Everything posted by ஏராளன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் நில்மினி அக்கா, வளத்துடன் வாழ்க.
-
மெக்சிகோவில் முதலையைத் திருமணம் செய்த மேயர்!
காற்று வீசுவதால தான் உயிரோட இருக்கிறம் அண்ணை!!
-
இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவில் புதிய வீடுகள்
தமிழகத்தின் மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கை மக்களுக்காக கட்டப்பட்ட வீடுகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்வானது இன்று(7) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீடுகள் இந்த நிலையில், தமிழகத்தின் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை மக்களுக்காக, விழிப்புரம், விருதுநகர், திருப்பூர், தருமபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 729 வீடுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. குறித்த வீடுகள் சுமார் 38 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இந்தியாவில் சிறைத்தண்டனையின் பின்னரான நாடுகடத்தலை தடுக்குமாறு இலங்கைத் தமிழர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/home-in-india-for-sri-lankan-tamils-1751881957
-
மெக்சிகோவில் முதலையைத் திருமணம் செய்த மேயர்!
அப்ப நம்ம ஊர்லயும் ஒரு கல்யாணத்தை நடத்தவேண்டியது தான்! (வெக்கை தாங்க முடியல) முதலைக்கு எங்க போறது?!
-
பிரிக்ஸ் அமைப்புடன் இணைந்து செயற்படும் நாடுகளிற்கு எதிராக மேலும் பத்துவீத வரி - டிரம்ப்
07 JUL, 2025 | 11:03 AM பிரிக்ஸ் நாடுகளின் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் நாடுகளுக்கு கூடுதலாக 10 வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். டொனால்ட் டிரம்ப் இது குறித்து மேலதிகமாக எந்த விளக்கத்தையும் வெளியிடவில்லை. பிரிக்ஸ் அமைப்பின் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் எந்தவொரு நாட்டிற்கும் கூடுதலாக 10 வீத வரி விதிக்கப்படும். இந்தக் கொள்கைக்கு எந்த விதிவிலக்கும் இருக்காது" என்று டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை மாலை ட்ரூத் சோஷியல் பதிவில் தெரிவித்துள்ளார். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உச்சிமாநாட்டிற்காகபிரிக்ஸ் கூட்டமைப்பு கூடியிருக்கும் நிலையில் டிரம்பின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. https://www.virakesari.lk/article/219370
-
திருமணம் செய்து கொள்வதன் நன்மைகள், தீமைகள் என்ன? - சார்லஸ் டார்வின் செய்த பகுப்பாய்வு
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எம்மா (1808 –1896) மற்றும் சார்லஸ் டார்வின் (1809-1882), தங்களது 43 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில், 10 குழந்தைகளைப் பெற்றனர். கட்டுரை தகவல் பிபிசி நியூஸ் முண்டோ 6 ஜூலை 2025 சார்லஸ் டார்வின் 1838ஆம் ஆண்டில் இயற்கைத் தேர்வு (Natural selection) குறித்த தனது கருத்துக்களை வகுக்கத் தொடங்கினார். ஹச்எம்எஸ் (HMS) பீகிள் என்ற அறிவியல் ஆராய்ச்சிக் கப்பலில் உலகம் முழுவதும் மேற்கொண்ட பயணத்தின் போது, குறிப்பாக தென் அமெரிக்காவில் அவர் பெற்ற அவதானிப்புகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்தார். இந்த காலகட்டத்தில், அவர் லண்டன் புவியியல் சங்கத்தின் செயலாளராகவும் ஆனார், அந்தப் பதவி கணிசமான பொறுப்புகளைக் கொண்டிருந்தது. மேலும் பிற ஆராய்ச்சிகளைத் தொடரும் அதே வேளையில், பல முக்கியமான ஆய்வுக் கட்டுரைகளையும் டார்வின் சமர்ப்பித்தார். அந்த வருடத்தின் அத்தனை பணிகளுக்கும் மத்தியில், ஒரு தனிப்பட்ட விஷயம் அவரது எண்ணங்களை ஆக்கிரமித்தது. வாழ்க்கைத் துணை இருப்பது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்? திருமணம் அவரது வாழ்க்கையிலும் வேலையிலும் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? அதே வருடம், ஏப்ரல் மாதத்தில், தனியாக வாழ்வதன் நன்மைகள் மற்றும் துணையோடு வாழ்வதன் தீமைகள் குறித்து அவர் சில குறிப்புகளை எழுதினார். திருமணம் செய்வதன் நன்மைகள் மற்றும் தீமைகள் ஜூலை மாதம், டார்வின் இந்த விஷயத்தின் மீது மீண்டும் கவனம் செலுத்தினார், ஆனால் இந்த முறை மிகச்சிறப்பாக, 29 வயதான அந்த இயற்கை ஆர்வலர், திருமணம் குறித்த அந்த முக்கியமான கேள்விக்கு விடை கண்டறிய இரண்டு பட்டியல்களை உருவாக்கினார். 'திருமணம் செய்து கொள்வது' என்ற தலைப்பின் கீழ், நன்மைகள் என அவர் கருதியவற்றை பின்வருமாறு பட்டியலிட்டார்: குழந்தைகள் (இறைவன் நாடினால்). உங்கள் மீது அக்கறை காட்டும் நிலையான துணை (வயதான காலத்தில் அந்த துணை நண்பராகவும் இருக்கக்கூடும்). விளையாடவும் நேசிக்கவும் ஏதோ ஒன்று இருக்கும் (எப்படியும் ஒரு நாயை விட சிறந்தது). வீடும், அந்த வீட்டைப் பராமரிக்க ஒருவரும். இசையின் வசீகரமும் பெண்ணிய உரையாடலும். "இந்த விஷயங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது, ஆனால் நேரத்தை வீணடிப்பதாகும்." என பின்னர் அவர் கூறினார். "அய்யோ கடவுளே, வாழ்நாள் முழுவதையும், ஒரு ஆண்மை நீக்கப்பட்ட தேனீயைப் போல, வேலை செய்து கொண்டே, வேறு எதுவுமே செய்யாமல் கழிப்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இல்லை, நான் அதை ஒருபோதும் செய்ய மாட்டேன்." என்றார் டார்வின். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சார்லஸ் டார்வின் அவர் இரண்டு காட்சிகளை ஒப்பிட்டுப் பார்த்தார்: "லண்டனில், ஒரு அழுக்கு வீட்டில் தனியாக வாழ்வதை கற்பனை செய்து பாருங்கள். மறுபுறம், ஒரு நல்ல சோஃபா, மென்மையான மனைவி, குளிருக்கு நல்ல நெருப்பு, அதனுடன் புத்தகங்கள் மற்றும் இசை என கற்பனை செய்து பாருங்கள்." பின்னர் அவர் 'திருமணம் செய்யாதீர்கள்' என்ற தலைப்பின் கீழ், பின்வருபவற்றை பட்டியலிட்டார்: எங்கு வேண்டுமானாலும் செல்வதற்கான சுதந்திரம். மற்றவர்களுடன் பழகலாமா வேண்டாமா என்பதைத் நீங்களே தேர்ந்தெடுப்பது. கிளப்களில் புத்திசாலி மனிதர்களுக்கு இடையேயான உரையாடல். உறவினர்களைப் பார்க்கச் சென்று ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் வளைந்து கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை. குழந்தைகளின் செலவுகள் மற்றும் பதற்றத்தைத் தவிர்க்கலாம். (ஒருவேளை சண்டைகள்). நேர விரயம். மதிய வேளைகளில் படிக்க முடியாமல் இருப்பது. உடல் பருமன் மற்றும் சோம்பல். பதற்றம் மற்றும் பொறுப்பு. புத்தகங்கள் போன்றவற்றுக்குக் குறைவான பணம். உங்களுக்கு நிறைய குழந்தைகள் இருந்தால், நீங்கள் உணவுக்கு அதிகம் சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள் (அதிகமாக வேலை செய்வது உங்கள் உடல்நலத்திற்கு மிகவும் மோசமானது). ஒருவேளை என் மனைவிக்கு லண்டன் பிடிக்காமல் போகலாம்; அப்படியானால் நான் நாடுகடத்தப்பட்டு, எங்கோ ஒரு இடத்தில் சோம்பேறியாகவும், படைப்புத்திறன் அற்றவனாகவும் வாழும் நிலையை அடையலாம். தீமைகளின் பட்டியல் நீளமாக இருந்தாலும், நன்மைகள் அதிக மதிப்பைக் கொண்டிருந்தன, ஏனெனில் டார்வினின் இறுதி முடிவு என்பது: "எனவே, நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதுதான் தர்க்கரீதியான முடிவு." திருமணம் எப்போது செய்துகொள்ள வேண்டும்? ஒரு முடிவுக்கு வந்த பிறகு, டார்வின் புதிய கேள்விகளை எடுத்துக்கொண்டார்: "திருமணம் செய்வது அவசியம் என்று நிரூபிக்கப்பட்ட பிறகு, எப்போது செய்துகொள்ள வேண்டும்? கூடிய விரைவிலா அல்லது பின்னரா?" "நீங்கள் இளமையாக இருந்தால், வளைந்து கொடுக்கும் குணம் அதிகம் இருக்கும், அதற்கு ஏற்ப உணர்வுகளும் தெளிவாக இருக்கும். நீங்கள் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், நிறைய மகிழ்ச்சியான தருணங்களை இழக்க நேரிடும். எனவே விரைவில் திருமணம் செய்யுமாறு" சமூகம் டார்வினுக்கு அறிவுறுத்தியது. ஆனால் அவ்வாறு செய்வதற்கான வாய்ப்பு அவரைப் பயமுறுத்தியது. "முடிவற்ற பிரச்னைகள் மற்றும் செலவுகள், அற்பமான சமூக வாழ்க்கைக்குள் தள்ளப்படுவதால் ஏற்படக்கூடிய விவாதங்கள் மற்றும் தினசரி நேரத்தை வீணடிப்பது" ஆகியவற்றை அவர் எதிர்பார்த்தார். நேரம் மட்டுமல்ல, வாய்ப்புகளும் கூட வீணாகும் என அவர் நினைத்தார். "என்னால் பிரெஞ்சு கற்றுக்கொள்ள முடியாது, முழு கண்டத்தை சுற்றிப் பார்க்க முடியாது, அமெரிக்கா செல்ல முடியாது, பலூன் விமானத்தில் பறக்க முடியாது, வேல்ஸுக்கு தனியாக பயணம் மேற்கொள்ள முடியாது. ஒரு அடிமை போன்ற வாழ்க்கை" என்று அவர் எழுதினார். ஆனால், தன் கருத்தில் இருந்து அவர் பின்வாங்குவது போல் தோன்றியபோது, அவர் தனது தொனியை மாற்றி எழுதினார்: "உற்சாகமாக இருங்கள். நீங்கள் இந்த தனிமையான வாழ்க்கையை, ஒரு சோர்வு நிறைந்த முதுமையுடன், குளிரில், நண்பர்கள் இல்லாமல், குழந்தைகள் இல்லாமல் வாழ முடியாது." மேலும், "கவலைப்படாதே, வாய்ப்புகளின் மீது நம்பிக்கை கொள். பல மகிழ்ச்சியான அடிமைகள் நம்மைச் சுற்றி உள்ளனர்." என்றும் குறிப்பிட்டார். நவம்பர் 11ஆம் தேதி, அவர் தனது நாட்குறிப்பில், "மிகவும் சிறந்த நாள்!" என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார். காரணம் அன்று, டார்வினின் உறவினர் எம்மா வெட்ஜ்வுட், அவரை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்தார். அதை டார்வின் கொண்டாடினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டார்வினின் பணியை சாத்தியமாக்கிய பல அம்சங்களை எம்மா கையாண்டார். எம்மாவின் "சம்மதம்" மகிழ்ச்சிக்குக் காரணமாக இருந்தாலும், அது எதிர்பாராதது அல்ல. டார்வின் மற்றும் வெட்ஜ்வுட் பரம்பரைகளுக்கு இடையே பல தலைமுறைகளாக திருமண பந்தங்கள் இருந்தது. டார்வினுக்கு எம்மா தான் பொருத்தமான தேர்வாக இருந்தார். அவர்களது குடும்பத்தினரும், இருவரும் நல்ல ஜோடியாக இருப்பார்கள் என்பதை ஒப்புக்கொண்டனர். இருப்பினும், டார்வினின் 'திருமண ஆசை மற்றும் முன்மொழிவு' எம்மாவை ஆச்சரியப்படுத்தியது. ஏனென்றால் அவர் டார்வினை விரும்பினார், ஆனால் டார்வின் தன்னை ஒரு சாதாரண உறவினராக மட்டுமே பார்த்தார் என எம்மா நினைத்திருந்தார். ஆனால் டார்வினை திருமணம் செய்து கொள்வதா வேண்டாமா என்பது பற்றிய பட்டியல்களை எம்மா உருவாக்கியிருந்தால், அவருடைய பட்டியல் வேறுபட்டிருக்கும் என ஹெலன் லூயிஸ் பிபிசி தொடரான "கிரேட் வைவ்ஸ்"-இல் சுட்டிக்காட்டுகிறார். தனியாக வாழ்ந்தால், டார்வினுக்கு கிடைக்கக்கூடிய எந்த வசதிகளும் அவருக்குக் கிடைத்திருக்காது. பலூன் விமான பயணங்களோ அல்லது வேல்ஸுக்கு தனியாக பயணிக்கவோ முடியாது. அந்தக் காலத்தில், ஒரு பெண்ணுக்கு, ஒரு வளர்ப்பு நாய் இருப்பதை விட, ஒரு கணவன் கிடைப்பதே சிறந்தது எனக் கருதப்பட்டது. அப்போது இருந்த சூழ்நிலைகளைப் பொறுத்தவரை, ஒரு பெரிய அல்லது பணக்கார மனிதரின் மனைவியாக இருப்பது ஒரு சிறந்த, தர்க்கரீதியான தேர்வாக இருந்தது. 'எம்மா- ஒரு அற்புதமான துணைவி' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டவுன் ஹவுஸ் தோட்டத்தில் சார்லஸ் டார்வின் (1870). இங்கு அவர் தனது பெரும்பாலான நேரத்தை நடைபயிற்சி மற்றும் சிந்திப்பதில் செலவிட்டார். இந்த வீட்டில்தான் அவர் 40 ஆண்டுகள் வசித்து வந்தார். ஆறு மாதங்களுக்குப் பிறகு, எம்மாவும் சார்லஸ் டார்வினும் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் ஆழமான உணர்ச்சிப் பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டனர், பத்து குழந்தைகளைப் பெற்றனர், அன்பான குடும்ப வாழ்க்கையை நடத்தினர், 1882இல் டார்வின் இறக்கும் வரை ஒன்றாக இருந்தனர். அந்த 43 வருடங்களில், எம்மா தனது கணவரின் எழுத்துக்களை நகலெடுத்து தட்டச்சு செய்தது மட்டுமல்லாமல், தனது மொழித் திறனைப் பயன்படுத்தி, அறிவியல் முன்னேற்றங்கள் தொடர்பான செய்திகளை மொழிபெயர்த்து அவருக்குத் தெரிவித்தார். மேலும், இது அவரது மிகவும் பலவீனமான உடல்நலம் குறித்த அழுத்தத்தில் இருந்தும், தொற்று மற்றும் பரம்பரை நோய்களால் அவரது குழந்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து பாதிக்கப்படுவதைப் பார்ப்பதால் ஏற்படும் உளவியல் துயரத்தில் இருந்தும் அவரைக் காப்பாற்றியது. டார்வினின் பக்கம் அவர் இருந்ததால், டார்வினுக்கு கிடைத்த நன்மைகள் எண்ணற்றதாக இருந்திருக்கும். ஏனெனில் டார்வினின் பணியை சாத்தியமாக்கிய பல அம்சங்களை எம்மா கையாண்டார். இதனால் (டார்வினின் மகன்களில் ஒருவர் விவரித்தபடி) டார்வினின் தினசரி வாழ்க்கை சீராக இருந்தது: காலை 7:00 மணிக்கு அவர் தனியாக காலை உணவை உட்கொள்வார், காலை 7:45 மணி முதல் மதியம் வரை அவர் வேலை செய்வார். பிறகு தோட்டத்தில் விறுவிறுப்பான நடைப்பயிற்சிக்கு பிறகு, அவர் தனது குடும்பத்தினருடன் மதிய உணவு சாப்பிடுவார். அன்றைய தினம் தனது அறிவுசார் பணிகளை முடித்த பிறகு, அவர் எம்மாவிடம் ஒரு நாவலையோ அல்லது வேறு இலக்கியப் படைப்பையோ படித்துக் காட்டச் சொல்வார்; பின்னர் அவர் மீண்டும் நடைப்பயிற்சி மேற்கொள்வார், சில வேலைகளைச் செய்வார், பின்னர், மாலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை, இரவு உணவிற்கு முன் எம்மா மீண்டும் அவருக்கு வாசித்துக் காட்டுவார். டார்வின் விரும்பியதெல்லாம் அவரது விருப்பப்படி வழங்கப்பட்டது. ஒரு அற்புதமான துணை இருப்பது, வாழ்க்கையின் சலிப்பான, முடிவில்லாத பணிகளால் திசைதிருப்பப்படாமல், வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தில் கவனம் செலுத்த அனுமதித்தது. 19ஆம் நூற்றாண்டு மற்றும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த, சிறந்த எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கலைஞர்களை விட, அறிவுசார் பணிகளுக்கு ஏற்ற மிகவும் சரியான வீட்டுச் சூழல்களை சிலர் அனுபவித்திருக்கிறார்கள். காபி அல்லது தேநீர் கோப்பைகள் வருவது அல்லது மேஜையில் உணவுகள் திடீரென தோன்றுவது தவிர, எந்த இடையூறும் இல்லாமல் அவர்களால் பணிகளைச் செய்ய முடியும். ஒரு காதல் கதை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வேரா (1902-1991) விளாடிமிர் நபோகோவ் (1899-1977) உடன், 1923இல் பெர்லினில். ஒரு சிறந்த மனைவியால் எவ்வளவோ விஷயங்களைச் செய்ய முடியும், அது வேரா நபோகோவ் விஷயத்தில் மிகவும் உண்மையாக இருந்தது. வேராவின் கணவர் எழுத்தாளர் விளாடிமிர் நபோகோவ் சொற்பொழிவுகளை நிகழ்த்தும்போது, அவருக்கு உதவுவதற்காக மேடையின் ஓரத்தில் வேரா அமர்ந்திருப்பார். வேரா தான், அவருடைய கணவரின் ஏஜென்ட், மொழிபெயர்ப்பாளர், தட்டச்சு செய்பவர், கோப்புகளைச் சேமித்து வைப்பவர், ஆடை வடிவமைப்பாளர், நிதி மேலாளர், ஓட்டுநர். கணவரது அனைத்து நாவல்களின் முதல் வாசகராகவும் வேரா இருந்தார். கணவர் பல்கலைக்கழகத்தில் பாடங்களை எடுக்க தவறியபோது கூட, வேராவே கணவருக்குப் பதிலாக வகுப்புகளை எடுத்தார். ஒரு சமையல்காரர், கணவனைக் கவனித்துக்கொள்பவர், சலவைத் தொழிலாளி மற்றும் பணிப்பெண் என அந்த காலத்தில் ஒரு மனைவியிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட அனைத்து கடமைகளையும் அவர் செய்தாலும், தான் ஒரு 'மோசமான இல்லத்தரசி' என்றே அவர் நினைத்துக்கொண்டிருந்தார். மேலும், கணவருடன் பட்டாம்பூச்சிகளைச் சேகரிக்கச் சென்றார். அவை 5 வயதிலிருந்தே கணவரைக் கவர்ந்த உயிரினங்கள். கணவரோ அவற்றைத் தேடி, ஆய்வு செய்ய பயணம் செய்தார். 12 வயது சிறுமியை விரும்பும் ஒரு மனிதனைப் பற்றிய நாவலான "லோலிடா" வெளியான பிறகு, நபோகோவ் சர்ச்சைக்கு ஆளானார். எனவே வேரா தனது பணப்பையில் ஒரு துப்பாக்கியை வைத்திருந்ததாகவும், கணவனுக்காக எந்த கொலையாளியையும் எதிர்கொள்ளத் தயாராக இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்களுடையது ஒரு சிறந்த காதல். 1923இல் பெர்லினில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர்கள் சந்தித்தனர். தனது கவிதைகளில் சிலவற்றை வேராவுக்கு, நபோகோவ் வாசித்துக் காட்டினார். பின்னர் அவர் எழுதினார்: "என் ஒவ்வொரு எண்ணத்திற்கும் உங்கள் ஆன்மாவில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது." வேராவின் அறிவுத்திறன், சுதந்திர உணர்வு, நகைச்சுவை உணர்வு மற்றும் இலக்கியத்தின் மீதான காதல் ஆகியவற்றால் கவரப்பட்ட அவர், வேராவுடன் சில மணிநேரங்கள் செலவிட்ட பிறகு வேராவுக்கான தனது முதல் கவிதையை எழுதினார். அவர்களது 52 வருட திருமண வாழ்வில், வரலாற்றின் மிகச்சிறந்த காதல் கடிதங்களில் சில எனக் கருதப்பட்ட கடிதங்களை வேரா பெற்றார். அவை 'லெட்டர்ஸ் டு வேரா' என்ற புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், எல்லா மேதைகளின் மனைவிகளும் அவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் அல்ல. புகழ்பெற்ற எழுத்தாளர் டால்ஸ்டாயின் மணவாழ்க்கை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்ய நாவலாசிரியர் லியோ டால்ஸ்டாய் ரஷ்ய நாவலாசிரியர் லியோ டால்ஸ்டாய் எழுதி 1889 இல் வெளியிடப்பட்ட "தி க்ரூட்ஸர் சொனாட்டா" என்ற சிறு நாவல், முந்தைய பத்து ஆண்டுகளில் அவர் கட்டமைத்த தார்மீக தத்துவத்திற்கு ஒரு மெல்லிய மறைமுக ஊடகமாக இருந்தது. அதற்குள் அவர், கிறித்தவம் குறித்த தனது சொந்த பதிப்பை உருவாக்கி, தனது பிரபுத்துவ பட்டத்தைத் துறந்து, தனது முந்தைய நாவல்களைப் பற்றி மோசமாகப் பேசியிருந்தார். அவர் "அன்னா கரேனினா"-வை (லியோ எழுதிய ஒரு நாவல்) அருவருப்பானது என்று கூறி, ஒரு விவசாயியைப் போல உடை அணியத் தொடங்கினார். "தி க்ரூட்ஸர் சொனாட்டா"வில், காதலுக்காக திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தை கேலி செய்யும் ஒரு ஆணுடன், கதை சொல்பவர் ஒரு ரயில் பயணத்தை மேற்கொள்கிறார், வாழ்க்கையில் பெண்களுடன் தனக்கு ஏற்பட்ட அனைத்து காதல் விவகாரங்களுக்கும் தான் வருந்துவதாக அந்த ஆண் கூறுகிறார். "பெண்களின் பிரச்னை என்னவென்றால், அவர்கள் தங்கள் உடைகள் மற்றும் உடலால் ஆண்களை மயக்குகிறார்கள். மனித இனத்தில் பத்தில் ஒன்பது பங்கு மக்களை, பெண்கள் கடின உழைப்புக்கு அடிமைப்படுத்துகிறார்கள். ஏனென்றால் பெண்கள் சுரண்டப்பட்டுள்ளனர், ஆண்களுக்கு சமமான அவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. பின்னர் அவர்கள் நமது காம உணர்வைப் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் வலையில் நம்மைச் சிக்க வைத்து பழிவாங்குகிறார்கள்," என்று அந்தக் கதாபாத்திரம் கூறும். டால்ஸ்டாயின் நாவலின் முக்கிய கதாபாத்திரம் பொறாமையால் அவதிப்படுகிறது, ஏனெனில் அந்த நபர் தனது மனைவி ஒரு அழகான வயலின் கலைஞரைக் காதலிக்கிறாள் என்று சந்தேகிக்கிறார். டால்ஸ்டாயின் மனைவி சோபியா, குடும்ப இசை ஆசிரியருடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார், எனவே இந்தப் படைப்பை அவர் மீதான விமர்சனமாகப் பார்க்கலாம். டால்ஸ்டாய் தம்பதியினருக்கு இடையேயான சிக்கலான உறவு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டால்ஸ்டாயின் சீடர்கள் சோபியாவை ஒரு மந்தமான, அறிவற்ற பெண்ணாக, பொருள் சார்ந்த விஷயங்களில் மட்டுமே அக்கறை கொண்டவராக சித்தரித்தனர். டால்ஸ்டாயின் கையெழுத்துப் பிரதிகளை நகலெடுத்தவர் சோபியா என்பதால், அவருக்கு செய்தி புரிந்திருக்கும் என்று நாவலாசிரியர் உறுதியாக நம்பலாம். டால்ஸ்டாய் தம்பதியினருக்கு இடையே சிக்கலான உறவு இருந்தது. சோபியாவின் வாழ்க்கை, அவரது கணவரின் தொழில், வீட்டுப் பொறுப்புகள் மற்றும் சொத்து மேலாண்மை மற்றும் அவரது பொறுப்பில் இருந்த விவகாரங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. அவர் எப்போதும் தனது கணவரின் இலக்கிய லட்சியங்களை ஆதரித்தார். டால்ஸ்டாய், மனைவியிடம் கருத்துகளைக் கேட்டார், மேலும் பல்வேறு ஆலோசனைகளை அவருடன் நடத்தினார். டால்ஸ்டாயின் முழுமையான படைப்புகளை வெளியிடும் மகத்தான திட்டத்திற்கு சோபியா திட்ட மேலாளராகவும் செயல்பட்டார். அது தொடர்புடைய சட்ட மற்றும் நிர்வாகச் சிக்கல்களை கையாண்டார். மேலும் 13 பிரசவங்களின்போது படுக்கையில் இருந்தபோதும், ஒரு சிறப்பு மேசையை உருவாக்கி, அவர் தொடர்ந்து கணவரின் எழுத்துக்களை நகலெடுக்கும் வேலையைச் செய்தார். இவற்றில் சுமார் 6,00,000 வார்த்தைகள் கொண்ட "போர் மற்றும் அமைதி" (War and peace) போன்ற படைப்புகளும் அடங்கும். இது தவிர, டால்ஸ்டாய் நான்கு பெரிய நாவல்கள், சுமார் ஒரு டஜன் குறு நாவல்கள் மற்றும் குறைந்தது 26 சிறுகதைகளை எழுதினார். 'தி க்ரூட்ஸர் சொனாட்டா' வெளியிடப்பட்ட நேரத்தில், கணவருடனான சோபியாவின் உறவு இறுக்கமடைந்தது, ஏனெனில் அந்தச் சிறந்த எழுத்தாளர், இளம் பிரபுவான விளாடிமிர் செர்ட்கோவுடன் அதிக நேரம் செலவிட்டார். அந்தப் பிரபுவோ, மனைவிக்கு எதிரான கருத்துக்களால் டால்ஸ்டாயின் மனதை நிரப்பினார், மேலும் அராஜகவாதத்தில் (அதிகார மையங்களுக்கு எதிரான கோட்பாடு) அவரது ஆர்வத்தையும் ஊக்குவித்தார். எனவே டால்ஸ்டாய் தனது உலக உடைமைகள் அனைத்தையும் துறந்து, அவற்றை ஊழல் நிறைந்ததாகக் கருதியபோது, தனது குழந்தைகள் பசியால் இறக்காமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு சோபியாவிடம் இருந்தது. எனவே கணவரது நாவல்களை வெளியிடும் பொறுப்பை சோபியா ஏற்றுக்கொண்டார். மேலும் தணிக்கை காரணமாக கணவரது புத்தகங்களைத் தடை செய்வதை நிறுத்துமாறு ஜார் மன்னர் மற்றும் தேவாலயத்திடம் கெஞ்சினார். 'சோபியாவின் இந்த வணிக ரீதியான பரிசீலனைகள், அவர் ஒரு துரோகி மற்றும் முதலாளித்துவவாதி என்பதை நிரூபித்ததாக' செர்ட்கோவ் டால்ஸ்டாயிடம் கூறினார். அக்டோபர் 28, 1910 அன்று, டால்ஸ்டாய் வீட்டை விட்டு வெளியேறினார். அவர்களுக்கு திருமணமாகி 48 ஆண்டுகள் ஆகியிருந்தன. ஒரு வாரத்திற்கும் மேல் தேடிய பிறகு, இறுதியாக தனது 82 வயதான கணவர் மற்றும் எழுத்தாளர் டால்ஸ்டாயை கண்டுபிடித்தார் சோபியா. ஆனால், ஒரு ரயில் நிலையத்தில், ரசிகர்கள் மற்றும் சீடர்களால் சூழப்பட்ட நிலையில், அவர் மரணத்திற்கு அருகே இருந்தார். டால்ஸ்டாயின் மரணம் ஒரு ஊடக நிகழ்வாக மாறியது. ஆனால் அவரது கடைசி நிமிடங்கள் வரை, டால்ஸ்டாயின் மரணப் படுக்கையிலிருந்து சோபியா ஒதுக்கி வைக்கப்பட்டார். "நான் கிட்டத்தட்ட 40 வருடங்களாக நூற்றுக்கணக்கான முறை, ஒரு அடிமை போல சேவை செய்திருக்கிறேன். என் அறிவுசார் ஆற்றல் மற்றும் எல்லா வகையான ஆசைகளும் என்னுள் கிளர்ந்தெழுவதை உணர்ந்திருக்கிறேன். மீண்டும் மீண்டும் அந்த ஏக்கங்களையெல்லாம் நசுக்கி, அடக்கி வைத்திருக்கிறேன்." என அந்நிகழ்வுக்கு சில வருடங்களுக்கு முன்பு சோபியா குறிப்பிட்டிருந்தார். "எல்லோரும் கேட்கிறார்கள், 'ஆனால் உங்களைப் போன்ற ஒரு பயனற்ற பெண்ணுக்கு ஏன் அறிவுசார் அல்லது கலை வாழ்க்கை தேவை? என்று" எனக் குறிப்பிட்டுள்ள சோபியா, "அந்தக் கேள்விக்கு ஒரு பதிலையே கூற முடியும், 'எனக்குத் தெரியாது, ஆனால் ஒரு மேதைக்கு சேவை வேண்டும் என்பதற்காக, எனது உணர்வுகளை நிரந்தரமாக அடக்கிவைப்பது ஒரு பெரிய அவமானமாக இருக்கும்." என்று குறிப்பிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c20w9wqqexgo
-
சிலாபம் கடலில் தத்தளித்த 04 இந்திய மீனவர்கள் மீட்பு
Published By: DIGITAL DESK 3 07 JUL, 2025 | 03:21 PM சிலாபம் அருகே கடலில் தத்தளித்த நான்கு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து கிடைத்த தகவலுக்கமைய இலங்கை கடற்படையால் ஒருங்கிணைந்த தேடல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (06) நான்கு இந்திய மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி சீரற்ற வானிலையால் இந்திய மீன்பிடிக் கப்பல் காணாமல் போனதாக மும்பை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து கொழும்பில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இலங்கை கடற்படை உடனடியாக அனைத்து தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. அதன்படி, மேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட விரைவுத் தாக்குதல் கப்பல்களால் நடத்தப்பட்ட சிறப்புத் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன் விளைவாக, சிலாபத்திற்கு அப்பால் மேற்குக் கடலில் பாதிக்கப்பட்டு செயல்படாமல் இருந்த இந்திய மீன்பிடிக் கப்பல் அவதானிக்கப்பட்டதுடன், மேலும் அதில் இருந்த நான்கு (04) இந்திய மீனவர்கள் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மீனவர்கள் இந்தியாவின் மினிகாய் தீவில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். நான்கு மீனவர்களும் திக்கோவிட்ட துறை முகத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அங்கு கடற்படை மற்றும் கடலோர காவற்படை தேவையான உதவிகளை அவர்களுக்கு வழங்கியுள்ளது. ஆரம்ப வைத்திய பரிசோதனைகளுக்குப் பின்னர் மீனவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக வத்தளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்குள் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் இணைந்து இந்திய மீனவர்களை இரண்டாவது முறையாக இலங்கை கடற்படை பத்திரமாக மீட்டுள்ளது. https://www.virakesari.lk/article/219380
-
செம்மணியில் புதையுண்டிருப்பது யார்? ஊடகவியலாளரின் சாட்சியம்
செம்மணியில் புதையுண்டிருப்பது யார்.. நேரடி சாட்சியத்தின் திடுக்கிடும் உண்மைகள்! யாழ்ப்பாணம் - சிந்துபாத்தி செம்மணி மனித புதைகுழியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு வரும் மனித எச்சங்கள் தமிழ் மக்களிடையே பேரதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளன. இதற்கிடையில், ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கங்களும் இராணுவமும் மேற்கொண்ட படுகொலைகளின் சாட்சியமே செம்மணி என குற்றஞ்சாட்டப்படுகின்றது. மறுபக்கம், செம்மணியிலிருந்து தோண்டப்படும் பச்சிளங்குழந்தை உள்ளிட்ட மனித உடலங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பினாால் கொன்று புதைக்கப்பட்டவை என கூறப்படுகின்றது. உண்மையில் யார் தான் இதன் பின்னணியில் இருப்பது, இத்தனை காலமும் மனதில் அவலங்களை சுமந்து வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்கு இவ்விடயத்தில் தெரிய வேண்டிய உண்மைகள் பல. செம்மணியில் நடப்பவை என்ன? அவர்கள்தான் இவர்கள்!! நேரடி சாட்சியம்!!! பூநகரியிலிருந்து கொழும்புதுறைக்கு படகில் வந்தவர்களே எலும்புகூடுகளாக மீட்பு | Chemmani Mass Graves https://tamilwin.com/article/chemmani-mass-graves-jaffna-1751829524
-
தனது சம்பளப் பட்டியலை பகிரங்கப்படுத்தினார் எதிர்க்கட்சி உறுப்பினர் ஜகத் விதான
Published By: DIGITAL DESK 3 07 JUL, 2025 | 04:00 PM ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனது சம்பளப் பட்டியலை பகிரங்கப்படுத்தியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது சம்பள விபரத்தை இவ்வாறு பகிரங்கப்படுத்தியமை இதுவே முதல் தடவையாகும். அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மாத சம்பளம் (கழிவுகள் போக) 3 இலட்சத்து முப்பதாயிரம் ரூபாய் ஆகும். ஆரம்பத்தில் எனது சம்பளத்தை ஏற்றுக்கொள்ள நான் விரும்பவில்லை. பின்பு அதை சமூக சேவைகளுக்கு செலவிட நான் முடிவு செய்தேன். எனக்கு சம்பளம் அவசியமில்லை நான் ஒரு வர்த்தகர் என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/219393
-
சுண்டிக்குளத்தில் மக்களின் காணிகள் இரகசியமான முறையில் கடற்படையால் அளவீடு செய்யப்பட்டுள்ளது - இ.முரளிதரன்
07 JUL, 2025 | 10:41 AM யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் கிராம சேவகர் பிரிவில் மக்களின் காணிகள் இரகசியமான முறையில் கடற்படையால் அளவீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண காணிக்கான மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார். தனது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (06) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கவிக்கையிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். அவர் தொடர்ந்தவர் கருத்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியான கிராம சேவகர் பிரிவில் அமைந்திருக்கின்ற மக்களின் மீன்பிடி நிலங்கள், மக்களுக்குரிய காணிகள் திருகோணமலையில் இருந்து வந்த கடற்படையின் ஒரு குழுவால் மிக இரகசியமாக அளவீடு செய்யப்பட்டுள்ளது. தங்களுடைய சொந்தக்காணிகள் கடற்படையினரால் அளவீடு செய்யப்படுவதை அறிந்த அங்கு இருந்த ஒரு சில மக்கள் கடற்படை இடம் கேள்வி எழுப்பிய போது உங்களுடைய காணி என்றால் அனுமதி பத்திரத்தை காட்டுமாறு தெரிவித்ததாக மக்கள் கூறுகின்றனர். சுண்டிக்குள பகுதியில் காணப்படும் அதிகளவான காணிகள் அரசகாணிகளாக காணப்படுகிறது. அங்கே வசித்த மக்களின் காணிகளுக்கு உறுதி இருக்காது. மக்கள் காலா காலம் அந்த காணியில் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் அவர்கள் வாழ்ந்த காணியை தற்பொழுது சுவீகரிப்பதற்காக கடற்படை முயற்சிக்கின்றது. அந்த பகுதியில் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. வீடுகள், கிணறுகள், அங்கே மக்களால் பராமரிக்கப்பட்ட மரங்களும் இருக்கின்றன. இது தொடர்பாக அப்பகுதி கிராம அலுவலருக்கோ, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலருக்கோ தெரியப்படுத்தப்படாமல் அளவீடு முன்னெடுக்கப்பட்டது. ஒரு பிரதேசத்தில் ஒரு காணியை அளவீடு செய்ய வேண்டும் என்று சொன்னால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். மீனவ சங்கம், பிரதேச செயலர், கிராம அலுவலர், காணிக் கிளையினர் ஆகிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தாமல் மிக இரகசியமாக இந்த காணிகளை அளவீடு செய்துள்ளார்கள். காலப்போக்கில் இந்த பகுதியில் கடல் தொழில் செய்கின்ற மக்கள் கடல் தொழில் செய்ய முடியாத நிலைமை உருவாகப் போகின்றது. சுண்டிக்குள பகுதியில் கடற் படையின் தளங்கள் விஸ்தரிக்கப்பட போகின்றது. மக்களுடைய காணிகள் மக்களுக்கு விடுவிக்கப்பட வேண்டும் இல்லை என்று சொன்னால் மக்களை ஒருங்கிணைத்து இந்த காணிகளை விடுவிப்பதற்கான போராட்டங்களை செய்யப் போவதாக வடமாகாண காணிக்கான மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/219364
-
வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேரங்களில் மாற்றம்
கொழும்பு - காங்கேசன்துறை சொகுசு ரயில் சேவை இன்று முதல் நாளாந்த சேவையில்! Published By: DIGITAL DESK 2 06 JUL, 2025 | 05:26 PM (நமது நிருபர்) கொழும்பு - காங்கேசன்துறை சொகுசு ரயில் சேவை இன்று(07) முதல் நாளாந்தம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து தினமும் காலை 5.45க்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதுடன் காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 02 மணிக்கு மீண்டும் கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார். இந்த சொகுசு ரயில் சேவை இதற்கு முன்னர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டது. எனினும் தற்போது இந்த புதிய சொகுசு ரயில் சேவை ஆரம்பமானதன் பின்னர் யாழ்தேவி ரயிலானது கொழும்பு கோட்டையிலிருந்து தினமும் காலை 06.40க்கு புறப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/219333
-
அரச மருத்துவமனைகளில் தங்கியிருந்து சிகிச்சைப்பெறும் நோயாளிகளுக்காக விசேட உணவு வேலைத்திட்டம் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
Published By: VISHNU 07 JUL, 2025 | 01:36 AM (செ.சுபதர்ஷனி) அரச மருத்துவமனைகளில் தங்கியிருந்து சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு தரமான மற்றும் சுவையான உணவை வழங்குவதற்கான சிறப்பு திட்டமொன்றை ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நோயாளர்களுக்கான விசேட உணவு வேலைத்திட்டம் தொடர்பாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் அண்மையில் சுகாதார அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. அதற்கமைய மஹரகம புற்றுநோய் மருத்துவமனையை மையமாகக் கொண்டு இந்த சிறப்புத் திட்டத்திற்கான முன்னோடித் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய தேசிய புற்றுநோய் மருத்துவமனையின் பணிப்பாளர், நிர்வாகம் மற்றும் இந்த விடயத்துடன் தொடர்புடைய அதிகாரிகள், இலங்கை ஊட்டச்சத்து நிபுணர்களின் கல்வி கலாசாலை, ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் பிறரின் பங்கேற்புடன் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்து தெரிவிக்கையில், அரச மருத்துவமனைகளில் உள்நோயாளிகளுக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்குவதற்காக சுகாதார அமைச்சகம் ஆண்டுதோறும் பெரும் தொகையான பணத்தை செலவிடுகிறது. எனினும் அந்தப்பணம் நியாயமான முறையில் பயன்படுத்தப்படுகிறதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. மருத்துவமனை வழங்கும் உணவால் நோயாளி திருப்தி அடைகிறாரா ?இல்லையா? என்பதை கூட எவரும் நோயாளியிடம் கேட்பதில்லை. அவ்வாறான நிலையில் தற்போது வைத்தியசாலைகள் இயங்கி வருகின்றன. ஆகையால் அரச மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் அவர்களுக்கு உணவளிக்கும் முறை ஆகியவற்றில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். நோயாளர்களுக்கு சுவையான மற்றும் தரமான உணவை வழங்குவது அவசியம். மஹரகம தேசிய புற்றுநோய் மருத்துவமனையில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த முன்னோடித் திட்டம், எதிர்காலத்தில் நாட்டின் அனைத்து அரச மருத்துவமனைகளிலும் செயல்படுத்தப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. குழம்பு மற்றும் காய்கறிகள் கொண்ட ஒற்றை தட்டு இந்த திட்டத்தின் முக்கிய அம்சம். மீன், இறைச்சி போன்றவற்றுடன் கூடிய தட்டுக்குப் பதிலாக சோறு, காய்கறிகள், இறைச்சி அல்லது மீன் என பிரிக்கப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட தட்டில் நோயாளிக்கான உணவு வழங்கப்படும். மேலும், எதிர்காலத்தில் அனைத்து அரச மருத்துவமனைகளிலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த, மருத்துவமனைகளின் சமையலறைகள் நவீனமயமாக்கப்பட வேண்டும். தற்போதுள்ள எரிவாயு அடுப்புகளுக்குப் பதிலாக நீராவியால் இயங்கும் அடுப்புகள் மற்றும் நவீன தொழில்நுட்ப உபகரணங்களை வழங்குவதும் அவசியம். மருத்துவமனைகளில் உணவு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை வழங்குவதற்கான ஏலம் மிகக் குறைந்த விலையை வழங்கும் நபருக்கே வழங்கப்படுகிறது. மேலும் மிகக் குறைந்த விலையை வழங்கும் நபரால் மருத்துவமனைக்கு வழங்கப்படும் மூலப்பொருட்களின் தரம் குறித்து சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக மசாலாப் பொருட்களின் தரத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/219349
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
புதிய வரலாறு படைத்த இந்தியா: ஆகாஷ் தீப் அற்புத பந்துவீச்சில் தடம் புரண்ட இங்கிலாந்து பட மூலாதாரம்,PHOTO BY STU FORSTER/GETTY IMAGES கட்டுரை தகவல் க.போத்திராஜ் பிபிசி தமிழுக்காக 6 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. பிர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியை இந்திய அணி வென்று தொடரை சமன் செய்துள்ளது. இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் இரட்டை சதம் (269 ரன்கள்) அடித்திருந்தார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் ஷுப்மன் கில் சதமடிக்க (161 ரன்கள்) 427 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணிக்கு 608 ரன்கள் என்கிற இமாலய இலக்கை நிர்ணயித்திருந்தது இந்திய அணி. 25 நிமிடங்களில் திருப்புமுனை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆட்டமிழந்து வெளியேறும் ஹேரி புரூக் 4வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்களுடன் இருந்தது. கடைசி நாளான இன்று இங்கிலாந்து அணி வெற்றி பெற 536 ரன்கள் தேவைப்பட்டது, கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்தன. ஹேரி ப்ரூக் 15 ரன்களுடனும், போப் 24 ரன்களுடன் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். ஏற்கெனவே ஆகாஷ் தீப், சிராஜ் இருவரும் இங்கிலாந்து பேட்டர்களை தங்களின் ஸ்விங் பந்துவீச்சால் அலறவிட்ட நிலையில் அவர்களின் துல்லியமான லென்த்தில் கணிக்க முடியாத ஸ்விங் பந்துவீ்ச்சு இன்று காலையும் தொடர்ந்தது. ஆட்டம் தொடங்கிய 25 நிமிடங்களுக்குள் ஆகாஷ் தீப் இரு அருமையான பந்துகளால் இரு விக்கெட்டுகளை சாய்த்து இங்கிலாந்து அணியை நெருக்கடிக்குள் தள்ளினார். முதலாவதாக ஆட்டம் தொடங்கி 4வது ஓவரில் ஆலி போப்பிற்கு இன் கட்டரில் பந்துவீசி க்ளீன் போல்டாக்கினார் ஆகாஷ் தீப். ஏற்கெனவே திணறிக்கொண்டிருந்த போப் 25 ரன்னில் பெவிலியன் திரும்பினார். போப் ஆட்டமிழந்த அடுத்த 2 ஓவர்களில் ஹேரி ப்ரூக் விக்கெட்டுக்கு ஆகாஷ் குறிவைத்தார். பேட்டர் ஆடமுடியாத வகையில் இன்ஸ்விங்கில் பந்தை வீசி ஹேரி ப்ரூக்கை நிலைகுலையச் செய்து கால்காப்பில் வாங்கவைத்தார் ஆகாஷ். ப்ரூக் கால்காப்பில் வாங்கியதும் ஆகாஷ் அப்பீல் செய்தவுடனே நடுவர் மறுபேச்சு இன்றி கையை உயர்த்தி அவுட் வழங்கினார். டிஆர்எஸ் முறையீட்டுக்கு வாய்ப்பின்றி துல்லியமான எல்பிடபிள்யு என்பதால், ப்ரூக்கும் முறையீடு செய்யாமல் வெளியேறினார். இந்த இரு விக்கெட்டுகளும், இங்கிலந்து அணி சேஸிங் கனவிலிருந்து சற்று பின்னோக்கி தள்ளச் செய்தது. சேஸ் செய்துவிடலாம் என எண்ணி களமிறங்கிய இங்கிலாந்து பேட்டர்கள் பின்னடைவைச் சந்தித்தனர். 4வது நாள் முடிவில் 64 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து, இன்று காலை ஆட்டம் தொடங்கி, 19 ரன்களைச் சேர்பதற்குள் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஸ்டோக்ஸ், ஸ்மித் நங்கூரம் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜேம் ஸ்மித் இருவரும் 7வது விக்கெட்டுக்கு நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். பந்து தேய்ந்து, மென்மையாக மாறிவிட்டதால், எதிர்பார்த்த ஸ்விங்கும், வேகமும் கிடைக்காததால் பேட்டர்கள் அடித்து ஆடுவதற்கு வசதியாக இருந்ததால், ரன்களை இங்கிலாந்து பேட்டர்கள் வேகமாகச் சேர்த்தனர்.மதிய உணவு இடைவேளைக்குச் செல்லும்போது இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்திருந்தது. ஸ்டோக்ஸை ஆட்டமிழக்கச் செய்ய சுந்தர், ஜடேஜாவை மாறி, மாறி கேப்டன் கில் பயன்படுத்தினார். இதில் ஸ்டோக்ஸ் 18 ரன்னில் இருந்தபோது, ஜடேஜா பந்துவீச்சில் கிடைத்த கேட்சை கில் தவறவிட்டதும் குறிப்பிடத்தக்கது. ஸ்டோக்ஸ் ஆபத்தானவர் எந்த நேரத்திலும் ஆட்டத்தை திருப்பிவிடுவார் என்பதால் இவருக்கு குறிவைத்து கில் செயல்பட்டு பந்துவீச்சை உணவு இடைவேளைக்குப்பின் மாற்றினார். வாஷிங்டன் திருப்புமுனை பட மூலாதாரம்,STU FORSTER/GETTY IMAGES படக்குறிப்பு, பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார் உணவு இடைவேளை முடிந்துவந்தபின், மீண்டும் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. ஸ்டோக்ஸ் 33 ரன்கள் சேர்த்திருந்தபோது வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து தோல்வியின் பக்கம் தள்ளப்பட்டு ஆட்டம் இந்திய அணியின் கைகளுக்கு திரும்பியது. 7-வது விக்கெட்டுக்கு ஸ்டோக்ஸ், ஸ்மித் இருவரும் 70 ரன்கள் சேர்த்தனர். அடுத்து வோக்ஸ் களமிறங்கி ஸ்மித்துடன் சேர்ந்தார். முதல் இன்னிங்ஸில் சிறப்பாக ஆடிய ஸ்மித் 73 பந்துகளில் அரைசதம் அடித்தபின் வேகமாக ரன்களை சேர்க்கத் தொடங்கினார். பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் பவுன்ஸராக வீசப்பட்ட பந்தை தூக்கி அடிக்க வோக்ஸ் முற்பட்டபோது, அது சிராஜிடம் கேட்சானது. வோக்ஸ் 7 ரன்னில் ஆட்டமிழக்கமே ஆட்டம் மொத்தமும் இந்தியாவின் பக்கம் திரும்பியது. இந்திய அணியின் வெற்றிக்கு 2 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்பட்டது. ஸ்மித், கார்ஸ் களத்தில் இருந்தனர். ஸ்மித்தை ஆட்டமிழக்கச் செய்யும் நோக்கில் ஆகாஷ் மீண்டும் பந்துவீச அழைக்கப்பட்டார். ஆகாஷ் சற்று ஸ்லோவர் பந்தாக ஆப்சைடு விலக்கி வீசினார். இதை கணிக்காத ஸ்மித் தூக்கிஅடிக்கவே, பேக்வார்ட் ஸ்குயரில் நின்றிருந்த சுந்தரிடம் கேட்ச் கொடுத்து 88 ரன்களில் வெளியேறினார். இங்கிலாந்து அணி 8வது விக்கெட்டை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. ஆகாஷ் தீப் தனது டெஸ்ட் வாழ்க்கையில் முதல்முறையாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி திருப்புமுனையாக இருந்தார். பட மூலாதாரம்,STU FORSTER/GETTY IMAGE படக்குறிப்பு, ஆட்டமிழந்து வெளியேறும் ஸ்மித் சிராஜின் அற்புதமான கேட்ச் இந்திய அணியின் வெற்றிக்கு 2 விக்கெட் மட்டுமே தேவைப்பட்டது. கார்ஸ், டங் இருவரும் களத்தில் இருந்தனர். பிரசித், ஜடேஜா மாறி, மாறி பந்துவீசியும் இருவரும் சளைக்காமல் ஆடினார். ஒரு கட்டத்தில்பேட்டர்களுக்கு நெருக்கடி தரும்வகையில் ஸ்லிப்பில், மிட்விக்கெட்டில் பீல்டர்களை நெருக்கமாக நிறுத்தி ஜடேஜா பந்துவீசினார். ஜடேஜாவின் வியூகத்துக்கு பலன் கிடைத்து. ஜடேஜாவீசிய பந்தை டங் தட்டிவிட, மிட்விக்கெட்டில் நின்றிருந்த சிராஜ், அற்புதமாக டைவ் செய்து கேட்ச் பிடித்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். இங்கிலாந்து 9வது விக்கெட்டை இழந்தது. அடுத்ததாக பஷீர் களமிறங்கி, கார்ஸுடன் சேர்ந்தார். கடைசி விக்கெட்டை வீழ்த்த ஆகாஷ் பந்துவீச அழைக்கப்பட்டார். ஆகாஷ் பந்துவீச்சில் சற்று திணறிய கார்ஸ், திடீரென பெரிய ஷாட்டுக்கு முயன்று பந்தை தூக்கி அடித்தார். ஆனால் சிராஜ் பந்தை பிடிக்கும் முயற்சியில் தவறாக கணித்ததால் கேட்சை தவறவிட்டார். வெற்றிக்கான கேட்ச் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 10 விக்கெட் வீழ்த்திய ஆகாஷ் தீப் ஜடேஜா அடுத்து பந்துவீச அழைக்கப்பட்டார். ஜடேஜா பந்துவீச்சில் பஷீர் கால்காப்பில் வாங்கிய பந்தை கேட்ச்பிடித்தபோது நடுவர் அவுட் வழங்கினார். ஆனால் டிஆர்எஸ் முறையீட்டில் பந்து பேட்டில் படவில்லை, கால்காப்பில் மட்டுமே பட்டது எனத் தெரியவந்ததால் அவுட் இல்லை என அறிவிக்கப்பட்டது. அதன்பின்பும், ஜடேஜா, ஆகாஷ் இருவரும் மாறி மாறி பந்துவீசியும் கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. இறுதியாக ஆகாஷ் தீப் வீசிய 64வது ஓவரில் அந்த வெற்றி விக்கெட் விழுந்தது. ஆகாஷ் வீசிய பந்தை கார்ஸ் தூக்கிஅடிக்க கேப்டன் கில் கேட்ச் பிடிக்கவே இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்றது. வெற்றியின் நாயகர்கள் இந்திய அணியின் வெற்றிக்கு ஒவ்வொரு வீரர்களும் பங்களிப்பு செய்துள்ளனர்.முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் அரைசதம், ஷுப்மன் கில் இரட்டை சதம், ஜடேஜா அரைசதம், 2வது இன்னிங்ஸில் ராகுலின் அரைசதம், கில்லின் 2வது சதம், ரிஷப்பந்த் அரைசதம், ஜடேஜாவின் 2வது அரைசதம் என பேட்டிங்கில் முடிந்தவரை பங்களிப்பு செய்தனர். பந்துவீச்சில் பும்ரா இல்லாத நிலையில் இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியது உண்மையில் பாராட்டுக்குரியது. முதல் இன்னிங்ஸில் சிராஜ் எடுத்த இங்கிலாந்து மண்ணில் முதல் 5 விக்கெட், ஆகாஷ் தீப்பின் 4 விக்கெட். 2வது இன்னிங்ஸில் ஆகாஷ் தீப் எடுத்த முதல் 6 விக்கெட், சிராஜ், வாஷிங்டன் விக்கெட் ஆகியவை வெற்றிக்கு துணையாக இருந்தன. 39 ஆண்டுகளுக்குப்பின் நிகழ்ந்த சாதனை பட மூலாதாரம்,GETTY IMAGES அதிலும் ஆகாஷ் தீப் வெற்றிக்கான திருப்புமுனையை இரு இன்னிங்ஸிலும் வழங்கினார் என்பதை மறுக்க இயலாது. இரு இன்னிங்ஸிலும் சேர்த்து ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஆகாஷ் பெற்றார். 1986ம் ஆண்டு இதே பிர்மிங்ஹாம் மைதானத்தில் சேத்தன் சர்மா 10 விக்கெட்டுகளை வீழ்த்தியபின் ஏறக்குறைய 39 ஆண்டுகளுக்குப்பின் ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளார். அன்று காபா, இன்று பிர்மிங்ஹாம் 2021ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் காபா மைதானத்தில் முதல்முறையாக இந்திய அணி வரலாற்று பெற்றி பெற ஷுப்மன் கில், ரிஷப் பந்த், சிராஜ் ஆகிய 3 பேரும் முக்கிய காரணமாக இருந்தனர். இன்று எட்ஜ்பாஸ்டனில் புதிய சரித்திரத்தை எழுதவும் இந்த 3 வீரர்களின் பங்களிப்பு முக்கியமாக இருந்துள்ளது. இதில் ஆகாஷ் தீப்பின் முதல்முறை 6 விக்கெட், ஒட்டுமொத்த 10 விக்கெட் முக்கியமாக இருந்துள்ளது. இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்று 2வது போட்டியிலேயே அந்நிய மண்ணில் கில் வெற்றி தேடித்தந்துள்ளார். இதில் கேப்டன் கில்லின் பேட்டிங் பங்களிப்பு இரு டெஸ்ட் போட்டிகளிலும் மகத்தானது. முதல் போட்டியில் சதம், 2வது டெஸ்டில் இரட்டை சதம், சதம் என 430 ரன்கள் குவித்து முழுமையான உழைப்பை வழங்கினார். அதேபோல ரிஷப் பந்த் முதல் இன்னிங்ஸில் சொதப்பினாலும், 2வது இன்னிங்ஸில் விரைவாக அடித்த அரைசதம், சிராஜ் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து மண்ணில் எடுத்த 6 விக்கெட், 2வது இன்னிங்ஸில் ஒருவிக்கெட் என 7 விக்கெட்டுகளை சாய்த்து மீண்டும் சரித்திரம் படைக்க உதவினர். பிர்மிங்ஹாமில் புதிய வரலாறு பிர்மிங்ஹாமில் இதுவரை 8 டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய அணி ஒரு போட்டியில் கூட வென்றதில்லை, ஒரு போட்டியில் மட்டுமே டிரா செய்திருந்தது. ஆனால், இந்த போட்டியில் பிர்மிங்ஹாமில் வென்றதன் மூலம் இந்திய அணி முதல்வெற்றியைப் பதிவு செய்து புதிய வரலாறு படைத்தது. நூறாண்டுகளாக பிர்மிங்ஹாமில் கிரிக்கெட் விளையாடியும் முதல் வெற்றிக்காக தவம் கிடந்த நிலையில் நூறாண்டுகளுக்குப்பின் கிடைத்த முதல் வரலாற்று வெற்றி, கொண்டாடப்பட வேண்டிய வெற்றியாகும். இந்த நாள் இந்திய அணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க நாளாக அமைந்திருக்கிறது. சீனியர்கள் இல்லாமல் சாதனை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய இளம் அணி சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது இந்திய அணியில் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின், பும்ரா இல்லாத நிலையில் இளம் வீரர்கள் வரலாற்று வெற்றி தேடித்தந்துள்ளனர். இந்திய அணியில் இடம் பெற்ற பெரும்பாலான வீரர்கள் 30 வயதுக்குள் இருக்கும் இளம் வீரர்கள், 50 டெஸ்ட் போட்டியில்கூட ஆடாத அனுபவம் குறைந்தவர்கள். இவர்களை வைத்துக்கொண்டு கேப்டன் ஷுப்மன் கில் இங்கிலாந்து மண்ணில் வென்றது உண்மையில் வரலாற்று வெற்றியாகும், கில் கேப்டன்ஷிப் ஏற்று கிடைக்கும் முதல் வெற்றியாகும். இங்கிலாந்துக்கு மரணஅடி பாஸ் பால் உத்தியைக் கையாண்டு விளையாடியது முதல், இங்கிலாந்து அணி டிரா என்றாலே என்ன என்று கேள்வி கேட்கும் விதத்தில் ஆடியது. 23 டெஸ்ட்களில் 15 போட்டிகளை வென்றிருந்தது, ஒரு போட்டியில் மட்டுமே டிரா செய்திருந்தது. ஆனால், பாஸ் பால் ஆட்டத்தை ஆடும் முயற்சியில் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு இளம் இந்திய வீரர்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர். டாஸ் வென்று முதல் டெஸ்டில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்து வெற்றி பெற்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் இந்த டெஸ்டிலும் 2வதுமுறையாக டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். ஆனால், ஸ்டோக்ஸின் முடிவு தவறானது, இந்திய அணி அனைத்து ஆட்டங்களிலும் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சொதப்பாது என்பதை இளம் இந்திய அணி நிரூபித்துள்ளது. சமநிலையில் தொடர் இதன் மூலம் சச்சின்-ஆன்டர்சன் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர். 3வது டெஸ்ட் போட்டி வரும் 10ம் தேதி வரலாற்று சிறப்பு மிகுந்த லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3r9jyxxl99o
-
போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்
நிகிதா புகாருடன் முரண்படும் முதல் தகவல் அறிக்கை - காவலாளி வழக்கில் என்ன நடக்கிறது? கட்டுரை தகவல் பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 6 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கோவில் காவலாளி அஜித் குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்தது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவின் பெயரில் மாவட்ட நீதிபதியின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காவலாளி அஜித் குமாருக்கு எதிராக நகையை காணவில்லை என மனுதாரர் நிகிதா அளித்த புகாரின் முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. இதில் பல்வேறு முரண்பட்ட தகவல்கள் இருப்பதாக குற்றம்சாட்டு வைக்கும் அஜித் குமார் தரப்பு வழக்கறிஞர்கள் பல கேள்விகளையும் முன் வைத்துள்ளனர். உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மதுரை மாவட்ட 4-வது நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்கவும், வரும் 8ந்தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் கடந்த 2-ம் தேதி முதல் திருப்புவனம் நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகையில் தங்கியிருந்து நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார். தற்போது வரை யாரெல்லாம் விசாரிக்கப்பட்டுள்ளார்கள்? படக்குறிப்பு, நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் முதல் மூன்று நாட்கள் நடந்த விசாரணையின் போது, ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், கோவில் அலுவலர் பெரியசாமி, அஜித்குமாரை தாக்கியது தொடர்பான வீடியோவை உயர்நீதிமன்றத்தில் வழங்கிய கோயில் பணியாளர் சக்தீஸ்வரன், கோயில் பணியாளர்கள் பிரபு, கார்த்திக் ராஜா, அஜித் குமாரின் தாயார் மாலதி, அவரது சகோதரர் நவீன்குமார், திருப்புவனம் அரசு மருத்துவமனை மருத்துவர் கார்த்திகேயன், ஆட்டோ ஓட்டுநர் அய்யனார், அஜித் குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்த மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சதாசிவம், ஏஞ்சல் உள்ளிட்டோரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். நான்காவது நாளான வெள்ளிக்கிழமை காலை நீதிபதி ஜான் சுந்தர் லால் சுரேஷ் திருப்புவனம் காவல் நிலையத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார். அஜித் குமார் மீதான நிகிதாவின் புகார் மனு, அந்தப் புகாரை பதிவு செய்த ஆவணத்தை ஆய்வு செய்த அவர், சம்பவத்தன்று பணியில் இருந்த போலீஸாரிடம் விவரங்களைக் கேட்டறிந்தார். பின்னர், நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகைக்கு வந்த நீதிபதி, சிவகங்கை ஏடிஎஸ்பி சுகுமாறனிடம் விசாரித்தார். தொடர்ந்து, திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், சிறப்பு எஸ்.ஐ. சிவக்குமார், அன்று பணியில் இருந்த போலீஸ்காரர் இளையராஜா ஆகியோரிடம் தனித்தனியாக விசாரித்தார். இதையடுத்து, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரத்திடமும் விசாரணை நடத்தினார். முதல் தகவல் அறிக்கையில் என்ன உள்ளது? படக்குறிப்பு,திருப்புவனம் காவல் நிலையம் நிகிதாவின் புகாரின் பேரில் பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் பல்வேறு தகவல்கள் முரண்பட்டதாக உள்ளதாகவும், அறிக்கையின் அடிப்படையில் சட்டத்திற்கு புறம்பாக அஜித் குமார் உட்பட ஐந்து இளைஞர்களை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் அடித்தது தெரியவந்துள்ளதாகக் கூறுகிறார் அஜித்குமாரின் வழக்கறிஞர் கார்த்திக் ராஜா. புகார் மனுவில் உள்ள நேரமும் முதல் தகவல் அறிக்கையில் உள்ள நேரமும் வேறு வேறாக உள்ளது என்கிறார் கார்த்திக் ராஜா. இது குறித்து பிபிசி தமிழிடம் பேசியவர், " முதல் தகவல் அறிக்கையில் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நகை காணாமல் போனதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நிகிதா கொடுத்த புகார் மனுவில் காலை 9 மணிக்கு வீட்டில் இருந்து தானும் (நிகிதா) அம்மா சிவகாமியும் கோவிலுக்குப் புறப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்." 'சடலமாக வருவான் என நினைக்கவில்லை' என்று கதறும் தாயார் - நகை திருட்டு புகார் கொடுத்த பெண் கூறுவது என்ன? பிபிசி கள ஆய்வு "அரசு தன் குடிமகனையே கொலை செய்துள்ளது" - திருப்புவனம் கோவில் காவலாளி வழக்கில் உயர்நீதிமன்றம் வேதனை சாத்தான்குளம் முதல் திருப்புவனம் வரை - காவல் அத்துமீறல்கள் ஏற்படுத்தும் அரசியல் எதிரொலி '44 காயங்கள், மூளையில் ரத்தக் கசிவு, காதுகளில் உலர்ந்த ரத்தம்' - மரணத்திற்கு காரணம் என்ன? முதல் தகவல் அறிக்கையில் குளறுபடிகளா? படக்குறிப்பு, அஜித்குமாரின் வழக்கறிஞர் கார்த்திக் ராஜா. நிகிதா 27ம் தேதி இரவு அளித்த பேட்டியில். காவலாளி சீருடையில் இருந்த அஜித் குமார் , தனது தாய்க்கு சக்கர நாற்காலியை எடுத்து வந்து கொடுத்தற்காக ரூ.500 கொடுக்க வேண்டும் என வாக்குவாதம் செய்ததாகவும், கோவிலில் இருந்து வீடு திரும்பிய பின்னர் காரில் இருந்த நகை காணாமல் போனதை அறிந்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் நிகிதா அளித்த புகார் மனுவில் உயிரிழந்த அஜித்குமார் 500 ரூபாய் கேட்டதாக குறிப்பிடப்படவில்லை என்கிறார் கார்த்திக் ராஜா. தொடர்ந்து பேசிய அவர். "நிகிதா 27ஆம் தேதி காலை 11 மணிக்கு கோவிலுக்கு வந்து சென்றுள்ளார். நகை காணாமல் போனதாக 3 மணிக்கு திருப்புவனம் காவல் நிலையத்தில் வாய் மொழியாக முதலில் புகார் அளித்துள்ளார். பிறகு இரவு 7 மணிக்கு வழக்கறிஞர் ஒருவர் உதவியுடன் புகார் மனு அளித்துள்ளார்." "எனவே முதல் தகவல் அறிக்கையில் பல்வேறு குளறுபடிகள் மற்றும் முரண்பட்ட தகவல்கள் உள்ளன. நீதிமன்றத்தில் அஜித் குமார் கொல்லப்பட்டதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பிறகு திருப்புவனம் காவல்துறையினரால் தாமதமாக அவசரகதியில் தயாரிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையாக இதனை நான் பார்க்கிறேன்." என்று கூறினார். இந்த வழக்கில் நிகிதாவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என கார்த்திக் ராஜா தெரிவித்துள்ளார். "உயிரிழந்த அஜித் குமார் மீது இதுவரை எந்த காவல் நிலையத்திலும் குற்ற பின்னணி இல்லை, ஆனால் புகார் அளித்த நிகிதா மீது பல்வேறு மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. அஜித்குமார் மரணத்தில் தற்போது போடப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை மாற்றி எதிரியாக நிகிதாவை சேர்க்க வேண்டும்" என்றார். சட்டத்திற்குப் புறம்பாக விசாரித்துள்ளனரா? பட மூலாதாரம்,HENRI TIPHAGNE படக்குறிப்பு, மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் நிகிதா புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை இந்த வழக்கிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிபிசி தமிழிடம் பேசிய மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர். "நகை காணவில்லை என்பது தொடர்பாக 27 ஆம் தேதி 3 மணிக்கு நிகிதா புகார் அளித்ததாகவும் அது தொடர்பாக திருப்புவனம் காவல் நிலையத்தில் சிஎஸ்ஆர் போடப்பட்டுள்ளது என அரசு தரப்பில் நீதிமன்றத்தில் வாதம் முன் வைக்கப்பட்டது." "முதல் கட்ட விசாரணை தொடங்கிய திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார் திருக்கோயில் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அஜித் குமாரை விசாரணைக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்ததன் அடிப்படையில் அஜித் குமார் காவல் நிலையத்திற்கு விசாரணைக்குச் சென்றிருக்கிறார்." "காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த அஜித் குமார் காணாமல் போன நகை தொடர்பாக தனக்கு ஒன்றும் தெரியாது தான் எடுக்கவில்லை என தொடர்ந்து சொல்லி வந்த நிலையில், நிகிதா இரவு 7 மணி அளவில் திருப்புவனம் காவல் நிலையத்தின் முன்பு நின்று கொண்டு ஊடகங்களுக்கு காரில் வைத்திருந்த நகையைக் காணவில்லை, நகையை காவலாளி அஜித் குமார் திருடியதாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்." என்று தெரிவித்தார் நன்றாக விசாரித்து நகையை மீட்குமாறு கூறிய டிஎஸ்பி பட மூலாதாரம்,NIKITHA படக்குறிப்பு, நிகிதா திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் குமார் காவல் நிலையத்திற்கு வெளியே அமர்ந்திருந்த மானாமதுரை டி.எஸ்.பி சிறப்பு தனிப்படை போலீசாரை அழைத்து அஜித் குமாரை விசாரிக்குமாறு ஒப்படைத்துள்ளார். ஒப்படைக்கப்பட்ட அஜித் குமாரை காவல் நிலையத்தில் இருந்து தனிப்படை காவலர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். சிறப்பு தனிப்படை சார்பு ஆய்வாளர் பிரதாப் விடுப்பில் இருந்தால் தனிப்படை தலைமைக் காவலர் மானாமதுரை டி.எஸ்.பி சண்முகசுந்தரத்தை அழைத்து அஜித் குமார் தொடர்பாக தகவல்களை அளித்ததாக அஜித் குமார் இறப்பு தொடர்பாக தனிப்படை தலைமைக் காவலர் கண்ணன் அளித்துள்ள புகாரின் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டி.எஸ்.பி அஜித் குமாரை விசாரிக்க அனுமதி அளித்தன் அடிப்படையில் அஜித்குமாரை 27ஆம் தேதி இரவு கடுமையாக தாக்கியுள்ளனர் என்கிறார் ஹென்றி திபென் அஜித் குமார் நகையை தான் திருடவில்லை எனச் சொல்வதாக தலைமை காவலர் மீண்டும் டிஎஸ்பியை தொடர்பு கொண்டு கூறியுள்ளார். அதற்கு டி.எஸ்.பி சண்முகசுந்தரம் அஜித் குமாரை "நன்றாக விசாரித்து நகையை மீட்குமாறு கூறியுள்ளார்". தொடர்ந்து பேசிய அவர், "டி.எஸ்.பி உத்தரவின் பெயரில் சம்மன் அளிக்காமல் அருண்குமார், அஜித் குமார் மற்றும் அவரின் தம்பி நவீன் குமாரையும் விசாரணைக்கு அழைத்து வந்து கடுமையாக போலீசார் தாக்கியுள்ளனர். அதன் பின்னர் 28ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் நிகிதா கொடுத்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது." "அப்படியெனில் சட்டத்திற்கு புறம்பாக வழக்குப்பதிவு செய்யப்படாமல் மூன்று இளைஞர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்து வந்து இரவு முழுவதும் கடுமையாக தாக்கியது முதல் தகவல் அறிக்கையில் தெரியவந்துள்ளது. எனவே நிகிதாவின் முதல் தகவல் அறிக்கை இந்த வழக்கிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது." என்றார். "காவல் அதிகாரிகளை ஏன் இன்னும் வழக்கில் சேர்க்கவில்லை?" ஆய்வாளர் ரமேஷ் குமார் மற்றும் டிஎஸ்பி சண்முகசுந்தரத்தை ஏன் இன்னும் வழக்கில் சேர்க்கவில்லை என கேள்வி எழுப்புகிறார் ஹென்றி திபென். "அஜித் குமாரை விசாரணைக்கு அழைத்து செல்ல போலீசாருக்கு உத்தரவிட்ட திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் குமார் மற்றும் மானாமதுரை டி.எஸ்.பி சண்முகசுந்தரம் ஆகிய இருவரையும் இதுவரை ஏன் வழக்கில் சேர்த்து அவர்களை கைது செய்யவில்லை என்ற கேள்வி நிகிதாவின் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் எழுகிறது" என அவர் விவரித்தார். உடற்கூராய்வுக்கு அனுப்ப ஏற்பட்ட காலதாமதம் குறித்தும் கேள்வி எழுப்புகிறார் ஹென்றி திபென். "28 ஆம் தேதி மாலை அஜித்குமார் உயிரிழந்ததாக காவல் ஆய்வாளர் அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்த நிலையில் 29ஆம் தேதி மாலை வரை உடற்கூராய்வுக்கு அனுப்பாமல் காலதாமதம் செய்ததற்கு என்ன காரணம் என்று பல்வேறு கேள்விகள் எழுகிறது" என்றார். "2011 ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு மோசடி வழக்குகள் உள்ள நிகிதாவை ஏன் காவல்துறை இதுவரை அழைத்து விசாரிக்கவில்லை" என்ற கேள்வி எழுவதாக கூறுகிறார் மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c939xwd2z69o
-
தேர்தல் முறைமை திருத்தம் செய்யப்பட வேண்டும் - தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்
Published By: DIGITAL DESK 2 06 JUL, 2025 | 05:51 PM (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதித் தேர்தல், பொதுத்தேர்தல் மற்றும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களின் போது இடம்பெற்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்துக் கொள்வதற்கு எதிர்கால திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தேர்தல் முறைமை திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் எதிர்கால திட்டமிடல்கள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டு மக்களின் அடிப்படை வாக்குரிமையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு. தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதற்கு அரசியலமைப்பினால் உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக செயற்படுகிறோம். 09 மாத காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல், பொதுத்தேர்தல் மற்றும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் என்று மூன்று தேர்தல்களை சிறந்த முறையில் நடத்தி முடித்தோம். இந்த தேர்தல்களில் ஒருசில குறைபாடுகளை அவதானித்துள்ளோம். எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களின் போது அந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு உரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தேர்தல் முறைமையை திருத்தம் செய்ய வேண்டும் என்று பாராளுமன்ற தெரிவுக்குழுக்கள், மற்றும் அமைச்சரவை உப குழுக்களிடம் வலியுறுத்தி பல யோசனைகளை முன்வைத்துள்ளோம். நடைமுறைக்கு சாத்தியமான வகையில் தேர்தல் முறைமையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளோம். தேர்தல் முறைமையில் நாட்டு மக்கள் அதீத கவனம் செலுத்த வேண்டும். தேர்தல் நடக்கிறது. வாக்களித்து விட்டோம் என்ற நிலைப்பாட்டில் பெரும்பாலானவர்கள் உள்ளதை அவதானிக்க முடிகிறது. தேர்தல் முறைமையில் மக்கள் தொடர்ச்சியாக அவதானம் செலுத்த வேண்டும். அப்போது தான் சிறந்த பிரதிநிதிகளை தெரிவு செய்ய முடியும் என்றார். https://www.virakesari.lk/article/219336
-
கருணா, பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே.புஷ்பகுமார் கைது
திருக்கோவில் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை : இனியபாரதி, தவசீலன் ஆகிய இருவர் சிஜடியினரால் கைது Published By: VISHNU 06 JUL, 2025 | 10:25 PM அம்பாறை திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமார் திருக்கோவில் வைத்தும் அவரது சகாவான சசீதரன் தவசீலன் மட்டு சந்திவெளியில் வைத்தும் இருவரையும் கொழும்பில் இருந்து வந்த குற்றபுலனாய்வு பிரிவினர் ஞாயிற்றுக்கிழமை (06) கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழரசு கட்சி சார்பில் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட வெற்றி பெற்று திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளராக பதவியேற்றார். இந்த நிலையில் கடந்த 2007-6-28 ம் திகதி விநாயகபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து திருக்கோவிலுள்ள பிரதேச சபையை நோக்கி பிரயாணித்த போது அவரை விநாயகபுரம் கோரக்களப்பு வீதியில் வைத்து இனம் தெரியாத துப்பாக்கி தாரிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரது மனைவியார் படுகொலை செய்யப்பட்ட தனது கணவருக்கு நீதி கோரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இந்த விசாரணை கடந்தகால அரசாங்கத்தினால் கிடப்பில் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து இந்து முறைப்பாடு தொடர்பாக அவரது மனைவியர் சிஜடி யினரிடம் முறைப்பாடு தெரிவித்ததையடுத்து அவர்கள் விசாரணையினை மேற்கொண்டுவந்த நிலையில் இதனுடன் தொடர்புபட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இனிய பாரதியை சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை (06) திருக்கோவில் அவரது வீட்டில் வைத்து கைது செய்ததுடன் அவருடைய சகாவான மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தைச் சேர்ந்த சசீதரன் தவசீலன் சந்திவெளியில் அவரது வீட்டில் வைத்து சிஜடி மற்றும் விசேட அதிரடிப்படையின் இணைந்து கைது செய்து கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார். இதேவேளை கடந்த 2005 தொடக்கம் 2009 வரை காலப்பகுதியில் திருக்கோவில் மற்றம் விநாயகபுரம் பகுதியில் பலர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக காணாமல் போன உறவுகள் இனியபாரதி மீது குற்றம் சாட்டிவருவதுடன் அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/219343
-
உலகில் முதல் நாடாக ஆப்கனில் தாலிபன் அரசுக்கு ரஷ்யா அங்கீகாரம் - இந்தியா என்ன செய்யப் போகிறது?
பட மூலாதாரம்,RUSSIAN FOREIGN MINISTRY/HANDOUT/ANADOLU VIA GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ராவ் மற்றும் ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சராக செயல்படும் அமிர் கான் முட்டாகி கட்டுரை தகவல் அபே குமார் சிங் பிபிசி செய்தியாளர் 6 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 41 நிமிடங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசை அங்கீகரித்த முதல் நாடாகியுள்ளது ரஷ்யா தாலிபன் காபூலைக் கைப்பற்றி ஆட்சிக்கு வந்த பிறகான நான்கு வருடங்களில் இது அவர்களது மிகப்பெரிய ராஜதந்திர வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. ரஷ்யாவின் நகர்வு, இதுவரை தாலிபன் அரசை அங்கீகரிக்காமல் இருந்து வரும் மற்ற நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும் என நம்புவதாக ஆப்கானிஸ்தானின் பொறுப்பு வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முட்டாகி தெரிவித்தார். ரஷ்யாவின் முடிவை துணிச்சலான முடிவு என அவர் விவரித்தார். இந்த முடிவால், "எரிசக்தி, போக்குவரத்து, விவசாயம் மற்றும் கட்டமைப்பு" ஆகியவற்றில் ஆதாயம் இருப்பதாக கருதுவதாகவும். பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலால் ஏற்படும் அபாயங்களை எதிர்கொள்ள ஆப்கானிஸ்தானுக்கு உதவும் எனவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த முடிவு பலரால் விமர்சிக்கப்பட்டுள்ளது. "இதைப் போன்ற நடவடிக்கை ஆப்கானிஸ்தானின் மக்களை மட்டுமல்லாது, மொத்த உலகின் பாதுகாப்பை அபாயத்திற்கு உள்ளாக்குகிறது," என ஆப்கானிஸ்தான் முன்னாள் எம்.பி. ஃபௌசியா கூஃபி தெரிவித்தார். அதே நேரம், 'இது சர்வாதிகார ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் ஒரு அரசை அங்கீகரிக்கிறது. இந்த ஆட்சி பெண்களுக்கு எதிரானது மட்டுமல்லாது தொடர்ந்து பொது உரிமைகளை நீக்கிவருகிறது,' என ஆப்கான் வுமென் பொலிடிக்கல் பார்டிசிபேசன் நெட்வொர்க் தெரிவித்துள்ளது. பெண்கள் உரிமைகளை மதிப்பதாக தாலிபன் அரசு முன்னர் தெரிவித்திருந்தது. ஆனால் இந்த உரிமைகள் ஆப்கான் பண்பாடு மற்றும் இஸ்லாமிய சட்டத்தைப் பற்றிய அவர்களது சொந்த விளக்கத்தை பொறுத்தது. கடந்த 2021ஆம் ஆண்டு முதல், ஆப்கானிஸ்தானில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் பள்ளிக்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளதுடன், பெண்கள் பெரும்பாலான பணிகளில் பணியாற்ற அனுமதிக்கப்படுவதில்லை. கூடுதலாக பெண்கள் தனியாக தொலைதூரம் பயணம் மேற்கொள்ள கட்டுப்பாடுகள் உள்ளன; அவர்கள் ஒரு ஆண் உறவினர் இல்லாமல் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. பட மூலாதாரம்,SEFA KARACAN/ANADOLU VIA GETTY IMAGES படக்குறிப்பு, ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசுக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்ட பின்னர், மாஸ்கோவில் இருக்கும் ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் தாலிபன் இடைக்கால அரசின் கொடி பறந்தது. (ஜூலை 4, 2025) இப்போதுவரை சர்வதேச அரங்கில் தாலிபன் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை சர்வதேச அளவில் உருவாகியிருக்கும் ஒத்த கருத்தில் ரஷ்யாவின் இந்த நடவடிக்கை ஒரு பிரிவை ஏற்படுத்தியிருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர். தாலிபனுக்கு முறைப்படியான அங்கீகாரம் அளிக்காமல், குறுகிய அளவிலான பேச்சுவார்த்தைகள் நடத்துவதன் மூலம் ஒருவருக்கு தேவையானவற்றை செய்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கை இதுவரை இருந்தது. ஆனால் நேரடி அங்கீகாரம் அளித்ததன் மூலம் ரஷ்யா இந்த சிந்தனைக்கு சவால் விடுத்துள்ளது. வாஷிங்டனை சேர்ந்த சிந்தனைக்குழுவான வில்சன் மையத்தைச் சேர்ந்த தெற்காசிய நிபுணர் மைக்கேல் கூகல்மேன், "ஆப்கானிஸ்தானில் இருக்கும் தாலிபன் அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா இருக்கிறது. சீனா அடுத்ததாக இருக்கலாம். இப்போது வரை நாடுகள் தங்களது சொந்த நலனுக்காக தாலிபனுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம், ஆனால் ஒரு அதிகாரப்பூர்வ உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பது சர்வதேச ஒருமித்த கருத்தாக இருந்தது. ஆனால் தற்போது இந்த கருத்து தற்போது உடைந்து வருவதாக தெரிகிறது." என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ரஷ்யாவின் முடிவை சீனா வரவேற்றுள்ளது. "ஆப்கானிஸ்தான் எங்களது அண்டை நாடு மற்றும் பாரம்பரிய நட்பு நாடு. ஆப்கானிஸ்தான் சர்வதேச சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்தப்படக்கூடாது என்பதை சீனா எப்போதும் நம்பி வந்திருக்கிறது," என சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு இருக்கும் ராஜதந்திர சவால் பட மூலாதாரம்,WAKIL KOHSAR/AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, 2021 முதல் ஆப்கானிஸ்தானில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் பள்ளி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பெண்கள் பல வேலைகளை செய்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது ரஷ்யாவின் இந்த முடிவை புரிந்துகொள்ள நாம் முதலில் ரஷ்யா மற்றும் சீனா இடையேயான தொடர்பை பார்க்கவேண்டும் என்கிறார் சர்வதேச உறவுகள் விவகார நிபுணர் ஸ்வஸ்தி ராவ். "சீனா ஏற்கனவே தாலிபனுடன் நேரடித் தொடர்பில் உள்ளது. அதற்கு அங்கு பல முதலீடுகள் உள்ளன. இப்போது முறையான அங்கீகாரம் அளித்த முதல் நாடாக ரஷ்யா உள்ளது. இது ஒரு உத்தி மாற்றம் ஆகும்." என அவர் தெரிவித்தார். 1979ஆம் ஆண்டில், ரஷ்யா ராணுவ ரீதியாக ஆப்கானிஸ்தானில் தலையிட்டு, பல பத்தாண்டுகள் அந்த நாட்டை உள்நாட்டு போர் மற்றும் நிலையற்றதன்மையில் சிக்கவைத்தது. ஆனால் மூஜாஹிதீன் போராட்டக்காரர்களுடன் சோவியத் யூனியன் தொடர்ந்து போரிட வேண்டியிருந்தது. அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் செளதி அரேபியா போன்ற நாடுகள் இந்த போராட்டக்காரர்களுக்கு பெரிய அளவில் பொருளாதார மற்றும் ராணுவ உதவி அளித்தன. ஆனால் 1980-களின் பிற்பகுதியில் அமெரிக்கா அளித்த ஸ்டிங்கர் ஏவுகணைகள் காரணமாக சோவியத்தின் வான் ஆற்றல் பலவீனமடைந்து, ராணுவத்தை திரும்பப் பெறுவது கோர்பசேவின் தலைமையில் 1988ஆம் ஆண்டு தொடங்கியது. 2021ஆம் ஆண்டு அமெரிக்கா வெளியேறிய பின்னர், தாலிபன் ஆட்சியை மீண்டும் பிடித்தது. இந்த முறை சர்வதேச சூழல் மாறிவிட்டது. இப்போது ரஷ்யா தாலிபனை தனது 'பயங்கரவாத பட்டியலில்' இருந்து நீக்கிவிட்டது. இருநாடுகளிடையேயான வர்த்தக மற்றும் ராஜாங்க உறவுகளைத் தீவிரப்படுத்தியது. "ஐஎஸ் கோரசனை (சன்னி முஸ்லிம் கடும்போக்கு பிரிவு ) கட்டுப்பாட்டுக்குள் வைக்க ரஷ்யா பல்வேறு வகையான அழுத்தங்களை அளிக்கிறது, ஆனால் தாலிபனுடன் நேரடியாக பேசுவதும் அவசியம். இதில் பயங்கரவாத எதிர்ப்புக் கோணமும் உள்ளது." என்கிறார் ஸ்வஸ்தி ராவ். "காவ்கசஸில் (கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவை உள்ளடக்கிய பகுதியை குறிக்கும் சொல்) ரஷ்யாவின் செல்வாக்கு குறைந்துள்ளது. இரானும் பலவீனமாக உள்ளதுடன், சிரிய தளமும் அபாயத்தில் உள்ளது. இது போன்ற சூழ்நிலையில், ஆப்கானிஸ்தான் ரஷ்யாவுக்கு ஒரு வலுவான தளமாக மாறலாம்." யுக்ரேன் போர் காரணமாக ரஷ்யாவின் சர்வதேச அந்தஸ்து வலுவிழந்திருப்பதால், சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்யா புதிய தளங்களை பார்ப்பதாக அவர் நம்புகிறார். இதில் "யுக்ரேன் போருக்குப் பின் ரஷ்யா, சீனாவை விட சிறிய பங்காளியாகிவிட்டதால் ரஷ்யாவுக்கு சீனாவின் ஆதரவும் கிடைக்கும்," என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தாலிபன் தான் அந்த சமூகத்தின் இயல்பான அமைப்பு என்கிறார் அனுராதா சினாய் ஜேஎன்யுவின் ஸ்கூல் ஆஃப் இண்டர்நேஷனல் ஸ்டடிஸின் முன்னாள் தலைவரும் ஓய்வு பெற்ற பேராசிரியருமானவர் அனுராதா சினாய், "தாலிபன் தான் அந்த சமூகத்தின் இயல்பான அமைப்பு" என்கிறார். மேலும் பேசிய அவர், "ரஷ்யா போன்ற நாடுகள் ஏன் அங்கீகாரம் அளிக்கின்றனர்? தாலிபன்தான் அந்த சமூகத்தின் இயல்பான அமைப்பு என அவர்களுக்கு தெரியும். உங்களால் அவர்களை வெளியிலிருந்து மாற்றமுடியாது. அது உள்ளேயிருந்து ஒரு விவாதம் அல்லது இயக்கம் ஏற்பட்டால்தான் மாறமுடியும்." என்றார் அவர் மேலும் அவர், "இதனால்தான் தாலிபனுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அவரகளது உள்நாட்டு விவகாரங்களிலும் தலையிடாமல் இருக்கவும் ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் விரும்புகின்றன. இதுதான் அவர்களது கொள்கை" எனத் தெரிவித்தார். தாலிபனுடனான ரஷ்யாவின் நட்பு, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவில் ஏற்பட வாய்ப்புள்ள நிலையற்றதன்மையிலிருந்து ரஷ்யா தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ள ஒரு வழி என அவர் நம்புகிறார். அதே போல் எதிர்காலத்தில் ஆப்கானிஸ்தானுக்கு குறுக்கே குழாய் அமைப்பது அல்லது வேறு ஏதேனும் பிராந்திய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், அதில் தாங்கள் பங்கேற்பதை உறுதி செய்ய ரஷ்யர்கள் விரும்புகின்றனர் எனவும் அவர் தெரிவிக்கிறார். இந்தியா தாலிபானுக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கவில்லை. இதுவே இந்தியாவின் பாரம்பரிய கொள்கையாக இருந்துள்ளது என விவரிக்கிறார் ஸ்வஸ்தி ராவ். "இதுவே உலகம் முழுவதும் இந்தியாவின் பாணியாக எப்போதும் இருந்திருக்கிறது. எனவே அது எப்படி திடீரென தாலிபனுக்கு ராஜ்ஜிய அங்கீகாரத்தை வழங்கும்? அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தனது உறவைவும் பராமரிக்க விரும்புவதால் இந்தியா இதைச் செய்யாது," என அவர் தெரிவித்தார். இந்தியாவின் இந்த முன்னெச்சரிக்கையின் பின், மேற்கத்திய நாடுகளுடன் அதற்கு இருக்கும் விரிவான வர்த்தக மற்றும் ராஜாங்க நலன்கள் உள்ளன. "அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் அதன் உறவுகளை பராமரிக்க விரும்புவதால், இந்தியா சற்று தயங்குகிறது." என்கிறார் அனுராதா சினாய். இந்தியா அதிகாரப்பூர்வமாக தாலிபனை அங்கீகரிக்காவிட்டாலும், ஆப்கானிஸ்தானுடன் 'அங்கீகாரம் இல்லாமல் தொடர்பு கொள்வது' என்ற கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. இந்த ஆண்டு மே மாதத்தில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தானின் பொறுப்பு வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டாகியுடன் தொலைபேசியில் பேசினார். இந்திய வெளியுறவு அமைச்சர் தாலிபன் வெளியுறவு அமைச்சருடன் பேசி அது தொடர்பாக வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டதது இது முதல்முறை. அந்த தொலைபேசி அழைப்பின் போது, பஹல்காம் தாக்குதலுக்கு முட்டாகி கண்டனம் தெரிவித்ததை எஸ் ஜெய்சங்கர் பாராட்டினார். இந்த பேச்சுவார்த்தைக்கு பின், இரு நாடுகளும் ஒரு அறிக்கையை வெளியிட்டன. " இந்தப் பேச்சுவார்த்தையில், ஆப்கான் மக்களுடனான எங்களது பாரம்பரிய நட்பு மற்றும் அவர்களுடைய வளர்ச்சிக்கு தேவைகளுக்கு எங்களுடைய தொடர்ச்சியான ஆதரவு ஆகியவை குறிப்பிடப்பட்டன. இந்த ஒத்துழைப்பை மேலும் முன்னெடுத்து செல்வதற்கான வழிகள் மற்றும் ஆதாரங்கள் விவாதிக்கப்பட்டன." அதே நேரம், "ஆப்கானிஸ்தான் குடியரசின் வெளியுறவு அமைச்சர் மெளலவி அமிர் கான் முட்டாகி மற்றும் இந்திய குடியரசின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இடையே தொலைபேசி உரையாடல் நடைபெற்றது. இருதரப்பு உறவுகள், வர்த்தகம் மற்றும் ராஜாங்க உறவுகள் ஆகியவற்றின் மீது இந்த உரையாடல் கவனம் செலுத்தியது," என ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் அளித்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய அரசு உருவாக்கப்படவேண்டும் என இந்தியா வலியுறுத்தி வந்திருக்கிறது. இந்தியா மற்றும் தாலிபன் இடையே தொடர்புகள் அண்மை மாதங்களில் அதிகரித்துள்ளது. ஜனவரியில் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, அமிர் கான் முட்டாகியை துபையில் சந்தித்தார். "அங்கீகாரம் இல்லாமல் தொடர்பு வைத்துக்கொள்வது என்ற கொள்கையை எதிர்காலத்திலும் இந்தியா தொடர்ந்து பின்பற்றலாம். ஆம் இந்த தொடர்புகள் ஆழமாவதை அது நிச்சயம் உறுதிசெய்யும்." என்று இந்த முன்னேற்றத்தைப் பற்றி குறிப்பிடுகிறார் ஸ்வஸ்தி ராவ். ஆப்கானிஸ்தான் இந்தியாவுக்கு ஏன் முக்கியமானது? 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் தாலிபன் ஆட்சியை மீண்டும் கைப்பற்றியபோது, அது ராஜாங்க மற்றும் உத்தி ரீதியாக இந்தியாவுக்கு பின்னடைவாகப் பார்க்கப்பட்டது இந்தியா, ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்த பல பில்லியன் டாலர்கள் அனைத்தும் வீணாகிவிடும் என தோன்றியது. சாலைகள், எரிசக்தி, அணைகள் மற்றும் மருத்துவமனைகள் உட்பட ஆப்கானிஸ்தானில் 500க்கும் மேற்பட்ட திட்டங்களில் இந்தியா கிட்டத்தட்ட 3 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. இந்தியா, ஆப்கான் ராணுவ அதிகாரிகளுக்கு ராணுவ பயிற்சி அளித்தது, ஆயிரக்கணகான மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை அளித்ததுடன், அங்கு ஒரு புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்டியது. ஆனால், "இந்தியா கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிநாட்டு சேவை அதிகாரி ஒருவர் மூலமாக தாலிபன்களுடனான தொடர்ப்பில் இருக்கிறது." என ஆப்கானிஸ்தானுக்கான இந்திய முன்னாள் தூதர் ஜெயந்த் பிரசாத் கடந்த ஆண்டு ஜனவரியில் பிபிசி செய்தியாளர் செளதிக் பிஸ்வாஸிடம் தெரிவித்திருந்தார். "ஆப்கானிஸ்தானில் இந்தியாவுக்கு அதன் மூலோபாய ஆழம் தேவை. இந்தியா பல வளர்ச்சி திட்டங்களை செய்துள்ளது, ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம் இந்தியாவால் கட்டப்பட்டது. இந்தியாவின் இணை இணைப்புத் திட்டங்கள் பாகிஸ்தானை தவிர்த்துவிட்டுத்தான் முன்னோக்கி செல்லமுடியும் என்பதால் இந்தச் சூழ்நிலை முக்கியமானது," என விளக்குகிறார் ஸ்வஸ்தி ராவ். பல விவகாரங்களில் குறிப்பாக தெரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) விஷயத்தில் பாகிஸ்தானுடன் தாலிபன் ஒத்துப்போவதில்லை என்று கூறியவர், "இந்த பலவீனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள இந்தியா முயற்சித்து வந்திருக்கிறது." என்றும் தெரிவித்தார். "ஆப்கானிஸ்தானுடன் இந்தியாவுக்கு எப்போதுமே நலன் சார்ந்த முரண் இருந்ததில்லை. பல வளர்ச்சி திட்டங்களில் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உதவியுள்ளது." என்று தெரிவிக்கிறார் அனுராதா சினாய். அவரின் கூற்றுப்படி, "தாலிபன் அரசும் ஒப்பீடு அளவில் இந்தியாவுடன் மென்மையாக இருந்திருக்கிறது. ஆப்கான் குடிமக்கள் சிகிச்சை பெறுவதற்காக இந்தியாவிற்கு வருகின்றனர். இதுவும் இரண்டு நாடுகளிலும் ஒரு நேர்மறையான தோற்றத்தைப் பராமரிக்கிறது." இதைப் போன்ற ஒரு சூழலில், ராஜாங்கம், பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் என மூன்று கோணங்களிலும் ஆப்கானிஸ்தான் இந்தியாவுக்கு முக்கியமானது என நிபுணர்கள் நம்புகின்றனர். இப்போது என்ன? பட மூலாதாரம்,MONEY SHARMA/AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, ஆப்கானிஸ்தானை பொறுத்தவரை இந்தியாவின் யுக்தி மிகவும் யோசனையுடனும், மெதுவாகவும் நகரும் என நிபுணர்கள் நம்புகின்றனர் ரஷ்யா தாலிபனை அங்கீகரித்து, சீனாவும் ஏற்கனவே தாலிபனுடன் ஆழமான வணிக மற்றும் அரசியல் உறவுகளை கட்டமைத்து வரும் சூழ்நிலையில் இந்தியாவுக்கு இரண்டு வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர். ஒன்று அங்கீகரிக்காமல் தொடர்பு கொள்ளும் கொள்கையை மேலும் சிறிது காலம் தொடரவேண்டும், அல்லது முறையான அங்கீகாரம் வழங்குவதை நோக்கி மெதுவாக நகரவேண்டும். ஸ்வஸ்தி ராவ் இதைப்பற்றி கூறுகையில், "முழுமையான தூதரக அங்கீகாரம் அளிக்கும் நாளில் இந்தியா தன்னையே ஒரு பெட்டியில் பூட்டிக்கொள்ளும்" எனத் தெரிவித்தார். அவரின் கூற்றுப்படி, அனைத்து வாய்ப்புகளையும் திறந்து வைத்திருப்பதுதான் இந்தியாவின் கொள்கையாக இருக்கும். "சமநிலைப்படுத்துவதுதான் இந்தியா எடுக்கக்கூடிய அடுத்த புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்கும். அதாவது சீனாவும், பாகிஸ்தானும் அங்கு முழு ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பதற்காக இந்தியா தாலிபனுடன் தனது தொடர்பை அதிகரிக்கும், ஆனால் அது உடனடியாக அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை வழங்காது," என்கிறார் ஸ்வஸ்தி ராவ். "இந்தியா தனது உத்தியை சார்பற்றதாக வைத்திருக்கவேண்டும். பாகிஸ்தான் இதைச் செய்தால் இந்தியா இதை செய்யவேண்டும் என்பதாகவோ, ஐரோப்பா அழுத்தம் தருவதால் இந்தியா இதைச் செய்யவேண்டும் என்பதாகவோ இருக்கக் கூடாது." என்கிறார் அனுராதா சினாய். இந்தியா தாலிபனுடன் பேச்சுவார்த்தையை படிப்படியாக அதிகரிக்கவேண்டும் என்பதுடன் அங்கு உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சியில் இந்தியா பெரிய பங்காற்றவேண்டும் என்றால் ஒருநாள் அது அங்கீகாரம் அளிக்கவேண்டியிருக்கும் என அவர் நம்புகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c36x48rzd8no
-
வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேரங்களில் மாற்றம்
வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக, வார இறுதி நாட்களில் மட்டுமே இயக்கப்பட்டு வந்த அதிசொகுசு கடுகதி ரயில், நாளை (7) முதல் கல்கிஸ்ஸ மற்றும் காங்கேசன்துறை இடையே தினமும் சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கு இணையாக, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கு தினமும் அதிகாலை 5.45 மணிக்கு இயக்கப்படும் யாழ்தேவி ரயில் புறப்படும் நேரமும் நாளை முதல் திருத்தப்படவுள்ளது. இதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து ரயில் புறப்படும் நேரம் காலை 6.40 மணியாக திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு மாதத்திற்கு முன்பு ரயில் ஆசனங்களை முன்பதிவு செய்த பயணிகளுக்கான யாழ் தேவி ரயிலின் புதிதாக புறப்படும் நேரத்தை காலை 6.40 மணியாக மாற்றியமைக்க வேண்டும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmcrj0vuv00tjqp4k7zqtg8ob
-
கருணா, பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே.புஷ்பகுமார் கைது
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இனியபாரதி கைது பிள்ளையானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமார் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) திருக்கோவிலில் வைத்து கொழும்பில் இருந்து வந்த குற்றபுலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பிரயாணித்த நிலையில் அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனை கடந்த ஏப்பிரல் 8 ம் திகதி கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு (சிஜடி) மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 3 மாதம் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். இந்த நிலையில் பிள்ளையானிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவர்வழங்கிய வாக்கு மூலத்தின் பிரகாரம் இனியபாரதியை குற்ற விசாரணைப் பிரிவினர் சம்பவதினமான இன்று காலை திருக்கோவிலில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரை கைது செய்து அம்பாறைக்கு கொண்டு சென்றுள்ளனர். கடந்த 2005 தொடக்கம் 2009 வரை காலப்பகுதியில் திருக்கோவில் மற்றம் விநாயகபுரம் பகுதியில் பலர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக காணாமல் போன உறவுகள் இனியபாரதி மீது குற்றஞ்சாட்டி வருவதுடன் அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. -மட்டக்களப்பு நிருபர் சரவணன்- https://adaderanatamil.lk/news/cmcrhrjg100thqp4kfp26hu6f
-
அமெரிக்காவில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு - 24 பேர் பலி
அமெரிக்காவின் டெக்சாஸில் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரிப்பு Published By: DIGITAL DESK 3 06 JUL, 2025 | 01:05 PM அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், கோடை முகாமில் இருந்த 27 மாணவிகள் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் தெற்கு-மத்திய டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. அதனுடன் பலத்த காற்றுடன் கூடிய புயலும் வீசி வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. குவாடலூப் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, நகரங்களுக்குள் புகுந்தது. இதில் பலர் சிக்கி கொண்டனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் பலியானார்கள் இதனையடுத்து ஹெலிகொப்டர்கள், படகுகள் மற்றும் டிரோன்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, மரங்களில் சிக்கி நிற்பவர்கள், முகாம்களில் பரிதவித்து நிற்பவர்கள் மற்றும் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதுவரை 51 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் 15 பேர் குழந்தைகள் என தெரிய வந்துள்ளது. 27 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்கள் அனைவரையும் மீட்கும் வரை எங்கள் பணி ஓயாது என டெக்சாஸ் மாகாணத்தின் நெருக்கடி மேலாண்மை துறையின் தலைவர் நிம் கிட் கூறியுள்ளார். இதுவரை 850 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். இதுபற்றி ஜனாதிபதி டிரம்ப் கூறும்போது, நானும் மெலனியாவும், இந்த பயங்கர பாதிப்பில் சிக்கிய குடும்பத்தினர் அனைவருக்காகவும் வேண்டி கொள்கிறோம் என அவருடைய சமூக ஊடக பதிவில் தெரிவித்து உள்ளார். எனினும், கனமழை மற்றும் வெள்ளம் நீடிக்கும் என தேசிய வானிலை ஆய்வு மையத்தின் ஜேசன் ருன்யென் கூறியுள்ளார். அது நேற்றிரவு மட்டுமின்றி இன்று காலையும் தொடரும் என அவர் கூறியுள்ளார். 20-க்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள் மற்றும் அவசரகால பொறுப்பு படையினர், காணாமல் போனவர்களை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/219304
-
செம்மணி விவகாரத்தை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு செல்ல வேண்டும்; நடிகர் சத்தியராஜ் தெரிவிப்பு
06 JUL, 2025 | 04:20 PM யாழ்ப்பாணம் - செம்மணி சித்தப்பாத்தி இந்து மயானத்தில் இருந்து பல எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருக்கின்றன. இதனைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாகவும், கோரமாகவும் கோபமாகவும், அதிர்ச்சியை அளிக்கக்கூடிய வகையிலும் இருக்கிறது என தென்னிந்திய பிரபல நடிகர் சு.சத்தியராஜ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து எலும்புக்கூடுகளும் தமிழர்களுடையதாகத்தான் இருக்கும் என்பது அனைவரது ஆணித்தரமான கருத்தும்கூட ஏனெனில் அந்தப் பகுதியானது யுத்த காலப் பகுதியில் சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியாக கூறப்படுகிறது. மேலும் அந்த மயானத்தில் கடந்த காலத்தில் சடலங்கள் எரிக்கப்பட்டனவே தவிர புதைக்கப்படுவதில்லை. அங்கு தாயினதும், சேயினதும், இளைஞர் - யுவதிகளதும் பெரியவர்களினதும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. பாடசாலை செல்கின்ற சிறுவன் ஒருவன் புத்தகப் பையுடன் புதைக்கப்பட்டிருக்கின்றான். இவை அனைத்தும் கொஞ்சம் கூட மனிதாபிமானம் அற்ற செயல். இந்த செயல்களை செய்தவர்களிடமே நீதியை கேட்டால் அது கிடைக்காது. அதனால் சர்வதேச நீதிமன்றத்திற்கே இந்த பிரச்சினையை கொண்டு செல்ல வேண்டும். இந்த கொடூரமான செயலை உலக நாடுகள் அனைத்தினதும் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கு தமிழர்களாகிய நாங்கள் தான் பாடுபட வேண்டும். சர்வதேச நீதிமன்றத்திற்கு இந்த விடயமாக கொண்டு செல்லப்பட்டு சரியான நீதி கிடைக்க நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/219318
-
செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்
06 JUL, 2025 | 04:23 PM செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தி தமிழீழ சுயநிர்ணய அமைப்பு மற்றும் தமிழ் அமைப்புகளும் இணைந்து பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்தானியத்துக்கு முன்னால் வெகுசனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 1995 ஆம் ஆண்டிலிருந்து 2025ஆம் ஆண்டு வரையில் செம்மணி பகுதியில் உள்ள மனிதப் புதைகுழிகள் அகழப்பட்டுள்ள போதிலும், அது குறித்த மர்மம் இருள் சூழ்ந்ததாகவே காணப்படுகிறது. இனவழிப்பிற்கு ஆதாரமான இந்தக் குற்றச்செயல்களுக்கான காரணமோ, இதற்கு அதிகாரம் வழங்கிய தரப்புக்கள் யார் என்பதோ, மீளவும் இதுபோன்ற மனிப் புதைகுழிகள் உருவாக்கப்படாது என்பதற்கான பொறுப்புக்கூறலோ இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை. எனவே இருள் சூழ்ந்திருக்கும் செம்மணி மனிதப் புதைகுழி விடயத்திற்கு ஒளி பாய்ச்சப்படல் வேண்டும். ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை மேற்கொண்ட நிலையில் அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டம் அமைந்தது. செம்மணி மாத்திரமல்லாது வடக்கு கிழக்கில் உள்ள 100 க்கு மேற்பட்ட பல்வேறு இடங்களிலும் மனிதப் புதைகுழிகள் தொடர்பிலும் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முகமாக இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் அதிகளவில் பொதுமக்களை இணைந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/219319
-
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
செம்மணி புதைகுழியில் மேலும் 2 எலும்புக் கூட்டு தொகுதிகள் கண்டுபிடிப்பு Published By: VISHNU 06 JUL, 2025 | 08:07 PM செம்மணியில் ஞாயிற்றுக்கிழமை (06) மேலும் 2 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் 02 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் 11ஆம் நாள் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (6) மதியம் வரையில் முன்னெடுக்கப்பட்டது. அதன்போது மேலும் 02 எலும்பு கூட்டு தொகுதிகள் ஞாயிற்றுக்கிழமை (06) அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது 47 எலும்பு கூட்டு தொகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேவேளை அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக்கூட்டு தொகுதியில் 02 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இதுவரையில் 44 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/219339
-
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
செம்மணியில் அடையாளம் காணப்படும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு 06 JUL, 2025 | 03:45 PM செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாவது கட்டத்தின் 12வது நாள் அகழ்வுப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (06) முன்னெடுக்கப்படுகின்றன. அந்த வகையில் இன்றுவரை 44 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டதுடன் 47 எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டன. குறித்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படும் பகுதிக்கு அருகாமையில் ட்ரோன் மூலம் ஆய்வு செய்ததன் அடிப்படையில் வெள்ளிக்கிழமை (04) தொடக்கம் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் அந்த இடத்திலும் சான்றும் பொருட்கள் அடையாளம் காணப்பட்டன. மேலும், அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இடத்திற்கு அருகாமையில் ஞாயிற்றுக்கிழமை (06) ஜேசிபி இயந்திரம் மூலம் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது அதிலும் எலும்புகள் காண்டுபிடிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா அவர்களின் குழுவின் பங்கேற்போடு இந்த அகழ்வுப் பணிகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/219308
-
இரா.சம்மந்தனின் முதலாவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு
திருகோணமலையில் இரா. சம்பந்தனின் முதலாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 06 JUL, 2025 | 12:30 PM இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா. சம்பந்தனின் முதலாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (06) திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் இடம் பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச. குகதாசன், திருகோணமலை மாநகர மேயர் க . செல்வராஜா (சுப்ரா) கட்சியின் உறுப்பினர்கள் பொது மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/219297