Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 06 JUL, 2025 | 11:05 AM (எம்.வை.எம்.சியாம்) நாட்டில் தற்போதுள்ள சட்டத்துக்கு அமைய 16 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளை விரும்பியோ விரும்பாமலோ பாலியல் உடலுறவில் ஈடுபட்டால் அது பாலியல் துஷ்பிரயோகமாகவே கருதப்படும். இதற்காக 10 வருட கால சிறைத்தண்டனையும் விதிக்கப்படுமென கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியும் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளருமான ரங்க திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை மன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாட்டில் பிரஜை ஒருவர் சுதந்திரமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் வாழ்வதற்கு போதுமான அனைத்து சட்டங்களும் உள்ளன. நான் கடந்த 20 வருடங்களாக நீதிபதியாக கடமையாற்றினேன். இந்த புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னரே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டேன். எனது தொழில் துறை அனுபவத்தை அடிப்படையாக கொண்டு பார்க்கும் போது நாட்டில் உள்ள சட்டங்கள் தொடர்பில் பொதுமக்களிடத்தில் போதுமான அறிவில்லை. உதாரணமாக நாட்டில் தற்போதுள்ள சட்டத்துக்கு அமைய 16 வயதுக்கு கீழ் உள்ள பெண் பிள்ளை விரும்பியோ விரும்பாமலோ பாலியல் உடலுறவில் ஈடுபட்டால் அது பாலியல் துஷ்பிரயோகமே கருதப்படும். உதாரணமாக 17 அல்லது 18 வயதுடைய ஆண் பிள்ளை 15 வயதுடைய பெண் பிள்ளையுடன் நெருங்கி பழக்கம் கொள்வதாக நினைத்து கொள்வோம். இந்த காலப்பகுதியில் இயற்கையாகவே அவர்களது உடல் ரீதியாக மாற்றங்கள் ஏற்படும். இதனால் அவர்கள் சில சந்தர்ப்பத்தில் பாலியல் உடலுறவில் ஈடுபடலாம். ஒருவேளை இது இருவரின் விரும்பத்தின் பேரிலேயே இடம்பெற்று இருக்கலாம். விருப்பத்தின் அடிப்படையில் பாலியல் உடல் உறவில் ஈடுபட்டாலும் அது பாலியல் துஷ்பிரயோகமாகும் என எமது நாட்டில் உள்ள சட்டம் சொல்கிறது. இதற்காக 10 வருட கால சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். எமது பிள்ளைகள் அதிகம் இந்திய சினிமாவின் ஹிந்தி திரைப்படங்களையே பார்க்கிறார்கள். இவர்கள் காதலிக்கும் பெண் பிள்ளையை கூட்டிக்கொண்டு ஓடுவதை வீரமாக கருதுகிறார்கள். பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் போது அவர்களிடத்தில் இந்த சட்டம் தொடர்பில் வினவுவேன். ஆனால் அவர்கள் தெரியாது எனக் கூறுவார்கள். அப்போதே அது தவறு என விளங்கிக் கொள்வார்கள். சட்டம் தொடர்பில் தெளிவின்மையே இதற்கான காரணம். விருப்பமில்லாமல் வலுக்கட்டாயமாக நடப்பதை மாத்திரமே இங்கு தவறு என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த விடயம் பிள்ளைகளுக்கு பாடசாலை மட்டத்தில் இருந்து தெளிவுப்படுத்தப்பட வேண்டும். தண்டனை வழங்குவதற்காக மாத்திரம் இந்த சட்டம் உருவாக்கப்பட்டது அல்ல. 16 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகள் வயது வந்த ஆண்களினால் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாவதை தடுப்பதற்காகவே இந்த சட்டம் உருவாக்கப்பட்டது என்றார். https://www.virakesari.lk/article/219277
  2. மனிதர்களுடையது என்பது பெரும்பாலும் உறுதி தான், ஆனால் யாருடையது என்பது மிகச் சிக்கலான கேள்வி? டிஎன்ஏ பரிசோதனைகள் மூலமே அடையாளம் காணலாம் என நினைக்கிறேன்.
  3. பட மூலாதாரம், BBC SINHALA கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 5 ஜூலை 2025, 10:55 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் யாழ்ப்பாணம் செம்மணி – சிந்துப்பாத்தி பகுதிகளில் கண்டறியப்பட்ட மனிதப் புதைக்குழியில் சிறுவர்களின் எலும்புகள், பொம்மைகள், புத்தகப் பைகள் கிடைத்துள்ள நிலையில், இவை இறுதி யுத்தக் காலத்தில் ராணுவத்திடம் சரணடைந்த 29 குழந்தைகளுடையதா என்ற சந்தேகத்தை வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் எழுப்பியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டை இலங்கை ராணுவம் மறுத்துள்ளது. குழந்தைகளின் எலும்புக்கூடுகள் இலங்கையில், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைக்குழியிலிருந்து இதுவரை 40 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 34 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, சட்ட மருத்துவ அதிகாரியின் கண்காணிப்பில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மனிதப் புதைக்குழியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர் எஸ்.நிரஞ்ஜன் தெரிவிக்கின்றார். அத்துடன், மனிதப் புதைக்குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சாட்சிப் பொருட்கள் வழக்கு எண்களின் அடிப்படையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். அதேவேளை, குழந்தையொன்றின் மனித எலும்புக்கூடொன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் இரண்டு குழந்தைகளின் எலும்புக்கூடுகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள குழந்தைகளின் எலும்புக்கூடுகளை தோண்டி எடுக்கும் நடவடிக்கை தொடர்ந்து வருவதாக வழக்கறிஞர் எஸ்.நிரஞ்ஜன் குறிப்பிடுகின்றார். படக்குறிப்பு, வழக்கறிஞர் எஸ்.நிரஞ்ஜன் சரணடைந்த 29 குழந்தைகள் கொல்லப்பட்டனரா? சித்துபாத்தி மனிதப் புதைக்குழியிலிருந்து சிறார்களின் எலும்புக்கூடுகள் தொடர்ச்சியாக தோண்டி எடுக்கப்பட்டு வருகின்ற பின்னணியில், இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் தமது பெற்றோருடன் ராணுவத்திடம் சரணடைந்த 29 குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா தெரிவிக்கின்றார். இவ்வாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சிறார்களின் பெயர் விபரங்கள் அடங்கிய ஆவணமொன்றை லீலாதேவி ஆனந்த நடராஜா தயாரித்துள்ளார். இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சிறார்களில் பெரும்பாலானோர் இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காணாமலாக்கப்பட்ட சிறார்களுக்கு இன்று வரை என்ன நேர்ந்தது என்பது தெரியவில்லை என அவர் குறிப்பிடுகின்றார். படக்குறிப்பு, வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா இந்த நிலையில், சித்துபாத்தி மனிதப் புதைக்குழியிலிருந்து சிறார்களின் எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்படுவதுடன், அந்த இடத்திலிருந்து சிறுவர்கள் பயன்படுத்தும் புத்தகப் பை, பொம்மை, பாதணி, ஆடை என்ற வகையிலான சில சாட்சிப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சிறார்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தை காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் வெளியிடுகின்றனர். அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை ராணுவம் முழுமையாக நிராகரிப்பதாக இலங்கை ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். பெற்றோருடன் ராணுவத்திடம் சரணடைந்த 29 குழுந்தைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,SRI LANKA ARMY படக்குறிப்பு, இலங்கை ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே எலும்புகளுக்கு இறுதிச் சடங்கா? டி.என்.ஏ பரிசோதனை செய்வது பற்றி கேள்வி எழுப்பிய போது, ''டி.என்.ஏ பரிசோதனை செய்து அவற்றை சேமித்து வைக்க வேண்டும் என்பதில் எனக்கும் மாற்று கருத்து இல்லை. தாய், தந்தையருடன் சரணடைந்த 29 குழந்தை பிள்ளைகள் எங்கேயோ ஒரு இடத்தில் உயிர் வாழ்ந்தால், அவர்களை இனங்காண்பதற்கு டி.என்.ஏ பரிசோதனை தேவை. இது எனது தனிப்பட்ட கருத்து. எலும்புக்கூடுகளை டி.என்.ஏ பரிசோதனை செய்து, நாங்கள் அவர்களுக்குரிய இறுதி சடங்குகளை செய்வதற்கான தேவை எங்களுக்கு ஏற்படவில்லை. அந்த எலும்புக்கூடாக்கியவர்கள் யார்? அவர்களுக்கு என்ன தண்டனை?. அதில் தான் எங்களுக்கு அக்கறை இருக்கின்றதே தவிர, டி.என்.ஏ பரிசோதனை செய்து அவர்களுக்கு கிரியைகள் செய்ய வேண்டிய தேவை இல்லை. இதை செய்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். அதுதான் மீள் நிகழாமைக்கான ஒரேயொரு வழி. குற்றம் செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கப்பட வேண்டும்.'' என லீலாதேவி ஆனந்த நடராஜா கூறினார். டி.ஏன்.ஏ பரிசோதனையை செய்ய வேண்டாம் என தான் கூறவில்லை என தெரிவித்த அவர், நீதிக்கான பயணத்தில் எந்தவித வேக குறைப்பும் இடம்பெறக்கூடாது என்றார். சித்துபாத்தி புதைக்குழிக்கு கடும் பாதுகாப்பு இலங்கையில் சுமார் நான்கு தசாப்த காலப் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள சுமார் 20திற்கும் அதிகமான மனிதப் புதைக்குழிகளை விடவும், சித்துபாத்தி மனிதப் புதைக்குழி அகழ்வு பணிகளுக்கு கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. யாழ்ப்பாணம் பொலிஸாரின் நேரடி பாதுகாப்புக்கு மத்தியில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை, குற்றப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த பகுதிக்குள் அனுமதிக்கப்பட்ட தரப்பினரை தவிர, ஏனையோருக்கு செல்ல யாழ்ப்பாணம் நீதிமன்றம் முழுமையாக தடை விதித்துள்ளது. குறிப்பாக ஊடகவியலாளர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரமே செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன், ஏ-9 வீதியில் சித்துபாத்தி மனிதப் புதைக்குழிக்கு முன்பாக வாகனங்களை நிறுத்தவும் பொலிஸார் தடை விதித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. அதேவேளை, இலங்கை மின்சார சபையின் உதவியுடன் மின்சார இணைப்பு எடுக்கப்பட்டு, இரவு வேளையிலும் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிந்தது. இந்த பகுதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் சந்தர்ப்பங்களில் முழு நேரமாக பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணிகளும் மேற்பார்வை செய்து வருவதை காண முடிகின்றது. யாழ்ப்பாணத்தின் சர்ச்சைக்குரிய மனிதப் புதைக்குழியான செம்மணி மனிதப் புதைக்குழிக்கு அருகிலேயே இந்த சித்துபாத்தி மனிதப் புதைக்குழியும் கண்டுபிடிக்கப்பட்டு, அகழப்பட்டு வருகின்றது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரில் 1990ம் ஆண்டு காலப் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மக்கள், ராணுவத்தினால் கொலை செய்யப்பட்டு செம்மணி பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக அப்போதைய ராணுவ வீரர் ஒருவரின் தகவல் வழங்கப்பட்ட நிலையில் அந்த பகுதி தோண்டப்பட்டது. இந்த நிலையில், அங்கிருந்து பல மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதுடன், அந்த நடவடிக்கை ஒரு கட்டத்தில் இடைநிறுத்தப்பட்டது. இவ்வாறான பின்னணியில், தற்போது செம்மணியை அண்மித்த சித்துபாத்தி இந்து மயானத்தில் மற்றுமொரு மனிதப் புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டு தோண்டப்பட்டு வருகின்றது. இந்த மனிதப் புதைக்குழியிலிருந்து சிறுவர்களுடையது என சந்தேகிக்கப்படும் மனித எலும்புக்கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. செம்மணி பகுதியிலுள்ள பழைய மனிதப் புதைக்குழி மீண்டும் தோண்டப்படுமா என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மனிதப் புதைக்குழியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர் எஸ்.நிரஞ்ஜனிடம் பிபிசி தமிழ் வினவியது. அவ்வாறான எண்ணம் இதுவரை கிடையாது என அவர் பதிலளித்தார். தற்போது முன்னெடுக்கப்படுகின்ற சித்துபாத்தி அகழ்வு பணிகள் முடிவடைந்ததை அடுத்தே அது தொடர்பில் சிந்திக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். செம்மணி பழைய மனிதப் புதைக்குழியை மீண்டும் தோண்டுமாறு இதுவரை எவரும் கோரிக்கை முன்வைக்கவில்லை எனவும் அவர் கூறினார். புத்தகப் பையுடன் சிறுவன் எலும்புக்கூடு: செம்மணி புதைகுழியில் தோண்டத்தோண்ட வரும் எலும்புக்கூடுகள் இலங்கையில் தோண்டத்தோண்ட வெளிவரும் மனித புதைகுழிகள் - என்ன நடக்கிறது? இலங்கை ஜனாதிபதியின் பேச்சு சர்ச்சை ஆவது ஏன்? - இறுதிப்போர் குறித்து என்ன பேசினார்? இந்தியா என்ன செய்தது? பிரபாகரனை விட்டு பிரிந்தது ஏன்? புலிகள் இயக்க முன்னாள் தளபதி கருணா பேட்டி சித்துபாத்தி பகுதியில் செய்மதி ஊடாக அடையாளம் காணப்பட்ட பகுதியொன்று நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தோண்டப்பட்டு வருகின்றது. இந்த இடத்திலிருந்து ஆடையொன்றை ஒத்ததான துணியொன்றை அகழ்வாளர்கள் கண்டுபிடித்திருந்தனர். அத்துடன், அந்த இடத்தில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு தற்போது தோண்டப்பட்டு வருகின்றன. மேலும், இந்த இடத்திலும் மனித எலும்புக்கூடுகள் காணப்படக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே இந்த பகுதி தோண்டப்பட்டு வருகின்றது. செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைக்குழி விவகாரம் தொடர்பில் அரசாங்கம் பூரண ஒத்துழைப்புகளை வழங்கும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களுக்கு அண்மையில் தெரிவித்திருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு எலும்புகளுக்கு இறுதிச் சடங்கா? டி.என்.ஏ பரிசோதனை செய்வது பற்றி கேள்வி எழுப்பிய போது, ''டி.என்.ஏ பரிசோதனை செய்து அவற்றை சேமித்து வைக்க வேண்டும் என்பதில் எனக்கும் மாற்று கருத்து இல்லை. தாய், தந்தையருடன் சரணடைந்த 29 குழந்தை பிள்ளைகள் எங்கேயோ ஒரு இடத்தில் உயிர் வாழ்ந்தால், அவர்களை இனங்காண்பதற்கு டி.என்.ஏ பரிசோதனை தேவை. இது எனது தனிப்பட்ட கருத்து. எலும்புக்கூடுகளை டி.என்.ஏ பரிசோதனை செய்து, நாங்கள் அவர்களுக்குரிய இறுதி சடங்குகளை செய்வதற்கான தேவை எங்களுக்கு ஏற்படவில்லை. அந்த எலும்புக்கூடாக்கியவர்கள் யார்? அவர்களுக்கு என்ன தண்டனை?. அதில் தான் எங்களுக்கு அக்கறை இருக்கின்றதே தவிர, டி.என்.ஏ பரிசோதனை செய்து அவர்களுக்கு கிரியைகள் செய்ய வேண்டிய தேவை இல்லை. இதை செய்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். அதுதான் மீள் நிகழாமைக்கான ஒரேயொரு வழி. குற்றம் செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கப்பட வேண்டும்.'' என லீலாதேவி ஆனந்த நடராஜா கூறினார். டி.ஏன்.ஏ பரிசோதனையை செய்ய வேண்டாம் என தான் கூறவில்லை என தெரிவித்த அவர், நீதிக்கான பயணத்தில் எந்தவித வேக குறைப்பும் இடம்பெறக்கூடாது என்றார். சித்துபாத்தி புதைக்குழிக்கு கடும் பாதுகாப்பு இலங்கையில் சுமார் நான்கு தசாப்த காலப் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள சுமார் 20திற்கும் அதிகமான மனிதப் புதைக்குழிகளை விடவும், சித்துபாத்தி மனிதப் புதைக்குழி அகழ்வு பணிகளுக்கு கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. யாழ்ப்பாணம் பொலிஸாரின் நேரடி பாதுகாப்புக்கு மத்தியில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை, குற்றப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த பகுதிக்குள் அனுமதிக்கப்பட்ட தரப்பினரை தவிர, ஏனையோருக்கு செல்ல யாழ்ப்பாணம் நீதிமன்றம் முழுமையாக தடை விதித்துள்ளது. குறிப்பாக ஊடகவியலாளர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரமே செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன், ஏ-9 வீதியில் சித்துபாத்தி மனிதப் புதைக்குழிக்கு முன்பாக வாகனங்களை நிறுத்தவும் பொலிஸார் தடை விதித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. அதேவேளை, இலங்கை மின்சார சபையின் உதவியுடன் மின்சார இணைப்பு எடுக்கப்பட்டு, இரவு வேளையிலும் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிந்தது. இந்த பகுதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் சந்தர்ப்பங்களில் முழு நேரமாக பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணிகளும் மேற்பார்வை செய்து வருவதை காண முடிகின்றது. யாழ்ப்பாணத்தின் சர்ச்சைக்குரிய மனிதப் புதைக்குழியான செம்மணி மனிதப் புதைக்குழிக்கு அருகிலேயே இந்த சித்துபாத்தி மனிதப் புதைக்குழியும் கண்டுபிடிக்கப்பட்டு, அகழப்பட்டு வருகின்றது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரில் 1990ம் ஆண்டு காலப் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மக்கள், ராணுவத்தினால் கொலை செய்யப்பட்டு செம்மணி பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக அப்போதைய ராணுவ வீரர் ஒருவரின் தகவல் வழங்கப்பட்ட நிலையில் அந்த பகுதி தோண்டப்பட்டது. இந்த நிலையில், அங்கிருந்து பல மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதுடன், அந்த நடவடிக்கை ஒரு கட்டத்தில் இடைநிறுத்தப்பட்டது. இவ்வாறான பின்னணியில், தற்போது செம்மணியை அண்மித்த சித்துபாத்தி இந்து மயானத்தில் மற்றுமொரு மனிதப் புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டு தோண்டப்பட்டு வருகின்றது. இந்த மனிதப் புதைக்குழியிலிருந்து சிறுவர்களுடையது என சந்தேகிக்கப்படும் மனித எலும்புக்கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. செம்மணி பகுதியிலுள்ள பழைய மனிதப் புதைக்குழி மீண்டும் தோண்டப்படுமா என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மனிதப் புதைக்குழியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர் எஸ்.நிரஞ்ஜனிடம் பிபிசி தமிழ் வினவியது. அவ்வாறான எண்ணம் இதுவரை கிடையாது என அவர் பதிலளித்தார். தற்போது முன்னெடுக்கப்படுகின்ற சித்துபாத்தி அகழ்வு பணிகள் முடிவடைந்ததை அடுத்தே அது தொடர்பில் சிந்திக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். செம்மணி பழைய மனிதப் புதைக்குழியை மீண்டும் தோண்டுமாறு இதுவரை எவரும் கோரிக்கை முன்வைக்கவில்லை எனவும் அவர் கூறினார். புத்தகப் பையுடன் சிறுவன் எலும்புக்கூடு: செம்மணி புதைகுழியில் தோண்டத்தோண்ட வரும் எலும்புக்கூடுகள் இலங்கையில் தோண்டத்தோண்ட வெளிவரும் மனித புதைகுழிகள் - என்ன நடக்கிறது? இலங்கை ஜனாதிபதியின் பேச்சு சர்ச்சை ஆவது ஏன்? - இறுதிப்போர் குறித்து என்ன பேசினார்? இந்தியா என்ன செய்தது? பிரபாகரனை விட்டு பிரிந்தது ஏன்? புலிகள் இயக்க முன்னாள் தளபதி கருணா பேட்டி சித்துபாத்தி பகுதியில் செய்மதி ஊடாக அடையாளம் காணப்பட்ட பகுதியொன்று நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தோண்டப்பட்டு வருகின்றது. இந்த இடத்திலிருந்து ஆடையொன்றை ஒத்ததான துணியொன்றை அகழ்வாளர்கள் கண்டுபிடித்திருந்தனர். அத்துடன், அந்த இடத்தில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு தற்போது தோண்டப்பட்டு வருகின்றன. மேலும், இந்த இடத்திலும் மனித எலும்புக்கூடுகள் காணப்படக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே இந்த பகுதி தோண்டப்பட்டு வருகின்றது. செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைக்குழி விவகாரம் தொடர்பில் அரசாங்கம் பூரண ஒத்துழைப்புகளை வழங்கும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களுக்கு அண்மையில் தெரிவித்திருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgl3ynwg1eo
  4. செம்மணி மனித புதைகுழி : இதுவரை 45 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் : மற்றுமொரு புதிய குழியில் மண்டையோடு அடையாளம் 05 JUL, 2025 | 08:02 PM யாழ். செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 45 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் புதிதாக அகழப்படும் புதைகுழியிலும் மண்டையோ ஒன்று அவதானிக்கப்பட்டதுடன் இன்று 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்டத்தின் பத்தாம் நாள் இன்று சனிக்கிழமை (5) யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது. இதுவரை மொத்தமாக 45 மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 42 மனித எலும்புக் கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. இதேவேளை புதிதாக இன்றையதினம் மூன்று எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறன. செய்மதிப்படம் மூலம் அடையாளப்படுத்தப்பட்டு அகழப்படும் சந்தேகத்துக்கிடமான புதிய பகுதியில் மண்டையோடு ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/219259
  5. இவ்வளவு பொருட்களும் இங்க இப்ப தட்டுப்பாடு அண்ணோய்!!
  6. டெக்சாஸில் உயிர்களை பறித்த பேரழிவு வெள்ளம் - பாதிப்பை காட்டும் 12 படங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்காவின் டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு கிறிஸ்தவ கோடைக்கால முகாமில் இருந்த சிறுமிகளில் 23 முதல் 25 பேர் வரை காணவில்லை. இந்தச் சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும் பயங்கரமானது என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இந்த திடீர் வெள்ளத்தில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளனர். பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, மக்கள் வெள்ளத்தில் இருந்து தப்பிப் பிழைப்பதற்காக உயர்வான இடத்திற்குச் சென்றுள்ளனர் டெக்ஸாஸ் பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. குவாடலூப் ஆற்றில் திடீரென ஒரு மணிநேரத்திற்குள் 26 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து இந்த வெள்ளம் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர். சான் அன்டோனியோவின் வடமேற்கே உள்ள கெர்வில்லேவில் கேம்ப் மிஸ்டிக் எனப்படும் கிறிஸ்தவ கோடைக்கால முகாமுக்குச் சென்ற சிறுமிகளில் 23 முதல் 25 சிறுமிகளைக் காணவில்லை என உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்களை மீட்புக் குழுவினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட் வெள்ளத்தை "அசாதாரணமான பேரழிவு" என்று கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "இதுவரை மொத்தம் 237 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதில் 167 பேர் ஹெலிகாப்டர் மூலமாக மீட்கப்பட்டனர்" என்று பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிசி நியூஸ் தெரிவித்துள்ளது. காணாமல் போன சிறுமிகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்கள் கூற்றுப்படி, ஹெலிகாப்டர், டிரோன்கள், படகுகள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, சாலைகள் அடித்துச் செல்லப்பட்டு, தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்ட பல கவுன்டிகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, பல கவுன்டிகளில் வீடுகள், கார்கள் என அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருப்பதைக் காணொளிகளில் காண முடிகிறது. பல கவுன்டிகளில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன, தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சுமார் 700க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துகொண்ட கிறிஸ்தவ கோடைக்கால முகாமில் 20க்கும் மேற்பட்ட சிறுமிகளைக் காணவில்லை வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்து கிடப்பதைக் காணொளிகளில் பார்க்க முடிகிறது. காணாமல் போனவர்கள் அனைவரையும் கண்டுபிடிக்கும் வரை இரவு, பகல் பார்க்காமல் மீட்புப் பணி தொடரும் என டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபட் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்காவின் சுதந்திர தினத்தைக் கொண்டாட மக்கள் தயாராகியிருந்த நிலையில், இந்த திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. டெக்சாஸின் துணைநிலை ஆளுநர் டான் பேட்ரிக் பேசும்போது, "இது ஓர் அழிவுகரமான வெள்ளம், சொத்துகளையும் துரதிர்ஷ்டவசமாக உயிர்களையும் பறித்துவிட்டது" எனக் குறிப்பிட்டார். மேலும், "குழந்தைகள் காணாமல் போனதாலேயே அவர்கள் இறந்திருக்கலாம் என்று அர்த்தமில்லை. அவர்கள் தொடர்புகொள்ள முடியாத நிலையில்கூட இருக்க வாய்ப்புள்ளது" என்றும் கூறினார். பட மூலாதாரம்,CITY OF KERRVILLE POLICE DEPARTMENT படக்குறிப்பு, கெர்வில் நகர காவல்துறை, அதன் மீட்புக் குழுக்கள் இரவு முழுவதும் உழைத்ததாகக் கூறுகிறது. கேம்ப் மிஸ்டிக் முகாம், தங்களிடம் மின்சாரம், தண்ணீர் இல்லை என்றும் சாலை அடித்துச் செல்லப்பட்டதால் கூடுதல் உதவிகளைப் பெற முடியாமல் சிரமப்படுவதாகவும் கூறியுள்ளது. பட மூலாதாரம்,CITY OF KERRVILLE POLICE DEPARTMENT படக்குறிப்பு, "எங்கள் மக்கள் அனைவரையும் கண்டுபிடிக்கும் வரை" மீட்புப் பணிகள் தொடரும் என்று கெர்வில் நகர காவல்துறை உறுதி அளித்துள்ளது இந்த வெள்ளம் குறித்துப் பேசிய கெர் கவுன்டியின் மூத்த அதிகாரி ராப் கெல்லி, தங்களிடம் எச்சரிக்கை அமைப்பு இல்லை என்று கூறினார். மேலும், வெள்ளிக்கிழமை ஏற்பட்ட இந்த வெள்ளம் 1987ஆம் ஆண்டு கெர் கவுன்டியின் தெற்கே உள்ள கம்ஃபோர்ட் நகரில் கிறிஸ்தவ முகாம் பேருந்தில் 10 இளம் வயதினர் உயிரைப் பறித்த வெள்ளத்தைவிட தீவிரமாக இருந்ததாகக் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த வெள்ளம் குறித்து எந்த முன்னெச்சரிக்கையும் வழங்கப்படவில்லை என மக்கள் கூறுகின்றனர். ஆனால், மழைக்கு முந்தைய வானிலை முன்னறிவிப்புகள் "இவ்வளவு மழை பெய்யும் என்று கணிக்கப்படவில்லை" என்று அதிகாரிகள் கூறுகின்றனர். பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் செய்திகளின்படி, டெக்சாஸ் அவசர நிலை மேலாண்மைப் பிரிவு வியாழக்கிழமை பல கூட்டங்களை நடத்தியது. ஆனால் தேசிய வானிலை சேவை இவ்வளவு பெரிய மழையைக் கணிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 20 செமீ வரை மழை பெய்யும் என்றே கணிக்கப்பட்டு இருந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c784zdv79eko
  7. Published By: DIGITAL DESK 2 05 JUL, 2025 | 08:08 PM வவுனியா வடக்கு, வெடிவைத்தகல்லு பகுதியில் மகாவலி திட்டத்தின கீழ் 350 ஏக்கர் நிலம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. மகாவலி திட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் இனப் பரப்பலை சீர்குலைக்கும் செயற்பாடுகள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தது. வெடிவைத்தகல் கிராம அலுவலர் பிரிவில் கொக்கச்சான்குளம் அபகரிக்கப்பட்டு கலாபோகஸ்வேவ என்னும் பெயரில் புதிய குடியேற்றம் மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, தற்போது வெடிவைத்தகல்லு கிராம அலுவலர் பிரிவில் உள்ள மற்றொரு கிராமமான திரிவைச்சகுளம் பகுதியில் 350 ஏக்கர் நிலம் மகாவலி வலயம் என்ற போர்வையில் உள்வாங்கப்பட்டு துப்புரவு செய்யப்பட்டுள்ளது. குறித்த நிலத்தை தென்பகுதி நிறுவனம் ஒன்றுக்கும், பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி தமிழ் மக்களின் நிலங்கள் மகாவலி திட்டம் என்ற போர்வையில் கபளீகரம் செய்யப்பட்டு குடியேற்றங்கள் இடம்பெறுவதை தடுக்க முன்வர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். https://www.virakesari.lk/article/219241
  8. 1) இன்றைய தினம் 05/07/2025 வீட்டுத்திட்ட பணிகளை நிறைவு செய்ய உதவும் முகமாக செபஸ்தியாம்பிள்ளை லோகேஸ்வரன் (கனடா (யாழ்ப்பாணம்) அவர்கள் 50000 ரூபாவை திரு சி.லக்‌ஷன் அவர்களுடைய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளார். திரு செபஸ்தியாம்பிள்ளை லோகேஸ்வரன் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.
  9. உலகில் ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டுமே உள்ள இந்த ரத்த வகையின் சிறப்பு என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் சாரதா வி பிபிசி தமிழ் 5 ஜூலை 2025, 01:41 GMT புதுப்பிக்கப்பட்டது 47 நிமிடங்களுக்கு முன்னர் 'க்வாட நெகடிவ்' (Gwada Negative) என்றழைக்கப்படும் உலகின் 48வது ரத்தப் பிரிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ரத்தப்பிரிவு உலகில் ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டுமே இருப்பதாக அறியப்பட்டுள்ளது. அவர் பிரான்ஸ் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் க்வாடலூப் (Guadeloupe) என்ற தீவை பூர்வீகமாக கொண்டவர். அந்த இடத்தை குறிக்கும் வகையிலேயே இந்த ரத்தப்பிரிவுக்கு 'க்வாட' நெகடிவ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரத்தப்பிரிவை பிரான்ஸ் நாட்டின் தேசிய ரத்த முகமையான Établissement Français du Sang (French Blood Establishment) கண்டறிந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பை சர்வதேச குருதியேற்றல் அமைப்பு (International Society for Blood Transfusion) அங்கீகரித்து, PIG7 எனப்படும் உலகின் 48வது ரத்தப்பிரிவாக அடையாளப்படுத்தியுள்ளது. 2025 ஜூன் மாதம் வரையில் உலகில் ஒரே ஒரு நபருக்கு மட்டுமே இந்த ரத்தவகை இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ரத்தம் எவ்வாறு அரிதான வகையாகிறது? குறிப்பிட்ட ஒரு ரத்த வகை அரிதானதா என்பதை தீர்மானிக்க, பொதுவாக எல்லோரிடமும் காணப்படும் ஆன்டிஜன் அந்த ரத்த வகையில் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆயிரத்தில் ஒருவருக்கும் குறைவாக அந்த ரத்த வகை இருந்தால் அது அரிய ரத்த வகை எனப்படும். இப்போது கண்டறியப்பட்டுள்ள ரத்தப் பிரிவின் அரிய அம்சம் இதில் EMM antigen இல்லை என்பதே ஆகும். EMM antigen கிட்டத்தட்ட எல்லா மனிதர்களிலும் காணப்படுவதாகும். EMM antigen என்பது ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களில் காணப்படுவதாகும். இது சில புரதங்களை செல்கள் மீது பொருத்த உதவியாக இருக்கும். நமது உடல், ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை தன்னுடைய செல்கள் தான் என்று கண்டறியும் 'குறியீடு'களாக EMM antigen செயல்படும். க்வாட நெகடிவ் எவ்வாறு கண்டறியப்பட்டது? 2011-ம் ஆண்டில், 54 வயதான குவாடலூப்பை சேர்ந்த அந்த பெண், தனது அறுவை சிகிச்சைக்கு முன்பாக சில ரத்தப் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார். அப்போது அவரது ரத்தத்தில் சில வித்தியாசங்கள் இருப்பதை பிரான்ஸ் நாட்டு மருத்துவர்கள் கவனித்தனர். ஏற்கெனவே உள்ள ரத்த வகைகளுடன் அவரது ரத்தம் பொருந்தவில்லை. ஆனால் எதனால் அவருக்கு அப்படி உள்ளது என்று கண்டறிவதற்கான நவீன தொழில்நுட்பங்கள் இல்லை. பிரான்ஸ் தேசிய ரத்த முகமையை (EFS) சேர்ந்த ஆய்வாளர்கள் தியர்ரி பெய்ரார்ட் மற்றும் ஸ்லிம் அசௌசி உள்ளிடோர் கொண்ட குழு தொடர் ஆய்வுகள் நடத்தி வந்தனர். 2019ம் ஆண்டில், மரபணு வரிசைப்படுத்துதலில் நவீன வழிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. அதிக எண்ணிக்கையிலான மரபணுக்களை மிக வேகமாக வரிசைப்படுத்தும் தொழில்நுட்பங்கள் உருவாகியிருந்தன. அதன் பின்னரே புதிய ரத்த வகைக்கு காரணமான தனித்துவமான மரபணு திரிபினை கண்டறிய முடிந்ததாக ஆய்வாளர் தியரி பெய்ரார்ட் கூறியுள்ளார். இந்த மரபணு திரிபின் காரணமாகவே EMM antigen உற்பத்தியாவதில்லை. அரிய ரத்த வகை வந்தது எப்படி? க்வாட ரத்த வகை கண்டறியப்பட்ட பெண்ணின் பெற்றோர் இருவருமே மேற்சொன்ன மரபணு திரிபினை பெற்றிருந்தனர். எனவே, இருவரிடமும் இருந்து இந்த மரபணு திரிபினை அந்த பெண் பெற்றுள்ளார். தற்போது வரை உலகத்தில் இந்த வகை ரத்தம் கண்டறியப்பட்டுள்ள நபர் இவர் ஒருவர் மட்டுமே என்பதால், அவரால் வேறு யாரிடம் இருந்தும் ரத்த தானம் பெற முடியாது என்று தியரி பெய்ரார்ட் கூறியுள்ளார். உலகில் கிட்டத்த அனைவருமே EMM antigen பெற்றிருப்பதால் அவரால் வேறு ஒருவரிடமிருந்து ரத்தம் தானமாக பெற முடியாது. எனவே இதே ரத்த வகை கொண்ட வேறு நபர்கள் அவர் பிறந்த க்வாடலூப் தீவிலோ அதன் அருகில் உள்ள பகுதிகளிலோ வாழ்கிறார்களா என்று கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. அரிய ரத்த வகையால் ஏற்படும் சவால்கள் அரிய ரத்த வகை கொண்டவர்களுக்கு, அதே ரத்த வகையைத்தான் தானமாக பெற முடியும். ஒரு வேளை மாற்று ரத்தம் செலுத்தப்பட்டால், அவர்களிடம் இல்லாத ஆண்டிஜன் உடலுக்குள் சென்று விடும். அந்த ஆண்டிஜனை அவர்களின் உடல் ஏற்காது. அதனை உடல் தமக்கு அந்நியமாக கருதி தாக்கத் தொடங்கும். நுண் உயிரியலாளரான ஷண்முகப்பிரியா "ரத்த வகையை மாற்றி உள்ளே செலுத்துவது சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாக மாறக்கூடும். பாம்பே குரூப் எனும் அரிய ரத்த வகையில் எச் ஆண்டிஜன் (H antigen) இருக்காது. அந்த ஆண்டிஜன் நம்மில் கிட்டத்தட்ட எல்லோருக்கும் உண்டு. எனவே பாம்பே ரத்த வகை கொண்டவர்களுக்கு ரத்தம் செலுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். இது போன்ற அரிய வகை ரத்தம் கொண்டவர்களுக்கு தங்களுக்கு தாங்களே ரத்தம் செலுத்திக் கொள்ளும் முறை உள்ளது. அவர்களது ரத்தத்தை தாங்களே தானமாக அளித்து சேகரித்து வைத்துக் கொள்ள முடியும். ரத்தத்தின் வெவ்வேறு கூறுகளை தனித்தனியாக சேமித்து வைக்க முடியும். சில கூறுகளை ஓராண்டு காலம் வரை வைத்துக் கொள்ள முடியும். ஆண்டிஜன்கள் இல்லாத பிளாஸ்மா போன்ற கூறுகளை எந்த கொடையாளரிடமிருந்தும் பெற்றுக் கொள்ள முடியும்" என்கிறார். உலகத்திலேயே 50 பேருக்கும் குறைவாக உள்ள ரத்த வகை எது? அரிதிலும் அரிதான ‘பாம்பே ஓ’ ரத்த வகை: ரத்த தானம் செய்யும் கொடையாளர்கள் உங்கள் ரத்த வகை மாரடைப்புக்கான வாய்ப்பை அதிகரிக்குமா? உடலில் வேறுவகை ரத்தத்தை ஏற்றினால் என்னவாகும்? அரிய வகை ரத்தம் கொண்ட கர்ப்பிணி பெண்களில் மாற்று ரத்தப்பிரிவு கொண்ட தங்கள் குழந்தையின் செல்களுக்கு எதிரான செல்களை தங்கள் உடல் உருவாக்கிவிடும் அபாயம் நிலவுகிறது. "O நெகடிவ் போன்ற ரத்தப்பிரிவு கொண்ட கர்ப்பிணிகளுக்கு, பேறு காலத்தின் இறுதிக் கட்டத்தில் சில ஆண்டிபாடிகள் வழங்கப்படும். வழக்கமாக ரத்த ஓட்டம் தாயிலிருந்து குழந்தைக்கு செல்வதாகவே இருக்கும். ஒரு வேளை குழந்தையிடமிருந்து தாய்க்கு ரத்தம் ஓட்டம் இருந்தால் அதனால் நேரும் விளைவுகளை தடுக்க இந்த ஆண்டிபாடிகள் வழங்கப்படும்." என்று ஷண்முகப்பிரியா கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1k8wlern1ro
  10. தலாய் லாமா தவிர வேறு யாரும் அடுத்த புத்த மதத் தலைவரை தீர்மானிக்க முடியாது: சீனாவுக்கு இந்தியா பதிலடி 03 JUL, 2025 | 04:02 PM புதுடெல்லி: “அடுத்த தலாய் லாமா குறித்த முடிவை எடுக்கும் உரிமை என்பது தற்போதைய புத்த மதத் தலைவரான தலாய் லாமா மற்றும் தலாய் லாமாவின் ‘காடன் போட்ராங் அறக்கட்டளை’ தவிர்த்து வேறு யாருக்கும் இல்லை” என்று சீனாவுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இது குறித்து சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “அடுத்த தலாய் லாமா யார் என்பதை முடிவு செய்யும் விவகாரத்தைப் பொறுத்தவரை, அதற்காக நிறுவப்பட்டுள்ள அமைப்பு மற்றும் தலாய் லாமாவின் விருப்பம் ஆகியவற்றின்படியே தீர்மானிக்கப்பட வேண்டும் என்றே தலாய் லாமாவைப் பின்பற்றும் அனைவரும் நினைக்கிறார்கள். தலாய் லாமாவையும், நடைமுறையில் உள்ள மரபுகளையும் தவிர வேறு யாருக்கும் அதைத் தீர்மானிக்கும் உரிமை இல்லை” என்று தெரிவித்துள்ளார். தலாய் லாமா அறிவிப்பும், சீனா தலையீடும்: இந்தியாவில் தஞ்சமடைந்து தரம்சாலாவில் வாழ்ந்து வரும் 14-வது தலாய் லாமா தனது 90-வது பிறந்தநாளையொட்டி வெளியிட்ட அறிவிப்பில், 600 ஆண்டுகள் பழமையான தனது அறக்கட்டளை (காடன் போட்ராங் அறக்கட்டளை) தனது மறைவுக்குப் பிறகும் தொடரும் என்றும், உரிய நடைமுறைகளின்படி, திபெத்திய புத்த மதத்தினருக்குத் தலைமை தாங்கும் அடுத்த தலாய் லாமா தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் உறுதி செய்தார். ஆனால், புத்த மதத் தலைவரான தலாய் லாமாவின் ‘வாரிசு’ குறித்து இந்த அறிவிப்பில் சீன அரசு முரண்பட்டுள்ளதுடன், புதிய தலாய் லாமாவை தேர்வு செய்வதில் தலையிடும் முனைப்பில் இருக்கிறது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறும்போது, “தலாய் லாமா உள்ளிட்ட பவுத்த தலைவர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளுக்கு சீன அரசின் ஒப்புதலும் அங்கீகாரமும் அவசியம். அதற்கான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்தப் பின்னணியில்தான், 14-வது தலாய் லாமாவின் ‘வாரிசு’ குறித்த அறிவிப்புக்கு ஆதரவாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரும், பவுத்தருமான கிரண் ரிஜிஜு கருத்து தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற 14-வது தலாய் லாமாவின் 90-வது பிறந்த தின விழா வரும் 6-ம் தேதி தர்மசாலாவில் நடைபெற உள்ளது. இந்த பிறந்தநாள் நிகழ்வில், மத்திய அரசு சார்பில் கிரண் ரிஜிஜுவும், ராஜீவ் ரஞ்சன் சிங்கும் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. https://www.virakesari.lk/article/219111
  11. பலர் தாறுமாறாக புதைக்கப்பட்டுள்ளதை செம்மணி மனித புதைகுழியில் காணக்கூடியதாக உள்ளது – சட்டத்தரணி மணிவண்ணன் 05 JUL, 2025 | 10:49 AM செம்மணி மனித புதைகுழியில் ஒரே தடவையில் ஏராளமானவர்கள் தாறுமாறாக புதைக்கப்பட்டிருப்பதை எங்கள் கண்ணால் பார்க்கக் கூடியதாக இருந்தது என சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளை பார்வையிட்ட பின்னர் வெள்ளிக்கிழமை (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் சார்பிலும் நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட மயானத்தில் அகழ்வாய்வு பணிகள் நடைபெறுகின்றன என்ற அடிப்படையில் நல்லூர் பிரதேச சபையின் சார்பிலும் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். செம்மணி சித்தப்பாத்தியிலே 11க்கு 11 என்ற விஸ்தீரணமான இடத்திலே அகழ்வு பணிகள் இடம்பெற்றாலும் சற்று அருகில் உள்ள ஏனைய பகுதியொன்றிலும் அகழ்வாய்வு பணி நடைபெறுகிறது. மேலதிகமான இடங்களிலும் அகழ்வாய்வு பணிகள் நடைபெறலாம் என்று அனுமானங்கள் காணப்படுகிறது. மனிதப் புதைகுழிக்குள் சடலங்கள் மீடகப்படும் விதத்தை பார்க்கும் போது ஐந்துக்கும் மேற்பட்ட மண்டை ஓடுகள் ஒரே இடத்தில் காணப்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. ஒரே தடவையில் ஏராளமானவர்கள் தாறுமாறாக புதைக்கப்பட்டிருப்பதை எங்கள் கண்ணால் பார்க்கக் கூடியதாக இருந்தது. நாற்பதை கடந்தும் மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுக் கொண்டிருப்பது மிகப்பெரிய மனித புதைகுழி இந்த பிரதேசத்தில் இருப்பதற்கான அறிகுறிகளை தென்பட வைக்கிறது. உலகம் முழுவதிலும் பல்வேறுபட்ட மனித புதைகுழிகள் அகழப்பட்டிருந்தாலும் கூட அவை எல்லாவற்றிலும் இருந்து சற்று வித்தியாசமானதாகவும் சிக்கல் நிறைந்ததாகவும் இந்த மனிதப் புதைகுழி காணப்படுவதாக ஊகங்கள் தெரிவிக்கப்படுகிறது. இந்த எலும்பு கூட்டுத் தொகுதியிலே எந்த ஒரு உடைகளும் கண்டெடுக்கப்படாமல் இருப்பதும் சில குழந்தைகளின் எலும்புக்கூடுகள் மீட்கப்படுவதும் திட்டமிட்ட கொலை ஒன்று திட்டமிட்ட ரீதியிலே நடைபெற்று புதைகுழிக்குள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகங்கள் வெளியிடப்படுகின்றன. தடயங்களை சரியாக கண்டுபிடிக்ககூடாதவாறு திசை திருப்பும் விதத்திலும் பல்வேறு நடவடிக்கைகள் சடலங்கள் புதைகுழிக்குள் புதைக்கப்பட்ட போது முன்னெடுக்கப்பட்டிருக்கலாமா என்று சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இந்த அகழ்வுப் பணிகளை தொடர்ச்சியாக கண்காணிப்பதற்காக சட்டத்தரணிகள் நாங்கள் தயாராக இருக்கிறோம். மிக முக்கியமாக இந்த அகழ்வு பணி ஊடாக உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக இருக்கிறது. தற்போது கூட செம்மணி மற்றும் நாவற்குழி பகுதியில் காணாமல் போனவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு எழுத்தானை மனு மீதான விசாரணை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. அதற்கான கட்டளை எதிர்வரும் 11 ஆம் திகதி வழங்கப்பட இருக்கின்ற நிலையில் இவ்வாறான தடயங்கள் வெளிப்பட்டிருப்பது மிக முக்கியமான விடயமாகும். செம்மணி புதைகுழியில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று ஏராளமானவர்கள் இருக்கின்ற நிலையிலே ஆட்கொணர்வு மனுவிலே சம்பந்தப்பட்டவர்கள் எங்களுக்கு இப்போதும் சாட்சியாக இருக்கிறார்கள். அவர்களின் சாட்சியங்கள் இந்த எலும்பு கூட்டு பகுதியை அடையாளப்படுத்துவதற்கு மிக முக்கியமானதாக இருக்கும் என சந்தேகிக்கிறோம். அந்த வகையில் மிக நேர்மையாக அரசியல் தலையீடுகளுக்கு அப்பால் சர்வதே கண்காணிப்பின் கீழான ஒரு முழுமையான ஆராய்ச்சி இங்கு நடத்தப்பட வேண்டும். கொலைகள் மூடி மறைக்கப்பட முடியாதவை. இதன் பின்னணி உடனடியாக அடையாளம் காணப்பட வேண்டும். செம்மணியில் கிருசாந்தி குமாரசாமி படுகொலையில் தண்டிக்கப்பட்ட இராணுவ அதிகாரியின் சாட்சியத்திலே 600 வரையான உடல்கள் இங்கு புதைக்கப்பட்டதாக சொல்லியிருக்கிறார். இந்த அனைத்து பின்னணிகளும் ஆராயப்பட்டு இதிலே கொல்லப்பட்டவர்கள் மற்றும் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். அதுவரை சட்டத்தரணிகளாக நாங்கள் தொடர்ந்து அகழ்வாய்வு பணியின்போது சட்ட உதவிகளை பாதிக்கப்பட்டவர்களுக்காக தொடர்ந்து மேற்கொள்ள தயாராக இருக்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/219217
  12. '44 காயங்கள், மூளையில் ரத்தக் கசிவு, காதுகளில் உலர்ந்த ரத்தம்' - மரணத்திற்கு காரணம் என்ன? படக்குறிப்பு, உடற்கூறாய்வு அறிக்கையில், காவலாளி அஜித்குமாரின் உடலில் 44 வெளிப்புறக் காயங்களும் பல வகையான உள்புறக் காயங்களும் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 4 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் திருப்புவனம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமாரின் உடற்கூறாய்வு அறிக்கையின் முழு விவரங்கள் வெளியாகியுள்ளன. உடலில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டாலும், மரணத்துக்கான காரணம் என்ன என்பதை மருத்துவர்கள் தெரிவிக்கவில்லை. அதேவேளையில், ஒரே இடத்தில் தொடர்ச்சியாகத் தாக்கியதன் விளைவாக ஏற்பட்ட ரத்தக் கசிவால் மரணம் நேர்ந்திருக்க வாய்ப்புள்ளதாக தடயவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அஜித்குமாரின் உயிரைப் பறிக்கக் காரணமாக இருந்தது எது? சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் உள்ள மடப்புரத்தில் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வந்த மதுரையைச் சேர்ந்த நிகிதா என்பவரின் ஒன்பதரை சவரன் நகை காணாமல் போனதாக புகார் எழுந்தது. புகார் அடிப்படையில், கோவிலில் காவலாளியாகப் பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞரை திருப்புவனம் காவல் நிலையத்தில் கோவில் ஊழியர்கள் ஒப்படைத்தனர். படக்குறிப்பு, கோவிலின் பின்புறம், இங்கு வைத்துதான் காவலாளி அஜித்குமார் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது திருப்புவனம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கை தனிப்படை பிரிவுக்கு மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளர் மாற்றியுள்ளார். காவலாளி அஜித்குமாரிடம் தனிப்படை பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் மறுநாள் (28ஆம் தேதி) அவர் உயிரிழந்தார். கோவிலில் இருந்து அஜித்குமாரை ஆட்டோவில் கொண்டு செல்லும் போதே உயிரிழந்துவிட்டதாக, அவரது சகோதரர் நவீன்குமார் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். இந்த வழக்கில் தனிப்படை காவலர்கள் ஆனந்த், கண்ணன், ராஜா, பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை கூறுவது என்ன? மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு 28ஆம் தேதி இரவு 11.15 மணியளவில் இறந்த நிலையில் அஜித்குமார் கொண்டு வரப்பட்டதாக, உடற்கூறாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மறுநாள் காலை 5.45 மணியளவில் அஜித்குமாரின் உடலை மருத்துவர் சதாசிவம் மற்றும் மருத்துவர் ஏஞ்சல் தலைமையிலான குழுவினர் உடற்கூறாய்வு செய்துள்ளனர். சுமார் மூன்று மணிநேரம் 35 நிமிடங்கள் அது நடந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அறிக்கையில், காவலாளி அஜித்குமாரின் உடலில் 44 வெளிப்புறக் காயங்களும் பல வகையான உள்புறக் காயங்களும் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், மரணம் ஏற்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. இதில் காயங்கள் பலவும் கன்றிப் போன நிலையில் இருந்துள்ளன. மூளையில் ரத்தக்கசிவு இருந்ததாகவும் இரு காதுகளிலும் உலர்ந்த நிலையில் ரத்தம் காணப்பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அஜித்குமாரின் இதயம், நுரையீரல், கல்லீரல், மூளை ஆகியவை ரசாயனம் (chemical analysis) மற்றும் திசுப் பகுப்பாய்வுக்கு (histopathological) அனுப்பப்பட்டுள்ளது. 'ஒரே இடத்தில் பலமுறை அடிக்கப்பட்ட காயங்கள்' படக்குறிப்பு, திருப்புவனம் காவல் நிலையம் "மரணத்துக்கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்படாத நிலையில், காவலர்கள் தாக்கியதால் காவலாளிக்கு மரணம் ஏற்பட்டிருக்குமா?" என்று மருத்துவரும் மீனாட்சி மருத்துவக் கல்லூரியின் தடய அறிவியல் துறையின் தலைவருமான டிகாலிடம் பிபிசி தமிழ் கேட்டது. "மொத்தமாக 44 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவற்றில் 13 முதல் 16 வரை வகைப்படுத்தப்பட்டுள்ள காயங்கள் என்பது ஒரு காயம் மட்டும் அல்ல. இவை ஒரே இடத்தில் பலமுறை அடிக்கப்பட்ட காயங்களாக உள்ளன" என்கிறார். தொடர்ந்து ஒரே இடத்தில் அடித்ததால் ஏற்பட்ட காயம் எனக் கணக்கிட்டால் சுமார் 70க்கும் மேற்பட்ட புறக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகப் பார்க்கலாம் எனக் கூறும் டிகால், "சுமார் 12 செ.மீ அளவில் தசைகள் வரை காயம் ஏற்பட்டுள்ளது" என்கிறார். மரணத்திற்கு காரணம் என்ன? படக்குறிப்பு, திருப்புவனம் பத்ரகாளியம்மன் கோவில் "அதேநேரம், இதயம், நுரையீரல் உள்பட பிரதான உறுப்புகளில் எங்கும் அடிபடவில்லை. மூளையில் மட்டும் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. அது உயிரிழப்பை உடனே ஏற்படுத்த வாய்ப்பில்லை" எனக் கூறுகிறார் டிகால். "அஜித்குமாரின் உடலில் எலும்பு முறிவு எதுவும் காணப்படவில்லை" எனக் கூறும் டிகால், "எல்லாம் கன்றிப் போன காயங்களாக உள்ளன. அஜித்குமார் இறந்து போவார் என காவலர்கள் எதிர்பார்த்திருக்க வாய்ப்புகள் இல்லை" எனக் குறிப்பிட்டார். "பல்வேறு காயங்களால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் ரத்தக் கசிவினால் இறப்பு ஏற்பட்டிருக்கவே வாய்ப்புகள் அதிகம்" எனக் கூறும் டிகால், "இது நியூரோ ஜெனிக் ஷாக் (neuro genic shock) எனக் கூறப்படுகிறது. அடிக்கும்போது ஒவ்வோர் இடத்தில் ஏற்படும் வலியும் மூளைக்குக் கடத்தப்பட்டுக் கொண்டே இருக்கும்" என்கிறார். உடலில் மூன்று லிட்டருக்கும் குறைவாக ரத்த சுழற்சி ஏற்பட்டால் உயிரிழப்புக்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் இது ஹைப்போ வாலிமிக் ஷாக் (hypo volemic shock) என அழைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். உதாரணமாக, ஒருவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்போது நீரிழப்பு ஏற்படுவதை மேற்கோள் காட்டிய டிகால், "நீரிழப்பைச் சரிசெய்யாவிட்டால் உயிரிழப்பு ஏற்படும். அதைப் போல ரத்தம் சுழற்சி அடைவதில் (blood circulation) பாதிப்பு ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்படும்" என்கிறார். "அடிக்கும்போது ஒவ்வொரு காயத்துக்கு உள்ளும் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. மூளைக்குள் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ரத்தக்கசிவு வேகமாக ஏற்பட்டிருந்தால் மரணமும் விரைவாக ஏற்பட்டிருக்கும்" எனக் கூறுகிறார் டிகால். காவலாளியின் உடலில் காயங்கள் பலவும் கன்றிப் போய் இருப்பதால், உடலில் உள்ள ரத்தம் மீண்டும் சுழற்சிக்கு வரவில்லை எனக் கூறும் டிகால், "அழுத்தம் குறையும்போது போதிய ஆக்சிஜனை மூளைக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. அதுவே உயிரிழப்புக்கு காரணமாக அமைந்திருக்கலாம்" என்றார். மிளகாய்ப் பொடி போட்டதற்கான ஆதாரம் உள்ளதா? படக்குறிப்பு, மடப்புரம் கிராம மக்கள் கோவிலில் அஜித்குமாரை தாக்கும்போது அவர் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டபோது, அங்கிருந்த மிளகாய்ப் பொடியைக் கரைத்து அவர் வாயில் காவலர்கள் ஊற்றியதாக அவரது சகோதரர் நவீன்குமார் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். ஆனால், இதுதொடர்பாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்படவில்லை. "பிரேத பரிசோதனையின்போது ஆடைகளையும் பரிசோதனைக்கு அனுப்பி வைப்பார்கள். அதன் முடிவுகள் வரும்போது மிளகாய்த் துகள்கள் இருந்ததா எனத் தெரிய வரும். ஆனால், அவரது உடலில் மிளகாய்ப் பொடி இருந்ததாக விவரங்கள் இல்லை" எனக் கூறுகிறார் டிகால். "நாக்கு கடிபட்டுக் காயம் உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வலி தாங்க முடியாமல் அவர் கடித்திருக்கலாம். திசுப் பகுப்பாய்வு முடிவுகள் வருவதற்கு ஓரிரு மாதங்கள் தேவைப்படும். அதன் பிறகே இறுதி முடிவை வெளியிடுவார்கள்" எனக் கூறுகிறார் டிகால். அவரது கூற்றுப்படி, "அஜித்குமாருக்கு உடல்ரீதியாக எந்தப் பிரச்னைகளும் இல்லை. முதல்கட்ட அறிக்கை எனக் கூறப்பட்டாலும் இதை இறுதி அறிக்கையாகவும் பார்க்கலாம். இவ்வளவு காயங்களுடன் ஒரு மனிதர் உயிர் வாழ்வது கடினம்." அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகள், மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. '24 மணிநேர சித்ரவதை' படக்குறிப்பு, அஜித் குமாரின் தம்பி நவீன்குமார் "மதியம் 1 மணியளவில் வேன் மூலமாக அஜித்குமாரை அழைத்துச் சென்ற தனிப்படைக் காவலர்கள், மறுநாள் மரணம் ஏற்படும் வரை அடித்துள்ளனர். அவர் அடி தாங்க முடியாமல் நகையை எடுத்ததாகப் பொய் கூறியிருக்கிறார்" என்கிறார் மதுரை 'எவிடென்ஸ்' அமைப்பின் கதிர். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அஜித்குமார் உடன் பணியாற்றும் வினோத்குமார், அருண்குமார் உள்பட மூன்று பேர் முன்னிலையில் அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இது கோவிலில் நடந்த காவல் படுகொலையாகப் பார்க்க வேண்டும்" எனக் கூறுகிறார். சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில் கன்றிப் போன காயங்கள் உள்ளதாக உடற்கூறாய்வு அறிக்கை கூறுவதை மேற்கோள் காட்டிய கதிர், "24 மணிநேரமும் அஜித்குமாரின் உடல் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இவ்வளவு கோபம் வரும் அளவுக்கு எதுவும் நடந்துவிடவில்லை" என்கிறார். "ஒன்பதரை சவரன் நகைத் திருட்டு என்பது கொடூரமான குற்றம் கிடையாது. இது கொள்ளை வழக்கு அல்ல திருட்டு வழக்கு" எனக் கூறும் கதிர், "அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு அதிகாரத்தில் உள்ளவர்களுடன் தொடர்பு இருந்துள்ளது. ஒரு சாதாரண காவலாளி என்ற எண்ணத்தில் திருட்டுப் புகார் கொடுத்துள்ளார்" என்கிறார். காவலாளி கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணையில் இருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதைக் குறிப்பிட்டுப் பேசிய கதிர், "சாத்தான்குளத்தில் தந்தை-மகன் காவல் மரண வழக்கின் விசாரணையை இன்னமும் சிபிஐ முடிக்கவில்லை. அஜித்குமார் வழக்கை விரைந்து விசாரிக்குமாறு சிபிஐக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்" எனக் கூறினார். இதே கோரிக்கையை முன்வைக்கும் காவலாளி அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர் கணேஷ்குமார், "சிபிஐ விசாரணை நடந்தால் வழக்கின் விசாரணை தாமதமாகும். நீதிமன்ற மேற்பார்வையில் சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட வேண்டும்" எனத் தெரிவித்தார். சாட்சியம் அளித்த கோவில் பணியாளர்கள் காவலாளி கொலை வழக்கை விசாரித்து அறிக்கை தருமாறு மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷை, கடந்த ஜூலை 1 அன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நியமித்தது. திருப்புவனத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறையின் ஆய்வு மாளிகையில் தங்கி மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார். சம்பவம் தொடர்பாக நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்கலாம் எனக் கூறப்பட்டு இருப்பதால், அஜித்குமார் தாக்கப்பட்டதைப் பார்த்த நபர்கள் சாட்சியம் அளித்து வருகின்றனர். அஜித்குமாரின் தாயார் மாலதி, சகோதரர் நவீன்குமார் மற்றும் அவரது உறவினர்கள், காவலர்கள், கோவில் பணியாளர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தியுள்ளார். இதன் அறிக்கையை ஜூலை 8ஆம் தேதி தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. அதற்குள் சி.பி.ஐ தனது விசாரணையைத் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் பார்க்கப்படுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy5w0qn2pv7o
  13. பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500 விழுக்காடு வரி விதிப்பது குறித்து அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக விவாதம் நீடிக்கிறது. குடியரசுக் கட்சித் தலைவரும் செனட் அவை உறுப்பினருமான லிண்ட்ஸே கிரஹாம் கடந்த ஏப்ரலில் இதுதொடர்புடைய மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார். இது நமது நலன்களை பாதிக்கக் கூடும் என்றும் செனட் உறுப்பினர் கிரஹாமுடன் தொடர்ந்து பேசிவருவதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தற்போது தெரிவித்துள்ளார். அமெரிக்க செய்திச் சேனல் ஏபிசி நியூஸிடம் பேசிய செனட் உறுப்பினர் லிண்ட்ஸே கிரஹாம், "எந்த நாடாவது ரஷ்யாவிடம் பொருட்கள் வாங்கிக்கொண்டு, அதே நேரம் யுக்ரேனுக்கு உதவி செய்யாமல் இருந்தால், அந்த நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் பொருட்களுக்கு 500% வரி விதிக்க வேண்டும், இந்தியாவும், சீனாவும் புதினின் 70 விழுக்காடு எண்ணெயை வாங்குகின்றன, அதுவே அவர் தொடர்ந்து போர் புரிய உதவுகிறது. எனது மசோதாவுக்கு இதுவரை 84 எம்.பி.களின் ஆதரவு கிடைத்துள்ளது, எனக் கூறினார். "இந்தியா, சீனா மற்றும் பிற நாடுகள் புதினின் யுத்த கொள்கையை ஆதரிப்பதை நிறுத்தி, அவர் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதை உறுதி செய்யும் வகையில் இந்த நாடுகள் மீது வரி விதிக்க தேவையான அதிகாரத்தை இந்த மசோதா அதிபருக்கு வழங்கும்," என்றும் லிண்ட்ஸே கிரஹாம் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என பைடன் நிர்வாகமும் விரும்பியது யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைத் தொடர்ந்து, மேற்கு நாடுகள் ரஷ்யா மீது கடுமையான தடைகளை விதித்தன. இந்த தடைகள் இன்றும் நடைமுறையில் உள்ளன. இந்தியா ரஷ்யாவுடனான வர்த்தகத்தை நிறுத்த வேண்டும் என மேற்குலக நாடுகள் விரும்பின, ஆனால் போரின் போது ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தகம் புதிய உச்சத்திற்கு சென்றது. ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கும் முதன்மையான மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது. போர் தொடங்குவதற்கு முன்பு இந்தியா இறக்குமதி செய்த கச்சா எண்ணெய்யில் ரஷ்யாவின் பங்கு இரண்டு விழுக்காடுக்கு கீழ் இருந்தது, இப்போது கிட்டத்தட்ட 40 விழுக்காடாக அதிகரித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள ரஷ்ய தடைகள் சட்ட மசோதா 2025 (The Russia Sanctions Act, 2025) அமல்படுத்தப்பட்டால், ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய பொருட்கள் அல்லது யுரேனியம் வாங்கும் நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 500 விழுக்காடு வரி விதிக்கப்படும். இது இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகள் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் நுகர்வில் இந்தியா உலகில் மூன்றாவது பெரிய நாடாக உள்ளது. இந்தியா தினமும் வெளிநாடுகளிலிருந்து சுமார் 51 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. இது சுத்திகரிப்பு நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசலாக மாற்றப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க செனட் உறுப்பினர் லிண்ட்ஸே கிரஹாம் மசோதாவில் என்ன இருக்கிறது? ரஷ்ய தடைகள் சட்டம் 2025 (The Russia Sanctions Act, 2025) என்பது அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள ஒரு மசோதா. யுக்ரேன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்பு மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷ்யாவின் மறுப்பு ஆகியவற்றுக்கு பதிலடி தரும் விதமாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கும் நாடுகள் மீது பெரிய அளவிலான தடைகளை விதிப்பது இந்த மசோதாவின் நோக்கம். இது அமெரிக்க செனட்டில், செனட் உறுப்பினர் லிண்ட்ஸே கிரஹாமால் ஏப்ரல் 2025ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தற்போது அமெரிக்க செனட் அவையின் பரிசீலனையில் உள்ளது. இது அமலுக்கு வர அவையில் பெரும்பான்மையும் பின்னர் அதிபரின் ஒப்புதலும் தேவைப்படுகிறது. இந்த மசோதாவை முன்மொழியும்படி அதிபர் டிரம்ப் தன்னிடம் கேட்டுக்கொண்டதாக கிரஹாம் சொல்கிறார். "டிரம்பிடம் தற்போது இல்லாத ஒரு ஆயுதத்தை தர விரும்புகிறோம். ஜூலை மாதத்திற்கு பிறகு நாங்கள் அந்த மசோதாவை நிறைவேற்றுவோம். அதிபர் அதில் கையெழுத்திடுவார். இந்த சட்டத்தில் விலக்கு அளிப்பதற்கான அம்சமும் உள்ளது. அதை அமல்படுத்துவது அதிபரின் கையில் இருக்கும்," என்கிறார் அவர். தங்களுடைய நோக்கம் புதினை பேச்சுவார்த்தைக்கு முன்வர கட்டாயப்படுத்துவதுதான் என்கிறார் கிரஹாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீனாவுக்கு அடுத்து ரஷ்ய கச்சா எண்ணெயை அதிகம் வாங்கும் நாடு இந்தியா இந்தியா மீதான தாக்கம் என்னவாக இருக்கும்? ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 500 விழுக்காடு வரி விதிக்கும் மசோதா குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரிடம் கேட்கப்பட்டபோது, "செனட் உறுப்பினர் லிண்ட்ஸே கிரஹாமின் மசோதா பற்றி பேசும்போது, எங்களுடைய நலன்களை பாதிக்கக்கூடிய ஏதேனும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்தால் அது எங்களுக்கும் முக்கியமானது. நாங்கள் தொடர்ந்து செனட் உறுப்பினர் கிரஹாமுடன் தொடர்பில் உள்ளோம். எங்களது தூதரகம் மற்றும் தூதரும் அவருடன் தொடர்பில் உள்ளனர். "எரிசக்தி மற்றும் பாதுகாப்பு தொடர்பான எங்களது கவலைகளை அவர்களிடம் தெளிவாக கூறியுள்ளோம். இந்த விஷயம் எங்கள் முன்வந்தால் நாங்கள் அதற்கேற்ப நடவடிக்கை எடுப்போம்." 2022ஆம் ஆண்டுக்கு பின்னர் ரஷ்ய எண்ணெயை வாங்கும் முதன்மையான நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது. 2025 மே மாதத்தில் இந்தியா தினமும் சுமார் 19.6 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்தது, இது கடந்த பத்து மாதங்களில் மிகவும் அதிக அளவாகும். இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் தினமும் 20 முதல் 22 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து வாங்குவதாக சர்வதேச வர்த்தக ஆய்வு நிறுவனமான கெப்ளரின் முதல்கட்ட தரவுகள் காட்டுகின்றன. இது இரண்டு ஆண்டுகளில் மிக அதிக அளவாகும். அத்தோடு, இராக், செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத்திலிருந்து வாங்கப்படும் மொத்த அளவைவிட அதிகமாகும். இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் கன்வல் சிபல், இதை ரஷ்யாவுக்கு அழுத்தம் தர அமெரிக்கா பயன்படுத்தும் உத்தியாக பார்க்கிறார். "சில நாட்களுக்கு முன் டிரம்ப் குறித்து புதின் நேர்மறை கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். இரண்டு நாடுகளின் வெளியுறவுத் துறைகளும் பேசிக் கொண்டிருப்பதாகவும், சில பொருளாதார ரீதியிலான பேச்சுவார்த்தைக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். எனவே திரைமறைவில் இருக்கும் நிலை இப்போது தோன்றுவது போல் அவ்வளவு மோசமாக இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் இன்னமும் பல "இருந்தால்" மற்றும் "ஆனால்" இருக்கின்றன. எனவே, பிரச்னைக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்போம் என ஜெய்சங்கர் சொல்வது சரியானதுதான் என நினைக்கிறேன்," என்கிறார் கன்வல் சிபல். எரிசக்தி மற்றும் சுத்தமான காற்று ஆராய்ச்சிக்கான மையம் சிந்தனைக்குழுவின் தரவுகள்படி, தடைகள் தளர்த்தப்பட்ட பிறகு மே 2025 வரை, ரஷ்ய நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் வாங்குவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனா முதலிடத்தில் உள்ளது. 2022 டிசம்பர் 5ஆம் தேதி முதல் 2025 மே மாதம் வரை, ரஷ்யாவின் மொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சீனா 47 விழுக்காட்டையும், இந்தியா 38 விழுக்காட்டையும் வாங்கின. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தடைகள் இருந்தாலும் ரஷ்யாவின் பொருளாதாரம் வளர்ந்துகொண்டிருப்பதாக புதின் சொல்கிறார் மேற்குலகின் தடைகளும், ரஷ்யாவின் பதிலடியும் யுக்ரேன் போர் தொடங்கிய பின்னர், மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது தடைகளை விதிக்கத் தொடங்கின, அவை காலப்போக்கில் மேலும் கடுமையாயின. இந்த தடைகள் ரஷ்யாவின் நிதி, எரிசக்தி மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை பாதிக்கின்றன. யுக்ரேனில் சமாதானம் செய்துகொள்ள தங்களது தடைகள் அதிபர் விளாடிமிர் புதினை கட்டாயப்படுத்தும் என நம்புவதாக மேற்கத்திய நாடுகள் சொல்கின்றன. ஆனால் தர்க்க ரீதியான நியாயங்கள் மட்டுமே ரஷ்யாவை பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்தும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவின் மீது கூடுதல் தடைகளை விதித்தால் அதனால் ஐரோப்பாதான் அதிகமாக நஷ்டங்களை சந்திக்கும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஜூன் மாதம் கடைசி வாரத்தில் தெரிவித்திருந்தார். 2024-ல் ரஷ்யாவின் பொருளாதாரம் 4.3% அளவு வளர்ச்சியடையும் என்றும் ஆனால் அதே நேரம் யூரோ மண்டலம் பொருளாதாரம் வெறும் 0.9% அளவுதான் வளர்ச்சியடையும் என அவர் தெரிவித்தார். இது இந்தியாவுக்கு சவாலான நேரம். இந்தியாவுக்கு மலிவான எரிசக்தி தேவை, அதே நேரம் மேற்குலகின் தடைகளையும் உதாசீனம் செய்துவிட முடியாது. இதைப் போன்ற ஒரு சூழலில் இதுவரை எச்சரிக்கையும், சமநிலையும் கொண்ட ஒரு அணுகுமுறையையே இந்தியா பின்பற்றி வருகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2d0nrpy159o
  14. செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 37 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன Published By: VISHNU 05 JUL, 2025 | 12:07 AM செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக வெள்ளிக்கிழமை (4) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்டத்தின் ஒன்பதாம் நாள் வெள்ளிக்கிழமை (4) யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் - செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 9வது நாளாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா, சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்போடு முன்னெடுக்கப்பட்டது. முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட அழ்வுகளின் போது இதுரை 42 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சந்தேகத்திற்குரியதாக கருதப்பட்டு புதிதாக அகழப்படும் பகுதியில் சிறுமி ஒருவரின் ஆடை ஒன்றும் ஒன்று அகழ்ந்தெடுக்கப்பட்டது - என்றார். https://www.virakesari.lk/article/219212
  15. வலுவான நிலையில் இந்தியா! பும்ரா இல்லாமல் சாதித்துக் காட்டிய சிராஜ், ஆகாஷ் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிராஜ் கட்டுரை தகவல் க.போத்திராஜ் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பிரிம்மிங்ஹாமில் நடந்துவரும் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் இருக்கிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 407 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 180 ரன்கள் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்று 2வது இன்னிங்ஸை ஆடத் தொடங்கியது. இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் சேர்த்து 244 ரன்கள் முன்னிலையுடன் வலுவாக இருக்கிறது. இந்திய அணித் தரப்பில் முகமது சிராஜ், ஆகாஷ் தீப் சிங் இருவரும் சிறப்பாக ஆடி இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகளை வீழ்த்தினர். இங்கிலாந்து தரப்பில் ஹேரி ப்ரூக், ஸ்மித் இருவரும் வரலாற்று பார்ட்னர்ஷிப் அமைத்து அந்த அணியை சரிவில் இருந்து மீட்டு கவுரமான நிலைக்கு இட்டுச் சென்றனர். ப்ரூக்-ஸ்மித் வரலாற்று பார்ட்னர்ஷிப் இங்கிலாந்து அணி 84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து முதல் இன்னிங்ஸில் தடுமாறியது. புதிய பந்தில் சிராஜின் பந்துவீச்சில் ஜோ ரூட் (22), ஸ்டோக்ஸ் (0) இருவரும் அடுத்தடுத்த பந்தில் ஆட்டமிழந்த நிலையில் இங்கிலாந்தின் இன்னிங்ஸ் 150 ரன்களுக்குள் முடிந்துவிடும் என கணிக்கப்பட்டது. ஆனால், 85 ரன்னாக இருந்த போது 6-வது விக்கெட்டுக்கு சேர்ந்த ஸ்மித், ஹேரி ப்ரூக் பார்ட்னர்ஷிப் அமைத்து 303 ரன்கள் என்ற மிகப்பெரிய ஸ்கோரை எடுத்து வரலாற்று சாதனை புரிந்தனர். 24 வயதான இளம் பேட்டர் ஜேம் ஸ்மித் 184 (207 பந்துகள்) ரன்களுடன் 4 சிக்ஸர்கள், 21 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹேரி ப்ரூக் 158 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரின் வரலாற்றுப் பார்ட்னர்ஷிப் இங்கிலாந்து அணிக்கு பெரிய உற்சாகத்தை அளித்தது. ஹேரி ப்ரூக் இந்திய அணிக்கு எதிரான தன்னுடைய முதல் சதத்தை அடித்த நிலையில், ஸ்மித் தன்னுடைய முதல் சதத்தை அடித்தார். இருவரும் 6வது விக்கெட்டுக்கு 303 ரன்கள் சேர்த்தது எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் சேர்க்கப்பட்ட 2வது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும். டெஸ்ட் அரங்கில் 6-வது விக்கெட்டுக்கு 300 ரன்களுக்கு மேல் குவித்த 9-வது ஜோடி என்ற பெருமையைப் பெற்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES இன்னொரு கில்கிறிஸ்ட் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் ஆட்டமிழக்காமல் 184 ரன்கள் சேர்த்து இங்கிலாந்து கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்தார். இங்கிலாந்து விக்கெட் கீப்பராக டெஸ்ட் அரங்கில் சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் அலெக்ஸ் ஸ்டூவர்ட் 1997ல் நியூசிலாந்துக்கு எதிராக அடித்த 173 ரன்கள் தான் அதிகபட்சமாக இருந்தது. இதை ஸ்மித் முறியடித்தார். மேலும்,7வது பேட்டராகக் களமிறங்கி இந்திய அணிக்கு எதிராக அடித்த அதிகபட்ச ஸ்கோரையும் ஸ்மித் பதிவு செய்தார். 24 வயதான ஸ்மித்தின் ஆட்டத்தைப் பார்த்த போது இங்கிலாந்து அணிக்கு 3 ஃபார்மெட்டுக்கும் கிடைத்துவிட்ட அற்புதமான விக்கெட் கீப்பர், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆடம் கில்கிறிஸ்டுக்கு இணையாக ஒப்பிடலாம் என்று வர்ணனையாளர்கள் தெரிவித்தனர். இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை வெளுத்துவாங்கிய ஸ்மித் 43 பந்துகளில் அரைசதத்தையும், 80 பந்துகளில் சதத்தையும் நிறைவு செய்து டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக சதம் அடித்த 3வது இங்கிலாந்து பேட்டராக மாறினார். பிரசித் கிருஷ்ணா ஓவரை விளாசிய ஸ்மித், ஷார்ட் பந்துகளை சிக்ஸர்களுக்கும், பவுண்டரிகளுக்கும் பறக்கவிட்டார். ஜடேஜா, வாஷிங்டன் ஓவர்களையும் ஸ்மித் விட்டுவைக்கவில்லை. இருவரின் ஓவர்களிலும் தொடர்ச்சியாக இருமுறை இரு பவுண்டரிகளை ஸ்மித் விளாசினார். ஒருபுறம் ஸ்மித் இந்தியப் பந்துவீச்சை வெளுத்து, ரன்களைச் சேர்க்க, மறுமுனையில் ஹேரி ப்ரூக் மிகுந்த கட்டுக்கோப்புடன் ஷாட்களை ஆடி 73 பந்துகளில் அரைசதத்தையும், 137 பந்துகளில் சதத்தையும் நிறைவு செய்தார். முதல் செஷனில் காலை தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 32 ஓவர்களில் 160 ரன்கள் சேர்த்த நிலையில் மதிய உணவு இடைவேளையின்போது 47 ஓவர்களில் 249 ரன்களை வேகமாகச் சேர்த்தனர். மாலை தேநீர் இடைவேளையின் போது 355 ரன்களை சேர்த்தனர். இருவரும் ஒருவருக்கொருவர் சிறப்பாக ஒத்துழைத்து ஆடியதால், ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இருவரையும் பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் ஜடேஜா, சுந்தர், பிரசித் கிருஷ்ணா, நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரைப் பயன்படுத்தியும் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. ஆடுகளமும் அதற்கு ஏற்றபடி தட்டையாக, எந்தவிதமான ஸ்விங்கிற்கும் ஒத்துழைக்காமல் இருந்தது, பந்தும் தேய்ந்துவிட்டதால், இந்திய பந்துவீச்சாளர்களின் முயற்சி வீணானது. மாலையில் புதிய பந்து எடுத்த பின்புதான் விக்கெட் வீழ்த்தும் முயற்சியில் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு வெற்றி கிடைத்தது. சிராஜ், ஆகாஷ் மீண்டும் அழைக்கப்பட்டதற்கு பலனும் கிடைத்தது. ஹேரி ப்ரூக் 158 ரன்னில் ஆகாஷ் பந்துவீச்சில் போல்டாகினார். 6-வது விக்கெட்டுக்கு 303 ரன்கள் சேர்த்து இருவரின் பார்ட்னர்ஷிப் பிரிந்தது. இந்த பார்ட்னர்ஷிப் பிரிந்த அடுத்த சில ஓவர்களில் இங்கிலாந்து அணியின் கடைசி வரிசை பேட்டர்கள் ஆட்டமிழக்க, முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை வெளுத்துவாங்கிய ஸ்மித் 43 பந்துகளில் அரைசதத்தையும், 80 பந்துகளில் சதத்தையும் நிறைவு செய்தார் பும்ரா இல்லாமலும் சாதித்த சிராஜ், ஆகாஷ் பும்ரா இல்லாத நிலையில் பந்துவீச்சில் சிராஜ், ஆகாஷ் தீப் என்ன செய்யப் போகிறார்களோ? எவ்வாறு இங்கிலாந்தின் 10 விக்கெட்டுகளை வீழ்த்தப்போகிறார்கள்? என்ற கேள்விகளுக்கு இருவரும் சிறந்த பதிலை அளித்துள்ளனர். சிராஜ் 19.3 ஓவர்களில் 70 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தி 3.58 எக்னாமியுடன் பந்துவீசினார். ஆகாஷ் தீப் 88 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்து 4.40 எகானமியுடன் பந்துவீசினார். இருவரின் பந்துவீச்சும் ஓரளவுக்கு கட்டுக்கோப்புடனும், விக்கெட் வீழ்த்தும் நேர்த்தியுடனும் இருந்தது சிறப்பாகும். "நான் பொறுப்புகளையும், பணிச்சுமையையும் விரும்பக்கூடியவன்" என முகமது சிராஜ் போட்டிக்கு பின் ஜியோஸ்டார் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். பும்ராவுடனும், முகமது ஷமியுடனும் பந்துவீசிய சிராஜ் அவர்களிடம் இருந்து ஏராளமான அனுபவங்களை பெற்றுள்ளார். பும்ராவுடன் 23 டெஸ்ட்களில் ஆடிய சிராஜ் 33.82 சராசரி வைத்துள்ளார். பும்ரா இல்லாமல் 15 டெஸ்ட்களில் ஆடிய சிராஜ் 25.20 சராசரியாகக் குறைத்துள்ளார். ஷமியுடன் 9 டெஸ்ட் போட்டிகளில் சேர்ந்து பந்துவீசிய சிராஜ் 34.96 சராசரியும், பும்ரா, ஷமியுடன் இணைந்து 6 டெஸ்ட் போட்டிகளில் பந்துவீசிய சிராஜ் 33.05 சராசரியும் வைத்துள்ளார். பும்ரா இல்லாமல், ஷமி இல்லாமல் சிராஜ் தலைமையில் பந்துவீச்சுஅமைந்தபோது, அவர் 12 போட்டிகளில் 22.27 சராசரி என அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். முகமது சிராஜ் புதிய பந்தில் சிறப்பாக பந்துவீசக்கூடிய "க்விக் பவுலர்", அவுட் ஸ்விங் நன்றாக வீசக்கூடியவர். இந்த வாய்ப்பு நேற்று சிராஜுக்கு கிடைத்தபோது அவரால் விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது. புதிய பந்து கிடைத்த போது 2வது நாள் மாலையில் ஒரு விக்கெட்டை சாய்த்த சிராஜ், நேற்று ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ரூட், ஸ்டோக்ஸ் இருவரையும் அடுத்தடுத்த பந்தில் வெளியேற்றி தன்னுடைய பந்துவீச்சை நிரூபித்தார். அதேபோல ஆகாஷ் தீப் சிங்கும் புதிய பந்தில் நன்றாக ஸ்விங் செய்யக் கூடியவராக இருக்கிறார். ப்ரூக்,ஸ்மித் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறியபோது, புதிய பந்து எடுத்தவுடன், ப்ரூக் விக்கெட்டை ஆகாஷ் சாய்த்தார். ஆகாஷ் தீப் வீசிய அந்த பந்து ஒரு பேட்டரால் விளையாட முடியாத அதிதுல்லியமான பந்தாகும். ப்ரூக் ப்ரண்ட் புட் எடுத்து வைக்க நினைக்கையில் திடீரென இன்ஸ்விங் ஆகி ஆப் ஸ்டெம்பை தட்டிச் சென்றது. இந்த விக்கெட்தான் திருப்புமுனையாக அமைந்தது. ஹேரி ப்ரூக் ஆட்டமிழந்த போது இங்கிலாந்து அணி 387 சேர்த்திருந்தது. ஆனால் அடுத்த 20 ரன்களுக்குள் மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் விரைவாக சிராஜ், ஆகாஷ் வீழ்த்தி ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிராஜ் 19.3 ஓவர்களில் 70 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் பிரசித் கிருஷ்ணா பரிதாபம் முதல் டெஸ்டிலும் படுமோசமாகப் பந்துவீசிய பிரசித் கிருஷ்ணா, 2வது டெஸ்டிலும் அதே நிலையைத் தொடர்ந்தார். 2வது டெஸ்டில் 13 ஓவர்கள் வீசிய பிரசித் 73 ரன்களை வாரி வழங்கி ஓவருக்கு 5.53 ரன்ரேட்டில் மோசமாகப் பந்துவீசினார். டெஸ்ட் போட்டியில் ஓவருக்கு 5.50 ரன்கள் வழங்கிய இந்திய அளவில் 2வது மோசமான பந்துவீச்சாளராக பிரசித் கிருஷ்ணா இருக்கிறார். பிரசித் கிருஷ்ணா ஒரு ஓவரில் 3 பந்துகளை சரியான லைன் லென்த்தில் வீசிவிட்டு, அடுத்த 3 பந்துகளை தவறான லெனத்திலும், ஷார்ட் பிட்சாகவும், ஸ்லாட்டிலும் வீசும்போதும் நன்றாக வீசிய3 பந்துகள் வீணாகிறது. வாஷிங்டன் சுந்தரும், ஜடேஜாவும் நேற்று இரு செஷன்களில் பந்துவீசியும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. இருவருமே ஓவருக்கு 4 ரன்களுக்கு குறைவில்லாமல் வாரி வழங்கினர். அதனால் தான் இங்கிலாந்தின் இரு பேட்டர்கள் இணைந்து விரைவாக 300 ரன்கள் சேர்க்க முடிந்தது. ஜெய்ஸ்வால்-ராகுல் வேகம் முதல் இன்னிங்ஸில் 180 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2வது இன்னிங்ஸைத் தொடங்கியது. கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால் வேகமாக ஆட்டத்தைத் தொடங்கி, பவுண்டரிகளாக அடித்து ரன்களைச் சேர்த்தனர். டி20 ஆட்டத்தைப் போன்று பவுண்டரிகளாக விளாசியதால், 45 பந்துகளில் விரைவாக 50 ரன்களை இந்திய அணி எட்டியது. ஜெய்ஸ்வால் 6 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் சேர்த்திருந்த போது, டங் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அடுத்து வந்த கருண் நாயர் (7), ராகுலுடன் (28) சேர்ந்து ஆடி வருகிறார். இந்தியா முன்னிலை இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 89.3 ஓவர்களில் 407 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 180 ரன்கள் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்று 2வது இன்னிங்ஸை ஆடத் தொடங்கியது. இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் சேர்த்து 244 ரன்கள் முன்னிலையுடன் வலுவாக இருக்கிறது. இன்றைய 4வது நாள் ஆட்டம், நாளைய கடைசி நாள் ஆட்டம் இருக்கும் நிலையில் இன்று மாலை தேநீர் இடைவேளை வரை இந்திய அணி பேட் செய்து பெரிய இலக்கு நிர்ணயித்து இங்கிலாந்திடம் வழங்கலாம். ஏனென்றால் கடந்த டெஸ்டில் 378 ரன்கள் இலக்கை இங்கிலாந்து பேட்டர்கள் அனாசயமாக அடைந்து வெற்றி பெற்றுவிட்டதால் இந்த டெஸ்டில் அதுவும் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய அணி குறைவான இலக்கை நிர்ணயிக்க வாய்ப்பு இல்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cm20zgk7v3wo
  16. ஏகேடிக்கு செம்மணி குறித்து ஒரு வார்த்தை; செவிமடுக்கவும் செயற்படவும் துணிச்சல் உள்ள ஒருவருக்காக நிலத்திற்கடியில் குரல்கள் காத்திருக்கின்றன Published By: RAJEEBAN 04 JUL, 2025 | 03:09 PM யாழ்ப்பாணம் செம்மணியில் பள்ளிக்கு பெற்றோர்களுடன் சென்ற சிறுவர் சிறுமிகள் கொலைசெய்து புதைக்கப்பட்ட மனித புதைகுழி(அதிக அளவில் புதைக்கப்பட்ட சடலங்கள்) சம்பவம் வெளிவந்த சில நாட்களுக்குப் பிறகு கெஸ்பேவவில் உள்ள அவரது வீட்டில் காமினி லொக்குகே இயற்கை மரணமடைந்தார். குற்றவாளிகளை தண்டிக்கும் சட்ட அமைப்பை அமல்படுத்த முடியாமல் போன நாம் வாழும் இந்த சிங்கள பௌத்த சமூகம் காமினி லொக்குகே தலைமையிலான செம்மணி மனிதபுதைகுழிக்கு முன்பும் பிறகும் வடக்கிலும் தெற்கிலும் காணப்படும் மனித புதைகுழிகளிற்கு காரணமானவர்களிற்கு விதி தண்டனை வழங்கும் என எதிர்பார்த்து காத்திருந்தது. இப்போது லொக்குகே தலைமையிலான அந்தக் குழுவினர் நரகத்திற்கு செல்லும் வரைக்கும் காத்திருக்கும். இலங்கையின் மிகவும் துயரமான காலத்தின் முன்னோடிகளும் அதன் காரணமாக உருவான சித்திரவதை கலாச்சாரத்தின் முன்னோடிகளுமான காமினிலொக்குகேகள் இலங்கையின் வரலாற்றிற்கு வேதனையான நினைவுகளை இன்னமும் கொண்டுவருகின்றனர். லொக்குகேயின் மரணமும் மனித புதைகுழிகள் மீண்டும் தோண்டப்பட்டதும் இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் பயன்பாடு குறித்த ஒரு முரண்பாடானா உணர்வை எழுப்புகின்றன. செம்மணி மனித புதைகுழியில் பெரியவர்களின் எலும்புக்கூடுகளுடன் காணப்பட்ட குழந்தையின் மனித எச்சங்கள் நாங்கள் நம்பியதை விட செம்மணியிடம் எங்களிற்கு தெரிவிப்பதற்கு அதிக கதைகள் உள்ளன என்பதை வெளிப்படுத்தியுள்ளது. அவை இழந்த உயிர்களின், சிதைக்கப்பட்ட குடும்பங்களின், இன்னமும் தீர்க்கப்படாமல் உள்ள யுத்த குற்றங்களின் கதைகள். அவசர அவசரமாக தனிப்பட்ட ரீதியில் அடையாளம் காணப்படமுடியாதபடி பெருமளவு உடல்கள் புதைக்கப்பட்டுள்ள பகுதியே பாரிய மனித புதைகுழி எனப்படுகின்றது. ஆனால் இலங்கையின் சூழமைவில் இதன் அர்த்தம் இன்னமும் ஆழமானது. இது இலங்கையில் திட்டமிட்ட வன்முறைகள் காணப்பட்டன, அரசதலையீடு காணப்பட்டது, நீதியின் தோல்வி காணப்பட்டது என்பதை இது வெளிப்படுத்துகின்றது. இது சிறுவர்களின், கொல்லப்பட்டவர்களின் மயானம் மாத்திரம் அல்ல, உண்மை, பொறுப்புக்கூறல், அரசின் மனச்சாட்சியின் மயானமும் ஆகும். செம்மணியில் உள்ள உடல்கள் 1990களின் நடுப்பகுதியில் இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தை விடுதலைப்புலிகளிடமிருந்து மீளக்கைப்பற்றிய வேளை கொல்லப்பட்ட பொதுமக்களின் புதைகுழிகள் என கருதப்படுகின்றது. இந்த தனிநபர்கள் கடத்தப்பட்டு சித்திரவதை செய்து, படுகொலை செய்யப்பட்டார்கள் என குற்றம்சாட்டப்படுகின்றது. சிலர் விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் - ஏனையவர்களிற்கு இது கூட்டு தண்டனையாக வழங்கப்பட்டது. செம்மணி கதைகள் தடயவியல் பரிசோதனை மூலமோ அல்லது அரச அமைப்பின் மூலமோ வெளிவரவில்லை. மாறாக மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவவீரர் ஒருவர் மூலமே வெளிவந்தது. 1996 இல் கிருஷாந்தி குமாரசுவாமி என்ற தமிழ் பள்ளிமாணவியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தி படுகொலை செய்ததாக லான்ஸ் கோப்ரல் சோமரட்ண ராஜபக்ச ஏற்றுக்கொண்டார். கொல்லப்பட்ட 100க்கும் மேற்பட்ட பொதுமக்களின் உடல்கள் செம்மணியில் புதைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். அக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இலங்கை இராணுவத்தின் சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள் வழமையான விடயமாக காணப்பட்டன. இந்த ஒப்புதல் வாக்குமூலம் பொதுமக்களின் சீற்றத்தைத் தூண்டியது மேலும் அரசாங்கம் அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1999 ஆம் ஆண்டில் தடயவியல் நிபுணர்கள் சர்வதேச பார்வையாளர்கள் மற்றும் இந்த எழுத்தாளர் ஆகியோரால் மேற்பார்வையிடப்பட்ட ஒரு அகழ்வாராய்ச்சியில் 15 எலும்புக்கூடுகளைக் கண்டுபிடித்தனர். சிலர் பின்னர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காணாமல் போனவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். ஆனால் பொறுப்பான எந்த மூத்த அதிகாரியும் மீது வழக்குத் தொடரப்படவில்லை. போருக்குப் பிந்தைய இலங்கையில் உள்ள பல அதிர்ச்சிகரமான இடங்களைப் போலவே யுத்தவீரர்கள் யுத்த பிரச்சார தலைப்புச்செய்திகளிற்கு மத்தியில் ஏனைய புதைகுழிகளை போல செம்மணியும் மௌனத்திற்குள் புதையுண்டது. இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு செம்மணியின் கல்லறைகள் மீண்டும் பேசத் தொடங்கியுள்ளன. குழந்தைகள் கொல்லப்பட்ட கடந்த காலத்தின் நினைவுகள் இலங்கை சமூகத்திற்கு மீண்டும் நினைவூட்டப்பட்டாலும், காசாவில் பாலஸ்தீன குழந்தைகள் இறக்கும் போது ஏற்பட்ட அதிர்ச்சியையோ அல்லது சமூக பிரதிபலிப்பையோ ஏற்படுத்தவில்லையா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இருப்பினும் இலங்கையின் தொடர்ச்சியான நல்லிணக்க வாக்குறுதிகளால் ஏற்படுத்தப்பட்ட நீண்ட நிழல்களுக்கு மேலாக இது பெரிதாகத் தெரிகிறது மற்றும் எரியும் கேள்விகளை எழுப்புகிறது: நம் காலடியில் இன்னும் எத்தனை கல்லறைகள் உள்ளன? பாதிக்கப்பட்டவர்கள் யார் குற்றவாளிகள் யார்? உண்மை என்றென்றும் புதைக்கப்படுகிறதா? செம்மணி கல்லறைகளின் கதை வெறும் தொல்பொருள் அல்லது நடவடிக்கை மாத்திரமல்ல. இலங்கையின் வன்முறை மிகுந்த கடந்த காலத்தை எதிர்கொள்ளும் தார்மீக மற்றும் அரசியல் விருப்பத்திற்கான ஒரு சோதனை இது. குழந்தையின் எலும்புக்கூடு வெறும் ஆதாரம் அல்ல - அது தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட ஆழத்திலிருந்து நினைவுகூரவும் நினைவில் கொள்ளவும் செயல்படவும் ஒரு அழுகை. இலங்கையின் காணாமல்போதல் வரலாறு செம்மணிக்கு நீண்ட காலத்திற்கு முன்பே தொடங்கியது 1970களில் அரச ஆதரவுடன் நடந்த கடத்தல்கள் மற்றும் கொலைகளின் முதல் அலை அப்போது நிகழ்ந்தது. 1971 ஜேவிபி கிளர்ச்சி. பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசாங்கத்திற்கு எதிரான தோல்வியுற்ற மார்க்சிய எழுச்சி தொடர்பாக கைது செய்யப்பட்ட பின்னர் ஆயிரக்கணக்கான ஏழை மற்றும் கிராமப்புற சிங்கள இளைஞர்கள் காணாமல் போனார்கள். பலர் மீண்டும் ஒருபோதும் காணப்படவில்லை. அவர்களின் உடல்கள் ஆறுகளில் வீசப்பட்டன எரிக்கப்பட்டன அல்லது குறிக்கப்படாத காடுகளில் அழுக விடப்பட்டன. பொது பதிவுகள் எதுவும் இல்லை. நினைவுச் சின்னங்கள் இல்லை. நீதி இல்லை. இந்தக் காலகட்டத்தில் - 1988-1990 ஜே.வி.பி கிளர்ச்சியின் போது - இதே பாணி மீண்டும் தோன்றியது. இடதுசாரி நடவடிக்கைகள் என்று குற்றம் சாட்டப்பட்ட ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் வெள்ளை வேன்களில் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். பள்ளிக் குழந்தைகள் புதைக்கப்பட்ட சூரியகந்தபோன்ற கூட்டுப் புதைகுழிகள் தெற்கில் ஆட்சி செய்த சட்டவிரோத பயங்கரவாதத்தின் அளவை வெளிப்படுத்தின. ஆனால் தெற்கு எரிந்து கொண்டிருந்த அதே வேளையில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு ஏற்கனவே அதில் மூழ்கியிருந்தன. இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா மற்றும் மன்னார் போன்ற பகுதிகள் கட்டாயமாக காணாமல் போனவர்களின் மையங்களாக இருந்தன. விடுதலைப் புலிகளுக்கு அனுதாபம் காட்டியதாக சந்தேகிக்கப்படும் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் ஊரடங்கு உத்தரவு இராணுவத் தாக்குதல்கள் அல்லது சோதனைச் சாவடிகளின் போது கடத்தப்பட்டனர் - பலர் திரும்பி வரவே இல்லை. சிலர் செம்மணி போன்ற வயல்களில் புதைக்கப்பட்டனர் மற்றவர்கள் நீர்நிலைகளில் வீசப்பட்டனர் அல்லது அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிக்கப்பட்டனர். விடுதலைப் புலிகளும் காணாமல் போதல்களையும் கடத்தல்களையும் மேற்கொண்டனர். ஆனால் அரசால் மேற்கொள்ளப்பட்ட காணாமல் போதல்களின் அளவு மற்றும் தண்டனையின்மை ஆகியவை பயம் மற்றும் வன்முறை கலாச்சாரத்தை இயல்பாக்கின. மே 2009 இல் துப்பாக்கிகள் அமைதியாகிவிட்ட பிறகும் காணாமல் போதல் நிகழ்வுகள் முடிவுக்கு வரவில்லை. பின்னர் அது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட இயக்கமாக மாறியது "வெள்ளை வேன்" கடத்தல் சம்பவங்கள் அதிகரித்தன பெரும்பாலும் அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் பத்திரிகையாளர்கள் அல்லது முன்னாள் தமிழ் கிளர்ச்சியாளர்களை குறிவைத்தன. இவை அமைதி காலத்தில் பெரும்பாலும் தலைநகர் அல்லது அதன் புறநகர்ப் பகுதிகளில் சில நேரங்களில் பட்டப்பகலில் நடத்தப்பட்டன. விசாரணைகள் குறித்த வாக்குறுதிகள் இருந்தபோதிலும் நாம் இன்னும் பொதுமக்களின் நம்பிக்கையை வளர்க்கத் தவறிவிட்டோம்.. ஒரு காலத்தில் தனிநபர் காணாமல் போதல் சம்பவங்கள் அதிகமாக இருந்த நாடாக இருந்த இலங்கையில் 65000 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரப்பூர்வ மதிப்பீடு உள்ளது. சூரியகந்த முதல் செம்மணி வரை மன்னார் முதல் கொக்குத்தொடுவாய் கூட்டுப் புதைகுழிகள் அரச வன்முறைப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் துயரம் என்னவென்றால் இந்தப் புதைகுழிகள் இருப்பது மட்டுமல்ல - அவை புறக்கணிக்கப்படுகின்றன. கட்டுப்படுத்தப்படுகின்றன அல்லது மறக்கப்படுகின்றன. அகழ்வாராய்ச்சிகள் தாமதமாகின்றன. விசாரணைகள் முடிவில்லாதவை. பொதுமக்களின் நினைவு தேர்ந்தெடுக்கப்பட்டவை. இலங்கையின் கூட்டுப் புதைகுழிகள் ஒரு இருண்ட கடந்த காலத்தின் சான்றுகள் மட்டுமல்ல - அவை அதற்கான ஆதாரங்களும் கூட. இலங்கையின் காணாமல் போனவர்களின் கதை ஒரு தமிழ் கதையோ அல்லது சிங்களக் கதையோ அல்ல - இது இலங்கையில் நமது கதை. சட்டத்திற்கு மேலே அதிகாரம் செயல்பட அனுமதித்த ஒரு அரசியல் கலாச்சாரத்தின் கதை. இந்த காணாமல் போனவர்கள் பற்றிய முழு உண்மை அறியப்படும் வரை ஒவ்வொரு கல்லறையும் மனிதபுதைகுழியும் ஏற்றுக்கொள்ளப்படும் வரை ஒவ்வொரு பாதிக்கப்பட்டவரின் பெயரும் குறிப்பிடப்படும் வரை ஒவ்வொரு குடும்பமும் செவிமடுக்கப்படும் வரை இலங்கை இறந்தவர்கள் உயிர்த்தெழும் நாடாகவே இருக்கும். இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு அசாதாரண திருப்பமாக காணாமல் போன தங்கள் தோழர்களையோ அல்லது கொலைக் குழுவின் பிடியிலிருந்து மயிரிழையில் தப்பியவர்களையோ நினைத்து துக்கம் அனுசரித்த பலர் இப்போது நாட்டின் மிக உயர்ந்த பதவிகளில் அமர்ந்துள்ளனர். தலைமுறை தலைமுறையாக அரச பயங்கரவாதத்தை நேரடியாகக் கண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் முக்கிய நபர்களுடன் தேசிய மக்கள் சக்தி (NPP) கூட்டணி உருவாக்கப்பட்டது. அவர்கள் நாட்டின் வன்முறையை தொலைதூரத்தில் இருந்து பார்ப்பவர்கள் அல்ல; அவர்கள் அதிலிருந்து உயிர் பிழைத்தவர்கள். இந்த தனித்துவமான நிலைப்பாடு முன்னோடியில்லாத தார்மீக அதிகாரத்தையும் - உயர்ந்த எதிர்பார்ப்புகளையும் கொண்டு வந்துள்ளது. பலவந்தமாக காணாமலாக்கப்பட்டு புதைகுழிகளில் புதைக்கப்பட்டதன் மூலம் மௌனமாக்கப்பட்டவர்களிற்கு அரச ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களின் அரசாங்கத்தினால் நீதியை வழங்க முடியுமா? தற்போதைய அரசாங்கத் தலைவர்கள் பலர் குறிப்பாக மக்கள் விடுதலை முன்னணி யைச் சேர்ந்தவர்கள் 1988-1990 பயங்கரவாதத்தின் வடுக்களை தாங்கிக் கொண்டனர். அப்போது தெற்கு கிளர்ச்சியை அரசு இரக்கமற்ற திறமையுடன் நசுக்கியது. மாணவர்கள் ஆர்வலர்கள் அப்பாவிகள் என பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனார்கள் பெரும்பாலும் சித்திரவதை செய்யப்பட்டு ரகசிய முகாம்களில் கொல்லப்பட்டனர். சில டயர்களில் எரிக்கப்பட்டன மற்றவை அடையாளம் தெரியாத வயல்களில் புதைக்கப்பட்டனர். இந்த அனுபவங்கள் இதுபோன்ற அட்டூழியங்களை மீண்டும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று சபதம் செய்த தலைவர்களின் தலைமுறையை வடிவமைத்துள்ளன. 2024 இல் அவர்கள் அதிகாரத்திற்கு வந்தது ஒரு அரசியல் வெற்றியை விட அதிகம்; பலருக்கு இது வரலாற்றின் கல்லறையிலிருந்து ஒரு குறியீட்டு திரும்புதலாகும். அவர்கள் பொருளாதார சீர்திருத்தம் மற்றும் சமூக நீதியை மட்டுமல்ல பொறுப்புக்கூறல் உண்மை மற்றும் நினைவாற்றலையும் உறுதியளித்தனர். இந்த தனித்துவமான நிலைப்பாடு முன்னோடியில்லாத வகையில் தார்மீக அதிகாரத்தையும் - உயர்ந்த எதிர்பார்ப்புகளையும் கொண்டு வந்துள்ளது. அரசு அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட முன்னாள் அரசாங்கத்தால் கட்டாயமாக காணாமல் போனவர்களால் அமைதியாகி வெகுஜன புதைகுழிகளில் புதைக்கப்பட்டவர்களுக்கு இறுதியாக நீதி வழங்க முடியுமா? அரசு இதுவரை என்ன செய்துள்ளது? புதிய விசாரணைகள் செம்மணியில் புதிதாக மனித உடற்கூறுகள் குறிப்பாக ஒரு குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருந்த விசாரணையை அரசு மீண்டும் செயல்படுத்தியதைக் குறிக்கிறது. சுயாதீன கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையுடன் அரசாங்கம் செம்மணி மற்றும் மனித புதைகுழிகள் தொடர்பான கோப்புகளை மீள ஆராய்கின்றது. தடயவியல் பரிசோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்ட முடிவுகளை காணாமல்போனவர்கள் குறித்த விபரங்களுடன் பொருத்தி பார்க்க முயல்கின்றனர். இது சிறியதாக இருந்தாலும் உண்மையை மீட்டெடுக்க எடுத்த முக்கியமான ஒரு முன்னேற்றமாகும். காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தை மீண்டும் செயல்படுத்துதல் முன்னதாக செயலற்றிருந்த காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் தற்போது புதிய பணிக்கட்டளையுடன் அதிக ஊழியர்கள் மற்றும் நிதியுடன் மீளுயர்த்தப்பட்டுள்ளது. இது காணாமல் போனவர்களை தேடுவதோடு மட்டுமல்லாமல் குடும்பங்களின் வேதனையை ஒப்புக்கொள்வது மைய தரவுத்தொகுப்பை பராமரிப்பது எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகள் பரிந்துரை செய்வது ஆகிய பொறுப்புகளையும் மேற்கொள்கிறது. கடந்த குற்றங்களை பொது மக்களுக்கு ஒப்புக்கொள்வது முந்தைய ஆட்சி அமைப்புளைவிட தற்போதைய தலைமைத்துவம் தமிழர் மற்றும் சிங்களர் காணாமற்போனவர்களுக்கு அரசு பொறுப்புள்ளதாக பொது வெளியில் ஒப்புக்கொள்கிறது. 1971 - 1989 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் நடந்த குற்றங்களைப் பற்றிய ஜனாதிபதி உரைகள் மற்றும் பாராளுமன்ற விவாதங்கள் பல தசாப்தங்களுக்கு பின்னர் தமிழ் மற்றும் சிங்களர் ஆகிய இருவரையும் ஒரே தேசிய கதைச்சொல்லலில் இணைத்துப் பேசுகின்றன. தென் ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள மாதிரிகளின் அடிப்படையில் உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கு தேசிய ஆணையம் ஒன்றை உருவாக்க அரசு ஆதரவுடனும் குடிமை சமூகத்தின் கலந்துரையாடல்களுடனும் ஆராயப்பட்டு வருகிறது. இந்த முயற்சிகள் சாட்சியங்களை திரட்டுவது இழப்பீடுகள் பரிந்துரை செய்வது மற்றும் ஒரு தேசிய நினைவகத்தை உருவாக்குவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால் இவ்வளவு முன்னேற்றங்களுடன் கூட நியாயம் இன்னும் தொலைவில்தான். காணாமல்போதல் அல்லது படுகொலைகளிற்கு இராணுவத்தின் உயர் அதிகாரிகள் அரசியல்வாதிகள் காரணமாகயிருந்தாலும் கூட அவர்களிற்கு எதிரான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை. மக்களின் பார்வையில் போர் காலத்திலிருந்து வலிமைபெற்ற இராணுவ அமைப்பு இன்னும் குடியரசுச் சட்டத்தைக் காட்டிலும் மேலாக உள்ளது. அதனால் அதன் நடத்தையைக் குறித்த விசாரணைகள் மறைமுக எதிர்ப்பால் அடக்கப்படுகின்றன. அரசாங்கம் முற்போக்கு சக்திகள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் ஆதரவுடனேயே ஆட்சிக்குவந்துள்ளது..இருந்தபோதிலும் சிங்கள தேசியவாத உணர்வுகள் போர் குற்ற விசாரணைகளை இராணுவத்தின்மீது தாக்குதலாகவே பார்க்கின்றன. இதனால் விசாரணைகள் மெதுவாக எச்சரிக்கையுடன் பெரும்பாலும் விசாரணைகளை முன்னெடுக்கின்றோம் என காண்பிப்பதற்காக முன்னெடுக்கப்படுகின்றன. சின்னமாகவே நடைபெறுகின்றன. இதுவே உண்மையான துயரம். அதிகாரத்தில் இருப்பவர்கள் தாங்கள் விரும்புவது போல் செயல்பட முடியாத நிலை உள்ளது. பழைய அமைப்புகள் நம்பிக்கையற்ற கூட்டணிகள் மற்றும் அ தண்டனை தவிர்க்கும் கலாசாரம் அவர்களை கட்டுப்படுத்துகிறது. அரசியல் அதிகாரம் ஒரு புதிய மாற்றத்திற்கான ஆணையில்லை மாறாக பழைய வேதனைகளை மேலும் கடந்து செல்லும் ஊர்தியாகவே மாறுகிறது. அப்போதுதான் கேள்வி எழுகிறது: தார்மீக அதிகாரம் சட்ட நடவடிக்கையாக மாறுமா? ஒரு காலத்தில் தங்கள் நண்பர்களை ஆழமற்ற கல்லறைகளில் புதைத்தவர்கள் இப்போது அரசின் குற்றங்களை வெளிப்படுத்த நிர்ப்பந்திக்கப்படுவார்களா? அதிகார மண்டபங்களில் முன்னாள் பாதிக்கப்பட்டோர் இருப்பது ஒரு வரலாற்று தருணம். ஆனால் அவர்கள் இந்த தருணத்தை உண்மை நீதிமன்றம் நல்லிணக்கத்தை நிறுவ பயன்படுத்தாவிட்டால் அந்த வாய்ப்பு மீண்டும்—பல வருடங்கள் அல்லது தசாப்தங்களுக்கு—மூடப்பட்டுவிடும். செம்மணி மன்னார் ஆகிய இடங்களின் மண் என்றென்றும் அமைதியாக இருக்காது. பூமியின் அடியில் இருக்கும் குரல்கள் காத்திருக்கின்றன… கேட்கவும் செயல்படவும் துணியும் ஒருவருக்காக. https://www.virakesari.lk/article/219178
  17. திமுக கூட்டணியை 'அசைக்க முயலும்' விஜய் - 2026 தேர்தலுக்கு அவர் போடும் கணக்கு என்ன? பட மூலாதாரம்,@TVKVIJAYTRENDS கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் "தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமையும் கூட்டணி, திமுக, பாஜகவுக்கு எதிரானதாகத்தான் இருக்கும், அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். நடிகர் விஜயின் இந்த முடிவு திமுகவின் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். அதேநேரம், இது திமுக எதிர்ப்பு வாக்குகளைக் குறிவைக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முடிவு என்ற கருத்தையும் முன்வைக்கிறார்கள். "தவெக தலைமையில் 2026 தேர்தலுக்காக அமையப்போகும் கூட்டணியின் தேர்தல் வேட்பாளர் விஜய்தான்" என இன்று நடைபெற்ற தவெக-வின் செயற்குழு கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டது. ஆகையால், இனி எந்தெந்த கட்சிகள் தவெக கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தவெக தலைவர் விஜய் பேசியது என்ன? சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூலை 4) நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், கட்சியின் மாநில நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளர் விஜய்தான் என்றும், கூட்டணி குறித்து முடிவெடுக்க அவருக்கே முழு அதிகாரம் வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பட மூலாதாரம்,@TVKVIJAYTRENDS படக்குறிப்பு, பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பேசிய விஜய் மேலும், சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி செப்டம்பர் முதல் டிசம்பர் வரை தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும், ஆகஸ்ட் மாதத்தில் இரண்டாவது மாநில அளவிலான மாநாடும், ஜூலை மாதத்தில் இருந்து முகவர்கள் ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து 5 மண்டல மாநாடு மற்றும் மாவட்ட அளவிலான 120 மாநாடுகளை நடத்துவது உள்ளிட்ட 20 தீர்மானங்கள் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. பின்னர் செயற்குழுவில் பேசிய விஜய், "கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை. ஒன்றிய அளவில் மலிவான அரசியல் ஆதாயத்துக்காக மக்களை மதரீதியில் பிளவுபடுத்தி வேற்றுமையை ஏற்படுத்துகிறது பாஜக. அவர்களின் விஷமத்தனமான வேலைகள் தமிழகத்தில் எடுபடாது. பெரியாரையும் அண்ணாவையும் அவமதித்து அரசியல் செய்தால், பாஜக ஒருபோதும் வெற்றி பெற முடியாது" என்று கூறினார். மேலும், "சுயநல அரசியல் ஆதாயத்துக்காக பாஜகவுடன் கூட்டணி வைக்க தமிழக வெற்றிக் கழகம் ஒன்றும் திமுகவோ அதிமுகவோ இல்லை" என்று விமர்சித்த விஜய், "அவர்களுடன் என்றைக்கும் கூட்டணி இல்லை என்பதில் தவெக உறுதியாக இருக்கிறது. தவெக தலைமையில் அமையும் கூட்டணி, திமுக, பாஜகவுக்கு எதிரானதாகத்தான் இருக்கும். அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இது இறுதியான தீர்மானம் மட்டுமல்ல. உறுதியான தீர்மானம்" என்று கூறினார். திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கமா? பட மூலாதாரம்,GETTY IMAGES "விஜயின் இந்த முடிவு திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு விடுக்கப்படும் மறைமுக அழைப்பு" என்கிறார் மூத்தப் பத்திரிக்கையாளர் பிரியன். "திமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதைக் கூறிவிட்டார். அதே நேரம், விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர் என அவர்களது தரப்பில் அதிகாரபூர்வமாக கூறிவிட்டதால், இனி அதிமுகவும் தவெக கூட்டணிக்கு வர ஆர்வம் காட்டாது. நாம் தமிழர், பாமக, தேமுதிக மற்றும் திமுக கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகளுக்குத் தனது அறிக்கை மூலம் மறைமுக அழைப்பு விடுத்துள்ளார் நடிகர் விஜய்" என்கிறார் பிரியன். ஆனால் இதுகுறித்து பிபிசியிடம் பேசிய திமுகவின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், "விஜய் பேசியிருப்பதை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. எங்கள் கூட்டணி உறுதியாக உள்ளது என்பதைத்தான் நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம்" என்று கூறினார். மேலும், "தமிழ்நாட்டில் சில நிகழ்வுகள் நடக்கும்போது, அதுகுறித்து கருத்து தெரிவிக்க - அது அரசுக்கு எதிராக இருந்தாலும் சரி - கூட்டணிக் கட்சிகளுக்கு முழு உரிமை உண்டு. ஆனால் அதை வைத்தே கூட்டணியில் சலசலப்பு என எடுத்துக்கொள்ள முடியாது," என்று விளக்கமளித்தார். விஜய் பேசியதில் எந்தப் புதிய விஷயமும் இல்லை எனக் கூறிய ரவீந்திரன், "திமுக கூட்டணியில் விரிசல் இல்லை, விரிசல் வருவதற்கான வாய்ப்பு இல்லை" எனக் கூறினார். பாஜக கூறுவது என்ன? பட மூலாதாரம்,@NARAYANANTBJP படக்குறிப்பு, பாஜக கூட்டணிக்கு தவெக வரவில்லை என்றாலும்கூட தங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்கிறார் நாராயணன் திருப்பதி தவெக தலைவர் விஜயின் முடிவு குறித்துப் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "நாங்கள் சொல்வது ஒன்றே ஒன்றுதான். திமுக எதிர்ப்பு நிலைப்பாடு கொண்ட யார் வேண்டுமானாலும் பாஜகவின் கூட்டணிக்கு வரலாம், கதவுகள் திறந்தே இருக்கும். தேர்தலுக்கு இன்னும் அதிக நாட்கள் இருக்கின்றன. ஆனால், எங்களுடைய இந்தக் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை" என்று கூறினார். அதேநேரம், பாஜக கூட்டணிக்கு தவெக வரவில்லை என்றாலும்கூட அதனால் எந்தப் பாதிப்பும் இல்லை என்கிறார் நாராயணன் திருப்பதி. கடந்த மாதம், மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் அ.தி.மு.க. தலைவர்கள் முன்பாகவே திராவிட இயக்கத் தலைவர்கள் குறித்த விமர்சனப் படம் திரையிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த மாநாட்டில் இந்து முன்னணி தயாரித்த காணொளி ஒன்று திரையிடப்பட்டது. அந்தப் படத்தில், பெரியார், அண்ணா உள்ளிட்ட திராவிடக் கட்சித் தலைவர்களை விமர்சிக்கும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றிருந்தன. 'தர்மம் காக்க, அதர்மம் அகற்ற' என்ற வார்த்தைகள் இடம்பெற்ற காட்சியில், 'தர்மம்' என்ற வார்த்தை ஒலிக்கும்போது இந்து முன்னணியின் நிறுவனர் ராமகோபாலனின் படமும் 'அதர்மம்' என்ற வார்த்தை ஒலிக்கும்போது பெரியார், அண்ணாதுரை, மு. கருணாநிதி ஆகியோரின் படங்களும் இடம்பெற்றிருந்தன. இதைக் குறிப்பிட்டே, "பெரியாரையும் அண்ணாவையும் அவமதித்து அரசியல் செய்தால், பாஜக ஒருபோதும் வெற்றி பெற இயலாது" என இன்று நடந்த தவெக செயற்குழு கூட்டத்தில் விஜய் பேசியிருந்தார். இதற்குப் பதிலளித்த நாராயணன் திருப்பதி, "அது பாஜக-வின் மாநாடு அல்ல, இந்து முன்னணி நடத்திய மாநாடு. எனவே அதை பாஜகவுடன் தொடர்புபடுத்திப் பேசுவது சரியாக இருக்காது" என்று பதிலளித்தார். 'பாஜகவின் நேர்மையற்ற அரசியல்' படக்குறிப்பு, மூத்த பத்திரிக்கையாளர் பிரியன் ஆனால், "உங்கள் கூட்டணி வேண்டாம் என விஜய் தெளிவாகச் சொன்ன பிறகும், அவரை இன்னும் கூட்டணிக்குள் இழுக்கப் பார்ப்பது நேர்மையற்ற அரசியல்" என பாஜகவின் நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சிக்கிறார் ப்ரியன். மாநில உரிமைகளுக்காகப் பேசும் கட்சிக்கே தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டே விஜய் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஆனால், பாஜக- திமுக எதிர்ப்பு வாக்குகளைக் குறிவைத்தே விஜய் இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறுகிறார் மூத்த பத்திரிக்கையாளர் சிகாமணி. "பாஜக எதிர்ப்பு நிலை என்ற உத்தியே கடந்த தேர்தலில் திமுகவின் ஆயுதமாக இருந்தது. இப்போது அதையே விஜயும் கையில் எடுத்துள்ளார். இதனால் பாஜக எதிர்ப்பு வாக்குகள் மட்டுமல்லாது திமுக எதிர்ப்பு வாக்குகளும் தனக்குக் கிடைக்கும் என்று அவர் கணிக்கிறார். அது தவறான கணக்கு," என்கிறார் சிகாமணி. "உண்மையில், விஜய் மற்றும் அவரது கட்சிக்கு இருப்பது அவரது ரசிகர்களால் உருவாக்கப்பட்ட ஒரு போலி பிம்பம் மட்டுமே" எனக் கூறும் சிகாமணி, களத்தில் தம்மை வலுப்படுத்திக் கொள்ளாமல், பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நிலைத்து நிற்கும் ஒரு கட்சியைத் தனது அரசியல் எதிரி என நிலைநிறுத்தும் முயற்சியை விஜய் தொடர்ந்து செய்வதாகவும் விமர்சிக்கிறார். "நடிகர் என்பதைத் தாண்டி, வேறு என்ன காரணத்திற்காக தமிழ்நாட்டு மக்கள் விஜய்க்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அவர் உறுதியாகப் பதிவு செய்ய வேண்டும். அதை விடுத்து, இத்தகைய பேச்சுகள், அரசியல் களத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது" என்றும் குறிப்பிடுகிறார் மூத்த பத்திரிக்கையாளர் சிகாமணி. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwykwwry73yo
  18. நகை தொலைந்ததாக பொய்யான புகார் வழங்கப்பட்டதாக ஒரு பேச்சு அடிபடுகிறது ஐயா.
  19. Published By: VISHNU 04 JUL, 2025 | 10:25 PM நாட்டின் பொருளாதார நன்மைகள் கீழ்நிலை கிராமிய மக்களுக்குச் செல்லாவிட்டால், புள்ளிவிவரங்களில் எவ்வளவு பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டாலும், எந்தப் பயனும் இருக்காது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஒருபுறம், நாட்டில் பொருளாதார வளர்ச்சியை அடைவதுடன், மறுபுறம், பொருளாதாரத்தை விரிவுபடுத்தி கிராமிய மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுத்து, அவர்களை பொருளாதாரத்தில் பங்கேற்பாளர்களாக மாற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் வலியுறுத்தினார். அலரி மாளிகையில் வெள்ளிக்கிழமை (04) பிற்பகல் நடைபெற்ற "சமூக சக்தி" தேசிய வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். "சமூக சக்தி" தேசிய வேலைத்திட்டம் தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான திட்டமாக, சமூகத்தை வலுப்படுத்துவதற்கும் சமூகத்தில் பொருளாதார நன்மைகளை சமமாக விநியோகிப்பதை உறுதி செய்வதற்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, சமூக சக்தி தேசிய வேலைத்திட்ட நிகழ்வில் பங்கேற்றவர்களை வரவேற்றதுடன், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க சமூக சக்தி தேசிய வேலைத்திட்டத்தின் நோக்கங்களை விளக்கினார். பின்னர் " சமூக சக்தி" தேசிய செயற்பாட்டுக் குழுவின் தலைவரும், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சருமான கலாநிதி உபாலி பன்னிலகே சமூக சக்தி தேசிய செயற்பாட்டை அறிமுகப்படுத்தினார். சமூக சக்தி உத்தியோகபூர்வ இணையத்தளம் இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இங்கு ஆற்றிய முழுமையான உரை, குறிப்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு நமது நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்ததை நாம் அறிவோம். இந்த வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்களை நாம் அடையாளம் காண முடியும். ஆனால், அந்தப் பொருளாதார வீழ்ச்சிக்கு எந்தவிதத்திலும் காரணமாகாத கிராமங்களில் உள்ள சாதாரண மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டனர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவர்களுக்கு உணவு கொள்வனவு செய்தல், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சிறந்த மருத்துவ வசதிகளைப் பெற்றுக்கொள்ளல், கல்விக்கான வசதிகளை உருவாக்குதல், கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற துறைகளில் பெரும் சரிவு ஏற்பட்டது. எனவே, தற்போதைய அரசாங்கத்திற்கு கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் சவாலும் பொறுப்பும் உள்ளது. அது கைவிட முடியாத ஒரு பொறுப்பு ஆகும். எமது அரசாங்கத்தின் முன்னுரிமைப் பணிகளில் கிராமிய வறுமையை ஒழிப்பதை ஒரு அத்தியாவசிய காரணியாக நாங்கள் கருதுகிறோம். தற்போது, பொருளாதாரத்தை குறிப்பிடத்தக்க அளவு நிலையான நிலைக்குக் கொண்டு வர முடிந்துள்ளது. நீண்ட காலமாக டொலரின்பெறுமதியை சுமார் 300 ரூபா அளவில் வைத்திருத்தல், அந்நியச் செலாவணி இருப்புக்களை முறையாக அதிகரித்தல், திறைசேரியின் வருமானத்தை நாம் எதிர்பார்த்த இலக்குகளுக்குக் கொண்டு செல்வது, வங்கி வட்டி விகிதத்தை ஒற்றை இலக்கத்தில் வைத்திருப்பது போன்ற பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்கான காரணிகளை கணிசமான அளவில் நிறைவுசெய்ய முடிந்துள்ளது. மேலும், நமது நாடு குறித்து முதலீடுகள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை படிப்படியாக வளர்க்க முடிந்துள்ளது. நிறுத்தப்பட்டிருந்த பல திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்துள்ளோம். பல புதிய திட்டங்களுக்கான ஏராளமான முன்மொழிவுகளும் கிடைத்துள்ளன. அதன் பல முக்கியமான முன்மொழிவுகள் கடந்த அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. எனவே, புதிய முதலீடுகள் மற்றும் புதிய அபிவிருத்தித் திட்டங்களில் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். நாம் செயல்படுத்தும் மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டங்கள் ஊடாக ஒருபுறம் பொருளாதார ஸ்திரத்தன்மையையும் மறுபுறம் பொருளாதார வளர்ச்சியையும் அடைய முடியும். ஆனால், அந்தப் பொருளாதாரப் பலன்கள் கீழ்நிலைக் கிராமிய மக்களுக்கு செல்லவில்லை என்றால், புள்ளி விபரத்தில் மாத்திரம் பொருளாதார ஸ்திரத்தன்மையையும் பொருளாதார வளர்ச்சியையும் அடைவதில் பயனில்லை. எனவே ஒருபுறம் பொருளாதார வளர்ச்சியும் மறுபுறம் பொருளாதார விரிவாக்கமும் அடைய வேண்டும். கிராமிய மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகள் உருவாக்கப்படாவிட்டால், அவர்கள் பொருளாதாரத்தில் பங்கேற்பாளர்களாக இல்லாவிட்டால், சாதாரண மக்கள் பொருளாதாரத்தில் இருந்து வெளியேறும் குழுவாக மாறிவிடுவார்கள். எனவே, பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதும், கிராமப்புறங்களில் சிதறிக் கிடக்கும் மக்களை அந்தப் பொருளாதாரத்தில் பங்கேற்பவர்களாக மாற்றுவதும்தான் எங்களின் முக்கிய அணுகுமுறை என்பதைக் கூற வேண்டும். மக்கள் தற்போது ஈடுபட்டுள்ள பொருளாதார மூலங்களை மிகவும் பயனுள்ளதாகவும், திறமையாகவும், இலாபகரமாகவும் மாற்றினால் மாத்திரமே அதனை அடைய முடியும். எனவே, கிராமிய மக்கள் தற்போது ஈடுபட்டுள்ள துறைகளின் உற்பத்தித் திறனை அதிகரித்து, இலாபகரமான தொழிலாக அதனை மாற்ற வேண்டும். மேலும், அவர்களின் பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துவது மிகவும் முக்கியமானது. அதன்படி, கிராமிய மக்களுக்கு புதிய பொருளாதார மூலங்களை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளித்துள்ளோம். அவ்வாறு செய்வதன் மூலம் பொருளாதாரத்தில் வலுவான பங்கேற்பாளர்களாக அவர்களை மாற்ற முடியும். வறுமை என்பது பொருளாதார மட்டத்தைத் தாண்டிச் செல்லும் ஒரு சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளது. ஏழை மக்கள் சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட குழுவாக மாறிவிட்டனர். எனவே, கிராமப்புற வறுமையை ஒழிப்பது அரசாங்கத்தின் முக்கிய பணியாகக் கருதப்படுகிறது. இந்த விடயத்தில், கல்வி மிகவும் முக்கியமான துறையாகும். வறுமைக் கோடும், கல்வி அறிவில்லாத கோடும் ஒன்றாகச் சேர்ந்துள்ளன. எனவே கல்வி வாய்ப்புகள் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும். இவை அனைத்தையும் செய்தாலும், எந்தவொரு சமுதாயத்திலும், எந்தக் காலத்திலும் கஷ்டப்படும் மக்கள் சமூகம் உள்ளது. வளர்ந்த நாடுகளாகக் கருதப்படும் நாடுகளில் கூட இத்தகைய சமூகங்கள் உள்ளன. அந்த மக்களைக் கவனித்துக் கொள்ள நிவாரணத் திட்டம் தேவை. நிவாரணம் என்பது ஒரு மோசமான கருவி அல்ல. ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஒரு சமூகம் பாதுகாக்கப்படாவிட்டால், அந்த சமூகத்தைப் பாதுகாப்பது ஒரு அரசாங்கத்தின் பொறுப்பாகும். இருப்பினும், இந்தப் பொறுப்பு கணிசமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு அரசியல் கருவியாக மாறிவிட்டது. நிவாரணத் திட்டம் குறிப்பிடத்தக்க அரசியல்மயமாக்கலுக்கு உள்ளாகியுள்ளதால், அது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளது. இலக்குமயப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணங்களை வழங்குவதே எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கையாகும். யார் யாருக்கு? என்ற இலக்குடன் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அரசாங்கத்திற்கு அத்தகைய பொறுப்பு இருக்கிறது என்று நான் நினைக்கிறேன், மேலும் சமூகமும் அதில் கவனம் செலுத்த வேண்டும். அரசாங்கம் ஏதாவது வழங்கினால், அவர்கள் பெறும் அனைத்தையும் நாமும் பெற வேண்டும் என்ற ஒரு எண்ணம் நம் சமூகத்தில் உள்ளது. அது தவறு. நமது அரசு அத்தகைய கலாசாரம், சமூக பிணைப்பு கொண்ட அரசு அல்ல. பராமரிக்க வேண்டியவர்களை எப்போதும் கவனித்துக் கொள்வது நமது கலாசார பண்பு ஆகும். கடந்த காலத்தில் ஏற்பட்ட திரிவுபடுத்தப்பட்ட சூழ்நிலைகள் காரணமாக, இன்று உதவி பெறத் தகுதியானவர்களுக்கு நாம் உதவி வழங்க முயற்சிக்கும்போது, அதைத் தாங்களும் பெற வேண்டும் என்று சிலர் முயற்சிக்கிறார்கள். எனவே, ஒரு புதிய கலாசாரம் தேவை. அரசாங்கம் வழங்கும் உதவிகள் தகுதியானவர்களுக்கு மாத்திரமே கிடைக்க வேண்டும் என்பதை மக்கள் தானாக உணர வேண்டும். தனக்கு திறன் இருந்தாலும், அடுத்த வீட்டுக்காரருக்கு அதே திறன் இல்லை. மக்களுக்கு உதவ வேண்டும் என்று உணர வேண்டும். ஆனால், இன்று நமது நாட்டின் கலாசாரம் என்ன? ஏதாவது கொடுக்கப்பட்டால், அதைப் பெறுவதற்கு ஒரு போராட்டம் உள்ளது. அது தனக்கு பொருத்தமானதா? இல்லையா? அவசியமா? இல்லையா? தனக்கு அதற்கு உரிமை இருக்கிறதா? இல்லையா? என்று சிந்திக்காமல். எனவே, மிகவும் வலுவான தரவுக் கட்டமைப்பை உருவாக்க எதிர்பார்க்கிறோம். ஆனால், நாம் அனைவரும் அறிந்தபடி, நாம் எப்போதும் கதைக்கும் இந்த நிவாரணத் திட்டத்தை எப்போதும் நம்பியிருக்க முடியாது. எப்போதும் நிவாரணத் திட்டத்திற்கான தேவை உள்ளது. அதனால்தான் எப்போதும் நிவாரணத் திட்டம் உள்ளது. ஆனால் அது ஒரு நபருக்காகவோ, ஒரு சமூகத்திற்காகவோ மாத்திரம் அல்ல. ஏனையவர்களும் பொருளாதாரத்தின் பங்காளர்களாக மாற்றப்பட வேண்டும். இதற்காக குறிப்பிடத்தக்க அளவு அரசாங்கம் பணம் செலவிடப்பட்டுள்ளது. அஸ்வெசும திட்டத்திற்கு மட்டும் சுமார் 230 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனைய நிவாரணத் திட்டங்களுக்கு அதிக அளவு பணம் செலவிடப்படுகிறது. ஆனால், இந்த பணத்தை உதவிகள் சென்றடையவேண்டிய சமூகத்திற்கு நாம் கொடுத்திருக்கிறோமா? அந்த பணத்திலிருந்து எதிர்பார்க்கப்படும் நன்மைகள் பெறப்பட்டதா? இல்லை, அந்த நன்மை கிடைக்கவில்லை. பல்வேறு சர்வதேச அமைப்புகள் இந்த நாட்டில் நிவாரணத் திட்டங்களை செயல்படுத்துகின்றன. அவற்றைப் நோக்கும்போது, அவற்றில் 50% க்கும் அதிகமான தொகை உதவி வழங்குவதற்கான பொறிமுறையைத் தயாரிப்பதற்கு செலவிடப்படுகின்றன. ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டதும் அதில் ஒரு பகுதி தனக்குப் பெறுவதற்கு அதிகாரி ஒருவர் காத்திருப்பார். அவருக்கு ஒரு தொழில் இருக்கும். அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஒரு கொடுப்பனவு தேவை என்று அவருக்குத் தெரிவிக்கப்படுகிறது. எனவே, இந்த நிவாரணத் திட்டத்தில் ஒரு பெரிய தொகை உதவி, பெற வேண்டிய நபர்களுக்கு அன்றி உதவி வழங்குவதற்கான பொறிமுறைக்கு செலவிடப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், அது தொடர்பான பயிற்சிக்காக அதிக அளவு பணம் செலவிடப்படுகிறது. இது நிறுத்தப்பட வேண்டும். உதவி சென்றடையவேண்டிய சமூகத்திற்கு உதவி வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கும் அரச அதிகாரிகளுக்கும் உள்ளது. இதனை தவறாகப் பயன்படுத்த இடமளிக்க மாட்டோம் என நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். தகுதியானவர்களுக்கு உதவி வழங்குவதற்கான முன்னெடுப்பொன்றை தொடங்கப்பட வேண்டும். ஒவ்வொரு அமைச்சும் ஏதாவதொன்றை வழங்க வேண்டும் என்று நினைக்கும் போக்கு காணப்படுகிறது. இருப்பினும், மிகவும் துல்லியமான தரவுக் கட்டமைப்பின் அடிப்படையில் என்ன வழங்கப்பட வேண்டும்? எந்த நோக்கத்தில் வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். இருப்பினும், தற்போது அவ்வாறு நடக்கவில்லை. ஒவ்வொரு நிறுவனமும் திணைக்களமும் உதவி வழங்க விரும்புகின்றன. இருப்பினும், கிராமப்புற மக்களுக்குச் செல்லும் உதவிகளும், அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். உயிர்வாழ்வதற்காக மட்டுமே எங்கள் உதவியில் அதிக பகுதி வழங்கப்பட்டுள்ளது. அந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியவில்லை. அதனால்தான் ஒரு கூட்டு முன்னெடுப்பு தேவை. அந்த முன்னெடுப்பிற்காக நாங்கள் சமூக சக்தி திட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம். இது ஒரு இலக்காகக் கொண்ட திட்டமாகும். இந்தத் திட்டம் பிரதேச செயலக மட்டம் வரை தயாரிக்கப்பட வேண்டும். தற்போது, நிர்வாகக் கட்டமைப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழ் இல்லாமல் ஒரு குழந்தை இனி பிறக்கும் என்று நான் நினைக்கவில்லை. உரிய வயதை அடையும் போது, அவர் அடையாள அட்டையை பெறுவார். அடுத்த இரண்டு ஆண்டுகளில், டிஜிட்டல் மயமாக்கல் பொறிமுறை செயல்படுத்தப்படும். அப்படியானால், பொறிமுறையில் கீழ் மட்ட நிர்வாகத்தின் பொறுப்பு என்ன? அதன் தன்மையைக் கண்டறிந்து, அந்த அலகை அந்த இயல்புடன் முன்னோக்கி எடுத்துச் செல்ல ஒரு திட்டத்தை உருவாக்குவதே கீழ் மட்டத்திலுள்ள நிர்வாக அலகின் பொறுப்பாகும்.பிரதேச செயலக அலுவலகத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கான ஒரு திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். அந்த இடத்திற்காக பணத்தைச் செலவிட வேண்டிய அவசியம் உள்ளது.அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். நமது அரச இயந்திரம் குறிப்பிடத்தக்க அளவிற்கு பழுதடைந்த நிலையில் உள்ள ஒரு அரச இயந்திரம் என்பதையும் நான் ஏற்கிறேன். அரச அதிகாரிகளுக்குச் சொந்தமான அனைத்து வாகனங்களையும் எடுத்துக் கொண்டால், அவை 15 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை. வீதியில் உள்ள பஸ்களில் 50% க்கும் அதிகமானவை வீதியில் பயணிக்கத் தகுதியற்றவை. அலுவலகத்தில் உள்ள கணினிகள் கணிசமானவை பழமையானவையாகும். எங்கள் நிறுவனங்களில் உள்ள முறைமைகள் புதுப்பிக்கப்படவில்லை. கட்டிடங்கள் சிதைந்து வருகின்றன. ஒவ்வொரு கோணத்திலிருந்தும் பார்த்தால், எங்களிடம் ஒரு அரசு இயந்திரம் பழுதடைந்துள்ளது. ஒரு சாதாரண கிராமவாசியைப் போல, எங்கள் பையில் கொஞ்சம் வெற்றிலையுடனும் பாக்குடனும் அலுவலகத்திற்கு வருகிறோம். அதுதான் உண்மை. கடந்த வரவு செலவுத்திட்டத்தில், சம்பளம் அதிகரிக்கப்பட்டது. மனித வளங்களுக்கு தேவையான ஆதரவு வழங்கப்பட்டது. எனவே, அடுத்த வரவு செலவுத்திட்டத்தில் அரச இயந்திரத்தின் பௌதீக வளங்களை கட்டியமைக்க நாங்கள் பாடுபட இருக்கிறோம்.பெளதீக வளங்களை உருவாக்குவதை விட புதிய மென்பொருள் அமைப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அரச கட்டமைப்பை நவீனமயமாக்குவோம். இருப்பினும், பிரஜைகளுக்காக நாங்கள் அதைச் செய்வோம். அவ்வாறு நவீனமயமாக்கப்பட்ட அரசாங்கத்தில், பழைய நாற்காலியில் அதே பழைய நபர்அமர்ந்தால், அதில் எந்தப் பயனும் இல்லை. எனவே, அந்த நவீனமயமாக்கப்பட்ட அரச இயந்திரத்தில் நமக்கு ஒரு புதிய அரச ஊழியர் அமர வேண்டும். அப்போதுதான் இந்த சவாலை நாம் வெற்றி கொள்ள முடியும். இல்லையெனில், இது ஒரு அரசியல் அதிகாரத்திலுள்ளவர்களின் பொறுப்பு கிராம உத்தியோகஸ்தரின் பணி, அபிவிருத்தி அதிகாரியின் பணி, பிரதேச செயலாளர் பணி என நாம் ஆங்காங்கே பிரித்து இதனைச் செய்ய முடியாது. அரசியல் அதிகாரத்தையும் அரச இயந்திரத்தையும் கைவிடாத ஒரு கூட்டு நடவடிக்கை தேவை. அரச இயந்திரம், அரச அதிகாரி மற்றும் குடிமகனை ஒரு கூட்டு பொறிமுறைக்குள் கொண்டுவருவதே சமூக சக்தி திட்டத்தின் நோக்கமாகும். அவ்வாறின்றி எதையும் வெற்றிகொள்ள முடியாது. இருக்கும் ஒரு அரசை பராமரிக்க எமக்குத் தேவையில்லை. அவ்வாறு செய்வதானால் இருக்கும் அரசை தற்பொழுது இருப்பது போன்றே பராமரிக்கலாம். வீழ்ச்சியடைந்த ஒரு அரசை கட்டியெழுப்ப , அரசியல் அதிகாரம், அரச இயந்திரம் மற்றும் குடிமகனை ஒரு ஒன்றிணைந்த நடவடிக்கைக்குள் கொண்டு வர வேண்டும். எனவே, வீழ்ச்சியடைந்த அரசில் பொருளாதாரத்தை இழந்த ஒரு சமூகம் உள்ளது. பொருளாதார வாய்ப்புகளை உருவாக்க அந்த சமூகத்திற்கு ஒரு கூட்டு நடவடிக்கை அவசியப்படுகிறது. இந்த சமூக சக்தி திட்டத்தை வெற்றிபெறச் செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கோருகிறேன்'' என்று ஜனாதிபதி தெரிவித்தார். சமூக சக்தி தேசிய கொள்கைச் சபையின் ஒருங்கிணைப்பாளரும், தேசிய நடவடிக்கைக் குழுவின் தலைவரும் , கிராமிய அபிவிருத்தி, சமூக வலுவூட்டல் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்ததாவது, நமது நாட்டில் வறுமை பற்றிப் பேசுகையில், கிராமம் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. இலங்கையில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும், குறிப்பாக ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கப் பகுதிகளைப் நோக்கினால், கிராமத்தை மறந்துவிடாமல் வறுமையைப் பற்றி ஆராய முடியாது. அதனால் தான் ஐக்கிய நாடுகள் சபை ஜூலை 6 ஆம் திகதியை உலக கிராமப்புற அபிவிருத்தித் தினமாக அறிவித்துள்ளது. நம் நாட்டில் கிராமப்புற வறுமை பற்றி பல தசாப்தங்களாக பேசப்பட்டு வருவதோடு அதை மாற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உதாரணமாக, 2000 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, நம் நாட்டில் நிவாரணத்தை நம்பியிருக்கும் மக்களின் எண்ணிக்கை 1.1 மில்லியனாக இருந்தது. 2010 ஆம் ஆண்டளவில், அது 1.5 மில்லியனாக அதிகரித்தது. 2024 ஆம் ஆண்டின் இறுதியில், நிவாரணத்தை நம்பியிருக்கும் மக்களின் எண்ணிக்கை சுமார் 1.8 மில்லியனை எட்டியது. வறுமையை ஒழிக்க எத்தனை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், நம் நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. உலக மக்கள் தொகை வேகமாக நகரமயமாகி வந்தாலும், நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 79% ஆனோர் கிராமப்புறங்களில் அல்லது தோட்டங்களை அண்டியதாக வாழ்கின்றனர். எனவே, தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமாக, எங்கள் கொள்கைகளைத் திட்டமிடும்போது கிராமப்புற வறுமையை ஒழிப்பதை ஒரு முக்கிய எண்ணக்கருவாகக் கொண்டோம். இந்தத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன், நம் நாட்டில் செயல்படுத்தப்படும் வறுமை ஒழிப்புத் திட்டங்களின் பலவீனங்களை நாங்கள் கவனமாக ஆய்வு செய்தோம். அந்த பலவீனங்களை ஒதுக்கி நம் நாட்டில் வறுமையை உண்மையிலேயே எவ்வாறு ஒழிப்பது என்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இந்த திட்டத்தை நாங்கள் தயாரித்தோம். இந்த திட்டத்தின் மூலம் பல நோக்கங்களை அடைய நாங்கள் எதிர்பார்க்கிறோம்'' என்றார். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க,பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ், பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க உள்ள அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் , மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, மாகாண ஆளுநர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள்,அரச அதிகாரிகள், சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/219210
  20. Published By: RAJEEBAN 04 JUL, 2025 | 01:46 PM காசாவில் மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதை தான் பார்த்ததாக முன்னாள் பாதுகாப்பு ஒப்பந்தக்காரர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார் இஸ்ரேல் அமெரிக்க ஆதரவுடன் மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றன என அவர் தெரிவித்துள்ளார். ஒரு சந்தர்ப்பத்தில் பெண்கள் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அடங்கிய குழு ஒன்று அந்த இடத்தை விட்டு மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்ததால் ஒரு காவலர் இயந்திர துப்பாக்கியால் கண்காணிப்பு கோபுரத்திலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனியர் ஒருவர் நிலத்தில் விழுந்தார் அசையாமல் தரையில் விழுந்தார். பின்னர் அங்கு நின்று கொண்டிருந்த மற்றொரு ஒப்பந்ததாரர் 'அடடா நீங்கள் ஒன்றைப் பெற்றுள்ளீர்கள் என்று நினைக்கிறேன்' என்று கூறினார். பின்னர் அவர்கள் அதைப் பற்றி சிரித்தனர் என அவர் தெரிவித்துள்ளார். தனக்கு தகவல் வழங்கிய நபர் காசாவில் மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் நான்கு இடங்களில் பணியாற்றியவர். மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதிகளில் தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் காணப்படுகின்றது, கட்டுப்பாடு எதுவும் இல்லை என தெரிவித்தார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. ஒப்பந்தக்காரர்களிற்கு அவர்கள் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது குறித்து தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்படவிலலை என பிபிசிக்கு தெரிவித்துள்ள அந்த நபர் அச்சுறுத்தலான நிலைமை காணப்பட்டால் முதலில் சுடுங்கள் பின்னர் கேள்வி கேளுங்கள் என குழுத்தலைவர் ஒருவர் தனது குழுவிடம் தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளார். நாங்கள் காசாவில் பணிபுரிகின்றோம், இங்கு விதிமுறைகள் இல்லை, நீங்கள் என்னவேண்டுமென்றாலும் செய்யலாம் என்பது போன்ற தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனியர்கள் அந்த இடத்திலிருந்து விலகி சென்றாலோ, ஆபத்தான நோக்கத்தை வெளிப்படுத்தாவிட்டாலும் நாங்கள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டோம், எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்தோம், நாங்கள் தவறிழைத்துள்ளோம், அலட்சியமாக இருந்துள்ளோம் என அந்த நபர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தளத்திலும் அந்தப் பகுதியில் நடக்கும் நடவடிக்கைகளை சிசிடிவி மூலம் கண்காணித்து வருவதாகவும் அங்கு யாரும் காயமடையவில்லை அல்லது சுடப்படவில்லை என மனிதாபிமான பொருட்களை விநியோகிக்கும் காசா மனிதாபிமான பவுண்டேசன் தெரிவிப்பது "முற்றிலும் நிர்வாணப் பொய்" என அந்த நபர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். குழுத் தலைவர்கள் "காசா மக்களை ஜொம்பிகூட்டங்கள்" என்று குறிப்பிட்டனர். இந்த மக்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதை மறைமுகமாகக் கூறினர்" என்று கூறினார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. பாலஸ்தீனியர்கள் பலமுறை கடுமையாக காயமடைந்ததாகத் தோன்றிய பல சந்தர்ப்பங்களை தான் கண்டதாக அவர் தெரிவித்துள்ளார். நபர் ஒருவர் பெப்பர் ஸ்பிரே தாக்குதலிற்குள்ளானார். ஸ்டன் கையெறி குண்டின் உலோகப் பகுதியால் பெண் ஒருவர் தாக்கப்பட்டார் என அவர் தெரிவித்துள்ளார். "இந்த உலோகத் துண்டு அவரது தலையில் நேரடியாகத் தாக்கியது அவர் அசையாமல் தரையில் விழுந்தார்" அவள் இறந்துவிட்டாளா? என்று எனக்குத் தெரியவில்லை. அவள் மயக்கமடைந்து முற்றிலும் முற்றிலும் எழ முடியாத நிலையில் காணப்பட்டாள் என அந்த நபர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/219168
  21. கேரளாவில் சிக்கியுள்ள போர் விமானத்தை மீட்க முடியாமல் பிரிட்டன் தடுமாறுகிறதா? என்ன நிலவரம்? படக்குறிப்பு, இந்த எஃப்-35பி போர் விமானம் ஜூன் 14ஆம் தேதி முதல் கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது கட்டுரை தகவல் கீதா பாண்டே பிபிசி நியூஸ், டெல்லி 6 மணி நேரங்களுக்கு முன்னர் பிரிட்டனை சேர்ந்த அதிநவீன போர் விமானம் ஒன்று கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக சிக்கிக் கொண்டிருக்கிறது. இது பேசுபொருளாவதுடன், ஒரு நாட்டின் நவீன விமானம் எப்படி வெளிநாட்டில் பல நாட்கள் சிக்கியிருக்க முடியும் என்ற கேள்வியையும் எழுப்புகிறது. எஃப்-35பி விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஜூன் 14ஆம் தேதி தரையிறங்கியது. இந்திய பெருங்கடலின் மீது பறந்து கொண்டிருந்தபோது மோசமான வானிலையில் சிக்கிக்கொண்ட விமானம், பிரிட்டன் ராயல் கடற்படையின் ஹெச்.எம்.எஸ். பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் விமானம் தாங்கிக் கப்பலுக்கு திரும்ப முடியாத சூழலில் விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட்டது. அங்கு அது பாதுகாப்பாகத் தரையிறங்கியது, ஆனால் அதன் பின்னர் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த விமானத்தால் கப்பலுக்குத் திரும்ப முடியவில்லை. விமானம் தரையிறங்கிய பின்னர் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் விமானம் தாங்கிக் கப்பலின் பொறியாளர்கள் குழு வந்து அதை ஆய்வு செய்துள்ளனர். ஆனால் அவர்களால் இதுவரை விமானத்தில் ஏற்பட்ட கோளாறைச் சரி செய்ய முடியவில்லை. "விமான நிலையத்தில் உள்ள பராமரிப்பு பழுதுநீக்கல் வசதிக்கு விமானத்தை நகர்த்த முன்வைக்கப்பட்ட திட்டத்தை பிரிட்டன் ஏற்றுக்கொண்டுள்ளது. சிறப்புக் கருவிகளுடன் பிரிட்டன் பொறியாளர்கள் குழு வந்தவுடன் விமானம் ஹேங்கருக்கு (விமானத்தை நிறுத்தி வைக்கும் இடம்) கொண்டு செல்லப்படும். இதன் மூலம் மற்ற விமானங்களின் வழக்கமான பராமரிப்புப் பணிகள் மிகக் குறைந்த அளவே பாதிக்கப்படும்," என பிரிட்டன் தூதரகம் பிபிசிக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்தது. "பழுதுநீக்கம் மற்றும் பாதுகாப்பு சோதனைகள் முடிவடைந்த பின்னர் விமானம் தனது வழக்கமான சேவைகளைத் தொடங்கும். பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுமையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய இந்திய அதிகாரிகளுடன் நெருக்கமாகத் தொடர்பு கொண்டு விமானக் குழுவினர் பணியாற்றி வருகின்றனர்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் சனிக்கிழமை வருவார்கள் என எதிர்பார்ப்பதாக திருவனந்தபுரம் விமான நிலைய அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர். 110 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த போர் விமானத்தை பிரிட்டனின் ராயல் விமானப் படையைs சேர்ந்த ஆறு அதிகாரிகள் 24 மணிநேரமும் பாதுகாத்து வருகின்றனர். மும்பையில் உள்ள அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் பாதுகாப்பு, உத்தி மற்றும் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநர் சமீர் பாட்டீல், ராயல் கடற்படைக்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாக பிபிசியிடம் தெரிவித்தார். "அதில் ஒன்று, விமானத்தைப் பழுதுநீக்கி பறக்கச் செய்வது. இல்லையென்றால், சி-17 குளோப்மாஸ்டர் சரக்கு விமானம் போன்ற அதைவிடப் பெரிய சரக்கு விமானத்தைப் பயன்படுத்தி அதைக் கொண்டு செல்லலாம்." போர் விமானம் சிக்கிக் கொண்டிருக்கும் விவகாரம் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்திலும் எழுப்பப்பட்டுள்ளது. விமானத்தைப் பாதுகாத்து, மீண்டும் அதன் பணிகளைத் தொடங்குவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றித் தெளிவுபடுத்த வேண்டும் என திங்கள் கிழமையன்று எதிர்க்கட்சியான பழமைவாத கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பென் ஒபீஸ் ஜெக்டி அரசிடம் கேள்வி எழுப்பியதாக, யுகே டிஃபென்ஸ் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. "விமானத்தை மீட்க அரசு எடுக்கும் நடவடிக்கைகள் என்ன, அதற்கு இன்னமும் எத்தனை காலம் எடுக்கும் மற்றும் ஹேங்கரில் விமானம் இருக்கும்போதும் பார்வைக்குத் தெரியாமல் இருக்கும்போதும் விமானத்தின் ரகசிய தொழில்நுட்பங்கள் பாதுகாக்கப்படுவதை அரசு எப்படி உறுதி செய்யும்?" என அவர் கேட்டதாகக் கூறப்பட்டுள்ளது. விமானம் தொடர்ந்து பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருப்பதாக பிரிட்டனின் ஆயுதப் படைகள் அமைச்சர் லூக் பொலார்ட் உறுதி செய்தார். "எஃப் 35பி போர் விமானத்தால் கப்பலுக்குத் திரும்ப முடியாதபோது, முதல்தர ஆதரவளித்த நமது இந்திய நண்பர்களுடன் இணைந்து நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்," என அவர் தெரிவித்தார். அதோடு, "ராயல் விமானப்படையின் வீரர்கள் விமானத்துடன் எப்போதும் இருக்கிறார்கள் என்பதால் போர் விமானத்தின் பாதுகாப்பு சிறந்த கரங்களில் இருக்கிறது என்பதில் உறுதியாக இருக்கிறேன்" என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம்,KERALA TOURISM படக்குறிப்பு, கேரளாவுக்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளைப் போலவே, போர் விமானத்திற்கும் அங்கிருந்து திரும்பச் செல்வது கடினமாக இருப்பதாக கேரளா மாநில சுற்றுலாத் துறை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது லாக்ஹீட் மார்டீனால் தயாரிக்கப்படும் எஃப் 35பி போர் விமானங்கள் மிகவும் நவீன ஸ்டெல்த் (மறைந்து செயல்படும் ஆற்றல் கொண்ட) போர் விமானங்களாகும். இவற்றின் குறுகிய தூரத்தில் மேலெழும்பிப் பறக்கத் தொடங்கும் திறன் மற்றும் செங்குத்தாகத் தரையிறங்கும் ஆற்றல் மிகவும் பாராட்டப்படுகின்றன. எனவே, ஓடுதளத்தில் "எஃப் 35பி தனிமையில்" நிறுத்தி வைக்கப்பட்டு கேரளாவின் பருவமழையில் நனையும் காட்சிகள் சமூக ஊடகங்களில் மீம்களாக பரவி வருகின்றன. போர் விமானம் மிகவும் மலிவு விலையான 4 மில்லியன் டாலருக்கு இணையதளம் ஒன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதாக நகைச்சுவையாக ஒரு பதிவு வைரலானது. "ஆட்டோமேடிக் பார்க்கிங், புத்தம் புதிய டயர்கள், புதிய பேட்டரி மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுவோரை அழிக்க ஆட்டோமேடிக் துப்பாக்கி" போன்ற அம்சங்கள் இருப்பதாக அதில் நகைச்சுவையாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் போதிய காலம் இருந்துவிட்டதால் அந்த போர் விமானத்திற்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். மற்றொருவர் இந்தியா வாடகை வசூலிக்க வேண்டும் எனவும், கோஹினூர் வைரம் பொருத்தமான கட்டணமாக இருக்கும் எனவும் ஆலோசனை தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, F-35B போர் விமானம் (சித்தரிப்புப் படம்) புதன்கிழமை கேரள அரசின் சுற்றுலா துறையும் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வேடிக்கைப் பதிவுகளில் பங்கெடுத்தது. விமானத்தின் புகைப்படத்துடன், "கேரளா, நீங்கள் வெளியேறவே விரும்பாத இடம்" என சுற்றுலா துறை பதிவிட்டது. அந்தப் பதிவில் தென்னை மரங்களின் பின்னணியில் எஃப் 35பி போர் விமானம் ஓடுதளத்தில் நின்றுகொண்டிருப்பது போன்ற செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. அதன் இயற்கையான அழகுக்காக சுற்றுலா விளம்பரக் கையேடுகளில் "கடவுளின் தேசம்" என விவரிக்கப்படும் மாநிலத்திற்கு வரும் பெரும்பாலான பயணிகளைப் போலவே, இந்தப் போர் விமானமும் அங்கிருந்து வெளியேற விரும்பவில்லை எனக் கூறும் வகையிலான வாசகமும் அதில் இடம்பெற்றுள்ளது. ஆனால், போர் விமானம் சிக்கிக் கொண்டிருக்கும் ஓவ்வொரு நாளும் , எஃப் 35பி மற்றும் ராயல் கடற்படையின் பிம்பத்தை எதிர்மறையாகப் பாதிக்கும் என்கிறார் பாட்டீல். "நகைச்சுவை துணுக்குகள், மீம்கள், வதந்திகள் மற்றும் சதிக் கோட்பாடுகள் போன்றவை பிரிட்டன் ராயல் கடற்படையின் நற்பெயரைப் பாதிக்கின்றன. எவ்வளவு காலம் போர் விமானம் சிக்கிக்கொண்டு இருக்கிறதோ அந்த அளவுக்குத் தவறான தகவல்கள் பரவும்." முதலில் நினைத்ததைவிட தொழில்நுட்ப பிரச்னைகள் மேலும் மோசமானவையாகத் தெரிவதாக அவர் கூறுகிறார். ஆனால் பெரும்பாலான ராணுவங்கள் "மிகவும் மோசமான சூழ்நிலைகளுக்கு" தயார்படுத்திக் கொள்வதாகவும், போர் விமானம் வெளிநாட்டு மண்ணில் சிக்கிக்கொள்வது அத்தகைய ஒரு சூழ்நிலை எனவும் அவர் தெரிவித்தார். "இதுபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு பெரும்பாலான ராணுவங்கள் ஒரு நிலையான செயல்பாட்டுத் திட்டத்தை வைத்திருப்பார்கள். அப்படியிருக்க, ராயல் கடற்படையிடம் அப்படிப்பட்ட திட்டம் இல்லையா?" என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார். அதோடு, இதைப் பற்றிய தோற்றம் மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறும் அவர், "இதைப் போன்ற ஒரு சம்பவம் எதிரி மண்ணில் நடைபெற்றிருந்தால், அவர்கள் இத்தனை நேரம் எடுத்துக் கொள்வார்களா? ஒரு தொழில்முறை கடற்படைக்கு இது மிக மோசமான மக்கள் தொடர்பாக இருக்கிறது" என்றார். - திருவனந்தபுரத்தில் இருந்து கூடுதல் தகவல்களை சேகரித்து அளித்தவர் அஷரஃப் பத்தனா - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj9vzv10zdzo
  22. Published By: VISHNU 04 JUL, 2025 | 09:22 PM முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர் திருவிழாவில் தேரிலுள்ள கலசம் விழுந்ததில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவமானது 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. தேரிலுள்ள கலசத்தில் மின்வடம் தட்டுப்பட்டு கலசம் கீழ் விழுந்ததாக தெரியவந்துள்ளது. கலசம் சுமார் 50 கிலோ எடையிருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/219209
  23. Published By: DIGITAL DESK 2 04 JUL, 2025 | 08:54 PM லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் 100 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின், இந்நாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் தீபக் தாஸ், இதற்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் இன்று வெள்ளிக்கிழமை (04) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளித்தார். இந்த நன்கொடை, லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் இலங்கையின் கல்வி, சுகாதாரம் மற்றும் கலாசார துறைகளுக்கு வழங்கும் நன்கொடைகளுக்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே மற்றும் லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/219203
  24. பட மூலாதாரம்,TNDIPR படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவை கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த 1967ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7ஆம் தேதி அண்ணா தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்றார். இந்தச் சம்பவம் நிகழ்ந்து 58 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் இன்று வரையிலும் தமிழ்நாட்டை திமுக அல்லது அதிமுக என்கிற இரு கட்சிகள் மட்டுமே ஆட்சி செய்துள்ளன. மாநிலத்தில் ஒரு ஆட்சி அமைவதற்குப் பல சாத்தியங்கள் உள்ளன. ஒரு அரசியல் கட்சி தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறலாம், கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு ஆட்சி அமைக்கும் கட்சி தனிப் பெரும்பான்மையைப் பெறலாம், ஆட்சி அமைக்கும் கட்சி தனிப் பெரும்பான்மை பெறாமல் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாம். தமிழ்நாட்டில் இவை அனைத்துமே நடந்துள்ளன. ஆனால் எல்லா சமயங்களிலும் திமுக, அதிமுக என்கிற இரு கட்சிகள் மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளன. கூட்டணிக் கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற்றது இல்லை. தற்போதைய அரசியல் சூழலில், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கூட்டணி ஆட்சி தொடர்பான விவாதங்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சியின் கொள்கை அறிவிப்புக் கூட்டத்தில் ஆட்சியில் பங்கு பற்றிப் பேசியிருந்தார். மேலும் அவர், திமுக, பாஜக என இருதரப்பிலும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும், தவெக தலைமையிலான கூட்டணி உருவாக்கப்படும் எனவும் இன்று கூறியுள்ளார். தற்போது பல்வேறு கட்சிகளும் தமிழ்நாட்டில் கூட்டணி அரசு அமைவது பற்றிப் பேசி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், வரவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தல் இதுநாள் வரை இருந்த நிலையை மாற்றுமா? தமிழ்நாடு அரசியலும் கூட்டணி ஆட்சியும் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 1967 தொடங்கி 2021 வரை தமிழ்நாட்டில் 13 முறை சட்டமன்றத் தேர்தல்கள் நடந்துள்ளன. தமிழ்நாட்டில் 1952, 1957 மற்றும் 1962 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வென்று ஆட்சி செய்தது. 1967 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வென்றது. 138 இடங்களில் வென்று பெரும்பான்மை பெற்ற திமுக ஆட்சி அமைத்தது. கடந்த 1967இல் தொடங்கி 2021 வரை தமிழ்நாட்டில் 13 முறை சட்டமன்றத் தேர்தல்கள் நடந்துள்ளன. இதில் ஒரு முறை மட்டுமே ஆளும் கட்சிக்கு தனிப் பெரும்பான்மை இல்லாமல் இருந்துள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. இதில் திமுக 96 இடங்களில் வென்றிருந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் பாமக முறையே 34 மற்றும் 18 இடங்களில் வென்றிருந்தன. திமுக ஆட்சி அமைத்தது. கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-தேமுதிக கூட்டணி வெற்றி பெற்றது, அதிமுக 150 இடங்களைப் பிடித்திருந்தது. அப்போது கூட்டணி அரசாங்கம் பற்றித் தேர்தல் முடிவுகளுக்கு முன்பாகப் பேசியிருந்த அதிமுக தலைவர் தம்பிதுரை, "தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்பதால் கூட்டணி அரசு அமைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை" என்றார். அப்போது கூட்டணி ஆட்சி தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்திருந்த அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி, "ஆட்சி அமைப்பதற்குத் தேவையான இடங்களில் வெல்வோம். அது எங்களுடைய அரசாகவும் இருக்கலாம் அல்லது கூட்டணி அரசாகவும் இருக்கலாம்" எனக் கூறியிருந்தார். கூட்டணி ஆட்சி பற்றி பிற கட்சிகள் என்ன சொல்கின்றன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமித் ஷா சமீபத்தில் அதிமுக கூட்டணி பற்றிப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கண்டிப்பாக ஆட்சி அமைக்கும். கூட்டணி ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கும். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையின் கீழ் பாஜக இருப்பதால் அதிமுகவை சேர்ந்தவர் முதலமைச்சராக இருப்பார்" எனத் தெரிவித்திருந்தார். அமித் ஷாவின் கருத்து விவாதப் பொருளான நிலையில், அதுகுறித்துப் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், "முதல்வர் வேட்பாளர் பழனிசாமிதான்" என்றும், தங்கள் கூட்டணியை எந்தக் காலத்திலும் பிளவுபடுத்த முடியாது எனவும் குறிப்பிட்டார். மேலும், "கூட்டணியின் தலைவராக எடப்பாடி பழனிசாமி இருப்பார். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி விவகாரம் குறித்து அமித் ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் பேசி முடிவெடுப்பார்கள்" எனத் தெரிவித்தார். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி ஆட்சியை வரவேற்பதாகக் கூறியிருந்தார். இது தொடர்பாகப் பேசிய அவர், "கூட்டணி ஆட்சி என்பதை வரவேற்கிறோம். அதிகாரப் பகிர்வு மக்களுக்கு நல்லதையே கொண்டு சேர்க்கும்" என்றார். பட மூலாதாரம்,THIRUMA OFFICIAL FACEBOOK PAGE படக்குறிப்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூட்டணி ஆட்சி தேவை என்பதில் விசிக தெளிவாக உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். அப்போது, "ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது எங்கள் நிலைப்பாடு. ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டும் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் என்றில்லாமல் சிறிய சிறிய கட்சிகளும் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமிழ்நாட்டில் கூட்டணி அரசு அமைய வேண்டும் என்கிற நோக்கம் தனக்கு இல்லை என்று கூறியுள்ளார். "கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்களின் வாக்குகள் இல்லாமல் திமுக எம்.எல்.ஏக்களின் வாக்குகளை வைத்தே முதலமைச்சரைத் தேர்வு செய்யும் அளவுக்கு திமுக கூட்டணி வெற்றி பெறும். அதில் திமுக தனிப்பெரும்பான்மை பெறும். கூட்டணி அரசு என்கிற நோக்கம் எங்களுக்கு இல்லை. அது சரியாக வருமா என்று பார்த்தால் பலரும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறுகிறார்கள்" எனத் தெரிவித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில், "தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு வலுவான கட்டமைப்பு உள்ளது. ஆட்சியில் பங்கு கொடுத்தால் தி.மு.க-வுக்கு அதன் பெருமை வந்து சேரும். கூட்டணி ஆட்சி என பா.ஜ.க கூறுகிறது. அவர்களே கூறும்போது, தமிழ்நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி சொல்லக்கூடாதா?" எனக் கூறியிருந்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் நிலைப்பாடு மாறுமா? பட மூலாதாரம்,X/EZHIL CAROLINE படக்குறிப்பு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எழில் கரோலின் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு என்கிறார் திமுக நாடாளுமன்ற உறுப்பினரான சல்மா. அவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, "இந்தக் கூட்டணியில் அதிக வாக்கு வங்கி உள்ள கட்சி திமுகதான். பெரும்பான்மை பலம் உள்ள கட்சி என்கிற அடிப்படையில்தான் திமுக ஆட்சி அமைக்கிறது. தமிழ்நாட்டின் சீரான வளர்ச்சிக்கு நிலையான ஆட்சிதான் காரணமாக இருந்துள்ளது. எனவே ஆட்சியில் பங்கு என்பதற்கான தேவை எழுந்ததில்லை. அதற்கான கோரிக்கை வருகிறபோது தலைவர்கள் அதைப் பேசி முடிவெடுப்பார்கள்," என்றார். ஆட்சியில் பங்கு என்கிற கோரிக்கை நியாயமானது மட்டுமல்ல, மிகவும் காலதாமதமானது என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எழில் கரோலின். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஒடுக்கப்பட்டவர்களை உயர்த்தி விடுவது என்பது வெறும் கொள்கை முழக்கமாக இருந்துவிடக்கூடாது. அனைத்து தரப்பினரையும் மைய நீரோட்டத்திற்குக் கொண்டு வருவதற்கு ஆட்சியில் பங்கு கொடுப்பதே சரியாக இருக்கும். அதைத்தான் விசிக கூறி வருகிறது. இரண்டு கட்சிகள் மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் என்கிற நிலை மாற வேண்டும்" என்றார். ஒரு கூட்டணியின் வெற்றியில் அனைத்துக் கட்சிகளுக்கும் பங்குள்ளது என்னும்போது அதை அங்கீகரிக்க வேண்டும் என்கிறார் எழில் கரோலின். "தனித்துப் போட்டியிட்டு ஒரு கட்சி வெற்றி பெறக்கூடிய சூழல் தமிழ்நாட்டில் இப்போது இல்லை. இந்தச் சூழலைப் புரிந்துகொண்டு திராவிட முன்னேற்றக் கழகம், கூட்டணி ஆட்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் அதை அடைய முடியும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது" என்று தெரிவித்தார். கூட்டணி அரசால் நிலையான ஆட்சியைத் தர முடியாதா? பட மூலாதாரம்,GETTY IMAGES கூட்டணி அரசு அமைந்தால் நிர்வாகம் தடைபடும் என்பது தேவையற்ற அச்சம் என்று கூறிய எழில் கரோலின், "மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்தது இல்லையா? அதனால் நிர்வாகம் தடைபட்டுவிட்டதா? தமிழ்நாட்டில் கூட்டணி அரசு அமைந்தது இல்லை. அந்த அனுபவமே இல்லாமல் மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் நிர்வாகம் தடைபடும் என்பது தேவையற்ற கவலை. இட ஒதுக்கீடு, மாநில உரிமை என எதை எடுத்துக் கொண்டாலும் பெரும்பாலான திட்டங்கள், கொள்கைகளில் அனைத்துக் கட்சிகளிடமும் ஒருமித்த கருத்துதான் உள்ளது என்னும்போது அச்சம் அவசியமற்றது" என்றார். இதை ஒத்த கருத்தையே கூறும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, கூட்டணி ஆட்சிக்கான கட்டாயம் உருவாகிவிட்டதாகக் கூறுகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தற்போது உள்ள சூழ்நிலையில் எந்தக் கட்சியாலும் தனித்து நின்று வெற்றி பெற முடியாது. அதுதான் எதார்த்தம். கூட்டணியின் வெற்றியில் அனைவருக்கும் பங்கு உள்ளது. தமிழ்நாட்டில் பல முறை நெருக்கமான போட்டியைக் கண்டுள்ளோம்." "சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் பல தொகுதிகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்றன. ஒரு கட்சிக்கு 2% தான் வாக்கு வங்கி இருக்கிறது எனக் கூறி புறந்தள்ளிவிட முடியாது. கூட்டணியின் வெற்றிக்கு அவர்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கலாம். புள்ளி விவரங்களையும் கடந்து கூட்டணி ஆட்சி அமைவதுதான் சமநிலையை உருவாக்கும்" என்று கூறினார். திமுக, அதிமுக நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,X/SASI REKHA ADMK படக்குறிப்பு, அதிமுக ஆட்சிதான் அமையும் என்கிறார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சசிரேகா பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை பொறுத்தவரை எத்தனைக் கட்சிகள் கூட்டணிக்கு வந்தாலும் அதிமுகவின் ஆட்சிதான் அமையும் என்கிறார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சசிரேகா. "பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்தக் கேள்விகளுக்கு தெளிவாகப் பதில் அளித்துவிட்டார். அதிமுகதான் ஆட்சி அமைக்கும் எனக் கூறிவிட்டார். 31 வருட அதிமுக ஆட்சியில் அப்படித்தான் இருந்துள்ளது. இனியும் அப்படித்தான் இருக்கும்." கூட்டணிக் கட்சிகளுக்கு ஆசை இருக்கலாம் என்றாலும், பெரிய கட்சி எது என்பதே முக்கியம் என்கிறார் சசிரேகா. மேலும், "கூட்டணிக்கு யார் தலைமை ஏற்கிறார்கள், எந்தச் சின்னத்திற்கு வாக்கு அளிக்கிறார்கள், யார் முதல்வர் முகமாக உள்ளார் என்பதும் முக்கியம். அதன் அடிப்படையில் பார்த்தால் அதிமுகதான் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதிமுக தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை அதே நிலைப்பாடுதான், இனியும் அது தொடரும்," என்றார். பட மூலாதாரம், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் படக்குறிப்பு, தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்பதை மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை. தமிழ்நாட்டில் இதுநாள் வரை தொங்கு சட்டசபை அமைந்தது இல்லை. எந்தக் கட்சிக்கும், கூட்டணிக்கும் எப்போதுமே பெரும்பான்மை இடம் கிடைத்துள்ளது. மக்களின் தேர்வும் அதுவாகவே இருந்து வருகிறது" என்றார். கடந்து 1979 நாடாளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் 38 இடங்களில் வென்றது. அடுத்து உடனே 1980இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சரிபாதி இடங்களில் திமுக, காங்கிரஸ் போட்டியிட்டன. ஆனால் மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை, அப்போது திமுக தோல்வியுற்றது என்று கடந்த கால முடிவுகளைக் குறிப்பிட்டுப் பேசினார் ரவிந்திரன். அதோடு, 2006 தேர்தல் பற்றி விவரித்த அவர், "அப்போது திமுக சிறுபான்மை அரசாக இருந்தது என்கிற கருத்து உள்ளது. ஆனால் திமுக கூட்டணி அப்போது 169 இடங்களில் வென்றது. கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்களைக் கொடுத்ததால்தான் திமுக பெரும்பான்மை இடங்களைப் பெற முடியவில்லை" என்றார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cr4ww6genzno

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.