Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. வடக்கு மாகாணத்தின் கல்வி அமைப்பு, வரலாற்று ரீதியாக, தமிழ் மக்களின் மிக முக்கியமான சொத்தாகக் கருதப்பட்டு வந்துள்ளது. இது பல சவால்களையும், மோதல்களையும் தாண்டி, கல்வியறிவு மற்றும் உயர் கல்வி வாய்ப்புகளில் முன்னணியில் இருந்த ஒரு பகுதியாகும். ஆனால், "கல்வி படிப்படியாக அழிக்கப்படுகிறதா?" என்ற கேள்வி பல கோணங்களில் ஆராயப்பட வேண்டிய ஒரு சிக்கலான விடயமாக இன்று மாறியுள்ளது. இதற்கு பிரதான காரணம், இன்று வெளியாகிய க.பொ.த சாதாரணத்தர பரீட்சையில் வடக்கு மாகாணத்தில் உயர்தரத்திற்கு தகுதி பெற்ற மாணவர்களின் சராசரியில் ஏற்பட்ட பின்னடைவு நிலையே. வடக்கு மாகாணத்தில் 2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த சாதாரணத்தர பரீட்சையில் 69.86% மாணவர்கள் மாத்திரமே உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர். க.பொ.த உயர்தரத்திற்குத் தகுதி 2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மொத்தம் 237,026 மாணவர்கள் க.பொ.த உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை பரீட்சைக்குத் தோற்றிய மொத்த பரீட்சார்த்திகளின் எண்ணிக்கையில் 73.45% ஆகும். கூடுதலாக, மொத்தம் 13,392 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் 'ஏ' சித்திகளைப் பெற்று சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். இந்த சாதனை மொத்த பரீட்சார்த்திகளின் எண்ணிக்கையில் 4.15% ஆகும். இதற்கிடையில், 2.34% மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளனர். இந்த நிலையை நாம் வடக்கில் கருத்தில் கொண்டால் பரீட்சைக்கு தோற்றும் 5 மாணவர்களில் 1 அல்லது 2 மாணவர்கள் சித்திப்பெறாத நிலை உருவாகிறது. ஒரு பாடசாலை சிறந்த பெறுபேற்றையோ அல்லது மோசமான பெறுபேற்றையோ பெற்றால் அதற்கு பொருப்பானவர்கள் அப்பாடசாலையின் அதிபர், மற்றும் ஆசிரியர்களே. அவ்வாறென்றால் மாகாண ரீதியாக பெறுபேறு வீழ்ச்சியடையும்போது அதன் பொறுப்பு யாருடையது? இலங்கையில் உள்ள 9 மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வட மாகாணம் தொடர்ந்து இறுதி நிலையில் இருப்பது ஏற்க முடியாத விடயமே. 1. வடமாகாண கல்வி முறைமையின் பின்னணி வடமாகாணம், குறிப்பாக யாழ்ப்பாணம், கல்வியில் கடந்த காலங்களில் எப்போதும் முன்னணியில் இருந்தது. உயர்தரப் பரீட்சைகளில் உயர் சித்தி வீதம், பல்கலைக்கழக நுழைவு, மற்றும் தொழில்முறை கல்வியில் தமிழ் மாணவர்கள் தேசிய மட்டத்தில் பங்களித்து வந்தனர். ஆனால், உள்நாட்டுப் போரின் பின்னர், இப்பகுதி பல பொருளாதார, சமூக, மற்றும் உள்கட்டமைப்பு சவால்களை எதிர்கொண்டுள்ளன. 2. தற்போதைய சவால்கள் வடமாகாணத்தில் கல்வி நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள பல சிக்கல்கள், குறிப்பாக ஆசிரியர் இடமாற்றங்கள் மற்றும் நியமனங்களில் முறைகேடுகள், கல்வியின் தரத்தை பாதித்துள்ளன. உதாரணமாக, 2025ஆம் ஆண்டு ஜனவரியில், வடக்கு மாகாண ஆளுநரின் பணிப்பில் என்ற போர்வையில், சிரேஷ்ட நிலை கல்வி நிர்வாக அதிகாரிகளை கவனத்தில் கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக இடமாற்றங்கள் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. இது கல்வி நிர்வாகத்தில் குழப்பத்தையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக ஆசிரியர் இடமாற்றங்கள் மற்றும் நிர்வாக முடிவுகளில் மத்திய அரசாங்கம் அல்லது ஆளுநரின் தலையீடு, கல்வி முறைமையை பலவீனப்படுத்துவதற்கு வழிவகுக்கிறது என்று குறிப்பிடுகின்றன. உதாரணமாக, 2014இல் ஆசிரியர் இடமாற்றங்கள் தேர்தல் சட்டங்களுக்கு முரணாக மேற்கொள்ளப்பட்டதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தது. இதன்படி இனிவரும் காலங்களிலேனும் ஆசிரியர் இடமாற்றங்கள் மற்றும் நியமனங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். 3. ஆசிரியர் பற்றாக்குறை இலங்கை ஆசிரியர் சங்கத்தை மேற்கோள்காட்டி 2024 ஆம் ஆண்டு "40,000 ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதாக செய்தி ஒன்றை தென்னிலங்கை பத்திரகை வெளியிட்டிருந்தது. அதில் வடமத்திய, கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், மத்திய மாகாணத்தில் உள்ள கிராம பாடசாலைகளிலும் இந்த நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று பத்திரிகைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்ததாக கூறப்பட்டது. அதன்படி, கிழக்கு மாகாணத்தில் 3,698 ஆசிரியர் பற்றாக்குறையும், வடமத்திய மாகாணத்தில் 3,860 ஆசிரியர் பற்றாக்குறையும், ஊவா மாகாணத்தில் 3,200 ஆசிரியர் பற்றாக்குறையும், வட மாகாணத்தில் சுமார் 2,900 ஆசிரியர் பற்றாக்குறையும், வடமேல் மாகாணத்தில் 4,500 ஆசிரியர் பற்றாக்குறையும், தென் மாகாணத்தில் 2,900 ஆசிரியர் பற்றாக்குறையும், மேல் மாகாணத்தில் 4,700 ஆசிரியர் பற்றாக்குறையும், மத்திய மாகாணத்தில் 4,800 ஆசிரியர் பற்றாக்குறையும் உள்ளது. மேலும், தேசிய பள்ளிகளில் 3,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர் பற்றாக்குறையும் உள்ளது, இது நாடு முழுவதும் மொத்தம் சுமார் 40,000 ஆகும் என தெரிவிக்கப்பட்டது. இது 2025 இல் 42,000க்கும் மேற்பட்ட அளவாக காணப்படுவதாக கல்விஅமைச்சில் இடம்பெற்ற ஒரு ஊடகசந்திப்பில் உயர் கல்வி, கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சி அமைச்சர் என்ற வகையில் சிறிலங்காவின் பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்திருந்தார். மேலும், வறுமை மற்றும் பொருளாதார பின்னடைவு காரணமாக, பல மாணவர்கள் கல்வியை தொடர முடியாத நிலை வடக்கில் இன்றும் தொடர்ந்து வருகிறது. இதன்படி வடமாகாண கல்விச் சமூகம் இந்தப் பிரச்சினைகளை வெளிப்படையாக விவாதித்து உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இல்லையேல் கல்வித்தரம் மேலும் சரியும் வாய்ப்புக்கள் அதிகரிக்கும். https://ibctamil.com/article/northern-province-education-decline-gce-ol-results-1752233400
  2. 323 கொள்கலன்களில் பிரபாகரனின் ஆயுதங்கள் என பாராளுமன்றில் தெரிவித்தவர்கள் விசாரணையில் வாக்கு மூலமளிக்கத் தயங்குவது ஏன்? - அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேள்வி 11 JUL, 2025 | 04:15 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) பிரபாகரனின் ஆயுதங்கள் தான் கொள்கலன்களில் இருந்ததாக பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு குறிப்பிட்டார்கள். இது உண்மையாயின் ஏன் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலமளிக்க அச்சமடைய வேண்டும். ஒன்று பொய்யுரைத்ததாக ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது விசாரணைகளுக்கு செல்லுங்கள். பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்து கொண்டு ஏதும் குறிப்பிட முடியாது, பொய்யுரைக்கவும் முடியாதென சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற அமர்வின் போது பரிசோதனையின்றி கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர முன்வைத்த விடயங்களை சுட்டிக்காட்டி உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்திக் கொண்டு எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்துக்குள்ளும், பேச்சுரிமையை பயன்படுத்திக் கொண்டு வெளியிலும் பொய்யுரைக்கிறார்கள். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டார்கள். அது குறித்து எவ்வாறு விசாரிக்காமல் இருக்க முடியும். விசாரணைகளுக்கு செல்ல இவர்கள் ஏன் அச்சமடைகிறார்கள். பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு ஏதும் கூற முடியுமா, பொய்யுரைக்க முடியுமா, 323 கொள்கலன்கள் விடுவிப்புக்கு நான் அனுமதி வழங்கியதாக குறிப்பிடும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கிறேன். கடந்த ஜனவரி மாத காலப்பகுதியில் இந்த கொள்கலன்கள் மேல் மாகாண ஆளுநருடையது என்று அனைவரும் குறிப்பிட்டார்கள். பாராளுமன்றத்தில் அதை குறிப்பிட்டு கூச்சலிட்டார்கள். இந்த குற்றச்சாட்டுக்கு எதிராக ஆளுநர் நடவடிக்கை எடுத்ததன் பின்னர் தற்போது அவ்வாறு குறிப்பிடவில்லை என்று குறிப்பிடுகிறார்கள். ஐந்து மாதங்களுக்கு பின்னர் இந்த கொள்கலன்களை நான் விடுவித்ததாக குறிப்பிட்டார்கள். நான் விடுவித்திருந்தால் நீதிமன்றத்துக்கு செல்லுங்கள், வழக்குத் தாக்கல் செய்யுங்கள். அரச நிதியை மோசடி செய்து நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. இந்த பாரதூரமான குற்றச்சாட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். கொள்கலன்களை விடுவிக்கும் அதிகாரம் எனக்கு கிடையாது, அமைச்சர் என்ற வகையில் எனக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களையும் நான் பயன்படுத்துவதில்லை. பரிசோதனைகளின்றி கொள்கலன்களை விடுவிப்பதற்கு எனக்கு எவ்வித அவசியமும் கிடையாது. பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு பொய்யுரைத்து குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். பிரபாகரனின் ஆயுதங்கள் தான் கொள்கலன்களில் இருந்ததாக பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு குறிப்பிட்டார்கள். இது உண்மையாயின் ஏன் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலமளிக்க அச்சமடைய வேண்டும். பொய்யுரைத்ததாக ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது விசாரணைகளுக்கு செல்லுங்கள். கீழ்த்தரமான செயற்பாடு தற்போது வெளிப்பட்டவுடன் என்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள் என்றார். https://www.virakesari.lk/article/219744
  3. பூனைக்குட்டிய பிடிக்க பயந்தவர்(பகிடிக்கு தான்) வேற எப்பிடி இருப்பார் அண்ணை?!
  4. லார்ட்ஸ் டெஸ்டில் 'நங்கூரமிட்ட' ரூட் – இங்கிலாந்தின் பாஸ்பால் பாணிக்கு சவால் விடுத்த இந்தியா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜோ ரூட் மாஸ்டர்கிளாஸ் நடத்திக்காட்டினார் கட்டுரை தகவல் எஸ். தினேஷ் குமார் கிரிக்கெட் விமர்சகர் 11 ஜூலை 2025, 02:04 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பாஸ்பால் (Bazball) அணுகுமுறை காலாவதியாகிவிட்டது, இங்கிலாந்து அணி இந்தியாவின் கட்டுக்கோப்பான பந்துவீச்சுக்கு அடிபணிந்துவிட்டது என சமூக ஊடகங்கள் முழுக்க எக்கச்சக்க பதிவுகளை பார்க்க முடிகிறது. ஆனால், உண்மையில் நேற்று லார்ட்ஸ் டெஸ்டின் முதல் நாளில் இங்கிலாந்து அணி பாஸ்பால் பாணியில்தான் பேட்டிங் செய்தது. "பாஸ்பால் என்பது வெறுமனே அதிரடியாக விளையாடுவது மட்டுமல்ல; தேவைப்படும் சமயத்தில் அணியின் நலனுக்காக அடக்கி வாசிப்பதும் பாஸ்பால் தான்" என்று ஒருமுறை இங்கிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் மொயின் அலி கூறியது இப்போது நினைவுக்கு வருகிறது. இந்தியா இங்கிலாந்துக்கு இடையே நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய 3வது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், வழக்கத்துக்கு மாறாக பேட்டிங்கை தேர்வு செய்தது ஆச்சர்யம்தான். பட மூலாதாரம்,GETTY IMAGES வழக்கமாக லார்ட்ஸ் ஆடுகளம், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இந்தமுறை புற்களை அதிகம் விடாமல், ஆடுகளத்தை தயார் செய்திருக்கிறார்கள். முதல் 10–15 ஓவர்களை தாக்குப்பிடித்து விளையாடிவிட்டால், அதன்பிறகு பேட்டிங்கிற்கு சாதகமாக களம் மாறும் என்பது இங்கிலாந்தின் நம்பிக்கையாக இருந்திருக்கலாம். ஆனால், ஆடுகளம் மெதுவாகவும் (Slow), இரட்டை வேகம் (Two paced) கொண்டதாகவும் இருந்தது. அதாவது ஒரு பந்து தாறுமாறாக பவுன்ஸ் ஆகும். அடுத்த பந்து எதிர்பார்த்த அளவுக்கு பவுன்ஸ் ஆகாமல் தாழ்வாக செல்லும். இதுபோன்ற ஒரு ஆடுகளத்தில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என ஜோ ரூட் மாஸ்டர்கிளாஸ் நடத்திக்காட்டினார். ஹைலைட்ஸ் மட்டும் பார்ப்பவர்களுக்கு ரூட்டின் நேற்றைய இன்னிங்ஸ் சுவாரஸ்யமாக இருக்காது. ஆடம்பரமான கவர் டிரைவ்களோ கண்ணைப் பறிக்கும் ஸ்கொயர் கட்டுகளோ இந்த இன்னிங்சில் எதிர்பார்க்க முடியாது. ஆடுகளத்தின் மெதுவான தன்மையை புரிந்துகொண்டு பந்தை நன்றாக உள்வாங்கி தன் பலத்துக்கு ஏற்ப விளையாடி உழைத்து ரன் சேர்த்தார் ரூட். பவுண்டரிகள் கூட நேர்க்கோட்டில் விளையாடியும் தேர்ட் மேன், பைன் லெக் திசையில் தட்டிவிட்டு ரன்களை எடுத்தார். பும்ராவை எதிர்கொள்ள தயங்கிய ரூட், ஆரம்பத்தில் அவர் ஓவரை புத்திசாலித்தனமாக தவிர்த்தார். போப் உடனான அவருடைய பார்ட்னர்ஷிப், இந்த இன்னிங்சில் இங்கிலாந்துக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இங்கிலாந்து வீரர்கள் ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் கட்டுக்கோப்பான பந்துவீச்சு... ஆனாலும்! போப் வழக்கம் போல பதற்றத்துடன் இன்னிங்ஸை தொடங்கினாலும், போகப் போக ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப தன் ஆட்டத்தை தகவமைத்துக்கொண்டார். பும்ராவின் ஓவர்களை ரூட் எதிர்கொள்ள தயங்கிய போது, பொறுப்பை ஏற்றுக்கொண்டு விளையாடி தனது சக வீரரின் நெருக்கடியை போக்கினார். இந்தியாவின் பந்துவீச்சு கட்டுக்கோப்பாக இருந்தாலும், அது கடந்த டெஸ்டை போல அபாயகரமானதாக தோற்றமளிக்கவில்லை. அதற்கு ஆடுகளத்தின் மெதுவான வேகம் மட்டுமில்லாமல் லார்ட்ஸ் ஆடுகளத்தின் ஸ்லோப்பை (Slope) பயன்படுத்தி பந்துவீசுவதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தடுமாறியதும் முக்கிய காரணம். லார்ட்ஸ் மைதானத்தில் pavilion end இல் இருந்து Nursery end நோக்கி பந்துவீசும் போது, அங்கு ஒரு சிறியதாக ஒரு சரிவு இருக்கும். அதை சரியாகப் பயன்படுத்தி வீசினால், பந்தை உள் நோக்கி கொண்டு சென்று பேட்ஸ்மேனுக்கு நெருக்கடி கொடுக்கலாம். ஆனால், கடந்த டெஸ்டில் சாதித்த ஆகாஷ் தீப், அனுபவமின்மை காரணமாக ஸ்லோப்பை நேற்று சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஓய்வுக்கு பிறகு அணிக்கு திரும்பிய பும்ரா, தொடக்கத்தில் சரியான லைன் அண்ட் லெங்த்தில் பந்துவீசி, இங்கிலாந்தின் தொடக்க வீரர்கள் எளிதாக ரன் குவிக்க முடியாமல் செய்தார். நிதிஷ் குமார் தந்த திருப்புமுனை ஓய்வுக்கு பிறகு அணிக்கு திரும்பிய பும்ரா, தொடக்கத்தில் சரியான லைன் அண்ட் லெங்த்தில் பந்துவீசி, இங்கிலாந்தின் தொடக்க வீரர்கள் எளிதாக ரன் குவிக்க முடியாமல் செய்தார். பாஸ்பால் யுகத்தில் மிகவும் மெதுவான முதல் செஷன் இதுவாகத்தான் இருக்க முடியும். பும்ராவின் துல்லியமான பந்துவீச்சில் கைகள் கட்டப்பட்டிருந்த தொடக்க வீரர்களான டக்கெட்டும் கிராலியும் நிதிஷ் குமார் வந்தவுடன் ரன் குவிக்கும் ஆசையில் ஆட்டமிழந்தனர். முதன்மை வேக வீச்சாளர்கள் சரியான லெங்த் பிடிக்க முடியாமல் சிரமப்பட்ட நிலையில், பேட்டிங் ஆல்ரவுண்டரனான நிதிஷ் குமார், தனது High arm பந்துவீச்சு ஆக்சனில் ஆட்டத்தின் முதல் திருப்புமுனையை ஏற்படுத்தினார். இந்த டெஸ்ட் தொடரில் பும்ராவை ஓரளவுக்கு இங்கிலாந்து நன்றாக விளையாடியதாகவே சொல்லலாம். 200 பந்துகளுக்கு மேல் விக்கெட் எடுக்காமல் பும்ரா பந்துவீசி வருகிறார் என ஒரு புள்ளிவிவரம் திரையில் காட்டப்பட்ட சமயத்தில், உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் புரூக்கின் விக்கெட்டை வீழ்த்தினார். என்ன மாதிரியான ஒரு பந்து அது! ஆடுகளம் சுத்தமாக ஒத்துழைக்கவில்லை, இங்கிலாந்து அணி நங்கூரம் போல விளையாடியது. விக்கெட் எடுத்தால் மட்டும்தான் இந்தியாவுக்கு வாழ்வு. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு அபாரமான nip backer மூலம் கொஞ்சமே கொஞ்சம் பந்தை நகர்த்தி புரூக்கின் ஸ்டம்புகளை தகர்த்தார். இங்கிலாந்து அணி, வலுவான நிலைமைக்கு நகர்ந்து கொண்டிருந்த சமயத்தில் போப்பின் விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றினார். ரிஷப் பந்த் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக பெவிலியன் திரும்பிய நிலையில் மாற்று வீரராக விக்கெட் கீப்பிங் செய்த ஜூரெல் அபாரமான கேட்ச் பிடித்தார். இந்த இன்னிங்சில் இந்தியாவுக்கு நிறை கேட்ச் வாய்ப்புகள் கைக்கு எட்டவில்லை. பீல்டர்கள் மீது தவறில்லை என்றாலும் இன்னும் கவனமாக இருந்திருந்தால் இன்னும் சில விக்கெட்களை எடுத்திருக்கலாம். எப்போது இந்தியாவின் கைக்கு ஆட்டம் மாறும்? ரூட்டிடம் சென்று, "பாஸ்பால் விளையாடு இப்போது" என சிராஜ் சைகை செய்ததும், 'போரிங் கிரிக்கெட்' என இங்கிலாந்தின் தற்காப்பு ஆட்டத்தை கில் கிண்டல் அடித்ததும் ஆட்டத்துக்கு சுவாரஸ்யம் கூட்டின. மூன்றாவது, நான்காவது நாள்களில் சுழற் வீச்சுக்கு ஆடுகளம் சாதகமாக மாறும் என கணிக்கப்படும் சூழலில், குல்தீப் யாதவ் இல்லாமல் களமிறங்கியது சரியான முடிவா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. 99 ரன்களுடன் களத்தில் உள்ள ரூட்டை இன்று விரைவில் ஆட்டமிழக்க செய்து, எஞ்சியுள்ள விக்கெட்களை விரைவில் வீழ்த்தினால் மட்டும்தான் ஆட்டம் இந்தியாவின் கைக்கு வரும். முழு உடற்தகுதியுடன் இல்லாத ஸ்டோக்ஸ் இன்று எப்படி இன்னிங்ஸை தொடங்கப் போகிறார் என்பதும் ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கும் என கூறலாம். பாஸ்பால் பேச்சுகளை எல்லாம் உதறிவிட்டு பார்த்தால், லார்ட்ஸ் டெஸ்டில் முதல் நாளில் 251–4 என்பது நல்ல ஸ்கோர் என்றே சொல்ல வேண்டும். நான்காவது இன்னிங்சில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு, நாளை பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தால், இந்தியா மிகப்பெரிய ஸ்கோரை குவித்தாக வேண்டும். ஒட்டுமொத்தமாக கட்டுக்கோப்பான பந்துவீச்சு, நேர்த்தியான பேட்டிங் என பக்கா டெஸ்ட் மேட்ச்சாக லார்ட்ஸ் டெஸ்டின் முதல் நாள் மாறியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg75e2p8ejmo
  5. நேற்று மாலை நான் அருந்தப்பில் உயிர் தப்பினேன், நீங்கள் சொல்வதில் இருக்கும் ஒரு புள்ளிங்கோ 80-90 கி.மீ வேகத்தில் என்னை விலத்தி சென்றார். நான் ஒரு மில்லி செக்கன் வேகமாக வீதியில் ஏறிவிட்டேன். எப்போதும் பொறுமையாக ஆறுதலாக எல்லோரும் சென்றபின் வீதியை கடப்பேன். நேற்று கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டேன். ஆனாலும் புள்ளிங்கோ வேகமாக வருவது தெரியவே இல்லை. சிறுமி காணாமல்போய் வந்த சம்பவத்தில் முறை மச்சானுக்கு வெளிநாட்டில் மச்சாளோடு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்க உள்நாட்டு மச்சாள் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்தி இருந்தார்!
  6. Published By: RAJEEBAN 10 JUL, 2025 | 11:23 AM Sakuna M. Gamage daily mirror கனேரு மரத்தின் கீழ் நீ கீழே விழுந்துகிடந்தாய் உன் மார்பிலிருந்து குருதி வழிந்தோடியது நான் உன்னை இழந்தேன் இந்த தேசத்திற்கு அது இழப்பில்லை ஆனால் பூமிக்கு... ' உன்னால் எழுந்திருக்க முடிந்தாலும் எழுந்திருக்காதே" நீதியே புதைக்கப்பட்டிருக்கும் போது மக்கள் உண்மையில் எங்கு செல்ல முடியும்? அவர்களுக்காக யார் பேசுவார்கள்? சொல்ல முடியாத போர்க் காலத்தில் ரத்ன ஸ்ரீ விஜேசிங்கே எழுதிய ஒரு சிங்களக் கவிதையில் எழுதிய இந்த வரிகள் இன்று இன்னும் அதிகளவில் மனதை வேதனைக்குட்படுத்தும் அதிர்வுடன் திரும்பி வருகின்றன. ஜூலை 2025 இல் செம்மணியில் இரண்டாம் கட்ட மறு அகழ்வாராய்ச்சியின் ஏழாவது நாளில், ஒரு குழந்தையின் எலும்புக்கூடு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஆழமற்ற கல்லறைக்கு முன்னால் நான் நின்றேன், இன்னும் ஒரு யுனிசெஃப் பள்ளிப் பையையும், அதற்குள் ஒரு சிறிய பொம்மையையும் சுமந்து சென்றேன். இது வெறும் போரின் நினைவு அல்ல. இது தண்டனையின் கொடூரமான தொடர்ச்சி. செம்மணியிடமிருந்து நாம் கேட்பது கடந்த காலத்தின் எதிரொலி அல்ல, அது நிகழ்காலம் உடைந்து திறப்பது. அது மௌனத்தை நிராகரிக்கும் மண். செம்மணியிலிருந்து வெளிப்படுவது வெறும் ஆதாரம் மட்டுமல்ல; அது ஒரு குற்றச்சாட்டு. அது மனசாட்சியின் வீழ்ச்சி. இந்தத் தீவின் மேற்பரப்பிற்குக் கீழே எலும்புகள் மட்டுமல்ல, ஆனால் திட்டமிடப்பட்டு மௌனமாக்கப்பட்ட கதைகள்-மறதியின் மீது தனது யுத்தத்திற்கு பிந்திய அமைதியை கட்டியெழுப்பும் அரசாங்கத்தினால் அடக்கப்பட்ட குரல்கள் உள்ளன என்பதற்கான ஒரு கடும் நினைவூட்டலாகும். செம்மணிக்குத் திரும்புவது நினைவுடன் மோதுவதாகும். இது மௌனத்திற்கு பதில் கூறுதலாகும். நினைவில் வைத்திருப்பதற்கு பதில் மறப்பதற்காக உருவாக்கப்பட்ட நீதித்துறைக்கு எதிரான குற்றச்சாட்டாகும். 1996 ஆம் ஆண்டு கிருஷாந்தி குமாரசாமியின் கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை, செம்மணிப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு வழிவகுத்தது அழிப்பதில் சிறப்பு தேர்ச்சி பெற்ற அரசாங்கத்தின்மனச்சாட்சியை உறுத்துவதற்காக தற்போது மூன்று தசாப்தத்திற்கு பின்னர் கிருஷாந்தி குமாரசாமியிமண்ணிற்குள் காணாமல்போன ஆயிரக்கணக்கானவர்களின் கதைகளும் திரும்பிவருகின்றன. செம்மணியை மீண்டும் தோண்டி எடுத்தல்: செயல்முறை மற்றும் வலி செம்மணியின் புதைகுழிகளை மீண்டும் அகழும் நடவடிக்கை2025 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட தற்செயலாகத் தொடங்கியது. பிப்ரவரியில் ஒரு கட்டுமானத் திட்டம் எலும்புகளை கண்டுபிடித்தது. இது அதிகாரப்பூர்வ தலையீட்டைத் தூண்டியது. அகழ்வாராய்ச்சியின் முதல் கட்டத்திற்குப் பிறகு, தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவா குறைந்தது 19 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்தினார். இதில் 10 மாதங்களுக்கும் குறைவான மூன்று குழந்தைகள் அடங்கும். ட்ரோன்கள் மற்றும் செயற்கைக்கோள் படங்கள் அதிக சாத்தியமான புதைகுழிகளை அடையாளம் கண்டன, ஆனால் அறியப்பட்ட பகுதியில் 40 வீதத்திற்கும்க்கும் குறைவானது தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட தொல்பொருள் முயற்சி அல்ல. இது ஒரு தேசிய அதிர்ச்சி தளம், உண்மையின் புதைகுழி. ஜூலை 4 (வெள்ளிக்கிழமை), யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி புதைகுழி பகுதியில்அகழ்வாராய்ச்சி குழுக்கள் மேலும் நான்கு எலும்புக்கூடு எச்சங்களை கண்டுபிடித்தன, அவற்றில் இரண்டு குழந்தைகளுடையவை என்று நம்பப்படுகிறது. இது நடந்துகொண்டிருக்கும் நடவடிக்கையின் போது தோண்டி எடுக்கப்பட்ட மொத்த எச்சங்களின் எண்ணிக்கையை 40 ஆக . அதிகரித்துள்ளது. மனித உரிமை வழக்கறிஞர் ரனிதா ஞானராஜாவால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட காணாமல் போனவர்களின் குடும்பங்கள், செயலற்ற பார்வையாளர்களாக அல்லm மாறாக நினைவின் தீவிர பாதுகாவலர்களாக அகழ்வாராய்ச்சியில் இணைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் மட்டும் 600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்னும் காணாமல் போன அன்புக்குரியவர்களைத் தேடி வருகின்றன. கடந்த கால துரோகங்கள் மீண்டும் நிகழும் என்று பலர் அஞ்சுகின்றனர்: முழுமையற்ற தோண்டியெடுப்புகள், நீதித்துறை ஏய்ப்புகள் மற்றும் இறுதியில் அரசியல் மௌனம். அவர்களின் அச்சங்கள் நன்கு நிறுவப்பட்டவை. மன்னார் முதல் களவாஞ்சிகுடி வரையிலும், மாத்தளை முதல் சூரியகந்த வரையிலும் உள்ள புதைகுழிகளை விசாரித்த இலங்கையின் வரலாறு, தடைகளின் பட்டியலாக இருந்து வருகிறது. மன்னார் அகழ்வாராய்ச்சியில் 2018 மற்றும் 2019 க்கு இடையில் 346 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இன்றுவரை, எந்த அடையாளங்களும் உறுதிப்படுத்தப்படவில்லை, பொறுப்புக்கூறல் நிறுவப்படவில்லை, இழப்பீடு வழங்கப்படவில்லை. இந்த அதிகாரத்துவ அலட்சியம் செயல்முறையின் தோல்வி மட்டுமல்ல, இது ஒரு நெறிமுறை தோல்வி. ஒரு தார்மீக சரிவு மனிதநேயத்தின் மரணம் செம்மணியில் வெளிப்படும் துயரம் வெறும் உள்ளூர் மட்டுமல்ல. அது உலகளவில் மனித மதிப்புகளின் பரந்த வீழ்ச்சியுடன்ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில், காசாவில் இருந்து போர்க்குற்றங்கள் நேரடியாக ஒளிபரப்பப்படும், குழந்தைகளின் இறப்புகள் நிகழ்நேரத்தில் கணக்கிடப்படும், மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் பெரும் வல்லரசு வீட்டோக்களால் சர்வதேச சட்டம் முடக்கப்படும் ஒரு உலகில் நாம் வாழ்கிறோம். இனப்படுகொலை இனி மறைக்கப்படவில்லை, அது முழு பார்வையில் நிகழ்த்தப்படுகிறது. ஜனநாயக மனிதநேயம் ஒரு அர்த்தமுள்ள உலகளாவிய சக்தியாக இறப்பதை நாம் காண்கிறோம். அமைதி மற்றும் கண்ணியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட இரண்டாம் உலகப் போரின் சாம்பலில் இருந்து பிறந்த நிறுவனங்கள், சக்தியற்றவையாக மாற்றப்பட்டுள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் பேசுகிறது, ஆனால் புவிசார் அரசியல் தண்டனையின்மைக்கு முன்னால் அதன் வார்த்தைகள் அதிக முக்கியத்துவம் பெறவில்லை. காசாவில் பொதுமக்கள் மீது இஸ்ரேலின் குண்டுவீச்சும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் முழுமையான செயலற்ற தன்மையும் இந்த சரிவை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன இருப்பினும் ஜூன் 2025 இன் பிற்பகுதியில் மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஆணையர் வோல்கர் டேர்க், செம்மணி புதைகுழி இடத்திற்கு ஒரு புனிதமான விஜயத்தை மேற்கொண்டார். சமீபத்தில் 19 எலும்புக்கூடு எச்சங்கள், அவற்றில் மூன்று குழந்தைகள், வெளிவந்த அகழ்வாராய்ச்சி பகுதியை டேர்க்நேரில் ஆய்வு செய்தார். இந்த காட்சியை " மிகவும் உணர்ச்சிவசப்படவைப்பது என்று அழைத்தார் மற்றும் சுயாதீன தடயவியல் நிபுணர்களின் அவசரத் தேவையை வலியுறுத்தினார்.. செம்மணியை முன்னிலைப்படுத்துவதன் மூலம், பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச மேற்பார்வையை வலியுறுத்தும் அதே வேளையில், இலங்கையின் உள்நாட்டுப் போரின் கொடூரமான பாரம்பரியத்தை டேர்க் அடிக்கோடிட்டுக் காட்டினார். இந்தப் பின்னணியில் செம்மணி ஒரு உலகளாவிய கதையின் ஒரு பகுதியாக மாறியுள்ளது.. பூமி உடைந்த ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படாத கடமைகள் வடிவமைப்பால் மறுக்கப்பட்ட நீதி ஆகியவற்றின் கல்லறையாக மாறிவிட்டது என்பதை இது நமக்குச் சொல்கிறது. இடைக்கால நீதி மற்றும் மறதியின் கலாச்சாரம் செம்மணியில் முதல் மனிதபுதைகுழி அரசால் அல்ல, மாறாக ஒரு தகவல் தெரிவிப்பவரால் அம்பலப்படுத்தப்பட்டது. 1998 ஆம் ஆண்டில், கிருஷாந்தி குமாரசாமியின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலையில் தனது பங்கிற்காக மரணதண்டனையை எதிர்கொண்ட கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, புதைகுழிகள் இருப்பதை வெளிப்படுத்தினார். அவர் பெயர்களைக் குறிப்பிட்டு தன்னுடன் இணைந்து செயற்பட்டவர்களின் விபரங்களை வெளியிட்டார் அரசு நீதியுடன் அல்ல மாறாக ஒரு அவதூறு பிரச்சாரத்துடன் பதிலளித்தது. இறுதியாக 1999 இல் அகழ்வாராய்ச்சி தொடங்கியபோது 15 உடல்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன. பெரும்பாலானவை கண்கள் கட்டப்பட்டிருந்தனஇ கைகள் கட்டப்பட்டிருந்தன,மரணதண்டனை பாணியில் புதைக்கப்பட்டன. மீதமுள்ள சந்தேகத்திற்குரிய புதைகுழிகள் ஒருபோதும் தொடப்படவில்லை. இது தற்செயல் நிகழ்வு அல்ல. தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் எந்த கட்சியாக இருந்தபோதிலும் மக்கள் எந்த ஆணையை வழங்கியிருந்தாலும் செம்மணி புதைகுழியை மறப்பதில் ஈடுபட்டன. உயர் பதவியில் இருந்த அதிகாரிகள் பாதுகாக்கப்பட்டனர். சாட்சிகள் அச்சுறுத்தப்பட்டனர், அல்லது காணாமல் போனார்கள். தண்டனை பெற்ற வீரர்களின் தலைவிதி கூட தெளிவாகத் தெரியவில்லை, பலர் 2010 களில் பொது வாழ்க்கையில் மீண்டும் தோன்றினர். ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சட்ட அறிஞர் கிஷாலி பிண்டோ-ஜெயவர்தன பொருத்தமாக கூறியது போல் "இங்கே இடைக்கால நீதி ஆதாரங்கள் இல்லாததால் தடைபடவில்லை மாறாக அதிகாரத்துவம் மற்றும் பயத்தில் உண்மையை வேண்டுமென்றே புதைப்பதன் மூலம் தடைபடுகிறது." NPP அரசாங்கத்திடமிருந்து ஒரு பெரும் மௌனம் 2024 இல் தேசிய மக்கள் சக்தி பொதுமக்கள் மத்தியில் காணப்பட்ட விரக்தி, ஆழமாக வேரூன்றிய ஊழல் மீதான விரக்தி, கட்டுப்பாடற்ற இராணுவமயமாக்கல் மற்றும் அரசியல் உயரடுக்கைப் பாதுகாக்கும் தண்டனையிலிருந்து தப்பிக்கும் தொடர்ச்சியான கேடயம் ஆகியவற்றின் ஆகியவற்றின் மீதான விரக்தி அலைகளை அடிப்படையாக வைத்து ஆட்சிக்கு வந்தது. கட்சியின் வாக்குறுதிகள் துணிச்சலானவை: உண்மை நீதி மற்றும் நல்லிணக்கம். அதன் வெற்றி சிங்கள தெற்கில் மட்டுமல்ல தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கிலும் வரலாற்று சிறப்புமிக்கதாக இருந்தது. பதவியேற்று எட்டு மாதங்கள் ஆகியும் செம்மணி மீதான மௌனம் காதை பிளக்கின்றது. விஜயம் எதனையும் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மேற்கொள்ளவில்லை. அறிக்கை எதுவும் இல்லை. தற்காலிக அறிக்கைகள் ஒரு குறியீட்டு சமிக்ஞைகள் கூட இல்லை. காணாமல்போனவர்களின் எலும்புகளை மண் மீண்டும் வழங்கும் இலங்கையின் மிகவும் அபகீர்த்திக்குரிய மனித புதைகுழிகள் மீண்டும் தோண்டப்படுவது குறித்து நீதிக்காக குரல்கொடுப்பதாக போராடுவதாக தெரிவிக்கும் அரசாங்கம் பெரும் அலட்சியத்தை வெளிப்படுத்துகின்றது. https://www.virakesari.lk/article/219593
  7. பட மூலாதாரம்,DÓKIMOS PRODUÇÕES படக்குறிப்பு, மனித உடல் தீவிர உடல் செயல்பாட்டிற்கு எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதைப் பார்க்க ஹூகோ ஃபாரியஸ் இந்த சவாலை ஏற்றுக்கொண்டார் கட்டுரை தகவல் ஜூலியா கிரான்சி பிபிசி நியூஸ் பிரேசில் 3 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த 2023இல் ஹுகோ ஃபாரியஸ் 366 மாரத்தான்களை அடுத்தடுத்து நிறைவு செய்து ஒரு உலக சாதனையைப் படைத்தார். அதாவது தொடர்ந்து ஓர் ஆண்டுக்கும் மேலாக மழையோ, வெயிலோ, உடல்நலக் குறைவோ, காயமோ எது வந்தபோதிலும், தினசரி 42 கிலோ மீட்டருக்கு மேல் ஓடியிருக்கிறார். இந்த அசாதரண சாதனையைச் செய்த 45 வயதான பிரேசில் தொழிலதிபர் ஹூகோ, 12 மாதங்களில் 15,000 கி.மீ ஓடும்போது அவரது இதயம், அதற்கு எவ்விதம் எதிர்வினையாற்றுகிறது என்பதை ஆய்வு செய்வதற்கான மருத்துவ ஆய்வில் பங்கேற்றார். "நான் பெரிய தடகள வீரர் அல்ல. அதற்கு முன்பு எனது வாழ்நாளில் நான் ஒரு மாரத்தான் மட்டுமே ஓடியிருந்தேன்," என்றார் அவர். "ஆனால் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்க, விளையாட்டு மூலம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற ஆர்வம் எனக்குள் வளர்ந்தது" பட மூலாதாரம்,CLAYTON DAMASCENO படக்குறிப்பு, தனது பயணம் பிறருக்கு உந்துசக்தியாக இருக்கும் என ஃபாரியஸ் நம்புகிறார் தினசரி வாழ்க்கை மீது அதிகரித்த அதிருப்தியின் விளைவாக, தனது வேலையை விட்டுவிட்டு, விளையாட்டுத் துறை சார்ந்த ஒரு சவால் மீது கவனம் செலுத்த வேண்டுமென அவர் முடிவெடுத்தார். "வாழ்வில், செய்துகொண்டிருந்த அனைத்தையும் அப்படியே நிறுத்திவிட்டு, 'நான் இதற்காகத்தான் பிறந்திருக்கிறேனா? திரும்பத் திரும்ப 35 -40 வருடங்கள் இதையே செய்வதற்காகத்தான் நான் பிறந்தேனா?' என்று என்னைச் சிந்திக்க வைத்த ஒரு தருணம் வந்தது," என ஹுகோ பிபிசி நியூஸ் பிரேசிலிடம் கூறினார். ஹூகோ, "18 வயதாகும் முன்பே நமக்கான தொழிலைத் தேர்ந்தெடுக்க, நிலைத்தன்மையைத் தேட, ஒரு குடும்பத்தை உருவாக்க, ஓய்வு காலத்திற்குத் தயாராக வேண்டுமென்று மிக இளைய வயதில் இருந்தே நாம் கற்றுக்கொள்கிறோம்." "இந்த நிலையில், மக்களை வித்தியாசமான முறையில் ஊக்குவிக்க வேண்டுமென்றும், அதற்கு என்னால் ஏதாவது செய்ய முடியும் என்றும் எண்ணத் தொடங்கினேன்." அறிவியல்ரீதியான பங்களிப்பு பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, சாவ் பாலோசாவ் பாலோ ஹார்ட் இன்ஸ்டிடியூட் இன்கோர் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த இதயவியல் நிபுணர்கள் ஹூகோ ஃபாரியஸின் இதய செயல்பாட்டைக் கண்காணித்தனர் கடந்த 1984இல் தெற்கு அட்லான்டிக்கை படகில் கடந்த பிரேசில் படகோட்டி ஏமிர் கிளின்க் தனக்கு உத்வேகமாக இருந்ததாக ஹூகோ கூறுகிறார். "ஆனால் அவரைப் போல படகோட்டுவதற்குப் பதிலாக நான் ஓடுவேன்," என்று அவர் முடிவெடுத்தார். அவர் தனது முத்திரையைப் பதிக்க விரும்பினார், எனவே இதற்கு முன் செய்யப்படாத ஒரு சவாலை அவர் தேடினார். பெல்ஜிய தடகள வீரர் ஸ்டெஃபான் எங்கெல்ஸ் ஏற்கெனவே ஒரு வருடத்தில் 365 மாரத்தான்களை ஓடியிருக்கிறார் என்பதை அறிந்த அவர், அதைவிட ஒரு நாள் கூடுதலாக மாரத்தான் ஓடத் திட்டமிட்டார். பயணம், பயிற்சி மற்றும் பல தொழில்முறை வல்லுநர்களின் உதவியை உள்ளடக்கிய விரிவான செயல் திட்டத்தை ஹூகோ எட்டு மாதங்களில் வடிவமைத்தார். "என்னால் இதைத் தனியாகச் செய்ய முடியாது என்று தெரியும். மருத்துவர்கள், பயிற்சியாளர்கள், பிசியோதெரபிஸ்ட் உள்ளிட்ட தொழில்முறை வல்லுநர்கள், மற்றும் மனநல நிபுணர் உள்படப் பல்துறை நிபுணர்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினேன்," என்கிறார் அவர். "நன்கு நிறுவப்பட்ட ஒரு தொழில் வாழ்க்கையை முற்றிலும் நிச்சயமற்ற ஒன்றுக்காக மாற்றிக்கொண்டேன். எனவே இது கவலை மற்றும் பாதுகாப்பின்மையை உருவாக்குகிறது. எனவே மனபாரத்தைக் குறைத்து குறிக்கோள் மீது கவனம் செலுத்த இந்தக் கோணத்தைப் பற்றிய புரிதல் கொண்ட ஒரு தொழில்முறை நிபுணர் இருப்பது அவசியம். தனது முயற்சியில் பங்கேற்க அவர் அழைப்பு விடுத்த தொழில்முறை அமைப்புகளில் ஒன்றுதான் சாவ் பாலோ ஹார்ட் இன்ஸ்டிடியூட் இன்கோர். "எனது இதயம் இந்த சவாலுக்கு எப்படி எதிர்வினையாற்றுகிறது - அளவில் பெரிதாகுமா அல்லது சிறியதாகுமா, அரித்மியா(சீரற்ற இதயத் துடிப்பு) ஏற்படுமா அல்லது வேறு ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுகிறதா - என்பதை ஆய்வு செய்ய என்னுடன் இணைந்து பணியாற்ற முடியுமா என்று அந்த நிறுவனத்தின் இதயவியல் நிபுணர்களிடம் கேட்டேன்." "ஏனெனில், இதன்மூலம் நான் அறிவியலுக்கும் பங்களிப்பு செய்ய விரும்பினேன்." பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் இதயவியல் நிபுணர் மற்றும் ஆய்வாளரான மரியா ஜானியேர் ஆல்வ்ஸ் இந்த ஆய்வில் பங்கேற்றார். "இது இதற்கு முன் யாரும் செய்யாத ஒன்று. இதயத்தின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை இது ஏற்படுத்தக்கூடும்," என விளக்குகிறார் அவர். ஹூகோ "இதயநோய் அபாயம் இல்லாமல்" சவாலை முடிக்கும் வகையில் விஞ்ஞானிகள் "தீவிரமற்ற அளவுகளை முக்கியமாகக் கொண்டு" அவருக்கான வரம்புகளை நிர்ணயம் செய்தனர். ஹூகோ, மாதந்தோறும் எர்கோஸ்பைரோமெட்ரி (உடற்பயிற்சியின் போது ஒரு நபரின் சுவாசம் மற்றும் வளர்சிதை மாற்றச் செயல்பாடுகளை மதிப்பிடப் பயன்படுத்தப்படும் ஒரு முறை) மற்றும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஈ.சி.ஜி) சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். "பெரிய அளவிலும், நுண்ணிய அளவிலும் இதயத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிப்பது மற்றும் உடல் பயிற்சியால் ஏற்படும் ஒழுங்கின்மை, தகவமைப்பு அல்லது தவறான தகவமைப்பு ஆகியவற்றின் அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் அவற்றைக் கவனிப்பது இதன் நோக்கமாக இருந்தது," என்று மருத்துவர் ஆல்வ்ஸ் கூறினார். 'பாதுகாப்பு மணடலம்' பட மூலாதாரம்,DÓKIMOS PRODUÇÕES படக்குறிப்பு, ஹூகோ ஃபாரியஸ் உடலின் மீதான அழுத்தத்தால் அவருக்கு காயங்கள் ஏற்படாமல் இல்லை இந்த சவாலை ஹுகோ 2023, ஆகஸ்ட் 28ஆம் தேதி நிறைவு செய்தார். மொத்தமாக, 15,569 கி.மீ ஓடி முடிப்பதற்கு அவருக்கு சுமார் 1,590 மணிநேரம் எடுத்தது. இந்தச் சாதனை அவருக்கு ஒரு கின்னஸ் உலக சாதனையைப் பெற்றுத் தந்தது. நாளின் எஞ்சிய பகுதியைத் தனது குடும்பத்துடன் நேரம் செலவிடவும், உடல் ஓட்டத்தால் ஏற்பட்ட அழுத்தத்தில் இருந்து மீள்வதற்கும், தசைகளை வலுப்படுத்துவதற்கான பயிற்சிகளைச் செய்வதிலும் கவனம் செலுத்த வசதியாக இரு குழந்தைகளின் தந்தையான இவர் எப்போதும் காலை நேரத்திலேயே ஒடினார். அதே போல் அவர் எப்போதும் சாவ் பாலோ மாகாணத்தில் உள்ள அமெரிக்கானா நகரில் கிட்டத்தட்ட ஒரே பாதையிலேயே ஓடினார். உடற்பயிற்சியின் கால இடைவேளை மற்றும் அளவு அதிகம் இருந்தபோது இதய தசை பாதிப்புக்கான எந்த அறிகுறியும் இல்லை என்று அறிவியல் இதழான அர்கிவோஸ் பிரேசிலிரோஸ் டி கார்டியோலோஜியாவில் (Arquivos Brasileiros de Cardiologia) வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவு செய்தது. எந்த இதய தசை மாற்றமும் பெரும்பாலும் இயற்கையான, ஆரோக்கியமான உடலியல் ரீதியானவையாக இருந்ததுடன் எந்த நோயின் அறிகுறியாகவும் இருக்கவில்லை. "எல்லாவற்றுக்கும் மேலாக, விளையாட்டுப் பயிற்சியின் தீவிரம் மிதமாக இருக்கும் வரை அதிக அளவு விளையாட்டுப் பயிற்சிகளுக்கு ஏற்ப இதயம் தன்னைத் தகவமைத்துக் கொள்வது சாத்தியம் என்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது," என்கிறார் மருத்துவர் ஆல்வ்ஸ். "குறிப்பிட்ட வரம்புகள் இருந்தாலும், பயிற்சிகளுக்கு இடையில் உடல் சீராவதற்குப் போதிய அவகாசம் இருந்தால் பயிற்சி பெற்ற ஒரு வீரரின் இதயத்தால், மிகத் தீவிர அழுத்தத்தைப் பொறுத்துக் கொள்ள முடியும் என்ற கருத்தை இது வலுப்படுத்துகிறது" என இந்த ஆய்வுடன் தொடர்பில்லாத விளையாட்டு இதயவியல் நிபுணர் ஃபிலிப்போ சாவியோலி பிபிசியிடம் தெரிவித்தார். பட மூலாதாரம்,DÓKIMOS PRODUÇÕES படக்குறிப்பு, ஃபாரியஸ் தனது இதயத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் சவாலை நிறைவு செய்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர் சராசரியாக 140 பிபிஎம் (ஒரு நிமிடத்திற்கான இதயத் துடிப்பு எண்ணிக்கை) என்ற இதயத் துடிப்புடன் ஹூகோ மிதமான தீவிரத்தில் ஓடினார். இது அவரது வயதிற்கு எதிர்பார்க்கப்படும் அதிகபட்ச இதயத் துடிப்பில் சுமார் 70-80% ஆகும் என்று ஃபிலிப்போ சாவியோலி கூறினார். "ஆக்ஸிஜன் பயன்பாட்டையும் ஆற்றல் உற்பத்தியையும் சமநிலையில் வைத்திருக்க வல்ல ஒரு பாதுகாப்பான வரம்புக்குள் இது அவரை வைத்திருந்தது," என்று அவர் விளக்கினார். மருத்துவர் சாவியோலியின் கூற்றுப்படி, "நீண்டநேர தினசரி உடற்பயிற்சியின் போதும்கூட இந்த வரம்புக்குள் ஓடுவது இதயத்திற்கு ஏற்படும் பாதிப்புகளான வீக்கம், வடு அல்லது அரித்மியா போன்றவை ஏற்படுவதற்கான ஆபத்தைக் குறைக்கிறது." ஹூகோ இந்த சவாலை அதீத தீவிரத்தில் மேற்கொண்டிருந்தால், அதன் விளைவுகள் தீங்கு விளைவிக்கக் கூடியவையாக இருந்திருக்கும் என்று சுட்டிக்காட்டும் அவர், போதிய பயிற்சி அல்லது மருத்துவ கண்காணிப்பு இல்லாமல் இத்தகைய சவாலை மேற்கொள்வது ஆபத்தானது என்றும் எச்சரித்தார். "இதிலுள்ள அபாயம் கணிசமானது மற்றும் அறிவுறுத்தத்தக்கது அல்ல," என்றார் அவர். "உரிய தயாரிப்பு இல்லாமல் இதைச் செய்தால், அரித்மியா, வீக்கம் அல்லது திடீர் இறப்புகூட ஏற்பட வாய்ப்பு உள்ளது" என்றும் அவர் எச்சரித்தார். 'உங்கள் திறன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்' ஹூகோவை பொறுத்தவரை ஆய்வின் முடிவு ஒரு வரவேற்கத்தக்க ஆச்சர்யமாக இருந்தது. "நான் என் வாழ்வில் அடைய முடியும் என கற்பனைகூடச் செய்திராத உடல் தகுதியை எட்டினேன். அதிலும், பின்விளைவுகள் ஏதும் இல்லை என்பதைக் கவனிக்க வேண்டியது மிகவும் முக்கியம்" என்றார். ஆனால் அந்த சவால் அபாயங்கள் இல்லாததாக இருக்கவில்லை. "குளிர், வெயில், மழை, போக்குவரத்து, காயம் என நான் அனைத்து விதமான ஆபத்துகளையும் எதிர்கொண்டேன்" என்கிறார் அவர். அவர் மூன்றுமுறை வயிற்றுப்போக்கை தாங்கிக்கொள்ள நேர்ந்தது. அதில் மிக மோசமான வயிற்றுப் போக்கு ஐந்து நாட்களுக்கு நீடித்தது. "நான் 4 கிலோ எடை இழந்தேன், என் உணவு மற்றும் தண்ணீர் உட்கொள்ளும் முறையைச் சீரமைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் நாங்கள் தொடர்ந்து கொண்டிருந்தோம்." தனது 120வது மாரத்தானை ஓடிய நேரத்தில், நெடுந்தூர ஓட்டப் பந்தய வீரர்கள் மத்தியில் பொதுவாகக் காணப்படும் பிளான்டர் ஃபாஸியிடிஸ் (Plantar fasciitis) எனப்படும் கால் பாதத்தின் அடிப்பகுதியில் வலியை ஏற்படுத்தும் வீக்கத்தால் அவர் பாதிக்கப்பட்டார். பின்னர் தனது 140ஆவது மாரத்தானை ஒட்டிய கட்டத்தில் கீழ்வயிறு மற்றும் உள் தொடையில் உள்ள தசைநார்கள் மற்றும் தசைகளைப் பாதிக்கும் புபால்ஜியா (Pubalgia) அல்லது விளையாட்டால் ஏற்படும் ஹெர்னியா எனப்படும் இடுப்புக்குக் கீழ் பகுதியில் ஏற்படும் காயத்தால் பாதிக்கப்பட்டார். பட மூலாதாரம்,DÓKIMOS PRODUÇÕES படக்குறிப்பு, ஃபாரியஸ் தனது 366ஆவது மாரத்தானின் இறுதிக் கட்டத்தை தனது குடும்பதினருடன் சேர்ந்து கடந்தார் அதன் பின்னர் ஹூகோ அந்த அனுபவம் குறித்து ஒரு புத்தகத்தை எழுதினார். அத்துடன் அவர் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறார். அவரது அடுத்த சவால், அமெரிக்க கண்டங்களின் முழு நீளத்தையும் - அலாஸ்காவில் உள்ள ப்ரூதோ பே (Prudhoe Bay) முதல் அர்ஜென்டினாவில் உள்ள உஷுவையா (Ushuaia) வரை - ஓடி முடிக்கும் முதல் மனிதராக வேண்டும் என்பதுதான். "உடல் உழைப்பின் நன்மைகள் குறித்தும் மனிதர்கள் அற்புதமான விஷயங்களைச் செய்யக் கூடியவர்கள் என்பது குறித்தும் உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்," என்று அவர் கூறினார். "யாரும் தினசரி மாரத்தான் ஓட வேண்டிய தேவை இல்லை. ஆனால் அனைவரும் தங்கள் திறன் மீது உண்மையாக நம்பிக்கை கொள்ள வேண்டும்" என்கிறார் ஹூகோ. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8xv9n29gkro
  8. 09 JUL, 2025 | 12:41 PM போபால்: ஆசியாவின் மிக வயதான யானையான 'வத்சலா', நேற்று (செவ்வாய்க்கிழமை) மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்தில் உயிரிழந்தது. அந்த யானைக்கு 100 வயதுக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. ஆசியாவின் மிகவும் வயதான பெண் யானையான ‘வத்சலா’ பல ஆண்டுகளாக, பன்னா புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அடையாளமாக இருந்தது. மிகவும் வயதான யானையாக இருந்ததால், அது காப்பகத்தில் உள்ள மற்ற யானைகள் குழு அனைத்தையும் வழிநடத்தியது. காப்பகத்தில் உள்ள மற்ற பெண் யானைகள் குட்டிகளைப் ஈன்றெடுக்கும் போது, ‘வத்சலா’ ஒரு பாட்டி போல செயல்பட்டு குட்டிகளை கவனித்துக்கொண்டது என பன்னா புலிகள் காப்பகம் தெரிவித்துள்ளது. வத்சலா யானையின் முன் கால்களின் நகங்களில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக, காப்புக்காட்டின் ஹினௌடா பகுதியில் உள்ள கைரையன் வடிகால் அருகே எழுந்து நடக்க இயலாமல் படுத்துக் கொண்டது. வனத்துறை ஊழியர்கள் இந்த யானையை தூக்க நிறைய முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் வத்சலா யானை நேற்று பிற்பகலில் உயிரிழந்தது. வயது முதிர்வு காரணமாக, சமீப காலமாக இந்த யானை பார்வையை இழந்ததால், அதனால் நீண்ட தூரம் நடக்க முடியவில்லை என புலிகள் காப்பகம் தெரிவித்தது. வத்சலா யானைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ம.பி முதல்வர் மோகன் யாதவ் தனது எக்ஸ் பதிவில், "'வத்சலாவின்' நூற்றாண்டு கால தோழமை முடிவுக்கு வந்தது. இன்று (நேற்று) மதியம், 'வத்சலா' பன்னா புலிகள் காப்பகத்தில் தனது இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டது. அது வெறும் யானை அல்ல; அவள் நம் காடுகளின் அமைதியான பாதுகாவலர், தலைமுறைகளுக்கு ஒரு தோழி, மத்தியப் பிரதேசத்தின் உணர்ச்சிகளின் சின்னம். புலிகள் காப்பகத்தின் இந்த அன்பான உறுப்பினர் தனது கண்களில் அனுபவங்களின் கடலையும், கைகளில் அரவணைப்பையும் சுமந்து வாழ்ந்தார். வத்சலா இன்று நம்மிடையே இல்லை என்றாலும், அவளுடைய நினைவுகள் நம் மண்ணிலும் இதயங்களிலும் என்றென்றும் வாழும். 'வத்சலா'வுக்கு பணிவான அஞ்சலிகள்!" என்று கூறினார். https://www.virakesari.lk/article/219563
  9. போராட்டக்காரர்களை கொல்ல உத்தரவிட்ட ஷேக் ஹசீனா – வெளியான ஆடியோ பதிவு கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த ஆண்டு ஜூலை 25ஆம் தேதி, வங்கதேசத்தில் மாணவர்கள் சூரையாடியதாகக் கூறப்பட்ட மெட்ரோ ரயில் நிலையத்தை ஷேக் ஹசீனா பார்வையிட்டபோது... கட்டுரை தகவல் கிறிஸ்டோபர் கில்ஸ், ரித்தி ஜா, ரஃபித் ஹுசைன் & தாரேகுஸ்ஸமன் ஷிமுல் பிபிசி ஐ புலனாய்வு பிரிவு & பிபிசி வங்க மொழி சேவை 10 ஜூலை 2025, 05:27 GMT கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த மாணவர்கள் போராட்டத்திற்கு எதிராக கொடிய அடக்குமுறையைக் கையாள அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா அனுமதி அளித்ததாக, அவரது தொலைபேசி அழைப்புகளில் ஒன்றின் ஆடியோ பதிவு காட்டுகிறது. இந்த ஆடியோ பதிவு பிபிசி ஐ குழுவினரால் சரிபார்க்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் இணையத்தில் கசிந்த இந்த ஆடியோவில், போராட்டக்காரர்களுக்கு எதிராக "கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்த" தனது பாதுகாப்புப் படைகளுக்கு அதிகாரம் அளித்திருப்பதாகவும், "அவர்களை எங்கு கண்டாலும் பாதுகாப்புப் படையினர் சுடுவார்கள்" என்றும் ஹசீனா கூறுகிறார். இந்த ஆடியோ பதிவை வங்கதேசத்தில் உள்ள வழக்கறிஞர்கள் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான முக்கிய ஆதாரமாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். அவர் வங்கதேசத்தில் இல்லையென்றாலும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு கோடையில் ஏற்பட்ட அரசுக்கு எதிரான போராட்டத்தில் 1,400 பேர் வரை உயிரிழந்ததாக ஐ.நா. புலனாய்வாளார்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவுக்கு தப்பிச் சென்ற ஷேக் ஹசீனா மட்டுமின்றி அவரது கட்சியும், ஹசீனாவுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கின்றனர். ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் செய்தித் தொடர்பாளர், "அவர் சட்டவிரோதமாக எதையும் செய்யத் திட்டமிட்டதாகவோ அல்லது கடுமையாக பதிலளித்ததாகவோ" ஆடியோவில் காட்டப்படவில்லை என்று கூறி, குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். ஷேக் ஹசீனாவின் ஆடியோ பதிவு குறித்த பின்னணி கடந்த ஆண்டு கோடையில் அரசாங்கத்தை எதிர்த்து வீதிகளில் போராடிய போராட்டக்காரர்களைச் சுடுவதற்கு அவர் நேரடியாக அனுமதி அளித்தமைக்கான மிக முக்கியமான சான்றாக, ஷேக் ஹசீனா அடையாளம் தெரியாத மூத்த அரசு அதிகாரி ஒருவருடன் பேசியதாக வெளியான ஆடியோ பதிவு இருக்கிறது. கடந்த 1971ஆம் ஆண்டு சுதந்திரப் போரில் போராடியவர்களின் உறவினர்களுக்கான அரசுப்பணி இட ஒதுக்கீட்டிற்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள், 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஹசீனாவை பதவியில் இருந்து நீக்கிய ஒரு வெகுஜன இயக்கமாக உருவெடுத்தது. 1971 போருக்குப் பிறகு வங்கதேசம் கண்ட மிக மோசமான வன்முறைப் போராட்டம் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று, டாக்காவில் உள்ள ஷேக் ஹசீனாவின் வீட்டை மக்கள் கூட்டம் முற்றுகையிட்டது. அதற்கு முன்பு, அவர் ஹெலிகாப்டரில் தப்பினார். அன்றைய தினத்தில், மிக மோசமான வன்முறைச் சம்பவங்களில் சில நிகழ்ந்தன. பிபிசி உலக சேவை மேற்கொண்ட விசாரணையில், வங்கதேச தலைநகரில் போராட்டக்காரர்களை போலீசார் கொன்றது பற்றிய புதிய தகவல்கலைக் கண்டறிந்தது. இதில், முன்னர் அறியப்பட்டதைவிட அதிக அளவிலான மக்கள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவலும் அடங்கும். தற்போது கசிந்துள்ள ஆடியோ குறித்த தகவலறிந்த நபர் ஒருவர் பிபிசியிடம் பேசியபோது, அந்த உரையாடல் ஜூலை 18ஆம் தேதி நடந்ததாகவும், அதன்போது ஹசீனா டாக்காவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்ததாகவும் கூறினார். வங்கதேசத்தின் போராட்டத்தில் அதுவொரு முக்கியமான தருணமாக இருந்தது. போராட்டக்காரர்களை போலீசார் கொல்லும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. அதையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் மீது பொதுமக்கள் சீற்றம் கொண்டு எதிர்வினையாற்றினர். ஹசீனாவின் தொலைபேசி அழைப்புக்குப் பிறகு சில நாட்களில், டாக்கா முழுவதும் ராணுவ பாணியிலான துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாக பிபிசி பார்த்த போலீஸ் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆடியோ உண்மை என்பதை உறுதி செய்த பிபிசி பட மூலாதாரம்,AFP பிபிசி ஆய்வு செய்த ஆடியோ பதிவு, ஷேக் ஹசீனா சம்பந்தப்பட்ட பல தொலைபேசி அழைப்புகளில் ஒன்று. இந்த அழைப்புகள், தகவல் தொடர்புகளைச் சரிபார்த்துக் கண்காணிக்கும் வங்கதேசத்தில் உள்ள ஓர் அரசு நிறுவனமான தேசிய தொலைத்தொடர்பு கண்காணிப்பு மையத்தால் பதிவு செய்யப்பட்டன. இந்தத் தொலைபேசி அழைப்பின் ஆடியோ இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் கசிந்தது. ஆனால், யாரால் இது இணையத்தில் கசிந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. போராட்டங்களுக்குப் பிறகு, ஹசீனாவின் தொலைபேசி அழைப்புகளின் ஏராளமான பதிவுகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றில் பல சரிபார்க்கப்படவில்லை. ஜூலை 18ஆம் தேதியன்று பதிவான தொலைபேசி உரையாடல், ஷேக் ஹசீனாவின் குரல் தொடர்பான அறியப்பட்ட ஆடியோ பதிவுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டது. வங்கதேச காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறை, அந்தப் பதிவில் உள்ள குரல் அவரது குரலுடன் ஒத்துப் போவதை உறுதி செய்தது. ஆடியோ தடயவியல் நிபுணர்களான இயர்ஷாட்டுடன் பதிவை பகிர்ந்துகொண்டதன் மூலம் பிபிசி தனது சுயாதீன பகுப்பாய்வை மேற்கொண்டது. அவர்கள் இந்த உரையாடல் திருத்தப்பட்டதற்கோ அல்லது மாற்றப்பட்டதற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்றும், அது செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் கூறினர். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த ஆடியோ பதிவு ஓர் அறையில், ஸ்பீக்கரில் பேசப்பட்டிருக்கலாம் என்று இயர்ஷாட் நிபுணர்கள் கூறினர். தனித்துவமான தொலைபேசி ஒலி அதிர்வெண்கள் மற்றும் பின்னணி இரைச்சல் காரணமாக அவர்களால் அதை அறிய முடிந்தது. ஆடியோ பதிவு முழுவதும் இருந்த மின்சார நெட்வொர்க் அதிர்வெண் ஒன்றை இயர்ஷாட் நிபுணர்கள் அடையாளம் கண்டனர். உரையாடலைப் பதிவு செய்யும் சாதனங்கள் மின் சாதனங்களில் இருந்து சிக்னல்களை எடுக்கும்போது இது நிகழ்கிறது. இது அந்த ஆடியோ பதிவு உண்மையான மற்றும் திருத்தப்படவில்லை என்பதற்கான அறிகுறியாக உள்ளது. ஷேக் ஹசீனாவின் உரையாடலில் உள்ள, ரிதம், ஒலிப்பு முறை, சுவாச ஒலிகள் ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்து, நிலையான இரைச்சல்களை அடையாளம் கண்டதன் மூலம், ஆடியோ செயற்கையாக மாற்றப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று இயர்ஷாட் நிபுணர்கள் கண்டறிந்தனர். "இந்த ஆடியோ பதிவுகள், ஷேக் ஹசீனாவின் பங்கை நிறுவுவதற்கு மிக முக்கியமானவை. அவை தெளிவாக உள்ளன, முறையாக அவரால் நடவடிக்கைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன." என்று பிரிட்டிஷ் சர்வதேச மனித உரிமைகள் வழக்கறிஞர் டோபி கேட்மேன் பிபிசியிடம் கூறினார். ஷேக் ஹசீனா மற்றும் பிறருக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றமான வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்திற்கு கேட்மேன் ஆலோசனை வழங்கி வருகிறார். அவாமி லீக் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இதுகுறித்துப் பேசுகையில், "பிபிசி குறிப்பிடும் ஆடியோ பதிவு உண்மையானதா என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடியாது" என்று தெரிவித்தார். வங்கதேச வரலாற்றில் மிகக் கொடூரமான போலீஸ் வன்முறை பட மூலாதாரம்,GETTY IMAGES ஷேக் ஹசீனாவுடன், முன்னாள் அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளும் போராட்டக்காரர்களின் கொலைகளில் தொடர்புபடுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 203 பேர் மீது சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்களில் 73 பேர் காவலில் உள்ளனர். பிபிசி ஐ புலனாய்வுக் குழு, 36 நாட்களில் போராட்டக்காரர்களுக்கு எதிரான காவல்துறை தாக்குதல்களை விவரிக்கும் நூற்றுக்கணக்கான வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களைப் பகுப்பாய்வு செய்து சரிபார்த்தது. தலைநகர் டாக்காவின் பரபரப்பான ஜத்ராபரியில் ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று நடந்த ஒரு சம்பவத்தில், குறைந்தது 52 பேர் போலீசாரால் கொல்லப்பட்டதாக விசாரணையில் கண்டறியப்பட்டது. இது வங்கதேசத்தின் வரலாற்றில் மிக மோசமான போலீஸ் வன்முறைச் சம்பவங்களில் ஒன்று. அந்த நேரத்தில் வெளியிடப்பட்ட ஆரம்பக்கட்ட அறிக்கைகள் ஜத்ராபரியில் அன்று 30 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தன. இந்தப் படுகொலை எவ்வாறு தொடங்கியது, முடிந்தது என்பது பற்றிய புதிய விவரங்களை பிபிசி புலனாய்வு வெளிப்படுத்தியது. நேரில் கண்ட சாட்சிகள் விவரித்த காட்சிகள், சிசிடிவி பதிவுகள், டிரோன் படங்களைச் சேகரித்ததன் மூலம், போராட்டக்காரர்களிடம் இருந்து போலீசாரை பிரித்துவிட்ட ராணுவ வீரர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறிய உடனே போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதை பிபிசி ஐ புலனாய்வு உறுதி செய்தது. சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக, சந்துகள், நெடுஞ்சாலையில் தப்பிச் செல்ல முயன்ற போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதற்கு முன்பு காவல்துறை அதிகாரிகள் அருகிலுள்ள ராணுவ முகாமில் தஞ்சம் புகுந்தனர். சில மணிநேரங்களுக்குப் பிறகு போராட்டக்காரர்கள் பதிலடி கொடுத்ததில், குறைந்தது ஆறு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். ஜத்ராபரி காவல் நிலையத்திற்குத் தீ வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடந்த வன்முறைச் சம்வபங்களில் ஈடுபட்டதற்காக 60 காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக வங்கதேச காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார். "அப்போதைய காவல்துறையின் சில அதிகாரிகள் அதிகப்படியான பலத்தைப் பயன்படுத்தியதால் வருந்தத்தக்க சம்பவங்கள் நடந்தன. வங்கதேச காவல்துறை முழுமையான, பாரபட்சமற்ற விசாரணைகளைத் தொடங்கியுள்ளது" என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ஷேக் ஹசீனா மீதான குற்றவியல் விசாரணை பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசாங்க எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் தீ வைத்ததைத் தொடர்ந்து, எரிந்த நிலையில் இருந்த ஜத்ராபரி காவல் நிலையத்தைக் காண மக்கள் திரண்டனர் ஷேக் ஹசீனாவின் விசாரணை கடந்த மாதம் தொடங்கியது. மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் பொதுமக்களுக்கு எதிரான வன்முறையை ஏற்படுத்துதல், தூண்டுதல், சதித்திட்டம் தீட்டுதல், படுகொலைகளைத் தடுக்கத் தவறியது ஆகிய குற்றச்சாட்டுகள் அடங்கும். ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையை இந்தியா இதுவரை நிறைவேற்றவில்லை. விசாரணைக்காக ஹசீனா வங்கதேசத்திற்குத் திரும்புவது சாத்தியமில்லை என்று டோபி காட்மேன் கூறுகிறார். போராட்டக்காரர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்புப் படையின் செயல்களுக்கு அதன் தலைவர்கள் பொறுப்பல்ல என்று அவாமி லீக் கூறுகிறது. பிரதமர் உள்பட அதன் உயர்மட்டத் தலைவர்கள் சிலர் மக்கள் கூட்டத்திற்கு எதிராக கொடிய பலத்தைப் பயன்படுத்துவதில் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டதாகவோ அல்லது அதற்கு உத்தரவிட்டதாகவோ கூறப்படும் கூற்றுகளை அவாமி லீக் செய்தித் தொடர்பாளர் ஒருவர் முற்றிலும் மறுத்துள்ளார். "மூத்த அரசு அதிகாரிகளால் எடுக்கப்பட்ட முடிவுகள் நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்டவை மற்றும் உயிரிழப்பைக் குறைக்கும் நோக்கம் கொண்டவை," என்றும் அவர் தெரிவித்தார். ஷேக் ஹசீனா மற்றும் அவரது அரசின் நடவடிக்கைகள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களாக இருக்கலாம் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்களைக் கண்டறிந்ததாகக் கூறும் ஐ.நா புலனாய்வாளர்களின் கண்டுபிடிப்புகளை அவாமி லீக் கட்சி நிராகரித்துள்ளது. இதுகுறித்து கருத்து கேட்க வங்கதேச ராணுவத்தை பிபிசி அணுகியது. ஆனால், எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. ஷேக் ஹசீனாவின் வீழ்ச்சிக்குப் பிறகு, நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் வங்கதேசத்தை நிர்வகித்து வருகிறது. அவரது அரசாங்கம் தேசிய அளவிலான தேர்தலுக்குத் தயாராகி வருகிறது. அவாமி லீக் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8xv9vjzllvo
  10. Published By: DIGITAL DESK 2 10 JUL, 2025 | 05:24 PM ஒட்டிசம் மற்றும் நரம்பியல் வளர்ச்சி பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்காக பராமரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கு தேசிய அளவிலான பொறிமுறையை தயாரிப்பதற்கான கூட்டுத் திட்டத்திற்கான எண்ணக்கரு ரீதியான முன்மொழிவை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் எண்ணக்கருவின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் குறித்து சமூக சக்தி செயலகத்தின் தலைமையில் புதன்கிழமை (09) பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த திட்டம் சம்பந்தப்பட்ட துறைசார் அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களால் செயல்படுத்தப்படுவதோடு ஒருங்கிணைப்பு பணிகளை ஜனாதிபதி அலுவலகம் மேற்கொள்ளும். இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட ரூபா. 250 மில்லியன் நிதியை சமூக சேவைகள் திணைக்களத்தால் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்குதல், பராமரிப்பு நிலையங்களை செயல்படுத்த தேவையான மனிதவள அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரிப்பது, இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய துறைசார் நிறுவனங்களை இணைத்து அறிவியல் பின்னணியுடன் கூடிய புதிய மாதிரியொன்றைத் தயாரிப்பது குறித்து ஆராயப்பட்டது. இந்த விடயங்களை உள்ளடக்கிய ஒரு பொறிமுறையைத் தயாரிப்பதற்கான எண்ணக்கரு ரீதியான முன்மொழிவை இரண்டு வாரங்களுக்குள் தயாரிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அதிகாரிகளுக்கு மேலும் அறிவுறுத்தினார். ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் கபில ஜனக பண்டார, பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சின் செயலாளர் கே.டீ.ஆர். ஓல்கா, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, மேலதிகச் செயலாளர் எச்.ஏ. ஹேமா பெரேரா, சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் தர்ஷனி கருணாரத்ன, சுகாதார அமைச்சின் சமூக சுகாதாரப் பிரிவின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் வருணி ரசாதரி, சமூக சுகாதார பிரதிப் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஆசிரி ஹேவமாலகே மற்றும் லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சந்துஷித சேனாதிபதி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/219669
  11. உறவுக்காற சிறுமி தான், உயிரோடு இருக்கிறாவா இல்லையா என பெற்றோர் உறவினர் தவித்த தவிப்பிருக்கே? போனை நிறுத்திவிட்டார். இன்னொரு சம்பவம் 11ஆம் ஆண்டில் மாணவன் 9ஆம் ஆண்டில் கற்கும் மாணவியை தவறான நடவடிக்கைக்கு உட்படுத்திவிட்டு அதனை பெருமையாக ஆசிரியரிடம் கூறியிருக்கிறார். அந்த மாணவியும் பாடசாலை வராதிருந்துள்ளார். இப்போது அதிபர் தலையிட்டு மாணவியை மருத்துவப் பரிசோதனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
  12. 10 JUL, 2025 | 09:35 AM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) செம்மணி மனித புதைகுழி விடயத்தில் உள்ளக விசாரணைகளில் நீதியை எதிர்பார்க்க முடியாது. தமிழ் இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சர்வதேச விசாரணை ஊடாகவே நீதியை பெற்றுக்கொள்ள முடியும். செம்மணி விவகாரத்தில் அரசாங்கத்தின் போக்கினை உன்னிப்பாக அவதானித்து வருகிறோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க உரையாற்றும் போது, இது அரசியல் அதிகாரத்திற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சம்பவம் என்று கூறியுள்ளார். ராஜபக்‌ஷக்கள் தோல்வியடைந்திருந்த காலத்தில் ராஜபக்‌ஷக்களை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக தேசிய பாதுகாப்பை பலமிழக்கச் செய்து இவ்வாறான சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளதாக கூறுகிறார். சுதந்திர காலத்தில் இருந்து 78 வருடங்களாக அரசியல் அதிகாரங்களுடனேயே அரசியல் நிறுவனங்கள் இருந்துள்ளன. சுயாதீனமாக இயங்கவில்லை. அரசியல் தலையீடுகளுடையே நடந்துள்ளன. இதுவே உண்மையாக காரணங்கள் இந்த விடயங்களுக்கு. இந்த அரசாங்கமும் இதனை புரிந்துகொள்ள வேண்டும். இங்கு உள்ளக விசாரணைகளின் நீதியை எதிர்பார்க்க முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர்களே விசாரிப்பது எப்படி நியாயமாக அமையும். செம்மணி மனித புதைகுழி விடயத்தில் அரசாங்கமொன்றே குற்றவாளியாக இருக்கின்றது. இந்த அரசாங்கமும் யுத்தத்திற்கு ஆதரவளித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அரசாங்க காலத்திலேயே செம்மணி புதைகுழிகள் உருவாகியுள்ளன. அங்கே முதல் அகழ்வின் போது 15 எலும்புகூடுகள் மீட்கப்பட்டன. ஆனால் அக்கால அரசாங்கம் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கின் குற்றவாளியின் வாக்குமூலத்தில் 500 முதல் 600 வரையிலான உடல்களை புதைப்பதற்கு தான் செயற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவற்றில் 15 எலும்புகூடுகளே மீட்கப்பட்டுள்ளன. அரசாங்கமே அதன் குற்றவாளி தரப்பாக இருக்கின்றது. தற்போது அதற்கு அருகில் இன்னுமொரு மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கே குற்றமொன்று நடந்துள்ளது. அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு நீதியை நிலைநாட்ட வேண்டும். சர்வதேச விசாரணைகள் இன்றி இதில் உண்மைகளை கண்டறிய முடியாது. இந்த அரசாங்கம் போருக்கு ஆதரவளித்துள்ளது. குற்றமிழைத்த தரப்பே விசாரணைகளை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் எவ்வாறு நீதியை பெற்றுக்கொள்ள முடியும். எவ்வாறு சுயாதீன விசாரணைகள் இடம்பெறும். இதனால் தான் நாங்கள் தொடர்ச்சியாக சர்வதேச விசாரணை கட்டமைப்பை கோருகிறோம். செம்மணி விவகாரத்தில் இந்த அரசாங்கத்தின் செயற்பாட்டை உன்னிப்பாக அவதானித்து வருகிறோம் என்றார். https://www.virakesari.lk/article/219632
  13. 09 JUL, 2025 | 08:41 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தேசப்பற்றாளர்களின் அதிகாரத்திற்கு அச்சப்பட்டே அரசாங்கம் மனித புதைகுழிகள் விடயத்தில் கவனம் செலுத்தாது இருக்கின்றது., செம்மணி மனித புதைகுழி உள்ள இடத்திற்கு இதுவரையில் அரசாங்கமோ, காணாமல் போனோர் அலுவலகமோ செல்லவில்லை என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான சபை ஒத்துவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாம் அனைவரும் கவலையடையும் விடயமொன்று தற்போது இடம்பெறுகின்றது. அதாவது செம்மணியில் மனித புதைகுழிகள் அகழப்படுகின்றன. தினமும் அங்கு எலும்புக்கூடுகள் மீட்கப்படுகின்றன. சிறுவர்கள், குழந்தைகள் தமது விளையாட்டுப் பொருட்களுடன் புதைக்கப்பட்ட கொடூரமான சம்பவம் தொடர்பில் தினமும் பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகள் வெளியிடப்படுகின்றன. குறிப்பாக தமிழ் பத்திரிகைகளில் அந்தச் செய்திகளை பார்க்கலாம். ஆனால் தெற்கில் மற்றைய பத்திரிகைகளில் இது தொடர்பில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. எங்கேயாவது ஒரு மூலையில் சிறிதாக குறிப்பிடப்படுகின்றன. யூடியுப் சனல் ஒன்றை நடத்தும் தரிந்து ஜயவர்தன என்பவர் அவ்விடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று ஆராய்கின்றார். ஆனால் அரச தரப்பில் எவரும் இதுவரையில் அந்தப் பகுதியில் கால் வைக்கவில்லை என்று அங்கு அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ள குழுவினர் கூறுகின்றனர். இந்த விடயத்தில் அரசாங்கத்தின் பொறுப்பு என்ன? காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தினர் அங்கு சென்றனரா? காணாமல் போனோர் தொடர்பான சட்டத்தின்படி உங்களுக்கு அதிகாரங்கள் உள்ளன. இதேவேளை அநீதிக்கு எதிரான ஜே.வி.பியின் இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். அது தொடர்பான ஆணைக்குழு அறிக்கைகள் பல உள்ளன. பல்வேறு மனித புதைகுழிகள் மற்றும் துன்புறுத்தல் நிலையங்கள் தொடர்பில் தகவல்கள் உள்ளன. இது தொடர்பில் என்ன செய்கின்றீர்கள். உங்களுடையவர்களின் மனித புதைகுழிகளைகூட இன்னும் அகழ்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் எதற்காக அமைக்கப்பட்டுள்ளது. சர்வதேசத்திற்கு முன்னால் எமது நாட்டின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் போது, பெயருக்கு கைக்கட்டிகொண்டு பார்த்துக்கொண்டிருக்கவா காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் இருக்கின்றது. அதிகாரங்களை பயன்படுத்த முடியும். அதனை செய்யாமல் இருப்பது ஏன்? உங்களின் தேசப்பற்றாளர்களுக்கு நீங்கள் பயத்துடன் இருக்கின்றீர்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை தேடுகின்றீர்கள் என்றால், ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் அபுஹிந் தொடர்பில் கூறப்பட்டுள்ளது. அவருடன் தொடர்புடைய இன்னுமொரு அபு இருந்தார். பக்தம்அபு என்பவரே அவர். அவர் இஸ்ரேலை சேர்ந்தவர். அவர் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். சஹரானின் மனைவியிடமும் முறையாக விசாரித்தால் இந்த விடயங்கள் தொடர்பில் அறிந்துகொள்ளலாம். இவரிடம் சாட்சியங்களை பதிவு செய்ய ஆணைக்குழு கேட்டபோது, சட்டமா அதிபர் திணைக்களம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இறுதியில் அவரிடம் விசாரணை நடத்தியதுடன், பல்வேறு விடயங்களை பதிவு செய்துள்ளனர். ஜனாதிபதி காலத்தினால் மூடி மறைக்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதாக அண்மையில் ஜனாதிபதி கூறியுள்ளார். அரசாங்கம், அரசாங்கம் தொடர்பிலேயே விசாரணை நடத்துவதாகவும் கூறியுள்ளார். யார் அவர்கள் என்று நாட்டுக்கு வெளிபடுத்துங்கள். நீங்கள் வயிற்றுக்கு தெரியாமல் மருந்து குடிக்க முயற்சிக்க வேண்டாம். உண்மைகளை உண்மையாகவே வெளியிட இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும என்றார். https://www.virakesari.lk/article/219619
  14. யாழில் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இளைஞன் கைது! 10 JUL, 2025 | 09:00 AM யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் 13 வயதுச் சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இளைஞன் ஒருவர் நேற்று புதன்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமியின் மச்சான் முறையுள்ள 19 வயதுடைய இளைஞன் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய விடயம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வட்டுக்கோட்டை பொலிஸார் குறித்த இளைஞனை கைதுசெய்துள்ளனர். விசாரணைகளின் பின்னர் இளைஞனை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/219631 உறவுக்காற சிறுமி தான், உயிரோடு இருக்கிறாவா இல்லையா என பெற்றோர் உறவினர் தவித்த தவிப்பிருக்கே? போனை நிறுத்திவிட்டார்.
  15. படக்குறிப்பு, இந்தத் தூம்புக் கல்வெட்டுகள் சோழர் கால நீர் மேலாண்மை தொழில்நுட்பம் குறித்து விளக்குவதாகக் கூறுகிறார் கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் கட்டுரை தகவல் மாயகிருஷ்ணன் கண்ணன் பிபிசி தமிழுக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் திருவண்ணாமலையை அடுத்த மெய்யூரிலும் தண்டரையிலும் சோழர்கள் கால தூம்புக் கல்வெட்டுகளை திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் கண்டுபிடித்துள்ளது. இந்தக் கல்வெட்டுகள் பல முக்கிய வரலாற்றுச் செய்திகளைக் கூறுகின்றன. திருவண்ணாமலை வட்டம் மெய்யூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏரியின் வடக்குப் பகுதியில் கல்லால் ஆன தூம்பு இருக்கிறது. தூம்பு என்பது நீர்நிலைகளில் நீரை வெளியேற்ற அமைக்கப்பட்டிருக்கும் ஒரு வகையான திறந்து - மூடும் அமைப்பு. இந்தத் தூம்பின் ஒரு பகுதியில் கல்வெட்டுகள் உள்ளதை திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவ அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்டறிந்தனர். இந்தக் கல்வெட்டில் உள்ள எழுத்துகளின் அடிப்படையில், அது 12 அல்லது 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டாக இருக்கக்கூடும் என்கிறார் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளரும், திருவண்ணாமலை வட்டாட்சியருமான பாலமுருகன். இந்தக் கல்வெட்டில் "இத்தோரணம் செய்வித்தான் அருங்குன்றக் கிழான் பொன்னம்பலக்கூத்தன்" என்று பொறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டில் தூம்பு, தோரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தூம்புகளின் தனித்துவமான கட்டுமானம் இந்த கல்வெட்டுகளின் மூலம் சோழர்கள் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நீர் மேலாண்மைப் பணிகளை அறிய முடிவதாகக் கூறுகிறார் பாலமுருகன். மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை தென்முடியனூர், தேத்துறை ஆண்டபட்டு, வலையாம்பட்டு உள்பட 15க்கும் மேற்பட்ட இடங்களில் தூம்புக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார் பாலமுருகன். அதோடு, அந்தக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலன் சார்ந்த பணிகளும் நீர்ப்பங்கீடு தொடர்பான தொழில்நுட்பமும் எவ்வாறு இருந்தன என்பதற்கு இந்தக் கல்வெட்டுகள் சான்றாக அமைவதாகவும் அவர் விளக்கினார். படக்குறிப்பு, திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் பாலமுருகன் தூம்பு மதகு என்பது ஏரிகளில் தேக்கி வைக்கும் நீரை பாசனத்திற்குத் திறக்க அமைக்கப்பட்ட ஒரு திறன்மிக்க அமைப்பு என்கிறார் கல்வெட்டு ஆய்வாளரும், எழுத்தாளருமான முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன். இந்த குமிழித் தூம்பு கட்டுமான அமைப்பை சோழ அரசர்கள் அதிக அளவில் செய்துள்ளதாகவும் கூறுகிறார் குடவாயில் பாலசுப்ரமணியன். இந்தக் கட்டமைப்பு குறித்து விளக்கிய அவர், "இந்தத் தூம்பு அமைப்பில் தேவையான அளவில் தண்ணீரை வெளியேற்ற உதவும் வகையில் கட்டுமானம் அமைந்திருக்கும். தண்ணீர் திறக்கப்படும் இடத்தில் ஒரு கல் பெட்டி போன்று அமைக்கப்பட்டு இருக்கும். இந்தக் கல்பெட்டியின் மேலே அரையடி விட்டத்தில் துளை ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். இந்தத் துளை நீரோடித் துளை எனக் குறிப்பிடப்படும். இந்தத் துளையை குழவி போன்ற ஒரு கல்லைக் கொண்டு மூடி வைத்திருப்பார்கள். பெட்டியின் தரை மட்டத்திலும் சிறிய அளவிலான இரண்டு - மூன்று துளைகள் இருக்கும். அவற்றை சேரோடித் துளை என்பர். ஏரியின் தரைமட்டத்திற்குக் கீழே இந்தக் கல்பெட்டியில் உள்ள துளை வழியே தண்ணீர் செல்லும் வகையில் குழாய் அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும்" என்று விவரித்தார். சோழர்கள் போற்றிய நீர் மேலாண்மை கட்டமைப்பு இந்தக் கட்டமைப்பில் நீர் திறந்துவிடப்படும் நுட்பம் குறித்துப் பேசிய பாலசுப்பிரமணியம், "பாசனத்திற்குத் தண்ணீர் வேண்டியபோது துளையில் உள்ள குழவிக்கல்லை தண்ணீருக்குள் மூழ்கிச் சென்று எடுத்து விடுவார்கள். அப்போது ஏரியின் நீரோடித் துளை வழியாக 80 விழுக்காடு நீரும், சேரோடித் துளை வழியாக 20 விழுக்காடு சேறு கலந்த நீரும் வெளியேறும். இதனால் ஏரிக்குள் வண்டல் மண்படிவது குறையும். சில ஏரிகளில் இந்தத் தூம்பு மதகு உள்ள இடத்தை அடையாளம் காட்டும் விதமாக கல் மண்டபங்களையும் அமைத்திருப்பார்கள்" என்று விளக்கினார். அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் கண்டராதித்தம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு செம்பியன் மாதேவி பேரேரி அமைந்திருக்கிறது. பராந்தக சோழனின் இளைய மகன் கண்டராதித்தன் தனது இரண்டாவது மனைவி செம்பியன் மாதேவியின் விருப்பத்தின் பேரில் வெட்டிய ஏரி இது. படக்குறிப்பு, கல்வெட்டு ஆய்வாளரும், எழுத்தாளருமான முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் இதன் மதகு ஒன்றுக்கு, கண்டராதித்தன் தான் வளர்த்த ராஜராஜனின் பெயரால் ராஜராஜன் தூம்பு என்று பெயரைச் சூட்டியுள்ளார். மேலும், புதுக்கோட்டை அருகே உள்ள குமிழித் தூம்புக்கு ராஜராஜன் என்றே பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து சோழர்கள் இந்த அமைப்பை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதினார்கள் என்பதை அறிய முடிவதாகக் குறிப்பிட்டார் குடவாயில் பாலசுப்பிரமணியன். "ஆங்கிலேயர் காலத்தில் பொதுப் பணித்துறை ஏரிகளைப் பராமரிக்கத் தொடங்கியது. அதிலிருந்து இந்தத் தூம்புகள் கைவிடப்பட்டன. பராமரிப்பின்றிக் கைவிடப்பட்ட இத்தகைய குமிழித் தூம்புகளின் தூண்களில் இருக்கும் அரச மரபினர் காலத்துக் கல்வெட்டுகளும் அரசு சின்னங்களும் தெய்வச் சிற்பங்களும் நீர் மேலாண்மை தொடர்பான பல்வேறு செய்திகளை நமக்குத் தற்போதும் உணர்த்துகின்றன," என்கிறார் குடவாயில் பாலசுப்பிரமணியன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c23grgeglevo
  16. செம்மணியில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வு - இன்றுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம் 10 JUL, 2025 | 03:59 PM செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வடைந்துள்ளது. அதேவேளை இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த 15 நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் , இன்றைய தினம் வியாழக்கிழமை மதியத்துடன் , தற்காலிகமாக அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டு , எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீள அகழ்வு பணிகளை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் 15ஆம் நாள் பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அதன் போது, புதைகுழிகளில் அடையாளம் காணப்பட்ட 65 மனித எலும்பு கூட்டு தொகுதிகளும் முற்றாக இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு நடவடிக்கைகள் இன்றைய தினத்துடன் 24 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதில் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 01" மனித புதைகுழியில் இருந்து 63 எலும்பு கூடுகளும் , "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 02" புதைகுழியில் இருந்து இரண்டு எலும்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன. அதேவேளை "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 02" புதைகுழியில் குழப்பகரமான முறையில் மனித எலும்பு சிதிலங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகள் அனைத்தும் சட்ட வைத்திய அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட , பை , காலணிகள் , கண்ணாடி வளையல்கள் , ஆடையை ஒத்த துணிகள் , பொம்மை உள்ளிட்ட பொருட்கள் சான்று பொருட்களாக அடையாளப்படுத்தப்பட்டு , நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/219668
  17. 2) வீட்டுத்திட்ட பணிகளுக்கு உதவுவதற்காக திரு @ஈழப்பிரியன்(அமெரிக்கா (இருபாலை) அவர்கள் 29970 ரூபாவை (100$) திரு லக்‌ஷன் அவர்களுடைய வங்கிக் கணக்கில் 08/07/2025 அன்று வைப்புச் செய்துள்ளார். ஈழப்பிரியன் அண்ணாவிற்கு எமது உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.
  18. 09 JUL, 2025 | 02:48 PM சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் தேடப்படும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தங்களது வான்பரப்பினை பயன்படுத்துவதற்கு ஏன் என இத்தாலி கிரேக்கம் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தெளிவுபடுத்தவேண்டும் என ஐநாவின் பாலஸ்தீனத்திற்கான விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐசிசி தேடும் பெஞ்சமின் நெட்டன்யபாகுவிற்கு தங்கள் வான்பரப்பை பயன்படுத்துவதற்கும் பாதுகாப்பாக பயணிப்பதற்கும் இத்தாலி பிரான்ஸ் கிரேக்கம் ஆகிய நாடுகள் அனுமளியளித்தது ஏன் என்பதை தெளிவுபடுத்தவேண்டும் என சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ள அவர் நெட்டன்யாகுவை கைதுசெய்யவேண்டிய கடப்பாட்டை இந்த நாடுகள் கொண்டுள்ளன என தெரிவித்துள்ளார். சர்வதேச சட்ட ஒழுங்கை மீறும் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையும், அதனை பலவீனப்படுத்தும்,அவர்களுக்கும் அனைவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை பிரான்ஸ் கிரேக்க இத்தாலி மக்கள் அறிந்திருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தற்போது அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினை அங்கீகரிக்கும் ரோம் பிரகடனத்தில் அமெரிக்கா கைச்சாத்திடாதது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/219580
  19. செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் : 54 எலும்புக்கூடுகள் மீட்பு! 09 JUL, 2025 | 09:01 PM யாழ்ப்பாணம் (ஜூலை 09) : செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு அதில் 54 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணியின் 14 ஆவது நாளான இன்று யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது. அந்த வகையில், இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றுடன் (ஜூலை9) 14 வது நாளை எட்டியது. ஏற்கனவே முதலாம் கட்ட அகழ்வு 9 நாட்களில் நிறைவடைந்தது. முதலாம் கட்டம் இரண்டாம் கட்டம் என அகழ்வாய்வு பணிகள் மொத்தமாக 23 நாட்கள் மனித புதைகுழி அகழ்வு நடைபெற்று வருகின்றது. இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படுள்ள நிலையில், அவற்றில் 54 மனித எலும்பு கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. குறித்த அகழ்வின் போது, இன்று (ஜூலை 09) ஒரு சிறுமியின், ஆடைகள், இறப்பர் செருப்பு மற்றும் பிற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட அகழ்வு நாளை தற்காலிகமாக நிறைவடைய உள்ள நிலையில், விரைவில் அகழ்வுப் பணிகள் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்க படுகிறது. https://www.virakesari.lk/article/219625
  20. கமாண்டோ சலிந்த மற்றும் கெஹெல்பத்தர பத்மே கைது? கனேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹெல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த ஆகிய இரண்டு குற்றவாளிகளும் இன்று (9) மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கைதுகள் தொடர்பான தகவல்களை இலங்கை பொலிசார் ஏற்கனவே சர்வதேச பொலிஸாரிடம் அதிகாரப்பூர்வமாகக் கேட்டுள்ளனர். கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகக்குழுத் தலைவரான கனேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொலை செய்த சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டதாக மன்தினு பத்மசிறி என்ற கெஹேல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த ஆகிய இரண்டு குற்றவாளிகளும் நேரடியாகக் குற்றம் சாட்டப்பட்டனர். கெஹேல்பத்தர பத்மே டுபாயில் இருந்தும், கமாண்டோ சலிந்த மலேசியாவில் இருந்தும் இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்படி, குறித்த இரண்டு குற்றவாளிகளுக்கும் சர்வதேச பொலிஸார் ஊடாக பொலிஸார் சிவப்பு அறிவித்தலை வெளியிட்டிருந்தனர். https://adaderanatamil.lk/news/cmcw1aqft00yhqp4k5rtnruf6
  21. https://seatreservation.railway.gov.lk/mtktwebslr/ பதிவு செய்யலாம் என மேலுள்ள இணைப்பு காண்பிக்கிறது அண்ணை.
  22. லார்ட்ஸ் டெஸ்ட்: வேகப்பந்து வீச்சின் சொர்க்கபுரியில் வெல்லப்போவது யார்? - 4 ஆண்டுக்குப் பின் ஆர்ச்சரை களமிறக்கும் இங்கிலாந்து பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய கேப்டன் ஷுப்மன் கில் கட்டுரை தகவல் க.போத்திராஜ் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட சச்சின்-ஆன்டர்ஸன் கோப்பை தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்று சமநிலையில் உள்ளனர். இந்நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றி பெறும் அணி டெஸ்ட் தொடரில் முன்னிலை பெறும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக முயற்சிப்பார்கள். லீட்ஸில் நடந்த முதல் டெஸ்டில் பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கில் இந்திய அணி சோபிக்கவில்லை. கடந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக அமைந்து வீரர்கள் நல்ல முறையில் ரன்களைக் குவித்தனர். அதிலும் குறிப்பாக ஜெய்ஸ்வால், ராகுல், கேப்டன் சுப்மன் கில், ரிஷப் பண்ட், ஜடேஜா ஆகியோர் சதம், அரைசதம் அடித்து நல்ல ஃபார்மில் உள்ளனர். பந்துவீச்சில் கடந்த 2வது டெஸ்டில் ஆகாஷ் தீப், சிராஜ் இருவரும் இங்கிலாந்து பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்தனர். முதல் டெஸ்டில் பீல்டிங்கில் செய்திருந்த தவறுகளை 2வது போட்டியில் திருத்தி, கேட்ச் வாய்ப்புகளை தவறவிடாமல் இந்திய வீரர்கள் பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். முதல் டெஸ்டை விட 2வது போட்டியில் பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. குறிப்பாக 2வது டெஸ்டில் அதிகமான ரன்கள் வித்தியாசத்திலும், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் முதல் வெற்றி பெற்று புதிய வரலாற்றையும் இளம் இந்திய அணியினர் படைத்தனர். கடந்த இரு டெஸ்ட் போட்டிகளும் நடந்த ஆடுகளம் தட்டையானது, பேட்டர்களுக்கு வெகுவாக ஒத்துழைக்கக்கூடியதாக இருந்தது. ஆனால், நாளை லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் 3வது டெஸ்ட் போட்டி பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் ஆடுகளமாகும். மற்ற மைதானங்களை விட இந்த மைதானத்தில் ஆடுகளம் சற்று தாழ்வாக இருக்கும் என்பதால், பந்து பேட்டரை நோக்கி சீறிக்கொண்டு வரும். ஆதலால், பேட்டர்கள் இங்கு பொறுமை காத்து, நிதானமாக பேட் செய்வது அவசியமாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பயிற்சியில் இந்திய அணி வீரர்கள் இந்திய அணியில் கடந்த போட்டியில் களமிறங்காத வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா களமிறங்குவார். அதேபோல இங்கிலாந்து அணியில் நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு ப்ளேயிங் லெவனில் வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார். கடைசியாக ஆர்ச்சர் 2021ம் ஆண்டு ஆமதாபாத்தில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சர் பங்கேற்றார். அதன்பின் முழங்கால் காயம், முதுகுதண்டுவட சிகிச்சை ஆகியவற்றால் 4 ஆண்டுகளுக்கும் மேலாக அணியில் இடம் பெறாமல் இருந்த ஆர்ச்சர் நாளைதான் களமிறங்க இருக்கிறார். இங்கிலாந்து அணிக்குள் ஆர்ச்சர் வருவது மிகப்பெரிய பலமாகும், பந்துவீச்சாளர் ஜோஸ் டங்கிற்குப் பதிலாக ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார், இதைத்தவிர பெரிதாக எந்த மாற்றத்தையும் இங்கிலாந்து அணி செய்யவில்லை. இந்திய அணியிலும் பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக பும்ரா களமிறங்குவார். மற்றவகையில் ப்ளேயிங் லெவனில் பெரிதாக மாற்றத்தையும் இந்திய அணி தரப்பில் செய்யமாட்டார்கள் என்று தெரிகிறது. 'புற்றுநோயுடன் போராடும் அக்காவுக்காக...' - 10 விக்கெட் வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட ஆகாஷ் தீப் உருக்கம் கேப்டன்சி, பேட்டிங் அபாரம்: கேப்டனானதும் புதுப்புது நுட்பங்களை வெளிக்காட்டும் சுப்மன் கில் புதிய வரலாறு படைத்த இந்தியா: ஆகாஷ் தீப் அற்புத பந்துவீச்சில் தடம் புரண்ட இங்கிலாந்து சுப்மன் கில்லின் இரட்டை சதம் ஏன் இவ்வளவு சிறப்பானது? ஆர்ச்சர் வருகையால் நம்பிக்கை இங்கிலாந்து அணியில் 2வது டெஸ்டிலேயே ஆர்ச்சர் சேர்க்கப்பட்டாலும் அவருக்கு ப்ளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கவில்லை. 2வது போட்டியிலிருந்தே வலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆர்ச்சரை தீவிரமாகக் கண்காணித்த பின், பயிற்சியாளர் மெக்கலம் 3வது டெஸ்ட் போட்டியில் ப்ளேயிங் லெவனில் சேர்த்துள்ளார். இங்கிலாந்து அணியின் தற்போதைய பந்துவீச்சாளர்கள் பெரிதாக அனுபவம் இல்லாதவர்கள். வோக்ஸ், ஸ்டோக்ஸ் தவிர ஜோஸ் டங், கார்ஸ், இருவருமே அனுபவம் குறைந்தவர்கள். ஜோஸ் டங் இரு போட்டிகளில் சேர்த்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணியில் முன்னணி விக்கெட் வீழ்த்தியவராக இருந்தாலும், ஓவருக்கு 4.5 ரன்ரேட் வழங்குவது பெரிய கவலையாக இருந்தது. கார்ஸ், வோர்ஸ் இருவரும் இரு போட்டிகளில் சேர்த்து சராசரியாக 70 ஓவர்களுக்கு மேல் பந்துவீசியுள்ளனர். ஆனால், பெரிதாக ரன்களை விட்டுக்கொடுக்கவில்லை. வேகப்பந்துவீச்சாளர் அட்கின்சன் சேர்க்கப்பட்டிருந்தாலும், அவர் 3வது மற்றும் 4வது டெஸ்டில் விளையாடமாட்டார். சர்ரே கவுண்டி அணிக்காக ஆட இருப்பதால் கடைசி டெஸ்டில் அட்கின்சன் வருவார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆதலால், இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர் மட்டுமே மாற்றமாக இருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லார்ட்ஸ் மைதானத்தில் ஆர்ச்சர் போன்ற அதிவேக பந்துவீச்சாளர்கள் காற்றைக் கிழித்துக்கொண்டு பந்துவீசுவது இந்திய பேட்டர்களுக்கு சவாலாக இருக்கும். ஆர்ச்சரைப் பொருத்தவரை 2019 ஆஷஸ் தொடரிலிருந்து கடைசியாக 2021ம் ஆண்டுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 42 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு உடல்நலக் குறைவுகளால் பாதிக்கப்பட்ட ஆர்ச்சரை மீண்டும் அணிக்குள் கொண்டுவர இங்கிலாந்து நிர்வாகம் மிகவும் மெனக்கெட்டது. அதனால்தான் அவருக்கு 2வது போட்டியில் போதுமான ஓய்வும், பயிற்சியும், கண்காணிப்பும் செய்து அணிக்குள் கொண்டு வருகிறார்கள். இவர் தவிர கணுக்கால் காயத்திலிருந்து மீண்டு மார்க்வுட் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார், கடைசி டெஸ்டில் மார்க்வுட், அட்கின்சன் அணிக்குள் வரலாம் என்று நம்பப்படுகிறது. லார்ட்ஸ் மைதானம் பாரம்பரியமாகவே வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கக் கூடியது. இந்த மைதானத்தில் ஆர்ச்சர் போன்ற அதிவேக பந்துவீச்சாளர்கள் காற்றைக் கிழித்துக்கொண்டு பந்துவீசுவது இந்திய பேட்டர்களுக்கு சவாலாக இருக்கும். கார்ஸ், வோக்ஸ், ஸ்டோக்ஸ் ஆகிய 3 பந்துவீச்சாளர்களும் கடந்த 2 போட்டிகளாக இந்திய பேட்டர்களுக்கு பந்துவீசி அவர்களின் பலம், பலவீனத்தை தெரிந்து கொண்டுள்ளனர். ஆதலால், லார்ட்ஸ் மைதானத்தில் இன்னும் எளிதாக இந்திய பேட்டர்களை அணுக முடியும். சுழற்பந்துவீச்சுக்கு பஷீர், அவருக்கு துணையாக 5வது பந்துவீச்சாளராக ஜோ ரூட் பந்துவீசுவார். மற்றவகையில் இங்கிலாந்து அணி வேகப்பந்துவீச்சை முழுமையாக நம்பி இருக்கிறது. பேட்டிங்கில் இங்கிலாந்து வீரர்களில் பென் டக்கெட், ஸ்மித், ப்ரூக் ஆகியோர் கடந்த இரு போட்டிகளிலும் சிறப்பாக ஆடியுள்ளனர். கிராளி, ஆலி போப், ஜோ ரூட், கேப்டன் ஸ்டோக்ஸ் இதுவரை ஃபார்முக்கு வராமல் இருப்பது அந்த அணிக்கு பெரிய கவலையாகும். முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வென்றதற்கு டக்கெட்டின் பேட்டிங்கும், ப்ரூக், ஸ்மித்தின் சதமும் முக்கியக் காரணமாக அமைந்தது. ஆல்ரவுண்டர் ஸ்டோக்ஸ் இரு போட்டிகளிலும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை, ஆனால், பந்துவீச்சில் சிறப்பாக செயல்படுகிறார்கள், நல்ல வியூகங்களை வகுக்கிறார். ஜோ ரூட் அனுபவமான பேட்டராக நடுவரிசையில் இருப்பது அந்த அணிக்கு பெரிய பலமாக இருந்தாலும், நிலைத்தன்மை அவரின் பேட்டிங்கில் இல்லை. லாட்ஸ் மைதானத்தில் பென் ஸ்டோக்ஸ், டக்கெட், போப் ஆகிய 3 பேருமே கடந்த காலங்களில் சதம் அடித்திருப்பது பெரிய நம்பிக்கையை அளிக்கும். வோக்ஸ், ஸ்டோக்ஸ் இருவருமே லார்ட்ஸ் மைதானத்தில் 25 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி அனுபவம் வாய்ந்தவர்களாக இருப்பது பெரிய பலமாகும். அதிலும் 145 கி.மீ வேகத்துக்கு அதிகமாக பந்துவீசும் வோக்ஸ், ஆர்ச்சர் ஆகியோரின் பந்துவீச்சு இந்திய பேட்டர்களை கலங்கடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. பும்ராவின் வருகை 2வது டெஸ்ட் போட்டியில் வென்ற அதே இந்திய அணிதான் சிறிய மாற்றத்துடன் 3வது போட்டியில் களமிறங்கும் எனத் தெரிகிறது. பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக பும்ரா களமிறங்குவார். மற்றவகையில் மாற்றம் இருக்காது என கிரிக்இன்போ தளம் தெரிவித்துள்ளது. இந்திய அணியில் கருண் நாயரின் ஃபேட்டிங் ஃபார்ம்தான் கவலைக்குரியதாக இருக்கிறது. 8 ஆண்டுகளுக்குப்பின் டெஸ்டில் வாய்ப்புக் கிடைத்தும் இரு போட்டிகளிலும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. இருப்பினும் அவரை மாற்றாமல்தான் இந்திய அணி களமிறங்கும் எனத் தெரிகிறது. பந்துவீச்சில் பும்ராவுக்குத் துணையாக சிராஜ், ஆகாஷ் தீப் ஆகிய மூவரும் 4வது பந்துவீச்சாளராக நிதிஷ் ரெட்டியும் இருப்பார். சுழற்பந்துவீச்சுக்கு ஜடேஜா, வாஷிங்டன் இருவர் இருக்கிறார்கள். 2வது டெஸ்ட் போட்டியில் ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகளை எடுத்து பும்ரா இல்லாத இடத்தை நிறைவு செய்துவிட்டார். சிராஜும் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனால் 3 பந்துவீச்சாளர்களுமே விக்கெட் வீழ்த்தும் ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு பெரிய பலமாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக பும்ரா களமிறங்குவார். லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள ஆடுகளம் பந்துவீச்சாளர்கள் மோதுவதற்கான களமாக இருப்பதால், இரு அணிகளின் வேகப்பந்துவீச்சாளர்களும் தங்களின் திறனை உரசிப்பார்க்கும் போட்டியாக இருக்கும். இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டேரன் காஃப் பிடிஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், "இந்திய அணியில் பும்ரா வருகைக்குப்பின், 3 வேகப்பந்துவீச்சாளர்களுமே விக்கெட் வீழ்த்தும் திறமையுடன் இருப்பது அணிக்கு பெரிய பலமாக இருக்கும். லார்ட்ஸ் மைதானத்தில் இரு அணிகளின் பந்துவீச்சாளர்களும் தங்கள் திறனை வெளிப்படுத்தும் களமாக இருப்பது பார்க்க உற்சாகமாக இருக்கும். அதேசமயம், இந்திய பந்துவீச்சாளர்களோடு ஒப்பிடும்போது இங்கிலாந்து பந்துவீச்சு சற்று பின்னடைந்துள்ளது" எனத் தெரிவித்திருந்தார். இந்திய அணி செய்ய வேண்டியது என்ன? பேட்டிங்கைப் பொருத்தவரை ஜெய்ஸ்வால், ராகுல், சுப்மன் கில், ஜடேஜா, ரிஷப் பந்த் என டாப்ஆர்டர் பேட்டர்கள், நடுவரிசை பேட்டர்கள் அரைசதம், சதம், தொடர் சதம் அடித்து வலுவான ஃபார்மில் இருக்கிறார்கள். இதில் கருண் நாயர் பேட்டிங் மட்டுமே கவலையளிப்பதாக உள்ளது. வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் ரெட்டிவரை பேட்டர்கள் இருப்பது இந்திய அணிக்கு பெரிய பலம். ஆனால், கடந்த 2 போட்டிகளில் ரன் குவித்ததைப் போன்று லார்ட்ஸ் மைதானத்தில் எளிதாக ரன்கள் குவிக்க முடியாது. பேட்டர்கள் பொறுமையாக, நிதானமாக செயல்பட்டால்தான் ரன்களை நோக்கி நகர முடியும் என்பதால், பேட்டர்களின் திறனை உரசிப்பார்க்கும் உரைகல்லாக இருக்கும். பேட்டர்களை தவறு செய்ய வைக்கும் வகையில் பந்தில் பவுன்ஸர், ஸ்விங், சீமிங் இருக்கும் என்பதால், பேட்டர்கள் ஏமாந்து வி்க்கெட்டை விடாமல் பேட் செய்வது அவசியமாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 2 போட்டிகளில் ரன் குவித்ததைப் போன்று லார்ட்ஸ் மைதானத்தில் எளிதாக ரன்கள் குவிக்க முடியாது. லார்ட்ஸ் மைதானத்தைப் பொருத்தவரை முதலில் சோதனைக்குள்ளாவது டாப்ஆர்டர் பேட்டர்கள்தான். ஆதலால், ராகுல், ஜெய்ஸ்வால் மிகுந்த பொறுமையுடன் முறைப்படியான டெஸ்ட் போட்டியில் பேட் செய்வதைப் போல் பேட் செய்து முதல் செஷனைக் கடந்தால்தான் அடுத்துவரும் பேட்டர்களுக்கு நெருக்கடியில்லாமல் விளையாட முடியும். முதல் செஷனிலேயே விக்கெட்டை இழந்தால், அதன்பின் ஆட்டம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஆதலால், இந்த மைதானத்தில் முதல் செஷன் ஆட்டம் என்பது மிக மிக முக்கியமானதாகும். டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுப்பதுதான் இங்கு சரியான முடிவாக இருக்கும். இங்கு டாஸ் வென்ற அணிதான் 55 சதவீத போட்டிகளில் வென்றுள்ளது. முதல் செஷன் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும். இந்த முதல் செஷன் வரை இந்திய பேட்டர்கள் விக்கெட்டை விடாமல் பொறுமையாக பேட் செய்விட்டால் நிலைத்துவிடலாம். ஆனால், முதல் செஷனில் புதிய பந்து, காற்றின் வேகம், ஆடுகளம் ஆகியவற்றால் மின்னல் வேகத்தில் பந்து பேட்டரை நோக்கி வரும் என்பதால் விக்கெட்டை காப்பாற்றி பேட்டர்கள் ஆடுவது அவசியமாகும். ஆடுகளம் எப்படி இருக்கும்? கிரிக்கெட்டின் மெக்கா என வர்ணிக்கப்படும் லார்ட்ஸ் மைதானம் பாரம்பரியமாக வேகப்பந்துவீச்சாளர்களின் சொர்க்கபுரி. இந்த மைதானத்தில் முதல் செஷன் என்பது 5 நாட்களுமே முக்கியமானதாக இருக்கும். ஆடுகளத்தில் புற்கள் இருக்குமாறு பராமரித்துவருவதால், இயல்பாக வேகப்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கமே இங்கு அதிகமிருக்கும் பேட்டர்கள் சற்று சிரமப்பட்டுதான் பேட் செய்ய வேண்டியதிருக்கும். சிறிய தவறு, தவறான ஷாட் ஆட முயன்றாலும் விக்கெட்ட இழக்க நேரிடும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லார்ட்ஸ் மைதானம் (ஃபைல் புகைப்படம்) இந்த மைதானத்தில் அதிகபட்சமாக 344 ரன்கள்தான் சேஸ் செய்யப்பட்டுள்ளது என்பதால் கடைசி நாளில் ஆடுகளத்தின் தன்மை முற்றிலும் மாறியிருக்கும். முதலில் பேட் செய்யும் அணி சராசரியாக 300 ரன்கள் சேர்ப்பதே கடினம்தான். ஓவருக்கு 2 முதல் 3 ரன்கள் தான் சேர்க்க முடியும் என்பதால் பேட்டர்களுக்கு சவாலாக இருக்கும். லார்ட்ஸில் இந்தியாவின் பெர்ஃபார்மன்ஸ் எப்படி உள்ளது? இந்திய அணி லார்ட்ஸ் மைதானத்தில் இதுவரை 19 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று அதில் 3 போட்டிகளில்தான் வென்றுள்ளது, 12 போட்டிகளில் தோல்வி அடைந்து, 4 போட்டிகளை டிரா செய்துள்ளது. 1932ம் ஆண்டிலிருந்து லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடிய இந்திய அணி 1986ம் ஆண்டுதான் முதல் வெற்றியை கபில் தேவ் தலைமையில் பெற்றது. அதன்பின் 20 ஆண்டுகளுக்கும் மேலாக 2வது வெற்றிக்காக காத்திருந்து தோனி தலைமையில் ஒரு வெற்றியும் 2021ல் விராட் கோலி தலைமையில் ஒரு வெற்றியையும் இந்திய அணி பெற்றது. இந்திய அணியில் இப்போது இருக்கும் வீரர்களில் கே.எல்.ராகுல் அதிகபட்சமாக சதம் அடித்துள்ளார், ஜடேஜா அரைசதம் அடித்துள்ளார். பந்துவீச்சாளர்களில் பும்ரா ஒரு போட்டியில் ஆடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அணியில் இப்போது இருக்கும் பெரும்பாலான வீரர்களுக்கு லார்ட்ஸ் மைதானம் என்பது புதுவிதமான அனுபவமாக இருக்கும். இங்கிலாந்து அணி இந்த மைதானத்தில் 145 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 59 போட்டிகளில் வென்றுள்ளது, 35 போட்டிகளில் தோல்வி அடைந்து 51 போட்டிகளை டிரா செய்திருக்கிறது. லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடுவது என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் கனவாக இருக்கும். இந்த மைதானத்தில் ஒரு பந்துவீச்சாளர் விக்கெட் எடுத்தாலும், பேட்டர் அரைசதம், சதம் அடித்தாலும் அது அவருக்கு வாழ்நாளில் மிகப்பெரிய நினைவலையாக இருக்கும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9vrxdlynlyo
  23. செம்மணி விவகாரத்தில் பொலிஸ் விசேட குழுவினரின் அறிக்கைக்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு 09 JUL, 2025 | 04:14 PM யாழ் செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் பொலிஸ் விசேட குழுவினர் தமது விசாரணை அறிக்கைகளை நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்த பின்னர் அவற்றை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்கிழமை (08) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், யாழ். செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி அவசர நிர்மாணிப்பு வேலை இடம்பெற்ற போது ஏற்பட்ட நிலையை அடிப்படையாகக் கொண்டு இந்த சம்பவம் முன்னோக்கி கொண்டு செல்லப்படுகின்றது. கடந்த 7ஆம் திகதி வரை மூன்று சந்தர்ப்பங்களிர் 21 நாட்கள் அகழ்வு நடைபெற்றுள்ளது. இதன்போது 44 மனித எழும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அதனோடு மனித பாவனைப் பொருட்கள் 61 கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளன. இச்செயற்பாடுகள் யாழ். மாவட்ட நீதிபதி, அவரது கட்டளையின் படி பேராசிரியர் ராஜ். சேவதேவ உள்ளிட்ட குழுவினர், யாழ் மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி எஸ். பிரதாபன் ஆகியோர் தொடர்புபட்டு மேற்கொள்ளப்படுகின்றது. அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெறும். பொலிஸ் விசேட குழுவினர் தமது விசாரணை அறிக்கைகளை நீதிமன்றத்திற்கு முன்வைப்பார்கள். என்ன பெறுபேறு என்று நாம் பார்ப்போம். நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம். குற்றப்புலனாய்வு திணைக்களம் பொலிஸ் விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நீதிமன்றத்திற்கு உரிய தேவைகளுக்கு ஏற்ப தேவையான விசாரணைகள் அரசினால் முன்னெடுக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/219587
  24. Published By: DIGITAL DESK 3 09 JUL, 2025 | 03:59 PM செம்மணி மற்றும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் போன்றவற்றுக்கு சர்வதேச விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும், இல்லாவிடின் இதற்கான நீதி கிடைக்காது என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (09) நடைபெற்ற ஒத்திவைக்கும் பிரேரணையின் போதே இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சபாநாயகரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தேன், அதில் சர்ச்சைக்குரிய விடையங்கள் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களினால் முன்வைக்கப்படும் போது அவர்களின் நாடாளுமன்ற சிறப்புரிமைக்கும் அவர்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் வழங்கவேண்டும். செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் நீதி மறுக்கப்பட்டது என்பது நல்லிணக்கத்திற்கு பாதகமான ஒரு விடயம். பொறுப்புக்கூறல் என்பது நல்லிணக்கம் உருவாக முக்கிய விடயமாக உள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 300 இற்கும் அதிகமானோர் கொல்லப் பட்டுள்ளனர். 1998/99 காலப்பகுதியில் சோமரட்ன ராஜபக்ஷ எனும் நபர் மொழிந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் செம்மணி பிரதேசத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 15 மனித எச்சங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இவ் எச்சங்கள் ஸ்கொட்லாந்தில் கிளஸ்கோவில் உள்ளதாக அறிகின்றோம். ஏன் இவற்றை இலங்கை அரசாங்கம் ஆய்வு செய்யவில்லை? DNA பரிசோதனை இலங்கை அரசாங்கத்திற்கு மேற்கொள்ள வசதிகள் இல்லாத நிலையில் ஏன் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தின் உதவியை நாட தயங்குகின்றது? அரசாங்கம் செய்ய குற்றங்களை அரசாங்கம் விசாரிப்பதில் சிக்கல்கள் உள்ளன என ஜனாதிபதி கூறியுள்ளார். இதானாலேயே நாங்கள் சர்வதேச விசாரணை ஒன்றினை எதிர்பார்க்கின்றோம். அரசாங்கம் ஊழல் ஒழிப்பிற்கு விசேட அலுவலகம் ஒன்றினை உருவாக்க யோசிப்பது போல் ஏன் மனித உரிமை மீறல்களை விசாரிக்க அலுவலகம் அமைக்கவில்லை? ஆரையம்பதியில் கொல்லப்பட்ட விஜிதா, மட்டக்களப்பில் கொல்லப்பட்ட ரிபாயா, பிறேமினி, மனித புதைகுழி உள்ள கொக்குத்தொடுவாய், மாத்தளை, செம்மணி, இன்னும் அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்படாத பிள்ளையானின் தீவுச்சேனை ஆகியவற்றின் மீது ஏன் இன்னும் விசாரணை மேற்கொள்ளவில்லை? சட்டத்தில் இணையவழி (Online) மூலமாக வாக்குமூலம் பதிவு செய்வதற்கு இயலுமாக இருப்பினும் தற்போது பிள்ளையானுக்கு எதிராக சாட்சி அளிக்க தயாராக உள்ள அசாத் மௌலானாவின் வாக்குமூலமானது பதிவு செய்யப்படவில்லை. அசாத் மௌலானா தனது வாக்குமூலத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கிய போதிலும் அவ் அறிக்கையினை இலங்கை அரசாங்கம் இன்றளவிலும் கேட்டுப் பெறவில்லை. 2004ம் ஆண்டிலிருந்து இந் நாட்டில் இஸ்லாமிய அடிப்படை வாதத்தினை உருவாக்கியது இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே. கலில் (ஓட்டமாவடி) மற்றும் பாயிஸ் (காத்தான்குடி) எனும் அழைக்கப்படும் இருவர் தற்போது வரை இயங்கிக் கொண்டிருக்கின்றனர். கலில் என்பவர் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் ஐயாவின் கொலை வழக்கில் பிள்ளையானுடன் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட ஒருவர். இலங்கை அரசாங்கம் இன்று வரை இவர்களிடம் எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளவில்லை. நியாஸ் எனும் ஒருவர் சாய்ந்தமருதில் சுட்டுக்கொல்லப்பட்டவர். இவர் நிந்தவூர் “Safe House” இல் இருந்ததாக இராணுவ புலனாய்வுத் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்ற போதும் அவரை பிடிக்க முடியவில்லை. ஆனால் இவர் ஒரு முக்கிய சாட்சியாக கருதப்படக்கூடிய ஒருவர். ஆனால் இச் சாட்சியை மூடி மறைத்துள்ளனர். சாரா எனப்படும் புலஸ்தினியினுடைய 3வது DNA அறிக்கையின் பிற்பாடே அவர் இறந்து விட்டார் என மொழியப்பட்டது. இரு தடவைகளும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் பிரகாரம் அவரை ஏன் இனங்காண முடியவில்லை? இவருடைய தேசிய அடையாள அட்டை அம்பாறை நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சாராவினுடைய அனைத்தும் தீக்கிரையாகி விட்டன என்றால் எவ்வாறு தேசிய அடையாள அட்டை மாத்திரம் கைப்பற்றப்பட்டது? இஸ்லாமிய அடிப்படை வாதத்தை வைத்துக்கொண்டு அரசியல் இலாபம் தேட நினைக்கும் கட்சிகள் உள்ளன. “மினுவாங்கொட போன்ற இடங்களில் இஸ்லாமியர்களின் கடைகளை எரித்ததற்கு பின்புலத்தில் சரத் வீரசேகர என்பவரே உள்ளார்.” என மைத்திரிபால சிறிசேன அவர்களின் குரல் பதிவும் உள்ளது. ஆனால் ஏன் இதுவரை காலமும் சரத் வீரசேகரவிடம் எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளவில்லை? ரொஹான் குணரட்ன என அழைக்கப்படும் விரிவுரையாளர் என்பவர் சிங்கப்பூரில் உள்ள தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தில் Security Defence பற்றிய விரிவுரையாளர். ஐஎஸ் தீவிரவாத அமைப்பே இக் குற்றங்களுக்கு காரணம் என இவர் இரு மாதங்களுக்கு முன்பே கூறியுள்ளார். அரசாங்க அமைச்சர் பிள்ளையானே இக் குற்றங்களுக்கு பின்னணி சூத்திரதாரி எனக் கூறுகின்றார். ரொஹான் குணரட்ன என்பவர் பொய்யான வாக்குறுதிகளை மொழிதமைக்காக கனடாவில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆகவே இது தொடர்பாகவும் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும். 2008ம் ஆண்டு காலப்பகுதியில் ஏறாவூர் பகுதியை சேர்ந்த முஹமட் ரசாக் என்பவரது துப்பாக்கி தொலைந்தது. இத் துப்பாக்கி நுவரெலியாவில் உள்ள ரசாக் என்பவரிடம் இருப்பதாக அவர் கைது செய்யப்பட்டார். இவர் “Islamic Centre” எனும் அமைப்பில் உள்ளார். இத் துப்பாக்கி சபீக் எனப்படுபவரிடமிருந்து ரசாக் என்பவருக்கு விற்கப்பட்டதாகவே தகவல். இத் துப்பாக்கியினையே ரில்வான் சாய்ந்தமருதில் ஏற்பட்ட குண்டு வெடிப்பின் போது வைத்திருந்தவர் என தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஏன் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. https://www.virakesari.lk/article/219585
  25. பிள்ளையானிற்கு உயிர்த்தஞாயிறுதாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்தது - நாடாளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் 09 JUL, 2025 | 02:17 PM கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனிற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்தது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பிள்ளையான் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்தபோதே அவருக்கு இது குறித்து தெரிந்திருந்தது என அமைச்சர் தெரிவித்துள்ளார். உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து பிள்ளையானிற்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/219576

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.