கப்படவேண்டும்?
  13. எங்கள் நாட்டில் இது போன்ற சம்பவம் நடந்திருக்க வேண்டும், தாக்கியவர்கள் இரவோடிரவாக காணாமல் போகப்பண்ணப்பட்டிருப்பார்கள்.
  14. இந்தப்பதிவு சிறியருக்காக இணைத்தது போலிருக்கே. இப்போ படம் கிளியரா தெரிகிறதா சிறியர்?
  15. தமிழரசுக்கட்சியின் நரி, சி. வி. கே .சிவஞானம் தேர்தல் பயத்தில் உளறுறார். இளைஞரை ஆயுதம் தூக்க வைத்து சந்ததியை அழித்த கூட்டம். தாங்களே வீட்டை உடைக்கிறது, உடைத்த பின் மக்கள் கட்டியெழுப்ப வேண்டுமாம், தாங்கள் குடியேறியிருந்து பிச்சுக் கொட்ட. முதலில் சுமந்திரன் வீட்டை விட்டு வெளியேறட்டும்.
  16. இப்படியே எல்லோரும் வெளியேறினால் யாருக்கு ஆட்சி செலுத்துவது? அதோடு வெளியேறுபவர்கள் எங்கே செல்வது? கோழைத்தனமாக ஓட அந்தப்பெண் விரும்பவில்லைபோலும். உங்கள் ஏக்கம் புரிகிறது சிறியர், எதற்கும் உங்கள் வீட்டுக்காரியிடம் இந்தக்கேள்வியை கேட்டுப்பாருங்கள், நன்றாக உங்களுக்கு புரியும்படி விளக்குவார்.
  17. தங்கள் குற்றத்தை மறைக்க கூட்டுச் சேர்ப்பதும், எதிரிகளுக்கு உதவி செய்வதும், சம்பந்தப்பட்ட நாடுகளை தனிமைப்படுத்துவதும் உதவிகளை தடுப்பதும் குற்றம் சாட்டுவதும் எதிரிகளின் தந்திரம். இவர்களுக்கு அழிவு சீக்கிரத்தில் வராது, வந்தால் இவர்களால் எழுந்திருக்க முடியாது.
  18. அப்படி மேல வந்திருந்தா; தமிழரோட ஒரு போர் தொடங்கியிருப்பினம், அந்த திமிர்தான் கைநீட்டிக்கொண்டும் கெஞ்சிக்கொண்டும் திரிகிறார்கள்.
  19. சுமந்திரன், வதந்திகளை கசிய விட்டு வாக்கு வங்கியை உயர்த்த முனைகிறார். வெட்கம் இல்லாமல் சிறு பிள்ளைகள் போல் சில பொய்களை சொல்வார். அனுரா தன்னை பிரதம மந்திரி பதவியேற்க முன்பு அழைத்தவராம், இப்போது அதற்கான அழைப்பு வருமென காத்திருக்கிறார். அவரின் பல வழக்குகளை தான் தான் கையாள்கிறாராம், இப்படியாக பொய்களை சொல்லி தன்னைத்தானே தாழ்த்திக்கொள்கிறார். இவருக்கு பின்னால் போனவர்கள் ரொம்ப நொந்து போயுள்ளார்கள். சேனாதிராஜா, ஆனோல்ட், சிறிதரன், இவர்களெல்லாரையும் தனது சுயநலத்திற்காக பயன்படுத்தினாரே தவிர உண்மையில், அவர்களை பயன்படுத்தும் போதே அவர்களுக்கும் சேர்த்தே குழி பறித்திருந்தார். சத்தியலிங்கம் சி. வி .கே. சிவஞானம் அவர்களுக்கும் தருணம் வரும் காத்திருப்போம்.
  20. அவர்கள் மத்திய கிழக்கில் செய்ததும் அதுதானே. தனது நன்மைக்காக அந்த நாடுகளுக்குள் புகுந்து பயங்கரவாதத்தை உருவாக்கி சின்னா பின்னமாக்கியதே அமெரிக்காதான்.
  21. எங்கள் குழந்தைகள் யுத்தத்தின் பின் குடும்பமே அறியாமல் அனாதைகளாயினர். அங்கு, போரில் ஈடுபடாத குழந்தைகள் தான் இருக்கிறார்கள் என்று தெரிந்தும், பள்ளிக்கூடத்தில் குண்டுகளை பொழிந்து மரணத்தை ஏற்படுத்தினர், அவயவங்களை துண்டித்தனர். தாய் இறந்து விட்டாள் என்பதை கூட உணர முடியாத மழலை தாயில் பாலைத் தேடியது. இவைகள் எல்லாம் மறக்கக்கூடியதா? எங்களால் எதுவும் செய்ய முடியாத நிலையில், இந்த தாக்குதலில் இறந்த, காயமடைந்த, தவிக்கிற மக்களுக்கு எங்கள் கவலையை மட்டுந்தான் தெரிவிக்க முடியும். நீதியின் குரலை அடக்குபவர்கள் நடத்தும் தாக்குதல்கள், சொல்லும் காரணங்கள் எல்லாம் ஒரே மாதிரியாகவே இருக்கும். அவர்கள் ஒருவருக்கொருவர் உதவுகின்றனர், பயிற்சி அளிக்கின்றனர், அப்பாவிகளையும் குழந்தைகளையும், பெண்களையும், வயோதிபர்களையும், பெலவீனமானவர்களையும் தாக்கி கொன்று பழி தீர்க்கின்றனர். இவர்கள் கோழைகள்!
  22. பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் யோசனை இல்லாதவர்கள், இவர்களால் வெளிநாட்டுக்கு மக்களை அனுப்ப முடியுமென்றால்; ஏன் இவர்கள் இங்கிருக்க வேண்டும்? மக்களின் ஆசைகளை அறிந்த போக்கிரிகள், அதை வைத்து பிழைத்துக்கொள்கிறார்கள். எவ்வளவு தான் நடந்தாலும் அறிந்தாலும் மக்களின் ஆசைகள் மாறுவதில்லை.
  23. முகவரி இல்லாத, தலைவன் இல்லாத வீடு, அதற்கொரு விஞ்ஞாபனம்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.